வெள்ளி, 30 செப்டம்பர், 2016

தமிழர் கழகம் என்னாது திராவிடர் கழகம் என்றதேன்

தந்தை பெரியார் விளக்கம்

திராவிடர் கழகத்தில் மற்ற இயக்கங்களில் இல்லாத கொள்கைகள் இருக்கின்றன. காங்கிரஸ் வர்ணாச்சிரம தர்மத்தை ஆதரிக்கிறது. ஜாதிப் பிரிவுகளையும் பல உருவக் கடவுள்கள் ஆராதனையும் அழிக்க முற்படவில்லை. திராவிடர்களுக்குப் பல ஜாதிகளும், பல கடவுள்கள் ஆராதனையும் பண்டைக்காலத்திலே இருந்ததில்லை. இந்த நாட்டுச் சொந்த மக்கள் நாலாஞ் ஜாதியைச் சேர்ந்தவர்களென்றும், சூத்திரர்கள் (அடிமைகள், தாசி மகன்) என்றும் இழிவுபடுத்தப்-படுகிறார்கள். வடநாட்டு ஆதிக்கத்தால் நாடு பொருளாதாரத் துறையில் நலிவடைகிறது. வளம்மிகுந்த நாட்டில் வறுமை தாண்டவ-மாடுகிறது. நோய்நாடி, அதுமுதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி. ஆவனசெய்து திராவிட சமுகத்தைக் காக்கவே திராவிடர் கழகம் தோன்றிற்று.

திராவிடர் கழகம் பார்ப்பனரல்லாதார் அதாவது ஆரியரல்லாதாருடைய கழகம். இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவு மொழிகள் பேசும் மக்கள் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் வாழ்வதற்குரியதாக ஆக்குவதற்கு திராவிடர் கழகம் தோன்றிற்று. வேறு எந்தப் பெயரால் அழைத்தாலும் இவ்வியக்கத்தின் கொள்கைகளை விளக்கத் தவறும். இதை ஏன் தமிழர் கழகம் என்று அழைக்கக் கூடாது என்று சிலர் ஆராயாமல் கேட்டுவிடுகிறார்கள் தமிழர் கழகம் என்று அழைத்தால் மற்ற திராவிட மொழிகள் பேசும் மக்களை விலக்கி நிற்கும். பார்ப்பனர்களும் தமிழ் மொழி பேசுவதால் தமிழர் கழகத்தில் இடம் பெறுவார்கள். எனவே தமிழர் கழகம் ஆரியத்தையும் பார்ப்பனியத்தையும் அழிக்கத் தவறிவிடும். திராவிட மக்களைப் பார்ப்பனியப் பிடியிலிருந்து விடுவிக்க முடியாமல் போய்விடும். திராவிட மொழிகளுக்குள்ளே மிகவும் ஒற்றுமையிருக்கிறது. 5 மொழி பேசிவரும் திராவிட மக்களுக்குத் தனி நாகரிகம், தனி கலை, தனி வாழ்க்கை முறை இருக்கின்றன. திராவிட நாடு ஆங்கிலேய ஆட்சிக்கு உட்படும் வரையில் தனித்தே இருந்தது. எனவே, திராவிட நாடு திராவிடருக்குரியதாகத் திராவிட நாட்டைத் திராவிடர் அடையவேண்டும். திராவிட நாட்டிற்குத் தனி அரசியல் உண்டு. திராவிட நாட்டில் மொழி வாரியாக தனி ஆட்சியிருந்-தாலும் 5 மொழிகள் பேசும் மக்களின், பிரதிநிதிகள் கொண்ட ஒரு கூட்டுச் சபை அமைக்கவேண்டும். வெளிநாட்டு விவகாரங்-களை இந்த கூட்டுச்சபையே கவனித்துவரும். எனவே திராவிட நாட்டிற்கும், திராவிட மக்களுக்கும், திராவிடர் கழகம் இன்றியமை-யாததாக இருக்கின்றது.

(01.05.1947 அன்று ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் மாணவர் பிரசார குழு பயிற்சிப்  பாசறையில் நடத்திய வகுப்பின் உரை தொகுப்பு.)

-உண்மை ,16-30.9.16

சிவகங்கை கீழடி அகழாய்வில் நகர வாழ்வு: 

சிவகங்கை கீழடி அகழாய்வில் நகர வாழ்வு: 
அடுத்தகட்ட தொடர் ஆய்வுக்கு மத்திய அரசுக்குப் பரிந்துரை

சிவகங்கை, செப்.30 சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய தொல்லியல் அகழாய்வுத் துறை யினர் மேற்கொண்ட ஆய்வில்  மண்பானை ஓடுகள் உள்ளிட்ட 5,300 சங்க கால பொருள்கள் கிடைத்துள்ளன.

எனவே அடுத்த கட்ட தொடர் ஆய்வுக்கு மத்திய அரசுக்கு  பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகர் 4 ஆயிரம் ஆண்டுகள்பழமையானநகர் என்று இலக்கியம், தொல் லியல் துறை சார்ந்த ஆய்வு கள் தெரிவிக்கின்றன. இந் நிலையில், வைகை ஆற்றை ஒட்டிய பகுதிகளில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் தொல்லியல்துறை அகழாய்வு பெங்களூருப் பிரிவு கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் சிறப்புக்குழுவினர் ஆய்வை மேற்கொண்டனர்.

