திராவிடர் இனம்

பார்ப்பனர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பார்ப்பனர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 26 ஜூலை, 2022

பார்ப்பனர் - ஆரியர்களே என்பதற்குச் சான்றுகள்



  May 28, 2022 • Viduthalai

“மொழி ஞாயிறு” ஞா.தேவநேயப்பாவாணர் 

(பார்ப்பனர்கள் - ஆரியர்களே, என்பதை விளக்கி - பாவாணர் அவர்கள் தந்துள்ள ஆராய்ச்சி விளக்கங்கள் இது; அவரது சிறப்பு வாய்ந்த நூலான ‘ஒப்பியன் மொழி’ நூலிலிருந்து எடுக்கப்பட்டது.)

(1) உருவம் - நிறம் : பார்ப்பனர் வடக்கேயுள்ள குளிர்நாட்டி னின்றும் வந்தவராதலின், தமிழ்நாட்டிற்கு வந்த புதிதில் மேனாட் டாரைப்போல் வெண்ணிறமாயிருந்தனர்; பின்பு வெயிலிற் காயக் காயச் சிறிது சிறிதாய் நிறமாறி வருகின்றனர்.

‘கருத்தப் பார்ப்பானையும் சிவத்தப் பறையனையும் நம்பக் கூடாது’ என்பது பழமொழி. பார்ப்பனருக்குரிய நிறம் வெள்ளை யென்பதும், வெயிலிற்காயும் பறையனுக்குரிய நிறம் கருப்பென் பதும் இவர் இதற்கு மாறான நிறத்தினராயிருப்பின் அது பிறவிக்குற்றத்தைக் குறிக்குமென்பதும் இதன் கருத்து.

குடுமி : பண்டைத் தமிழருள் ஆடவர் (புருஷர்) குடுமி வைத்திருந்தனரேனும், பார்ப்பனரைப்போல மிகச் சிறிய உச்சிக்குடுமி வைத்திருந்ததாகத் தெரியவில்லை. பெண்டிர் இன்றுபோலத் தலைமயிர் முழுவதையும் வளரவிட்டனர். ஆடவர் சுற்றிவரச் சிறிது ஒதுக்கிக்கொண்டனர். ஆடவர் முடி சிறிதாயும், பெண்டிர் முடி பெரிதாயுமிருந்ததினால், இவை முறையே குஞ்சியென்றும், கூந்தலென்றும் கூறப்பட்டன. குடுமி என்பது உச்சிப் பாகத்தி லுள்ளதைக் குறிக்கும்.

“அன்னாய் வாழிவேண்டன்னை நம்மூர்ப்

பார்ப்பனக் குறுமகப் போலத் தாமுங்

குடுமித் தலைய மன்ற

நெடுமலை நாட னூர்ந்த மாவே”  

என்னும் அய்ங்குறுநூற்றுச் செய்யுளில் (குறிஞ்சி, 202), குதிரையின் தலையாட் டத்திற்குப் பார்ப்பனச் சிறுவனின் குடுமியை உவமை கூறி யிருப்பது, அது தமிழ்ச் சிறுவனின் குடுமியினும் மிகச் சிறிதா யிருந்தமைபற்றியே.

மீசை : மீசையைச் சிரைத்துக்கொள் ளும் வழக்கம் ஆரியரதே. தமிழரிற் சிலர் மேனாட்டாரியரைப் பின்பற்றி இப்போது மீசையைச் சிரைத்துக்கொள்கின்றனர்.

(2) உடை : பார்ப்பனருள் ஆடவர் பஞ்சகச்சம் கட்டுகின்றனர்; பெண்டிர் தாறு பாய்ச்சிக் கட்டுகின்றனர். இவை தமிழர் வழக்க மல்ல. விசுவப் பிராமணரென்று தங்களைக் கூறிக்கொள்ளும் கம்மாளர், பார்ப்பனரோடு இகலிக்கொண்டே சிலவிடத்து அவரது உடுமுறையைப் பின்பற்றுகின்றனர்.

நூல் : பூணூலணிதல் பார்ப்பனர்க்கே உரியது, ‘நூலெனிலோ கோல்சாயும்’ என்னுஞ் செய்யுளும், ‘ஊர்கெட நூலைவிடு’ என்னும் பழமொழியும் இதனை வற்புறுத்தும்.

தமிழ்நாட்டு வணிகரும் அய்வகைக் கம்மியரும் பூணூல் பூண்டது, அறியாமைபற்றி ஆரிய முறையைச் சிறந்ததாகக் கருதிய பிற்காலமாகும்.

ஆரியம் தமிழ்நாட்டில் வேரூன்றிப் பார்ப்பனருக்குத் தலைமையேற்பட்டபின், பல தமிழ் வகுப்பினர் தங்களுக்கு ஆரியத் தொடர்பு கூறுவதை உயர்வாகக் கருதினர். ஆரியக் குலமுறைக்கும் திராவிடக் குலமுறைக்கும் இயையு இல்லாவிடினும், ஆரியரல்லாதவரெல்லாம் சூத்திர வகுப்பின் பாற்பட்டவர் என்னும் தவறான ஆரியப் பொதுக்கொள்கைப் படி, தமிழ ரெல்லாருக்கும் சூத்திரப் பொதுப்பட்டம் சூட்டின பிற்காலத் தில், தமிழ் நாட்டிலுள்ள வணிகர் தங்களை வைசியரென்று சொல்லிக் கொண்டால், சூத்திரப்பட்டம் நீங்குவதுடன் ஆரியக் குலத் தொடர்புங் கூறிக்கொள்ளலா மென்று, ஆரிய முறையைப் பின்பற்றி வைசியர், சிரேஷ்டி (சிரேட்டி - செட்டி) என்னும் ஆரியப் பெயர்களையும், பூணூலணியும் வழக்கத்தையும் மேற்கொண்டனர். வணிகர் செல்வமிகுந்தவராதலின் அவரது துணையின் இன்றியமையாமையையும், தமிழர்க்குள் பிரிவு ஏற்பட ஏற்பட அவரது ஒற்றுமை கெட்டுத் தங்கட்குத் தமிழ்நாட் டில் ஊற்றமும், மேன்மையும் ஏற்பட வசதியாயிருப்பதையும், பார்ப்பனர் எண்ணித் தமிழ் வணிகருக்குத் தாராளமாய் வைசியப்பட்டம் தந்தனர்.

