வெள்ளி, 11 டிசம்பர், 2015

யம திசை!


தென்திசையை யம (எமன்) திசை என்றும், வடதிசையை குபேர திசை என்றும் கூறுவது உண்டு. இது ஆரியர் வழக்கு. அவர்கள் வடக்கே வாழ்ந்தார்கள். ஆகவே, அதைக் குபேர திசை என்றார்கள். அவர்களை எதிர்த்த தமிழர் தெற்கே இருந்தார்கள். எனவே, தென் திசையை யம திசை என்றார்கள்! தென்திசையை அவாக் என்று ஆரியர் கூறினார்கள். வாக்கு என்றால் மொழி. அவாக் என்றால் மொழி அல்லாதது. அதாவது, அவர்களின் மொழி வழக்கில் இல்லாத திசை என்று பொருள். ஆனால், தமிழரோ தென் திசையைப் போற்றினார்கள் தென் என்றால், இனிமை என்று பொருள் கொண்டார்கள். தெற்கில் இருந்து வீசும் காற்றை தென்றல் என்கிறார்கள். தங்கள் மொழியை தென்மொழி  என்றார்கள். தங்கள் மன்னனை தென்னவன் என்று கூறி மகிழ்ந்தார்கள். அதே நேரம் வடதிசையைப் பழிக்கவில்லை!    நன்றி: ராணி, 7.3.1982
-விடுதலை,27.2.15

சனி, 5 டிசம்பர், 2015

தமிழர் திருநாள் - தந்தை பெரியார்

திராவிடத்தின் ஆதி மக்களான தமிழர்களுக்கு தமிழர்களுக்குரிய பண்டிகை என்பதாக ஒன்றைக் காண்பது மிக அரிதாக உள்ளது.
இதன் காரணம் என்னவென்றால், கலாச்சாரத்துறையில் தமிழனை ஆதிக்கம் கொண்டவர்கள் தங்களது கலாச்சாரங்களைத் தமிழனிடம் புகுத்துகிற வகையில் முதல் பணியாக _ தமிழ்நாட்டின், தமிழனின் கலாச்சாரங்களை, பழக்க வழக்கங்களை அடியோடு அழித்து மறைத்துவிட்டார்கள்.
இதனால் தமிழனுக்குரிய கலாச்சாரம் எது என்று அறிவதுகூட மிகமிகக் கடினமான காரியமாக ஆகிவிட்டது. தமிழனின் கலாச்சாரப் பண்புகள் அழித்து ஒழித்து மறைக்கப்பட்டுவிட்டன என்பது மாத்திரமல்லாமல், தமிழனுக்கு வரலாறு, சரித்திரம் என்பதுகூட இல்லாமல் அழிக்கப்பட்டுவிட்டது.
எனவே, இன்று தமிழன் கலாச்சாரம், பண்பு, வரலாறு அற்ற ஒரு அடிமை ஜீவனாக விளங்குகின்றான். இப்படி விளங்குவது மாத்திரமல்லாமல் இன்று தமிழன் கொண்டாடும் _ நடத்தும் கலாச்சாரப் பண்பு, வரலாறு என்பவை எல்லாம் தமிழனுக்கு இழிவும் அடிமைத் தன்மையும் தந்து அவற்றை நிலைநிறுத்துபவைகளாகவே இருந்து வருகின்றன.
தமிழனுக்குள்ள கலைகள் என்பன-வெல்லாம் தமிழனை அடிமையாக்குவன-வாகவே இருந்து வருகின்றன. தமிழனுக்கு அடியோடு சமயம் என்பதே இல்லாமல் போய்விட்டதே எனலாம். மக்களுக்கு, விழா முக்கியமான தேவையாகும்.
விழாவை முன்னிட்டு மக்களுக்கு மகிழ்ச்சி, ஓய்வு, மக்களுடன் அளவளாவுதல், கவலையற்ற கொண்டாட்டம் கொள்ளுதல், அன்பு, ஆசைப் பரிமாற்றம், சுயேச்சையான களியாட்டம் முதலியவை-களை அனுபவிக்க முடிகின்றது. இவைகளை ஏற்படுத்துவதால்தான் இவற்றை விழா என்று கூறுகிறோம்.
அரசாங்க விடுமுறைக்கு உரிய பண்டிகைகள் போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், மகா சிவராத்திரி, தமிழ் வருஷப் பிறப்பு, ஆவணி அவிட்டம், கோகுலாஷ்டமி,  சரஸ்வதி பூசை, தீபாவளி, விடுமுறை இல்லாத பண்டிகைகள் _ கார்த்திகை தீபம், பங்குனி உத்திரம், விநாயகர் சதுர்த்தி*, தைப்பூசம் இந்தப்படியாக இன்னும் பல உள.
இவைகளில் தமிழனுக்கு, தமிழ்ச் சமுதாயத்திற்கு, தமிழன் பண்பிற்கு, தமிழன் வரலாற்று நடப்புக்கு, தமிழனின் அறிவு ஆராய்ச்சிப் பொருத்தத்திற்கு ஏற்றவாறு விழா அல்லது பண்டிகை என்பதாக எதையாவது சொல்ல முடிகிறதா?
தமிழனின் இழிவுக்கு மறுக்கமுடியாத - முக்காலத்திற்கும் ஏற்றநிலையில் ஒரு எடுத்துக்காட்டைக் கூறவேண்டுமானால் தமிழனுக்குக் காலத்தைக் காட்டக்கூடிய சொல், சாதனம், அமைப்பு என்பது இல்லையென்றே கூறலாம்.
கிறித்தவர்கள் காலத்தைக்காட்ட கிறித்துவ ஆண்டு (கி.பி.) இருக்கிறது. முசுலிம்கள் காலத்தைக்காட்ட இசுலாம் ஆண்டு (ஹிஜ்ரி) இருக்கிறது. இதுபோல, தமிழனுக்கு என்ன இருக்கிறது? இதற்குத் தமிழனின் ஆதாரம் என்ன இருக்கிறது?
மற்றும், இப்படியேதான் தமிழனுக்குக் கடவுள், சமயம், சமயநூல், வரலாற்றுச் சுவடி, இலக்கியம் முதலியவை என்று சொல்ல எதுவும் காண மிகமிகக் கஷ்டமாக இருக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில், தமிழர் விழா (பண்டிகை) என்பதாக நான் எதைச் சொல்ல முடியும்? ஏதாவது ஒன்று வேண்டுமே? அதை நாம் கற்பிப்பது என்பதும், எளிதில் ஆகக் கூடியது அல்லவே என்று கருதி பொங்கல் பண்டிகை என்பதைத் தமிழன் விழாவாகக் கொண்டாடலாம் என்று முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் கூறினேன். மற்றும் யாராவது கூறியும் இருக்கலாம்.
இந்தப் பண்டிகையும் அறுவடைத் திருவிழா (Harvest Festival) என்ற கருத்தில்தானேயொழிய, சங்கராந்திப் பண்டிகை, போகிப் பண்டிகை, இந்திரவிழா என்று சொல்லப்படும் கருத்தில் அல்ல.
இந்தப் பொங்கல் பண்டிகையைத் தமிழர் எல்லோரும் கொண்டாட வேண்டும்.
(விடுதலை 30.1.1959)
-உண்மை இதழ்,16-31.15

திராவிடர் என்பது - ஏன்?