சிவகங்கை மாவட்ட எல் லையில் உள்ள கீழடியில் 2015 ஜனவரி முதல் செப்டம்பர் வரை முதல்கட்ட ஆய்வு நடத்தப்பட்டது. இதில்43 தொல்லியல்குழிகள்இடப் பட்டு ஆய்வை மேற்கொண்ட னர். முதல் கட்ட ஆய்வில் மட்டும் 1800 சங்க கால தமிழர்கள் பயன்படுத்திய பொருள்கள் கிடைத்துள்ளன. மேலும் தமிழகத்தில் முதன் முறையாக சங்க கால நகர நாகரீகத்துடன் கூடிய கட்டட அடித்தளம்,கால்வாய்அமைப் புகளும் இங்கு கண்டறியப்பட் டுள்ளன. சுட்ட செங்கற்களால் ஆன வீட்டுச் சுவர்கள், உறைக் கிணறுகள், திறந்த, மூடிய, உருளை வடிவம் என கால்வாய்களும் கண்டறி யப்பட்டன.

எழுத்துகளுடன் உள்ள 32 சுடுமண்பானைகள் கண்டு பிடிக்கப்பட்டன.2ஆவதுகட் டமாக 2016 ஜனவரி முதல் செப்டம்பர் வரை நடத்தப்பட்ட 59 குழிகளின் ஆய்வுகளிலும் 3800 அரிய வகை சங்க கால மக்கள் பயன்படுத்திய பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அதே போல் யானைத் தந்தத்தினால் ஆன தாயக்கட் டைகள், சதுரங்கக் கட்டைகள், பெண்கள் அணியும் காதணி கள், மான் கொம்பினால் ஆனகத்திபோன்ற அமைப்பு கள்ஆகியவையும்மீட்கப்பட் டுள்ளன. மேலும், எழுத்துகளு டன் 39 சுடுமண் பானைகளும் கிடைத்தன. அதில் உள்ள எழுத்துகளை ஆய்வு செய்த போது, உதிரன், சேந்தன், முயன் என தனிப்பட்ட நபர் களது பெயர்களாக அவை இருப்பது தெரியவந்துள்ளது. மேலும்பிராகிருதம்எனப் படும் வடமொழி எழுத்து களும் பானை ஓடுகளில் காணப்படுவதாகஆய்வில்ஈடு பட்டுள்ளதொல்லியல்கண் காணிப்பாளர் கே.அமர்நாத்ராம கிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளில் நாலரை ஏக்கர் பரப்பளவில் 102 குழிகள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளன. இதன் மொத்த பரப்பு 50 சென்ட் அளவுதான் இருக்கும். தனி யார் நிலத்தில் ஒப்பந்த அடிப்படையில்ஆய்வுநடத் தப்பட்டு பொருள்கள் மீட்கப் பட்டுள்ளன.

அவை கர்நாடக மாநி லம்பெங்களூருவில்உள்ள தொல்லியல்துறை ஆய்வுக் கூடத்துக்கு எடுத்துச் செல் லப்படும். கீழடியில் அடுத்த கட்ட ஆய்வு நடத்தவும் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளோம். அனுமதி கிடைத்ததும் ஆய்வு தொடரும் என்றார்.

கடந்த இரு ஆண்டுகளில் தொல்லியல்துறை கண் காணிப்பாளர், துணைக் கண் காணிப்பாளர், 2 உதவியாளர்கள், 6 ஆய்வாளர்கள் ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். ஆய்வுக்காக 2015-இல் ரூ.25 லட்சமும், 2016 செப்டம்பர் வரை ரூ.30 லட்சமும் செல விடப்பட்டுள்ளது என்றும் தொல்லியல்துறையினர் கூறு கின்றனர்.
இதுவரை தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய் வுகளிலேயே கீழடி ஆய்வுதான் மிகச்சிறப்பானதாகும். புதிய தமிழ்ச் சொற்களும் இங்குதான் கிடைத்துள்ளன.
ஆகவே இப்பொருள்களை அங்கேயே வைத்து காட்சிப் படுத்தும் வகையில் அருங் காட்சியகம் அமைக்க தமி ழக அரசு நிலம் ஒதுக்கித் தரவேண்டும்என்பதே தமிழ் ஆர்வலர்களின் கோரிக்கையா கும்

கீழடி அகழ்வாய்வில் கிடைத்த பொருட்கள்
மைசூரு கொண்டு செல்ல இடைக்காலத் தடை

மதுரை அருகே கீழடி அகழ்வாய்வில் கிடைத்த பழங்கால பொருட்களை சிவ கங்கை மாவட்டத்தை விட்டு வெளியே கொண்டு செல்லவும், அகழ்வாய்வு மேற் கொள்ளப்பட்ட குழிகளை மூடவும் உயர்நீதி மன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. 

கீழடிஅகழ்வாய்வில்,2,500 ஆண்டுக்கு முந்தையநகரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதுடன், அந்த நகர மக்கள் பயன் படுத்திய 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களும் கிடைத்துள்ளன. 

