சனி, 21 மார்ச், 2015

நெய்வேலி அருகே பழைமையான கல் ஆயுதம் கண்டெடுப்பு


மருங்கூர் கிராமத்தில் சுமார் 2200 ஆண்டுகள் பழைமையான கல் ஆயு தத்தை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே உள்ள மருங்கூர் கிராமம் பல அரிய தகவல்கள் பொதிந்துள்ள இடமாக கருதப்படுகிறது. இங்கு அரசு மருத்துவமனைக்கு வடக்குப் பகுதியில், கிழக்கு மேற்காக சுமார் 5.5 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் பழங்கால மக்கள் பயன்படுத்திய பல்வேறு பொருள்கள் கிடைத்து வருகின்றன.
அதாவது, சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் இரும்புக் காலத்திய மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்து வருகின்றன.
கல் ஆயுதம்: இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த ஊரைச் சார்ந்த ராஜசேகர் என்பவர், தனது தோட்டத்தில் மரக்கன்றுகள் நடுவதற் காக தோண்டியபோது, சுமார் மூன்ற ரையடி ஆழத்தில் கல் ஆயுதம் கிடைத் துள்ளதாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைக்கு தகவல் அளித்தார்.
அதன்பேரில், இந்தத் துறையைச் சார்ந்த தொல்லியல் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் உள்பட ஆய்வு மாணவர்கள் கல் ஆயுதத்தை ஆய்வு செய்தனர். 1,050 கிராம் எடை கொண்ட கூழாங்கல்லின் நடுப்பகுதியில் 6 செ.மீ. அளவில் வட்ட வடிவ துளை இடப்பட்டுள்ளது. மேலும், 12 செ.மீ. சுற்றளவும், 6 செ.மீ. கணமும் கொண்ட தாக இந்த ஆயுதம் வடிவமைக்கப்பட் டுள்ளது.
இந்த ஆயுதத்தின் நடுவில் உள்ள துளையில் 6 செ.மீ. கன அளவு கொண்ட ஒரு வலிமையான மரக் குச்சியினை சொருகி, கதை போன்ற தற்காப்பு ஆயுதமாக பண்டைய கால மக்கள் பயன்படுத்தியிருக்கலாம்.
மேலும், நெல், பயறு வகை தானி யங்களை பிரித்தெடுக்கவும், விலங்கு களை வேட்டையாட சுத்தியல் போன்ற கருவியாகவும் இந்த ஆயுதத்தை பயன் படுத்தி இருக்கலாம் என தெரிகிறது.
கடந்த 2009-ஆம் ஆண்டு இந்த ஊரைச் சார்ந்த ராமலிங்கம் என்பவர், தனது நிலத்தை சீர் செய்தபோது, 4 அடி ஆழத்தில் உடைந்த முதுமக்கள் தாழிகள், அதன் மூடுகற்கள் கிடைத்தன. அந்தப் பகுதியில் இருந்து தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மட்கல ஓடுகளும் கிடைத்தன.
பண்டைகால மக்களின் வாழ்விடப் பகுதி: இந்தக் கிராமத்தின் தெற்குப் பகுதியில் உள்ள குளத்தின் கிழக்கு கரைப் பகுதியில் 10 அடி உயரமும், ஒரு ஏக்கர் பரப்பளவும் கொண்ட பண் பாட்டு மேடு உள்ளது.
இந்தப் பகுதியில் கடந்த 2005-ஆம் ஆண்டு சாலை சீரமைக்க பள்ளம் தோண்டியபோது பழங்கால செங்கற்கள், சிவப்பு நிற மட்கல ஓடுகள், நான்கு கால்களுடன் கூடிய அம்மிக்கல், பெண்கள் விளை யாடுவதற்குப் பயன்படுத்திய சில்லு கருவிகள் கிடைத்தன.
மேலும், சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன்பு மருங்கூர் பகுதியில் வாழ்ந்த நுண்கற்கால மக்கள் பயன்படுத்திய கல் லாயுதங்கள், கற்செதில்கள், பிறைவடிவ கல்லாயுதங்களும் இந்தப் பகுதியில் நடத்தப்பட்ட கள ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
தற்போது கல் ஆயுதம் கிடைத்த இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் இரும்புக் கால பண்பாட்டை சார்ந்த மக்களின் முதுமக்கள் தாழிகள் காணப்படுவதால், இந்த ஆயுதமும் அதே காலக்கட்டத்தை சார்ந்ததாக இருக்கலாம் என சிவராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

