சனி, 24 ஜூன், 2017

யோகா திராவிடர் கலையே! ஆரியர்களுடையது அல்ல!


யோகா திராவிடர் கலையே! ஆரியர்களுடையது அல்ல!

சூழ்ச்சியால், தங்கள் கலையாக்கிக் கொண்டனர்

பெங்களூரு மடாதிபதி வீரபத்ர சென்னமல்ல அதிரடி!பெங்களூரு ஜூன் 23_ யோகக்கலை திராவிடக் கலாச்சாரம் கொடுத்த கொடையாகும், அதை ஆரியர்கள் சூழ்ச்சி செய்து தனதாக்கிக் கொண் டார்கள்  என்று, நிடுமா முடி மடத்தின் மடாதிபதி வீரபத்ர சென்னமல்ல சுவாமிகள் தெரிவித்தார்.

பெங்களூரு நகரில் திங்களன்று நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில் நிடுமாமுடி மடத் தின் மடாதிபதி வீரபத்ர சென்னமல்ல கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் போது யோகா குறித்து அவர் கூறியதாவது:  யோகா கலை என்பது வாழ்வியல் தொடர்பான ஒன்று இது சிந்துவெளி நாகரிகத்தில் இருந்து தொடர்ச்சியாக திராவிட நாகரிகம் உள்ள இடங்கள் அனைத்திலும் வியாபித் திருந்தது. இது ஒரு தனிப் பட்ட இந்து மதத் துற வியோ அல்லது முனிவர் களோ வழங்கியது அல்ல, யோகாவிற்கும் ஆரிய வேத கலாச்சாரத்திற்கும் எள்ளளவும் தொடர் பில்லை. ஆரியர்கள் திரா விடர்களின் இந்த வாழ் வியல் கலையை தங்கள தாக்கிக் கொண்டனர். பிறகு அதனுடன் வேத ஸ்லோகங்களை இணைத்து அதை வேதகால கலையைப் போல் மாற்றிவிட்டனர்.   யோகா என்பது இந்து மத முனிவர்கள் அல்லது குருக்கள் கொண்டு வந்த கலை என்று தற்போது அதிகம் பேசப்பட்டு வரு கிறது. ஆனால் இது முழுவதும் பொய்யான ஒன்றாகும். யோகா கலையை வேதகாலத்தில் கற்றுக்கொண்டவர்கள் தங்களது மாணவர்களுக்கு இந்தக்கலை குறித்த பொய்யான தகவலைக் கூறிவைத்தனர். இந்த பொய்த்தகவல் காரண மாக பிற்காலத்தில் இது வேதமதம் தொடர்புடைய தாக மக்கள் நினைத்துக் கொண்டனர்.   யோகா என்பது மதம் தொடர்பானது அல்ல; இது மனித குலத்திற்குத் தேவையான நல்ல ஒரு மென்மையான உடற் பயிற்சியாகும். மனவளம் பெறவும் யோகா மிகவும் உதவியாக இருக்கும்.

ஆனால், தற்போது சிலர் யோகா பயிற்சிக்கு மதச்சாயம் பூசி, பணம் பார்க்கும் தொழிலாக  மாற்றிவிட்டனர். யோகாவின் மூலம் பணம் பார்ப்பவர்களால் எப்படி மக்களைத் தெளிவாக வைத்திருக்க முடியும்? இந்துத்துவ அமைப் புகள் வலுக்கட்டாயமாக யோகாவை பிறரிடம் திணிக்க முயற்சிக்கிறது. இந்துத்துவ அமைப்பு களின் பிடியில் இருந்து யோகா விடுதலை பெற்று அனைவரிடமும் போய்ச் சேரவேண்டும் என்று, நிடுமாமுடி மடத்தின் மடாதிபதி வீரபத்ர சென்னமல்ல சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
-விடுதலை,23.6.15

புதன், 21 ஜூன், 2017

ஆரிய யோகா

இவனுக குடுமி சும்மா ஆடாதேன்னு பாத்தேன்.
யோகாவும் இல்ல...ஒரு கழுதையும் இல்லை.
யோக்கியர்கள் யோகா செய்யச் சொல்லும் நோக்கம் இதுதான்.

