சனி, 4 நவம்பர், 2017

திராவிடம் என்றால் என்ன!

திராவிடம் என்றால் என்ன என்றே
தெரியாமல் வாயால் வடை சுட்டு
கையால் கம்பு சுத்தும்
அறிவிலிகளே இதோ திராவிடம்
என்றால் என்ன என்பதற்க்கான ஆதாரம்
திராவிடர் என்ற சொல் எப்படி வந்தது
மனுஸ்மிருதி 10ஆம் அத்தியாயம், 43,
44ஆம் சுலோகத்தில் திராவிடம் என்ற
சொல் ஆளப்பட்டுள்ளது.
ஜாதி தர்மத்தை அனுசரிக்காதவர்க
ளுக்குப் பிறந்தவர்கள் திராவிடர்கள்.
திராவிட தேசத்தை ஆண்டவர்கள்
சூத்திரர்கள் என்கிறது மனுஸ்மிருதி.
கி.பி.17ஆம் நூற்றாண்டில் குமரிலபட்டர்
திராவிட பாஷைகள் பற்றிக்
கூறியுள்ளார்.
கி.பி.17ஆம் நூற்றாண்டில்
தாயுமானவர், “கல்லாத பேர்களே
நல்லவர் என்ற பாடலில்
‘திராவிடம்’ என்ற சொல்லைப்
பயன்படுத்தியுள்ளார்.
டாக்டர் ஹட்சன் என்பவர் திராவிடன் என்ற
சொல்லைப் பயன்படுத்தியதாய் கியர்சன்
குறிப்பிடுகிறார் (Linguistic Survey of India
Vol.I)
1856இல் கால்டுவெல் திராவிடர் என்ற
சொல்லைக் கையாண்டார்.
பெரியாருக்கு முன் நீதிக்கட்சியினர
ே திராவிடர் என்ற சொல்லைப்
பயன்படுத்தினர்.
திராவிடம் பற்றி பாவாணர் கருத்து:
“இக்கால மொழியியலும், அரசியலும்
பற்றித் தமிழும், அதனினின்றுந் திரிந்த
திராவிடமும் வேறு பிரிந்து
நிற்பினும் பழங்காலத்தில் திராவிடம்
என்றதெல்லாம் தமிழே. திராவிடம்
என்று திரிந்தது தமிழ் என்னும்
சொல்லே. தமிழ் _தமிழம் _ த்ரமிள _
திரமிட _ திரவிட _ த்ராவிட _
திராவிடம்’’ என்று கூறி தமிழே
திராவிடம் என்றானது என்கிறார்.
அதாவது தமிழும் திராவிடமும்
வேறு வேறானவை அல்ல; இரண்டும்
ஒன்றே என்கிறார்.
- ( ஒப்பியன் மொழி நூல், பகுதி - 1,
பக்கம் - 15, தமிழ்மண் பதிப்பகம், சென்னை -
14)
ஆக, திராவிடம் என்ற சொல்
தமிழுக்கோ, தமிழர்க்கோ எதிரானது
அல்ல. அது ஓர் இனக் குறியீடு. ஆரிய
இனத்தின் எதிர்பதமான பார்ப்பனர்
அல்லாதாரைக் குறிக்கும் ஓர்
அடையாளச் சொல் தான் திராவிடன்.
தமிழன் என்ற போர்வையில் ஆரியப்
பார்ப்பனர்கள் உள்ளே நுழையாமல்
தடுக்கும் கவசம், பாதுகாப்பு அரண்
திராவிடன் !
தந்தை பெரியார் முழங்கிய தமிழ்நாடு
தமிழருக்கே என்ற முழக்கமே தமிழ்த்
தேசியத்திற்கான முதல் முழக்கம்
என்பதை வரலாற்று அறிவுடைய
அனைவரும் அறிவர், ஏற்பர். அதனால்தான்
தந்தை பெரியார் தமிழ்த் தேசியத்தின்
தந்தை என்று நன்றியுள்ள
அனைவராலும் அழைக்கப்படுகின்றார்.
உலகநாடுகளின் இனப்பட்டியல்
ஆரியன்,திராவிடன்,மங்கோலியர்,கா
க்கோசியர்,நீக்ரோ இவைகளில்
காக்கோசியர் இனம் அழிந்துவிட்டது.
சிந்துசமவெளி,ஹரப்பா நாகரிகங்களின்
படி திராவிடர்கள் என்ற இனம் வாழ்ந்ததாக
புவியியல் ஆராய்ச்சியாளர்கள்
கூறுகின்றனர்.
போதுமா திராவிட விளக்கம்.
-வெற்றிவேந்தன்.கே(முகநூல் பக்கம்,4.11.17)