செவ்வாய், 10 மார்ச், 2020

திராவிடன் சிந்திக்க வேண்டாமா?

மானமற்ற சில திராவிடர்கள் - தங்கள் பிறவியில் உறுதியோ நம்பிக்கையோ அற்ற திராவிடர்கள், ஆரியனை மதகுருவாகவும் அரசியல் குருவாகவும் கருதி அவன் பின்னால் திரிகிறார்கள் என்றால், இதை விட ஒரு சமூகத்துக்கு வேறு மானக்கேடென்ன என்று கேட்கிறேன்.

இந்தியாவில் திராவிடம், ஆரியவர்த்தம் என்ற பிரிவினை வெகு தெளிவாக இன்றும் இருக்கிறது. ஆதாரமும் இருக்கிறது. அப்படியிருக்க திராவிட நாட்டை பரதநாடு என்ற சொல்லவோ, பரதகண்டம் என்று சொல்லவோ, பாரத தேசம் என்று சொல்லவோ என்ன உரிமை இந்த ஆரியர்களுக்கு இருக்கிறது என்று கேட்கிறேன்.

அதுமாத்திரமல்லாமல், மானம் கெட்ட தமிழர்கள் பலர் அவர்கள் கூடச் சேர்ந்து கூப்பாடு போடுகிறார் களே, இவர்களுக்குத் தேசாபிமானமோ சுயமரியா தையோ தங்கள் பிறவியில் நம்பிக்கையோ இல்லையா என்று கேட்கிறேன்.

பரதன் திராவிட நாட்டை எப்போது ஆண்டான்? பரதன் என்பவனுடைய ஆட்சி திராவிடத்தில் எப் போதும் இருந்ததில்லை. திராவிட நாட்டைத் திராவிடர் களே ஆண்டிருக்கிறார்கள். முஸ்லிம் ஆட்சி கூட மிகச் சிறிது காலம் சில இடத்தில் இருந்தது என்பதல் லாமல், அதுவும் ஆரியர் குடியேறிய நாடுகளைப் பூரணமாக 1000க் கணக்கான வருஷங்களாக ஆண்டது போல் ஆண்டதாகச் சொல்ல முடியாது. திராவிட மன்னர்கள் ஆட்சி வேண்டுமானால் ஆரிய நாடுகளிலும் இருந் திருக்கிறது. ஆனால் ஆரியர் சூழ்ச்சியின் பயனாய் இந்த நாட்டை ஆண்ட பழம் பெரும் மன்னர்களின் சமுதாயங்களான திராவிடர்கள் ஆரியர்களுக்கு அடிமை ஜாதியாகவும், கீழ்த்தர ஜாதியாகவும், தீண்டாத ஜாதியாகவும் ஆக்கப்பட்டுத் திராவிட நாட்டிற்கும் ஆரியர்கள் பெயர்கள் கொடுக்கப்பட்டு விட்டன.

இன்று திராவிடம் பாம்பு வாயில் சிக்கிய தவளை விழுங்கப்படுவது போல், திராவிட சமுதாயம் அவர்க ளது கலை, மானம் ஆகியவைகள் உட்பட ஆரியப் பாம்பால் விழுங்கப்படுகிறது. இப்போது தவளையாகிய திராவிடத்திற்கு கடைசி மூச்சு நடக்கிறது. அதன் அபயக் குரல் கேட்பது போல் பிராணாவதைக் கூப் பாடு போடுகிறது. இந்தச் சமயத்தில் பாம்பைத் துண்டித் துவிட்டால்தான் திராவிடம் என்கின்ற தவளை பிழைக்கும். இல்லாவிட்டால் இன்னும் கொஞ்ச நேர (கால)த்திற்குள் தவளை (திராவிடம்) மறைந்தே போகும். இப்படிப்பட்ட நிலையில் அய்யோ பாம்பை வெட்டுவதா அடிப்பதா பாவம் என்று மடையனும் மானமற்றவனும்தான் சொல்லுவான்.

