திராவிடர் இனம்

செவ்வாய், 26 ஜூலை, 2022

பார்ப்பனர் - ஆரியர்களே என்பதற்குச் சான்றுகள்



  May 28, 2022 • Viduthalai

“மொழி ஞாயிறு” ஞா.தேவநேயப்பாவாணர் 

(பார்ப்பனர்கள் - ஆரியர்களே, என்பதை விளக்கி - பாவாணர் அவர்கள் தந்துள்ள ஆராய்ச்சி விளக்கங்கள் இது; அவரது சிறப்பு வாய்ந்த நூலான ‘ஒப்பியன் மொழி’ நூலிலிருந்து எடுக்கப்பட்டது.)

(1) உருவம் - நிறம் : பார்ப்பனர் வடக்கேயுள்ள குளிர்நாட்டி னின்றும் வந்தவராதலின், தமிழ்நாட்டிற்கு வந்த புதிதில் மேனாட் டாரைப்போல் வெண்ணிறமாயிருந்தனர்; பின்பு வெயிலிற் காயக் காயச் சிறிது சிறிதாய் நிறமாறி வருகின்றனர்.

‘கருத்தப் பார்ப்பானையும் சிவத்தப் பறையனையும் நம்பக் கூடாது’ என்பது பழமொழி. பார்ப்பனருக்குரிய நிறம் வெள்ளை யென்பதும், வெயிலிற்காயும் பறையனுக்குரிய நிறம் கருப்பென் பதும் இவர் இதற்கு மாறான நிறத்தினராயிருப்பின் அது பிறவிக்குற்றத்தைக் குறிக்குமென்பதும் இதன் கருத்து.

குடுமி : பண்டைத் தமிழருள் ஆடவர் (புருஷர்) குடுமி வைத்திருந்தனரேனும், பார்ப்பனரைப்போல மிகச் சிறிய உச்சிக்குடுமி வைத்திருந்ததாகத் தெரியவில்லை. பெண்டிர் இன்றுபோலத் தலைமயிர் முழுவதையும் வளரவிட்டனர். ஆடவர் சுற்றிவரச் சிறிது ஒதுக்கிக்கொண்டனர். ஆடவர் முடி சிறிதாயும், பெண்டிர் முடி பெரிதாயுமிருந்ததினால், இவை முறையே குஞ்சியென்றும், கூந்தலென்றும் கூறப்பட்டன. குடுமி என்பது உச்சிப் பாகத்தி லுள்ளதைக் குறிக்கும்.

“அன்னாய் வாழிவேண்டன்னை நம்மூர்ப்

பார்ப்பனக் குறுமகப் போலத் தாமுங்

குடுமித் தலைய மன்ற

நெடுமலை நாட னூர்ந்த மாவே”  

என்னும் அய்ங்குறுநூற்றுச் செய்யுளில் (குறிஞ்சி, 202), குதிரையின் தலையாட் டத்திற்குப் பார்ப்பனச் சிறுவனின் குடுமியை உவமை கூறி யிருப்பது, அது தமிழ்ச் சிறுவனின் குடுமியினும் மிகச் சிறிதா யிருந்தமைபற்றியே.

மீசை : மீசையைச் சிரைத்துக்கொள் ளும் வழக்கம் ஆரியரதே. தமிழரிற் சிலர் மேனாட்டாரியரைப் பின்பற்றி இப்போது மீசையைச் சிரைத்துக்கொள்கின்றனர்.

(2) உடை : பார்ப்பனருள் ஆடவர் பஞ்சகச்சம் கட்டுகின்றனர்; பெண்டிர் தாறு பாய்ச்சிக் கட்டுகின்றனர். இவை தமிழர் வழக்க மல்ல. விசுவப் பிராமணரென்று தங்களைக் கூறிக்கொள்ளும் கம்மாளர், பார்ப்பனரோடு இகலிக்கொண்டே சிலவிடத்து அவரது உடுமுறையைப் பின்பற்றுகின்றனர்.

நூல் : பூணூலணிதல் பார்ப்பனர்க்கே உரியது, ‘நூலெனிலோ கோல்சாயும்’ என்னுஞ் செய்யுளும், ‘ஊர்கெட நூலைவிடு’ என்னும் பழமொழியும் இதனை வற்புறுத்தும்.

தமிழ்நாட்டு வணிகரும் அய்வகைக் கம்மியரும் பூணூல் பூண்டது, அறியாமைபற்றி ஆரிய முறையைச் சிறந்ததாகக் கருதிய பிற்காலமாகும்.