இவற்றை மைசூருஅருங்காட்சியகத்திற்கு கொண்டு செல்ல முடிவெடுக்கப்பட்டு, 2 நாட்களில் அங்கு கொண்டு செல்லப்பட இருந்தது. ஆனால், அவற்றை மைசூரு கொண்டு செல்லக்கூடாது என்றும், கீழடி பகுதியிலேயே ஒரு அருங்காட்சியகத்தை ஏற்படுத்தி பாதுகாக்க வேண்டும் என்று அதற்கான 2 ஏக்கர் நிலத்தைதமிழக அரசு வழங்கவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கம் உள்ளிட்ட கலை- இலக்கிய அமைப்புக்களும் கோரிக்கை விடுத்திருந்தன. 

இந்நிலையில், கனிமொழி மதி என்ப வர் இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். வியாழனன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நாகமுத்து, முரளிதரன்ஆகியோர் அடங்கிய அமர்வு, அகழ்வாய்வில் கிடைத்த அரும் பொருட்களை அக்டோபர் 18- ஆம் தேதி வரை கீழடியிலிருந்து எடுத்துச் செல்லக் கூடாது; ஆய்வுக் குழிகளை மூடக் கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. மேலும், கனிமொழி மதியின் மனு தொடர்பாக, இந்தியத் தொல்லியல் துறையின் இயக்குநர் ஜெனரலுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி கள் உத்தரவிட்டனர்.

விடுதலை,30.9.16

திங்கள், 5 செப்டம்பர், 2016

திராவிடர் இயக்க வரலாற்று நடைபயணம்


சென்னை. செப், 5-. சென்னை வாரத்தையொட்டி, ‘பெரியார்’ என்ற பட்டம் கொடுக்கப்பட்ட ஒற்றைவாடை தியேட்டர் உள்ளிட்ட திராவிடர் இயக்கம் ஆளுமை செலுத்திய பல்வேறு வரலாறுப்பகுதிகளை நடந்து சென்று பார்த்தும், கேட்டும் தெரிந்து கொள்ளும் நடைபய ணம் மேற்கொள்ளப்பட்டது.
ஆறாவது முறையாக நடைபயணம்! 
சென்னை மற்றும் தமிழ் நாடு முழுவதிலுமுள்ள திராவி டர் இயக்கத்தின் வரலாற்றுப் பூர்வமான இடங்களுக்கு பய ணம் மேற்கொள்வதை இலக் காகக் கொண்டு தொடக்கமாக, திராவிடர் இயக்க வரலாற்று ஆய்வு மய்யம் சென்னை தியா கராய நகர், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் இதுவரையி லும் அய்ந்து நடைபயணங் களை ஒருங்கிணைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக சென் னையின் 377 ஆவது பிறந்த (22.08.1639) நாளையொட்டி 28.08.2016 ஞாயிறன்று காலை வடசென்னை பகுதியில், 6 மணிக்கு ரிப்பன் பில்டிங்கில் தொடங்கி காலை 8 மணிக்கு தங்கசாலையில் நிறைவு செய் யப்பட்டது. ஆறாவது முறை யாக நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச் சியை ச. பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்கள் ஒருங்கி ணைப்பு செய்திருந்தார்.
தலைகீழ் புரட்சிக்கு சாட்சிகள்!
இதில், நீதிக்கட்சியின் நீதி மான்கள் பலரும் ஆட்சி செய்து பல சாதனைகளைப் புரிந்த தற்கு சாட்சியமாக இன்றும் கம்பீரமாக நிற்கும் ரிப்பன் பில்டிங்! அதற்கு அடுத்துள்ள தும் டி.எம். நாயரின் புகழ் பெற்ற உரைகள் உள்ளிட்ட பல்வேறு வரலாற்றுப்பின்னணி கொண்டதுமான விக்டோரியா பப்ளிக் ஹால்! சென்னை பெரியார் திடலில் இன்றும் செம்மாந்து நிற்கும் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றம் தோன் றக் காரணமாக இருந்த மெமோ ரியல் ஹால்! பஞ்சமருக்கு இங்கு இடமில்லை என்று எந்த இடத்தில் எழுதிவைக்கப் பட்டிருந்ததோ, தலைகீழ் புரட்சியாக அதே இடத்தில் வைத்துத்தான் ஈ.வெ. ராமசாமி என்று அறியப்பட்டவருக்கு, அவரால் உரிமை பெற்ற பெண் கள்  ஒன்றுகூடி, ‘பெரியார்’ என்ற பட்டம் கொடுத்த வர லாற்றுச் சிறப்புமிக்க ஒற்றை வாடை தியேட்டர்! கவர்னர் எல்லீஸ் காலத்தில் வெட்டிக் கொடுக்கப்பட்ட ஏழுகிணறு பகுதி, மொழிப்போர் மறவர் களான தாளமுத்து நடராசன் ஆகியோரின் நினைவிடமான மூலகொத்தளம்! மேனாள் மேய ரான தந்தை என். சிவராஜன் அவர்களின் சிலை! இன்று அரசு அச்சகமாகவும், அன்று அரசின் நாணயச்சாலையாகவும் இருந்த தங்கசாலை! இங்கு தான் எல்லீஸ் கவர்னரால் திரு வள்ளுவர் உருவப்படம் பொறித்த தங்கக்காசு அச்சடிக்கப்பட்டது. இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்ற சிவஞானம் பூங்கா! ராமசாமி முதலியார் சத்திரம்! வால்டாக்ஸ் சாலை! மற்றும் இந்து தியாலஜிகல் பள்ளி! ஆகிய இடங்களுக்கு மாக சுமார் 5 கிலோமீட்டருக்கும் மேலாக நடந்து சென்று திரா விடர் இயக்கத்தின் அரிய வர லாற்றை தோழர்கள் கண்டு கேட்டு அசைபோட்டனர்.
காலப்பயணம் சென்ற உணர்வு!
இதழாளர் கோவி. லெனின், ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வை. கலையரசன் ஆகி யோர் வரலாற்றுக் குறிப்புகளை வந்தவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். இந்த நடைபய ணத்தில், ஆவணப்பட இயக்குநர் அன்வர், திராவிட இயக்கப் பற்றாளர் சரவணகுமார், மருத்துவர் தேனருவி, தென் சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, வழக்கறிஞர் சென்னியப்பன், க. தமிழ் செல்வன், த. அண்ணாதுரை, அரும்பாக்கம் தாமோதரன், தமிழ்நிலா, பெரியார் திடல் ஆனந்த், தமிழ்ச்செல்வி, பழனி குமார் ஆகியோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