இன்று திராவிடனுக்கு இந்த திராவிட நாட்டில் என்ன யோக்கியதை இருக்கிறது. ஆரியர்களையும் திராவிடர்களையும் ஒத்திட்டுப் பாருங்கள். ஆரியன் தெரு கூட்டுகிறானா? மூட்டை தூக்குகிறானா? வண்டி ஓட்டுகிறானா? பியூனாய் இருக்கிறானா? உழுகிறானா? அறுப்பு அறுக்கிறானா? சரீரத்தில் இருந்து ஒரு துளி வேர்வையோ, நகத்தில் கடுகத்தனை அழுக்கோ, படியும்படி ஏதாவது உடலுழைப்புச் செய்கிறானா? ஆனால் அவன் வாழ்வையும் திராவிடன் வாழ் வையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

திராவிடன் - சூத்திரன். திராவிடப் பெண் சூத்திரச்சி. ஆரியர் வீட்டு வேலைக்காரர்கள், அத் தனை பேரும் திராவிட (சூத்திர)ர்கள். மற்றும் திராவிடப் பழம் பெருங்குடி மக்கள் ஈயத்தில் கண்ணாடிக் கல்லில் நகைபோடுவது. ஆரியர்கள் இன்றைக்கும் பிச்சை எடுத்தாலும் வைரம், செம்பு, பொன் நகைகள் போடுவது. திராவிடர்கள் 100க்கு 90 பேர்கள் தற்குறி. ஆரியர்கள் 100க்கு 90 பேர்கள் படித்தவர்கள், மகாபண் டிதர்கள். திராவிடர்கள் உத்தியோகத்தில் 100க்கு 90 பேர்கள் பியூன்கள், போலிசு காவலர்கள், தோட்டி தலையாரிகள்.  ஆரியர்கள் 100க்கு 90 உத்தியோகங் களில் கலெக்டர்கள், சூப்பிரண்டுகள், ஹைகோர்ட் ஜட்ஜீகள் முதலிய பெரும் பெரும் பதவிகள், ஆரியன் பிச்சை எடுத்தாலும் அவன் பிள்ளை அய்.சி.எஸ். ஆகிறான். திராவிடன் ஜமீன்தார னாய் இருந்தாலும் அவன் மகன் தெருவில் காவாலியாய், காலியாய், ஆரிய அடிமையாய், தற்குறியாய் மடையனாய்த் திரிகிறான். திராவிட மிராசுதாரர்கள் மக்கள் எல்லாம் தற்குறியாய் மூட்டை தூக்குகிற நிலைமைக்குப் போகிறார்கள். இந்த நிலைமைக்குக் காரணம் என்ன? திராவிடன் சிந்திக்க வேண்டாமா என்று கேட்கிறேன். கடவுள் பக்தியென்று கொட்டையும் சாம்பலும் மண் ணும் அணிந்துகொண்டு, பார்ப்பான் பின்பாகத்தைப் பார்த்து கொண்டு நின்று கும்பிட்டு, அவன் கால்தூசி யைச் சடகோபமாகக் கொண்டு கடவுள் பக்தனாவது போல், பார்ப்பானுக்குப் பின்னால் நின்று கொடியைப் பிடித்து அவனுக்கு ஜே போட்டு தேசபக்தனாகக் காட்டிக் கொள்ளும் மானமற்ற திராவிட னைக் கேட்கின்றேன். இதோ மேடைக்கு அழைக்கிறேன். வந்து பதில் சொல்லட்டும்.

- "குடிஅரசு", 10.1.1948

 விடுதலை நாளேடு 6.3.20

வியாழன், 5 மார்ச், 2020

சிந்துவெளிக்கு முந்தைய நாகரீகம் கீழடி

உலகின் மிகப்பழைமையான சுண்ணாம்புச் சுவர் கண்டுபிடிப்பு

மதுரை, மார்ச்.4- திருப்புவ னம் அருகே கீழடியில் 6 ஆம் கட்ட அகழாய்வுக்காக தோண்டப் பட்டு வரும் குழியிலிருந்து பகுதியாக வெளியே தெரியும் 2,500 ஆண்டுகளுக்கு முந் தைய ஒன்றரையடி சுண் ணாம்புச் சுவர் கண்டறியப் பட்டுள்ளது, இந்தச்சுவர் கட் டிய காலகட்டம் சிந்துவெளி நாகரீகத்திற்கு முந்தைய கால கட்டம். ஆதலால் இதுவே உலகின் மிகவும் பழமையான மனித நாகரீகம் தோன்றிய இடமாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