-விடுதலை,ஞாயிறு மலர்,21.3.15

வெள்ளி, 20 மார்ச், 2015

திராவிடப் பல்கலைக் கழகத்தில் என்.டி.ஆர் சிலை திறப்பு


குப்பம் 25-02-15 அன்று திராவிடப் பல்கலைக் கழகத்தில் என்.டி.ஆர். சிலையை ஆந்திர 
முதலமைச்சர் நாரா. சந்திரபாபு நாயுடு அவர்கள் திறந்து வைத்தார். இப்பல்கலைக்கழகம் 
உருவாகக் காரணமாக இருந்தவர் என்.டி.ஆர் அவர்கள். பின்தங்கிய பகுதியான குப்பத்தில் 
தமிழ்நாடு கேரளா கர்நாடகா ஆந்திரா பாண்டிச்சேரி மாநிலங்களின் நிநி உதவியுடன் 
துவங்கப்பட்டது.
திராவிட மொழிகளில் ஆய்வு செய்பவர்களுக்கு உதவும் வகையில் முதன்மையாக 
அமைக்கப்பட்டது. வருங்காலத்தில் இப்பல்கலைக்கழகத்தை மத்திய பல்கலைக்கழகமாக 
மாற்றுவதற்கு என் தலைமையிலான ஆந்திர அரசு முயற்சி செய்யும் என்று முதலமைச்சர் 
சந்திரபாபு நாயுடு பேசினார்.
விழாவில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு. கங்கனாலா ரத்தனய்யா பதிவாளர் 
ராஜேந்திரப் பிரசாத் பேராசிரியர்கள் மாணவர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

-
விடுதலை ஞாயிறு மலர்,7.3.15 பக்கம்-6

2,300 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால தடயங்கள் கண்டெடுப்பு