தலைவர் அவர்களே! மாணவர்களே!
இவ்வூர் திராவிடர் கழகத்தின் சார்பாக நான் பேச வேண்டுமென்று சில மாணவர்களால் விரும்பப்பட்டேன்; அதுபற்றி மகிழ்ச்சியோடு பேச ஒருப்பட்டேன். எனினும் என்ன பேசுவது என்பது பற்றி நான் இதுவரைகூடச் சிந்திக்கவில்லை. மாணவர்களாகிய உங்களைப் பார்த்தால் நீங்கள் பெரிதும் 15 வயது 18 வயது உடையவர்களாகவே காண்கிறீர்கள்; உங்களுக்குப் பயன்படத்தக்கதும் பொருத்தமானதுமாக பேச வேண்டுமென்றால் மிகவும் கவனத்தோடு பேச வேண்டியிருக்கிறது.
ஆனால் படிக்கும் சிறு குழந்தைகளுக்குப் பாடப் படிப்பைத் தவிர, வேறு பேச்சு என்னத்திற்கு? என்ற காலம் மலையேறிவிட்டது. ஏனெனில், படிப்பே மோசமானதாக இருப்பதால் அப்படிப்பைத் திருத்துவதற்கு ஆவது உங்களி டத்தில் உணர்ச்சி தோன்ற வேறு பேச்சு அவசியமாகி விட்டது.
உங்கள் படிப்பின் தன்மை
முதலாவது உங்கள் படிப்புக்கு லட்சியமே இல்லை, லட்சியமற்ற படிப்பு என்பது ஒருபுறம் இருந்தாலும், என்ன படிப்புப் படிப்பது என்பது பள்ளிக்கூடத்தாருக்கும், ஆசிரியர்களுக்கும்கூட சம்பந்தமற்றதாகும்; இதனால் இப்படிப்பினால் ஏற்படும் பயன் என்ன என்றாலோ அதுவும் தானாக ஏதாவது ஏற்பட்டால் அதுதான் பயனே ஒழிய மற்றபடி நிச்சயமான பயன் என்ன ஏற்படும் என்று கருது வதற்கில்லை. படிப்பது என்பது வெறும் பேச்சளவிற்கு அறிவுக்காக, அறிவு விருத்திக்காக என்று சொல்லப் படுகிறது. ஆனால், படித்தவர்களுக்கு அறிவு விருத்தியாகிறதா? படித்தவர்கள் அறிவாளிகளாக இருக்கிறார்களா என்றால், ஆம் என்று சொல்ல முடிவதில்லை. இந்த அறிவு என்பது கூட ஒரு பொது அருத்தத்திற்குக் கட்டுப்பட்டதாய் இல்லாமல் எதைப் படித்தானோ அதில் அறிவுள்ளவர்கள் என்றுதான் சொல்லக் கூடியதாய் இருக்கிறது. அந்தக் குறிப்பிட்ட படிப்பில் அதாவது படித்த படிப்பில்; அறிவு ஆவது சரியாக இருக்கிறதா என்றால் அதுகூடச் சரியாக இல்லாமல் ஒன்றுக்கொன்று முரணான அறிவு ஏற்படும் படியாக இரண்டு கருத்துள்ள அதாவது முரண் கருத்துள்ள படிப்பேதான் கொடுக்கப்படுகின்றது. எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் மாணவர்களுக்கு அறிவுப் படிப்பும், மூடநம்பிக்கைப் படிப்பும் இரண்டும் கொண்டவர்களுமாகி விடுகிறார்கள். மாணவர்கள் மாத்திரமல்லாமல் படிப்பை முடித்த பெரியவர்களும், உபாத்தியாயர்களுங்கூட மூட நம்பிக்கையுடையவர்களாகவே இருக்க வேண்டியவர் களாகிறார்கள். உதாரணமாக, சரித்திரம், பூகோளம், விஞ்ஞானம், வான சாஸ்திரம், உடற்கூறு, உலோக விஷயம் முதலியவைகளில் படித்துத் தேறியவர்களில் யாருக்காவது இது சம்பந்தமான மூடநம்பிக்கைக் கொள்கை இல்லாத சரியான அறிவு இருக்கிறது என்று சொல்லமுடியுமா? சரித்திரம் படித்தவன் இராமாயண பாரதம் முதலிய புராணக் கதையும், சரித்திரத்தில் சேர்த்துப் படித்து, ராமனும் பரதனும் இந்த நாட்டை ஆண்டான் என்றும், அது இன்ன காலம் என்றும், இந்த நாட்டுக்குப் பாரததேசம் என்பது பெயர் என்றும் கருதிக்கொண்டு அனுபவத்திலும் அதற்கு ஏற்றவண்ணம் நடந்து பாரதமாதாவை வணங்கிக் கொண்டு திரிகிறான். நிஜமாக நடந்த சரித்திர உண்மைகள் நிஜமான நபர்கள் அதன் காலங்கள் ஆகியவை சரித்திரம் படித்தவர்கள் என்பவர்களுக்கு சரியாகத் தெரிவதில்லை.
நடவாததும், நடந்ததாக நம்ப முடியாததும், அதற்கும் காலம் நிர்ணயிக்க முடியாததுமான அறிவுக்குப் பொருந்தாத காரியங்களுக்கு அதிக விபரம் தெரிகிறது. ஆனால் நடந்தவைகளுக்குச் சரியான விபரம் தெரிவதில்லை. சேர, சோழ, பாண்டியர், நாயக்கர் ஆகிய வர்களும், அவர்களது வாரிசு, அண்ணன் தம்பிகளும், மனைவி மக்களும் ஆண்ட நாட்டெல்லைகளும், முறை களும், முடிவுகளும் சரித்திரம் படித்த 100க்கு 90 மாண வர்களுக்கு விவரம் சொல்லத் தெரியாது. தசரதனுக்கும், ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும், பாண்டவருக்கும், துரியோதனாதிகளுக்கும், இரணியனுக்கும், பலிச் சக்கர வர்த்திக்கும், மனுநீதி கண்ட சோழனுக்கும் அண்ணன் தம்பிமார்கள், மனைவி மக்கள், அவர்கள் கணவர்கள் இவ்வளவு என்று 100க்கு 90 மாணவர்களுக்குத் தெரியும். பூகோளம் படித்தவனுக்கு உலகப் பரப்பு, அதன் பிரிவுகள் சரியாக ஞாபகத்தில் இராது. ஆனால் இல்லாததும் இருக்க முடியாததுமான மேல் ஏழுலோகம், கீழ் ஏழுலோகம், அதன் வர்ணனை பலன், தன்மை இருப்பதாக முழு ஞாபகமாகத் தெரியும், ஞானசாஸ்திரம் படித்தவனுக்கு சூரியன், சந்திரனின் உண்மைத் தன்மை, கிரகணங்களின் உண்மைத்தனம் இயக்கம், அதன் சீதோஷ்ண நிலைமைக்குக் காரணம் ஆகியவை சரியாகத் தெரியாது. ஆனால் சூரியனுக்கு 16 குதிரை, சந்திரனுக்குக் கலை வளரவும் தேயவும், சாபம் இவர்களது மனைவி மக்கள், அவர்களது விபசாரம், ராகு கேது விழுங்குதல். அதனால் கிரகணம், அதற்குப் பரிகாரம் என்பது போல கற்பனைக் கதைகள் யாவருக்கும் உண்மை யென்ற காரணமும், அதை அனுசரித்த அனுபவமும், அதற்கு ஏற்ப நடப்பும் தெரியும். விஞ்ஞானத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. உதாரணம், விஞ்ஞானப் படிப்பின் இன்றைய நிபுணர்களைப் பார்த்தாலே விஞ்ஞானப் படிப்பின் தன்மையும், பலனும் நன்றாய் விளங்கும். இப்படியாகப் படிப்புக்கும், அறிவுக்கும், பெரும்பாலும் உண்மைக்கும், நடப்புக்கும் சம் பந்தமில்லாத மாதிரியான படிப்புத்தான் இன்று பள்ளிப் படிப்பாகப் போய்விட்டது.
படிப்பால் ஏற்படும் பயன்
இது தவிர, இனிப் படிப்பினால் ஏதாவது ஒழுக்கம், நாட்டுப்பற்று, இனப்பற்று, சமரச ஞானம் முதலியவை ஏதாவது ஏற்படுகிறதா? அல்லது படித்த மக்களிடம் இவை ஏதாவது இருந்து வருகிறதா? என்றால் அதுவும் சிறிதும் சரியானபடி இல்லாமல் வெறும் கற்பனைக் குணங்களும், பற்றுகளுந்தான் பெரிதும் காணப்படுகின்றனவே தவிர உண்மையானதும், இருக்க வேண்டியதுமானவைகள் அருமையாகவே இருக்கின்றன. இதை விரிக்கில் மிகமிக நீளும். ஆகவே, இம்மாதிரி படிப்பைப் படிக்கின்ற பிள்ளைகள் எவ்வளவு சிறிய பிள்ளைகளானாலும் இவைகளைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள் என்று உங்களுக்கு சொல்லுவதால் கேடு எதுவும் எற்பட்டுவிடும் என்று நான் கருதவில்லை.
ஆசிரியருடன் விவாதம் புரியுங்கள்
உங்களுக்கு உபாத்தியாயர்கள் இப்படிப்பட்ட படிப்பைக் கற்றுக் கொடுக்கும்போது இந்தமாதிரியான காரியங்களைப் பற்றிச் சிந்தித்து, நீங்கள் இது சரியா என்று கேட்பதன்மூலம் உங்கள் ஆசிரியர்களால் உண்மை அறிவிக்கப்படுவீர்கள். பரீட்சையில் பாசாவதற்கு நீங்கள் படித்ததையும், சொல்லிக் கொடுத்ததையும், எழுதினாலும் உங்கள் அறிவுக்கும், அனுபவத்திற்கும் எது உண்மை என்பதாவது விளங்கக்கூடும். ஆதலால் முரண் வந்த இடங்களில் விளக்கம் விரும் புங்கள். கட்டுப்பாடாகவும் அதிகப்படியாகவும் மாணவர் கள் விளக்கம் பெற விரும்புவீர்களானால் ஆசிரியர்களும் உங்களுக்கு விளக்கம் சொல்லவாகிலும் பயன்படும்படி அறிவு பெறுவார்கள். இப்படிப்பட்ட விளக்கம் தெரிந்த ஆசிரியர்கள் பெருகுவார்களானால் மக்களுக்குப் படிப்பதால் ஏற்படும் கடமையாவது காலப்போக்கில் குறையும் என்று கருதுகின்றேன். இதை ஏன் உங்களிடம் சொல்லுகிறேன் என்றால் இதுவரை கல்வி இலாகாக்காரர்கள் இந்தக் குறை பாட்டைப் பற்றி சரியானபடி சிந்தை செலுத்தவே இல்லை. படிப்பவர்களுக்கு இரட்டை மனப்பான்மை அதாவது சரி யானதும், போலியும் கற்பனையுமானதுமான ஆகிய இரு முரண்பட்ட மனப்பான்மை உண்டாகும்படியாகவே கல்வியால் செய்யப்பட்டு வந்திருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதற்கு ஆகத்தான்.  எனவே இதுவரை உங்களுக்கு படிப்பைப்பற்றி சில கூறினேன்.
திராவிடர் கழகம் ஏன்? இனி உங்கள் கழகத்தைப் பற்றிச் சில கூற ஆசைப்படு கிறேன். திராவிடர் மாணவர் கழகம் என்பதில் திராவிடர் என்கின்ற பெயர் ஏன் வைக்கவேண்டியதாயிற்று? இத்தனை நாள் இல்லாமல் இப்போது ஏன் எங்கு பார்த்தாலும் திராவிடர் திராவிடர் என்று சொல்லப்படுகிறது. இதுவரை இருந்துவருகிற பிரிவுகள், பேதங்கள் ஆகியவைகள் போதாமல் இது வேறு ஒரு புதிய பிரிவா? என்றெல்லாம் நீங்கள் கேட்கப்படலாம். அவற்றிற்கு உங் களுக்கு விடை சொல்லத் தெரியவேண்டும். அதை நீங்கள் தெரிந்து கொள்ளாவிட்டால் திராவிடர்களின் எதிரிகள் இந்தத் திராவிடம் என்பது ஒரு புதுப் பிரிவினையை உண்டாக்கக் கூடியது என்றும், இது மக்களுக்குள் துவேஷத்தையும், பேதத்தையும் உண்டாக்கக் கூடியதென்றும் சொல்லி திராவிட மக்களின் மேம்பாடு முன்னேற்ற உணர்ச்சியையும், முயற்சி யையும் கெடுக்கப் பார்ப்பார்கள்.
இதுவே எதிரிகளின் வழக்கம். திராவிடம் - திராவிடர் என்பது திராவிடம் என்றும், திராவிடர் என்றும் சொல்லுவது நாமாக ஏற்படுத்திய புதிய கற்பனைச் சொற்கள் அல்ல. இது நம் நாட்டிற்கும், நம் மக்களுக்கும் குறிப்பிடும் ஒரு சரித்திர சம்பந்தமான பெயர்களாகும். இவை பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வழங்கி வரும் பெயர்களு மாகும். உங்களுக்கு நன்றாய் இந்த உண்மை விளங்க வேண்டுமானால் நீங்கள் உங்கள் பள்ளியில் இன்று படிக்கும் இந்த நாட்டு (இந்துதேச) சரித்திரப் புத்தகத்தைப் புரட்டிப் பாருங்கள். அதில் எந்த சரித்திரப் புத்தகத்தை எடுத்துக் கொண்டாலும் அதன் விஷய முதல் பக்கத்தில் திராவிடம், திராவிடர் என்கின்ற தலைப்புக்கொடுத்து அவற்றின் வரலாறுகள் எழுதப்பட்டிருக்கும். இவை முடிந்த அடுத்த பக்கத்தைத் திருப்பினீர்களானால் அதில் ஆரியம், ஆரியர் என்கின்ற தலைப்பு கொடுத்து சரியாகவோ தப்பாகவோ அவற்றின் வரலாறுகள் எழுதப்பட்டிருக்கும். எனவே இவை அதாவது திராவிடர், ஆரியர் என்பவை உங்கள் குழந்தைப் பருவத்தில் பள்ளிப்படிப்பில் உங்களுக்கு ஊட்டப்பட்ட சேதிகளும், வெகு காலத்திற்கு முன் ஏற்பட்ட உண்மைகளும் ஆராய்ச்சிச் சுவடிகளில் காணப்படும் சேதிகளுந்தானே ஒழிய இன்று புதிதாக நானோ மற்றும் வேறு யாரோ கொண்டு வந்து புகுத்தியது அல்ல. இதுவேதான் இந்நாட்டுச் சரித்திரத்தின் ஹ,க்ஷ,ஊ ஆகும். இதிலிருந்து பார்த்தாலே நம்முடையவும் நம் நாட்டினுடையவும் தன்மைகள் ஒருவாறு நமக்கு விளங்கிக் கொள்ள முடியும் என்பதற்கு ஆகவே அதை ஞாபகப்படுத்தும் படியான மாதிரியில் அனுபவத்தில் வழக்கத்திற்கு நினை வுக்கு வரும்படி செய்ய இன்று அதைப்பற்றிச் (திராவிடத்தை பற்றி) சிறிது அதிகமாய் உங்களிடம் பேச வேண்டி இருக்கிறது. இதுகூட ஏன்? இதுகூட ஏன்? இன்று புதிதாகச் சொல்லப்படவேண்டும் என்று கேட்கப்படலாம். எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இருந்தே இருந்துவருகிற திராவிடர் ஆரியர் என்கின்ற வார்த்தையை நாம் இன்று அமலுக்கு - பழக்கத்திற்கு அதிகமாய்க் கொண்டுவருவதால் அந்தக்கால நிலைக்கு நாம் போகவேண்டும் என்கின்ற கருத்து அதில் இருப்பதாக யாரும் கருதிவிடக்கூடாது. பிற்போக்குக்கு ஆக நாம் அப்படிச் சொல்லவில்லை. நமக்குச் சிறு பிராயத்தில் சரித்திர மூலம் படிப்பிக்கப்பட்டிருந்தும் அனுபவத்தில், உணர்ச்சியில் ஏன் நம் மக்களுக்குள் நினைவிலிருக்க முடியாமல் போய்விட்டது என்று நாம் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொள்ள வேண்டுமே ஒழிய, ஏன் நமக்கு இப்போது ஞாபகப்படுத்தப்படுகிறது என்ற கேள்விக்கு இடமே இல்லை. ஆனாலும் ஏன் என்றால், ஏற்பட்ட கெடுதி அதாவது, திராவிடர் என்ற நினைவில்லாததால் நமக்கு என்ன கெடுதி ஏற்பட்டது என்று கேட்டால் அந்த நினைவு நமக்கு இல்லாததால்தான் நாம் 4 ஆம் , 5 ஆம் ஜாதியாய், சமுதாயத்திலும், தற்குறிகளாய்க் கல்வியிலும், கூலிகளாய்த் தொழிலும், ஏழைகளாய் வாழ்க்கையிலும் அந்நிய ஆதிக்கத்திற்கு உட்பட்டவர் களாய் அரசியல், ஆத்மார்த்த இயல் என்பவற்றிலும் காட்டுமிராண்டி காலத்து மக்களாய் அறிவு, கலாச் சாரம், தன்மானம் ஆகியவைகளிலும் இருந்து வருகி றோம். இது இன்று நேற்றல்லாமல் நம்மைத் திராவிடர் என்பதையும் நம்நாடு திராவிடநாடு என்பதையும் மறந்த காலம் முதல் அதாவது சுமார் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே இருந்துவருகிறோம். நாம் நம்மைத் திராவிடர் என்று கருதினால், நினை வுறுத்திக்கொண்டால் உலக நிலையில் திராவிடர் (நம்) நிலை என்ன? தன்மை என்ன? நாம் எப்படி இருக்கிறோம்? என்பது உடனே தென் படும் ஏன் எனில், நாம் எப்படி இருக்க வேண்டியவர்கள்?