ஆரியர்க்குள், பூணூலணிவது பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் என்னும் மேல் மூவருணத்தார்க்கும் உரியதேனும், அது ஆரியரொடு தொடர்பில்லாத தமிழர்க்குச் சிறிதும் ஏற்பதன்று. ஒவ்வொரு நாட்டிலும் மறையோர், அரசர், வணிகர், உழவர் என்னும் நாற்பாலார் உளர். அவரையெல்லாம் (சிறிது வேறு பட்ட) ஆரிய முறைப்படி முறையே பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்று கொள்ளின், இங்கிலாந்திலுள்ள கந்தர்புரி (Canterbury)  அரசக் கண்காணிப்பாளரைப் (Arch Bishop) பிராமணரென்றும், மாட்சிமை தங்கிய ஆறாம் ஜியார்ஜ் மன்னரை க்ஷத்திரியரென்றும், அங்குள்ள வணிகத் தொழிலா ளரை வைசியரென்றும், உழவரையும், கூலிக் காரரையும் சூத்திர ரென்றும் கூறவேண்டும். ஆங்கிலேயர் ஒரு கலவைக் குலத்தா ரேனும், உறவுமுறையில் எல்லாரும் ஒரே குலத்தார் என்பது சரித்திரமறிந்த அனைவர்க்கும் தெளிவாய்த் தெரிந்ததே. பிராம ணர்கள் பிற நாடுகளிலுள்ளவர்களையும் ஆரியக்குல முறைப் படி பகுத்தாலும் பிராமணக் குலத்தன்மை மட்டும் தங்கட்கே யுரியதாகக் கொள்வர். அதோடு கூடியவரை எல்லாரை யும் சூத்திரரென்று பொதுப்படச் சொல்லி, பின்பு ஒரு பயனோக்கி அரசரை க்ஷத்திரியரென்றும், வணிகரை வைசியரென்றும் முன்னுக்குப்பின் முரண்படக் கூறுவது அவர் வழக்கம்.

ஆரிய - திராவிட வருண வேறுபாட்டைப் பின்னர் காண்க: 

கம்மியர் (கம்மாளர்) நெடுங்காலமாகப் பிராமணரொடு இகல்கொண்டு வருவதனால், தாமும் பிராமணரும் சமம் என்று காட்டுவதற்காகப் பூணூலணிந்து வருகின்றன ரேயன்றி வேறன்று.

தமிழ்நாட்டில் பூணூலணியும் தமிழரெல்லாம் ஏதேனும் ஒரு வணிகத் தொழிலராயும், கம்மியத் தொழிலராயுமே இருப்பர். தமிழரின் நாகரிகத்தையும், சரித்திரத்தையும் அறியாத தமிழர், ஆரிய நாகரிகத்தை உயர்ந்ததென மயங்கி, இக்காலத்தும் ஆரிய வழக்கத்தை மேற்கொள்வதால் உயர்வடையலாமென்று கருது கின்றனர். சில ஆண்டுகட்குமுன் சிவகாசி, சாத்தூர் முதலிய சில இடங்களிலுள்ள தனித் தமிழரான நாடார் குலத்தினர், புதிதாகப் பூணூலணிந்து கொண்டதுடன், தங்களை க்ஷத்திரியரென்றும் கூறிக்கொண்டனர். நாடார் குலத்தினர் வணிக குலத்தைச் சேர்ந்தவரென்பது உலக வழக்காலும், நூல் வழக்காலும் தெளிவாயறியக் கிடக்கின்றது. வைசியர், க்ஷத்திரியர் என்னும் பெயர்கள் வடசொற்களாயிருப்பதுடன், க்ஷத்திரியர் என்னும் பெயர் நாடார் குலத்திற்கு ஏற்காததாயு மிருக்கின்றது.

நூல் என்பது புத்தகத்திற்கும் இழைக்கும் பொதுப் பெயராத லின், நூலோர் என்னும் பெயர் அறிஞரையும் பார்ப்பனரையுங் குறிக்கும் இடம் நோக்கி யறிந்து கொள்க.

(3) நடை : தொல்காப்பிய மெய்ப்பாட்டியலில், 12ஆம் சூத்திர வுரையில், “தன்மையென்பது சாதித் தன்மை; அவையாவன பார்ப்பாராயிற் குந்திமிதித்துக் குறுநடைக் கொண்டு வந்து தோன்றலும்” என்று நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். இத் தன்மையை இன்றும் ஆங்கில நாகரிகம் நுழையாத சிற்றூர்களிற் காணலாம்.

(4) மொழி : பார்ப்பனரின் முன்னோர் பேசிய மொழி வடமொழியாகும். வடமொழி என்பது சமஸ்கிருதம். பண்டைக் காலத்தில் வடக்கில் சமஸ்கிருதமும், தெற்கில் தமிழுமாக இரு பெரு மொழிகளே இந்தியாவில் வழங்கி வந்தன. அதனால் அவற்றுக்கு முறையே வடமொழி, தென்மொழி என்று பெயர்.

வடமொழி செயற்கையான வடிவில் மிக முதிர்ந்ததாதலின் வழக்குறாது போய்விட்டது. ஆனாலும், ஆரியப் பிராமணரின் வழியினரான பார்ப்பனர் இன்று வடமொழியைத் தம்மாலியன்ற வரை பாதுகாத்து வருகின்றனர். பிராமணர் இந்தியாவில் எந்த இடத்திலிருந்தாலும், எந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் வடமொழிப் பயிற்சியை மட்டும் விடார். மற்ற வகுப்பாரோ பெரும்பாலும் தத்தம் தாய்மொழிகளையே அறிந்திருப்பர். வடமொழியின் கடினம்பற்றிச் சில பார்ப்பனர் அதைக் கல்லாதிருப்பினும், அதன்மேல் வைத்திருக்கும் பற்றில் மட்டும், அதைக் கற்றவரினும் எள்ளளவும் குறைந்தவராகார். பார்ப்பனர் பிற மொழிகளைத் தாய்மொழிகளாகக் கொண்டிருப்பதும், வடமொழி வழக்கற்றவிடத்து வேறு போக்கின்றியே யன்றி வேறன்று.

பார்ப்பனர் வடமொழியைப் பேசாவிடினும் வளர்ப்பு மொழியாகக் கொண்டுள்ளமையின், அவர்க்கு வடமொழியாளர் என்று பெயர்.

மணிமேகலையில், ‘வடமொழியாளர்’ (5 : 40) என்று பார்ப்பனர்க் கும், ‘வடமொழி யாட்டி’ (13 : 78) என்று பார்ப்பனிக்கும் வந்திருத் தல் காண்க.

