புதன், 28 டிசம்பர், 2016

ஆரியமும் - பிராமணீயமும்; ஒரு விளக்கம்

“‘திராவிட’ என்பது சங்க இலக்கியத்தில் இல்லை - திராவிட என்பதுவே சமஸ் கிருதத்திலிருந்து பெறப்பட்டது” என்பது வும் ‘ஆரியம், திராவிடர், தமிழர் இவை யெல்லாம் ஜாதி, இனம் என்னும் மயக்கத்திலிருந்து நாம் தெளிவோமாக’ என்ற உபதேசமும் ‘பிராமணீயத்தை’ நியாயப்படுத்த ‘இந்துத்துவ’ வாதிகளால் வைக்கப்படும் வாதங்கள்.

அதுபோன்றுதான் ‘ஆர்ய’ என்பது இனமல்ல, ‘மேன்மை’, ‘மேன்மையானவர்’ உயர்ந்தோர், உயர்குடிப்பிறந்தோர்’ என்ப தான விளக்கமும்.

‘இந்து’ என்பது வேத, புராண இலக் கியங்களில், சமஸ்கிருத இலக்கியங்களில் இல்லை. ‘இந்து’ என்பது பாரசீக மொழி யிலிருந்து பெறப்பட்டது என்பதும் சரி தானே. அதனால் ‘இந்து’ என்ற மதமோ, பண்பாடோ இல்லையென்று ஒப்புக் கொள்ள வேண்டுமல்லவா?

‘திராவிட’ என்பது பிராகிருத ‘திராமிள’ என்பதிலிருந்து பெறப்பட்டது. திராமிளா என்பது ‘திராவிட’ என்பதையும் ‘தமிழ்’ என்பதையும் குறிக்கும். கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் கலிங்கத்தை ஆண்ட சேதி சவம்சத்து மன்னன் காரவேலானால் வெளி யிடப்பட்ட ஹதிகும்பா கல்வெட்டிலும், 113 ஆண்டுகளாக இருந்து வந்த திராவிட மன்னர்களின் கூட்டணி பற்றி (திராமிள சங்கத்ய) குறிப்பிட்டுள்ளது. கல்வெட்டு பிராகிருத மொழியிலுள்ளது.

கிறிஸ்துவ சகாப்தத்தின் முன்பும் பின்புமுள்ள கிரேக்க, ரோமானிய (பயண) குறிப்புகளில் தென்னிந்தியப் பகுதி இண் டிக, இண்டிகே, இந்து எனக் கூறப்பட வில்லை. அதில் உட்படவில்லை. மாறாக ‘தாமரிகே’ (திராமிள என்பதின் மரூஉ) என்றே அழைக்கப்பட்டது. ஆரியரல்லாத மன்னர்களை, மக்களை, ‘திராமிள’ என்று குறிப்பிடும் மரபு பவுத்த சமண இலக் கியங்களிலும், பிராகிருத கல்வெட்டு களிலும் காணப்படுகிறது. தென்பகுதி ‘யமதிக்’ (திசை) என்றே சமஸ்கிருத பிரா மணீயம், ஆகமங்களை, புராணங்களை உருவாக்கியபோது, ஆரியமல்லாதவர்கள் செறிந்திருந்த தென்பகுதியை ‘திராவிட’ திசை என்பதாகக் குறிப்பிட்டனர். அங்கே வந்தேறிய பிராமணர்களை ‘பஞ்ச திராவிடர்’ (அய்ந்து தென்பகுதிகளில் - திராவிடப் பகுதிகளில் வாழ்ந்தவர்கள்) என்றே குறிப்பிட்டனர் (உ - ம். ஸ்கந்த புராணம்). எனவே திராவிட என்பது இல்லாத ஒன்றல்ல. அது தென் திசை (தென்னிந்தியா)யையும், தென் திசையில் செழித்திருந்த ஆரியரல்லாத, வைதீக மல்லாத, பிராமணீயம் சாராத வேற்றுப் பண்பாட்டினையும், அப்பண்பாட்டு மக்களையும் குறித்ததே.