நாம் முன் கூறின இழிநிலையும் குறைபாடுகளும் இந்த நாட்டில், ஏன் உலகிலேயே திராவிடர்களுக்குத்தான் (நமக் குத்தான்) இருக்கிறதே தவிர திராவிடரல்லாதவர்களுக்கு இல்லவே இல்லை. திராவிடமல்லாத வேறு நாட்டிலும் இல்லை. இந்நாட்டு மனித சமுதாயத்தில் ஒருகூட்டம் அதாவது, ஆரியர்கள் பிறவி உயர்வாயும், பிறவி காரணமாய் உயர்வாழ்வாயும், மற்றொரு சமுதாயம் அதாவது, நாம் - திராவிடர் பிறவி இழி மக்களாயும், பிறவி காரணமாய்த் தாழ்ந்த இழிந்த வாழ்வாயும் இருப்பது இதுவரை மக்களுக்குத் தென்படாததும், தென்பட்டாலும் அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய அவசியமில்லாமலும், சிந்தித்தாலும் முயற்சி செய்யாமலும், முயற்சி செய்தாலும் வெற்றி பெறாமலும் போனதற்கு காரணம் என்ன? என்பதைச் சிந்தியுங்கள். நீங்கள் உங்களைத் திராவிடர்கள் என்று கருதாததினால், நினைவுறுத்திக் கொள்ளாததால் இன்றைய இழிவுக்கும், தாழ்மைக்கும், கீழ்நிலைமைக்கும் உரியவர்கள் என்று உங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டி ஏற்பட்டுவிட்டது. அக்கட்டுப்பாட்டை உடைக்க நீங்கள் திராவிடர்கள் என்று கருதி முயலாமல் அந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விலக ஆசைப்பட்டதால்தான் அக்கட்டு உங்கள் ஆசையை அனுமதிக்கவில்லை. இதுவரையில் இழிநிலை கட்டுப்பாட்டிலிருந்து தப்ப, மீள முயன்றவர்கள் நம்மில் எவர்களாவது இருப்பார்களானால் அவர்கள் அத்தனைபேரும் தோல்வி அடைந்து பழைய நிலையிலேயே இருப்பதற்குக் காரணம் இதுவேயாகும். சிறைச்சாலைக்குள் இருப்பவன் எந்த வழியில் சிறைக்குள் சென்றானோ அந்தவழியில் வெளிவர முயல வேண்டுமே ஒழிய சிறைக் கதவை, பூட்டை கவனியாமல் அது திறக்கப்படவும், உடைக்கப்படவும் முயலாமல் வெறும் சுவரில் முட்டிக்கொள்வதால் எப்படி வெளிவர முடியும்? திராவிடன் இழிவு, தாழ்வு என்னும் சிறைக்குள் சிக் குண்டதற்குக் காரணம் அவன் தன்னைத் திராவிடன் என்று உணராமல் ஆரியன் வசப்பட்டு ஆரியத்திற்கு, ஆரிய மதம், கலை, ஆச்சார அனுஷ்டானங்களுக்கு அடிமைப்பட்டதல்லாமல் வேறு என்ன காரணம் சொல்ல முடியும்? ஆரியத்தின் பயனாய் ஏற்பட்ட சிறைக் கூடத்தில், கட்டுப்பாட்டின் கொடுமையில் இருந்து வெளிவர விரும்புகிறவன் கையிலும், காலிலும் பூட்டியிருக்கும் ஆரிய பூட்டையும் விலங்கையும் தகர்த்தெறியச் சம்மதிக்க வேண்டாமா? அவைகளைத் தகர்த்தெறியாமல் எப்படி வெளிவர முடியும்? விலங்கோடு வெளிவந்தால்தான் பயன் என்ன? ஆகவேதான் ஆரியக்கொடுமை, ஆரியக் கட்டுப் பாட்டால் நமக்கு ஏற்பட்ட இழிவு நீங்க நாம் ஆரியத்தை உதறித்தள்ள வேண்டும். ஆரியத்தை உதறித்தள்ளுவதற்குத் தான் நம்மை நாம் திராவிடர் என்று சொல்லிக்கொள்ளுவ தாகும். அதற்குத் தூண்டுகோல்தான் திராவிடர் என்பது.
எப்படி ஒருவன் பறையனாய், சக்கிலியாய் இருப்பவன், அவன் இஸ்லாம் என்றாகிவிட்டால் அந்தப் பறத் தன்மை, சக்கிலித் தன்மை உடனே ஒழிந்துபோகிறதோ அதேபோல் அறியாமையால் ஆரியத்தில் சிக்குண்டு கீழ் மகனான மக்கள் தங்களைத் திராவிடர்கள் என்று சொல்லிக்கொண்டாலே சரிசமமான மக்களாக ஆகிவிடுகிறார்கள். அதாவது எல்லா மேன்மைக்கும் முன்னேற்றத்திற்கும் உரிமையும் சமபங்கு முள்ள சுதந்திர மக்களாக ஆகிவிடுகிறார்கள். அப்படிக் கில்லாமல் தன்னை ஆரியத்தோடு பிணைத்துக்கொண்டு இருக்கிற எந்தத் திராவிடனும் கீழ்மகன் என்ற தன்மையை ஒப்புக் கொண்டவனேயாவான். எவ்வளவு முயற்சி செய்தாலும் மீள முடியாதவனே ஆவான். உதாரணமாக தோழர் சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார் தன்னை இந்து என்று சொல்லிக்கொள்ளுவதன் மூலம் எவ்வளவு பெரிய ஜாதி வைசியரானாலும், பிராமணனுக்கு கீழ் ஜாதி என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதுதான் இன்றைய அனுபவம். இதுதான் இதுவரை யார் பாடுபட்டும் வெற்றிபெறாத காரணம். இதைக் கண்டிப்பாய் உணருங்கள். யுக்திக்கும், நியாயத்திற்கும், அனுபவத்திற்கும் ஒத்த உண்மையாகும் இது. திராவிடர் என்பதின் கருத்து இனி திராவிடத் தன்மையைப் பற்றிச் சில கூறுகிறேன். நான் நம்மைத் திராவிடர் என்பதும், இது சரித்திர காலத் தன்மை என்பதும், உங்களை நான் அந்தக் காலத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புவதாகக் கருதாதீர்கள். அல்லது திராவிடர் - ஆரியர் என்று உடல் கூறு சாஸ்திரப்படி பரீட்சித்து அறிந்து பிரித்துப் பேசுவதாக கருதாதீர்கள்.
அல்லது திராவிடருக்கு என்று ஏதோ சில தன்மைகளை எடுத்துச் சொல்லி அதை சரித்திர ஆதாரப்படி மெய்ப்பித்துச் சொல்லுவதாகக் கருதாதீர்கள். இவைகள் எப்படி இருந்தாலும், இவை பிரிக்கமுடியாதனவாய் இருந்தாலும் சரி, நம்மை இன்றைய இழிவிலிருந்து, தாழ்மையிலிருந்து, முன்னேற முடியாமல் செய்யும் முட்டுக்கட்டையிலிருந்து மீண்டு தாண்டிச் செல்ல நமக்கு ஒரு குறிச்சொல் வேண்டும். சுயராஜ்ஜியம் என்றால் எதைக் குறிக்கிறது? பாகிஸ்தான் என்றால் எதைக் குறிக்கிறது? மோட்சம் என்றால் எதைக் குறிக்கிறது? வெள்ளையனே வெளியே போ என்றால் எதைக் குறிக்கிறது? என்று பார்த்தால் அவை ஒரு கருத்தை, ஒரு விடுதலைத் தன்மையை, ஒரு பயனை அனுபவிப்பதை எப்படிக் குறிப்பிடுகின்றனவோ அப்படிப் போல் நம்மை இழிவிலிருந்து விடுதலை செய்து ஒரு முற்போக்கை ஒரு பயனை அடைதலை, ஒரு மீட்சியைக் குறிப்பிட ஏற்படுத்தி இருக்கும் சொல்லாகும். ஆதலால் வார்த்தையின் பேரில் வழக்காட வேண்டிய தில்லை. திராவிடம் என்பது என்ன மொழியாய் இருந்தால் என்ன? காப்பி(பானம்) என்னமொழி? அது காலை ஆகார(பான)த்திற்கு ஒரு குறிப்பு மொழி, அவ்வளவில்தான் பார்க்கவேண்டும். பாகிஸ்தான் என்னமொழி? இந்துக்கள் என்பவர்கள் ஆதிக்கத்தில் இருந்து மீள்வதற்கு ஒரு அறிகுறி மொழி; அவ்வளவில்தான் அதைக் கருத வேண்டும். கலந்துவிட்டது என்பது... ஆரியன் திராவிடன் என்பது கலந்துபோய்விட்டது, பிரிக்க முடியாதது, ரத்த பரீட்சையாலும் வேறுபடுத்த முடியாதது என்று சிலர் வாதாடலாம். அது நமது கருத்தை அறியாமல் பேசும் அறிவற்ற பேச்சு என்றே சொல் லுவேன். ஆரிய திராவிட ரத்தம் கலந்துவிட்டிருக்கலாமே தவிர ஆரிய திராவிட ஆச்சார அனுஷ்டானங்கள் கலந்து விட்டனவா? பிராமணாள் ஓட்டல், பிராமணர்களுக்கு மாத்திரம்; பிராமணன், சூத்திரன், பறையன், சக்கிலி, பிராமணனல்லாதவன் ஆகிய பிரிவுகள் எங்காவது கலந்துவிட்டனவா? பேதம் ஒழிந்து விட்டதா? பிராமணர்கள் என்பவர்கள் உயர்வும் பாடுபடாமல் அனுபவிக்கும் போக போக்கியமும், சூத்திரர்கள், பறையர்கள், சக்கிலிகள் (திராவிடர்கள்) என்பவர்கள் இழிவும், கஷ்ட உழைப்பும், ஏழ்மையும் தரித்திர வாழ்வும் எங்காவது சரிசரி கலந்து விட்டதா? பிரிக்க முடியாதபடி ஒன்றிவிட்டதா? அல்லது அறிவு, கல்வி, தகுதி திறமை கலந்துவிட்டதா? எது கலந்து விட்டது; இரத்தம் கலந்தாலென்ன கலவாவிட்டால் என்ன? வாழ்வு, போகபோக்கியம், உரிமை கலத்தல் வேண்டாமா?
சட்டைக்காரர் என்று ஒரு கூட்டம் இருக்கிறது, இது வெள்ளை ஆரிய, கருப்பு திராவிட ரத்தக்கலப்பு என்பதில் எவருக்கும் ஆட்சேபனை கிடையாது என்றாலும், நமக்கும் அவர்களுக்கும் எதில் கலப்படம் இருக்கிறது. அவர்கள் தனிச் சமுதாயமாக வெள்ளை ஆரியர் (அய்ரோப்பியர்) போலவே ஆச்சார அனுஷ்டானங்களில் நம்மில் இருந்து பிரிந்து உயர்வாழ்வு வாழுகிறார்கள். இவர்களைப் பார்த்துக் கருப்புத் திராவிடன் இரத்தத்தால் பிரிக்க முடியாதவர்கள் என்று சொல்லுவதில் பொருள் உண்டா என்று பாருங்கள். ஆகவே, திராவிடர் என்பது நமக்கு ஒரு குறிச்சொல், லட்சியச் சொல் ஆகும். எப்படியாவது ஆரியக் கட்டுப் பாட்டால் நமக்கு ஏற்பட்டிருக்கிற கொடுமையான இழிநிலை, முட்டுக்கட்டை நிலைமாறி மேன்மை அடையவேண்டும். ஆரியம் என்றால் மாற்றத்திற்கு இடமில்லாதது; திராவிடம் என்றால் மாற்றிக்கொள்ள இடமளிப்பது என்பதுதான் உண்மைத் தத்துவமாகும். நாம் இந்தத் திராவிடர் என்ற பெயர் கொண்டு விடுவதால் நமக்கு வேறு தவறுதல்கள் எதுவும் நேர்ந்துவிடாது. நம் எதிரிகள் சொல்லும் குறும்புத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு அதாவது கடவுள், மதம், சாஸ்திரம், ஒழுக்கம், கலை, தர்மம், புண்ணியம், பக்திவிசுவாசம் முதலியவை எல்லாம் ஒழிக்கப்பட்டுப் போகும் என்பவை மிகவும் இழிவான குணத்தோடு நம்மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளும் புகார்களுமாகும்.
திராவிடர், திராவிட இனத்தவர், திராவிடக் கூட்டத்தவர் என்பதற்கும், இந்தக் குற்றச்சாட்டுக்கும், எவ்வித சம்பந்தமுமில்லை, இவைகள் ஒன்றும் கெட்டுவிடாது. ஆரியத்தால் தீண்டப்படாதவனான ஒரு பறையன், சக்கிலி தன்னை இஸ்லாமியன் என்று ஆக்கிக்கொண்டால் அவன்மீது இந்த இழி தன்மைகளுக்கு அருத்தம் உண்டா என்று பாருங்கள். அதோடு அவனுக்கு, அவன் பறையனாயிருந்தால் சூழ்ந்துகொண்டிருந்த அவனைப் பறையனாக்குவதற்குக் காரணமாயிருந்த கடவுள், மதம், சாஸ்திரம், கலை, ஒழுக்கம், புண்ணியம் முதலிய ஈனத் தன்மைகள் ஆரியருடையதுகள் கண்டிப்பாய் நசித்துப்போய் விடுகிறதா இல்லையா பாருங்கள். அதனால் அவன் நாஸ்திகன் ஆகிவிடுகிறானா? இல்லையே! அதற்குப் பதிலாக ஈனத் தன்மைக்குக் காரணமாயில்லாத இஸ்லாம் கடவுள், மதம், சாஸ்திரம், கலை, ஒழுக்கம் முதலியவை  அவனைச் சூழ்ந்து அவன் மீதிருந்த இழிவுகளை நீக்கிவிடும். உதாரணமாக ஆரியனுக்கு உருவக் கடவுள், இஸ்லாமி யனுக்கு உருவமில்லாத கடவுள் என்பதோடு உருவக் கடவுள் வெறுப்பும் உண்டு. ஆரிய மதத்துக்கு ஜாதிபேதம், இஸ்லாமிய மதத்திற்கு ஜாதி பேதம் இல்லை; இப்படிப் பல மாறுதல்கள்தான் திராவிடனுக்கு உண்டாகலாம். இதனால் கடவுள், மதம். சாஸ்திரம், கலை, ஒழுக்கம் ஒழிந்து விட்டதாகவோ ஒழிக்கப்பட்டதாகவோ அருத்தமா? இங்குதான் உங்களுக்குப் பகுத்தறிவு வேண்டும். ஜாக்கிரதை வேண்டும். இன்றைய உலகம் எல்லாத் துறையிலும் மாறுதல் ஏற்பட்டு முன்னேற்றம் அடைந்து வருகிறதே ஒழிய நாசமாய்விடவில்லை. பழையதுகளுக்கும், பயனற்றதுகளுக்கும் சிறிதாவது குறைந்த சக்தி கொண் யுடவை நசித்துதான் போகும்; கைவிடப்பட்டுத்தான் போகும்.  சிக்கிமுக்கியில் ஏற்பட்ட வெறும் நெருப்பு வெளிச் சம் மறைந்து படிப்படியாக மாறி இன்று எலக்டிரிக்(மின்சார விளக்கு) வெளிச்சம் வந்ததானது நாசவேலையல்ல என்பதும்; அது முற்போக்கு வேலை என்பதும் யாவரும் ஒப்புக்கொள்ளுவார்கள். ஆதலால், ஆரம்பகாலத்தில் - பழங்காலத்தில் தோன்றிய அல்லது தோற்றுவிக்கப்பட்ட கடவுள், மதம், சாஸ்திரம், இசை, ஒழுக்கம், பக்தி என்பவை  இன்றைக்கும் அப்படியே பின்பற்றப்படவேண்டும் என்றால் அது அறியாமையேயாகும். அறியாமை அல்ல என்றால், புத்தர், ஏசு, மகம்மது, ராஜா ராம்மோகன்ராய் ஆகிய கடவுள், மதம், கலை, ஒழுக்கம், பக்தி ஆகியவைகளில் மாற்றம் ஏற்படுத்தியவர்கள் நாச வேலைக்காரர்களா? எடிசன், மார்கோனி, டார்வின், சாக்கரடீஸ், லூதர், மார்க்சு, ஏஞ்சல்ஸ் ஆகியவர்கள் நாச வேலைக்காரர்களா? இவர்கள் மனித சமுதாய ஒழுக்கத்தை சமுதாய அடிப்படையைக் கலைப்பவர்களா? என்று சிந்தியுங்கள்; மாறுதல் உணர்ச்சி யால் அதுவும் முற்போக்கான பழைமையை உதறித்தள்ளின மாறுதலில்தான் பயன் உண்டாக முடியும். மாறுதல் என்று சொல்லி பழைமையைத் திருப்புவது, அதாவது ராட்டினம் கொண்டுவருவது, செல்லரித்து மக்கி ஆபாசமாகப் போன புராணங்களை உயிர்ப்பிப்பது, பழைய கோவிலைப் புதுப்பிப்பது, என்பவை மாறுதல் ஆகிவிடா. எனவே மாறுதல் கருத்தால் வெகுகாலமாக இருந்து வரும் குறைகளை இழிவுகளை நீக்கிக் கொள்ளச் செய்யும் முயற்சியை நாசவேலை என்று கருதாதீர்கள். இவ்வித மாறுதலுக்கு நீங்கள்தான், அதாவது இளை ஞர்கள், குழந்தைப் பருவமுள்ளவர்கள், ஆகியவர்கள்தான் பெரிதும் தகுதி உடையவர்கள் ஆவீர்கள். நன்றாய்ச் சிந்திக் கும் காலம் இது. சிந்தித்து வாது புரியுங்கள், விவகாரம் கிளப்புங்கள்.
அதனால் அனுபவம், அறிவு முதிர்ச்சி பெறு வீர்கள். உங்கள் வாதத்தால் உங்கள் ஆசிரியர்களுக்கும் சிந்திக்கும் சக்தியும் பகுத்தறிவும் தோன்றும்படி வாது புரியுங்கள். நீங்கள் காரியத்தில் இறங்க உங்களுக்கு இன்னும் சற்று அனுபவம் பெறுங்கள். யாவர் சொல் வதையும் காது கொடுத்துக் கேளுங்கள், கேட்டவை களைச் சிந்தித்துச் சிந்தித்து உண்மை, நேர்மை கண்டு பிடிக்க வாதம் செய்து, கேள்வி கேட்டு அனுபவம் பெறுங்கள். எனவே, நான் இவ்வளவு நேரம் சொன்னவைகளில் உள்ள குற்றம் குறைகளை உங்கள் தலைமை ஆசிரியரும், இக்கூட்டத் தலைவருமான அறிஞர் திருத்துவார். (09.07.1945 ஈரோடு மகாஜன ஹைஸ்கூலில் சரஸ்வதி ஹாலில் திராவிட மாணவர் கழகத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி ஆற்றிய சொற்பொழிவு)
குடிஅரசு - சொற்பொழிவு - 14.07.1945
-விடுதலை,25.9.11