இந்தப் படத்தில் இருப்பவர்தான் கே.பி.ஹெட்கேவர்.
அதாவது கேசவ பலராம் ஹெட்கேவர்.
ஆந்திராவில் நிஜாம் மன்னனின் ஆளுகைக்கு உட்பட்ட குந்த் குர்த்தி என்ற ஊர்தான் இவரின் பூர்வீகம்.
அங்கிருந்து குடும்பத்தோடு அடித்து விரட்டப்பட்டு மகாராஷ்டிரா நாக்பூரில் குடியேறிய குடும்பத்தைச் சேர்ந்தவர்.

சித்பவன பிராமணர்.அதாவது பிராமணர்களில் பல பிரிவு உண்டு. கடவுளுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள்தான் சித்பவனப் பிரிவாம்.

இந்தியாவில் மூன்றுமுறை தடை செய்யப்பட்ட RSS தீவிரவாத அமைப்பை உருவாக்கியவர் இவர்தான்.
1925 ல் நாக்பூரில் இவருடைய வீட்டில் வைத்துதான் RSS தொடக்கப்பட்டது.
மராட்டிய தலித் மக்களின் எழுச்சியை ஒடுக்கவே இந்த அமைப்பை அன்று தொடக்கினார்கள்.

RSS நடத்தும் முகாம்களில் யோகாவும் ஒரு நிகழ்ச்சி,
இதை வலியுறுத்தியவர் இந்த ஹெட்கேவர்.
அந்த முகாம்களில் பாடும் பாடல் இதுதான்.
இதற்கு சமஸ்தே சதாவஸ்தே என்று பெயர்.

SOLUTATIONS TO YOU, O MOTHER LAND
WHERE I AM BORN

SOLUTATIONS TO YOU, LAND OF ARYAS
WHERE I HAVE GROWN

SOLUTATIONS TO YOU, O SACRED LAND
WHERE I HAVE WORKED,

இதன் பொருள் என்ன?

நான் பிறந்த தாய் நாடே உன்னை வணங்குகிறேன்
என்னை வளர்த்த ஆரிய நாடே உன்னை வணங்குகிறேன்
நான் உழைக்கும் புனித நாடே உன்னை வணங்குகிறேன்.

ஆரிய நாடாம்.கொழுப்பப் பாத்தேளா.
இந்த யோக்கிய சிகாமணியின் நினைவு நாள் ஜூன் 21.
அந்த ஆள விழுந்து கும்புடச் சொல்றானுக
யோகா என்ற பெயரில்.
-கட்செவியில் வந்த செய்தி

இந்தியாவின் மற்றும் அமெரிக்காவின் ஆதி மக்கள் யார் ??

*தி இந்து நாளிதழ் கட்டுரை* ஒவ்வொரு பார்ப்பனர்களின் வயிற்றிலும் புளியை கரைத்து ஒவ்வொரு பார்ப்பனர்களும் Bjp காரனும் திட்டித்தீர்க்கும்  பெயர்கள் . . .
.
ஏன் ?? எதனால் ?? வாருங்கள் பார்ப்போம்

Richard Martin மற்றும் Tony Joseph இந்தப் பெயர் உலகில் உள்ள வரலாற்று ஆய்வாளர்களும் அறிஞர்களும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் பெயர்கள்
.
அதேசமயத்தில் இப்போது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு  பார்ப்பனர்களும்  திட்டித்தீர்க்கும்  பெயர்கள் . . .
.
ஏன் ?? எதனால் ?? வாருங்கள் பார்ப்போம்
.
Professor Richard Martin மற்றும் Tony Joseph உலகப்புகழ்பெற்ற Oxford பல்கலைக்கழகத்தின் வரலாறு தொல்லியல் மற்றும் மரபணுவியல் (genetical) துறையின் பேராசிரியர்கள் . .
.
இவரின் ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் பல நாட்டவர்களின் அடிப்படை சித்தாந்தங்களை தகர்த்து எறிந்திருக்கிறது . . . .
.
நேற்று முன்தினம் இவருடைய குழுவினர் கடந்த நான்கு ஆண்டுகளாக . . .
.
உலகில் மனிதன் தோன்றியது எங்கே ??
.
ஆசியாவின் பூர்வ குடிகள் யார் ? இந்தியாவின் மற்றும் அமெரிக்காவின் ஆதி மக்கள் யார் ??