கீழடியில் மத்திய-மாநில அரசுகள் தனித்தனியாக நடத் திய 5 ஆம் கட்ட அகழாய்வில், இப்பகுதியில் நகர நாகரிகம் இருந்தது கண்டறியப்பட் டது. மேலும், இங்கு 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்கள் பயன் படுத்திய பலவகைப் பொருள் கள் கண்டறியப்பட்டதை அடுத்து, அவற்றை ரூ.12 கோடி மதிப்பீட்டில் காட்சிப் படுத்தி வைக்க அருங்காட்சி யகம் அமைக்கப்படவுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு சார்பில் கீழடியில் 6 ஆம் கட்ட அகழாய்வு தற் போது நடந்து வருகிறது. கீழடி கிராமத்துக்கு அருகே யுள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களி லும் அகழாய்வு நடத்தப்பட வுள்ளது.

முதலில், கீழடியில் 6 ஆம் கட்ட அகழாய்வு தொடங்கி, நடந்துவரும் நிலையில் மூன் றரையடி தோண்டப்பட்ட குழியிலிருந்து பழங்காலத் தமிழர்கள் கட்டியிருந்த ஒன் றரையடி நீளமுள்ள சுண் ணாம்புச் சுவர் பகுதியாக வெளியே தெரியவந்துள்ளது. குழியை ஆழமாகத் தோண் டிய பின்னரே, இச்சுவரின் நீளம், அகலம் தெரியவரும். எனவே, இச்சுவருக்கு சேத மில்லாமல் குழியைத் தோண்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, அகழாய்வு ஆர்வலர்கள் மற்றும் உல கெங்கும் வாழும் தமிழர்களி டையே 5 ஆம் கட்ட அக ழாய்வில் கிடைத்ததை விட, 6 ஆம் கட்ட அகழாய்வில் பழங்காலத் தமிழர்கள் பயன் படுத்திய வியக்கத்தக்க பொருள் கள் அதிகளவில் கிடைக் கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள் ளது.

கீழடி சிந்துவெளி நாகரீ கத்தை விட சிறிது முந்தைய கால வளர்ந்த நாகரீகமாகும். இங்கு சுண்ணாம்புக் கலவைச் சுவர்கள் கிடைத்துள்ளதால். உலகின் அனைத்து நதிக்கரை நாகரீகத்திற்கும் மூத்த நாகரீ கமாக வைகை நதிக்கரை நாக ரீகம் இருந்துள்ளது. மேலும் ஆய்வுகள் நடைபெறும் பட் சத்தில் இன்னும் பல வியக்கத் தகு தமிழர் நாகரீகம் பற்றிய உண்மைகள் வெளியாகலாம் என்று அகழாய்வில் ஈடுபட்ட ஆய்வியலாளர்கள் கூறுகின்ற னர்.

 - விடுதலை நாளேடு, 4.3.20

ஞாயிறு, 1 மார்ச், 2020

திராவிடம்ஒரு மொழியோ/இனமோ அல்ல! "சமூகநீதி" குறித்த சொல்!

திராவிடம்
ஒரு மொழியோ/இனமோ அல்ல! "சமூகநீதி" குறித்த சொல்!

Non-"Brahmin" எனும்
அம்மனிதனைக் கொண்டு நம்மை அடையாளப்படுத்தாமல்
நம்மை, நம் வேர்களால் அடையாளங்காணும் சொல்!

*தமிழ்= Endoynm (நம் வழக்கு)
*திராவிடம்= Exonym (உலக வழக்கு)

ழ-கரம் வாய்வராமையால்
அன்றைய உலகுக்கு, தமிழ்= திராவிடம்! 

திராவிடம்= ஒரு தொகைச்சொல் மட்டுமே!

தமிழ் தான் திராவிடம், உலகத்தின் வழக்கில்! Exonym!
ஆய்வுலகிலும் அப்படியே!