‘இந்து’ என்ற அடையாளத்தை எப்படி அன்னியர்கள் சிந்து - கங்கைப் பகுதி ஆரியத்திற்கு அன்னிய பாரசீக - கிரேக் கர்கள் அளித்தார்களோ அதைப்போன்று, பண்பாட்டால், மொழியால், இனத்தால், நிறத்தால் வேறுபட்ட தென்பகுதி மக் களுக்கு ‘ஆரியம்’ அல்லது ‘பிராமணீயம்’ தந்த அடையாளப் பெயர்தான் ‘திராவிட’ என்பதாம்.

ஆரிய (வேத)ர்கள் வட இந்தியாவில் வேறூன்றிய பின் தென்பகுதி நோக்கி தங்கள் கவனத்தையும், நடவடிக்கைகளை யும் முடுக்கிவிட்ட பிறகுதான் இந்த “திராவிட” என்னும் குறியீட்டைப் பயன் படுத்தினர். அதற்கு முன்னர், ஆரியர்கள் பல்வேறு கட்டங்களில் ஊடுருவியும், மோதலில் ஈடுபட்டும், சிந்து சமவெளி நகர நாகரீகங்களைச் சீரழிக்க முயன்று வந்த வேளையில், ஆரம்பக் கட்டத்தில் அங்கே வளத்துடன் பரந்திருந்த ஆரியரல்லாதவர் களை “ஆரிய” எனக்குறிப்பிடவில்லை. அங்கே இருந்த பூர்வகுடிகளை தாச, தஸ்யூ, அசுர, ராட்சச, யட்ச, பாணி, கிருஷ்ண (கருப்பு வர்ண), நாசியற்ற (அநாஸ்ய) என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தனர். பெண் வழிபாடு, லிங்க வழிபாடு கொண்டவர் களாகவும், கோட்டைகளில் (புர) வாழ்ந் தவர்களாகவும், வளமான வணிகர்களாக வும் (பாணி, பணி) யக்ஞங்களை புரவலிக்க மறுத்தவர்களாகவும், பிராமணர்களுக்கு தானமளிக்கத் தயக்கியவர்களாகவும் பூர்வ குடிகளைக் (திராவிடர்களை) குறிப்பிட் டனர். ரிக் வேத வேண்டுதல் பாசுரங்கள் பெரும்பாலும், தம் எதிரிகளின் (ஆரிய ரல்லாத பூர்வ குடிகளின்) வலிமையான கோட்டைகளை அழிக்க தங்கள் முதல் தெய்வமான இந்திரனை இடியைப் பயன் படுத்துமாறு (வஜ்ராயுதம்) வேண்டுவ தாகவே இருந்தன.

ஆரம்பக் கட்டத்தில் இவ்வாறு ஆரிய வந்தேறிகளுக்கும், இங்கே இருந்த பூர்வக் குடித் தலைவர்களுக்கும் பல காலம் தொடர்ந்து நடந்த போராட்டங்களின் எச்சங்களைத்தான் தேவாசுரப் போர்கள், ராமாயணம், புராணங்கள் போன்றவற்றில் காணுகிறோம். அன்னிய ஆரியர்கள், பூர்வீக அசுரர்களை (அ - சுரர் = சுரர் அல்லாதவர்கள், சுரர் = தேவர், பூசுரர் - பூலேக தேவர்களான பிராமணர்கள்) சதிகளாலும், வஞ்சகங்களாலும், அழித்த வரலாற்று உண்மை, கற்பனை கலந்து பிராமணீயத்தை நியாயப்படுத்தும் பிரா மண முதன்மையை, அச்சுறுத்தி ஏற்க வைக்கும் நோக்கம் கொண்ட தொன்மங் களாகக் கதைத்தனர்.