புதன், 2 டிசம்பர், 2015

திரு.வி.க. பார்வையில் திராவிடர், திராவிடம், திராவிட நாடு - முனைவர் பேரா. ந.க.மங்களமுருகேசன்திராவிட என்கிற சொல் பிராமி மொழியிலும் இருக்கிறது. பிராமி மன்னன் நிக்கலஸ் ஆட்சிச் சரித்திரத்தில் திராவி டர்களைப் பற்றிய குறிப்பு காணப்படு கிறது. ஸ்மிருதியிலும், பஞ்ச திராவிடம்  என்று குறிக்கப்பட்டிருக்கிறது. மலையாளம், தமிழகம், ஆந்திரம், கேரளம் அவற்றோடு மராத்தி தேசம் ஆகிய அய்ந்து திராவிடங்கள் குறிப்பிடப்பட்டி ருக்கின்றன. மலையாள தேசத்தில் பிறந்து வளர்ந்து வடமொழி கற்று சவுந் தர்யலகரி என்ற சமஸ்கிருத நூல் எழுதிய சங்கராச்சாரியாரும் அப்புத்தகத்தில் திராவிடர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள் ளார். எல்லையப்பர் அவர்களின் மொழி பெயர்ப்பின் மூலம் நாம் இதை அறிய லாம் என்று கூறுவதோடு,
சுமார் 55 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த சபாபதி நாவலர் என்கின்ற தமிழ்வாணரால் எழுதப்பட்ட திராவிட பிரகாசிகா என்கின்ற நூலிலும் திராவிடம் என்கிற வார்த்தைக்குப் பல ஆதாரங்கள் காட்டப் பட்டிருப்பதைப் பார்க்கலாம் என்றும் இதுவரை எவரும் சுட்டிக் காட்டாத புதிய தகவலைக் கூறுகிறார். சென்னையில் நடைபெற்ற திராவிட இயக்க நூறாவது ஆண்டுத் தொடக்க விழாவில் தலைவர் கலைஞர் இரவீந்திரநாத் தாகூரின் ஜனகண பாடலில் திராவிட என்ற சொல்லாட்சி இடம் பெற்றிருப்பதைப் பாடிக் காட்டினார்.
திரு.வி.க.வோ விடுதலை பெற்ற அடுத்த ஆண்டிற்கு அடுத்த ஆண்டில் 1949இல் தமது உரையில் இன்று இந்நாட்டின் தேசியப் பாட்டாக வழங்கி வரும் ஜனகணமனவிலும் கவி ரவீந்திர நாத் தாகூர் அவர்கள் திராவிட உட்கல வங்கா என்ற வரியில் திராவிட நாட்டைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்  என்று கூறுகையில் சிந்திப்பவர்கள் கருத்து ஒரே திசை நோக்கிச் செல்லும் என்பது சான்றாகிறது.
மேலும் அவர் அழுத்தந்திருத்தமாக, திராவிட நாடு என்று ஒரு நாடு தொன்றுதொட்டு இருந்து வந்திருக்கிற தென்பதற்கு இவ்வாதாரங்களே போதும் என நினைக்கிறேன். இத் திராவிட நாட்டுக்கு எல்லை குறிப்பது மிகச் சிரமமான காரியம் அல்ல. சரித்திரமே சுலபமாக நிர்மாணித்துவிடும் எந்தெந்தப் பகுதிகள் திராவிட நாட்டைச் சேர்ந்தவை என்று.
எனவே திராவிடம் என்று ஒரு பகுதி இருந்து வருகிறது என்பது பற்றியோ அல்லது அதன் எல்லையைக் குறிப்பிடு வது பற்றியோ யாரும் நம்மோடு சர்ச் சைக்கு வர முடியாது என்று எல்லை குறித்த சர்ச்சைக்கும் கூட முற்றுப் புள்ளி வைக்கிறார்.
நம் திராவிடப் பண்பாடு வேறு, ஆரியப் பண்பாடு வேறு - அடிப்படையிலேயே ஒட்டாது. இரண்டுக்கும் உள்ள தொலைவு அதிகம் என்று கூறும்போது, தாம் தூம் தையாதக்கா என்று சில ஆரிய, வைதீக ஆதரவாளர்கள் குதி, குதியென்று குதித்து, ஆரியமாவது, திராவிடமாவது, எல்லாம் ஒன்று கலந்து விட்டது என்றெல்லாம் கூறி வருவதை அறிவோம்.
அவர்களுக்கு இன்றைக்கு அறுபது ஆண்டுகளுக்கு முன்னே - அருமை யான விளக்கத்தைத் தமிழ்த் தென்றல் கூறி ஆரியம் வேறு, திராவிடம் வேறு என்று தெள்ளத் தெளிவாகக் கூறுகிறார்.
நாம் கூட ஆரியர்களில் சிலர் - சில நடிகர்கள் - பார்ப்பனர்கள் - பகுத்தறிவு பேசுவதுகண்டு, பூணூல் மேல் வெறுப் பாகப் பேசுவது கண்டு ஏமாந்துவிடுவது உண்டு. எனவேதான் தமிழர் தலைவர் ஆசிரியர், எந்தப் பார்ப்பானாவது, கட வுள் மறுப்புக் கொள்கையைக் கூறினால் ஏமாந்துவிடாதீர்கள். ஏனென்றால் அவனுக்குக் கல்லிலும், செம்பிலும் கடவுள் இல்லை என்பது நம்மைவிட அவனுக் குத்தான் நன்றாகத் தெரியும். ஆனால் வகுப்புரிமைக் கோட்பாட்டை இடஒதுக் கீட்டினை ஏற்கிறானா என்று பாருங்கள். அப்போது தெரியும் அவன் உண்மையான ஆரியனா, திராவிட ஆதரவாளனா என்று தெரியும் என்று கூறுவார்.
சென்னையில் நடைபெற்ற திராவிடர் நூற்றாண்டு விழாக் கூட்டத்தில் உரை யாற்றிய பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் ஆரியன் யார்? திராவிடன் யார்? என்று கண்டறிய வேறோர் அளவு கோலை எடுத்து வைத்தார். பிறப்பொக் கும் எல்லாவுயிர்க்கும் என்ற கோட் பாட்டை எவனொருவன் ஏற்கிறானோ அவன்தான் திராவிடன். பிறவியில் வேற் றுமை பாராட்டி நிற்பவன் ஆரியன் என்று.
இவ்வாறான சிந்தனைகள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு நம்மவர்களுக்கு அளவு கோல் வைத்திடத் தோன்றியுள் ளது. ஏன் தமிழன் என்று கூறாமல் திராவிடன் என்று கூற வேண்டியதற்கும் முன்பு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் குறிப்பிட்டார்.
தமிழ் பேசுவதாலேயே, தமிழ் நாட்டில் பிறந்ததாலேயே திராவிடன் என்று கூறுவோமேயானால் கல்கியும், கவிஞர் வாலியும் கூடத் தமிழர் என்று கூறும் இடம் உண்டு. ஆனால் திராவிடர் என்று தங்களை அவர்கள் கூறுவார்களா? திருஞான சம்பந்தர் திராவிட சிசு என்று அழைக்கப்பட்டாலும், இவர்கள் அழைத் துக் கொள்ள மாட்டார்கள்.
தந்தை பெரியார் நம்மை ஏன் பார்ப் பனர் அல்லாதார் என்று எதிர்மறையாக அழைத்துக் கொள்ள வேண்டும்?  சூத் திரர் எனும் இழி மொழியால் அழைத்துக் கொள்ள வேண்டும் என்று சிந்தித்துப் பார்ப்பனர் அல்லாதார் அனைவரும் திராவிடர் என்று வகுத்தார் என்பது வரலாறு. அதனாலேயேதான் சுயமரி யாதைத் திருமணம் எனும் பார்ப்பனர் மேற்கொள்ளாத, பார்ப்பனர் உயர்வாகக் கருதிக் கொள்கின்ற பார்ப்பனீயத் திருமண முறை ஒழித்த திருமண ஏற் பாட்டை வலியுறுத்தி லட்சக் கணக்கில் அவற்றைத் தலைமையேற்று நடத்தி வைத்தார்.
அத்திருமணங்களை ஏற்பு செய்து அண்ணாவின் ஆட்சி சுயமரி யாதைத் திருமணம் செல்லுபடியாகும் சட்டம் நிறைவேற்றியபோது அகம் மகிழ்ந்து தம் கனவு நிறைவேறியது கண்டு வாழ்நாளிலேயே கண்டு மகிழ்வுற்றார். இந்தப் பின்னணியில் அன்றே திரு.வி.க. இரண்டு பண்பாடுகளும் எதிர் எதிரானவை. ஒன்றுக் கொன்று ஒட் டாதவை என்று தெளிவுபடுத்தி இரண் டையும் வேறுபடுத்திக் காட்டும் அருமை யான விளக்கத்தை அளித்தது இன்றும் நமக்கு ஆரியப் பண்பாடு எது?  திராவிடப் பண்பாடு எது? என்று பகுத்துப் பிரித்துக் காட்டுகிறது.
தந்தை பெரியார், திரு.வி.க., வ.உ.சி. ஆகிய மூவரும் தேசியத் திலகங்கள் - நம்மவர்கள் - திராவிடர்கள். இந்திய விடுதலைப் போர் வரலாறு ஆயினும், இந்தியச் சமூக சீர்திருத்த வரலாறு ஆயினும், பொதுவான இந்திய வரலாறு ஆயினும்  - அவற்றைத் தீட்டுவோர் - எடுத்து இயம்பி வரலாற்றுக்குக் கட்டியம் கூறுவோர் இவர்களை ஒதுக்கிவிட்டு, புறந்தள்ளி அல்லது புறக்கணித்து வரலாறு வரைவார்களேயாயின் - வரைந்து படித்து இருப்பார்களேயாயின் அது உண்மையான வரலாறும் அன்று - ஏன் வரலாறே அன்று.
இம்மூவரில் திரு.வி.க., தேசிய இயக் கத்திற்காகவும், தொழிலாளர் இயக்கத் துக்காகவும் மட்டும் உழைத்ததோடு அல்லாமல் தமிழ் மொழி, இன உணர்வு, பெண்மை உயர்வு போற்றியவர்.
அன்னைத் தமிழ், தீந்தமிழ், செந்தமிழ், உயர்தமிழ் என்றெல்லாம் புகழப்படும் தாய்த் தமிழைத் தமிழ் உணர்வாளர் - தமிழ் நெஞ்சத்தவர் - திரு.வி.க. தமிழ் என்று அழைக்கத் தகும் பெருமையினைத் தமிழ்க் குழவிக்கு ஊட்டி வளர்த்த தகைமையாளர்.
மேடைப்பேச்சில் எத்தனை, எத் தனையோ பேர் முத்திரை பதித்திட்டாலும் - சென்ற நூற்றாண்டின் முதல் அரைப் பகுதி திரு.வி.க. தமிழ், அண்ணாதுரை தமிழ் என்று கொஞ்சி மகிழ்ந்தது. அண்ணாவின் அழகுத் தமிழில் ஆண்மை தழைத்தது. திரு.வி.க.வின் தமிழில் தமிழ்த் தென்றல் வீசிப் பெண்மையின் எழிலோங்கியது.
அரசியல் வாணில் பண்பாளர், நயத்தக்க நனி நாகரிகர் - சாது முதலி யார் என்று அழைக்கப்பட்ட திரு.வி.க. தந்தை பெரியார் நட்பு ஆழமும், அகலமும் உடையது. தந்தை பெரியாரை எவ்வளவு சிறப்பாகப் போற்றித் தம் நெஞ்சத்துக் கொண்டு புகழ்ந்துரைத்தார் என்பதற்குத் திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் எனும் அவர்தம்  தன்வரலாறு வாழும் சான்றாகும்.
ஒரு காலை ஒன்றாக நாட்டு விடு தலைக்கு நாளும் உழைத்திட்ட பெரியார் - வைதீகத்தின் சூடு தாங்காமல் வெளி யேறியது போலவே, திரு.வி.க. எனும் பண்பாளருக்குக் காங்கிரசுப் பேரியக்கம் அதன் போக்கின் மாறுபாட்டால் கசந்தது. திரு.வி.க.வும் தந்தை பெரியாரைப் போல மாஜி காங்கிரசுக்காரர் ஆனார்.
தந்தை பெரியார் சுயமரியாதை இயக் கம் கண்டார். திரு.வி.க.வோ இயக்கம் ஏதும் காணாமல் தன் தனி இயக்கத்துடன் நின்று போனார். அவருடைய எழுதுகோல் எழுதிக் குவித்த எழுத்துச் சான்றுகள் - தமிழுக்குத் தமிழன்னைக்கு அவர் அணிவித்த அணிகலன் ஆகிவிட்டன. திரு.வி.க.வின் எழுத்தும், பேச்சும் உள் ளத்தை உருக்கி ஓடச் செய்யும் ஆற்றல் பெற்றன.
1949 இல் திராவிடர் கழகத்தில் இருந்து அண்ணா; பிரிந்து செல்வதற்கு முன் ஈரோட்டில் 19 வது திராவிடர் கழக மாநாடு நடைபெற்றது. அந்நாளில் திராவிட எதிர்ப்புணர்வைத் தூள் தூளாக்கும் அணுகுண்டுகளாகத் திரு.வி.க.வின் பேச்சுக் கந்தகத் துகள்கள் விளங்கின.
தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் நடத்திய 19ஆவது திராவிடர் கழக மாநாட்டில் திரு.வி.க. உட்கார்ந்து கொண்டு பேசவேண்டிய நிலைக்கு உடல் நலிவுற்று இருந்த வேளையில் திராவிட நாடு படத்தைத் திறந்து வைத்து ஆற்றிய உரை இன்றைய இளம் தலைமுறையினர் படித்துத் தெளிவும், சிந்தனை வளமும் பெறத் துணை புரிபவை. திரு.வி.க., மூத்தவரா? பெரியார் மூத்தவரா?
தலைவர் அவர்களே!  பெரியார் அவர்களே!  தோழர்களே!   தாய்மார்களே!   நேற்று பெரியார் அவர்கள் தெரிவித்தபடி அவரைவிட நான் 6 வயது மூத்தோ னாகவே காணப்படுகிறேன். எனவே உட்கார்ந்து கொண்டு பேசவேண்டிய நிலையில் இருக்கின்றேன். மேலும் இரைந்தோ, விரைந்தோ பேச முடியாமலும் சங்கிலித் தொடர்போல் எழுத்துக்களை வெளியிடுவதற்கு ஞாபக சக்தியில்லாத வனாகவும் இருக்கின்றேன். எனவே இங்கொன்றும், அங்கொன்றுமாகத் தொடர்பற்று என்னால் வெளியிடப்படும் இக்கருத்துக்களை நீங்கள் அத்தொடர்பு களைச் சேர்த்துப் படித்துத் தெளிவு பெற வேண்டுமென்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் என்கிறார் தம் சொற் பொழிவின் தொடக்கத்தில் திரு.வி.க.
திராவிட நாட்டுப் படத்தை நான் திறந்து வைக்க வேண்டுமென்ற விருப் பத்தை என்னிடத்துத் தோற்றுவித்தவர் இவ்வியக்கத் தலைவரும் எனது நெருங் கிய நண்பருமான பெரியார் ஆவார் என்று கூறுகிறார்.
திராவிடர் கழக உறுப்பினர் அல்லாத நான், திராவிட நாட்டுப் படத்தைத் திறந்து வைப்பது பொருந்துமா என்று பல தடவை யோசித்துப் பார்த்தேன். முடிவில் இந் நாட்டு மக்கள் எல்லோருமே திராவிடர் கள்தான், நானும் திராவிடன்தான். எனவே தாராளமாகத் திறந்து வைக்க லாம். அதில் ஒன்றும் தவறில்லை என்கின்ற முடிவுக்கு வந்தேன் என்று முதலில் தென்னகம் திராவிடம் என்பதை உறுதி செய்து கொள்கிறார்.
பின்னர் திராவிடர்கள் என்பதற்கு விளக்கம் கூறத் தலைப்படுகிறார் திரு.வி.க.
திராவிடர்கள் என்பதற்கு என ஆராய்ச்சியில் பல பொருள்கள் தென் பட்டன. அவற்றுள் இரண்டை மட்டும் ஈண்டு எடுத்துக் கூற ஆசைப்படுகிறேன். திராவிடர்கள் என்றால் ஓடுபவர் என்று ஒரு சார்பாரும், ஓட்டுபவர்கள் என்று மற்றொரு சாராரும் கூறுகின்றனர். வடமொழிச் சார்புடையவர்கள் முன்னைய அர்த்தத்தையும், சிவஞான முனிவர் அவர்கள் பின்னைய அர்த்தத்தையும் கூறுகிறார்கள். இவற்றுள் எதைக் கொள்வதென்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். ஓட்டுகிறவர்கள்  என்றால் மாசை, அசுத்தத்தை ஓட்டு கிறவர்கள். மனத்துக்கண் உள்ள மாசை ஓட்டுபவர்கள் என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டும். மனத்துக்கண் மாசிலனாதல் அனைத் தறன்
என்கிற அறத்தின் வழி நடந்தவர்களே திராவிடர்கள்.
திராவிடம் எனும் சொல்லுக்கு உரிய விளக்கமும் திரு.வி.க. வாயிலாகப் பெறுகிறோம்.