ஆரியம் தமிழ்நாட்டில் வேரூன்றிப் பார்ப்பனருக்குத் தலைமையேற்பட்டபின், பல தமிழ் வகுப்பினர் தங்களுக்கு ஆரியத் தொடர்பு கூறுவதை உயர்வாகக் கருதினர். ஆரியக் குலமுறைக்கும் திராவிடக் குலமுறைக்கும் இயையு இல்லாவிடினும், ஆரியரல்லாதவரெல்லாம் சூத்திர வகுப்பின் பாற்பட்டவர் என்னும் தவறான ஆரியப் பொதுக்கொள்கைப் படி, தமிழ ரெல்லாருக்கும் சூத்திரப் பொதுப்பட்டம் சூட்டின பிற்காலத் தில், தமிழ் நாட்டிலுள்ள வணிகர் தங்களை வைசியரென்று சொல்லிக் கொண்டால், சூத்திரப்பட்டம் நீங்குவதுடன் ஆரியக் குலத் தொடர்புங் கூறிக்கொள்ளலா மென்று, ஆரிய முறையைப் பின்பற்றி வைசியர், சிரேஷ்டி (சிரேட்டி - செட்டி) என்னும் ஆரியப் பெயர்களையும், பூணூலணியும் வழக்கத்தையும் மேற்கொண்டனர். வணிகர் செல்வமிகுந்தவராதலின் அவரது துணையின் இன்றியமையாமையையும், தமிழர்க்குள் பிரிவு ஏற்பட ஏற்பட அவரது ஒற்றுமை கெட்டுத் தங்கட்குத் தமிழ்நாட் டில் ஊற்றமும், மேன்மையும் ஏற்பட வசதியாயிருப்பதையும், பார்ப்பனர் எண்ணித் தமிழ் வணிகருக்குத் தாராளமாய் வைசியப்பட்டம் தந்தனர்.

ஆரியர்க்குள், பூணூலணிவது பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் என்னும் மேல் மூவருணத்தார்க்கும் உரியதேனும், அது ஆரியரொடு தொடர்பில்லாத தமிழர்க்குச் சிறிதும் ஏற்பதன்று. ஒவ்வொரு நாட்டிலும் மறையோர், அரசர், வணிகர், உழவர் என்னும் நாற்பாலார் உளர். அவரையெல்லாம் (சிறிது வேறு பட்ட) ஆரிய முறைப்படி முறையே பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்று கொள்ளின், இங்கிலாந்திலுள்ள கந்தர்புரி (Canterbury)  அரசக் கண்காணிப்பாளரைப் (Arch Bishop) பிராமணரென்றும், மாட்சிமை தங்கிய ஆறாம் ஜியார்ஜ் மன்னரை க்ஷத்திரியரென்றும், அங்குள்ள வணிகத் தொழிலா ளரை வைசியரென்றும், உழவரையும், கூலிக் காரரையும் சூத்திர ரென்றும் கூறவேண்டும். ஆங்கிலேயர் ஒரு கலவைக் குலத்தா ரேனும், உறவுமுறையில் எல்லாரும் ஒரே குலத்தார் என்பது சரித்திரமறிந்த அனைவர்க்கும் தெளிவாய்த் தெரிந்ததே. பிராம ணர்கள் பிற நாடுகளிலுள்ளவர்களையும் ஆரியக்குல முறைப் படி பகுத்தாலும் பிராமணக் குலத்தன்மை மட்டும் தங்கட்கே யுரியதாகக் கொள்வர். அதோடு கூடியவரை எல்லாரை யும் சூத்திரரென்று பொதுப்படச் சொல்லி, பின்பு ஒரு பயனோக்கி அரசரை க்ஷத்திரியரென்றும், வணிகரை வைசியரென்றும் முன்னுக்குப்பின் முரண்படக் கூறுவது அவர் வழக்கம்.

ஆரிய - திராவிட வருண வேறுபாட்டைப் பின்னர் காண்க: 

கம்மியர் (கம்மாளர்) நெடுங்காலமாகப் பிராமணரொடு இகல்கொண்டு வருவதனால், தாமும் பிராமணரும் சமம் என்று காட்டுவதற்காகப் பூணூலணிந்து வருகின்றன ரேயன்றி வேறன்று.