அப்படியும் புகழ் மங்காத அசுரர்களின் பெருமைகளுக்கு பிராமணர்களே கார ணம் என்று நம்ப வைக்க அதே தொன்மக் கதைகளை அவ்வப்போது சில உபகதை களைச் சேர்த்தும், சில பழைய கதைகளை மாற்றியும் பிராமணீய தெய்வீக(?)த்தை அப்பாவி திராவிடர்களிடம் நம்ப வைக்க முயன்றனர். ராவணனுக்கு, புலஸ்தியன் மூலமாக பிராமணத் தந்தைகளை உருவாக்கி பிரம்மாவின் பேரன் விச்ர வளிக்கும் ராட்சச சுமாலியின் மகள் கைகஸிக்கு பிறந்தவனாகக் காட்டினர். அதுசரி பிரம்மாவுக்கு முதலில் புத்திரர்கள் தோன்றியபோது அதன் தாய் யார்? பிரம்மாவின் மனைவியா? பிரம்மாவின் மகளா? மகளையே பெண்டாட்டியாக்கிய பிரம்மாவைக் கொண்டாடும் பிராமணர் களிடம் எந்த ஒழுக்கத்தை, நேர்மையை எதிர்பார்க்க முடியும்? மீனவப் பெண் ணுக்கும், வேட்டுவப் பெண்ணுக்கும் பிறந்த பராசரன், வியாசன் போன்றவர் களுக்கெல்லாம் முறை தவறி பிறப்பித்த தந்தையர் பிராமணர்களே என்ற கதை களை உருவாக்கியவர்களும் பிராமணர் களே. சூத்திர கிருஷ்ணனுக்கு சத்திரிய பெற்றோர்களைப் படைத்ததும் அவர்களே. பல்வேறு காலங்களில் பல்வேறு இடங் களில் இருந்த தமிழ்ப்புலவர்களான வள் ளுவன், அவ்வை போன்றவர்களெல்லாம் பிராமண பகவன் மூலமாக ஆதி என்ற புலைச்சிக்குப் பிறந்தவர்கள் என்று அறிவுக்குப் பொருந்தாத முடிச்சைப் போட்டவர்களும் பிராமணர்களே. பிரா மண மூலமின்றி யாருக்கும் அறிவோ, ஆற்றலோ, புக«ழு£ இருக்கக்கூடாது, இருக்க முடியாது என்ற வருண - மனுதர்மத்தை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல புராணப்புரட்டுகளால் விஷவித்துக்களை விதைப்பதுதான் பிராமணீயம்.

சங்க இலக்கியங்களில் இல்லாத சூரியகுலம், சந்திரகுலம், அக்கினிகுலம் போன்றவற்றை சங்கத்திற்குப் பிற்பட்ட சோழ, பாண்டிய, சோழர் கல்வெட்டுகளில் உருவாக்கியவர்களும் பிராமணர்களே.

அசுரர்களுக்கு பூசுரர்தான் தந்தையர் என்ற கதைகளை ஏற்பதற்கு சுய அறிவும், சுய மரியாதையும் உள்ளவர்கள் முன் வரமாட்டார்கள். ராவணன் போன்ற அசுரர்களைப் போற்றுகிறோம் என்றால் அதற்குக் காரணம் அவர்கள் ஆக்கிரமிப்பு செய்யாமல், அவர்கள் ஆக்கிரமிப்பிற்கு உள்ளானவர்கள். ராம - லட்சுமணர்களை நெருங்கிய ராவணனின் தங்கை சூர்ப் பனகையின் மூக்கும் மார்பகங்களும் அரியப்பட்ட கொடுமையை, வீரமுள்ள பண்புள்ள எந்த (திராவிட) ஆண்மகனா வது செய்வானா? அதனை ஆரிய புத்ர ராமன் தான் செய்வான். ராவணனிடம் மாதக்கணக்கில் சிறைப்பட்ட சீதையை கவுரவமாக நடத்தியது திராவிடப் பண்பு, ஆரியப் பண்பல்ல. தம்பி விபீஷணனுக்கு அரியணை ஆசை காட்டி துரோகியாக்கி ராவணனை வீழ்த்தியதும், அண்ணன் வாலியை வீழ்த்த தம்பி சுக்ரீவனுக்கு பதவி ஆசை காட்டியதும், அண்ணி தாரையை தன் வசம் வதைத்துக் கொள்ள சுக்ரீ வனுக்குத் துணை நின்றதும் ராமனின் ஆரியப் பண்பு ஊரார் முன்னால் தனது கற்பை உறுதி செய்ய தன் மனைவியையே அக்னிப் பிரவேசம் செய்ய வைத்ததும், கர்ப்பம் தரித்த சீதையை, ஊரில் ஒருவன் சந்தேகப்படுகிறான் என்று கூறி காட்டிற்கு துரத்தியடித்ததும் ராமனின் ஆரிய ராஜ தர்மம். ராவணன், மகாபலி, இரண்யன் போன்றவர்களை அவர்களது நேர் மைக்கும் வீரத்திற்குமாகப் போற்றுகிறோம். அண்ணனை வீழ்த்த தம்பியையும், அப்பனை வீழ்த்த மகனையும் துரோகி களாக்கிய ராமன் போன்ற ‘அவதாரங் களை’ வெறுப்பது நியாய உணர்வின்பாற் பட்டது. எங்கள் மூதாதையரின் அப்பன்கள் யார் என்பதை கற்பிக்க பிராமண சூழ்ச்சியருக்கு எந்த உரிமையுமில்லை. நீங்கள் உங்களுக்காக உருவாக்கிய புராயணங்களை அப்படியே முழுமையாக ஆதார உண்மைகளாக நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமா?

