புதன், 6 ஜூலை, 2016

சிந்து சமவெளி நாகரீகம் 8,000 ஆண்டு பழைமையானது

தற்கால நாடுகளின் எல்லைகளைக் காட்டும் படத்தில் சிந்துவெளி நாகரிகத்தின் அமைவைக் காட்டும் படம்
சிந்துவெளிமயிலாடுதுறையில் கண்டறியப்பட்ட 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்துவெளி எழுத்துக்கள் பொறித்த கற்கோடாரி

சிந்து சமவெளி நாகரீகம் 5,500 ஆண்டுகளுக்கு முந்தைய அல்ல; அது 8,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று அகழ் வாய்வாளர்கள், விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சிறு வயதில் சரித்திர (இன்றை சமுக அறிவியல்) பாடத்தில் உலகின் பல நாகரீகங்கள் குறித்து படித்திருப்போம்.
நாகரீகங்கள் பெரும்பாலும் ஆற்றுப்பகுதியை ஒட்டிதான் தோன்றி வளர்ந்தன என வரலாற்று ஆசிரியர்கள் கூறு வார்கள். இதன் அடிப்படையில், சிந்து சமவெளி நாகரீகம் சுமார் 5,500 ஆண்டுகளுக்கு முந்தையது என அப்போது கிடைத்த அகழ் வாரய்ச்சி முடிவுகளின்படி கணித்தனர். இதுவே வரலாற்றிலும் இடம் பெற்றது. ஆனால், ஹரப்பா நாகரீகத்துக்கு முந்தைய சிந்து சமவெளி நாகரீகம் குறித்து புதிய தகவல்கள் கிடைத் துள்ளன.
கோரக்பூர் அய்அய்டியின் நில அமைப்பியல், புவி இயற்பியல் துறை தலைவர் அனிந்தியா சர்க்கார் தலைமையிலான குழு மற்றும் இந்திய தொல்லியல் துறை அதிகாரிகளும் இணைந்து புதிய ஆய்வை மேற்கொண்டனர். இது தொடர்பான கட்டுரை நேச்சர் என்ற பத்திரிகையில் வெளிவந்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
அகழ்வாராய்ச்சியின்பேது, மண்பாண்டங்களின் பாகங் கள் கிடைத்தன. இவற்றின் வயதை கண்டறிய நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தினோம். இதில் இவை 6000 ஆண்டு களுக்கு முந்தயை ஹரப்பா நாகரீகத்தை விட தொன்மை யானது என்பது தெரியவந்தது. எனவே சிந்து சமவெளி நாகரீகம் 8,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.
இந்த நாகரீகம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பான 7,000-3000 ஆண்டுகளுக்கு முந்தை எகிப்து நாகரீகம்,  6,500-3,100 ஆண்டுகளுக்கு முந்திய மெசபட்டோமியா நாகரீகத் துக்கும் முந்தையது. சிந்து சமவெளி நாகரீகம் இதற்கு முன்பே வேரூன்ற தொடங்கி விட்டது. இந்த நாகரீகம் அரியானாவில் பிர்ரானா, ராஹிகார்ஹி போன்ற இடங்களுக்கும் பரவியது. இந்த இடங்களில் அகழ்வாய்வை மேற்கொண்டோம். இங்கு அதிக எண்ணிக்கையிலான பசு,
ஆடு, மான், கலைமான் போன்ற விலங்குகளின் எலும்புகள், பற்கள், கொம்புகள் கிடைத்தன. இவற்றை, கார்பன் 14 டேட்டிங் பகுப்பாய்வு முறையில் சோதனை செய்தோம். இதன் மூலன் இவற்றின் வயது, அப்போதிருந்த பருவ நிலையை தெரிந்து கொள்ள உதவியது.  சிந்து சமவெளி நாகரீகம் இந்தியா முழுவதும் பரவியிருந்தது. குறிப்பாக இப்போது மறைந்துவிட்ட சரஸ்வதி நதி அல்லது காஹர்-ஹக்ரா நதியின் கரையோர பகுதிகளில் இது நிறைந்து காணப்பட்டது.
ஆனால் இவை குறித்து நமக்கு தெரியாமலேயே போய்விட்டது. நாம் ஆங் கிலேயர்களின் தொல்லியல் முடிவு களைதான் பின்பற்றி வந்தோம். எங்களது அகழ்வாய்வின் போது, சிந்து சமவெளி நாகரீகத்துக்கு முந்தைய (அதாவது 9000-8000 ஆண்டு களுக்கு முன்பு) முதல் ஹரப்பா நாகரீகம் தொடங்கிய காலம் வரை (8000-7000 ஆண்டுகள்) நன்கு வளர்ந்த ஹரப்பா நாகரீகம் காலம் வரையிலான பாது காக்கப்பட்ட அனைத்து கலாசார நிலைகளையும் கண்டோம்.
ஹரப்பா காலத்தில் திட்டமிடப்பட்ட நகரங்கள், கை வினைப் பொருள்கள் போன்றவை இடம் பெற்றிருந்தன. அரேபியா, மெசபட்டோமியா நகரங்களுடன் வர்த்தகம் செய்து வந்துள்ளனர்.
-விடுதலை,30.6.16

செவ்வாய், 5 ஜூலை, 2016

திராவிடர்கள் யார்?


சில பார்ப்பன அடிமைகள் ‘திராவிடர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்?’ என்று தெரிந்தோ, தெரியாமலோ கேட்கிறார்கள். பார்ப்பானை தவிர்த்த மற்ற மக்களெல்லாம் திராவிடர்கள்தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாசாரப்படி கூறுகிறோம். உதாரணமாக முஸ்லீம் ஒருவரை இரத்தப் பரீட்சை செய்து பார்த்தால், நமக்கும் அவருக்கும் பேதம் இருக்காது. அவன் முன்பு நம்மவனாக இருக்கலாம். ஆனால், கலாசாரப்படி முஸ்லிம் என்கிறான், பார்ப்பானை ஏன் ஆரியன் என்கிறோம்? ஆரிய கலாசாரம் வேறு, அவன் பூணூல் போட்டுக் கொள்கிறான். ஆரியர்கள் மற்றும் ஆரியக் கடவுள்கள், இதிகாசங்கள், சாஸ்திர புராணங்கள் வேறு. ஆனால், இவற்றையெல்லாம் நம் தலையில் கட்டினான். அவன் வேறு ஜாதி, பிறப்பு; நாம் வேறு ஜாதி, பிறப்பு என்ற முறையைப் புகுத்தினான்.

தீண்டாமை ஒரு வழக்கம். தீண்டாமை ஒழிந்த தினமே பறையன் மாறிப் போவானா? சக்கிலி இல்லாமற் போவானா? தீண்டாமை ஒழிந்து விட்டதால் சக்கிலி வேறாய் விட்டானா? நமக்குத் தீண்டாமை இல்லையென்பதாலேயே நமக்கு சூத்திரப் பட்டம் போய் விட்டதா?

டில்லி ஆட்சியின் அரசமைப்புச் சட்டத்திலே ஒரு வார்த்தை ‘ஜாதி ஒழிக’ என்று இருக்கிறதா?

