ஞாயிறு, 22 நவம்பர், 2015

சுயமரியாதை இயக்கம் 90, நீதிக்கட்சி நூற்றாண்டு விழா

\
சென்னை, நவ.20-_ நீதிக் கட்சி நூற்றாண்டு சுயமரியாதை இயக்க 90ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று (20.11.2015) காலை சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தின் சார்பில் மிகுந்த எழுச்சியுடன் தொடங்கி நடைபெற்றது.

இவ்விழாவை தி.மு.க. பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் தொடங்கி வைத்து விழா மலரை வெளியிட்டு தொடக்கவுரையாற்றினார்.
பார்ப்பனரல்லாதார் மக்களுக்கு சம உரிமையை தர வேண்டும் என்று தொடங்கப்பட்ட நீதிக் கட்சியின் தோன்றல் களான டாக்டர் சி. நடே சனார், சர். பிட்டி. தியாக ராயர், ஏ.டி. பன்னீர் செல்வம், டாக்டர் டி.எம். நாயர், எஸ். முத்தையா முதலியார், இரட்டை மலை சீனிவாசன் சுயமரி யாதைச் செம்மல் செ.தெ. நாயகம் , ம. சிங்காரவேலர், பொப்பிலிராஜாஆகியோரின் கொள்கை வழியில் வந்த தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், அறிஞர் அண்ணா ஆகியோர் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக் காக, செய்த தொண்டி னைப் போற்றும் வகையில் நீதிக்கட்சியின் கொள்கை வழியாக வந்த திராவிடர் கழகம் நீதிக்கட்சி நூற் றாண்டு - சுயமரியாதை இயக்க 90ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று நடை பெற்றது.

சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் இன்று (20.11.2015) காலை 10 மணிக்கு இவ்விழாவின் முதல் நிகழ்வாக திராவிடர் இயக்க வரலாற்று முக்கிய நிகழ்ச்சிகள் திரையிடப்பட் டது. நீதிக்கட்சி நூற்றாண்டு சுயமரியாதை இயக்க 90ஆம் ஆண்டு தொடக்க விழாவிற்கு வந்திருந்தவர் களை வரவேற்று திரா விடர் கழகப் பொதுச் செயல £ளர் வீ. அன்புராஜ் உரை யாற்றினார்.
தி.மு.க. பொதுச் செய லாளர் இனமானப் பேரா சிரியர் க. அன்பழகன் அவர்கள் இவ்விழாவைத் தொடங்கி வைத்து உரை யாற்றினார்.
விடுதலை சிறப்பு  மலர் வெளியீடு
இவ்விழாவில் இன மான பேராசிரியர் க. அன்ப ழகன் அவர்கள், “நீதிக்கட்சி 100 -_ சுயமரியாதை இயக் கம் 90 விடுதலை சிறப்பு மலரை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர் களின் முன்னிலையில் வெளியிட, நீதியரசர் எஸ். மோகன், முனைவர் நன்னன், நீதியரசர் ஏ.கே. ராஜன் ஆகியோர் பெற் றுக் கொண்டனர்.
முன்னதாக தமிழர் தலைவர்கள் இவ்விழாவில் பங்கேற்ற பேராசிரியர் க. அன்பழகன், நீதியரசர் எஸ் மோகன், ஏ.கே. ராஜன், முனைவர் நன்னன் ஆகி யோருக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்.

வாழ்த்தரங்கம்
நீதிக்கட்சி 100 சுயமரி யாதை இயக்கம் 90 விழா குறித்த வாழ்த்தரங்கில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜஸ்டிஸ் எஸ். மோகன், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜஸ்டிஸ் ஏ.கே. ராஜன், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, பெரியார் பேரு ரையாளர் புலவர் மா. நன் னன் ஆகியோர் உரை யாற்றினர்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், செயல வைத் தலைவர் சு. அறி வுக்கரசு, பொதுச் செயலா ளர்கள் முனைவர் துரை. சந்திரசேகரன், தஞ்சை இரா. ஜெயக்குமார் ஆகி யோர் பங்கேற்ற இவ்வாழ்த் தரங்கிற்கு வரியியல் அறிஞர் ச. இராசரத்தினம், முன்னாள் மாவட்ட நீதிபதி ஆர். பரஞ்ஜோதி, திராவிடர் கழக வழக்குரை ஞரணி தலைவர் த. வீரசே கரன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். சென்னை மண்டல கழக மாணவ ரணி செயலாளர் மணி யம்மை இணைப்புரை வழங்கினார்.  -

சுயமரியாதை இயக்கம் - நீதிக்கட்சித் தலைவர்களின் வழித் தோன்றல்களை  பாராட்டி பயனாடை அணிவித்து நினைவுப் பரிசினை வழங்கினார் திராவிடர் கழகத் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி 20.11.2015

நீதிக்கட்சியின் முன்னோடி முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்அவர்களின் மகள் மருத்துவர் மணிமேகலை கண்ணன்.

நீதிக்கட்சியின் முன்னோடி, தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் கொள்ளுப்பேத்தி முனைவர் நிர்மலா அருள் பிரகாஷ் (பொதுச் செயலாளர், தமிழ்நாடு மாநில காங்கிரஸ்)
நீதிக்கட்சியின் முன்னோடி சி.டி.நாயகம் அவர்களின் மகன் வழி மூத்த பேரன் பொறியாளர் சி.இராமநாத நாயகம்
நீதிக்கட்சியின் முன்னோடி, வகுப்புரிமை ஆணை தந்த தலைவர் முத்தையா முதலியார் அவர்களின் மகள் வழிப் பேரன் வை.இராஜசேகரன்
நீதிக்கட்சி ஆட்சியின் முதலமைச்சர் பி.டி.இராஜன் அவர்களின் மகன் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜனின் மகன் முனைவர் ப.தியாகராஜன்.
நீதிக்கட்சி ஆட்சியின் முதலமைச்சர் முனுசாமி நாயுடுவின் மகன் வழிப் பேத்தி திருமதி ஜானகி சக்ரவர்த்தி
நீதிக்கட்சியின் தலைவர் வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி தியாகராயர் அவர்களின் மகள் வழிப் பேரன் திரு.மகா.பாண்டியன்.
நீதிக்கட்சி ஆட்சியின் முதலமைச்சர் பனகல் அரசரின் மகள் வழிப் பேரன் திரு.எம்.வி.எஸ்.அப்பாராவ்.
சுயமரியாதை இயக்க முன்னோடி, ‘வழிகாட்டி’ இதழாசிரியர் க.அ.புன்னைமுத்து அவர்களின் மகன் பேராசிரியர் முனைவர் பு.இராசதுரை. அவரது மகள் பேராசிரியர் இசையமுது மற்றும் மகள் வழி பேத்தி டாக்டர் தேனருவி.
திராவிடர் இயக்க வழிவந்த மூத்த முன்னோடி சென்னை மாநகர மேனாள் மேயர் மானமிகு சா.கணேசன்.

திராவிடர் இயக்க வழிவந்த மூத்த எழுத்தாளர் ‘கவிக்கொண்டல்’ மா.செங்குட்டுவன்
105 சுயமரியாதைத் திருமணங்களை நடத்திய சுயமரியாதைச் சுடரொளிகள் வை.கோவிந்தசாமி - பெரியநாயகி, கோ.சக்கரபாணி - காசியம்மாள், கோ.வையாபுரி - மங்கையர்க்கரசி ஆகியோரின் குடும்ப வழி வந்த கும்ப கோணம் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் மானமிகு வை.இளங்கோவன்.
(20.11.2015)-விடுதலை,23.11.15
தமிழனுக்காக தமிழன் தன் உயிரைக்

கொடுத்தேனும் காப்பாற்றவேண்டும்

இனமானப் பேராசிரியர் முழக்கம்
சென்னை, நவ.20- தமிழனுக்காக தமிழன் தன் உயிரைக் கொடுத்தேனும் காப்பாற்றவேண்டும் என்று நீதிக்கட்சியின் நூற்றாண்டு விழா - சுயமரி யாதை இயக்கத்தின் 90 ஆம் ஆண்டு விழாவில் திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் இனமான பேராசிரியர் க.அன்பழகன் வேண்டு கோள் விடுத்தார்.
நீதிக்கட்சி நூற்றாண்டு விழா, சுயமரியாதை 90 ஆம் ஆண்டு விழா விடுதலை சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.
நீதிக்கட்சி நூற்றாண்டு விழா, சுயமரியாதை 90 ஆம் ஆண்டு விழாவில் இயக்க நூல்கள் வெளியிடப்பட்டன

நீதிக்கட்சி நூற்றாண்டு விழா, சுயமரியாதை 90 ஆம் ஆண்டு விழாவில் கலந்துகொண்ட பெருமக்கள் (சென்னை, 20.11.2015)