பயணம் முடிந்ததும் அனை வருக்கும் சிற்றுண்டி ஏற்பாடு செய்துதரப்பட்டது. திராவிடர் இயக்கத்தின் சாதனைகளைப் பற்றி புத்தகத்தில் படித்த உணர் வையும் தாண்டி, அந்தந்த இடங் களுக்கே அந்தந்த காலகட்டத் திற்கே சென்றது போல ஒரு -நெகிழ்ச்சியான உணர்வு தோழர்களுக்கு ஏற்பட்டதை ஒரு வருடன் மற்றொருவர் பகிர்ந்து கொண்டு விடை பெற்றனர்.
-விடுதலை நாளேடு,5.9.16

யூதர்கள் ஆரியர்களே!

மகாராட்டிரத்தில் பிஜேபி ஆட்சி யூதர்களை சிறுபான்மையினர் என்று கூறி இடஒதுக்கீடு கொடுக்கிறது காரணம் என்ன?
ஆரியர்கள் என்பவர்கள் பெர்சியா (ஈரான்) நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆரிய மொழி என்பது இந்திய-_பெர்சிய  மொழியாகும்.  இம்மொழி யானது சமஸ்கிருதம் என்று பெரிதும் சொல்லப்படுகின்றது  இதைப்பற்றி பெர்சிய நாட்டின் வரலாறு மற்றும் இலக்கியங்களில் விரிவாகப் படிக்கலாம். ஆரிய என்பதே ஈரான் என பின்பு திரிந்தது   பாரசீக மன்னன் "தரியு" தானோர் ஆரிய வம்சத்தில் வந்தவன் என கல்வெட்டில் பதித்தான்.
ஆரியர்கள் ரிக் என்னும் வேதத்தில் சொல்லியபடி "அக்கினி", "மழை", "காற்று", "குதிரை", "சூரியன்" என இயற்கை வழிபாடுகளை உடையவர்களாகவே இருந்தனர். பலிகொடுப்பது போன்ற பழக்கங்கள்  "யூதர்கள்" மற்றும் "ஆரியர் களின்" கலாச்சார பாதிப்பாக இருக்க வேண்டும். ஏனெனில் முதன்முதலில் பாவம் செய்தவன் பலி செலுத்த வேண்டும் என்று சொல்லப்பட்டது பைபிளில்தான்,  ஆரியர்கள் என்ப வர்கள் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே பெர்சியாவில் இருந்தனர்.
பார்ப்பனர்கள்
ஆரியர்களா? யூதர்களா? 
பார்ப்பனர்கள் ஆரியர்கள் என்ப தற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? எதைக்கொண்டு அவர்களை ஆரியர் என்பது?யூதர்களது புராதன மொழி யாகிய எபிரேய மொழியில்  எல்  என்பது கடவுள் என்ற பொருள் கொண்டது. இயேசு (தெய்வ குமாரன்) மனுஷ குமாரனாக அவதரிப்பார் என்பது எபிரேய மொழியில் எழுதப் பட்ட பழைய ஏற்பாடு சொல்லுகிறதும் உலகம் அறிந்த விஷயமல்லவா? பழைய ஏற்பாட்டின்படி  ஜெஹேவா பிரதான மான ஒரே கடவுளல்லவா?இந்து மதத்துக்கும் யூதர் நாகரிகத்துக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதிலிருந்து இந்து மதத்தின் ஆதீனகாரர்களான பார்ப் பனர்கள், யூதர்கள் தான் என்று யூகிக்க இடமில்லையா? எருசலேம் தேவாலய மும் இந்து கோவில்களும் சுற்றுப் பிரகாரம், தெப்பக்குளம், கொடிமரம், மண்டபம், மூலஸ்தானம், தூபம், பூசை முதலிய விஷயங்களில் ஒன்றுபட்டிருக் கின்றன.
பாலஸ்தீன நாட்டில் பிரதான புருஷர்களை தெய்வமாக கொண்டா டும் வழக்கம் இருக்கிறது. இந்தியாவிலும் பிரதான புருஷர்களை தெய்வமாக கொண்டாடும் வழக்கம் இருக்கிறது. ஆகையால் இவ்வழக்கம் அங்கிருந்து தானே வந்திருக்கவேண்டும்? யூதர்களின் ஜஹேவா இந்துக்களின் சிவா என மருவி இருக்கலாமல்லவா?எல் என்ற எபிரேய பதம், வேல் என்று மருவி இருக்காதா? யேசு பிறப்பார் என்ற யூத ஏற்பாடுப்படி பிறந்த பிள்ளையே தான் குமாரக்கடவுள் பிறப்பார் என்ற ஏற்பாட்டுபின் ஏற்பட்டதாகாதா? பிள்ளையார் கோவிலிலுள்ள நாகம் அரசமரம் வேம்பு முதலியவற்றிற்கும் முறையே ஏதேன் சர்ப்பத்திற்கும் தேவதாரு மரத்துக்கும் நன்மை தீமை அறியும் மரத்துக்கும் ஒற்றுமை இல்லையா?இவ்வொற்றுமைகள் எப்படி ஏற்பட்டிருக்க முடியும்?