24.02.1954 அன்று அதிகாரப்பட்டியில் தந்தை பெரியார் ஆற்றிய உரையின் ஒரு பகுதி (‘விடுதலை’ 28.02.1954)
-உண்மை,1-15.6.16

வரலாற்றை மாற்றும் வஞ்சக வேலை


சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முன்பே சரஸ்வதி நதி நாகரிகம் இருந்ததாகவும், ஆனால் மேலை நாட்டு ஆய்வாளர்கள் இதை மறைத்து சிந்து சமவெளி நாகரிகத்தை முன்னிலைப்படுத்தி, சரஸ்வதி நாகரி கத்தை உலகின் பார்வையில் இருந்து மறைத்து விட்டனர் என்று டில்லி பல்கலைக் கழகத்தின் சமஸ்கிருதப் பேராசிரியர்கள் மாநாட்டில் ஆய்வறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டில்லிப் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய காலச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சமஸ்கிருத ஆய்வு மய்யம் இணைந்து 3 நாள் கருத்தரங்கம் ஒன்றை டில்லி பல்கலைக் கழகத்தில் நடத்தியது. இந்தக் கருத்தரங்கத்தில் சமஸ்கிருத ஆய்வாளர்கள் மற்றும் வேத ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.  இந்தக் கருத்தரங்கில் வேத ஆய்வாளர் மோகன்சந்த் என்பவர் சமர்ப்பித்த கட்டுரையில் கூறியுள்ளதாவது, வேதகாலத்தில் மெஹெர்கர் நாகரிகம் 7000 ஆண்டு பழமையானதாகும், தற்போது கிழக்குப் பாகிஸ்தானில் உள்ள ராக்கிகடி, பிரானா, அரியானா வில் உள்ள சந்தாயன், டப்பள் ஆகிய இடங்கள் குறித்து ரிக்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் சரஸ்வதி நதி ஓடியதாக கூறப்பட்ட 2449 இடங்கள் வேதத்தில் உள்ளன. இது சரஸ்வதி மற்றும் சிந்து நதிக்கு இடைப் பட்ட பகுதியாகும். மேலும் வேதத்தில் சிந்து நதிகுறித்து ஆயிரத்திற்கும் குறைவான குறிப்புகளே உள்ளன. ஆகவே நாம் சிந்து சமவெளி நாகரிகம் என்பதை சரஸ்வதி சமவெளி நாகரிகம் என்று தான் கூற வேண் டும், அல்லது சரஸ்வதி சிந்து சமவெளி நாகரிகம் என்று கூறலாம்.  மேலும், இப்போது நாம் படிக்கும் வரலாறு வெள்ளைக்காரர்களால் உண்மைகள் மறைக்கப்பட்டு போலியாக தயாரிக்கப்பட்டதாகும். வேதங்களில் கூறப்பட்டுள்ள வானியல் நிகழ்வுகள் எல்லாம் 7000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவை, வானியல் குறிப்பு களை தயாரிக்கும் அளவிற்கு திறமை உள்ளவர்கள் அப்போது இருந்தனர் என்றால் அறிவியல் வளர்ச்சி அந்தக் கால கட்டத்திலேயே உச்சத்தைத் தொட்டுள்ளது தெரிய வருகிறது.
உண்மையில் மேலை நாடுகள் இன்றுவரை  யூனான் (பாரசீக) நாகரிகம் தான் மிகவும் பழமையானது என்று கூறுகிறார்கள். உண்மை அது வல்ல, நமது வரலாற்றை மறைக்க மேலை நாட்டவர்கள் செய்த சூழ்ச்சியாகும் தனது ஆய்வறிக்கை கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் சமஸ்கிருதப் பண்டிதர்.     மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டில்லியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யபட்ட கருத்தரங்கம் ஒன்றில் பேசும் போது நமது வரலாற்றை மாற்றி எழுதவேண்டிய அவசியம் நமக்கு உள்ளது என்றும், அதே நேரத்தில் பல்வேறு ஆய்வுகள் நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவரவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அவர் கூறிய ஓராண்டிற் குள் வேதங்களில் இருந்து சரஸ்வதி நாகரிகம் பற்றிய ஆய்வை வேத ஆய்வாளர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கட்டுரைகள் அனைத்தும் கலாச்சாரத்துறை அமைச்சகம் மற்றும் மனிதவளத்துறை அமைச்சகத்திற்கு சமர்ப்பிக்கப்படும். ஆகவே விரைவில் அமைச்சர்வை கூடி சிந்து சம வெளி நாகரிகத்தை சரஸ்வதி சமவெளி நாகரிகம் என்று மாற்றலாம்!
மெஹெர்கர்,  இன்றைய பாகிஸ்தானிலுள்ள, பண்டைக்காலக் குடியேற்றப் பகுதி ஆகும். இப்பிரதே சத்தின் புதிய கற்காலக் குடியேற்றங்கள் பற்றிய தொல் லியல் ஆய்வுகளுக்கு மிக முக்கியமான களங்களில் இதுவும் ஒன்று. இக்குடியேற்றத்தின் எச்சங்கள் பாகிஸ் தானின் பலூச்சிஸ்தான் பகுதியில் காணப்படுகின்றன. இது போலன் கணவாய்க்கு அருகிலுள்ள கச்சிச் சமவெளிப் பகுதியில், சிந்துநதிப் பள்ளத்தாக்குக்கு மேற்கே, குவேட்டா (Quetta),, காலத் Kalat)), சிபி (Sibi) ஆகிய நகரங்களுக்கு இடையே அமைந்துள்ளது.
பிரான்சைச் சேர்ந்த தொல்லியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இக் களம், உலகின் பழமையான மனித குடியேற்றங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இதன் ஆதிக் குடியேற்ற வாசிகள், பலூச்சிக் குகை வாழ்நரும், மீனவர்களும் ஆவர். 1974 இல் நடத்தப் பட்ட தொல்லியல் ஆய்வுகளை (ஜர்ரிகேயும் (Jarrige) மற்றவர்களும்) அடிப்படையாகக் கொண்டு, இப் பகுதியே தென்னாசியாவின் அறியப்பட்ட வேளாண் மைக் குடியேற்றங்களில் முற்பட்டதாகக் கருதப்படு கின்றது. இங்குள்ள குடியேற்றத்துக்கான மிக முற்பட்ட தடயங்கள் கி.மு. 7000 அய்ச் சேர்ந்தவை. தென்னாசி யாவின் முற்பட்ட மட்பாண்டச் சான்றுகளும் இங்கேயே கிடைத்துள்ளன.
மெஹெர்கரின் செப்புக்கால மக்கள், வடக்கு ஆப்கானிஸ்தான், வடகிழக்கு ஈரான் மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளுடனும் தொடர்புகளைப் பேணி வந்துள்ளதாகத் தெரிகிறது என்று கதையளந்து கொட்டியுள்ளனர் பார்ப்பன மே(ல்)தாவிகள்.
வாஜ்பேயி பிரதமராக - இருந்த போது காளையைக் குதிரையாகக் கணினிமூலம் உல்டா செய்த கூட்டம் எதையும் செய்யத் தயங்காது, வரலாற்று ஆய்வுக் குழுவை ஆர்.எஸ்.எஸ். மயமாக்கி விட்டனர். அடுத்து ஒவ்வொன்றாக தங்கள் சித்து வேலைகளில் ஈடுபடு வார்கள்.
முற்போக்குச் சிந்தனையாளர்களும் வரலாற்று ஆசிரியர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது. தினமணியின் முன்னாள் ஆசிரியர் போன்றவர்கள் மொகஞ்சதாரோ, அரப்பா நாகரிகம், திராவிட நாகரிகம் என்று அறுதியிட்டுக் கூறியிருப்பதும் கவனிக்கத் தக்கதாகும்.
-விடுதலை,22.10.15