‘ஆரிய’ என்பதற்கு பல பொருட்கள் உண்டு என்பது உண்மை தான். ஆனால் அது ஆரிய என்ற இனத்தையும், மொழிக் குடும்பத்தையும் குறிக்கவில்லை என்பது புரட்டல்லவா?

‘ஆரிய’ என்பதை மேற்குடியினர், மேலானவர் என்ற பொருளில் பவுத்த சமண வைதீக இலக்கியங்கள் குறிப்பிடுவது உண்மைதான். ஆனால் ‘அனார்ய’ என்று அதே இலக்கியங்கள், குறிப்பாக ராமாயண, மகாபாரதங்கள் கூறுகின்றபோது ‘நீ ஆரியனாக இருக்க மாட்டாய்’ என்னும் போது அது இனப்பெருமிதத்தின் வெளிப் பாடு அல்லவா? தமக்கு இசைவானவற்றை மீறுகின்ற போதோ, தவறுகின்றபோதோ ஒருவன் ‘ஆரிய’ அந்தஸ்தை இழக்கிறான் என்பது ‘ஜாதிப் பிரஷ்டம்’ செய்வதைப் போன்றதல்லவா? அது எப்படி இனத்தைக் குறிப்பதாக, இனப்பெருமிதத்தை குறிப்ப தாக இல்லாமல் போய்விடும்? 
தமிழிலக்கியங்களில் “ஆரிய” என்ற சொல் கையாளப்படுவதை கவனியுங்கள்.

“ஆரியப்படை கடந்த” என்ற சிறப்பு எப்படி யாரைக் குறிக்கிறது? இங்கு ஆரியப்படை என்பது வடக்கிலிருந்து வரும் அன்னியரான ஆரியரின் படை என்றாகிறது. அதாவது ஆரியர், தமிழருக்கு, அன்னியர் என்றாகிறது. ஆரிய மன்னன் பிரகத்தத்தனுக்கு (பிரகத்ரதன்) தமிழ்ப் புலவர் தமிழ் கற்றுக் கொடுத்தாரென்ற குறிப்பு, ஆரிய மன்னன் பிரகத்தத்தன் தமிழன், திராவிட அல்லாத அன்னியன் என்று பொருள். ‘ஆரியக்கூத்து’ என்பது ஆரியப்பகுதியிலிருந்து, வடக்கிலிருந்து வந்த பிரிவினர் நடத்திய கழைக்கூத்து போன்றவற்றைக் குறிக்கிறது. ஆரியம் கண்டாய், தமிழம் கண்டாய் என்ற பக்திப் பரவசம் ஆரியம் - தமிழ் ஆகியவை காழ்ப்புகளுக்காக திரிக்கப்பட்ட கற்பனை களல்ல வரலாற்று உண்மைகள்.
-விடுதலை ஞா.ம.,17.12.16