வடமொழிக்குத் தமிழ் நூல்களில் ஆரியம் என்னும் பெயரும் வழங்குகின்றது. இப் பெயரொன்றே பார்ப்பனரைத் திராவிடரி னின்றும் வேறான ஆரியராகக் கொள்ளப் போதிய சான்றாகும். ஆரிய நாடு, ஆரியபூமி, ஆரியாவர்த்தம் என்று சொல்லப்படுவது பனி (இமய) மலைக்கும், விந்திய மலைக்கும் இடையிலுள்ள பாகமாகும். இதுதான் ஆரியர் இந்தியாவில் முதலாவது பரவி நிலைத்த இடம். இங்கு வழங்கினதினால்தான் ஆரிய மொழிக்கு ‘வடமொழி’ யென்றுபெயர்.

வடநாட்டில், ஆரியரும், ஆரியர்க்கு முந்தின பழங்குடிகளும் பெரும்பாலும் கலந்துபோனமையின், பிற்காலத்தில் வட நாட்டார்க்கெல்லாம் பொதுவாக ‘வடவர்’ ‘ஆரியர்’ என்னும் பெயர்கள் தமிழ் நூல்களில் வழங்கிவருகின்றன.

ஆரியம் என்னும் பெயரால் தமிழ்நாட்டில்  ஒரு பொருளுங் குறிக்கப்படுவதில்லை. ஆரியக் கூத்து என்பது தமிழ்நாட்டில் இசைத் தமிழும், நாடகத் தமிழும் வழக்கற்றபின், வடநாட்டார் வந்து ஆடிய நாடகத்திறமேயன்றி, பல்கலைக்கழக அகராதியிற் குறிக்கப்பட்டுள்ளபடி கழைக் கூத்தன்று.

ஆரியன் என்னும் பெயருக்கு, ஆசிரியன், பெரியோன், பூசாரியன் முதலிய பொருள்களெல்லாம் தமிழில் தோன்றினது தமிழ் நாட்டில் பார்ப்பனத் தலைமை ஏற்பட்ட பிற்காலத்தேயாகும். இப் பொருள்களும் நூல் வழக்கேயன்றி உலக வழக்காகா.

வடமொழி, தென்மொழியின் செவிலித்தாயென்றும், நற்றா யென்றும், இந்தியப் பொதுமொழியென்றும் ஆராய்ச்சியில்லாத பலர் கூறி வருகின்றனர். உலக மொழிகளில், ஆரிய மொழிகளும் திராவிட மொழிகளும் மொழிநிலையில் மிக வேறுபட்டன வாகும். திராவிடக் குடும்பம் மிக இயல்பானதும், ‘ஆரியக் குடும்பம் மிகத் திரிந்ததுமாகும். அவற்றுள்ளும், இயல்பிற் சிறந்த தமிழும் திரிபில் முதிர்ந்த வடமொழியும் மிக மிக வேறு பட்டனவாகும்.

‘விடுதலை’ - 13.02.1995

இடுகையிட்டது parthasarathy r நேரம் 6:07 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: ஆரியர், பார்ப்பனர், பாவாணர்

புதன், 2 செப்டம்பர், 2020

திராவிட இயக்கங்களில் பார்ப்பனர்களின் பங்கு

#திராவிட_இயக்கங்களில் #பிராமணர்களின்_பங்கு.

வ.ரா.1889-1951

திங்களூரில் ஆச்சாரமான ஐய்யங்கார் குடும்பத்தில் பிறந்தவர்.
முழு பெயர் #வரதராஜ_ராமசாமி.

காந்தி காங்கிரஸ் மேல் பற்று கொண்டவர். ஒருகட்டத்தில் 
இந்த நாட்டின் சாபக்கேடு சாதி என்று உணர்ந்தார். சாதிக்கு எதிராக தன் வாழ்வை அர்ப்பணித்தார்.
குல ஆச்சாரங்களை கைவிட்டார்.

குறிப்பாக #பூணுலைஅறுத்து_எறிந்தார்.
குடுமியை துறந்தார்.

சாகும் வரை சடங்குகளுக்கும் 
மூட பழக்கங்களுக்கும் 
எதிராக செயல்பட்டார். பெரியார் மீது பற்று கொண்டார். திராவிட இயக்கங்களை தூக்கி சுமந்தார்.

ஏ.எஸ்.கே. 1907-1978

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ஆச்சாரமான ஐயங்கார் குடும்பத்தில் பெங்களூரில் பிறந்தார்.

1934ல் சென்னை வந்தவருக்கு சிங்காரவேலருடனும் 
தந்தை பெரியாருடனும் நட்பு ஏற்ப்பட்டது.

பொதுஉடமை சிந்தனை உடைய இவர் சாதிகொடுமைகள்
ஏற்ற தாழ்வுகளையும் கண்டு 
மனம் குமுறினார்.

விளைவாக பெரியாருடன் கைகோர்த்தார்.

#ஆவியூர்சீனிவாசகிருஸ்ணமாச்சாரி 
எனும் தன் பெயரை 
ஏஎஸ்கே என மாற்றிக்கொண்டார்.

இவருடைய ‘பகுத்தறிவின் சிகரம் பெரியார்’ என்னும் நூல் இந்திய தத்துவ ஞான மரபில் பெரியாரின் இடம் எப்படி மறுதலிக்க முடியாதது 
என்பதை விளக்க கூடியது.

ஏஎஸ்கே அண்ணன்கள் துரைசாமி 
சாதி கடந்த மணமும், 
பார்த்தசாரதி மதம் கடந்த மணமும் செய்து கொண்டனர்.

ஏஎஸ்கே மணம் செய்து கொள்ளாதவர்.
                   #ந_சுப்பிரமணியன்.1915-2013

சிதம்பரத்தில் ஆச்சாரியமான ஐய்யங்கார் குடும்பத்தில் பிறந்தார்.

சாதிக்கொடுமைகள் உண்டாக்கிய கோபம் தான் இவரையும் 
திராவிட இயக்கம் சாதி ஒழிப்பு பிரச்சாரத்தில் சேர்த்தது.

தந்தை பெரியார் ஆசிரியர் வீரமணி மீது மரியாதை கொண்டு இருந்தார்.

தான் இறந்தால் தன் உடலுக்கு அருகில் தானும் வீரமணியும் உள்ள படத்தை வைக்ககோரினார்.