20.11.2015 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற நீதிக்கட்சியின் நூற்றாண்டு விழா - சுயமரியாதை இயக்கத்தின் 90 ஆம் ஆண்டு விழாவில் திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர்  இனமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:

பெரியோர்களே, தாய்மார்களே, இந்த நிகழ்ச்சி யில் தலைமை ஏற்று நமக்கெல்லாம் வழிகாட்டு கின்ற முறையில் கலந்துகொண்டிருக்கின்ற உச்ச உயர்நீதிமன்ற நீதியரசர் ஜஸ்டீஸ் மோகன் அவர்களே,  ஜஸ்டீஸ் ஏ.கே.ராஜன் அவர்களே, பேராசிரியர் நன்னன் அவர்களே, என்னுடைய அன்பிற்குரிய திராவிடர் கழகத்தினுடைய தலைவர் வீரமணி அவர்களே,
இந்த நிகழ்ச்சியை நான் வந்து தொடங்கி வைக்கவேண்டும் என்று நம்முடைய வீரமணி அவர்களும், அவர்களுடைய அன்பிற்குரிய தோழர்களும், கட்டாயமாக வலியுறுத்தி கேட்டுக் கொண்டதன் காரணமாக நான் ஒப்புக் கொண்டேன்.

நான் பேச முடியாத ஒரு நிலையில், பல நேரங்களில் பேச்சை இடையிலேயே விட்டுவிட்டு, அந்தப் பேச்சு போதும் என்று சொல்லி, நானே முடித்துக்கொண்ட நிலை பல நேரங்களில் இருந்தது. அதனை நான் அவர்களிடம் விளக்கிச் சொன்னாலும், எங்களுடைய விருப்பம், வேண்டு கோள், ஆசை நீங்கள் வரவேண்டும் என்பது என்றனர், ஆகவே நான் இங்கே வந்திருக்கிறேன்.

அய்ந்து நிமிடம் பேசினால் போதும் என்றார் வீரமணி!
நல்லவேளையாக வீரமணி அவர்கள் என்னு டைய உடல்நிலையைப்பற்றி அவருக்குத் தெரிந்த அளவில், இன்றைக்கு எந்த அளவிற்கு இடம் தரும் என்று தெரியாத நிலையில், ஒரு அய்ந்து நிமிடம் பேசினால் போதும் என்றார்.  நான் அய்ந்து நிமிடம் பேசுவதற்காகத்தான் இங்கே வந்து அமர்ந்தேன்.

ஆனால், ஒவ்வொரு கருத்தை எண்ணிப் பார்க்கின்றபொழுதும், ஒவ்வொரு தீர்மானத்தை கருதிப் பார்க்கின்றபோதும், திராவிட இயக்கம் எவ்வளவு தொன்மையாக வளர்ந்திருக்கிறது என்பது எனக்குப் புரிகிறது.

ஒரு நூறாண்டு காலம் திராவிடர் இயக்கம் இந்த நாட்டிலே ஆற்றிய தொண்டு காரணமாக, தமிழ் நாடு ஒரு 120 ஆண்டு விழிப்படைந்திருக்கிறது என்று என்னால் சொல்ல முடியும். தமிழ்நாடு எவ்வளவு பின்தங்கி இருந்ததோ, எவ்வளவு ஒரு உணர்ச்சியற்ற ஒரு நிலையில் இருந்ததோ, எவ்வளவு தாழ்ந்த மனப்பான்மையில் இருந்ததோ, அதிலிருந்து விடுபட்டு, நாமும் மனிதர்தான் என்று எண்ணுகின்ற எண்ணம் எல்லோருக்கும் ஏற்பட்டு, நாம் மனிதர் என்று எண்ணுகிற எண்ணம் மட்டுமல்ல, நாம் மற்றவர்களைவிட தாழாதவர்கள் என்ற உணர்வு ஏற்பட்டு, இன்றைக்குத் தமிழர்கள் பல நிலையில் உயர்ந்திருக்கிறார்கள்.
நான் பல நிலைகளில் உயர்ந்திருக்கிறார்கள் என்று சொன்னேனே தவிர, அந்தப் பல நிலை என்று சொன்னால், எல்லா நிலையும் என்று அர்த்தம் அல்ல. பல நிலைகளிலும் நாம் உயர்ந்திருக் கிறோம். ஆனால், எல்லா நிலைகளிலும் நாம் உயரவில்லை. இன்றைக்கும் நீங்கள் எண்ணிப் பார்த்தால், மக்களில் படித்த வர்கள், பண்பாடு உள்ள வர்கள், தகுதி உள்ள வர்கள், பல்வேறு விதமான சிறப்பான கருத்தை எடுத்துச் சொல்லக்கூடிய வர்கள் ஏதோ வெவ்வேறு இடத்தில் இருப்பது போன்று, வெவ்வேறு நிலையில் இருப்பதுபோன்று நாம் எண்ணுகிறோம், எண்ண வேண்டி இருக்கிறது.
நாம் இனி யாருக்கும் தாழமாட்டோம்!
இந்நிலையில், நம்முடைய தமிழ் மக்கள் எப்படிப்பட்ட உணர்ச்சியில் முதன்முதலாக இந்த கொள்கையை ஏற்றுக்கொண்டார்கள் என்று எண்ணிப் பார்த்தால், தமிழன் தாழ்ந்திருக்கிறான் என்பதை எண்ணிப் பார்த்து, நாம் இனி யாருக்கும் தாழமாட்டோம் என்று சொல்லக்கூடிய அளவில் ஒரு உணர்வு பெற்று, அந்த உணர்வை பெரியார் அவர்கள் எடுத்துக்காட்டினார்.

ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி, உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாக இருப்பவன். இந்த லட்சியத்தை உள்ளத்திலே ஏந்திக்கொண்டு, அந்த லட்சியத்தோடு தொடர்ந்து பணியாற்றுகிறேன் என்று சொன்னார்.
பெரியார் ஏன் இயக்கத்தைத் தொடங்கினார்?
இன்னும் சொன்னார், அந்தத் தொண்டு செய்ய போதிய யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால், நான் மேற்போட்டுக்கொண்டு தொண்டாற்றி வருகிறேன். இந்தப் பணியை செய்வதற்கு வேறு யாரும் முக்கியமானவர்கள் வரவில்லை என்கிற காரணத்தினால், அதை எடுத்துச் சொல்லக்கூடிய ஒரு தலைவர் இருக்கிறார் என்று நான் எண்ண முடியாத காரணத்தினால், நான் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். இதைத் தவிர வேறு பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும், பகுத்தறிவையே அடிப்படையாகக் கொண்டு, கொள்கைகளையும், திட்டங்களையும் வகுப்ப தாலும், நான் அந்தத் தொண்டுக்குத் தகுதி உடை யவன் என்றே கருதுகிறேன். இந்தப் பணிக்கு எனக்கு என்ன தகுதி என்றால், நான் என்னை அடியோடு என்னைப் புறக்கணித்து, என்னை மிகச் சாதாரணமாகக் கருதிக் கொண்டு, நான் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறேன். ஆகவே, அந்த சமுதாயத் தொண்டுக்கு, சமுதாய தொண்டு செய்பவனுக்கு இது போதும் என்றே கருதுகிறேன்.
எனவே, இந்த அடிப்படையில் பெரியார் அவர்கள் இந்த இயக்கத்தைத் தொடங்கினார். யார் அடித்தட்டுகளில் இருக்கிறானோ, அவன் மேலே வரவேண்டும். யார் தாழ்ந்தவன் என்று சொல் கிறார்களோ, அவன் தாழ்ந்தவன் அல்ல என்று ஒப்புக்கொள்ளவேண்டும். யார் இந்த நாட்டிலே மனிதர் களுக்கிடையிலே மற்றவர்களோடு சமமாக உட்கார முடியாதவனாக இருக்கிறானோ அவன் சமமாக உட்கார வேண்டும். அந்த நிலையை ஏற்படுத்த நான் இந்த இயக்கத் தைத் தொடங்கினேன் என்றார்.

சிறிய பிள்ளைகளுக்குக்கூட கொள்கை உணர்வு வருமாறு விளக்கியவர் பெரியார்!