- முனைவர் பேரா. ந.க.மங்களமுருகேசன்
இந்தியா என்பது பெரிய நாடு. இதில் பல திறப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள் என்றா லும் இந்நாட்டில் இரண்டு பெரிய கலாச்சாரங்களே அடிப் படைக் கலாச்சாரங்களாகக் காணப்படுகின்றன. இவை இரண்டும் பெரிதும் முரண்பட்ட கலாச்சாரங்களாகவும்  இருந்து வருகின்றன. இவற்றுள் ஒன்று ஆரியச் கலாச்சாரமாகும். மற் றொன்று திராவிடக் கலாச்சார மாகும். வடநாட்டில் பெரும் பாலும் ஆரிய கலாச்சாரமும், தென்னாட்டில் பெரும்பாலும் திராவிட கலாச்சாரமும் நிலவி வருகிறது.
இவற்றுள் ஆரியக் கலாச் சாரம் சுரண்டலையும் ஏமாற்று தலையும் அடிப்படையாகக் கொண்டிருப்பதால் அதைப் பின் பற்றி வருபவர்கள் தமது சுரண்டு தலுக்காக அந்நிய நாடுகளை ஆக்கிரமிக்கும் எண்ணம் கொண்டு முயற்சி செய்து வரு கிறார்கள். திராவிட கலாச்சாரம் சமதர்மத்தை, சோஷலிசத்தை அடிப்படை யாகக் கொண்டதாக இருப்பதால் அதைப் பின்பற்று பவர்கள் பிறர் சுரண்டலை ஒழித்துச் சுதந்திரமாக வாழ விழைகிறார்கள். எனவேதான் பிரிந்து வாழ நினைக்கிறார்கள்.
ஒரு காலத்தில் தமிழ்நாடு மிகமிக உயர்ந்திருந்தது. பிறகு ஆரியத்தின் சுரண்டலுக்கு ஆட்படவே இன்று மிகமிகத் தாழ்ந்துவிட்டது.
சுரண்டலுக்கு உள்ளாக்கிய வடநாடு மிகமிக உயர்ந்து நிற்கின்றது இன்று.
திராவிடம் தனித்து வாழமுடியுமா? என்று இன்று  கேட்பது போல் அன்றும் கேட்டார்கள். இன்று சிலர் கூறுவது போலக் கேரளம் கேட்கவில்லை, கன்ன டம் காது கொடுக்கவில்லை, ஆந்திரம் ஆதரிக்கவில்லை. அப்படியிருக்கையில் திராவிடம் என்ற பேச்சு எதற்கு? அதுவும் இப்போது எதற்கு என்று கேட்பது போல அன்றும் கேட்டவர்கள் இருந்தனர். எனவே அவர்களுக்கும் திராவிடர் கழகமோ தந்தை பெரியாரோ பதில் கூற வேண்டாத அளவுக்குத் திரு.வி.க. கேள்வியையும் கேட்டுப் பதிலையும் கூறி னார். இத்தகைய அருமையான விளக்கம் கூறிய திரு.வி.க. இன்றும் திராவிடர் மனத்தில் இருக்கிறார். எண்ணத்தில் என்றும் நிறைந்து நிற்கிறார்.
இன்று சிலர் கேட்கிறார்கள், திராவிட நாடு பிரிந்தால் தனித்து வாழமுடியுமா? என்று. நிச்சயமாகத் தனித்து வாழமுடியும். இன்றைய நிலையைக் காட்டிலும் பன்மடங்கு உயர்நிலையில் வாழ முடியும் என்று அதி திடமாகச் சொல்வேன். இந்நாட்டில் எதுதான் இல்லை? மலைகள் இல்லையா?  இருபுறமும் கிழக்குத் தொடர்ச்சி மலையும், மேற்குத் தொடர்ச்சி மலையும் இருக் கின்றனவே. செழிப்பான நெல் விளையும் நிலப் பரப்பில்லையா?  எரிமலைச் சாம்பல் நிரம்பிய இயற்கை வளம் பொருந்திய மண்ணல்லவோ இந்நாட்டு மண். அதில் என்ன விளையாது?  ஆறுகள் இல்லையா?  இந்நிலப் பரப்பை வளம் செய்ய, அதற்கும் குறைவில்லாத வகை யில் கோதாவரியுண்டு, கிருஷ்ணா வுண்டு, காவிரி உண்டு, பாலாறு உண்டு, பெண்ணையாறு உண்டு, இன்னும் எத்தனை வேண்டும்?  உலோகங்கள் இல்லையா?  கோலார் தங்க வயல்கள் எந் நாட்டைச் சேர்ந்தவை?  அய்தராபாத்தி லுள்ள மணிமலைகள் எந்நாட்டைச் சேர்ந்தவை? அந்த மணிமலைகளை வெட்டி எடுப்போமானால் இந்த அகண்ட உலகத்தையே விலைக்கு வாங்கிடலாமே, இந்நாட்டில் என்ன இரும்புக்குத்தான் குறைவா?  கவலையோடு பூமியைத் தோண்டிப் பார்த்து ஆராய்ச்சி நடத்தி வந்தால் இந்நாட்டில் எதுதான் கிடைக் காது என்று நினைக்காதீர்கள். எல்லாம் கிடைக்கும்.! கிடைக்காவிட்டால்தான் என்ன?  மற்ற மேலை நாடுகளைப் போலக் கிடைத்த உலோகத்தைக் கொண்டு  நமக்குத் தேவையான உலோகத்தைச் செய்து கொள்ள முடியாதா?  எல்லா உலோகப் பொருள்களும் ஒரே மூல தாதுப் பொருள்களிலிருந்து தான் உண்டா கின்றன. எனவே ஒன்றோடு ஒன்றைச் சேர்ப்பதன் மூலமோ அல்லது ஒன்றிலி ருந்து மற்றொன்றைப் பிரிப்பதன் மூலமோ எப்பொருளையும் உண்டாக்கிக் கொள்ள முடியும் விஞ்ஞான முறைப்படி என்று கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, நாம் என்ன சோடைகளா? ஒரு பொருளை வேறு நாட்டை எதிர்பார்த்துக் கொண்டிருக்க.
இவ்வளவு இயற்கை வளங்கள் நிறைந்த நாட்டில் வாழும் எங்களுக்குப் பிழைக்கும் வழிதானா தெரியாது? வாணிபம் செய்யத் தெரியாதா?  அல்லது துறைமுகங்கள்தான் இல்லையா?  எங் களுக்கு  முதன் முதலாகக் கப்பல் வழி வாணிபம் நடத்தியவர்கள் திராவிடர் களாயிற்றே. உலகம் உணரா முன்னமே உள்நாட்டு நகரத்திற்கும் கடற்கரையோர நகரத்திற்கும் வெவ்வேறு பெயர் கொடுத்து வழங்கியவர்களாயிற்றே தமிழர்கள். பட்டினமும், பட்டணமும் என்கிற இரு சொற்கள் எத்தனையோ காலமாகத் தமிழ்நாட்டில் வெவ்வேறு பொருளுடன் வழங்கி வருகின்றனவே. ஆங்கிலம் வந்த பிறகு இவ்வேற்றுமை கூடச் சிலருக்கு மறைந்து போயிருக்கும். சென்னைப் பட்டினம் என்பதற்குப் பதிலாக சென்னைப் பட்டணம் என்று தானே பலர் வழங்கி வருகின்றனர். ஹிந்தி வருமுன்னரே இந்நாடென்றும் ஹிந்தி வந்த பிறகு என்னவாகும் என்று சொல்லவும் வேண்டுமோ?  இன்று விசாகப்பட்டினம் என்கிற ஒரு இடத்தில் தான் கப்பல்தளம் இருக்கிறதென்றால் திராவிட நாடு பிரிவினையானதும் எத்தனையோ விசாகைகளைக் காண முடியுமே.
எத்தனையோ வழிகளில் இந்நாட்டில் தலை விரித்தாடிக் கொண்டிருக்கும் தரித்திரத்தை எங்களால் போக்கிக் கொள்ள முடியுமே. தனித்தியங்கும் நாடுகளைப் பிரித்துத் தனியாக இயங்கும்படிச்செய்து ஏதோ சொற்ப அதிகாரங்களை மட்டும் மேலெழுந்த வாரியாக மத்திய சர்க்காருக்கு வைத்துக் கொள்வதைவிட்டு இமயம் முதல் குமரி வரை ஒரே ஆட்சியின் கீழ் கொண்டு வரவேண்டுமென்று பாடுபட்டு வரு கிறார்களே?  அது சாத்யமா?  யோசித்துப் பார்த்தார்களா?  வங்காளத்தை ஒன் றாக்க முடிகிறதா?  அய்க்கிய மாகாண மக்களுக்குச் சமாதானம் சொல்ல முடிகிறதா?  எங்கே இருக்கிறது ஒற்று மையும் ஒருமைப்பாடும். காங்கிரஸ் காரர்களிடையேயாவது காணப்படுகிறதா ஒருமைப்பாடு?  இவர்கள் கூறும் இந்தி யாவில் ஒருமைப்பாடு இருக்கிறதா?