குதிரை குத்திப்பட்டான் நடுகல் கண்டுபிடிப்பு

கரூர் அருகே
800 ஆண்டுகள் பழைமையான
குதிரை குத்திப்பட்டான் நடுகல் கண்டுபிடிப்பு
கரூர், ஜூன் 20 கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, கரடிப்பட்டியில் நங்காஞ்சி ஆற்றங்கரையில் தமிழகத்தில் மிக அரிதாகக் காணப்படும் குதிரை குத்திப் பட்டான் நடுகல் ஒன்று கண் டறியப்பட்டுள்ளது.
திருப்பூரில் இயங்கிவரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மய் யத்தைச் சேர்ந்த ஆசிரியர் கி. திருநாவுக்கரசு, க.பொன்னுச் சாமி, ரா.செந்தில்குமார் மற் றும் பொறியாளர் சு.ரவிக் குமார் ஆகியோர் மேற் கொண்ட ஆய்வில் இந்த நடு கல் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைப்பற்றி ஆய்வு மய் யத்தின் இயக்குநர் பொறியா ளர் சு.ரவிக்குமார் கூறியதா வது:
தமிழ்நாட்டில் தொன்று தொட்டு இருந்த நாற்படை களில் ஒன்று குதிரைப்படை. சுமார் அய்ந்தாயிரம் ஆண்டு களுக்கு முன்பிருந்த அரப்பா நாகரிகத்தின் அழிபாடுகளில் இந்தியாவில் குதிரை இருந் தது என்பதற்குரிய அரிதான அகச்சான்றுகள் அகப்பட்டுள் ளன. தமிழ்நாட்டைப் பொறுத்த மட்டில் 2 ஆயிரத்து 500 ஆண் டுகளுக்கு முன்பே தமிழர்கள் குதிரைகளைப் பயன்படுத்தி இருந்தனர் என்று கூற முடி யும்.
தொல்காப்பியர் காலத்தில் தமிழகத்தில் மக்கள் குதிரை வண்டிகளில் ஊர்ந்து வந்தனர்; தமிழர்கள் கண்ட நான்கு விதப் படைகளில் குதிரைப் படை யும் ஒன்று என்று இன்றும் சான்று காட்ட முடியும். தேரும், யானையும், குதிரையும், பிற வும் ஊர்ந்தனர் இயங்கலும் உரியர் என்ப (தொல்.பொ.புற.12) தானை யானை குதிரை என்ற கோனார் உட்கும் மூவகை நிலையும் (தொல்.பொ.புற.14) என்ற தொல்காப்பியச் சூத் திரங்கள்மூலம் குதிரை ஊர்தி யும், குதிரைப் படையும் தொல் காப்பியர் காலத்திற்கு முன் பிருந்தே தமிழகத்தில் இருந்து வருகின்றன என்பது உறுதிப் படுகிறது.
மேலும் புறநானூறு, அக நானூறு, கலித்தொகை, சிலப் பதிகாரம், மணிமேகலை போன்ற சங்க இலக்கியங்களி லும் குதிரை பற்றிய குறிப்பு கள் உள்ளன. தமிழ்நாட்டுக் குதிரைப் படைக்கு எல்லா இலட்சணங்களும் பொருந் திய சேங்குதிரைகள் தேர்ந்தெ டுக்கப்பட்டு வந்தன. சிறந்த குதிரைகளுக்குச் சிறப்புப் பெயர் வைக்கப்பட்டிருந்தது. மலையமான் நாட்டை ஆட்சி புரிந்தவனாகிய திருமுடிக் காரி, காரி என்னும் பெயரு டைய தன் குதிரையோடு கொல்லிமலையை ஆண்ட வள்ளல் வல்வில் ஓரியின், ஓரிக்குதிரையுடன் குதிரைப் போர் புரிந்தான் என நத்தத் தனார் குறிப்பிடுகின்றார்.
இந்த வகையில் அரவக் குறிச்சி நங்காஞ்சி ஆற்றங் கரையில் நமக்குக் கிடைத் துள்ள குதிரை வீரன் நடுகல் எதிரிப்படையின் குதிரை யைத் தாக்கி வீரமரணம் அடைந்த வீரனின் நினை வாக, வீரத்தின் அடையாள மாக எழுப்பிக்கப்பட்ட நடு கல் ஆகும்.
இந்நடுகல் 80 செ.மீ அகலமும், 135 செ.மீ உயரமும் உடையதாகும். இதில் வீரனின் தலை வலதுபுறம் சாய்ந்துள்ளது. வீரன் தலை யில் மகுடமும், காதில் காதணி களும், கழுத்தில் கண்டிகை, சரப்பளி அணிகலன்களும் கையில் வீரக்காப்பும், இடை யில் நல்ல வேலைப்பாடுக ளுடன் ஆடையும், குறுவா ளும் வைத்துள்ளான்.
வீரன் தன் வலது கையில் உள்ள குறுவாள் மூலம் தன்னைத் தாக்கும் குதிரையைக் குத்தும் வண்ணமும், இடது கையால் தன்னைத் தாக்கும் குதிரை யைத் தடுக்கும் வண்ணமும் நடுகல் வடிவமைக்கப்பட்டுள் ளது. குதிரையின் முன்னங்கால் இரண்டும் வீரனின் இடுப்புப் பகுதியை தாக்கும் வண்ண மும், பின்னங்கால் இரண்டும் நிலத்தில் ஊன்றிய வண்ண மும் உள்ளது.
குதிரையின் மேற்பகுதி யில் வீரன் அமர்ந்து செல்லும் இருக்கை அற்புதமாக வடிவ மைக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி உலகின் தலை சிறந்த தொல்லியல் அறிஞர்களுள் ஒருவரும் தமிழகத் தொல் லியல் துறையின் முன்னாள் துணை இயக்குநருமான முனை வர். ர.பூங்குன்றனாரிடம் கருத் துக் கேட்டபோது,
தமிழகத்தில் எண்ணற்ற புலிக்குத்திக் கற்கள் உள்ளன. ஆனால், குதிரை குத்திப்பட் டான் நடுகல் மிகச்சிலவே உள்ளன. இந்த வகையில் இது மிகவும் சிறப்புடையதா கும். சிலை அமைப்பை வைத்துப் பார்க்கும்போது இச்சிலை 800 ஆண்டுகள் பழைமையானது என்றார்.
விடுதலை,20.6.16

திராவிடரின் வரலாற்றுச் சிறப்புகள்

P. கோவிந்தராசன் B.E., M.B.A., (M.A)

இந்தியா இயற்கை வளங்களையும், மனித வளத்தையும் கொண்ட மிகப் பழைமையான நீண்ட நெடிய வரலாற் றினையும் கொண்ட ஒரு துணைக் கண்டம்.  இந்தியா என்று அழைக்கப் படும், நாவலந் தீவின் சமூக, இலக்கிய, நாகரிக மேம்பாட்டினை நேரில் காண வும், பொருளாதார வணிக தொடர்பு கொள்ளவும், அந்நியர்கள் படை யெடுத்து வந்தனர்.

அவ்வாறு வந்தவர் களில் முதன்மையானவர்கள் ஆரியர்கள்.  இறுதியாக வந்தவர்கள் ஆங்கிலே யர்கள்.  ஆங்கிலேயரின் நேரடி ஆட்சியில் இருந்த காலம் 1857 முதல் 1947 வரைதான்.  அந்த காலகட்டத்தில் கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், படை நிருவாகம், அரசு நிருவாகம் ஆகியவற்றில் நவீன தொழில்நுட்பங் களைப் புகுத்தி ஒரு தொழிற்புரட்சியை ஏற்படுத்தினார்கள்.  இந்தியாவில் இருந்த மொழிகளில் எல்லாவற்றையும் விட தமிழ்மொழியை நேசித்தார்கள்.  ஒப்பிலக்கணம் தந்தார்கள். 