என்று இந்திய துணைக்கண்டம் மற்றும் ஈரான் ஈராக் அமெரிக்கா ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் பர்மா மலேசியா நேபாளம் பங்களாதேசம் ஆகிய நாடுகளில் மக்களிடம் லட்சக்கணக்கான மரபணுக்களை ஆராய்ச்சி செய்தனர் . . இந்தியாவில் மட்டும் 16500 க்கும் மேற்பட்ட மரபணுக்கள் ஆராய்ச்சி செய்தனர்
.
அந்த ஆராய்ச்சி முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிட்டனர்
.
அந்த ஆய்வறிக்கை தான் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு  பார்ப்பனர்களின் வயிற்றிலும் புளியை கரைத்திருக்கிறது
.
அப்படி என்ன விஷயம் ??
.
இந்தியாவுக்குள் நாடோடிகளான ஆரியர்கள் மாடுகளோடு ஈராக் ஈரான் வழியாக ஆப்கானிஸ்தானில் நுழைந்து இந்தியாவில் பரவினர் என்றும்
.
அப்படி சிந்துசமவெளி நாகரிகம் அழியும் தருவாயில் இருந்தது அந்த நேரத்தில் தான் ஆரியர்கள் உள்ளே வந்தார்கள் அது சரியாக ரிக் வேதம் எழுதப்பட்ட காலகட்டம்
.
அப்போது ஒரு இனம் இங்கே வீடுகள் கட்டி நகர நாகரீகத்துடன் வாழ்ந்து வந்தனர்
.
அவர்கள் திராவிடர்கள் என்று அழைக்கப்படும் தமிழர்கள் என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபித்தும் இருக்கிறார்கள்
.
இப்போது நமக்கு சொல்லப்பட்ட பல வரலாறுகள் பொய்யென்றாகிறது
.
அதாவது சிந்துசமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகம் என்று நமக்கு சொல்லப்பட்டது பொய்
.
ஏனென்றால் அவர்கள் அப்போது தான் உள்ளேயே வருகிறார்கள்
.
அப்போது அவர்கள் நாகரிகமடையாத நாடோடிகளாக இருந்தார்கள் அப்படி இருந்தவர்கள் எப்படி நகர நாகரிகத்துடன் வாழ முடியும் ??
.
இரண்டாவது சமஸ்கிருதம் ஆதி மொழி என்று நமக்கு சொல்லிக்கொடுத்தது பொய் . .
.
ஏனென்றால் அதுதான் உலகமொழிகளிலேயே இளைய மொழி என்று இப்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது
.
அதனால் அதற்கு கொடுக்கப்பட்ட செம்மொழி அந்தஸ்து தவறு
.
மேலும் இப்போது தான் நமக்கு புரிகிறது . .
.
மதுரை கீழடி ஆராய்ச்சியை ஏன் தடுக்கிறார்கள் . .

ஆதிச்ச நல்லூர் அகழ்வாராய்ச்சி ஏன் மூடி மறைக்கப்பட்டுள்ளது என்றும் இப்படி பல கேள்விகளுக்கு இந்த ஆராய்ச்சி முடிவுகள் விடை சொல்கின்றன
.
மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றுகிறது அப்போது இந்திய துணைக்கண்டம் ஆப்பிரிக்காவுடன் ஒட்டியிருந்தது என்றும்
.
கடல்கோள்களால் இந்திய நிலப்பரப்பு பிரிந்தது என்றும் . .
.
இந்த மண்ணில் திராவிடர்கள் தான் முதலில் இருந்தனர் என்றும்
.
அவர்கள் முப்பது அல்லது நாப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்கிறது என்றும்
இந்த ஆராய்ச்சி திட்டவட்டமாக உரக்கச் சொல்லுகிறது
.
இனிமேல் நெஞ்சை நிமிர்த்திச் சொல்லுவோம் இது எங்கள் மண் . . . வந்தேரிகள் வாலாட்டினால் குரல் உயர்த்துவோம் . . . தமிழன் என்பதில் மட்டற்ற பெருமை கொண்டு மார் தட்டுவோம்