பெரியார் அவர்கள் இந்த இயக்கத்தைத் தொடங்கி, ஒரு அய்ம்பது வயது ஆகிறபோது, நான் அவரைப் பார்த்தேன். அப்பொழுது என்னுடைய வயது 12 ஆக இருந்தது. நான் அப்பொழுது பெரியாரைப் பார்க்கும்பொழுது எப்படி இருந்தார் என்றால், மீசை, அதோடு பெரிய தலைவருக்குள்ள தோற்றம் பெரியாருக்கு இருந்தது.  அவர் வந்து ஓரிடத்தில் உட்கார்ந்தால், எதிரே இருப்பவர் யாரும் ஏன் என்று கேட்கமாட்டார்கள். யாரும் அவரிடத்தில் எதற்காக வந்தீர்கள்? ஏன் வந்தீர்கள்? என்று கூட கேட்கமாட்டார்கள். அந்த நிலையில்தான் அவர் இருந்தார். ஆனால், அவர் அந்த நேரத்தில்கூட, இந்தக் கொள்கையை எடுத்து விளக்கும்போது, எப்படி விளக்கினார் என்று கேட்டால், சாதாரணமாக ஒரு சின்ன பிள்ளையைப் பார்த்தால்கூட, அவனுக்கு இந்த உணர்வு வரக்கூடிய அளவிற்குப் பேசுவார்.

ஆசிரியர்களாக உயர்ஜாதிக்காரர்களாகத்தான் இருந்தார்கள்
நான் அப்பொழுது படித்துக் கொண்டிருந்தேன். ஆறாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். முதல் வகுப்பிலிருந்து 10 ஆம் வகுப்பு வரை என்னோடு படித்தவர்களின் நினைவு எனக்கு வருகிறது. முதல் வகுப்பில் பங்காரு; இரண்டாவது வகுப்பில் இராயர்; மூன்றாவது வகுப்பில் ராமர்; நான்காவது வகுப்பில் சர்மா; அய்ந்தாவது வகுப்பில் கீர்த்திவாச அய்யர்; ஆறாவது வகுப்பில் சாமிநாத அய்யர்; ஏழாவது வகுப்பில் புருசோத்தம அய்யங்கார்; எட்டாவது வகுப்பில் சேஷாச்சாரி; ஒன்பதாவது வகுப்பில் ராஜகோபாலாச்சாரி; பத்தாவது வகுப்பில் ராகவன் அய்யங்கார்.

பிறகு அதற்கு மேல் 11 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பையெல்லாம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படித்தேன். அங்கே பல பேராசிரியர்கள் இருந்தார்கள். தமிழ் ஒன்றில்தான் தமிழர்கள் இருப்பார்கள். பிற துறைகளில் எல்லாம் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருப்பார்கள். அவர்கள்கூட நல்ல நோக்கத்தோடு பணியாற்றினார்கள்.

அப்படி இருந்த பெரியவர்கள், நான் 11 ஆம் வகுப்பு படிக்கும்பொழுது திருவேங்கட முதலியார்; குற்றாலத்தில் நான் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும்பொழுது அகோரம் பிள்ளை; மயிலாடுதுறையில் மறுபடியும் நான் எஸ்.எஸ்.எல்.சி. படித்தபொழுது ராகவ அய்யங்கார்.

ஏன் இதனை நான் சொல்கிறேன் என்றால், பெரியார் அவர்கள் இந்த விஷயங்களைச் சொல்வதற்கு முன்பாகவே, என் மனதில் இந்த பிராமணர்கள் இவ்வளவு பேர் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். நம்மாள் யாரும் இல்லையே என்று தோன்றியது. பேராசிரியர் யாரும் இல்லை, நம்முடைய வாத்தியார்கள் யாரும் இல்லை. அவ்வளவு பேரும் அய்யராகத்தான் இருக்கிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால், உண்மையாக சொல்வதாக இருந்தால், நான் இருந்த தெரு, மாயவரத்தில் வேளாளர் தெரு, அதேபோன்று பட்டமங்களத் தெரு, மகாதானத் தெரு போன்ற தெருக்களில் எல்லாம் அய்யர்கள்தான் இருப்பார்கள். ஒரு வீட்டில் அய்யங்கார், இன்னொரு வீட்டில் அய்யர், இன்னொரு வீட்டில் அய்யர் என்றுதான் இருப்பார்கள்.
ஒரு சிறந்த வக்கீல், ஒரு சிறந்த டாக்டர், ஒரு சிறந்த அதிகார செல்வாக்குள்ள அதிகாரத்தில் உள்ளவர்கள் அங்கேதான் இருப்பார்கள். அங்கே வருகிறவர்கள் எல்லாம் அவர்களைப் பார்ப்பார்கள்.

அய்யரைக் கும்பிட்டுவிட்டு காலில் விழுந்து செல்வார்கள்!
அந்தத் தெருவில், மடத்தில் வேலை பார்த்த படித்த பிள்ளைகள் ஒரு 50 பேர் இருந்தார்கள். அவர்களை குளிக்க வைத்து, சாப்பாடு போட்டு பிறகு வெளியே அனுப்புவார்கள். ஒருவர் பின் ஒருவராக கையைப் பிடித்துக் கொண்டு வரிசையாக, அவர்களுடைய ஆண்டவன் பெயரைச் சொல்லிக்கொண்டு அல்லது ஆண்டவனுக்குப் பதிலாக வேறு பெயரைச் சொல்லிக்கொண்டு தெருவில் செல்வார்கள். அப்படி போகிற அவர்கள், பிராமணர்கள் உச்சரிக்கின்ற சொல்லைத்தான் சொல்வார்களே தவிர, வேறு எந்த சொல்லையும், நாம் சொல்கின்ற சொல்களை சொல்லமாட்டார்கள். அவர்கள் யாரும் தமிழர்கள் என்று நினைக்கக்கூடிய நினைப்பை உண்டாக்கமாட்டார்கள்.

ஆங்கிலத்திலேயே அல்லது வடமொழியிலேயே சமஸ்கிருதத்திலேயே அந்தத் தெய்வத்தினுடைய பெயர்களையெல்லாம் சொல்லிக் கொண்டு செல்லும்பொழுது, நாம் பார்த்தாலும், அவர்கள் யாரோ, நாம் யாரோ என்றுதான் பொருள் படும்.

அந்த இடத்தில், ஆசிரியர்களை ஒரு பத்து முறை பார்த்திருப்பேன். அந்த ஆசிரியர்களைப் பார்க்கிறவர்கள், மற்ற பிராமணர் அல்லாத பிள்ளைகள் வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் வந்தார்கள் என்றால், அவர்களைப் பார்த்தவுடன் கும்பிட்டுவிட்டு, காலில் விழுவார்கள். அந்த அய்யர் இவர்களைப் பார்த்து கும்பிடமாட்டான்; அன்பாக அழைக்கமாட்டான். வேறுமாதிரியாகத் சொல்வான்.
ஆனால், அவன் அய்யர் காலில் விழுந்து, வணங்கி, அவரைப் பார்த்ததினால் ஒரு பெரிய மகிழ்ச்சியடைந்து செல்வான்.

தாழ்த்தப்பட்டவர்களை மேலே கொண்டுவருவதற்காகப் பாடுபட்டவர் பெரியார்!
இதை நான் எதற்காக சொல்கிறேன் என்றால், பெரியார் எங்கள் ஊரில் முதன்முதலாகப் பேசுகிறபொழுது, பெரியார் இதையெல்லாம் சொல்கிறபொழுது, நான் நேரிடையாகக் கண்களுக்கு முன்பாகத் தெரிந்த காட்சி. ஆக, அப்படி பிராமணர்கள் செல்வாக்குப் பெற்றிருந்தபோதுதான், பெரியார் அவர்கள், அந்தக் கொள்கையை மக்களிடையே சொல்வதற்காக இந்த இயக்கத்தை ஆரம்பித்து, இந்தக் கொள்கையைப் பரப்பினார்கள். ஆனால், உண்மை என்னவென்று கேட்டால், நீதிக்கட்சி இதனை ஆரம்பித்தது; அப்படி ஆரம்பித்த நிலையில், பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு பள்ளிக்கூடத்தில் இடம் வேண்டும்; ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் இடம் வேண்டும். இன்னும் சொல்லப்போனால், குளத்தில் தண்ணீர் எடுக்கின்ற உரிமை வேண்டும். இப்படி சாதாரண உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருந்தார்கள். ஆனால், பெரியார் அவர்கள் அதில் இன்னும் ஆழமாகச் சென்று, எவ்வளவு தாழ்ந்தவன், எவ்வளவு தகுதியற்றவன் இருக்கிறனோ, அவர்களையெல்லாம் மேலே கொண்டு வந்து அந்த நிலைக்கு உயர்த்தினார்கள்.

தாழ்த்தப்பட்டவனுடைய சாப்பாட்டை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வார் பெரியார்!
இன்னும்கூட சொல்லப்போனால், பெரியார் அவர்கள் ஒரு ஊருக்குச் சென்று, அந்த ஊரிலுள்ள பெரியவர்களிடத்தில் எவ்வளவுதான் சந்தோஷமாக, திருப்தியாகப் பேசினாலும்கூட, அந்த ஊரில் இருக்கின்ற ஒரு தாழ்த்தப்பட்டவனுடைய சாப்பாட்டை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வார்.