நேற்றைய தொடர்ச்சி...
அடுக்கடுக்காக அன்று வினாக் களைத் தொடுத்தார் திரு.வி.க. இன்று பிரிவினை என்பதிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகமும், திரா விடர் கழகமும் விட்டுவிட்டு, எவ்வளவோ தொலைவு இந்திய ஒருமைப்பாட்டை ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழல் அடுக்கடுக்காக பாகிஸ்தான், சீனப்போர் ஆக்கிரமிப்பு எல்லைத் தாக்குதல், பயங்கரவாதம், தீவிரவாதம் ஆகியவற்றின் பயனால் ஏற்பட்டது.
எனவேதான் அண்ணா அவர்கள் 1962இல் திராவிட நாடு பிரிவினைக் கொள்கையினைக் கைவிட்டது என்பதை அறிவித்தார். அப்போதும் கூட அண்ணா அவர்கள் பிரிவினைக் கோரிக்கையை ஒத்தி வைத்திருப்பதாகவும், பதிலாக மாநில சுயாட்சி மய்யத்தில் கூட்டாட்சி எனும் கொள்கையை வலியுறுத்துவ தாகவும், பிரிவினைக்கு எழுப்பிய கோரிக்கையின் நியாயம் தொடர்ந்து இருந்து வருவதாகவும் வலியுறுத்தியது நினைவு கூரத் தக்கதாகும்.
இன்றைய நாளில் திராவிட இயக்க நூற்றாண்டு விழாக் கொண்டாடுவது திராவிட நாட்டுப் பிரிவினை கோரிய தாகக் கருதுவது தவறு. ஆனால் அதே வேளையில் திராவிட மக்களின் எழுச் சியை, இழிநிலை இன்றும் இருப்பதைச் சுட்டிக் காட்டுவதோடு, வாழ்வில் உயரக் கல்வியில், தொழிலில் கவனத்தைச் செலுத்த வழிகாட்டுவதே ஆகும்.
திரு.வி.க. தமது தொழிலாளர் ஆதரவுக் கோணத்தில் அன்றைய இந்திய தேசியக் காங்கிரசை விமர்சித்தார். காங்கிரசை விட்டுப் பழம்பெரும் தேசியத் தலைவர்கள், காங்கிரசை உடல், பொருள், உழைப்பு ஆகியன அனைத்தும் கொடுத்து உயர்த்திய உழைத்த தந்தை பெரியார், தாம் காங்கிரசை விட்டு விலகியது ஏன் என்பதற்கான விளக்கத்தையும் தெரி வித்தது இன்றைய நாள் இளைய தலை முறையினர் தெரிந்து கொள்ள வேண்டிய, அறிந்து கொள்ள வேண்டிய வரலாற்று உண்மைகள்.
நான் பன்னெடுங்காலமாகப் பாடு பட்டு வளர்த்த காங்கிரஸ் இன்று சாகும் நிலைக்கு வந்து விட்டதே எங்கள் கண் முன்னாலேயே. எத்துணை பெரியவர்கள் காங்கிரசின் வளர்ச்சிக்குக் காரணமாய் இருந்தார்கள். பெசன்ட் என்ன, சுரேந்திரநாத் பேனர்ஜி என்ன, தாதாபாய் நவ்ரோஜி என்ன, ஒரு திலகர் என்ன, ஒரு கோகலே என்ன, ஒரு காந்தியார்தான் என்ன, இவர்கள் வளர்த்த காங்கிரசார் இன்று நம் கண்முன் காணப்படுகிறது. தோழர்களே! ஆகஸ்டு வரைதான் எனக்குக் காங்கிரசின் மீது பற்றுதல் இருந்தது. ஆகஸ்டு 15ஆம் தேதி அதிகாரம் மாறிய அன்றே என் மனமும் மாறி விட்டது. சுதந்திரம் வந்து விட்ட தாகக் கருதப்பட்ட அன்றைய தினமே காங்கிரஸ் கலைக்கப்பட்டிருக்க வேண் டும். கலைக்கப்பட்டிருந்தால் எவ்வளவோ நன்றாய் இருந்திருக்கும். காங்கிரஸ் இவ்வளவு கீழ் நிலைக்கு வருவதைக் காண வேண்டியி ருந்திருக்காது. 40 ஆண்டுக் காலத்திற்கு மேலாக நாங்கள் உழைத்து உழைத்து வளர்த்து வந்த காங்கிரஸ், தொழிலாளர்களுக்குள்ள எல்லாக் குறைகளையும் போக்கும் என்ற நம்பிக்கையில் தொழிலாளர்களால் வளர்க்கப்பட்டு வந்த காங்கிரஸ், முடிவில் தொழிலாளர்களின் வயிற்றிலேயே அடிக்க ஆரம்பித்து விட்டதென்றால் அத்தொழிலாளர்களைக் காங்கிரசைப் பின்பற்றி நடக்கச் செய்த எங்கள் மனம் பொறுக்குமா? அடுத்துக் காங்கிரசில் இருந்த தங்கள் செல்வாக்கைக் குறித்துப் பேசும் செய்தி இது.
தோழர்களே! எனக்கும் பெரியாருக் கும் உள்ள நட்பின் பெருமையை நீங்கள் உள்ளபடி உணர்ந்திருக்க மாட்டீர்கள்.  நாங்கள்  இருவரும் சற்றேறக்குறைய ஒரே நேரத்தில் காங்கிரசில் சேர்ந்தோம். ஒரே நேரத்தில் காங்கிரசை விட்டு விலகி னோம். ஒரு முறை காஸ்மோபாலிடன் கிளப்பில்; நாங்கள் இருவரும் கூடித் தோழர் ஷண்முகம் செட்டியார் முன்னி லையில்  காங்கிரசிலிருந்து விலகிக் கொள்வதென்றும் மறுபடி இருவரும் கலந்து பேசிக் கொள்ளாமல் எப்போதும் அவ்வியக்கத்தில் சேர்வதில்லை என்றும் முடிவு செய்து கொண்டோம். அம்முடிவுப் படியேதான் நாங்கள் இதுவரையும் நடந்து வந்திருக்கிறோம். ஆகஸ்டு 15 ஆம் தேதிக்குப் பிறகு காங்கிரசை மறந்து விட்டுத் தொழிலாளர் இயக்கத்தையும் மறந்துவிட்டு ஒதுங்கி விட்டேன், பூரண ஓய்வுடன் இருக்க விரும்பி. அது சமயம் டி.எஸ்.எஸ். ராஜன் வாயிலாக எனக்கோர் அழைப்பு வந்தது. அதை நான் இயற்கையின் எச்சரிக்கையாகக் கருதிக் கொண்டேன். ஒதுங்கி இருந்த என்னை இத் துரோகி ஏன் அழைக்க வேண்டும் என்று ஆலோசித்தேன். ஏன் ஒதுங்கி யிருக்கின்றாய்? தொழிலாளர்கட்கு மீண்டும் பணி செய் என்று இயற்கை எனக்கு எச்சரிக்கை செய்ததாகவே நான் அதை எடுத்துக் கொண்டேன்.
மறுபடி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட் டேன். போராட்டக் காலத்தில், காங்கிரஸ் ஸ்தாபனம் எவ்வளவு பிற்போக்கு அடைந்து விட்டது என்று மீண்டும் கண்டேன். அத்தொழிலாளர் போராட்டத் தின் போது பலர் என்னை விட்டுப் பிரிந்தார்கள். பலர் கலங்கினார்கள். பெரியார் கலங்கினாரில்லை. வந் தார் என்னுடன். வீர உரையாற் றினார். அப்போராட்டம் இன்றும் முடிவடையாமல்தான் இருந்து கொண்டிருக்கிறது. திராவிடர் கழகம் தன் அறப்புரட்சியின் மூலம் வெற்றி பெறும்போதுதான் தொழி லாளர் வாழ்வு மலரும்.
ஆரியரும் திராவிடரும் குறித்துத் திரு.வி.க. குறிப்பிட்டதை இங்கே சுட்டிக் காட்டுதல் வேண்டும். எவ்வளவு எடுத் துக் கூறினாலும் ஆரியரும், திராவிடரும் ஒன்றென்று பிதற்றிக் கொண்டு வருகி றீர்களே! ஆராய்ச்சி நூல் எதையேனும் படித்துப் பார்த்ததுண்டா நீங்கள்? ஆரியக் கலை வேறு; திராவிடக் கலை வேறு; ஆரியப் பண்பு வேறு; திராவிடப் பண்பு வேறு என்பதை ஜெர்மன் ஆராய்ச்சியாளர் கள் கூட ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
திருக்குறன் ஒன்றே போதுமே ஆரி யத்தையும், திராவிடத்தையும் பிரித்துக் காட்ட. திருக்குறளில் அறம், பொருள், இன்பம் இம்மூன்றைப் பற்றித்தானே எழுதியிருக்கிறது. வீட்டைப் பற்றி மோட் சத்தைப் பற்றிக் குறிப்புக் கூடக் காட்ட வில்லையே திருவள்ளுவர்! திருவள்ளுவர் ஒன்றும் நாஸ்திகர் அல்லவே! இருந்தும் ஏன் மோட்சத்தைப் பற்றிப் பேச மறுத் தார்?  திருக்குறள் திராவிடப் பண்பை விளக்கும் நூல். எனவே ஆரியப் பண்பான மோட்சத்துக்கு அதில் இடம் இருக்கக் கூடாது என்பதால்தானே!
வீட்டிற்கு எல்லை கட்டியவனாயிற்றே தமிழன்! அறம், பொருள், இன்பம், இவற் றோடு தன் வாழ்க்கைக்கு எல்லையைத் தீர்மானித்துக் கொண்டவனாயிற்றே தமிழன்! தொல்காப்பியர் முதல், திருவள் ளுவர் ஈராக எந்தத் தமிழனும் இவற்றைத் தாண்டி ஏதும் இருப்பதாகச் சொல்ல வில்லையே! கேபிடல் என்னும் உலகம் போற்றும் பொருளாதாரத் தத்துவ நூலை எழுதிய கார்ல் மார்க்ஸ் என்பவரும் இதைத்தானே கூறியுள்ளார்?   திருவள் ளுவர் கூறிய அறம், பொருள், இன்பம் இவற்றுடன் நின்றவரை தமிழர்கள் தம் நாட்டை இழந்தாரில்லை. நாகரிகத்தில் அந்த வளர்ச்சியில், எதிலும் குறைந் தாரில்லை.
- நேற்றைய தொடர்ச்சி...
தமிழர்கள் ஏன் தாழ்ந்தனர்?  ஏ! தாழ்ந்த தமிழகமே!  என்று அண்ணா முன்னர் எழுதினார். இப்போது தமிழர் கள் ஏன் தாழ்ந்தார்கள் என்பதற்குப் பலரும் விடை தேடிக் கொண்டு இருக் கின்றனர். ஆனால் தமிழ்த் தென்றல் 60 ஆண்டுளுக்கு முன்பே தந்தை பெரியார் வழியில், ஆம்! தந்தை பெரியார் வழியில் சிந்தித்து அற்புதமாக விடை கண்டு விட்டார். ஆரியத்தை நம்பியதால் தமிழன் அழிவுற்றான்,  ஆரிய மாயையில் சிக்கிய தால் அழிவுற்றான், ஆரியச் சூழ்ச்சியால் பலியானான், ஆரியத்தினால் வீழ்ந்தான் என்பதை எவ்வளவு துல்லியமாகத் தமிழ்த் தென்றல் எடுத்துரைக்கிறார் பாருங்கள்.
ஆரியத்தின் மோட்சலோக பித்த லாட்டத்தை ஏற்று இவ்வுலக வாழ்க் கையே வீண் என்றும், அறம்,பொருள், இன்பம் இவை யாவற்றையும் துச்சமெனத் தள்ளிவிட்டு மோட்ச லோகத்தை எதிர் பார்த்து நிற்பதே பேரின்பம் என்றும், கருதத் துவங்கிய திலிருந்துதானே தமிழர்கள் தாழ்ந்தனர்? தமிழகம் தாழ்ந்தது? வேதாந்தம் தமிழ்நாட்டில் வேர் விடத் தொடங்கிய பிறகுதானே தமிழன் சாகத் தொடங்கினான்?  தமிழன் தன்மான உணர்ச்சி அற்றுப் போகக் காரணமாயிருந்தது இவ்வுலக வாழ்வே ஒரு மாயை (ஐடடரளடி)  என்கிற ஆரிய தத்துவம்தானே?   ஆரிய தத்துவத்தின் அடிப்படை இதுவல்ல என்று யாராவது கூறமுடியுமா?  திராவிட தத்துவம் இதற்கு மாறுபட்டதல்ல என்றாவது இந்த மந்திரிகளால் எடுத்துக் காட்ட முடியுமா?
உலக வாழ்வு மாயை என்கிற ஆரிய தத்துவம் ஆட்சிக்கு வந்ததும் உலக வாழ்க்கையே மாய்ந்து போயிற்றே  இந்நாட்டைப் பொறுத்தவரை! உயிருள்ள ஒரு பொருளில் கூட மலர்ச்சியைக் காண முடியவில்லையே?   மனிதனே கருகி விட்டான் என்றால் மற்றவை கருகாமலா இருக்கும்?  இந் நாட்டைப் பொறுத்தவரை எல்லாம் மாயை என்ற அளவில்அன்பும் அறனுங்கூட மாய்ந்து விட்டனவே ஆரிய ஆதிக்கத்தால்! அறமும் அன்பும் இன்றேல் பின் எவைதான் இருக்கும்?  உலகில் எவை, எவை இல்லையோ அவை யாவும் கற்பனைக் கைலாயத்திற்கே பறந்து போய்விட்டனவே. உலகமே உண்மை யிலே பாழாகிவிட்டதே!
திரு.வி.க. தந்தை பெரியாரை விட, பேரறிஞர் அண்ணாவை விட ஆரியத்தின் கொடுமை கண்டு பொங்குபவராகக் காணப்படுகிறார். அதனால்தான் ஆரிய மாயை அகற்றித் திராவிடத்தில் மறுபடியும் புத்துணர்ச்சியை உண்டாக்கப் பாடுபட்டு வரும் திராவிடர் கழகத்திற்கு நீங்கள் யாவரும் தன்மான தமிழ்மகன் ஒவ்வொருவனும் உரிமை வேட்கை உதவி கொண்ட ஒவ்வொரு தொழிலாளர் தோழரும் உதவி புரிதல் வேண்டாமா?  என்கையில் இன்றைக்குத் திரு.வி.க. மேடையேறித் திராவிடர் கழகம் போற்றி உரைப்பதாகத் தோன்றுகிறது.
மேலும் அவர் கூறும் இவை இன்றும்  திராவிடர் கழகத்திற்குக் கூறும் அறி வுரையாக விளங்குகிறது. நாம் மற்ற தெலுங்கு, கன்னட, மலையாள பிரதேசங் களிலும் நமது கொள்கைகளைப் பிரச் சாரம் செய்ய வேண்டும். இப்போது வடமொழியின் ஆதிக்கத்தை உணர்ந்து அதை ஒழிக்க முயற்சி நடந்து வருகிறது. நாமும் சேர்ந்து பிரச்சாரம் செய்வோ மானால் விரைவில் வடமொழிக் கலப்பு எடுபட்டு அவர்கள் தாமும் தூய தமிழர்கள்தான், திராவிடர்கள்தான் என்பதை உணர்வார்கள். அவர்கள் பந்தமும் நமது ரத்தமும் ஒன்றுதான். அவர்களுடைய பழக்க வழக்கங்களும், ஆசா பாசங்களும் நம்முடைய பழக்க வழக்கங்களும், ஆசா பாசங்களும் ஒன்றாகத்தான் இருந்து வருகின்றன. ஆகவே நாம் நெடுநாள் பிரிந்திருக்க முடியாது, பிறர் என்னதான் சூழ்ச்சி செய்தபோதிலும். எனவேதான் நாம் சில எல்லையைக் குறித்துக் கொள்ளவில்லை. பரந்த உணர்ச்சிகள்தான் நமக்கு வேண்டும். இந்த வரையில் திராவிடர் கழகத்தின் போக்கு மிகவும் பாராட்டுக் குரியதேயாகும்.
கடந்த ஆண்டு வைக்கத்தில் தமிழர் தலைவர் தலைமையில் கூடினோம். அங்கே மலையாள நாட்டில் பெரியாரின் கருத்து விதைகள் விதைக்கப்பட்டன. இந்த ஆண்டு விசாகப்பட்டினத்தில் தமிழர் தலைவருக்கு ஆந்திரர்கள் அளித்த உற்சாக வரவேற்பு, தெலுங்கு மொழியில் பெரியாரைச் சுயமரியாதை இயக்கத்தை வாழ்த்தி முழங்கிய உணர்ச்சி பூர்வமான கோஷம் திரு.வி.க. அன்று சொன்னது போல் மெல்ல எல்லைக் கற்களை அகற்றிப் பரந்த பகுத் தறிவு நிலம் உருவாகத் துணை புரிகிறது. விமான நிலையத்திலிருந்து விசாகப் பட்டினத்தில் விழா நடைபெற்ற இடம் வரை பெரியார் இயக்கக் கொடி பறந்தது என்பது நினைத்துக் கூடப் பார்க்க இய லாத காட்சி. பெரியார் உலக மயமாவதற்கு முன் இந்திய மயமாவதின் ஆதாரம்தான் இது. திரு.வி.க.வின் துணிச்சல் இருக் கிறதே, அது தந்தை பெரியாரின் துணிச் சலுக்கு ஈடாகப் பளிச்சிடுகிறது. எப்படி என்று பாருங்கள் இதை. ஆரியர்களைப் பற்றிய திரு.வி.க.வின் வாக்குமூலம் இது.
ஆரியர்கள் மனிதர்கள் அல்லர். ஒரு நாகரிகமற்ற மனிதத் தன்மையற்ற காட்டுமிராண்டிகள்.
இன்று திராவிட இயக்கம் பெற்ற வளர்ச்சி, செல்வாக்கினால், ஆரியர் களைப் பார்த்து அளவின்றிப் பழிக்க, அவர்களின் பொல்லாங்குத் தனத்தை எடுத்துரைக்கலாம். ஆனால் 60 ஆண்டு களுக்கு முன் அது எளிதல்லவே.
ஆலய வழிபாடா, அரசுப் பதவியா, சமூக வாழ்க்கையா எங்கும் சர்வமும் பார்ப்பன மயமாயிருந்த வேளையில் அவர்களைப் பார்த்துக் காட்டுமிராண் டிகள், அதுவும் நாகரிகமற்ற, மனிதத் தன்மை அற்ற காட்டுமிராண்டிகள் என்று கூறவேண்டுமானால் எத்தனை, அல்லது இலக்கணப்படி கூறுவதாயின் எவ்வளவு துணிவு இருக்கவேண்டும்?  இனப் போராட்டம் என்பது, சமூகப் போராட்டம் என்பது அதிலும் ஆரியத்தைப் பார்த்துப் போராட்டம் நடத்துவது என்பது மிகக் கஷ்டமான வேலைதான் என்று உணர்ந்து கூறும் வகையில்தான் அவ்வாறு அவர்களை விளித்தார்.
வாய்மையும், தூய்மையும் நிறைந் துள்ள திராவிடர்கள் அத்தகைய காட்டு மிராண்டிகளுடன் போராட்டம் நடத்துவது கஷ்டம்தான். என் செய்வது?  போராட்டம் நடத்தித்தான் ஆகவேண்டும்! திராவிட சமுதாயம் மீண்டும் தம் இன்ப வாழ்க் கையை எய்த வேண்டுமானால், இப்படிப் பேசப் பேச எங்கெங்கோ போய்க் கொண்டே இருக்கும், சிலர் திராவிட நாடு வந்துவிட்டால் எல்லோரும் நாஸ்திகர் களாக இல்லை இல்லை என்று அடித் துக் கூறுகிறார்.
திராவிடருக்கு வேண்டிய பண்பாகத் திரு.வி.க. வலியுறுத்துவது இது:
நான் ஒரு பரம ஏழைதான் என்கிற போதிலும், ஒரு போதும் என்னுடைய உரிமை உணர்ச்சியை யாருக்காகவும் விட்டுக் கொடுத்தேனில்லை. என் உணர்ச்சியை யாருக்கும் எதற்காகவும் அடிமைப் படுத்தினேன் இல்லை. திரா விடன் ஒவ்வொருவனுக்கும் இவ்வுணர்ச்சி இருத்தல் அவசியம். திராவிட நாட்டை மாற்றியமைக்கும் சக்தி திராவிடப் பெண்களிடம்தான் உள் ளது. அவர்கள்  மனது வைத்தால் இந் நாட்டில் ஒரு காந்தியல்ல, 1000 காந்தி களை, ஒரு பெரியாரை அல்ல, லட்சக் கணக்கான பெரியார்களை உண்டாக்க முடியும். மேலும் அவர், திராவிடம் உயரவேண்டுமானால் உங்கள் வாழ்க்கை வளம்பட வேண்டுமானால், நீங்கள் திராவிடர் கழகத்தைத்தான் பின் பற்றி நடக்க வேண்டுமே ஒழிய, வடக்கு திக்கை எதிர் பார்த்தால் கைலாயத்திற்குத்தான் வழி காட்டப்படும்.
திரு.வி.க. எதையும் மேலெழுந்த வாரியாகப் பார்ப்பவரோ, பேசுபவரோ அல்லர். அவர் ஆற்றிய உரை முத்துக்கள், திரு.வி.க. எனும் ஆழ்கடலின் ஆழத்து இருந்து கிடைத்தவை.
திராவிட மக்களுக்கு நல்வழி காட்ட, அவர்கள் தம் அடிமை வாழ்க்கையை மாற்றி இன்ப வாழ்வு அமைத்துக் கொடுக்க இயற்கை தோற்றுவித்த பெரியார்தான் நமது ஈரோட்டுப் பெரியார் ஆவார். இயற்கையின் அருமைப் புதல்வர் இவர். அதனால்தான் காந்தியையும் மிஞ்சிய அளவுக்குச் சமுதாய சீர்திருத் தக்காரராகவும் பெரியார் விளங்குகிறார் என்று முடித்தார்.
-விடுதலை,11-16.3.12