***************************அவசியம் அதிகம் ஷேர் செய்யுங்கள்*    ******
How genetics is settling the Aryan migration debate

http://www.thehindu.com/sci-tech/science/how-genetics-is-settling-the-aryan-migration-debate/article19090301.ece

வெள்ளி, 16 ஜூன், 2017

தமிழரைத் திராவிடர் என்பது பிழையன்று

- மா.பால்ராசேந்திரம்

வந்தேறிகள் - ஆரியர், பார்ப்பனர், பிராமணராய் இருந்தனர். பெரும்பான்மை மக்கள் தம்மைப் பிராமணரல் லாதார், பார்ப்பனரல்லாதார் என்று ஏன் சுட்டிச் சொல்லிக் கொள்ள வேண்டும்? நம் நாடு இதுவென்றால் நமக்கென்று இங்கோர் அடையாளம் இருந்துதானே ஆக வேண்டும்? அந்த அடையாளத்தைக் காணமுயன்ற வேளையில் அய்யா பெரியாருக்குக் கிடைத்த வரலாற்று அடையாளம் தான் ‘திராவிடர்’ என்ற இனக் குறியாகும்.

“திராவிடம் என்றன் திருநா டென்று
சரேலென எழுக தடந்தோள் ஆர்த்தே!
மீட்பாய் திராவிட நாட்டை!”

என்று புரட்சிக்கவிஞர், “திராவிடர் நாட்டில் ஆரியம் புரிந்திடும் இழிசெயல்களனைத்தையும் அழித்தொழித்திடத் தடந்தோள் தூக்கி எழுந்திடு தோழனே!” என இளைஞர் பட்டாளத்தை உசுப்பி விடுகிறார் பாரீர்!

“தமிழரும், திராவிடரும் ஒன்றேயாவர். திரு + இடம் = திருவிடம் ஆகும். அதுவே வடமொழிசார்ந்த உச்சரிப்பால் ‘திராவிடம்’ ஆயிற்று என்றார்கள். வடவர் ‘சிறீ’ என்பத னைத் தமிழர் ‘திரு’ என்பர் என்பது இங்கு குறிப்பிடத் தக்கதாகும். சான்றாக, ஆரூர் டி திரு + ஆரூர் = திருவாரூர்; அய்யாறு டி திரு + அய்யாறு = திருவையாறு; மலை டி திரு + மலை = திருமலை எனப்பல இடங்களைக் குறிப்பிடலாம். ஒன்றின் மேன்மை, சிறப்பு, பெருமை, உயர்வு கருதி தமிழர் பயன்படுத்திய சொல்லே ‘திரு’ ஆகும். இதனை ‘சிறீ’ என்று போட்டுச் சொல்வது சரியாகுமா? அரங்கம் டி திரு + அரங்கம் = திருவரங்கம். இதனை சிறீவரங்கம், சிறீரெங்கம் என்று எவ்வாறு கொள்ள முடியும்” என்கிறார் 1942 சனவரி 11 அன்று திருவள்ளுவர் நன்னெறிக் கழகத்தில் உரையாற்றிய அய்யா பெரியார் அவர்கள்.