காவியம் தந்தார்கள்.  அறிவு, அன்பு ஆகிய வற்றை புத்தர் வழியில் போதித்தனர்.  திருக்குறள் போன்ற நூல்களை ஆங்கி லத்தில் மொழி பெயர்த்து ஆங்கிலத் தின் வளத்தை விரிவுபடுத்தினார்கள்.  அய்ரோப்பிய கண்டத்திலிருந்து வந்து, தமிழ் வளர்த்து, திராவிட நாகரிகத்தை அழிவிலிருந்து காப்பாற்றிய பெருமை கிறித்துவ மதத்தையே சாரும். 

அதே சமயத்தில் இந்து மதம் என்றும், இந்தியா என்றும் அழைத்துக்கொண்டு தமிழையும் திராவிடர் நாகரிகத்தையும் அழிக்க இன்று நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளைக் காணும்போது கிறித்துவர்கள், ஆங்கிலேயர்கள் செய்த சேவைகள் வரலாற்று சிறப்புடையாதாக விளங்குகின்றது. 

அதானால் தான் திராவிடத்தின் தலைமகன் தந்தை பெரி யார் ஆங்கிலேயர் ஆட்சி தொடர வேண்டும் என்று கூறினார்.  நாவலந் தீவு எனப்பட்ட இந்தியாவில் இந்து மதம் என்ற பெயரில் திராவிடர் நாக ரிகத்தை அழிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுவதால் திரா விடரின் வரலாற்றுச் சிறப்பினை மீள வும் நினைவுகூர வேண்டிய கட்டாயத் தில் இருக்கிறோம்.

கடல் வாணிகம்

மதவாதிகள் கூறுவதைப்போல் இந்த உலகம் ஒருநாளில் கடவுளால் படைக்கப்படவில்லை.  ஏனென்றால் இந்த பூமிபந்து நெருப்புக் கோளாய் இருந்து, பின் குறிர்ந்து பல கண்டங் களாக பிரிந்து, உயிர்கள் தோன்றி, நாகரிகம் பெற பல கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆயின.  இவ்வாறு உயிர்கள் தோன்றியபோது முதல் மனிதன் தோன்றியது பூமத்திய ரேகை அருகே இருந்த லெமூரிய கண்டத்தில்தான்.  இந்த லெமூரியாக்கண்டம் ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா முதலிய கண்டங்களை இணைத்து ஒரே நிலப்பரப்பாக விளங்கியது.

முதல் மனிதன் தோன்றிய லெமூரியாக் கண் டத்தில் வாழ்ந்தவர்கள், எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாக இருந்தனர்.  கடல் வாணிகத்திலும் சிறந்து விளங்கின வர்கள் இவர்களே.  பின் அய்ரோப் பாவில், சிந்துசமவெளியில், கடலில் மூழ்கிய அட்லாண்டிஸ் நிலப்பகுதியில் குடியேறினர் (ஆதாரம் Atlantis and Lost World என்ற நூல் ஆசிரியர் ஜோசப் பிராங்க்). இதையே புகழ்பெற்ற வரலாற் றாளர் எஸ். ஆர். இராவ் அவர்கள், திராவிடர்கள் தெற்கு அய்ரோப்பாவில் சென்று குடியேறினர் என்ற தனது Memoirs of Archaeology of India என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.  பன் மொழிப்புலவர் அவர்கள் Trazan என்ற அய்ரோப்பா நாட்டினரை திராஜன் என்ற தமிழ் மொழிபெயர்ப்பாளர் படைத்துள்ளார்.

மேலும் பன்மொழிப்புலவர் கா. அப்பாதுரையார், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழர், அரேபி யருடனும், கிரேக்கருடனும், உரோம ருடனும், ஜாவனியருடனும் மற்ற அயல் நாட்டினருடனும் வாணிகத்தொடர்பு கொண்டிருந்தனர் என்ற கூறுகிறார்.  இதை எடுத்துக்காட்டும் வகையில் நில நூலாசிரியர்கள் பிளினி (கி.பி. 75), தாலமி (கி.பி. முதல் நூற்றாண்டு) மற் றும் செங்கடற்பயணம் ஆய்வுக்குறிப்புக் கள் கடைசியில் (Periplus Maris Erithrerien) எரித்திரையன் இந்துமாக் கடல் போன்ற நூல்களில் குறிப்பிடப் படும் தமிழகத்தில் இருந்த துறைமுக நகரங்களை விரிவாக ஆய்வு செய் துள்ளார். 

அவற்றில் சில நகரங்கள்:

1.  பாலைப்பட்டினம்:  (palae Patme) Dabhol என்று தற்போது குஜராத்தில் விளங்குகின்றது.

2.  மந்தராகிரி:  (Mandagore) Bankote என்று தற்போது பெயர் பெற்றுள்ளது.  மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது.  கப்பல் கட்டுமான நகரமாக விளங்கியது.

3.  கண்ணனூர்:  கேரளாவில் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது.

4. Baryagaza: குஜராத்தில் உள்ள புரோச் (Broach).

5. Colchi -  தற்போதுள்ள Cochi சிலப்பதிகாரத்தில் கொற்கை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

6. Kayal - Morcopola வால் Coil என்று குறிப்பிடப்பட்டுள்ள நாகர் கோவில்.

7.  Tyndis-  (பொன்னானி) தமிழகத் தின் முதல்தர துறைமுகம் (மஜும்தார் இதனை தமிழகத்தின தொண்டி துறைமுகம் எனக் கூறுகிறார்).

8.  முசிறி (Cranganore) கேரளாவில் உள்ளது.  அரபு நாட்டுடன் கடல் வணிகம் நடந்தது.

9.  நீல்கண்டா (Nelganda  என்று Fabricius என்பரால் அழைக்கப்பட்டது. Melkynda என்று கால்டுவெல் அழைத் தார்).  இது கோட்டயம் அருகே உள் ளது.

10.  Camara (காவிரிப்பூம்பட்டினம்)

11.  Poduca (பாண்டிச்சேரி) அரிக் கமேடு ஆய்வுகள் இதனை உறுதிப் படுத்தியுள்ளது.

12.  Supatana (Fairtown) (சென்னைப் பட்டினம்) மதராஸ் என்ற அழைக் கப்பட்ட சென்னை.  இந்த துறைமுகம் கங்ககைக்கரை வரை இணைப்புச் சாலைகள் கொண்டது).

13.  Maisolai or Ma Solia இது மசூலிப்பட்டணத்தை குறிக்கின்றது.  இங்கிருந்து மரக்கலங்கள் (Vessels) சைனா, மெக்கா, சுமத்ரா போன்ற நாடுகளுடன் வாணிகம் நடந்தது.

14.  கண்டசாலா: இந்த துறைமுகம் கிருஷ்ணா நதி முகத்துவாரத்தில் உள்ளது.  இது சுவர்ண தீவுடன் வாணிபத் தொடர்பு கொண்டது.

15.  சரித்திரபுரா: சீனாவின் யுவான் சுவாங்கினால் குறிக்கப்பட்டுள்ளது.  இது ஒரிசாவில் உள்ளது.

16.  Paloura   (பாலூரா) ஒரிஸ்ஸாவில் உள்ளது. பர்மாவுடன் வணிகம் நடந்தது.

17.  தாம்ரலிப்தி (Tamaralipti):  வங்கா ளத்தில் உள்ளது.  மவுரிய பேரரசர் அசோகர் இங்கு வந்தார்.  அப்போது போதிமரத்தின் கிளை தாம்ரபோன் என்றழைக்கப்பட்ட சிலோனுக்கு அனுப்பப்பட்டது.

மேலும் கிரேக்க நாட்டில் இருந்து வந்த மார்க்கோபோலோ மற்றும் நிக்கோலா கோண்டி (Nichoicolo Conti) ஆகியோர், தென்னிந்தியர்கள் கப் பல்கள் கட்டும் துறையில் சிறந்து விளங்கினார்கள். 