தீபாவளியா? திராவிடர்க்கு வலியா? தந்தை பெரியார்


இவ்வருஷத்திய தீபாவளிப் பண்டிகை சமீபத்தில் வரப்போகின்றது. பார்ப்பனரல் லாத மக்களே! என்ன செய்யப் போகின்றீர்கள்? அப்பண்டிகைக்கும் எங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்று சொல்லிவிடப் போகின் றீர்களா? அல்லது அப்பண்டிகையை கொண்டாடப் போகின்றீர்களா?  என்பது தான் நீங்கள் என்ன செய்யப் போகின் றீர்கள் என்று கேட்பதின் தத்துவமாகும். நண்பர்களே சிறிதும் யோசனையின்றி, யோக்கியப் பொறுப்பின்றி, உண்மைத் தத்துவமின்றி, சுயமரியாதை உணர்ச்சி யின்றி சுயமரியாதை இயக்கத்தின்மீது வெறுப்புக்கொள்ளுகின்றீர்களே யல்லாமல், மற்றும் சுயநலப் பார்ப்பனர் வார்த்தைகளையும், மூடப்பண்டிதர்களின் கூக்குரலையும், புராணப் புஸ்தக வியாபாரிகளின் விஷமப் பிரசாரத்தையும், கண்டு மயங்கி அறிவிழந்து ஓலமிடுகின் றீர்களே அல்லாமல் மேலும் உங்கள் வீடுகளிலும், அண்டை அயல்களிலும் உள்ள கிழங்களுடையவும், அழுக்கு மூட் டைகளுடையவும் ஜீவனற்ற தன்மையான பழைய வழக்கம் பெரியோர் காலம் முதல் நடந்துவரும் பழக்கம் என்கின்றதான வியாதிக்கு இடங்கொடுத்துக்கொண்டு கட்டிப் போடப்பட்ட கைதிகளைப்போல் துடிக்கின்றீர்களே அல்லாமல் உங்கள் சொந்தப் பகுத்தறிவை சிறிதுகூட செலவழிக்கச் சம்மதிக்க முடியாத உலுத்தர்களாய் இருக்கின்றீர்கள்.
பணத்தையும், மானத்தையும் எவ் வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராயிருக்கின்றீர்கள். சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் எவ்வளவு வேண்டு மானாலும் விட்டுக்கொடுக்கத் தயாரா யிருக்கின்றீர்கள். ஆனால், உங்கள் பகுத்தறிவை சிறிதுகூட செலவழிக்கத் தயங்குகிறீர்கள். அது விஷயத்தில் மாத் திரம் ஏன் வெகு சிக்கனம் காட்டுகின் றீர்கள்? இந்நிலையிலிருந்தால் என்றுதான் நாம் மனிதர்களாவது? பார்ப்பனரல்லா தார்களில் சில பண்டிதர்கள் மாத்திரம் வயிறு வளர்த்தால் போதுமா? புராண புஸ்தக வியாபாரிகள் சிலர் மாத்திரம் வாழ்ந்தால் போதுமா? கோடிக்கணக்கான மக்கள் ஞானமற்று, மானமற்று, கால் வயிற்றுக் கஞ்சிக்கும் வகையற்று அலை வதைப் பற்றிய கவலை வேண்டாமா? என்று கேட்கின்றோம்.
புராணக் கதைகளைப்பற்றி பேசினால் கோபிக்கிறீர்கள். அதன் ஊழலை எடுத்துச் சொன்னால் காதுகளைப் பொத்திக் கொள்ளுகின்றீர்கள். எல்லாருக்கும் தெரிந்ததுதானே; அதை ஏன் அடிக்கடி கிளறுகின்றீர்கள். இதைவிட உங்களுக்கு வேறு வேலை இல்லையா என்று கேட் கின்றீர்கள். ஆனால், காரியத்தில் ஒரு நாளைக்குள்ள அறுபது நாழிகை காலத் திலும் புராணத்திலேயே மூழ்கி மூச்சு விடுவது முதல் அதன்படியே செய்து வருகின்றீர்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் புராணப் புரட்டை உணர்ந்தவர்களா? புராண ஆபாசத்தை வெறுத்தவர்கள் ஆவார்களா? நீங்களே யோசித்துப் பாருங்கள். பண்டித, பாமர, பணக்கார ஏழை சகோதரர்களே!
இந்த மூன்று மாத காலத்தில் எவ்வளவு பண்டிகை கொண்டாடினீர்கள். எவ்வளவு யாத்திரை செய்தீர்கள், இவற்றிற்காக எவ்வளவு பணச்செலவும் நேரச்செலவும் செய்தீர்கள், எவ்வளவு திரேக பிரயாசைப் பட்டீர்கள் என்பதை யோசித்துப் பார்த் தால் நீங்கள் புராணப் புரட்டை உணர்ந்து புராண ஆபாசத்தை அறிந்தவர்களா வீர்களா? வீணாய் கோவிப்பதில் என்ன பிரயோசனம்? இந்த விஷயங்களை சொல் லுகின்றவர்கள் மீது ஆத்திரம் காட்டி அவர்களது கண்ணையும், மூக்கையும், தாடியையும், தலைமயிரையும் பற்றி பேசுவதால் என்ன பயன்? நீ ஏன் மலத்தில் மூழ்கி இருக்கின்றாய் என்றால் அதற்கு நீ தமிழ் இலக்கணம் தெரியாதவன் என்று பதில் சொல்லிவிட்டால் மலத்தின் துர் நாற்றம் மறைந்து போகுமா?
அன்பர்களே! சமீபத்தில் தீபாவளிப் பண்டிகை என்று ஒன்று வரப்போகின்றது. இதைப் பார்ப்பனரல்லாத மக்களில் 1000-க்கு 999 பேர்களுக்கு மேலாகவே கொண்டாடப் போகின்றீர்கள். பெரிதும் எப்படிக் கொண்டாடப்போகின்றீர்கள் என்றால், பொதுவாக எல்லோரும் - அதாவது துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர்களும், பண்டிகையை உத் தேசித்து துணி வாங்குவது என்பது ஒன்று; மக்கள், மருமக்களை மரியாதை செய்வ தற்கென்று தேவைக்கும் மேலானதாகவும், சாதாரணமாக உபயோகப்படுத்துவதற்கு ஏற்றதல்லாததானதுமான துணிகள் வாங் குவது என்பது இரண்டு; அர்த்தமற்றதும், பயனற்றதுமான வெடிமருந்து சம்பந்தப் பட்ட பட்டாசு வகைகள் வாங்கிக் கொளுத் துவது மூன்று; பலர் இனாம் என்றும், பிச்சை என்றும் வீடுவீடாய் கூட்டங்கூட்டமாய்ச் சென்று பல்லைக்காட்டிக் கெஞ்சி பணம் வாங்கி அதைப் பெரும்பாலும் சூதிலும், குடியிலும் செலவழித்து நாடு சிரிக்க நடந்துகொள்வது நான்கு; இவற்றிற்காக பலர் ஊர்விட்டு ஊர் பிரயாணம் செய்து பணம் செலவழிப்பது அய்ந்து; அன்று ஒவ்வொரு வீடுகளிலும்  பதார்த்த வகைகள் தேவைக்கு மிகுதியாகச் செய்து அவை களில் பெரும் பாகம் கண்டவர்களுக்குக் கொடுப்பதும், வீணாக்குவதும் ஆறு; இந்தச் செலவுக்காகக் கடன்படுவது ஏழு. மற்றும் இதுபோன்ற பல விஷயங்கள் செய்வதன் மூலம் பணம் செலவாகின்றது என்பதும், அதற்காகக் கடன்படவேண்டியிருக்கின்றது என்பதுமான விஷயங்களொருபுற மிருந்தாலும், மற்றும் இவைகளுக்கெல்லாம் வேறு ஏதாவது தத்துவார்த்தமோ, சைன்ஸ் பொருத்தமோ சொல்லுவதானாலும், தீபாவளிப் பண்டிகை என்றால் என்ன? அது எதற்காகக் கொண்டாடப்படுகிறது என் கின்றதான விஷயங்களுக்கு சிறிதுகூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம். ஏனெ னில், அது எப்படிப் பார்த்தாலும் பார்ப் பனியப் புராணக் கதையை அஸ்திவார மாகக் கொண்டதாகத்தான் முடியுமே ஒழிய மற்றபடி எந்த விதத்திலும் உண்மைக்கோ, பகுத்தறிவிற்கோ, அனுபவத்திற்கோ சிறிதும் ஒத்ததாக இருக்கமுடியவே முடி யாது. பாகவதம், இராமாயணம், பாரதம் முதலிய புராண இதிகாசங்கள் பொய் என்பதாக சைவர்கள் எல்லாரும் ஒப்புக்கொண்டாய்விட்டது. கந்த புராணம், பெரிய புராணம் முதலியவைகள் பொய் என்று வைணவர்கள் எல்லோரும் ஒப்புக் கொண்டாய் விட்டது. இவ்விரு கூட்டத் திலும் பகுத்தறிவுள்ள மக்கள் பொதுவாக இவையெல்லா வற்றையும் பொய்யென்று ஒப்புக்கொண்டாய் விட்டது. அப்படி இருக்க ஏதோ புராணங்களில் இருக்கின்ற கதைகளைச் சேர்ந்த பதினாயிரக் கணக்கான சம்பவங்களில் ஒன்றாகிய தீபாவளிப் பண்டிகைக்காக மாத்திரம் மக்கள் இந்த நாட்டில் இந்தக் காலத்தில் இவ்வளவு பாராட்டுதலும், செலவு செய்தலும், கொண் டாடுதலும் செய்வ தென்றால் அதை என்ன வென்று சொல்ல வேண்டும் என் பதை வாசகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
தீபாவளிப் பண்டிகையின் தத்துவத்தில் வரும் பாத்திரங்கள் 3. அதாவது நரகாசூரன், கிருஷ்ணன், அவனது இரண்டாவது பெண் சாதியாகிய சத்தியபாமை ஆகியவை களாகும். எந்த மனிதனாவது கடுகளவு மூளை யிருந்தாலும் இந்த மூன்று பேரும் உண்மையாய் இருந்தவர்கள் என்றாவது, அல்லது இவர்கள் சம்பந்தமான தீபாவளி நடவடிக்கைகள் நடந்தவை என்றாவது, அவற்றிற்கும் நமக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டு என்றாவது, அதற்காக நாம் இம் மாதிரியான ஒரு பண்டிகை தீபாவளி என்று கொண்டாட வேண்டுமென்றாவது ஒப்புக் கொள்ள முடியுமா என்று கேட்கின்றோம்.
பார்ப்பனரல்லாதார்கள் தங்களை ஒரு பெரிய சமுகவாதிகளென்றும், கலைகளிலும் ஞானங்களிலும் நாகரிகங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும் தட்டிப்பேச ஆளில்லாவிடங்களில் சண்டப் பிரசண்ட மாய்ப் பேசிவிட்டு எவனோ ஒரு மூடனோ அல்லது ஒரு அயோக்கியனோ காளைமாடு கண்ணு (கன்றுக்குட்டி) போட்டிருக்கின்றது என்றால் உடனே கொட்டடத்தில் கட்டிப் பால் கறந்து வா என்று பாத்திரம் எடுத்துக் கொடுக்கும் மடையர்களாகவே இருந்து வருவதைத்தான் படித்த மக்கள் என்பவர் களுக்குள்ளும் பாமர மக்கள் என்பவர் களுக்குள்ளும் பெரும்பாலும் காண்கி றோமே யொழிய காளை மாடு எப்படி கண்ணு போடும் என்று கேட்கின்ற மக் களைக் காண்பது அரிதாகவே இருக்கின்றது. மற்றும் இம்மாதிரியான எந்த விஷயங் களிலும் கிராமாந்தரங்களில் இருப்பவர் களைவிட,  பட்டணங்களில் இருப்ப வர்கள் மிகுதியும் மூடத் தனமாகவும். பட்டணங்களில் இருப்பவர்களைவிட சென்னை முதலான பிரதான பட்டணங் களில் இருப் பவர்கள் பெரிதும் மூட சிகாமணிகளாகவும் இருந்து வருவதையும் பார்க்கின்றோம். உதாரணமாக தீபாவளி, சரஸ்வதி பூசை, தசரா, பிள்ளையார் சதுர்த்தி, பதினெட்டு, அவிட்டம் முதலிய பண்டிகைகள் எல்லாம் கிராமாந்தரங் களைவிட நகரங்களில் அதிகமாகவும். மற்ற நகரங்களை விட சென்னையில் அதிகமாகவும் கொண்டாடுவதைப் பார்க்கின்றோம். இப்படிக் கொண்டாடும் ஜனங்களில் பெரும்பான்மையோர் எதற்காக. ஏன் கொண்டாடுகின்றோம் என்பதே தெரியாத வர்களாகவே யிருக்கின்றார்கள். சாதாரண மாக மூடபக்தியாலும் குருட்டுப் பழக்கத் தினாலும் கண்மூடி வழக்கங்களைப் பின்பற்றி நடக்கும் மோசமான இடம் தமிழ்நாட்டில் சென்னையைப் போல் வேறு எங்குமே இல்லை என்று சொல்லி விடலாம். ஏனெனில், இன்றைய தினம் சென்னையில் எங்கு போய்ப் பார்த்தாலும் ஒவ்வொரு வீட்டுத் திண்ணையிலும் சரீரமில்லாத ஒரு தலைமுண்ட உருவத்தை வைத்து அதற்கு நகைகள் போட்டு பூசைகள் செய்து வருவதும், வீடுகள் தோறும் இரவு நேரங்களில் பாரத இராமாயண காலட்சேபங்களும், பெரிய புராணக் காலட்சேபங்களும், பொதுஸ்தா பனங்கள் தோறும் கதாகாலட்சேபங்களும் நடைபெறுவதையும் இவற்றில் தமிழ்ப் பண்டிதர்கள் ஆங்கிலம் படித்த பட்ட தாரிகள் கவுரவப் பட்டம் பெற்ற பெரிய மனிதர்கள், பிரபலப்பட்ட பெரிய உத்தியோகஸ்தர்கள் மற்றும் பிரபுக்கள், டாக்டர்கள், சைன்ஸ் நிபுணர்கள், புரபசர்கள் முதலியவர்கள் பெரும் பங்கெடுத்துக் கொண்டிருப் பதையும் பார்க்கலாம். பார்ப்பனரல்லாதார்களில் இந்தக் கூட்டத்தார்கள்தான் ஆரியர் வேறு தமிழ் வேறு என்பாரும், புராணங் களுக்கும் திராவிடர்களுக்கும் சம்பந்த மில்லை என்பாரும், பார்ப்பனர் சம்பந்தம் கூடாது என்பாரும், பார்ப்பனரல்லாத சமுகத்தாருக்கு நாங்கள்தான் பிரதிநிதிகள் என்பாரும், மற்றும் திராவிடர்கள் பழைய நாகரிகத்திற்கு மக்களை அழைத்துச் செல்லவேண்டுமென்பாரும் பெரு வாரியாக இருப்பார்கள். ஆகவே, இம் மாதிரியான விஷயங்களில் படித்தவர்கள் பணக்காரர்கள் உத்தியோகஸ்தர்கள் என்கின்றவர்கள் போன்ற கூட்டத்தாரிடம் அறிவு, ஆராய்ச்சி சம்பந்தமான காரியங்கள் எதிர்பார்ப்பதைவிட, பிரசாரம் செய்வதைவிட உலக அறிவு உடைய சாதாரண மக்களிடம் எதிர்பார்ப்பதே, பிரசாரம் செய்வதே பயன் தரத்தக்கதாகும்.
எப்படியானாலும் இந்த வருஷம் தீபாவளிப் பண்டிகை என்பதை உண்மையான தமிழ் மக்கள் திராவிடர்கள் என்பவர்கள் கண்டிப்பாய் அனுசரிக் கவோ கொண்டாடவோ கூடாது என்றே ஆசைப்படுகின்றோம்.
குடிஅரசு - கட்டுரை - 16-10-1938
-விடுதலை,8.11.15