#விபி_இராமன்.1932-1991

சென்னையில் ஆச்சாரமான ஐயர் குடும்பத்தில் பிறந்தவர் 

#வேங்கடபட்டாபிராமன் சட்டவல்லுனர் திராவிட இயக்கத்தின் பால் கொண்ட நாட்டமும் மாநிலங்கள் உரிமையில் கொண்டிருந்த அக்கரையும் 
திமுகவில் இணைத்தது.

திமுகவுக்கான சாசனத்தை உருவாக்க பேரறிஞர்அண்ணா தேர்ந்தேடுத்த மூவர் குழுவில் 
ஈ.வெ.கி.சம்பத், இரா.செழியன், இவர்களுடன் வி.பி.ராமனும் 
இணைந்து பணி செய்தார்.
                ***
#சின்னக்குத்தூசி.1934-2011

திருவாரூர் ஆச்சாரமான அய்யர் குடும்பத்தில் பிறந்தார்.

இயற்பெயர் #ரா_தியாகராஜன் இளமையிலே சாதிக்கு எதிரான உணர்வை பெற்றவர்.

திருச்சி பெரியார் ஆசிரியர் பயிற்சி பள்ளியின் தொடக்க ஆண்டில் 
படித்த மாணவர்களில் ஒருவர்.

பெரியாரியத்தின் மீது மிகுந்த பற்று கொண்டவர். குத்தூசியின் எழுத்தால் கவரப்பட்டு தன் பெயரை சின்ன குத்தூசி என்று மாற்றிக்கொண்டார்.

பின்னாளில் திமுகவின் இதழியல் குரல் ஆனார். முரசொலியில் இவரின் எழுத்துக்களுக்கு தனி வாசகர் வட்டமே இருந்தது.
                 *****
நன்றி: திரு.Napa #fb Lakshmanan SK

m.facebook.com/story.php?stor…

#பெரியார்

(பிராமணர் என்ற சொல்லில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் பார்ப்பனர்கள் எதார்த்த நிலையை புரிந்து கொண்டு இவர்களைப் போல வாழ்ந்தால் நாம் மதித்து ஏற்றுக் கொள்வோம். எப்படியிருப்பினும் திராவிடர் கழகத்தில் உறுப்பினர் ஆக முடியாது. Isai Inban)
இடுகையிட்டது parthasarathy r நேரம் 1:59 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: பங்களிப்பு, பார்ப்பனர்

திங்கள், 8 ஜூன், 2020

பார்ப்பனர் ஆரியர் என்பதற்குச் சான்றுகள் - பாவாணர்

பாவாணர்

பார்ப்பனர் ஆரியர் என்பதற்குச் சான்றுகள்

(1) உருவம் - நிறம் : பார்ப்பனர் வடக்கேயுள்ள குளிர்நாட்டி னின்றும் வந்தவராதலின், தமிழ்நாட்டிற்கு வந்த புதிதில் மேனாட் டாரைப்போல் வெண்ணிறமாயிருந்தனர்; பின்பு வெயிலிற் காயக் காயச் சிறிது சிறிதாய் நிறமாறி வருகின்றனர்.

‘கருத்தப் பார்ப்பானையும் சிவத்தப் பறையனையும் நம்பக் கூடாது’ என்பது பழமொழி. பார்ப்பனருக்குரிய நிறம் வெள்ளை யென்பதும், வெயிலிற்காயும் பறையனுக்குரிய நிறம் கருப்பென் பதும் இவர் இதற்கு மாறான நிறத்தினராயிருப்பின் அது பிறவிக்குற்றத்தைக் குறிக்குமென்பதும் இதன் கருத்து.

குடுமி : பண்டைத் தமிழருள் ஆடவர் (புருஷர்) குடுமி வைத்திருந் தனரேனும், பார்ப்பனரைப்போல மிகச் சிறிய உச்சிக்குடுமி வைத்திருந்ததாகத் தெரியவில்லை. பெண்டிர் இன்றுபோலத் தலைமயிர் முழுவதையும் வளரவிட்டனர். ஆடவர் சுற்றிவரச் சிறிது ஒதுக்கிக்கொண்டனர். ஆடவர் முடி சிறிதாயும் பெண்டிர் முடி பெரிதாயுமிருந்ததினால், இவை முறையே குஞ்சியென்றும் கூந்தலென்றும் கூறப்பட்டன. குடுமி என்பது உச்சிப் பாகத்தி லுள்ளதைக் குறிக்கும்.

அன்னாய் வாழிவேண் டன்னை நம்மூர்ப்
பார்ப்பனக் குறுமகப் போலத் தாமுங்
குடுமித் தலைய மன்ற
நெடுமலை நாட னூர்ந்த மாவே (ஐங். 202)

என்னும் ஐங்குறுநூற்றுச் செய்யுளில், குதிரையின் தலையாட் டத்திற்குப் பார்ப்பனச் சிறுவனின் குடுமியை உவமை கூறி யிருப்பது, அது தமிழ்ச் சிறுவனின் குடுமியினும் மிகச் சிறிதா யிருந்தமைபற்றியே.

மீசை : மீசையைச் சிரைத்துக்கொள்ளும் வழக்கம் ஆரியரதே. தமிழரிற் சிலர் மேனாட்டாரியரைப் பின்பற்றி இப்போது மீசையைச் சிரைத்துக்கொள்கின்றனர்.

(2) உடை : பார்ப்பனருள் ஆடவர் பஞ்சகச்சம் கட்டுகின்றனர்; பெண்டிர் தாறு பாய்ச்சிக் கட்டுகின்றனர். இவை தமிழர் வழக்க மல்ல. விசுவப் பிராமணரென்று தங்களைக் கூறிக்கொள்ளும் கம்மாளர், பார்ப்பனரோடு இகலிக்கொண்டே சிலவிடத்து அவரது உடுமுறையைப் பின்பற்றுகின்றனர்.

நூல் : பூணூலணிதல் பார்ப்பனர்க்கே உரியது, ‘நூலெனிலோ கோல்சாயும்’ என்னுஞ் செய்யுளும், ‘ஊர்கெட நூலைவிடு’ என்னும் பழமொழியும் இதனை வற்புறுத்தும்.

தமிழ்நாட்டு வணிகரும் ஐவகைக் கம்மியரும் பூணூல் பூண்டது, அறியாமைபற்றி ஆரிய முறையைச் சிறந்ததாகக் கருதிய பிற்காலமாகும்.