அவர்கள் கட்டிய கப்பல்கள் 25 யானைகளை ஒரே சமயத்தில் ஏற்றிச்செல்லக் கூடிய வலிமை பெற்றவைகளாக விளங்கின என்று கூறினார்கள்.  தமிழில் நாவாய் என்ற சொல்லே ஆங்கிலத்தில் Navy என மாறியது.  இது தமிழின் சிறப்பு மற்றும் கடல் வணிகத்தின் சிறப்பு ஆகும்.

எனவே முதல் மனிதன் திராவி டத்தை உள்ளடக்கிய லெமூரியர்கள் முதல் தற்போதுள்ள திராவிடர்கள் வரை (குமரி முனை முதல் கங்கைக் கரையைத் தொடும் விந்திய மலை வரை பரவியவர்கள்) கடல் வாணிகத்தில் சிறந்து விளங்கி பொன்னும், மணியும் குவித்தனர் என்பதை அறியலாம்.  பெருகிய செல்வம் இலக்கியங்கள் படைக்க உதவின.  திராவிடம் என்பதும் திருவிடம் என்பதும் திரைகடல்களால் சூழ்ந்த திரைவிடமாக விளங்கியது.

ஆரிய இலக்கியங்கள்

இந்தியாவின் தொன்மையான மொழிகள் தமிழும், சமஸ்கிருதமும் ஆகும்.  சமஸ்கிருதம் இன்று எந்த மாநில மக்களாலும் பேசப்படவில்லை.  2001இல் சமஸ்கிருதம் பேசுபவர்கள் எண்ணிக்கை 14135 (ஆதாரம் Encyclopedia of wicky pedia). சமஸ்கிருதம் எந்தக் காலத்திலும் பேச்சு வழக்கில் இருந்ததில்லை.  (இந்துமத தர்ம வினா _ விடை -_ ஆசிரியர் சங்கராச்சாரியார்) இதற்கு இலக்கணம் அமைத்து சமஸ்கிருதம் என்று பெயரிட்டவர் பனை என்ற ஊரில் பிறந்த கி.மு. 400 அய் சார்ந்த பாணினி (Panini) என்பவர் ஆவார்.

1.  எரித்திரையன் கடற்பயணம்: செங்கடற்பயணம் அல்லது செங்கடல், பாரசீக வளைகுடா மற்றும் இந்துமாக் கடல் அடங்கிய கடற்பயணம்

2.  Ratnaray -  அரபிக்கடல்

3.  Mahadadhi -  வங்காள விரிகுடா

4.  பாணிணி எழுதிய இலக்கணம் நூல் (சமஸ்கிருதம்) எட்டு அத்தியா யங்களைக் கொண்டது.  எனவே அஷ்டத்யாயி என அழைக்கப்பட்டது.  இது தமிழ் மரபின்படி அமைந்த பெயர். 

உதாரணம்: எட்டுத் தொகை, பத்துப் பாட்டு, நாலடியார். சமஸ்கிருதம் தோன்றி பலகாலம் இலக்கியங்கள் இயற்றப்படவில்லை. 

கி.பி. முதலாம் நூற்றாண்டு வரை சமஸ்கிருதத்தில் இலக்கியம் என்று எதுவுமே கிடையாது.  சமஸ்கிருதத்திற்கு மாறாக தமிழ் பல.  இலக்கியங்களைக் கொண்டிருந்தது.  அவை தமிழர் வாழ்க்கை மட்டுமல்ல, இந்தியாவின் பிற பகுதிகள் பற்றியும் பல அரிய தகவல்களை தந்தன.

இதிகாசங்கள்

வேதகாலத்தில் இயற்றப்பட்ட ரிக்வேதம் அவெஸ்தன் என்ற பாரசீக நூலின் இந்திய பதிப்பு ஆகும்.  இதனை தொடர்ந்து யஜுர், சாம அதர்வன வேதங்கள் ஆகும்.  பின்னர் இராமா யணம், மகாபாரதம் போன்ற காவி யங்கள் கி.மு. 12ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரை இயற்றப் பட்டன.  ஆனால் இவை அனைத்தும் எழுத்து வடிவில் எழுதப்பட்டவை  கி.பி. இரண்டாம் நூற்றாண்டில்தான்.  இவை நடந்தது _ ஏறக்குறைய குப்தர்கள் ஆட்சிகாலத்தில்தான்.

இராமாயணத்தில் வால்மீகியால் சில காண்டங்கள் புனையப்பட்டன.  பிற் காலத்தில் அயோத்தியா காண்டம், பால காண்டம், உத்ரகாண்டம் முதலியன மற்ற ஆசிரியர்களால் எழுதி சேர்க்கப்பட்டன.  இதேபோல் மகா பாரதத்தின் உண்மையான காவிய நாயகன் அர்ஜுனன்.  இவனின் வில் லாற்றலினையே மூல பலமாகக் கொண்டு பல வீரச்செயல்கள் நடை பெற்றன. 

இப்பேர்பட்ட மாவீரன் போர்க்களத்தில் மனச்சோர்வடைந்து போரிட மறுப்பதாக சித்திரிக்கப் பட்டுள்ளது.  அவனை போரில் ஈடு படுத்தும் பணி பரமாத்மா கிருஷ்ண னால் பகவத்கீதை மூலமாக நிறை வேற்றப்படுகின்றது.  இந்த பகவத்கீதை மகாபாரதம் இயற்றிய பின்பு பல நூற்றாண்டுகள் கழித்து பிற்சேர்க்கை யாக சேர்க்கப்பட்டதாகும்.  வீரத்தை சித்திரிக்கவேண்டிய நூல் பக்தி நூலாக மாற்றம் அடைந்தது.

தமிழ் இலக்கியத்தின் சிறப்புகள்:

அரசர்களையும், கடவுள்களையும், மதச்சடங்குகளையும் மய்யமாக வைத்து புனையப்பட்டவை சமஸ்கிருத இலக்கியங்கள்.  தமிழர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தார்கள்.  முதல் தமிழ்ச்சங்கம் 4400 ஆண்டுகள் தென் மதுரையில் இருந்தது.  இந்த முதல் சங்கத்தில் 4449 புலவர்கள் தங்கள் படைப்புகள் சமர்ப்பித்தார்கள்.  இடைச்சங்கம் கபாடபுரத்தில் 3700 ஆண்டுகள் நடைபெற்றது. 

அதில்  உறுப்பினர்களாக இருந்தவர்களில் ஒருவர் பாண்டுரெங்கன் திரையன் மாறன் (துவாரகை மன்னன்).  இந்தச் சங்கத்தில் இயற்றப்பட்ட நூல்களில் தொல்காப்பியமும், அகத்தியமும் அடங்கும்.  இறுதியாக தற்போதைய மதுரையில் கடைச்சங்கம் 1850 ஆண் டுகள் நடைபெற்றது.  எனவே சங்க காலம் (4449+3700+1850 = 9999) ஆண் டுகள் கொண்ட ஒரு நீண்ட நெடிய காலம். இது தமிழ் நீண்ட காலம் சிறப்புடன் இருந்ததை அறியலாம்.

தமிழர்களின் வீர வரலாறு:

வீரம் என்ற சொல்லை மற்ற மொழிகளுக்குத் தந்தது தமிழ் மொழியாகும்.  உதாரணம் வீரபூமி, வீரசக்கரா விருது, மகாவீர் தியாகி, மாகவீர்பிரசாத், மகாவீரர், இதேபோல் ஆங்கிலத்தில் சொல்லப்படும் வேலர் என்ற வேல் ஆயுதத்துடன் தொடர்பு கொண்டிருக்கவேண்டும்.  எனவே வீறு கொள்ளுதல், வேலெறிதல் சேரனின் விற்கொடி, சோழனின் புலிக்கொடி முதலானவை தமிழ் மண்ணைச் சார்ந் ததாகும்.  தமிழர்கள் வீரத்தை பெரிதும் போற்றினார். 