செவ்வாய், 1 டிசம்பர், 2015

நீதிக்கட்சி சமதர்மக்கட்சி! - தந்தை பெரியார்


தமிழர்களா? ஆந்திரர்களா?
பார்ப்பனர்கள் - பார்ப்பனர் அல்லாதார்கள் என்கின்ற பிரிவுகளையே மிக இழிவானது - வெறுக்கத்தக்கது என்று சொல்லி வந்த பார்ப்பனர்கள் இன்று ஜஸ்டிஸ் கட்சியை ஒழிப்பதற்காக, வெட்டிப் புதைப்பதற்கு ஆக தைரியமாய் ஆந்திரர்கள், - தமிழர்கள் என்கின்ற பிரிவினையை ஏற்படுத்திவிட்டு அந்தச் சாக்கில் பார்ப்பனரல்லாதார் உணர்ச்சியும், முயற்சியும்  அழிக்கப் பார்க்கின்றார்கள் என்றால் அது அச்சமுகத்துக்கு எவ்வளவு இழிவானதும் துணிச்சலானதுமான காரியம் என்று யோசிக்கும்படி வேண்டுகின்றோம்.

ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்ட பிறகு தமிழர்-களைவிட ஆந்திரர்கள் ஒன்றும் அதிகமாக சாதித்துக் கொண்டதாகச் சொல்லிவிட முடியாது.
உதாரணமாக ஆந்திரர் என்கின்ற முறையில் பனகல் ராஜாவுக்குப் பரம்பரை ராஜா பட்டம் கிடைத்திருந்தால் தமிழர் என்கிற முறையில் செட்டிநாட்டு ராஜாவுக்குப் பரம்பரை ராஜா பட்டம் கிடைத்திருக்கிறது. ஒரு ஆந்திரர் பனகல் முதல் மந்திரி ஆனால் ஒரு தமிழர் டாக்டர் சுப்பராயன் முதல் மந்திரி ஆனார்.
மந்திரிகளில் ஆந்திராவைச் சேர்ந்த 1. ஒரு பனகல், 2. ஒரு சர். பாத்ரோ, 3. ஒரு சர். கே.வி.ரெட்டி, 4. ஒரு முனிசாமி நாயுடு, 5. ஒரு பொப்பிலி ஆகிய அய்ந்து பேர் மந்திரி ஆகியிருந்தால் தமிழர்களில் 1. ஒரு சுப்பராயலு ரெட்டியார், 2. ஒரு சர் சிவஞானம் பிள்ளை, 3. ஒரு டாக்டர் சுப்பராயன், 4. ஒரு முத்தைய முதலியார், 5. ஒரு சேதுரத்தினம் அய்யர், 6. ஒரு பி. டி. ராஜன், 7. ஒரு குமாரசாமி செட்டியார் ஆகிய ஏழு பேர்கள் மந்திரிகளாகி இருக்கிறார்கள்.
ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்ட பிறகு நிர்வாக சபை கவுன்சில் மெம்பர்களில்கூட ஆந்திரர் என்கின்ற முறையில் ஒரு  சர். கே. வி. ரெட்டியார் லா மெம்பராயிருந்தால் தமிழர்களில் 1. ஒரு கே. சீனிவாசய்யங்கார், 2. ஒரு சர். உஸ்மான், 3. ஒரு சர். சி. பி. ராமசாமி அய்யர், 4. ஒரு கே. ஆர். வெட்கிட்டராம சாஸ்திரி, 5. ஒரு கிருஷ்ண நாயர், 6. ஒரு பன்னீர்செல்வம் ஆக 6 பேர் தமிழர்கள் நிர்வாக சபை மெம்பராயிருக்கிறார்கள்.
ஹைக்கோர்ட் ஜட்ஜிகளை எடுத்துக்-கொண்டாலும் சரி சர்விஸ் கமிஷனை எடுத்துக்கொண்டாலும் சரி. மற்றும் சர்க்காரால் நியமிக்கப்பட்ட சகல பதவிகள் உத்தியோகங்கள் ஆகியவற்றில் தமிழர்களை எந்தத் துறையிலும் ஆந்திரக்காரர்கள் மிஞ்சிவிடவில்லை என்பதை எவ்வளவு மூடனும் சுலபமாய் உணர முடியும்.
அன்றியும் ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாய் இதுவரை ஒரு ஆந்திரர்கூட கார்ப்பரேஷன் பிரசிடெண்டாகவோ மேயராகவோ ஆனதில்லை.
மேலும் இன்று எந்தத் தமிழனாவது மனம் துணிந்து தைரியமாய் தோழர் பொப்பிலி ராஜா அவர்கள் ஆந்திரக்காரர் என்றாலும் இந்த மந்திரி பதவியினால் பணம் சம்பாதிக்கவோ, அல்லது தனது குடும்பத்துக்கோ, எஸ்டேட்டுக்கோ, தனது சொந்தத் துக்கோ, ஏதாவது அனுகூலமோ நன்மையோ செய்து கொள்ளவோ வந்திருக்கிறார் என்று சொல்லக் கூடுமா என்று கேட்கின்றோம்.
சுயமரியாதைக் கொள்கையைப் பொருத்த வரையில்கூட டாக்டர் சுப்பராயன் அவர்கள் ஒன்று, ராஜா பொப்பிலி இரண்டு ஆகிய இரண்டு மந்திரிகள் தான் அவ்வியக்கத்தில் கலந்து கொண்டதை தெரிவிக்கவோ அல்லது சில கொள்கை களையாவது ஒப்புக்கொள்ளு-கின்றோம் என்று சொல்லவோ தைரியமாய் முன் வந்தார்களே ஒழிய மற்ற எந்த மந்திரியாவது, ராஜாவாவது வாயினால் உச்சரிக்கவாவது இணங்கினார்களா என்று கேட்கின்றோம்.
ஆகையால் தமிழ் மக்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்கிறவர்கள் இம்மாதிரியான பயனற்றதும் விஷமத்தனமானதுமான ஆந்திரர் தமிழர் என்ற தேசாபிமானப் புரட்டின் மேல் தங்கள் வெற்றிக்கு வழி தேடி அவமானமடை-யாமல் பார்ப்பனர் அல்லாதார் என்கின்ற விஷயத்திலேயே கண்ணும் கருத்துமாய் இருந்து அதில் வெற்றிபெற உழைக்க வேண்டுமென்று எச்சரிக்கை செய்கின்றோம்.
- பகுத்தறிவு - கட்டுரை - 16.12.1934
(பெரியார் களஞ்சியம், - குடிஅரசு, - தொகுதி 17, பக்கம் 412
* * *
நீதிக்கட்சி சமதர்ம கட்சியே!
ஜஸ்டிஸ் கட்சி சமதர்மக் கட்சி என்பதை ஞாபகத்தில் வையுங்கள். அது தோன்றிய பிறகுதான் இன்று பறையனும், பார்ப்பானும் ஒரு ஸ்தானத்தில் சரிசமமாய் வீற்றிருக்கிறார்கள். புலியும், பசுவும் ஒரு துறையில் தண்ணீர் குடிப்பதுதான் சமதர்ம ராஜ்ஜியம் என்பது பழங்கால பேச்சு. ஆனால், அது இன்று சர்க்கஸ் கொட்டகைகளில் நடைபெறுகிறது. அதனா-லேயே, நாம் அதை சமதர்ம ராஜ்ஜியம் என்று சொல்லுவதில்லை. ஆனால், இன்று பறையனும், பார்ப்பானும், சாஸ்திரியும், சங்கராச்சாரியும், சக்கிலியும் ஒரு பீடத்தில் அமர்கிறார்கள், ஒரு பதவியில் இருக்கிறார்கள். எப்படி? சவுக்கினாலா? ரிவால்வார் பயத்தினாலா? இல்லவே இல்லை.  தாங்களாகவே ஆசைப்-பட்டு அதுவும் பத்தாயிரம், இருபதாயிரம் செலவு செய்து கொண்டு, போய் அமர ஆசைப்-படுகிறார்கள். பறையனை பார்ப்பான் பிரபுவே! எஜமானே! என்று நின்று கொண்டு கெஞ்சிப் பேசுகிறான். இதெல்லாம் எப்படி ஏற்பட்டது? ஜஸ்டிஸ்கட்சி ஏற்படுவதற்கு முன் தாழ்த்தப்-பட்ட வகுப்புகளைப் பற்றிய ஒரு வார்த்தை-யாவது காங்கிரஸ் கூட்டத்தில், நடவடிக்கையில், ஆகாரத்தில், திட்டத்தில், கொள்கையில் இருந்ததா என்று யோசித்துப் பாருங்கள். ஆகவே, ஜஸ்டிஸ் கட்சி சமதர்ம கட்சி என்பதில் உங்களுக்கு இன்னும் சந்தேகம் உண்டா என்று கேட்கிறேன். (27.12.1936 அன்று சென்னை _- கோடம்பாக்கம் பகுத்தறிவு சங்க நான்காவது ஆண்டில் ஈ.வெ.ரா. ஆற்றிய உரை) -குடிஅரசு - சொற்பொழிவு - 10.01.1937
(பெரியார் களஞ்சியம் - குடிஅரசு - தொகுதி 22, பக்கம் 42)
-உண்மை,16-30.11.15