யூதர்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் என்பதற்கும் பார்ப் பனர்கள் கடவுள் முகத்திலிருந்து சிருஷ்டிக்கப்பட்டவர்கள் என்பதற்கும் என்ன வித்தியாசம்? யூதர்கள் தீபதூபம் காட்டி மணியடிக்கின்றார்கள் என்ப தற்கும் பார்ப்பனர்கள் அதே மாதிரி அர்ச்சகர் என்பதற்கும் ஒற்றுமை இல்லையா?
யூதர்கள் மற்ற ஜாதியாரோடு கலந்து கொள்ளாமல் ஒதுக்கி நிற்பவர்கள் என்பதற்கும், பார்ப்பனர்கள் மற்ற ஜாதியாரோடு கலந்துகொள்ளாமல் ஒதுங்கி நிற்பதற்கும் ஒற்றுமை இல் லையா?யூதர்களுக்கு குடியிருக்க குறிப் பிட்ட நாடு இல்லை நாட்டுப்பற்றும் இல்லை, என்பதற்கும் பார்ப்பனர்களுக்கு குறிப்பிட்ட ஊர் இல்லை என்பதற்கும் நாட்டுப்பற்று இல்லை என்பதற்கும் ஒற்றுமை இருக்கிறதா? இல்லையா?
யூதர்கள், தங்கள் சுகந்தேடுவதும் எப்படியாவது சரீரப்பாடுபடாமல் பொருள் தேடியலைவதுமான குணம் கொண்டவர்கள் என்பதற்கும் பார்ப் பனர்கள் தங்கள் சுயநலமும் எப்படியா வது பாடுபடாமல் பொருள்தேடி அலை கிறவர்கள் என்பதற்கும் பொருத்தம் சரியாக இல்லையா?
யூதர்கள் சிறிதும் தங்களைத் தவிர வேறு எதிலும் பொறுப்பு இல்லாமல் எப்படி யாவது ஆளுகிறவர்களை சுவாதீனம் செய்து கொண்டு ஆளுவதில் கலந்து கொண்டு தந்திரங்கள் செய்து மற்ற குடிகளை வாட்டி வதக்கி உயிர்வாங்க வாழுகிறவர்கள் என்பதற்கும் பார்ப் பனர்களும் சிறிதும் பொறுப்பு இல்லாமல் எப்படியாவது ஆளுகிறவர் களை சுவாதீனம் செய்து கொண்டு ஆட்சியில் புகுந்து ஆதிக்கம் செலுத்தப் பார்க்கிறவர்கள் என்பதற்கும் சரியான பொருத்தம் இல்லையா?
யூதர்கள் கதைகளும் சித்தாந்தங்களும் பகுத்தறிவுக்கு முரணான கற்பனைகள் என்பது போலவே பார்ப்பனர்களின் புராணங்களும் அவர்களது சித்தாந்தங் களும் போதனைகளும் பகுத்தறிவுக்கு முரணானதாக இருப்பதும் மிக மிக பொருத்தமானதாக இருக்கிறதா இல்லையா?
யூதர்கள் வீரங்கொண்டு மக்களை ஆளாமல் வகுப்பு வாதத்தாலும் மற்றும் பிரிவினைகளாலும் பிரித்து வைப்பதில் கைதேர்ந்தவர்கள் போலவே பார்ப் பனர்களும் இருப்பதால் இருவரும் ஒரே வகுப்பினர் என்று சொல்ல இடமிருக் கிறதா இல்லையா?வடிவத்திலும் நிறத் திலும் யூதர்களும் பார்ப்பனர்களும் ஒன்றுபோல் இல்லையா?
இந்த பார்ப்பனர்களை ஆரியர்கள் என்பதை விட யூதர்கள் என்பது பொருத் தமாக இல்லையா?ஆகவே இப்பொருத் தங்களை சரியானபடி கவனித்து ஆராய்ச்சி செய்து பார்த்து பார்ப்பனர்கள் யூதர்களா அல்லவா என்பதை தெரி விக்கும்படி ஆராய்ச்சியாளர்களை வேண் டிக் கொள்ளுகிறேன்.
‘குடிஅரசு’  கட்டுரை  20.03.1938
விடுதலை ஞாயிறு மலர், 9.7.16