வீர விளையாட்டுகள், போட்டிகள், மிருகங்களை அடக்குதல் முதலியன தமிழர்களின் வாழ்க்கையில், திருமணங்கள் மற்றும் திருவிழாக் களுடன் இரண்டறக் கலந்தவை.  புலியை வேட்டையாடி புலிப்பல்லுடன் கூடிய மங்கல நாணைக் கொண்டு வரும் மணமகனுக்கு மணமகளை பரிசாகத் தந்தார்கள்.  போர்க் களத்திலே புறமுதுகு காட்டுவது வீரனுக்கு அழகல்ல.

மார்பிலே காயப் பட்டு இறப்பதையே பெரிதும் விரும் பினார்கள்.  இத்தகைய வீர மறவர் களுக்கு இணையான வீரர்களை உலகில் காண முடியாது.  முதுகில் காயப்பட்டதினால் பெற்ற மகனை தாயே வெட்டிக்கொன்ற காட்சிகளை இலக்கியங்களிலே காணுகின்றோம்.  திராவிடர்களின் முக்கியப் போர் ஆயுதங்கள் வாள், ஈட்டி, சூலம், வில் முதலியனவாகும்.  ஆரியர்கள் குதிரையைப் பெரிதும் பயன்படுத் தினார்கள்.  மாறாக, மகாபாரதத்தில் பீஷ்மர் முதுகில் அம்புகள் துளைக்க படுத்திருந்தார்.  இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் 13 முதல் 14 ஆண்டுகள் வரை காவியக் கதாநாயகர்கள் வனவாசம் சென் றார்கள். 

அப்போது அவர்கள் காட்டில் உண்மையாகவே வசிக்கும் புலி, சிங்கம், யானை போன்ற மிகக் கொடிய மிருகங்களுடன் போரிட வில்லை.  மாறாக தேவர் உலகத்தில் இருந்து வந்த, சமஸ்கிருதம் பேசும், ஜடாயு, ஜாம் பாவான், வாலி, ஆஞ்ச நேயர், இலங்கைக்கு பாலம் கட்டியதாக சொல்லப் படும் நளன் என்னும் குரங்கு முதலி யனவற்றைத்தான் சந்தித்தார்கள்.

திராவிடநாட்டில் கேரளாவில் ஆலப்புழாவில் நடைபெறும் படகுப் போட்டி, மதுரை ஜல்லிக்கட்டு, திருச்சூர், மைசூர் ஆகிய நகரங்களில் நடை பெறுகின்ற திருவிழாக்களில் யானைகளின் அணிவகுப்பு நடை பெறுகின்றது.  இது திராவிடர்களின் கடல் வாணிகத்தின் சிறப்பினையும், காட்டு மிருகங்களை அடக்கி, நாட்டுப் பணிகளுக்கு பயன்படுத்துவதையும் தெரிவிக்கின்றது.  ஆரிய கலாச்சாரத்தில் உறியடிக்கும் நிகழ்ச்சி திருவிழாக்களில் பெரிதும் காணப்படுகின்றது.

ஆரியர் வரலாறும் - கோவில்களும்: 

சரகோணிய (Sargonya) ர்களின் வம்சத்தில் அசுரபணிபால் (Ashurapanipal) (கி.மு. 669_ 627) பாபிலோனியாவை ஆண்டான்.  அவன் ஈழத்தை ஆண்ட மன்னன் மற்றும் மகன் தாமரிதுவை வென்றான்.  அவனது அரசு நைல்நதி முதல் காகஸ் மலை வரையிலும், மற்றும் மத்திய தரைக்கடல் முதல் பாரசீக வளைகுடா வரை பரந்து இருந் தது.  இந்த மன்னன் சிறந்த நூலகத்தை நிறுவினான்.  இலக்கியங்களை வளர்த் தான்.

கி.மு. 1000இல் ஆரியர்கள் ஒரு பகுதி யினர் காகஸ் மலைப்பகுதி (ஆர்மெனியா) யில் இருந்து வெளியேறி பாரசீகத்தில் தங்கினார்கள்.  இதன்பின் பாரசீகம் எழுச்சி பெற்றது.  யூதர்களால் “The Lords” மற்றும் ‘anointed’ என்ற அழைக் கப்பட்ட சைரஸ் (Syrus).  அவரது மகன் ஷெர்ஷா (கி.மு. 486_465) இருவரும் அய்ரோப்பா வரை படையெடுத்துச் சென்று கிரேக்க கட்டடங்களையும், கோவில்களையும் கொளுத்தினார்கள்.  இதற்குப் பழி வாங்க அலெக்ஸாண்டர் கி.மு. 331இல் பாரசீக நகரங்களைக் கொளுத்தினார்.

இந்த வரலாற்றுப் பின்னணியில் தான், இந்தியாவுக்குள் கி.மு. 1500இல் நுழைந்த ஆரியர்கள் கொஞ்சம் கொஞ் சமாக வளர்ந்து கி.பி. 325 இல் வைசிய ரான குப்தர்களால் கருடக்கொடியுடன் கூடிய வைணவப் பேரரசை நிறுவி னார்கள்.  இவர்கள் காலத்தில் வேதமதம், வைணவமதமாக மாறி புராணங்கள், இதிகாசங்கள் வளர்ந்தன.  குப்த மன்னர்கள் பாகவதர்கள் என்றழைக்கப் பட்டனர்.  குப்தர்காலத்துக்குப்பின் சமஸ் கிருதம் வட்டார மொழியானது.  மேலும் ஆரியர்கள் மதச்சடங்குகள் செய்து தானம் பெறுவதில் நாட்டம் கொண் டார்கள்.

கோவில்களும் , திராவிடர்களும்:


திராவிட நாகரிகத்தினை பிரதி பலிப்பவை கோவில்களாகும்.  கோ என்றால் அரசனை அல்லது இறை வனைக் குறிக்கும்.  அரசனும், இறை வனும் வசிக்கும் இடம் நகர்.  நகர் என்றால் கோவில் என்ற ஒருபொருள் உண்டு.  நாகரிகம் வளர்ச்சி அடைந்த போது கோவில் நகரங்கள் தோன்றின.  நகரத்தை மட்டும் எல்லையாகக் கொண்ட நகர அரசுகள் (City States) தோன்றின. 

உதாரணம் சிப்பாய் கலகத்தின் போது (1857) முகலாய மன் னன் பகதூர்ஷா டில்லியை மட்டும்  ஆண்டார்.  இந்தியாவில் 56 தேசங்கள் இருந்ததாக சொல்லப்படுவது 56 நகரங்களைக் குறிக்கின்றது.  மேலும் புரம் என்றால் கோட்டை என்று பெயர்.  இவ்வாறு நகர் என்றும் கோவில் என்றும், குடி என்றும், குன்றம் என்றும், ஊர் என்றும், பட்டணம் என்றும் வழங்கப்படும்  ஊர்கள் இந்தியாவெங்கும் பரவி இருக்கின்றன. 

இந்த பெயர்கள் அனைத்தும் இந்த உலகத்திற்கு திராவிடரின் நாகரிகத்தைப் பறை சாற்றுகின்றன.  இந்த திராவிட நாகரி கத்தின் அடையாளமாக்க, சிந்து சமவெளியில் காணப்படும், நகர நாகரிகம் ஆகும்.  மற்ற நாட்டினரெல்லாம் கல்லறை கட்டிய காலத்தில் நகர நாகரிகம் படைத்தவன் திராவிடன்.