ஆதி தமிழ் மொழி, பல மொழிகளாகக் கிளைத்த போது
மொழிக் குடும்பமும், அதே பெயரைப் பெற்றது! திராவிட மொழிக் குடும்பம்!

திராவிடம் எனும் ஒரு தனித்த மொழி இல்லை!

இன்றைய திராவிடம்= தெலுங்கு அல்ல!
அது 'விஷமி'களின் பொய்ப் பரப்புரை!

ஆய்வுலகில்,
திராவிடம்= தனித்த ஒரு மொழி அல்ல! 
ஆதி தமிழும் + குடும்பமும் உள்ளடக்கிய சொல்!

இனமும்= தமிழினமே!
திராவிட இனம் என்பது தனியாக இல்லை!
ஏனெனில் ஆதி தமிழ்= திராவிடம்! (Exonym)

ஆரியம் x தமிழ்

ஆனால் ஆதி தமிழ், இன்று பல மொழிகளாகப் பிரிந்து விட்டதால்..
எல்லோரையும் சேர்த்து, ஆரியத்துக்கு எதிராகக் குறிக்க..
ஒரு "சமூகநீதிச்" சொல்= திராவிடம்! மொழி= தமிழே!

*அன்று திராவிடம்= தமிழின் Exonym
*இன்று திராவிடம்= சமூகநீதிச் சொல்!
அவ்வளவே!

திராவிடம், சம்ஸ்கிருதச் சொல் அல்ல!

'தமிழ்' என வாய்வராமையால்
உலகு முழுதும் 'திராவிடம்' என்றே, அன்று சொன்னது!
*தமிழ்= Endonym
*திராவிடம்= Exonym

அன்று, திராவிடமே தமிழ்! தமிழே திராவிடம்!
இன்று, திராவிடம் ஆரிய எதிர்ப்புக்கான ஒரு சமூகநீதிச் சொல் மட்டுமே!

இன்றும் ஆய்வுலகில்
திராவிட நாகரிகம் எது? என்றால்..

*முதலில், தமிழ் நாகரிகத்தையே குறிக்கும்!
*பிறகே, மொழிக் குடும்ப நாகரிகமும் சேர்ந்து கொள்ளும்!

அறிக: திராவிடம் ஒரே பொருள் கொண்ட சொல் அல்ல!
அஃதொரு Academic தொகைச்சொல்! திசைச்சொல்! இன்று சமூகநீதிச் சொல்!

திராவிடம் தெலுங்கு அல்ல!
தெலுங்கு ஊர்ப் பல்கலைக்கழகமே
தமிழைத் தான் முதலில் வைத்துள்ளான்!

*திராவிடம்= தமிழ், முதலில்!
*பிறகே, திராவிடம்= மொழிக்குடும்பம்!

Academic உலகில்
தமிழ்/திராவிடம், இரண்டும் ஒன்றே!

திராவிடம்= பெரியார் உருவாக்கிய சொல் அல்ல!

அவருக்கும் முன்பே.. 
தலித் விளக்கு, அயோத்திதாசர் புழங்கிய சொல்!

திராவிடம்= கால்டுவெல், வெள்ளைக்காரன் உருவாக்கிய சொல் அல்ல!

அவருக்கும் 2000 ஆண்டு முன்பே..
கிரேக்கம்/ ரோமாபுரி/ எகிப்து.. உலகம் முழுதும் 
தமிழை= திராவிடம் என அழைத்த சொல்!! 

அறிக:
*உங்கள் மொழி= தமிழ் மொழியே!
*உங்கள் இனம்= தமிழ் இனமே!

ஆனால்.. உங்களை, உலகமே.. 2600+ ஆண்டுகளாக அழைத்த சீர்மைச்சொல்= திராவிடம்! Exonym!

ஆரியத்துக்கு எதிரான போரில், தொல் பெருமை நிலைநாட்ட
"திராவிடம்" எனும் சொல் பயன்படுத்தப்படுகிறது, சமூகநீதிச் சொல்லாய்!

அறியப்படாத தமிழ்மொழி நூலில்
பாவாணர் + உலகத் தரவுகளோடு உள்ளது!
வாசித்தறிக!

- கரச

நன்றி
வாட்சபில் பதிந்தவர்க்கு

-முல்லைவேந்தன்-