வெள்ளி, 2 செப்டம்பர், 2016

இந்து புராண புரட்டுகள் மூலம் அசுரனாக்கப்பட்ட மகிஷன் ஒரு பவுத்த அரசன்



மைசூரு அல்லது மகிஷ மண்டலா ராஜாங்கத்தின் மிகச் சிறந்த ஆட்சியா ளராக இருந்தவர் மகிஷா. புத்தமத கலாச்சாரத்திலும் மரபிலும் வந்த மகிஷா, மனிதநேயத்தையும் ஜனநாயக கொள்கைகளையும் தனது ஆளுமையில் பின்பற்றினார். ஆனால், கர்நாடகத்தின் கலாச்சார மற்றும் அறிவுசார் தலை நகரமான மைசூருவை,
புராணங்கள் மூலம் பார்ப்பன சக்திகள் திட்ட மிட்டே புதைத்தன என்கிறார் பேரா சிரியர் மகேஷ் சந்திர குரு. விரைவில் வெளிவரவிருக்கும் (MAHISHASUR BRAHMANIZING A MYTH) என்ற நூலிலிருந்து இந்த கட்டுரையை ஃபார்வர்டு பிரஸ் வெளியிட்டுள்ளது. அதன் தமிழாக்கம் இங்கே:
மைசூரு, கர்நாடகத்தின் இரண் டாவது மிகப் பெரிய நகரமாக இருக்கிறது. பெங்களூருவிலிருந்து 130 கிமீ தென்கிழக்கில் அமைந்துள்ளது. பண்டைய வரலாற்றில் அசோக அரசரின் காலத்தில் அதாவது கி.மு. 245இல் மைசூர் அல்லது மகிஷூர் என குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாவது புத்தமத பட்டமேற்பு விழாவுக்குப் பிறகு, மகாதேவா என்னும் பெயர் கொண்ட புத்தத்துறவியை அசோகர், புத்தமத கொள்கைகளைப் பரப்பி மக்கள் நலன்சார்ந்த அரசை நிறுவும்படி அனுப்பிவைத்தார்.
மகாதேவா, மகிஷா என பின்னர் அழைக்கப்பட்டு, மகிஷ மண்டலா எனும் ராஜ்ஜியத்தை நிறு வினார். கர்நாடகாவின் வடக்குப் பகுதி களில் அசோகரின் சில அரசாணைகள் கிடைத்துள்ளன. மகிஷனின் அரசாட் சிக்கு சான்றாக வரலாற்று நினைவுச் சின்னங்கள், காப்பக ஆவணங்கள் இந்தப் பகுதியில் கிடைத்துள்ளன.
கி.பி. 1399 ஆம் ஆண்டு மைசூரு, யது வம்சம் ஆட்சியின் கீழ் வந்தது. விஜயநகர அரசின் எதிரிகளாக யது வம்சத்தினர் இருந்தனர். மைசூரு மாகாணத்தின் வளர்ச்சியில் அவர்களும் முக்கிய பங்காற்றியுள்ளனர். மைசூரு வின் ராஜாவாக இருந்த பெட்டத காமராஜ உடையார், கி.பி. 1584ஆம் ஆண்டு சிறிய கோட்டை ஒன்றைக் கட்டினார். தனது தலைநகரமாக மைசூருவை மாற்றிய ராஜா, அதை மகிஷாசுர நகர என அழைத்தார். 17 -ஆம் நூற்றாண்டின் காப்பக ஆவணங் கள் பலவற்றில் மைசூரு, மகிஷுரு எனவே குறிப்பிடப்படுகிறது. ராஜா உடையார் தனது தலைநகரை மைசூரு விலிருந்து சிறீரங்க பட்டணாவுக்கு கி.பி. 1610-ஆம் ஆண்டில் மாற்றினார்.
ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் மைசூருவின் சிறந்த ஆட்சியாளர்களாக இருந்தார்கள். ஹைதர் அலி, மைசூரு ராஜாங்கத்தை விரிவுபடுத்தினார். அவருடைய மகன் திப்பு சுல்தான், தனது சர்வதேச தொடர்புகள் மூலம் ராஜாங் கத்தை மேலும் முன்னேற்றினார். இந்தியாவை ஆண்ட பிரிட்டீசாருடன் அவர் எவ்வித சமரசங்களையும் செய்து கொள்ளவில்லை.
ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போரிட்டு 1799-ஆம் ஆண்டு அவர் உயிர் துறந்தார். அவருடைய பெயர் நவீன இந்திய வரலாற்றில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. திப்பு சுல்தான் இறந்த பிறகு, மைசூரு, உடையார்களின் தலைநகராக மீண்டும் உருவானது. பிரிட்டீசார், உடையார்களை  அரி யணை ஏற்றி, தங்களுடைய கூட்டாளி களாக ஆக்கிக் கொண்டார்கள். மைசூரு சுதேசி மாகாணமாக மாறியது.