தமிழ்நாட்டில் பூணூலணியும் தமிழரெல்லாம் ஏதேனும் ஒரு வணிகத் தொழிலராயும், கம்மியத் தொழிலராயுமே இருப்பர். தமிழரின் நாகரிகத்தையும், சரித்திரத்தையும் அறியாத தமிழர், ஆரிய நாகரிகத்தை உயர்ந்ததென மயங்கி, இக்காலத்தும் ஆரிய வழக்கத்தை மேற்கொள்வதால் உயர்வடையலாமென்று கருது கின்றனர். சில ஆண்டுகட்குமுன் சிவகாசி, சாத்தூர் முதலிய சில இடங்களிலுள்ள தனித் தமிழரான நாடார் குலத்தினர், புதிதாகப் பூணூலணிந்து கொண்டதுடன், தங்களை க்ஷத்திரியரென்றும் கூறிக்கொண்டனர். நாடார் குலத்தினர் வணிக குலத்தைச் சேர்ந்தவரென்பது உலக வழக்காலும், நூல் வழக்காலும் தெளிவாயறியக் கிடக்கின்றது. வைசியர், க்ஷத்திரியர் என்னும் பெயர்கள் வடசொற்களாயிருப்பதுடன், க்ஷத்திரியர் என்னும் பெயர் நாடார் குலத்திற்கு ஏற்காததாயு மிருக்கின்றது.

நூல் என்பது புத்தகத்திற்கும் இழைக்கும் பொதுப் பெயராத லின், நூலோர் என்னும் பெயர் அறிஞரையும் பார்ப்பனரையுங் குறிக்கும் இடம் நோக்கி யறிந்து கொள்க.

(3) நடை : தொல்காப்பிய மெய்ப்பாட்டியலில், 12ஆம் சூத்திர வுரையில், “தன்மையென்பது சாதித் தன்மை; அவையாவன பார்ப்பாராயிற் குந்திமிதித்துக் குறுநடைக் கொண்டு வந்து தோன்றலும்” என்று நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். இத் தன்மையை இன்றும் ஆங்கில நாகரிகம் நுழையாத சிற்றூர்களிற் காணலாம்.

(4) மொழி : பார்ப்பனரின் முன்னோர் பேசிய மொழி வடமொழியாகும். வடமொழி என்பது சமஸ்கிருதம். பண்டைக் காலத்தில் வடக்கில் சமஸ்கிருதமும், தெற்கில் தமிழுமாக இரு பெரு மொழிகளே இந்தியாவில் வழங்கி வந்தன. அதனால் அவற்றுக்கு முறையே வடமொழி, தென்மொழி என்று பெயர்.

வடமொழி செயற்கையான வடிவில் மிக முதிர்ந்ததாதலின் வழக்குறாது போய்விட்டது. ஆனாலும், ஆரியப் பிராமணரின் வழியினரான பார்ப்பனர் இன்று வடமொழியைத் தம்மாலியன்ற வரை பாதுகாத்து வருகின்றனர். பிராமணர் இந்தியாவில் எந்த இடத்திலிருந்தாலும், எந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் வடமொழிப் பயிற்சியை மட்டும் விடார். மற்ற வகுப்பாரோ பெரும்பாலும் தத்தம் தாய்மொழிகளையே அறிந்திருப்பர். வடமொழியின் கடினம்பற்றிச் சில பார்ப்பனர் அதைக் கல்லாதிருப்பினும், அதன்மேல் வைத்திருக்கும் பற்றில் மட்டும், அதைக் கற்றவரினும் எள்ளளவும் குறைந்தவராகார். பார்ப்பனர் பிற மொழிகளைத் தாய்மொழிகளாகக் கொண்டிருப்பதும், வடமொழி வழக்கற்றவிடத்து வேறு போக்கின்றியே யன்றி வேறன்று.

பார்ப்பனர் வடமொழியைப் பேசாவிடினும் வளர்ப்பு மொழியாகக் கொண்டுள்ளமையின், அவர்க்கு வடமொழியாளர் என்று பெயர்.

மணிமேகலையில், ‘வடமொழியாளர்’ (5 : 40) என்று பார்ப்பனர்க் கும், ‘வடமொழி யாட்டி’ (13 : 78) என்று பார்ப்பனிக்கும் வந்திருத் தல் காண்க.

வடமொழிக்குத் தமிழ் நூல்களில் ஆரியம் என்னும் பெயரும் வழங்குகின்றது. இப் பெயரொன்றே பார்ப்பனரைத் திராவிடரி னின்றும் வேறான ஆரியராகக் கொள்ளப் போதிய சான்றாகும். ஆரிய நாடு, ஆரியபூமி, ஆரியாவர்த்தம் என்று சொல்லப்படுவது பனி (இமய) மலைக்கும், விந்திய மலைக்கும் இடையிலுள்ள பாகமாகும். இதுதான் ஆரியர் இந்தியாவில் முதலாவது பரவி நிலைத்த இடம். இங்கு வழங்கினதினால்தான் ஆரிய மொழிக்கு ‘வடமொழி’ யென்றுபெயர்.