பழங்காலத்தில் நாவலந் தீவில் (இந்தியாவில்) திகழ்ந்த கட்டடக் கலைகளில் முதன்மையானவை (அ) காந்தாரக்கலை (ஆ) பாரசீகக்கலை (இ) திராவிடக்கலை இவைகளின் சிறப் புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

காந்தாரக் கலை 

இந்தக் கலை அலெக்சாண்டர் இந்தியாவிற்கு படையெடுத்து வந்த போது இந்தியாவில் பரவியது.  இதன் விளைவாக இந்தியாவில் இருந்த கனிஷ்கர் போன்ற மன்னர்கள் புத்த விகாரங்கள், புத்தர் சிலைகளை உரு வாக்கினார்கள்.  காந்தாரக்கலையின் சிறப்புகள் அகன்ற மதிற்சுவர்கள், குறுகிய இடைவெளியில் தூண்கள், துண்களை இணைக்க விட்டங்கள் இந்தக் கலையின் காலம் கி.மு. 650 முதல் 100 கி.மு. வரை.

பாரசீக கட்டடக் கலை: 

1526 பாபர் உருவாக்கிய பேரரசு 1540இல் முடிவுற்றது.  முகல் (Mughal) என்றால் பாரசீகமொழியில் மங் கோலியரை குறிக்கும்.  எனவே 1540இல் நாட்டை இழந்த ஹுயூமான் பாரசீகத்தில் தஞ்சம் அடைந்தார்.  பின் பாரசீக இளவரசியை மணந்து படைதிரட்டி வந்து 1555-இல் டில் லியைப் பிடித்தார்.  இந்த இடைக் காலத்தில் 1528 இல் கட்டப்பட்ட பாபர் மசூதி யாரிடம் இருந்தது என சிந்திக்கவும். 

ஹுமாயூன் பாரசீகத்தின் துணையால் அமைத்த டில்லி பேரர சில், டில்லியைச் சுற்றி கோட்டைகள், மசூதி அரண்மனைகள் டில்லியை அலங்கரிக்கின்றன.  பாரசீக கட்டடக் கலையை ஒட்டி அமைந்தவற்றில் அமெரிக்க குடியரசு தலைவர் பாரக் ஒபாமா கண்டுகளித்த ஹுமாயூன் Tomb.  தாஜ்மஹால் முதலியனவாகும்.  பாரசீக கலை இல்லையேல் டில்லி இல்லை.  இந்தக் கால கட்டத்தில் ஆரிய கட்டடக்கலை என்று இருந்ததாக வரலாறு சொல்லவில்லை.

திராவிட கட்டடக் கலை: 

இந்தியாவில் குப்தர்கள் காலம் (கி.பி. 320 முதல் 650 வரை) சிறு கோவில்களே கட்டப்பட்டன.  இதில் கி.பி. 500 முதல் கி.பி. 800 வரை உருவான குடைவரை கோவில்கள் பிராம்மானியம் அல்லது சமணம் சார்ந்தவை.  கி.பி. 800 இல் சாளுக்கியர்கள் வீழ்ந்து ராஷ்டிர கூடர்கள் வந்தார்கள்.  இவர்கள் திரா விட கட்டடக்கலையை ஊக்குவித்து எல்லோராவில் கைலாசநாதர் கோவிலை கட்டினார்கள்.

சாளுக்கியர் காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள் நாகரா மற்றும் திராவிடக்கலை கலந்த வேசர அமைப்பைக் கொண்டு கோவில்களை வடகர்நாடகாவில் கட் டினார்கள்.  உதாரணம் பட்டக் கல்லில் உள்ள காசிநாதர்கோவில் (கி.பி. 450 முதல் 650) திராவிடக் கட்ட டக் கலையை வளர்த்தவர்கள் கீழ் வருமாறு:

1. பல்லவர்கள் (600 முதல் 900) மாமல்லபுரத்தில் கல்லில் குடையப் பட்ட இரதங்கள், காஞ்சிபுரம் கைலாச நாதர் கோவில்.

2.  சோழர்கள் (900 முதல் 1200) திராவிடக்கலை முழுமை அடைந்தது.  தஞ்சையில் கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் கோவில்கள் குறிப்பிடத்தக்கவை.

3.  விஜயநகர அரசர்கள் (1350 முதல் 1565) மதுரை, திருவரங்கம் , ஹம்பி, விட்டல்லா கோவில்கள் கட்டினார்கள்.

4.  நாயக்கர்கள் (1600 முதல் 1750) இவை தவிர சண்டெல்லா இனத் தவர் எழுப்பிய கஜுராஹா, சோலங் கியர் எழுப்பிய குஜராத் சூரியனார் கோவில்கள் தனித்தன்மை வாய்ந்தவை.  மேலும் கூர்ஜரர்கள் சோமநாதபுரத்தில் தங்கத்தால் ஆலயத்தைக் கட்டினார்கள்.    இந்த ஆலயத்தை கட்டிய பீமதேவ் என்ற மன்னன் கஜினிமுகமதுவுடன் போரிட் டுத் தோற்றான்.

திராவிடர்களின் இன்றைய நிலை:

சேலத்தில் ஆரியர் ஒருவர் வழக் குரைஞர் தொழில் நடத்தி வந்தார்.  அவர் குதிரை வண்டியில் பயணம் செய்தபோது சோதனைச்சாவடி ஊழியர் வண்டியை நிறுத்தினார்.  கோபங்கொண்ட வழக்குரைஞர் உடனே துப்பாக்கியை எடுத்து சுட்டார்.  உடனே ஊழியர் இறந்தார்.  வழக் குரைஞர் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டார்.   அவர் வேறு யாரும் அல்லர்; ராஜாஜி தான். பின்னாளில் அவர் மவுண்ட் பேட்டன் பிரபுவுக்கு அடுத்து கவர்னர் ஜெனரல் ஆனார்.  இவ்வாறு நீதி தேவன் மயக்கமடைந்ததற்கு காரணம் ஆரியமாயை போன்ற நூல்களை படித்தவர்களுக்கு தெரியும். 

அடுத்து சென்னை மாநகரத்தில் 1996 _ 2001 காலத்தில் மேம்பாலங்களின் தரத்தைக் கண்டறிந்து அரசுக்கு அறிக்கை தர குழுவொன்று நியமிக்கப்பட்டது.  அந்தக் குழு மேம்பாலங்களை பக்கச்சாலைகள் போதிய அகலம் கொண்டிருக்கவில்லை.  அதனால் இடிக்க முடிவு செய்தது. 

அறிக்கை என்னிடம் ஒப்புதலுக்கு வந்தது.  கட்டுமான விதிகளுக்குட்பட்டு, தரங்கள் சோதிக்கப்பட்ட மேம்பாலங் களை இடிப்பதற்கான முகாந்திரம் எதுவும் இல்லை என்ற அறிக்கை சமர்ப்பித்தேன்.  இந்தப் பாலங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு இன்றும் தொடர்கிறது என்பதில் என்னைப் போன்ற திராவிடர்களுக்கு மகிழ்ச் சியைத் தருகின்றது. 

மேலும் சென்ற ஆண்டு, உச்சநீதிமன்ற நீதிபதியாக மாண்புமிகு கே.ஜி. பாலகிருஷ்ணன் இருந்தார்.  மத்திய அமைச்சராக மாண்புமிகு ஆ.ராசா இருந்தார்.  மக்களவை சபாநாயகராக மாண்புமிகு. மீராகுமார் இருந்தார்;  தற்போதும் இருக்கிறார்.  ஆனால் திராவிடர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது.  இந்தப் பலக்குறைவு ஓர் இடைக்கால நிகழ்வு.