ஆரியம் தமிழ்நாட்டில் வேரூன்றிப் பார்ப்பனருக்குத் தலைமை யேற்பட்டபின், பல தமிழ் வகுப்பினர் தங்களுக்கு ஆரியத் தொடர்பு கூறுவதை உயர்வாகக் கருதினர். ஆரியக் குலமுறைக் கும் திராவிடக் குலமுறைக்கும் இயையு இல்லாவிடினும், ஆரியரல்லா தவரெல்லாம் சூத்திர வகுப்பின் பாற்பட்டவர் என்னும் தவறான ஆரியப் பொதுக்கொள்கைப் படி, தமிழ ரெல்லாருக்கும் சூத்திரப் பொதுப்பட்டம் சூட்டின பிற்காலத் தில், தமிழ் நாட்டிலுள்ள வணிகர் தங்களை வைசியரென்று சொல்லிக் கொண்டால், சூத்திரப்பட்டம் நீங்குவதுடன் ஆரியக் குலத் தொடர்புங் கூறிக்கொள்ளலா மென்று, ஆரிய முறையைப் பின்பற்றி வைசியர், சிரேஷ்டி (சிரேட்டி - செட்டி) என்னும் ஆரியப் பெயர்களையும், பூணூலணியும் வழக்கத்தையும் மேற்கொண்டனர். வணிகர் செல்வமிகுந்தவராதலின் அவரது துணையின் இன்றி யமையாமையையும், தமிழர்க்குள் பிரிவு ஏற்பட ஏற்பட அவரது ஒற்றுமை கெட்டுத் தங்கட்குத் தமிழ்நாட் டில் ஊற்றமும் மேன்மையும் ஏற்பட வசதியாயிருப்பதையும், பார்ப்பனர் எண்ணித் தமிழ் வணிகருக்குத் தாராளமாய் வைசியப்பட்டம் தந்தனர்.

ஆரியர்க்குள், பூணூலணிவது பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் என்னும் மேல் மூவரணத்தார்க்கும் உரியதேனும், அது ஆரியரொடு தொடர்பில்லாத தமிழர்க்குச் சிறிதும் ஏற்பதன்று. ஒவ்வொரு நாட்டிலும் மறையோர், அரசர், வணிகர், உழவர் என்னும் நாற்பாலார் உளர். அவரையெல்லாம் (சிறிது வேறு பட்ட) ஆரிய முறைப்படி முறையே பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்று கொள்ளின், இங்கிலாந்திலுள்ள கந்தர்புரி (Canterbury) அரசக் கண்காணியாளரைப் (Arch Bishop) பிராமணரென்றும், மாட்சிமை தங்கிய ஆறாம் ஜியார்ஜ் மன்னரை க்ஷத்திரியரென்றும், அங்குள்ள வணிகத் தொழிலா ளரை வைசியரென்றும், உழவரையும், கூலிக் காரரையும் சூத்திர ரென்றும் கூறவேண்டும். ஆங்கிலேயர் ஒரு கலவைக் குலத்தா ரேனும், உறவுமுறையில் எல்லாரும் ஒரே குலத்தார் என்பது சரித்திரமறிந்த அனைவர்க்கும் தெளிவாய்த் தெரிந்ததே. பிராம ணர்கள் பிற நாடுகளிலுள்ளவர்களையும் ஆரியக்குல முறைப் படி பகுத்தாலும் பிராமணக் குலத்தன்மை மட்டும் தங்கட்கே யுரியதாகக் கொள்வர். அதோடு கூடியவரை எல்லாரை யும் சூத்திரரென்று பொதுப்படச் சொல்லி, பின்பு ஒரு பயனோக்கி அரசரை க்ஷத்திரியரென்றும், வணிகரை வைசியரென்றும் முன்னுக்குப்பின் முரண்படக் கூறுவது அவர் வழக்கம்.

கம்மியர் (கம்மாளர்) நெடுங்காலமாகப் பிராமணரொடு இகல்கொண்டு வருவதனால், தாமும் பிராமணரும் சமம் என்று காட்டுவதற்காகப் பூணூலணிந்து வருகின்றன ரேயன்றி வேறன்று.

தமிழ்நாட்டில் பூணூலணியும் தமிழரெல்லாம் ஏதேனும் ஒரு வணிகத் தொழிலராயும், கம்மியத் தொழிலராயுமே இருப்பர்.

தமிழரின் நாகரிகத்தையும், சரித்திரத்தையும் அறியாத தமிழர், ஆரிய நாகரிகத்தை உயர்ந்ததென மயங்கி, இக்காலத்தும் ஆரிய வழக்கத்தை மேற்கொள்வதால் உயர்வடையலாமென்று கருது கின்றனர். சில ஆண்டுகட்குமுன் சிவகாசி, சாத்தூர் முதலிய சில இடங்களிலுள்ள தனித் தமிழரான நாடார் குலத்தினர், புதிதாகப் பூணூலணிந்து கொண்டதுடன், தங்களை க்ஷத்திரியரென்றும் கூறிக்கொண்டனர். நாடார் குலத்தினர் வணிக குலத்தைச் சேர்ந்தவரென்பது உலக வழக்காலும், நூல் வழக்காலும் தெளிவாயறியக் கிடக்கின்றது. வைசியர், க்ஷத்திரியர் என்னும் பெயர்கள் வடசொற்களாயிருப்பதுடன், க்ஷத்திரியர் என்னும் பெயர் நாடார் குலத்திற்கு ஏற்காததாயு மிருக்கின்றது.

நூல் என்பது புத்தகத்திற்கும் இழைக்கும் பொதுப் பெயராத லின், நூலோர் என்னும் பெயர் அறிஞரையும் பார்ப்பனரையுங் குறிக்கும் இடம் நோக்கி யறிந்து கொள்க.

(3) நடை : தொல்காப்பிய மெய்ப்பாட்டியலில், 12ஆம் சூத்திர வுரையில், “தன்மையென்பது சாதித் தன்மை; அவையாவன பார்ப்பாராயிற் குந்திமிதித்துக் குறுநடை கொண்டு வந்து தோன்றலும்” என்று நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். இத் தன்மையை இன்றும் ஆங்கில நாகரிகம் நுழையாத சிற்றூர்களிற் காணலாம்.