தாழ்த்தப்பட்டவர்கள் போடுகின்ற சாப்பாடு நன்றாக இருக்காது; அது மனிதன் சாப்பிடுவதற்குத் தகுதி இல்லாதது என்று கூட அந்தக் காலத்தில் நினைப்பார்கள். ஆனால், பெரியார் அவர்கள் அப்படி நினைக்கமாட்டார். தரம் இல்லாத உணவைக்கூட மென்று முழுங்கி  சாப்பிடுவார்.

ஆக, பெரியாருடைய உணர்வு, அவருடைய எண்ணங்களைப்பற்றி நான் இன்னும் நிறைய வைத்திருந்தாலும், அவ்வளவையும் சொல்ல விரும்பவில்லை. உள்ளபடியே நிறைய சொல்வதற்காக எடுத்து வைத்திருந்தேன். அவ்வளவையும் சொல்ல முடியவில்லை.

‘தினமணி’யில் வெளிவந்த கட்டுரை
நேற்றைய தினம் ‘தினமணி’ பத்திரிகையில் ஒரு ஆசிரிய  கட்டுரை எழுதியிருக்கிறார். அந்த ஆசிரியரின் பெயர் ராஜகோபால். அவர் எழுதின கட்டுரை ‘‘நீதிக்கட்சியினருடைய மனிதநேயம்’’ என்று போட்டு, எம்பெருமானுடைய தொடர்ச்சியாக, 19 ஆம் நூற்றாண்டிலே டாக்டர் சி.நடேசன், டாக்டர் டி.எம்.நாயர், சர்.பிட்டி. தியாகராயர் போன்ற மூன்று மானிடர்கள் பொருளாதார, ஜாதி ஏற்ற தாழ்வுகளைத் துடைத்தெறிய புறப்பட்டனர்.

சமூகநீதியைக் காப்பதற்காக அம்மூவரும் பெற்றெடுத்த குழந்தையாகிய நீதிக்கட்சியின் பிறந்த நாள் 19.1.1915. நீதிக்கட்சியின் தோற்றம் காலத்தின் கட்டாயமாகும். அதன் தோற்றத்திற்கான நியாயத்தை அமரர் ஏ.என்.சிவராசன் சென்னை சம்மந்தப்பட்ட மட்டில் மாநில மட்டத்தில் காங்கிரசுக்கு எதிரான கிளர்ச்சி, நீதிக்கட்சியின் கிளர்ச்சி ஒரு புதிய வடிவில், ஒரு புதிய உணர்ச்சியுடன் உருவாயிற்று. இந்திய வறுமைப்பற்றிய ஆராய்ச்சி தினமணி வெளியீடு, 1973 என்றவாறு பதிவு செய்திருக்கிறார்.

சமூகநீதியைக் காப்பாற்ற புறப்பட்ட அம்மூவரிடமும் காணப்பட்ட மனிதநேயம் அபரிமிதமானது, ஆச்சரியப்படத்தக்கது. மருத்துவத் துறையில் எம்.எஸ். பட்டம் பெற்ற டாக்டர் நடேசன், மாலை நேரங்களில் சேரி மக்களுக்கு, ஏழை, எளிய மக்களுக்குத் தொண்டாற்றினார். இந்தக் கட்டுரையை நான் படித்தால் ஒரு மணிநேரம் ஆகும்.

ஆகவே, நான் உங்களிடத்தில் கேட்டுக்கொள்கிறேன், அந்த கட்டுரை ஆசிரியர் எடுத்து எழுதுகிற அளவிற்கு நீதிக்கட்சி நேர்மையாக, உண்மையாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருந்தது என்பது என்றைக்கும் அதை யாரும் மறுக்க முடியாது. அவர்கள் ஒவ்வொருவரைப்பற்றியும், தியாகராயரைப்பற்றி, டாக்டர் டி.எம்.நாயரைப்பற்றி, டாக்டர் நடேசனாரைப்பற்றி மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார்.

அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு துறையில் சென்று எங்கெங்கே பணியாற்றினார்களோ, எப்படி அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் உதவியாக இருந்தார்கள் என்பதைப்பற்றியெல்லாம் எழுதி, கட்டுரையை முடிக்கின்ற நேரத்தில், கொஞ்சம் அவருடைய, கட்டுரையை எழுதுகின்ற  ஆசிரியரின் எண்ணம் பிரதிபலிக்கவேண்டும் என்று, கட்டுரையை முடிக்கின்ற இடத்தில், இப்படியெல்லாம் அவர்கள் ஏழைகளுக்கு உதவி செய்தார்கள். அவர்கள் செய்த உதவிகளை, மனிதநேயத்தை நான் மறக்கவில்லை. ஆனால், அதேநேரத்தில், மனிதநேயத்திற்கு மாறாக சில பேர் நடந்துகொள்கிறார்களே, அதைத்தான் நான் குறிப்பிட விரும்புகிறேன் என்று கடைசி இரண்டு வரியில் சொல்லியிருப்பார். அதைச் சொல்லவில்லை என்றால், அவர்கள் அதனை எழுத முடியாது.

தமிழனுக்காக தமிழன் தன் உயிரைக் கொடுத்தேனும் காப்பாற்றவேண்டும்
ஆகவே, அப்படி சொல்லவேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கிறது. நான் எதற்காக இதனைச் சொல்கிறேன் என்றால், இந்த தினமணியில் வெளிவந்த கட்டுரையை நீங்கள் வாங்கி முழுவதுமாகப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். நான் சொல்லிக் கொள்ள விரும்புவதெல்லாம், தமிழனுக்காக தமிழன் தன் உயிரைக் கொடுத்தேனும் காப்பாற்றவேண்டும்.
தன் வாழ்க்கை முடிந்துபோனால்கூட அதைப்பற்றி கவலைப்படக்கூடாது. எனவே, அந்த உணர்வோடு இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டு, நான் எவ்வளவோ கருத்தை சொல்லவேண்டும் என்று வந்தாலும்கூட, பேசுவதற்கு நேரமில்லை என்கிற காரணத்தினால், உங்களுக்கெல்லாம் வணக்கம் கூறி என்னுடைய உரையை முடித்துக்கொள்கிறேன்.
நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் இனமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் உரையாற்றினார்.
நூல்கள் வெளியீடு

ரூ.947 மதிப்புள்ள நீதிக்கட்சி தொடர்பான நூல்கள் ரூ.750க்கும், ரூ.264 மதிப்புள்ள சுயமரியாதை இயக்கம் குறித்த நூல்கள் ரூ.200க்கும், இரண்டு நூல்களின் தொகுப்புகளும் மொத்தம் ரூ.1211 மதிப்புள்ள நூல்களை ரூ900 தொகை கொடுத்தும் ஏராளமானவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியரிடமிருந்து நேரில் பெற்றுக்கொண்டனர்.

செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, மயிலை நா.கிருஷ்ணன், துரை.சந்திரசேகரன், வட மாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன்,  சேரலாதன், பகுத்தறிவாளர் கழகம் ஊமைஜெயராமன், பொதுக்குழு உறுப்பினர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன்,  புதுவை மாநில கழக தலைவர் சிவ.வீரமணி, மேனாள் மேயர் சா.கணேசன், மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் அண்ணா.சரவணன், பாலன்,  கயல் தினகரன்,  டாக்டர் திவாகரன், வேலூர் மாவட்டத் தலைவர் சிவக்குமார், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ், கும்பகோணம் மாவட்டத் தலைவர் இளங்கோவன், வேலூர் மண்டல தலைவர் சடகோபன், வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் ஆ.வெங்கடேசன், புயல் குமார், நாகூர் சி.காமராஜ், மருத்துவர் தேனருவி,  அறிவழகன்,  அரக்கோணம் மாவட்டத் தலைவர் லோக நாதன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் திராவிட மணி, சீனுவாசன், புதுவை கிருஷ்ணராஜ், பேராசிரியர் சிவப்பிரகாசம் உள்பட பலரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து உரிய தொகை கொடுத்து நூல்களைப் பெற்றுக்கொண்டார்கள்.
நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்க தலைவர்கள் வழித்தோன்றல்களுக்கு தமிழர்
தலைவர்ஆசிரியர் சிறப்பு
நீதிக்கட்சி பொதுச்செயலாளர் முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன் மகள் சித்த மருத்துவர் மணிமேகலை கண்ணன், இரட்டைமலை சீனிவாசன் கொள்ளுப் பேத்தியும் தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் பொதுச் செயலாளருமாகிய முனைவர் நிர்மலா அருட்பிரகாசம்,  நீதிக்கட்சி முதலமைச்சர் முனுசாமி நாயுடு மகன் வழிப் பேத்தி ஜானகி சக்கரவர்த்தி, நீதிக்கட்சி முதலமைச்சர் பி.டி.ராஜன் மகன்வழிப்பேரன் முனைவர் ப.தியாகராஜன், நீதிக்கட்சி முதலமைச்சர் பனகல் அரசர் மகன் வழிப்பேரன் எம்விஎஸ் அப்பாராவ், நீதிக்கட்சியின் தலைவர் வௌ¢ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் மகன் வழி பேரன் மகாபாண்டியன், முத்தய்யா முதலியார் மகள் வழிப்பேரன் வை.இராஜசேகரன், சுயமரியாதை இயக்க முன்னோடி சி.டி.நாயகம் மூத்த மகன் இராமநாதன் நாயகம், தந்தைபெரியார் குடும்ப வழி ஈ.வெ.கி.ச. மதிவாணன், புண்ணியமுத்து மகன் வரலாற்றுப் பேராசிரியர் ராஜதுரை, திராவிட இயக்க மேனாள் மேயர் சா.கணேசன், திராவிட இயக்க மூத்த எழுத்தாளர் கவிக்கொண்டல் மா.செங் குட்டுவன், 105 சுயமரியாதை திருமணங்களை நடத்தி வந்துள்ள  குடுமபவழிவந்த கும்பகோணம் மாவட்டத் தலைவர் வை.இளங்கோ ஆகியோருக்கு நினைவுப் பரிசுகள், இயக்க வெளியீடுகள் அளித்து பயனாடை அணிவித்து பாராட்டி சிறப்பு செய்தார்கள்.
கலந்துகொண்டவர்கள்
முனைவர் அ.இராமசாமி, முனைவர் பெ.ஜெகதீசன், பேராசிரியர் அ.கருணானந்தன், முனைவர் மங்கள முருகேசன், திராவிட இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசு, திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நல அமைப்பு பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி, மோகனா அம்மையார், சுதா அன்புராஜ்,    மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன், சி.வெற்றிச்செல்வி,, வளர்மதி, புதுவை நடராசன், விழுப்புரம் மண்டலத் தலைவர் க.மு.தாஸ், கல்லக்குறிச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ம.சுப்பராயன், மாவட்டச் செயலாளர் கோ.சா.பாசுகர், வடசென்னை மாவட்ட மகளிரணித் தலைவர் கு.தங்கமணி, செயலாளர் பொறியாளர் இன்பக்கனி, செல்வராஜ், வடசென்னை மாவட்ட துணை செயலாளர் செம்பியம் இராமலிங்கம்,  திண்டிவனம் மாவட்டத் தலைவர் மு.கந்தசாமி, மாவட்ட செயலாளர் நவா.ஏழுமலை, மாவட்ட மகளிரணி விஜயலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் தி.வே.சு.திருவள்ளுவன், கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் செ.உதயகுமார், செயலாளர் ஆனந்தன், ஆவடி மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், துரை.முத்து, பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன், பேராசிரியயை இசையமுது, வடசென்னை மாவட்ட செயலாளர் தே.ஒளிவண்ணன், அம்பத்தூர் சிவக்குமார், ஊடகவியலாளர் தமிழ் லெமுரியா மு.தருமராசன், வா.மு.சே.திருவள்ளுவர் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

நீதிக்கட்சி நூற்றாண்டு, சுயமரியாதை இயக்கம் 90 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்று சிறப்பிப்பு

எழுந்து நின்று கையொலி எழுப்பி தமிழர் தலைவருக்கு நன்றி
தெரிவித்து மகிழ்ந்தனர் பொதுமக்கள்
சென்னை, நவ.21_ சென்னை பெரியார் திடலில் நேற்று (20.11.2015) காலை முதல் இரவு வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மழை விடாமல் தொடர்ந்து பொழிந்தபோதிலும் ஏராளமானவர்கள் திராவிட உணர்வுடன் எழுச்சிபெற்று விழாவில் பங்கேற்றனர்.
காலையில் முதல் நிகழ்வாக திராவிட இயக்க வரலாற்று முக்கிய நிகழ்ச்சிகள் திரையிடல் நிகழ்ச்சி பவர்பாயிண்ட் மூலமாக திரையிடப்பட்டது.
தொடக்க நிகழ்வுக்கு வருகைதந்த அனைவரையும் கழகப்பொதச்செயலாளர் வீ.அன்புராஜ் வரவேற்றார். இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் தொடக்க உரையாக இனமானப்பேருரை  ஆற்றினார். அடுத்து உச்சநீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி நீதியரசர் க.மோகன் தலைமையில் சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி ஏ.கே.ராஜன், பெரியார் பேருரையாளர் புலவர் மா.நன்னன் ஆகியோர் வாழ்த்தரங்கத்தில் வாழ்த்துரை ஆற்றினார்கள். பிற்பகல் நிகழ்வாக பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன், பொருளாளர் கு.மனோகரன், துணை செயலாளர் மா.சேரன் முன்னிலையில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் கி.சத்தியநாராயணன் வரவேற்றார்.
பட்டிமன்றம்
நீதிக்கட்சி ஆட்சியின் சாதனைகளில் விஞ்சி நிற்பது சமூக சீர்திருத்தமா? சமூக நீதியா? எனும் தலைப்பில் பேராசிரியர் முனைவர் தி.இராசகோபாலன் அவர்களை நடுவராகக்கொண்ட பட்டிமன்றம் நடைபெற்றது.
சமூக சீர்திருத்தமே என்கிற அணியில் திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், வழக்குரைஞர் கழக சொற்பொழி வாளர் பூவை.புலிகேசி, மகளிர் பாசறை மாநில அமைப் பாளர் டெய்சி.மணியம்மை ஆகியோரும், சமூக நீதியே என்கிற அணியில் கழகப்பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், பேராசிரியர் மணி மேகலை சித்தார்த்தன், கடலூர் மண்டலச் செயலாளர் பேரா சிரியர் பூ.சி.இளங்கோவன் ஆகியோரும் தங்களின் வாதங்களின்மூலமாக பல்வேறு வரலாற்று தகவல்களை அளித்தார்கள்.
பட்டிமன்ற முடிவில் நீதிக்கட்சியின் சாதனைகளில் விஞ்சி நிற்பது சமூக நீதியே என்று நடுவர் பேராசிரியர் முனைவர் தி.இராசகோபாலன் தீர்ப்பளித்தார்.
கருத்தரங்கம்
மாலையில் சுயமரியாதை இயக்கத்தின் சாதனைகள் என்கிற தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற்றது. அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் அரசுப்பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி, பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன், அமைப்புச் செயலாளர் இரா.தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலையில் திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன் வரவேற்றார். திராவிட இயக்க ஆய்வாளர் க.திரு நாவுக்கரசு திராவிடத்தால் எழுந்தோம் என்கிற தலைப்பில்  அரிய வரலாற்றுத் தகவல்களை அளித்து தலைமை உரை யாற்றினார். அவர் உரையின் தொடக்கத்தில் நீதிக்கட்சி நூற்றாண்டு, சுயமரியாதை இயக்கம் 90 ஆம் ஆண்டு தொடக்க விழாகுறித்து தினமணி, தி இந்து, நக்கீரன் உள்ளிட்ட இதழ்கள் மற்றும் பல்வேறு காட்சி ஊட கங்களிலும் இந்த காலகட்டத்தில் கட்டுரைகள், விவா தங்கள், செவ்விகள், கட்டுரைகள் என்று மக்களிடையே நீதிக்கட்சி நூற்றாண்டு செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இதற்கு காரணமானவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்தான் என்று குறிப்பிட்டு அனைவரும் எழுந்து நின்று பலத்த கரவொலிகளின் மூலமாக நன்றியைத் தெரிவித்துக்கொள்ளச் செய்தார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அனைவருக்கும் தம் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். சுயமரியாதை இயக்கத்ம் தோற்றுவிக்கப்பட்டது ஏன்? எனும் தலைப்பில் திராவிட இயக்க வரலாற்று ஆய்வு மய்யத் துணைத் தலைவர் பேராசிரியர் முனைவர் ப.இரா.அரங்கசாமி, மகளிர் புரட்சி எனும் தலைப்பில் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி  உரையாற்றினார்கள்.
ஒலி - ஒளி கலை நிகழ்ச்சி
திராவிடர் எழுச்சி_ஒரு வரலாற்றுப் புரட்சி எனும் தலைப்பில் திருச்சி ஜெபி ஸ்டுடியோ உதவியுடன் பேராசிரியர் ப.சுப்பிரமணியம் ஏற்பாட்டின்பேரில் திருச்சி பெரியார் நூற்றாண்டு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் மாணவ, மாணவிகள் பங்கேற்ற  கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கலை நிகழ்ச்சிகளாக நாடகம், பாடல்கள், நாட்டியங்கள்  ஆகியவற்றடன் இடையிடையே ஒலி,ஒளிக் காட்சிகள் மூலமாக நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்க, திராவிட இயக்க சாதனைகள் விரிவாக, நேர்த்தியாக காட்சிப்படுத்தப் பட்டன.  ஒலி,ஒளி காட்சிகள் பல்வேறு வரலாற்று பூர்வமான தகவல்களை காட்சிப்படுத்தின.
மாணவர்களுக்கு பரிசளிப்பு
நீதிக்கட்சி நூற்றாண்டு, சுயமரியாதை 90ஆம் ஆண்டு தொடக்க விழாவை யொட்டி திராவிட வர லாற்று ஆய்வு மய்யம் பகுத்தறிவாளர்கழகம் இணைந்து நடத்திய பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற வர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பாராட்டி பரிசினையும், சான்றிதழையும் வழங்கினார்.
நிறைவு விழா
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அறிமுக உரையாற்றினார். குஜராத் உயர்நீதிமன்றத்தின் மேனாள்  தலைமை நீதிபதி பு.இரா.கோகுலகிருஷ்ணன் தொடக்க உரையாற்றினார். கருநாடக பகுத்தறிவு முற்போக்கு எழுத்தாளர் பேராசிரியர் கே.எஸ்.பகவான் விழாவில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அவர் ஆங்கிலத்தில் உரையாற்றினார். அவர் உரையை கோ.ஒளிவண்ணன் தமிழில் மொழிபெயர்த்து வாங்கினார். முன்னதாக பேராசிரியர் கே.எஸ்பகவான்குறித்த தகவல்களை அளித்து பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் அறிமுகப் படுத்தினார்.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நிறைவுரை ஆற்றினார்.
நாள்முழுவதும் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், புதுமை இலக்கியத் தென்றல் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை, பெரியார் களம் இறைவி இணைப்புரை வழங்கினார்கள்.
திராவிடர் இயக்க எழுத்தாளர் மஞ்சைவசந்தன், வடமாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், தொழிலாளரணி பெ.செல்வராசு, சென்னை மண்டலத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி, செயலாளர் வி.பன்னீர்செல்வம், வடசென்னை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோவி.கோபால், செய லாளர் ஆ.வெங்கடேசன்,  தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், ஆவடி மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் செ.உதயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வடசென்னை மாவட்டத் தலைவர் சு.குமாரதேவன் நன்றியுடன் இனிதே நீதிக்கட்சி நூற்றாண்டு, சுயமரியாதை இயக்கம் 90 ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.
நீதிக்கட்சி நூற்றாண்டு, சுயமரியாதை இயக்கம் 90 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி நாள் முழுவதும் நடைபெற்ற நிகழ்ச்சிகளை திராவிடர் கழகம், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம், பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பெரியார் நூலக வாசகர் வட்டம்சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