“திராவிடம் என்பது தமிழ்நாடே. திராவிட நாடு கொஞ் சம் அதிகப்பரப்புக் கொண்ட பகுதியாகும். 2500 ஆண்டு களுக்கு முன்பு வரை ‘இந்தியா’ என்ற கோட்டுப் படத்தைப் போட்டு அதன்கீழ் ‘திராவிடம்’ என்றே பெயர்  குறிப்பிட்டி ருந்தனர்” என்பதனையும் அய்யா அவர்கள் படத்தைக் காட்டி விளக்கியுள்ளார்கள். “தெக்கணமும் அதில் சிறந்தத் ‘திராவிட நல்’ திருநாடு” என்கிறார் மனோன்மணீயம் பெ.சுந்தரம்பிள்ளை. திராவிட என்றால் தமிழ்நாடு என்று பொருள் என்கிறது ஜெம்டிக்ஷனரி. ‘திராவிடம்’ தென்னிந்தி யாவிலுள்ள பழைமையான ஒரு மாகாணம் என்பது சேம் பர்ஸ் டிக்ஷனரியின் கூற்றாகும். ‘திராவிடம்’, ஆரியல்லாத மக்களைக் கொண்ட மாகாணம், தமிழன் ஆரியருக்கு முன்பிருந்த மக்கள் என்கிறது டிக்ஷனரி ஆப் இங்கிலீஸ் லாங்க்வேஜ். இராபர்ட் கால்டுவெல், “திராவிடர்களின் பல்துறைகளிலும் ஆரியம் மூக்கை நுழைத்திருக்கிறது. தன் சமஸ்கிருதக் கலாச்சாரத்தைத் திணிக்க முயன்றுள்ளது” என்கிறார் பரிதிமாற்கலைஞர். அண்ணல் அம்பேத்கர் அவர்களோ, “தென்னாட்டு நாகர்கள் சமஸ்கிருதத்தை ஏற்காததால் ‘திராவிடர்’ என்ற தகுதியுடன் வாழ்ந்தனர் என்று குறிப்பிடுகிறார். “திராவிடர்களின் மொழிகள் ஆரிய சமஸ்கிருதத்தின் குழந்தைகள் அல்ல. அவை மிகப்பெரிய இலக்கியங்களை உடையது” என்பது உலக சரித்திரம் என்ற நூலில் நேருவின் கருத்தாகும்.

திராவிடர் கருப்பு நிறத்தவர். நீண்ட மயிர், நேரிய மூக்கு உடையோர். இன்றும் இவர்கள் தென்னிந்தியா, எகிப்து, பாபிலோனில் வாழ்கின்றனர். ‘திராவிடம்’ என்பது தமிழுக்கு ஆரியரிட்ட ஒரு பெயர், ஒரு தேசம் என்கிறது அபிதான சிந்தாமணி. ‘திராவிடன்’, ஆரியரல்லாதாராகி தமிழ், கன்ன டம், தெலுங்கு, மலையாளம் பேசும் தென்னிந்திய மக்கள் என்பது சேம்பர்ஸ் டிக்ஷனரியின் கருத்து. தமிழன் திராவி டன் என்பதால் எக்குற்றமோ, குறையோயில்லையென இதன்வழித் தெரியப்படுகிறதல்லவா?

அவ்வாறாயின் பாரதநாடு எது? திராவிடரின் எதிரிகளாம் ஆரியர்கள் வைத்த பெயரே பாரதநாடு. புரட்சிக்கவிஞர் கூறுவது போல்,

சூழும் தென்கடல் ஆடும் குமரி
தொடரும் வடபால் அடல்சேர் வங்கம்
ஆழும் கடல்கள் கிழக்கு மேற்காம்
அறிவும் திறனும் செறிந்த நாடு.

நம் திராவிடர் நாடு. இத்திராவிடர் நாட்டிற்குள் முதலில் நுழைந்தோர் ஆரியரே என்பது திண்ணம் என்கிறார் அய்யா பெரியார். வரலாறு எழுதியோர் வடமேற்கில் ஆப் கானிஸ்தான் வழியாகவும், வடகிழக்கில் பிரம்மபுத்திரா ஆற்றைக் கடந்தும் ஆரியர் நுழைந்தனர் என்கின்றனர். ஆரியரல்லாதாரால், நுழைந்தோர், சிந்தியர் என்று அழைக்கப்பட்டனர். சிந்தியர் என்பது திரிந்தே இந்தியர் என்ற வழக்காயிற்று என்பர். இதன் வழிப்பார்க்கையில் திராவிடர், இந்தியரல்லர் என்பது உறுதியாகின்றது.