(4) மொழி : பார்ப்பனரின் முன்னோர் பேசிய மொழி கிரேக்கத்தையும் பழம் பாரசீகத்தையும் வேத ஆரியத்தையும் ஒட்டியதாகும். வேத ஆரியர் மிகச் சிறுபான்மையரா யிருந்ததனாலேயே, கடல்போற் பரந்த வடஇந்தியப் பழந்திராவிட மக்களுடன் கலந்து தம் முன்னோர் மொழியைப் பேசும் ஆற்றலை இழந்தனர். அதனால், அவர் வழியினர் இன்று எம் மாநிலத்தில் உள்ளனரோ அம் மாநிலமொழியையே தம் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். ஆயினும் வேத ஆரிய மொழியுடன் அக்காலத்து வட்டார மொழிகளாகிய பிராகிருதங்களைக் கலந்து செயற்கையாக அமைத்துக்கொண்ட சமற்கிருதம் என்னும் வடமொழிமீது வரையிறந்த பற்றும், தாம் பேசும் வட்டாரமொழிகளில் இயன்ற வரை சமற்கிருதத்தைக் கலப்பதும், அவரெல்லார்க்கும் பொது வியல்பாகும்.

வடமொழி செயற்கையான வடிவில் மிக முதிர்ந்ததாதலின் வழக்குறாது போய்விட்டது. ஆனாலும், பிராமணரின் வழியினரான பார்ப்பனர் இன்று வடமொழியைத் தம்மாலியன்ற வரை பாதுகாத்து வருகின்றனர். பிராமணர் இந்தியாவில் எந்த இடத்திலிருந்தாலும், எந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் வடமொழிப் பயிற்சியை மட்டும் விடார். மற்ற வகுப்பாரோ பெரும்பாலும் தத்தம் தாய்மொழிகளையே அறிந்திருப்பர். வடமொழியின் கடினம்பற்றிச் சில பார்ப்பனர் அதைக் கல்லாதிருப்பினும், அதன்மேல் வைத்திருக்கும் பற்றில் மட்டும், அதைக் கற்றவரினும் எள்ளளவும் குறைந்தவராகார். பார்ப்பனர் பிற மொழிகளைத் தாய்மொழிகளாகக் கொண்டிருப்பதும், வடமொழி வழக்கற்றவிடத்து வேறு போக்கின்றியே யன்றி வேறன்று.

பார்ப்பனர் வடமொழியைப் பேசாவிடினும் வளர்ப்பு மொழியாகக் கொண்டுள்ளமையின், அவர்க்கு வடமொழியாளர் என்று பெயர்.

மணிமேகலையில், ‘வடமொழியாளர்’ (5 : 40) என்று பார்ப்பனர்க் கும், ‘வடமொழி யாட்டி’ (13 : 78) என்று பார்ப்பனிக்கும் வந்திருத் தல் காண்க.

வடமொழிக்குத் தமிழ் நூல்களில் ஆரியம் என்னும் பெயரும் வழங்குகின்றது. இப் பெயரொன்றே பார்ப்பனரைத் திராவிடரி னின்று வேறான ஆரியராகக் கொள்ளப் போதிய சான்றாகும். ஆரிய நாடு, ஆரியபூமி, ஆரியாவர்த்தம் என்று சொல்லப்படுவது பனி (இமய) மலைக்கும் விந்திய மலைக்கும் இடையிலுள்ள பாகமாகும். இதுதான் ஆரியர் இந்தியாவில் முதலாவது பரவி நிலைத்த இடம். இங்கு வழங்கினதினால்தான் ஆரிய மொழிக்கு ‘வடமொழி’ யென்றுபெயர்.

வடநாட்டில், ஆரியரும் ஆரியர்க்கு முந்தின பழங்குடிகளும் பெரும்பாலும் கலந்துபோனமையின், பிற்காலத்தில் வட நாட்டார்க்கெல்லாம் பொதுவாக ‘வடவர்’ ‘ஆரியர்’ என்னும் பெயர்கள் தமிழ் நூல்களில் வழங்கிவருகின்றன.

ஆரியம் என்னும் பெயரால் தமிழ்நாட்டில் கேழ்வரகு தவிர வேறு ஒரு பொருளுங் குறிக்கப்படுவதில்லை. ஆரியக் கூத்து என்பது தமிழ்நாட்டில் இசைத் தமிழும் நாடகத் தமிழும் வழக்கற்றபின், வடநாட்டார் வந்து ஆடிய நாடகத்திறமேயன்றி, பல்கலைக்கழக அகராதியிற் குறிக்கப்பட்டுள்ளபடி கழைக் கூத்தன்று.

ஆரியன் என்னும் பெயருக்கு, ஆசிரியன், பெரியோன், பூசாரியன் முதலிய பொருள்களெல்லாம் தமிழில் தோன்றினது தமிழ் நாட்டில் பார்ப்பனத் தலைமை ஏற்பட்ட பிற்காலத்தேயாகும். இப் பொருள்களும் நூல் வழக்கேயன்றி உலக வழக்காகா.

வடமொழி, தென்மொழியின் செவிலித்தாயென்றும், நற்றா யென்றும், இந்தியப் பொதுமொழியென்றும் ஆராய்ச்சியில்லாத பலர் கூறி வருகின்றனர். உலக மொழிகளில், ஆரிய மொழிகளும் திராவிட மொழிகளும் மொழிநிலையில் மிக வேறுபட்டன வாகும். திராவிடக் குடும்பம் மிக இயல்பானதும் ஆரியக் குடும்பம் மிகத் திரிந்ததுமாகும். அவற்றுள்ளும், இயல்பிற் சிறந்த தமிழும் திரிபில் முதிர்ந்த வடமொழியும் மிக மிக வேறு பட்டனவாகும்.

பார்ப்பனர் தமிழ்நூற்கன்றித் தமிழ்மொழிக் கதிகாரிக ளாகாமை

இப்போதுள்ள முறைப்படி, பார்ப்பனர் தமிழ்நூல்களைக் கற்றுச் சிறந்த புலவராகலாமேயொழியத் தமிழ்மொழிக்கும் தமிழ்க் கருத்துகட்கும் அதிகாரிகளாக முடியாது. அதற்குக் காரணங் களாவன:

(1) ஆரிய மனப்பான்மை

ஒவ்வொரு நாட்டார்க்கும் ஒவ்வொரு மனப்பான்மை யுண்டு. அதனால் சில கருத்துகள் வேறுபடும். கருத்து வெளிப்பாடே மொழி. ஒவ்வொரு மொழியின் அமைதியும், இலக்கணம் (ழுசயஅஅயச), மரபு (ஐனiடிஅ) என இருவகைப்படும். ஒரு மொழியின் இலக்கணத்தையும் அதிலுள்ள நூல்களையும், எவரும் அம் மொழியை எழுதப் படிக்கத் தெரிந்தவுடன், தாமே கற்கலாம்; ஆனால், அம் மொழியின் மரபையும், அம் மொழியாரின் விதப்புக் கருத்துகளையும் தாமே அறியமுடியாது.