நீதிக்கட்சி 100 - சுயமரியாதை இயக்கம் 90ஆம் ஆண்டு விழா மாட்சிகள் (20.11.2015)
நீதிக்கட்சியின் சாதனைகளில் விஞ்சி நிற்பது சமூக சீர்திருத்தமா? சமூகநீதியா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் நடுவராக தி.இராஜகோபாலன் அவர்களும், “சமூக சீர்திருத்தமே” என்ற தலைப்பில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், வழக்குரைஞர் பூவை.புலிகேசி, டெய்சி மணியம்மை ஆகியோரும், “சமூகநீதியே” என்ற தலைப்பில் முனைவர் துரை.சந்திரசேகரன், பேராசிரியர் மணிமேகலை சித்தார்த்தன், பூ.சி.இளங்கோவன், ஆகியோரும் பங்கேற்று உரையாற்றினர்.
“திராவிடத்தால் எழுந்தோம்” என்ற தலைப்பில் திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு அவர்களும், “சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது ஏன்” என்ற தலைப்பில் பேராசிரியர் முனைவர் ப.இரா.அரங்கசாமி அவர்களும், “மகளிர் புரட்சி” என்ற தலைப்பில் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்களும் உரையாற்றினர். கருத்தரங்கின் அறிமுகவுரையை கவிஞர் கலி.பூங்குன்றன் வழங்கினார்.
பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற “திராவிடர் எழுச்சி ஒரு வரலாற்று புரட்சி” ஒளி-ஒலிக் காட்சி கலை நிகழ்ச்சி பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்தது.
நீதிக்கட்சி நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் “திராவிடத்தால் தான் எழுந்தோம்” என்ற தலைப்பில் முதல் மூன்று பரிசுகளைப் பெற்ற மாணவர்கள் முறையே சு.பெ.தமிழமுதன், சீ.ராஜேஸ்வரி, மு.இராஜ்குமார் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான “பெரியார் செய்த புரட்சி” என்ற தலைப்பில் நடைபெற்ற போட்டியில் முதல் மூன்று பரிசுகளைப் பெற்ற மாணவர்கள் முறையே மோனிஷா, யாழ் ஒளி, பவித்ரா ஆகியோர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு சான்றிதழும் பரிசுத் தொகையும் வழங்கினார்.
பெரியார் நூற்றாண்டு மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் நடத்திய கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ - மாணவியருடன் தமிழர் தலைவர் கி.வீரமணி, பேராசிரியர் கே.எஸ்.பகவான், நீதியரசர் பு.ரா.கோகுலகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.
நீதிக்கட்சி 100 - சுயமரியாதை இயக்கம் 90ஆம் ஆண்டு விழாவில் நடைபெற்ற புத்தக காட்சியில் பங்கேற்ற பதிப்பகங்கள்.      மேலும் செய்தி மற்றும் புகைப்படம்: 1, 3 மற்றும் 7ஆம் பக்கம்
குஜராத் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பு.இரா. கோகுலகிருஷ்ணன் அவர்களுக்கு தமிழர் தலைவர் இயக்க நூல்களை வழங்கினார்.
பகுத்தறிவு முற்போக்கு எழுத்தாளர் (கர்நாடகம்) கே.எஸ். பகவான் அவர்களுக்கு தமிழர் தலைவர் இயக்க நூல்களை வழங்கினார்.

நீதிக்கட்சி நூற்றாண்டு விழா மற்றும் சுயமரியாதை இயக்க 90ஆம் ஆண்டு விழா இயக்க நூல்கள் விற்பனை விவரம்


மேடை வெளியீட்டில் விற்பனை ரூ.37,400
வெளி விற்பனை ரூ.5,415
புத்தக கடை விற்பனை ரூ.8,304
மொத்தம்    ரூ.51,119
திராவிட இயக்க நூல்கள் பதிப்பகங்கள்
ஏகம் பதிப்பகம் | விழிகள் பதிப்பகம், கௌரா ஏஜென்சி | சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன் மேற்கண்ட பதிப்பகங்கள் திராவிடர் இயக்கம் தொடர்பான நூல்களை விற்பனைக்கு வைத் திருந்தன; சிறப்பாக விற்பனை இருந்ததாக சொன்னார்கள்.

தேவை ராம் ராஜ்ஜியம் அல்ல - பீம் (அம்பேத்கர்) ராஜ்ஜியமே! - பேராசிரியர் கே. எஸ். பகவான்


தந்தை பெரியார் தத்துவம் கருநாடகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது
பெரியார் வழியில் நம்மை வழி நடத்த தலைவர் வீரமணி இருக்கிறார்!