இந்த வந்தேறி ஆரியரே, பழங்குடிகளான திராவிடரை விரட்டி அடித்தனர். தெற்கு நோக்கிய நிலப்பரப்பிற்கு ஓடி வந்து தங்கினர் திராவிடர்கள். விரட்டப்பட்டத் திராவிடரின் இருப்பிடங்களில் வந்தேறிகள் தங்கிவிட்டனர். வடக்கே ஆங்காங்கேத் தங்கி விட்டத் திராவிடரை ஆரியர் தம் கட் டுக்குள் வைத்துக் கொண்டனர். திராவிடரின் தாக்குதலிலி ருந்து தம்மைக் காத்துக் கொள்ள வடநாட்டை ஆண்ட மொகலாயரிடம் குலாம்களாக ஆகிக்கொண்டார்கள் ஆரியர்கள் என்கிறார் அய்யா பெரியார்.

அந்த ஆரியர் - திராவிடர் போரைக் கருவாகக் கொண்டுதான் புராணங்களும், இதிகாசங்களும் எழுதிக் குவிக்கப்பட்டன. இமயமலையிலிருந்த ஆரியன் சிவன், தன் மகன் சுப்ரமணியனை இலங்கைக்கு நெடுந்தொலை விலுள்ள குட்டித் தீவினை ஆண்ட சூரன், அவன் தம்பி தாரகன் என்பவரோடு சண்டை செய்ய ஏவினான். வேல் முதலிய ஆயுதங்கள் கொண்டு வெற்றி கொண்டான் என்கிறது. கந்தபுராணம், இராமன் என்னும் வடவாரியன், இலங்கை வேந்தன் இராவணனை வெற்றி கொண்டான் என்கிறது இராமாயணம்.

பல்லாண்டு கால ஆரியர் - திராவிடர் போரில் செத்து மடிந்தோர் போக மீதியானவர்கள்தாம் தாங்கள், திராவிடர், தமிழர் என்றும்; தங்கள் நாடு திராவிடம் என்றும் சொல்லி, இருந்து வருகின்றனர். இதனைத் தெரியாது, அறியாது எதிரிகளையே குரு என்றும் அவரையே தலைவராகவும், கடவுளாகவும் கருதி வருகிறோம் என்று அய்யா பெரியார் குறைபட்டுக் கொள்கிறார்.

தேரினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்!

பார்ப்பனர் பற்றிய தெளிவு இல்லாத் தமிழர் தாம் அவர் களால் அடைந்து வரும் கொடுமைகளைக் கண்ட பின்பா வது அவர்களை ஒதுக்கிவிட வேண்டுமல்லவா? இதுதானே குறள்நெறி! அதுதானே தமிழர் நெறி! அந்நெறியில் ஏற்பட்ட தள்ளாட்டத்தால்தான் இன்றும் தமிழன் சூத்திரன். கோவிலுக்குள், உணவகங்களுக்குள், தெருவுக்குள் நுழை யக்கூடாத தீண்டத்தகாதவன். எதிரிகளுக்கே கோவில்கட்டி மகிழ்ந்தவன். ஆரியரை ஆதரித்த, அவரைப் புகழ்ந்த, பெருமைப்படுத்திய, அவரின் ஒழுக்கக்கேடான வாழ் வினை உயர்ந்த பண்பாடெனப் பாடித் தொலைத்த நாயன் மார்களுக்கும், ஆழ்வார்களுக்கும் கோவில்கட்டியவன். இருக்கலாமா அக்கோவில்கள்? தமிழ்க் கடவுள்களே அவை என்கிறோமே! அவை அந்தத் தகுதியில் இருக்கிறதா? கோவில் கட்டிய தமிழனை மிதிப்பதும், குத்துவதும், வெட்டுவதுமான வடிவில்தானே அக்கடவுள்களைச் செதுக்கி வைத்துள்ளான். கோவில் கட்டச் செலவோ தமிழன் பணத்தில், கோவில் நுழைவோ தமிழனுக்குக் கிடையாது என்ற நிலைதானே!

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல்

பண்பினால், செயலினால் நல்லவர், கெட்டவர், உயர்ந் தோர், தாழ்ந்தோரெனக் கொள்ள வேண்டுமேயொழிய பிறப்பினால் அன்று என்பதே குறள்நெறி. அப்படி எண்ணுகின்ற தமிழன் எத்தனைபேர்? சுயமரியாதை உணர்வு கொண்ட தமிழன் பிறப்பினால் பெருமை தர ஒப்புக்கொள்ள மாட்டான். மற்றையோர் அப்படியா?