பார்ப்பனர் தமிழ்நாட்டிற்கு வந்து பல நூற்றாண்டுகளாகியும், தமிழரோடு கலவாமல், தமித்தே யிருந்துவந்தமையின், தமிழ் மரபையும் தமிழ்க் கருத்துகளையும் முற்றும் அறிந்தாரில்லை.

பார்ப்பனர் எப்போதும் வடநாட்டையே தங்கள் முன்னோரின் நாடாகவும், வடமொழியையும் தங்கள் முன்னோரின் மொழி யாகவும் கருதிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், தமிழரோ எப் போதும் தென்னாட்டையே தங்கள் முன்னோரின் நாடாகவும், தமிழையே தங்கள் முன்னோரின் மொழியாகவும் கருதிக் கொண் டிருக்கின்றனர். இவ்வொரு வேறுபாடே இவ்விரு வகுப்பாரை யும் எவ்வளவோ பிரித்துக்காட்டும்.

நூல் என்னுஞ் சொல் முதலாவது, ஒரு சூத்திரத்தாலும் பல சூத்திரத்தாலும் ஆன இலக்கணத்தையும், இலக்கணம் போன்ற கலை (ளுஉநைnஉந)யையுங் குறித்ததாகும். இப்போது, அது புத்தகத் திற்கு வழங்கினும், புத்தகத்தின் பொருளைக் குறிக்குமேயன்றி, அதன் தாள்தொகுதியைக் குறிக்காது. புத்தகம் என்னும் பெயரே தாள் தொகுதியைக் குறிக்கும். இது பல பார்ப்பனருக்கு விளங்குவ தில்லை.

நண்டுக்குட்டி, கம்பவைக்கோல் என்பனபோன்ற மரபுவழு பார்ப்பனர்க்குள் மிகப்பொது.

(2) நாட்டுப்புறத்தாரோடு தொடர்பின்மை

ஒவ்வொரு மொழியிலும், சொற்கள் உலகவழக்கு, நூல் வழக்கு என இருபாற்படும். உலகவழக்கு பொதுமக்கட்கும், நூல்வழக்கு புலவர்க்கும் உரியனவாகும். பொதுமக்களிலும், நகர்ப்புறத் தாரினும் நாட்டுப்புறத்தாரே உலக வழக்கிற்குச் சிறந்தாராவர். உலகவழக்கு ஒரு மொழிக்கு உயிரும் நூல்வழக்கு அதற்கு உடம்புமாகும்.

பார்ப்பனர் தங்களை நிலத்தேவராக எண்ணிக்கொண்டு, குடியானவருடனும் தாழ்ந்தோருடனும் நெருங்கிப் பழகாமை யால், தமிழ்ச்சொற்கள் பலவற்றை அறிந்திலர்.

(3) வடமொழிப்பற்றும் தமிழ்ப்பற்றின்மையும்

வீணாக வடசொற்களை வழங்குவதினாலும், மணிப்பவள நடையிலும் தற்சம நடையையே பின்பற்றுவதாலும், ஆங்கிலச் சொற்கள் மொழிபெயர்க்காதே தமிழில் எழுதுவதாலும், ஒருகால் மொழிபெயர்ப்பினும் வடசொற்களாகவே பெயர்ப் பதாலும், தனித்தமிழை விலக்குவதாலும், தென்சொற்களை வடசொற்களென்று கூறுவதினாலும் பார்ப்பனருக்குத் தமிழ்ப் பற்றில்லையென்பது வெட்டவெளியாம்.

“ஸ்ரீய: பதியான ஸர்வேஸ்வரனது கிருபையால் ஸம்ஸாரி சேதநர்களின் உஜ்ஜீவனத்தின் பொருட்டு,” `யூநிவர்சிட்டி’ (பல்கலைக்கழகம்), லெக்சரர் (சொற்பொழிவாளர்), கமிட்டி (குழு), ஸ்கூல் பைனல் (பள்ளியிறுதி), ஆகர்ஷண சக்தி (இழுப் பாற்றல்), நிரக்ஷரேகை (நண்கோடு), மத்தியதரை (நண்ணிலம்), தசாம்சம் (பதின்கூறு), சதவீதம் (நூற்றுமேனி), வியாசம் (விட்டம்) முதலிய வழக்குகளால், தமிழ்ப்பற்றின்மை வெளியா தல் காண்க. (தேவநேயம் தொகுதி -10) (பக் 140-164)
- முத்துச்செல்வன் முகநூல் பதிவு, 4.6.20
இடுகையிட்டது parthasarathy r நேரம் 1:39 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: ஆரியர், பார்ப்பனர், பாவாணர்
பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