சிறுநகரமாக இருந்த மைசூரு, நவீன நகரமாக உருமாறியது 2-ஆம் கிருஷ்ண ராஜா உடையார் காலத்தில். 4-ஆம் கிருஷ்ணராஜா உடையார், புதிய கட்டு மானங்களை நிர்மாணித்து, பொரு ளாதாரா ரீதியில் விரிவுபடுத்தி மைசூ ருவை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வந்தார். அவர் ஜனநாயகவாதி, மனித நேயம் மிக்கவர், வளர்ச்சியை முன் வைத்த நிர்வாகி. 1947-ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடையும் வரையிலும் உடை யார்களின் ஆட்சி இங்கே தொடர்ந்தது. அதன் பிறகு ஒருங்கிணைந்த இந்தி யாவின் அங்கமானது மைசூரு.
பவுத்தத்துக்கும், பார்ப்பனியத்துக்கும் இடையேயான மோதலின் வரலாறே இந்திய வரலாறு என அம்பேத்கர் இந்திய வரலாறு குறித்து சொல்லுவார். பார்ப்பனியம், ஜாதி அமைப்பையும் ஜாதிய ஆதிக்கத்தையும் வலியுறுத்தியது. பவுத்தம், மனிதநேயத்தை அறம் சார்ந்த ஜனநாயகத்தையும் பேசியது. ஆரியர்கள், இந்தியாவின்மீது படையெடுத்து மண்ணின் மைந்தர்களை ஜனநாயக மற்ற முறைகளில் ஒடுக்கினார்கள். அதுபோல, பவுத்த அடித்தளத்தை சிதைத்து பார்ப்பனியத்தை நடைமுறைப் படுத்தினார்கள்.
ஆரியர்களின் புரட் டுகள் மூலம் மண்ணின் மைந்தர் களான, மகிஷா போன்ற ஆட்சியா ளர்கள் தூக்கி எறியப்பட்டார்கள்.
மைசூரு, மகிஷ மண்டலா, மகிஷாசுரநாடு, மகிஷநாடு, மகிஷபுரா என பலப் பெயர்களில் வழங்கப்பட்டது. வேளாண்மையை முதன்மையாகக் கொண்ட மாகாணமாக திகழ்ந்த மகிஷ மண்டலத்தில் எருமைகள் உழவுக்கும், பால் தேவைக்கும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. மைசூரு, எருமைகளின் நாடு எனப் போற்றும் வகையில் எருமையூர் (பேரா.குரு எருமையூரன் என்கிறார், அன் விகுதி மகிஷனை குறிக்கலாம்) என்று அழைக் கப்பட்டது. பவுத்த மற்றும் ஹொய்சால இலக்கியங்களில் மகிஷ மண்டலம் குறித்து ஏராளமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அந்தக் காலகட் டத்தில் இந்த மாகாணத்தில் ஏராள மான நகரங்கள் இருந்திருக்கின்றன.
பிறப்பில் திராவிடர்களாக இருந்த நாகர்கள், தென் இந்தியாவை ஆண் டனர். பேராசிரியர் மல்லேபுரம் ஜி. வெங்கடேஷ் நாகர்களுக்கும் மகிஷ மக்களுக்கும் தொடர்பிருப்பதை கண்டறிந்திருக்கிறார். நாகர்கள் தங்களுடைய கலாச்சாரம் மதிப்புமிக்கது என்பதை உணர்ந்து ஆரிய ஊடுரு வலைத் தடுக்க போரிட்டார்கள். மானுடவியலாளர் எம் . எம். ஹிராமத், கர்நாடகத்தில் நாகர்கள், மகிஷர்கள் என்ற இரண்டு மிகச் சிறந்த இனங்கள் இருந்ததாகச் சொல்கிறார்.
ஆரியர்கள் புராணங்கள் மூலம், பவுத்த அரசர்களை சிறுமைப்படுத்தி னார்கள். அவர்கள்விட்ட ஒரு புரட்டுதான் இந்தக் கதை: ஒரு மனிதன், எருமையுடன் உறவுகொண்டதால் பிறந்தவனே மகிஷன் என்ற கதை. வரலாற்றாசிரியர் மஞ்சப்ப ஷெட்டி (The palace of mysore - -- என்ற நூலின் ஆசிரியர்)யின் கூற்றுப்படி, மக்களைக் காப்பாற்றும் பொருட்டும், நீதியை நிலைநாட்டும் பொருட்டும் சாமுண்டி என்ற பெண்கடவுள், மகிஷனைக் கொன்றதாக பூசாரிகளே பொய்க் கதையைப் பரப்பினர் என்கிறார். மகிஷன் ஒரு அசுரன் என்பதை வேண்டுமென்றே ஊன்றினார்கள்.
சாமுண்டீஸ்வரிதான் மகிஷனைக் கொன்றாள் என்கிற இந்து புராணக் கதைக்கு எவ்வித ஆதாரமும் இல்லை.  மகிஷன் உண்மையில் பவுத்த- பகுஜன் அரசன்; நீதி, சமத்துவத்தின் குறியீடு. ஒரு கையில் வாள் ஏந்தியும் மற்றொரு கையில் பாம்பொன்றை பிடித்திருப்ப தாகவும் உள்ளது மகிஷனின்  உருவம். மகிஷனின் வீரத்தை வாளும், நாகா கலாச்சாரத்தில் பவுத்தம் வலியுறுத்திய இயற்கையின் மீதான அன்பை பாம்பும் குறிக்கின்றன.