மீண்டும் திராவிடர்களின் பலம் நிருவாகத்தில் அதிகரிப்பது உறுதி.  உதாரணமாக  முன்னொரு காலத்தில் பாண்டியன் நெடுஞ்செழியனை ஆரியப் படைகள் சூழ்ந்தன.  ஆனால் வெற்றி திராவிடருக்கே. 

திராவிடர்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டுமானால், நீதிமன்றங்களில், தலைமைக் கணக்காயர் அலுவலகத்தில், அரசு அலுவலகங்களில், வர்த்தக நிறுவனங்களில், ஊடகத் துறையிலும் திராவிடர்களின் ஆதிக்கம் பெருக வேண்டும்.

சுயமரியாதையைக் காப்பாற்றவேண்டும்.  தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் வழியில் நடந்து இழந்த திராவிடரின் மாண்பு களை மீட்கவேண்டும்.

வளர்க திராவிடர்கள்!
-விடுதலை ஞா.ம.16.4.11

ஞாயிறு, 3 ஜூலை, 2016

இந்தியப் பெருங்கடல் நாடுகளில் திராவிடர் திருநாள்


இந்தியத் தீபகற்பம் இயற் கையிலேயே மூன்றுபுறம் கடலாலும் ஒருபுறம் மலை யாலும் சூழப்பட்டுள்ளது. இதன் காரணமாக வங் காள விரிகுடாக் கடலும், அரபிக்கடலும் வேவ்வேறு  பருவகால மாற்றம் மற்றும் கடல் நீரோட்டங்களைக் கொண்டுள்ளன. இயற்கை அளித்த இந்தக் கொடை தான் 5000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மண்ணில் வாழ்ந்த திராவிட இனத்தை இந்தியப் பெருங்கடல் நாடு களைச் சென்றடைய வைத் தது, இந்தியப் பெருங்கடல் நாடுகள் என்பது ஆஸ்தி ரேலியாவிற்கு கிழக்கே உள்ள டாங்கோ தீவுகளில் இருந்து ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் மற்றும் கென்யா நாடு, தான்சானியா போன்ற நாடுகள்  மற்றும் கொமர் தீவுகள், சிசலித்தீவுகள் வரை பரவியுள்ளது.  வங்க விரி குடாப் பகுதியில் வாழ்ந்த திராவிட இனம் கிழக்குப் பகுதிக்கு இடம் பெயர்ந் தனர், அரபிக்கடல் பகுதி யில் வாழ்ந்த திராவிடன் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடம்பெயர்ந்தான்.
இவர்கள் இடம் பெயர்ந்து ஆயிரம் ஆண்டு கள் ஓடிவிட்டாலும், இன் றளவும் தங்களின் திரா விடப்பாரம்பரியத்தை மறக்காமல் கடைப்பிடித்து வருகின்றனர்.
சூரியன் முதலில் உதிக் கும் நாடு எனப்படும் டாங்கோ தீவுகளில் அரிசி தான் முக்கிய உணவாகும். ஜனவரி மாதங்களில் சூரி யத் திருவிழா கொண்டா டப்படுகிறது, இது அந்த தீவுகளின் சுற்றுலாப் பய ணிகளுடன் ஒன்றாக சேர்ந்து கொண்டாடும் திருவிழா வாகும், இந்த சூரியத் திரு விழாவின்போது சர்க் கரைப் பொங்கல் மற்றும் வெண்பொங்கல் அங்கு படை யலாக வைக்கப்படுகிறது.
இதே போல் பாப்புவா, நியூ கினியா தீவுகளிலும் இதே மாதத்தை ஒட்டி போகிப் பண்டிகை, பொங்கல்விழா அங்கும் கொண்டாடப் படுகிறது. அங்கே போகி அன்று வீடு களில் நெருப்பை மூட்டி சூரியனைப் போன்று முகமூடி அனிந்து இரவு முழுவதும் கொண்டாடு வர், மறுநாள் பொங்க லிட்டு விழாவைக் கொண் டாடுவர். டாங்கோ மற்றும் பாப்புவா, நியூ கினியாவில் விவசாயம் மிகவும் குறைவு. அதே நேரத்தில் அவர்கள் கடல் வெள்ளாமைத் தொழிலை செய்பவர்கள் (மீனவர்களின் வார்த்தைப் படி மீன்பிடி தொழிலை வெள்ளாமை என்றுதான் கூறுவார்கள்).
ஃபிஜி தீவுகளில் கரும் புடன் கூடிய பொங்கல் விழா இன்றும் சிறப்பாக நடைபெறுகிறது. அங்கு ஆங்கிலேயர் காலத்தில் இந்தியாவில் இருந்து அதி கமாக வடநாட்டவர்கள் சென்று குடியேறியதால், அங்கு பொங்கலை மகர சங்கராந்தி என்று அழைத்து கொண்டாடு கின்றனர். ஆனால் அனைத் தும் தமிழகப் பொங்கலைப் போன்றே கொண்டாடுகி றார்கள்.
ஆஸ்திரேலியப் பழங் குடியினர் மற்றும் கோகோ தீவுகளில் உள்ளவர்கள், கரும்புடன் பனங்கிழங்கு வகைகளைப் பொங்கலு டன் படையல் செய்து பொங்கல்விழாவினைக் கொண்டாடுகிறார்கள்.
இந்தியாவில் ஆங்கி லேய ஆட்சியின் போது மேற்கு  ஆப்பிரிக்க நாடு களின் கரும்புத் தோட்டங் களில் வேலைபார்க்க வட இந்தியர்களை அதிகம் அழைத்துச் சென்றனர். இவர்கள் அங்கு  வாழ்ந்த திராவிட மக்களின் கலாச் சாரத்தை ஏற்றுக்கொண் டனர். அங்கு பொங்கல் விழாவிற்கு பதிலாக மகர சங்கராந்தி என்ற பெயரில் இன்றும் கொண்டாடுகின் றனர்.
இலங்கையில் வாழும் தமிழர்கள் 30 ஆண்டுகாலப் போரின் போது மேற்கு இந்தியப் பெருங்கடல் தீவு களில் அதிகம் குடியேறினர். இதனால் சிசிலித்தீவுகள், ரீ யூனியன், பிரிட்டீஷ் தீவு கள் போன்ற இடங்களில் பொங்கல் திருநாள் மிகவும் விமரிசையாகக் கொண் டாடப்படுகிறது. தமிழர் கள் அதிகம் வாழும் மலே சியா, சிங்கபூர், இலங்கை போன்ற நாடுகளில் பொங் கல் விழா அரசு விழாவாக மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரு கிறது.
முக்கியமாக நிலநடுக் கோட்டு நாடுகள் உலகின் உணவுக் கிண்ணம் என்று அழைக்கப்படுகின்றன. இந்த நாடுகளில் விவசாயம் மிகவும் முக்கிய தொழிலாக உள்ளது.
சுமார் 5000 ஆண்டு களுக்கு முன்பு தென் இந் தியாவில் இருந்து கடல் மூலம் இந்தியப் பெருங் கடல் நாடுகளுக்குச் சென்ற திராவிட இனத்தினர் இன் றும் தங்களின் பாரம்பரியம் மாறாமல் வெவ்வேறு பெயர்களில் திராவிடர் திருநாளைக் கொண்டாடி வருகின்றனர்.  யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாடலைப் பாடிய கணியன் பூங்குன்றனார் பல்வேறு நாடுகளில் வாழும் திராவிட இன மக்களை நினைவில் வைத் துப் பாடியதாகவும் கருத லாம்.
-விடுதலை,14.1.16