சர். ஜான் மார்ஷல்

சர். ஜான் மார்ஷல்

சிந்துவெளி சின்னம்

சிந்துவெளி சின்னம்

கீழடி புதை பொருள்கள்

கீழடி புதை பொருள்கள்

கீழடி தமிழ் வரிவடிவம்

கீழடி தமிழ் வரிவடிவம்

கால்டுவெல் அறிஞர்

கால்டுவெல் அறிஞர்
திராவிடம்
Powered By Blogger

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

  • 1917
  • அசுரர்
  • அண்ணா
  • அம்பேத்கர்
  • அமைப்பு
  • அரப்பா
  • ஆண்டாள்
  • ஆதி இந்தியர்
  • ஆந்திரம்
  • ஆய்வு
  • ஆரியமாயை
  • ஆரியர்
  • ஆரியர் - திராவிடர்
  • ஆரியர்கள்
  • இணையத்தில்
  • இந்து
  • இனம் - மொழி
  • உணவு
  • ஏ.டி.பி
  • கட்சி
  • கலைஞர்
  • காரணம்
  • கீழடி
  • கேரளா
  • சங்கராச்சாரி
  • சர். ஜான் மார்ஷல்
  • சாதனை
  • சாதி
  • சிந்து சமவெளி
  • சிந்துவெளி
  • சிந்துவெளி நாகரிகம்
  • சுபவீ
  • செம்மொழி
  • சேதுபதி
  • சொல்
  • சொல் ஆய்வு
  • சொல்லாய்வு
  • டி.எம்.நாயர்
  • டி.மாதவன்
  • தமிழ்
  • தமிழ் தேசியம்
  • தமிழர்
  • தமிழாற்றுப்படை
  • தாயுமானவர்
  • திராவிட குரல்
  • திராவிட செயற்களம்
  • திராவிட நாகரிகம்
  • திராவிட மதம்
  • திராவிட மரபு
  • திராவிட மொழி
  • திராவிட மொழிகள் நாள்
  • திராவிட லெனின்
  • திராவிடக் கருதுகோள்
  • திராவிடநாடு
  • திராவிடப் போர்
  • திராவிடம்
  • திராவிடம்- தமிழர்
  • திராவிடர்
  • திராவிடர் - தமிழர்
  • திராவிடர் இயக்கம்
  • திராவிடர் நாகரீகம்
  • திருநெல்வேலி
  • திருமா
  • திருவிக
  • தீபாவளி
  • துக்ளக்
  • தேவர்
  • தொல்குடி
  • நடேசனார்
  • நீதிக்கட்சி
  • நூல்
  • நேரு
  • பங்களிப்பு
  • பட்டிமன்றம்
  • படையெடுப்பு
  • பல்கலைக்கழகம்
  • பன்னீர்செல்வம்
  • பார்ப்பன எதிர்ப்பு
  • பார்ப்பனர்
  • பாவாணர்
  • பிரகடன நூற்றாண்டு
  • பிரச்சினை
  • பிராகுயி
  • புலிகள்
  • பெரியார்
  • மரபணு ஆய்வு
  • மனித இனம்
  • மாடு
  • மாநாடு
  • மின்சாரம்
  • முன் திராவிடம்
  • வங்கம்
  • வடநாடு
  • வழக்கு
  • விளக்கம்
  • வேதம்
  • ஜான் மார்ஷல்

பக்கங்கள்

  • முகப்பு

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • திராவிடன் என்று சொல்லும்பொழுதுதான் நாம் எல்லோரும் சமம் என்று பொருள்படும்
    திராவிடன் என்று சொல்லும்பொழுதுதான் நாம் எல்லோரும் சமம் என்று பொருள்படும் இந்து என்கிறபொழுதுதான் நாம் பிளவுபடுகிறோம் சட்டப்பேரவை உறுப்பின...
  • வெற்றுச் சொல்லா திராவிடம்?
      September 30, 2021  • Viduthalai கவிஞர்   கலி .  பூங்குன்றன் திராவிடர் ,  திராவிடம்   என்பது   ஆரி   யத்தின்   அடி   வயிற்றைக்   கலக்கிக் ...
  • திராவிடன் ஏன்?
    விடுதலை ஞாயிறு மலர், 12.12.15
  • திராவிடம் என்ற சொல் வந்தவழி
    1) 1857 இல் ஆதி திராவிட அறிஞர்கள் பலர்கூடி "ஆதிதிராவிடர் மகா சன சபை" என்ற சமுதாய அமைப்பைத் தொடங்கினர். 2) 1883 ஆண்டிலே "திராவ...
  • தமிழ்நாடு - கேரளா, திராவிடப் பண்பாட்டு உறவுகள்
    இந்தியத் துணைக் கண்டத்தின் தென் கோடியில் உள்ள இரு இணை மாநிலங்கள் தமிழ்நாடு மற்றும் கேரளா, அரசியல் ரீதி யாக இவை மொழிவாரியாக தனித்தனி மாந...
  • சுயமரியாதை இயக்கம் 90, நீதிக்கட்சி நூற்றாண்டு விழா
    சுயமரியாதை இயக்கம் 90, நீதிக்கட்சி நூற்றாண்டு விழா தொடங்கியது   வாழ்த்தரங்கத்தில் ஜஸ்டிஸ் மோகன், ஜஸ்டிஸ் ஏ.கே. ராஜன், புலவர்...
  • பண்பாட்டின் வரலாறு-லோதல்: சிந்து சமவெளியின் சான்று
    பண்பாட்டின் வரலாறு -ச.தீபிகா, தொல்லியல்துறை ஆய்வு மாணவர்  1920ஆம் ஆண்டில் ஹரப்பா நாகரிகம் பற்றிய கண்டுபிடிப்பு, இந்தியத் துணைக் க...
  • திராவிடர் திருநாள் - தமிழ்ப்புத்தாண்டு - பொங்கல் விழா
    திராவிடர் திருநாள் விழா மாட்சிகள் திராவிடர் திருநாள் முதல் நாள் நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள் பாமரன், இமையம், இதழாளர் ஏ.எஸ்...
  • திராவிடமும் தேசியமும் - புலவர் க.முருகேசன்
    வேற்றுமொழிச் சொல்லான வடசொல் ஒலிவடிவிலும், எழுத்துவடிவிலும் மாறுப்-பட்டிருப்பதால் அதைத்தமிழில் கையாளும்-போது தமிழின் ஒலி வடிவம் மா...
  • யூதர்கள் ஆரியர்களே!
    மகாராட்டிரத்தில் பிஜேபி ஆட்சி யூதர்களை சிறுபான்மையினர் என்று கூறி இடஒதுக்கீடு கொடுக்கிறது காரணம் என்ன? ஆரியர்கள் என்பவர்கள் பெர்சியா (ஈர...

Translate

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2026 (2)
    • ▼  ஜூன் (2)
      • தாயுமானவர் பாடலில் ‘திராவிடம்’ ஆய்வாளர் ராஜசேகர் ப...
      • திருநெல்வேலி – தமிழ் தலைவர்கள் மாநாடு (நவம்பர் 30,...
  • ►  2025 (2)
    • ►  மார்ச் (2)
  • ►  2024 (10)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (2)
  • ►  2023 (10)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (1)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2022 (5)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (1)
  • ►  2021 (9)
    • ►  டிசம்பர் (1)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (1)
    • ►  ஜனவரி (1)
  • ►  2020 (30)
    • ►  டிசம்பர் (4)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (5)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (5)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (1)
  • ►  2019 (26)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (7)
    • ►  ஜூலை (5)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (1)
  • ►  2018 (30)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (1)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (13)
  • ►  2017 (23)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (1)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (3)
  • ►  2016 (41)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (4)
    • ►  செப்டம்பர் (5)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (5)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2015 (47)
    • ►  டிசம்பர் (9)
    • ►  நவம்பர் (22)
    • ►  அக்டோபர் (2)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (2)
    • ►  மே (1)
    • ►  மார்ச் (4)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (2)
  • ►  2014 (3)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (2)
ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.