பேராசிரியர் கே. எஸ். பகவான் எழுச்சியுரை
சென்னை, நவ.21 தந்தை பெரியார் அவர்களின் தத்துவங்கள் தமிழ் நாட்டையும் தாண்டி கருநாடகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது- தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறகு நம்மை வழி நடத்த தலைவர் வீரமணி இருக்கிறார் என் றார் கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த பகுத்தறிவு - முற்போக்கு எழுத்தாளர் ஆங்கில பேராசிரியர் கே.எஸ். பகவான்.
சென்னை பெரியார் திடலில் நேற்று (20.11.2015) நடைபெற்ற சுயமரியாதை இயக்க 90, நீதிக் கட்சியின் நூற்றாண்டு தொடக்க விழாவில் உரை யாற்றுகையில் அவர் பேசியதாவது:
குஜராத் உயர்நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி கோகுலகிருஷ்ணன் அவர்களே, திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களே, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,  இங்கே என்னை அறிமுகப்படுத்தியுள்ளவரான பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் அவர்களே, பெரியோர்களே, தாய்மார்களே,  நீதிக்கட்சி நூற்றாண்டு, சுயமரியாதை இயக்கம் 90 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்.
கருநாடகத்தில் தந்தை பெரியாரின் தாக்கம்!
தந்தை பெரியார் வாழ்க்கை மற்றும் தத்துவங் களால் ஈர்க்கப்பட்டவர்கள் நாங்கள். கருநாடகாவில் கடந்த 30, 35 ஆண்டுகளாக தந்தை பெரியார் தத்துவங்களை பரப்பி வருகிறேன்.  கருநாடக மாநிலத் தில் இயங்கிவருகின்ற மாபெரும் இரண்டு அமைப்பு களானதாழ்த்தப்பட்டவர்கள் அமைப்பு (தலித்த சங்கர்த சமிதி),  கருநாடக மாநில எழுத்தாளர்கள் சங்கம்  ஆகியவற்றுடன்  இணைந்து பணியாற்றி வருகிறேன். இந்த இரு அமைப்புகளும் தந்தை பெரியார்  தத்துவங்களின் தாக்கத்துடன் இயங்கி வருகின்றன. தந்தை பெரியார் உங்களைப்போலவே நாங்களும் பின் பற்றக்கூடிய மாபெரும் தலைவராவார். அகவேதான் இங்கு நான் வந்துள்ளேன். உங்கள் முன்பாக பேசு கின்றேன். சகோதரர் வீரமணி அவர்களுக்கு நினைவிருக் கிறதோ இல்லையோ, ஏற்கெனவே 20, 25 ஆண்டு களுக்கு முன்பாக இங்கே திராவிடர் கழக நிகழ்ச்சியில் பேசியுள்ளேன்.
டாக்டர் வீரமணி அவர்களை எப்போதுமே என் னுடைய மூத்த சகோதரராகவே கருதி மதித்து வந் துள்ளேன். அவர்மீது எனக்கு அதிக மரியாதை உண்டு. உங்களைப்போன்ற பெரியாரின் தொண்டர்களுடன் இணைந்து இவ்வளவு காலமும் தந்தை பெரியார் தத்துவங்களை உயிர்ப்புடன் வைத்துள்ளார்.
பார்ப்பனீயத்தைக் காந்தியார் எதிர்க்கவில்லை
நான் இங்கே ஒரு கருத்தை சொல்ல விழைகின்றேன். மகாத்மா காந்தியை நாம் தேசத்தின் தந்தை என்று கூறிவருகிறோம். அவர் பிரிட்டி ஷாரிடம்  இருந்து அடிமைத்தனத்திலிருந்து இந்த நாட்டை விடுதலை பெற்றிட அவர் தம் வாழ்வை ஒப்படைத்துக்கொண்டார்.  ஆனால், நான் கருதுவது என்னவென்றால், இதைத் யாரும் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். ஆழமாக சிந்திக்க வேண்டு கிறேன்.  காந்தி பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலையைப் பெற்றுத்தந்ததுபோல், பார்ப்பனீயத்திலிருந்து விடுதலை பெற்றுத்தர முயற்சிக்கவில்லை. இது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதே நேரத்தில் தந்தை பெரியார் தம் வாழ்நாள் முழுவதையும் அதற்காக ஒப்படைத்துக்கொண்டார். ஆகவேதான், கருநாடக மாநிலத்தில் பெரியாரை நாங்கள் கருநாடகத்துக்கும் சேர்த்து விடுதலைக்காகப் போராடியவர் பெரியார் என்று மதிக்கின்றோம். நீதிக் கட்சியின் தாக்கம் கருநாடக மக்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நீதிக்கட்சியின் தாக்கத்தால்தான் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் கருநாடகத்திலும் தோன்றியது. அது இன்றும் தொடருகிறது.
கருநாடகத்தில் நல்வாடி கிருஷ்ண ராஜ உடையார் அளித்த இடஒதுக்கீடு
இங்கிலாந்து ஆட்சிக்காலத்தில் கருநாடகத்தில் மன்னராகத் திகழ்ந்தவர் நல்வாடி கிருஷ்ணராஜ உடையார். அவர் இடஒதுக்கீட்டுக் கொள்கையை கொண்டு வந்தார். இன்றும் யாராலும் அதை ஒழிக்க முடியவில்லை.
நீதிக்கட்சிக்கு முன்னர், திராவிடர் கழகத்துக்கு முன்பாக தமிழ்நாட்டில் எப்படியெல்லாம் ஜாதி பாகுபாடுகள் சீரழித்தன என்பதை சில பேச்சாளர்கள் இங்கே குறிப்பிட்டார்கள். இந்த மாபெரும் இயக்கங்கள் ஆற்றிய பணிகளால் அரசியல் கட்சிகளிலும் அதன் தாக்கம் விரிவாக்கப் பட்டன. அரசுகளின் நல்லாட்சிக்கு வழிவகுத்தன. அதேபோன்று கருநாடக மக்களின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டன. அதன்மூலமாகவே கிருஷ்ணராஜ உடையார் இட ஒதக்கீட்டை கொண்டு வந்தார். அதன்மூலமே கல்வி, அரசுப்பணிகள் அனை வருக்கும் கிடைத்தன. வகுப்புகள், ஜாதிகள், மதங்களைக் கடந்து அனைவருக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்தியா முழுவதிலும் உள்ள மக்களின் வாழ்வில் தந்தை பெரியார் தத்தவங்கள் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. உ.பி. லக்னோவில் பெரியார் மேளாவும் கொண்டாடி உள்ளார்கள். மாயாவதியின் ஊக்கம், துணிவைக்கண்டு நான் மிகவும் ஆச்சர்யமடைந்தேன். அற்புதமான பணிகளை செய்துள்ளார். முசுலீம்கள் உள்பட அனைத்துத் தரப்பு மக்களும் அவரை வேறுபாடுகளை பார்க்காமல் நடந்துகொண்ட முதலமைச்சர் என்று பாராட்டியுள்ளனர்.
சனாதனத்தைப் பரப்பப் போகிறார்களாம்!
நான் கேரளாவுக்குச் சென்று திரும்பும்போது, கொச்சி விமான நிலையத்தில் டெக்கான் கிரானிக்கிள் ஏட்டில் ஒரு செய்தியைப் பார்த்தேன். சனாதன் சங் என்கிற அமைப்பு  சதுர்வர்ணா (நான்கு வருணங்கள்) என்று மக்களிடையே மறுபடியும் நான்கு வருண முறையை திணிக்க உள்ளதாக கூறியுள்ளது. இது மிகவும் அபாயகரமானது. தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் நான்கு வருண முறைக்கு எதிராக போராட்டம் நடந்துள்ளது. சனாதன் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்புச் செய்தி இதழை நான் திரும்பிச் செல்லும்போது சகோதரர் வீரமணியிடம் அளித்துவிடுகிறேன்.
வால்மீகி இராமாயணத்தின்படி ராமன் கடவுள் இல்லை. வால்மீகி இராமாயணத்தைப் படித்துப் பார்த்தீர்கள் என்றால், ராமனை கடவுள் என்று வால்மீகி எந்த இடத்திலும் குறிப்பிடவே இல்லை. அவன் மனிதன்தான் என்று தெளிவாகவே வால்மீகி குறிப்பிட்டுள்ளார்.
வால்மீகி இராமாயணத்தில் ராமன் கடவுள் இல்லை
வால்மீகி இராமாயணத்தில் ராமன்குறித்து குறிப்பிடும்போது, நாரதனே, அந்த மனிதனின் பண்புநலன்கள்குறித்து கூறு என்று கூறுகிறார். அப்படித்தான் இராமாயணம்குறித்து 100 கதைகளை நாரதன் கூறுவதாக வால்மீகி எழுதியுள்ளார்.
இராமாயணத்தில் இராமன் நான்குவர்ணங்களைப் பாதுகாப்பவன் என்றே குறிப்பிட்டுள்ளது. இராமன் (சாதுர் வர்ண ரக்ஷகா) வருணமுறையை காப்பவன் என்றே குறிப்பிட்டுள்ளது.
இங்கே பெரியார் நினைவிடத்தில் கல்வெட்டை நான் கண்டேன். பெரியார் சொல்கிறார், சூத்திரன் என்பவன் பார்ப்பனருக்கு அடிமை என்று தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே, இராமன் பார்ப்பனர்களுக்கு உதவிகரமாக இருந்துவருகிறான். இராமனைக் கடவுளாக ஏற்காதவர்கள், இராமன் கோயிலுக்குப் போகாதவர்கள் என்று அனைவரையுமே வருணமுறையை ஏற்கச்செய்திட இராமாயணத்தின்மூலம் திணிக்கிறார்கள். சம்பூகன் கதையின்மூலமாக வருண முறையைத் திணிக்கிறார்கள். நம்புவதாக சொல்லப்பட்ட சொர்க்கத்தை அடைவதற்காக சம்பூகன் சூத்திரன். அவன் தவம் செய்கிறான். சில பார்ப்பனர்கள் ராமனிடம்சென்று சம்பூகன் தவம்குறித்து புகார் கூறுகிறார்கள். மன்னனாக உள்ள இராமன் சம்பூகனிடம் சென்று நீ எந்த ஜாதியைச் சேர்ந்தவன் என்று கேட்கிறான். நீ பார்ப்பனனா? சத்திரியனா? வைசியனா? சூத்திரனா? என்று நான்கு ஜாதிப் பிரிவுகளை குறிப்பிட்டு கேட்கிறான். சூத்திர னாகத்தான் பிறந்தேன் என் பெயர் சம்பூகன் என்று கூறிய உடனே இராமன் அவன் தலையை வெட்டி விட்டான். சம்பூகன்மீது எந்த தவறும் கிடையாது. இராமனை எப்படி  நல்ல அரசன் என்று ஏற்பீர்கள்? இராம ராஜ்யம் என்று கூறுவதை எப்படி சகித்துக் கொள்ள முடியும்?
ராம்ராஜ்ஜியமல்ல - தேவை பீம் (அம்பேத்கர்) ராஜ்ஜியம்
ஆகவேதான், நாங்கள் கூறுகிறோம். நாங்கள் இராம ராஜ்யத்தை விரும்பவில்லை. பீம் ராஜ்யத்தையே விரும்புகிறோம். பீம் ராஜ்யம் என்பது இப்போதுள்ள அரசமைப்புச்சட்டம். அனைவருக்கும் பொதுவானது. ஜாதிப்பிரிவுகள், பாலியல் வேறுபாடுகள் கிடையாது. அம்பேத்கர் அளித்த அரசமைப்பு சட்டம் அதைத்தான் கூறுகிறது.
அம்பேத்கர் இந்து சட்ட வரைவு என்பதை அறிமுகப்படுத்தினார். சட்டமாக்கிட முயன்றார்.  பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.  காங்கிரசு உள்பட அத்தனைக் கட்சியினரும் எதிர்த்தார்கள். ஆனால், சில ஆண்டுகளுக்குப்பின்னர் அனைத்து மாநிலங்களிலும் பெண்களுக்கு சொத்துரிமை பரிந்துரைத்த அம்பேத்கர் சட்டம் கொண்டுவரப்பட்டுவிட்டது. இந்தியாவில் உள்ள அனைத்துப் பெண்களும் சொத்துரிமை பெற்றார்கள்.
ஆகவே, இராமராஜ்யம் என்பதை எப்படி கூறமுடியும்? காந்தி தன்னுடைய இராமன் தசரதன் மகன் இராமன் அல்ல. அப்படி என்றால், எந்த இராமன் அவன்?
நமக்கு வீரமணி என்ற தலைவர் இருக்கிறார்
தமிழ்நாட்டில் உள்ள மக்கள் மிகவும் விழிப்பாக இருக்கிறார்கள். திராவிடர் கழகம் என்ற மாபெரும் அமைப்பு உள்ளது. தந்தை பெரியார், அம்பேத்கர் தத்துவங்களுடன் மாபெரும் தலைவராக டாக்டர் கி.வீரமணி இருக்கிறார். இதுபோன்றதொரு நிலை மற்ற மாநிலங்களில் கிடையாது. தந்தைபெரியார் தத்துவங்களை டாக்டர் கி.வீரமணி நாடுமுழுவதம் பரப்பிவருகிறார். நாங்கள் அவரைப் பின்பற்றுபவர்களாக இருக்கிறோம்.
உங்கள் எல்லோருக்கும் என்னுடைய நன்றி. என்னை இங்கே அழைத்த டாக்டர் கி.வீரமணிக்கு மிகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-இவ்வாறு பேராசிரியர் கே.எஸ்.பகவான் பேசினார்.
கே.எஸ்.பகவான் அவர்களின் ஆங்கில உரையின் சுருக்கத்தை பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் கோ. ஒளிவண்ணன் தமிழில் சிறப்பாக இறுதியாகச் சொன்னார்.