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெருங்கற்கால மக்களின் வரலாற்றுத் தடயங்கள், கி.பி. 11-13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மக்கள் வாழ்விடப் பகுதி ஆகியவற்றை அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
விருத்தாசலத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் முதனை கிராமம் உள்ளது. இவ்வூரில் உள்ள செம்பையனார் கோயிலின் கிழக்குப் பகுதியில் உள்ள சின்ன ஓடையில் சிலர் மண் தோண்டும் போது முதுமக்கள் தாழிகள் வெளிப்பட்டுள்ளன. இதை அறிந்த இவ்வூரைச் சேர்ந்த ஆசிரியர் குணசேகரன், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைக்குத் தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில், அப்பகுதிக்கு பல்கலைக்கழக தொல்லியல் ஆய்வாளரும், பேராசிரியர்களு மான சிவராமகிருஷ்ணன், கலைச்செல்வன் ஆகியோருடன் ஆய்வு மாணவர்கள் சென்று ஓடையில் ஆய்வு மேற்கொண்டனர்.
உடைந்த முதுமக்கள் தாழிகள்: மண் எடுக்கப் பட்ட பள்ளத்தில் 15 அடி இடைவெளியில் மூன்று முதுமக்கள் தாழிகள் முற்றிலும் உடைபட்ட நிலையில் கிடந்தன.
அதன் அருகே கருப்பு- சிவப்பு மட்கல ஓடுகளும், வழுவழுப்பான கருப்பு நிற மட்கல ஓடுகளும், உடைந்த விளக்குத் தாங்கிகளும் காணப்பட்டன.
ஆய்வு செய்ததில் இவற்றின் காலம் கி.மு 3-4-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் எனத் தெரியவந்தது. மேலும், மனித எலும்புத் துண்டுகளும் காணப்பட்டன. இவை சிதைந்த நிலையில் இருந்ததால், டிஎன்ஏ  சோதனைக்கு உள்படுத்த முடியாது என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்முதனை கிராமத்தின் மேற்குப் பகுதி முழுவதும் கள ஆய்வு நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.
பழையபட்டினம்: விருத்தாசலம் வட்டத் துக்கு உள்பட்ட பழையபட்டினம் கிராமத்தின் கிழக்குப் பகுதியில் தமது முதல் கட்ட தொல் லியல் கள ஆய்வை கடந்த இரண்டு மாதங் களாகச் செய்து வருகின்றனர். இதன் மூலம், இவ்வூரைப் பற்றிய பல புதிய வரலாற்றுத் தகவல்களை கண்டறிந்துள்ளனர்.
பொதுவாக, பட்டினம் என முடியும் ஊர்கள் பண்டைய காலத்தில் வணிக, வர்த்தக மய்யங் களாக விளங்கியவை என்ற அடிப்படையில் இவ்வூரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நீராழி மேடு: சுமார் அய்ந்து ஏக்கர் பரப் பளவில் உள்ள நீராழி மேட்டை சுற்றி நடத்தப் பட்ட கள ஆய்வில் உடைந்த சிவப்பு நிற மட்கல ஓடுகளும், செங்காவி நிறம் பூசப்பட்ட மட்கல ஓடுகளும், சொரசொரப்பான சிவப்பு நிற மட்கல ஓடுகளும், தானியங்களை சேமித்து வைக்கப் பயன்படும் பெரிய அளவிலான மட்பாண்டங்களின் உடைந்த ஓடுகளும் இப்பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும்செங்கற்களும், கட்டடங்கள் கட்ட பயன்படுத்தப்பட்ட சுண்ணாம்புக் காறைகளும் இப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன.
"' வடிவ கூரை ஓடுகள்: இந்தப் பண்பாட் டுப் பகுதியின் கிழக்குப் பகுதியில் உடைந்த "வடிவ கூரை ஓடுகளின் பாகங்கள் கிடைத்துள் ளன. இவ்வகை கூரை ஓடுகள் இடைக்கால பண்பாட்டுப் பகுதிகளான கங்கைகொண்ட சோழபுரம், சேந்தமங்கலம் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ள அகழ்வாய்வுகளிலும் கிடைத்துள்ளன.
எனவே, பழையப்பட்டினம் நீராழி மேட்டுப் பகுதியிலும் இதே கால கட்டத்தைச் சார்ந்த அதாவது கி.பி. 11-13-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த மக்கள் இப்பகுதியில் வாழ்ந்திருக்கலாம் எனத் தெரிய வருகிறது.
மேலும்இப்பகுதியில் சேகரிக்கப்பட்டுள்ள மட்கல ஓடுகள், அதில் உள்ள கோடுகள், பூ வேலைப்பாடுகள் அதன் வளைவு தொழில்நுட்பம் போன்றவை இடைக் கால பண்பாட்டுத் தாக்கத்தோடு உள்ளன என் பதையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவ்வூரில் தொடர்ந்து களஆய்வு நடைபெற்று வருகிறது.
இந்த இரண்டு இடங்களையும் சேர்த்து கடலூர் மாவட்டத்தில் இதுவரை 306 இடங் களில் பண்டைய கால மக்களின் வரலாற்றுத் தடயங்களை கண்டறிந்து முறையான ஆவணப் பதிவு செய்யப்பட்டுள்ளன என்கிறார் வர லாற்று ஆய்வாளர் பேராசிரியர் சிவராம கிருஷ்ணன்.
விடுதலை ஞாயிறு மலர்,7.3.15பக்கம்-3