நாட்டுப்புறவியல் நிபுணர் காலே கவுடா நாகாவார், தற்போது மைசூரு என வழங்கப்படும்  மகிஷ மண்ட லத்தை மகிஷன் ஆண்டார். அவர் ஓர் உன்னதமான பவுத்த அரசராக இருந்தார். முற்போக்கான நிர்வாகி யாகவும் சமூகத்தின் எல்லா பிரிவினரின் அதிகாரத்தை நிலைநாட்டியவராகவும் இருந்தார். உண்மைகள் திரிக்கப்பட் டன. மக்கள் உண்மைகளைத் தெரிந்து கொள்ளவேண்டும். இந்து புராணங் கள் மகிஷனை எதிர்மறையாகக் காட் டின. இந்த மாகாண மக்கள் தசரா விழாவை மகிஷ மண்டலத்தின் கீழ் வேறுவிதமாகக் கொண்டாட வேண்டும் என்கிறார்.
பிரபல எழுத்தாளர் (கன்னட) பன்னூர் ராஜா, சாமுண்டி மலை, முன்பு மகாபலேஸ்வரம் என அழைக் கப்பட்டது. இப்போதும் இந்தக் குன்றின் மீது, மகாபலேஸ்வரா கோயில் உள்ளது. யது வம்ச ஆட்சியின் போது சாமுண்டி என இந்த மலை பெயர் மாற்றம்பெற்றது.  பூசாரிகளுடன், ஆட்சியாளர்களும் சேர்ந்துகொண்டு சாமுண்டீஸ்வரி, மகிஷாசூரனைக் கொன்றாள் என்ற கதையைப் புனைந் தார்கள். இது ஆதாரமற்றது; கண்டிக் கத்தக்கது என்கிறார்.முற்போக்கு சிந்தனையாளரும் மகிஷ மண்டலா என்னும் நூலின் ஆசிரியருமான சித்தஸ்வாமி சொல்கிறார்: மகிஷா என்பதே மைசூரு என்பதன் வேர்ச் சொல். அசுரன் என்று எழுதிய குழுவாத எழுத்தாளர்களின் சூழ்ச்சிக்கு அவர் இரையானார். புத்தர் மற்றும் அசோகரின் கொள்கைகளை நடை முறைப்படுத்திய மகிஷா, ஓர் சிறந்த ஆட்சியாளர் என்று சொல்கிறார்.
வரலாற்றை மீட்டெடுத்தல்
மைசூரு மாகாணத்தின் மண்ணின் மைந்தர்கள், மகிஷாசன ஹப்பா (மகிஷனின் விழா) என்கிற பெயரில் இந்த நகரத்தின் வரலாற்றை மாற்றி எழுத ஒன்றிணைந்திருக்கிறார்கள். இந்நகரத்தைச் சேர்ந்த பகுத்தறிவாளர் கள் சாமுண்டி மலையில் தசரா கொண்டாட்டங்கள் நடந்து கொண் டிருந்தபோது மகிஷனுக்கு 2015 அக்டோபர் 11,  அன்று விழா எடுத்தோம். இந்நிகழ்வு கர்நாடாக தலித் வெல்ஃபேர் டிரஸ்டின் மூலமும் மேலும் பல முற்போக்கு அமைப்பு களின் துணையுடனும் நடந்தது.
இதில் நூற்றுக்கணக்கான சிந்தனையாளர்கள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், செயற்பாட்டாளர்கள் பங்கேற்றனர். கர்நாடக தலித் வெல்ஃபேர் டிரஸ்டின் தலைவரான சாந்தராஜு, மைசூரு மக்கள் தங்களுடைய  நகரத்தின் தோற்றம் குறித்து தெளிவாக அறிந்து வரலாற்றின்படி இந்த நகரத்தைத் தோற்றுவித்தவரான மகிஷனுக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும் எனக்கேட்டுக் கொண்டார். விழாவின் போது மகிஷனின் சிலைமீது சரமாரி யாக கற்களை வீசினார்கள். ஆனால் மண்ணின் மைந்தர்கள் மகிஷனை உயர் விக்கும் வகையில் தசராவைக் கொண்டாடுவார்கள். (ஜூன் 20 பார்வர்டு பிரஸ் வெளியீடு)
யார் இந்த மகேஷ் சந்திரகுரு
இந்தியாவில் தலித் பவுத்தத்தை சேர்ந்த ஒரே இதழியல் பேராசிரியர் தான் மகேஷ் சந்தர குரு. மைசூரு பல்கலைக்கழகத்தில் 30-ஆண்டு களுக்கும் மேல் பணியாற்றி வருகிறார். கர்நாடக பணியாளர் தேர்வாணையம், மத்திய பணியாளர் தேர்வாணையம், யூ.ஜி.சி. குழுக்களிலும் உறுப்பினராக உள்ளார். மகிஷா சூர இயக்கத்தை நடத்தி வருகிறார்.
-விடுதலை ஞா.ம.6.8.16