வடநாட்டில், ஆரியரும், ஆரியர்க்கு முந்தின பழங்குடிகளும் பெரும்பாலும் கலந்துபோனமையின், பிற்காலத்தில் வட நாட்டார்க்கெல்லாம் பொதுவாக ‘வடவர்’ ‘ஆரியர்’ என்னும் பெயர்கள் தமிழ் நூல்களில் வழங்கிவருகின்றன.

ஆரியம் என்னும் பெயரால் தமிழ்நாட்டில்  ஒரு பொருளுங் குறிக்கப்படுவதில்லை. ஆரியக் கூத்து என்பது தமிழ்நாட்டில் இசைத் தமிழும், நாடகத் தமிழும் வழக்கற்றபின், வடநாட்டார் வந்து ஆடிய நாடகத்திறமேயன்றி, பல்கலைக்கழக அகராதியிற் குறிக்கப்பட்டுள்ளபடி கழைக் கூத்தன்று.

ஆரியன் என்னும் பெயருக்கு, ஆசிரியன், பெரியோன், பூசாரியன் முதலிய பொருள்களெல்லாம் தமிழில் தோன்றினது தமிழ் நாட்டில் பார்ப்பனத் தலைமை ஏற்பட்ட பிற்காலத்தேயாகும். இப் பொருள்களும் நூல் வழக்கேயன்றி உலக வழக்காகா.

வடமொழி, தென்மொழியின் செவிலித்தாயென்றும், நற்றா யென்றும், இந்தியப் பொதுமொழியென்றும் ஆராய்ச்சியில்லாத பலர் கூறி வருகின்றனர். உலக மொழிகளில், ஆரிய மொழிகளும் திராவிட மொழிகளும் மொழிநிலையில் மிக வேறுபட்டன வாகும். திராவிடக் குடும்பம் மிக இயல்பானதும், ‘ஆரியக் குடும்பம் மிகத் திரிந்ததுமாகும். அவற்றுள்ளும், இயல்பிற் சிறந்த தமிழும் திரிபில் முதிர்ந்த வடமொழியும் மிக மிக வேறு பட்டனவாகும்.

‘விடுதலை’ - 13.02.1995

இடுகையிட்டது parthasarathy r நேரம் முற்பகல் 6:07 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: ஆரியர், பார்ப்பனர், பாவாணர்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

சிந்துவெளி சின்னம்

சிந்துவெளி சின்னம்

கீழடி புதை பொருள்கள்

கீழடி புதை பொருள்கள்

கீழடி தமிழ் வரிவடிவம்

கீழடி தமிழ் வரிவடிவம்

கால்டுவெல் அறிஞர்

கால்டுவெல் அறிஞர்
திராவிடம்
Powered By Blogger

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

  • அசுரர்
  • அம்பேத்கர்
  • அமைப்பு
  • அரப்பா
  • ஆண்டாள்
  • ஆய்வு
  • ஆரியர்
  • ஆரியர் - திராவிடர்
  • இணையத்தில்
  • இந்து
  • இனம் - மொழி
  • உணவு
  • ஏ.டி.பி
  • கட்சி
  • கலைஞர்
  • கீழடி
  • சங்கராச்சாரி
  • சாதனை
  • சாதி
  • சிந்து சமவெளி
  • சிந்துவெளி
  • சுபவீ
  • செம்மொழி
  • சேதுபதி
  • சொல் ஆய்வு
  • டி.எம்.நாயர்
  • டி.மாதவன்
  • தமிழ்
  • தமிழ் தேசியம்
  • தமிழர்
  • தமிழாற்றுப்படை
  • திராவிட செயற்களம்
  • திராவிட நாகரிகம்
  • திராவிட மதம்
  • திராவிட மரபு
  • திராவிட மொழி
  • திராவிடநாடு
  • திராவிடப் போர்
  • திராவிடம்
  • திராவிடர்
  • திராவிடர் - தமிழர்
  • திராவிடர் இயக்கம்
  • திராவிடர் நாகரீகம்
  • திருவிக
  • தீபாவளி
  • துக்ளக்
  • தேவர்
  • தொல்குடி
  • நடேசனார்
  • நூல்
  • நேரு
  • பங்களிப்பு
  • பட்டிமன்றம்
  • பன்னீர்செல்வம்
  • பார்ப்பன எதிர்ப்பு
  • பார்ப்பனர்
  • பாவாணர்
  • பிரச்சினை
  • பிராகுயி
  • புலிகள்
  • பெரியார்
  • மரபணு ஆய்வு
  • மனித இனம்
  • மாடு
  • மின்சாரம்
  • முன் திராவிடம்
  • வங்கம்
  • வடநாடு
  • வழக்கு
  • விளக்கம்