இந்த அநியாயத்தில் ஜாதிக்கொடுமைகள் வேறு, தமிழனை இன்னும் அதிகமாகப் பிய்த்து எடுக்கிறது. ஆரியனே, நன்றாயிருந்த திராவிட நாட்டை நாலு ஜாதியாக் கினான். பார்மதித்த திராவிடத்தில் பஞ்சமனென்று ஒரு பேர் வகுத்தான் என்பார் புரட்சிக் கவிஞர். தமிழரென்போரே ஒருவர் வீட்டில் மற்றொருவர் உண்ண மாட்டார்; உண வருந்தும் தகுதியில்லாதவர்; உணவே தரக்கூடாதவர் என்றெல்லாம் இருந்துவரும் கொடுமைகள் வேறு. பழந்தமிழர்களோ பள்ளராய், பறையராய், சக்கிலியராய், சண்டாளராய் இருந்து வதிந்து வாழ்ந்திடும் நிலை வேறு. இந்நிலை மாற வேண்டும். திராவிடர் நாம். ஆரியர் வேறு என்று உணர வேண்டும். நாம் திராவிடர் என்றால் ஆரிய ருக்கு இனிக்கிறது. நம்மை வெறுக்கிறான் ஆரியன். தமிழர்க்குக் கசப்பதேன்? திராவிடர் என்பதால் தமிழர்க்கு நட்டமில்லை. ஆரியர், தம்மைத் தமிழர் என்பதால் நட்டம் தமிழர்க்கே! இந்தியர் என்ற ஒதுக்கீட்டில் பார்ப்பனரே அனைத்துப் பணிகளையும் பெறுகின்றனர் என்றார் ஆங்கிலேயர் அலெக்ஸாண்டர் கார்ட்யூ. அதே சூழல்தன் தமிழர் என்று தம்மை அடையாளப்படுத்திடும் ஆரியர் தமிழரின் ஒதுக்கீட்டை விழுங்கி வருகின்றனர் முழுக்க முழுக்க என்று தெரிந்த பின்னரும் சிந்திக்க வேண்டாமா?

திராவிடர் என்பது தமிழர்க்குப் பாதுகாப்புக் கவசம். வரலாற்றை சுயபுத்தியோடு அறிந்து கொள்பவர்க்குத் தெரியும். இரவல் புத்தியோடு குறுக்குசால் ஓட்டுபவர்க்கு எப்படிச் சொன்னாலும் புரிவதென்பது ஓட்டைப் பானையில் நீர் ஊற்றி வைப்பது போலாகும்.

“வாழ்கின்றார் ஆன வடுத்தீர் திராவிடர்கள் 
வாழ்க நனிவாழ்க! மற்றோர்கள் வீழ்ந்திடுக!
யாழ்கொள் நரம்பும் இசையும்போல் எந்நாளும்
வாழ்க திராவிடமும் வான்புகழும் சேர்ந்தினிதே!”

என்னும் புரட்சிக் கவிஞரின் மொழிபோல் திராவிடர் இயக்கம் தமிழர்க்கு வழங்கிய பலன்கள் என்பது இன்றைய தமிழர் வாழ்வின் உயர்வெல்லாம் அதனின் கொடையென் றால் மறுக்க முடியாது.

இளைஞர்களே! நீங்கள் குலம் கெடுக்கும் கோடாரிக் காம்புகளாய் இராதீர்! இனத்தை மேனிலைப்படுத்தும் இயக்கத்தை அடையாளம் காண்பீர்! அது, தன்னேரில்லாத் தனிப்பெரும் தலைவர் பெரியார் கண்ட திராவிடர் கழகம் என்பதை உணர்வீர்! இனநலன் காத்திடும் போரில் களம் பல வகுத்திடும் தமிழர் தலைவர் கி.வீரமணியின் செயல்வீரர் களாய் உங்களைத் தந்திடுவீர்!

-விடுதலை ஞா.ம.,10.6.17