பக்கங்கள்

  • முகப்பு

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • திராவிடன் என்று சொல்லும்பொழுதுதான் நாம் எல்லோரும் சமம் என்று பொருள்படும்
    திராவிடன் என்று சொல்லும்பொழுதுதான் நாம் எல்லோரும் சமம் என்று பொருள்படும் இந்து என்கிறபொழுதுதான் நாம் பிளவுபடுகிறோம் சட்டப்பேரவை உறுப்பின...
  • வெற்றுச் சொல்லா திராவிடம்?
      September 30, 2021  • Viduthalai கவிஞர்   கலி .  பூங்குன்றன் திராவிடர் ,  திராவிடம்   என்பது   ஆரி   யத்தின்   அடி   வயிற்றைக்   கலக்கிக் ...
  • திராவிடன் ஏன்?
    விடுதலை ஞாயிறு மலர், 12.12.15
  • தமிழ்நாடு - கேரளா, திராவிடப் பண்பாட்டு உறவுகள்
    இந்தியத் துணைக் கண்டத்தின் தென் கோடியில் உள்ள இரு இணை மாநிலங்கள் தமிழ்நாடு மற்றும் கேரளா, அரசியல் ரீதி யாக இவை மொழிவாரியாக தனித்தனி மாந...
  • சுயமரியாதை இயக்கம் 90, நீதிக்கட்சி நூற்றாண்டு விழா
    சுயமரியாதை இயக்கம் 90, நீதிக்கட்சி நூற்றாண்டு விழா தொடங்கியது   வாழ்த்தரங்கத்தில் ஜஸ்டிஸ் மோகன், ஜஸ்டிஸ் ஏ.கே. ராஜன், புலவர்...
  • பண்பாட்டின் வரலாறு-லோதல்: சிந்து சமவெளியின் சான்று
    பண்பாட்டின் வரலாறு -ச.தீபிகா, தொல்லியல்துறை ஆய்வு மாணவர்  1920ஆம் ஆண்டில் ஹரப்பா நாகரிகம் பற்றிய கண்டுபிடிப்பு, இந்தியத் துணைக் க...
  • திராவிடர் திருநாள் - தமிழ்ப்புத்தாண்டு - பொங்கல் விழா
    திராவிடர் திருநாள் விழா மாட்சிகள் திராவிடர் திருநாள் முதல் நாள் நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள் பாமரன், இமையம், இதழாளர் ஏ.எஸ்...
  • மனித இனக்குழு வரலாறும் ஆரியமும்
    மனித இனக்குழு வரலாறும் ஆரியமும் - 4 - அறிவழகன் கைவல்யம் இந்தோ - ஆரிய மொழிக்குடும்பம் மற்றும் திராவிட மொழிக் குடும்ப வகைகளில் காணப...
  • யூதர்கள் ஆரியர்களே!
    மகாராட்டிரத்தில் பிஜேபி ஆட்சி யூதர்களை சிறுபான்மையினர் என்று கூறி இடஒதுக்கீடு கொடுக்கிறது காரணம் என்ன? ஆரியர்கள் என்பவர்கள் பெர்சியா (ஈர...
  • திராவிடம் - ஒரு பார்வை
    தமிழர்கள் தங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் போற்றப்பட வேண்டி யவர்கள் அறுவர். 1) அயோத்திதாசப் பண்டிதர் (1845 - 1914), 2) டாக்டர் சி.நடேச...

Translate

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2023 (2)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ▼  2022 (5)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ▼  ஜூலை (1)
      • பார்ப்பனர் - ஆரியர்களே என்பதற்குச் சான்றுகள்
  • ►  2021 (9)
    • ►  டிசம்பர் (1)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (1)
    • ►  ஜனவரி (1)
  • ►  2020 (30)
    • ►  டிசம்பர் (4)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (5)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (5)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (1)
  • ►  2019 (26)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (7)
    • ►  ஜூலை (5)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (1)
  • ►  2018 (30)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (1)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (13)
  • ►  2017 (23)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (1)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (3)
  • ►  2016 (41)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (4)
    • ►  செப்டம்பர் (5)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (5)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2015 (47)
    • ►  டிசம்பர் (9)
    • ►  நவம்பர் (22)
    • ►  அக்டோபர் (2)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (2)
    • ►  மே (1)
    • ►  மார்ச் (4)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (2)
  • ►  2014 (3)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (2)
ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.