சமூகத் தத்துவங்களைக் கொண்ட தனித்துவமான இயக்கம் திராவிடர் கழகம்
சமூக தத்துவங்களைக் கொண்டுள்ள தனித்துவமான அமைப்பாக திராவிடர் கழகம் மட்டுமே உள்ளது. சமூக இயக்கமாக உள்ளது. அரசியல் என்பது மேலோட்டமான வாழ்க்கை முறையைமட்டும் கொண்டுள்ளது. கலாச்சார ரீதியிலான வாழ்க்கை முறையே மக்களின் வாழ்வில் ஆழமாக தாக்கத்தை ஏற்படுத்திவருகின்றன என்பதை  நான் உணர்கிறேன். அரசியல்வாதிகள் வருவார்கள், போவார்கள். முதலமைச்சர்கள் வருவார்கள் போவார்கள். பிரதமர்கள்கூட வருவார்கள், போவார்கள். அதுபோன்றவர்களை மக்கள் மறந்துவிடுவார்கள். ஆனால், தந்தை பெரியார் அவர்களை எப்போதும் மறந்துவிட முடியாது. கலாச்சாரம் எப்போதும் மகத்தானது. கலாச்சாரம் எப்போதும் மக்களை ஒன்று சேர்ப்பது. கலாச்சாரம்தான் மக்களை வாழ்விக்கிறது.
தந்தைபெரியார், கேரளாவில் நாராயணகுரு தேவ், மகாராட்டிரத்தில் மகாத்மா புலே, டாக்டர் அம்பேத்கர்,  அனைத்திந்திய அளவில் இந்த நான்கு மாபெரும் தலைவர்கள் சிங்கங்களாக உள்ளனர். இந்த நான்கு தலைவர்களும்தான் பொதுமக்களின் வாழ்வில் பிணைக்கப்பட்டவர்கள். ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப் பட்டவர்கள், நசுக்கப்பட்டவர்கள் என்று அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். சமூகத்தில் ஒதுக்கிவைக்கப்பட்டவர்களின் உரிமை களுக்காக வாழ்நாள்முழுவதும் பாடுபட்டவர்கள்.  ஆகவே, எப்போதும் அவர்கள் நினைத்துப்பார்க்க வேண்டியவர்கள். இதுவரை இந்த நான்கு தலைவர்களின் தத்துவங்கள் நாடுமுழுவதும் உள்ள ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.

நீதிக்கட்சி நூற்றாண்டு விழா,சுயமரியாதை இயக்க 90 ஆம் ஆண்டு விழா! சென்னை பெரியார் திடலில் இன்று (20.11.15) முழுநாள் நடைபெற்றது.விழாவில் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கான “பெரியார் செய்த புரட்சி” என்ற தலைப்பில் நடைபெற்ற போட்டியில் தென் சென்னையை சேர்ந்த வி.யாழ்ஒளி இரண்டாம் பரிசு பேற்ற போது.. 

எழுத்துரு அளவு Larger Font Smaller Font
சென்னை, நவ.23_ 20.11.2015 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற விழாவில் நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்க சாதனைகள் ஆவணப்படம் திரையிடப்பட்டது.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு நாயினும் கீழாக இருந்த நிலை இன்று எப்படி இருக்கிறது என்பது ஒரு மீள்பார்வையாக 1912 இல் சென்னை அய்க்கிய சங்கம், திராவிடர் விடுதி இரண்டும் திராவிட மாணவர்களுக்கு கல்வியில் எப்படி உதவின என்பதில் தொடங்கி, இதில் டாக்டர் சி. நடேச முதலியார், சர்.பிட்டி. தியாகராயர், டாக்டர். டி.எம். நாயர் ஆகியோரின் பங்கு குறித்தும், அதற்கடுத்தாண்டே சென்னை அய்க்கிய சங்கம் சென்னை திராவிடர் சங்கமாக பெயர் மாற்றப்பட்டதும், அதற்கும் அடுத்த ஆண்டு டாக்டர் டி.எம். நாயர் விழித்தெழு, வீறுகொள், இன்றேல் என்றென்றைக்கும் வீழ்ந்துபடுவாய் என்று அறைகூவல்விடுத்து நம் திராவிடர் சமுதாயத்தை விழிப்படையச் செய்தது பற்றியும், 1915 இல் வெறும் 3 விழுக்காடே இருந்த பார்ப்பனர்கள் எப்படியெப்படி எல்லா பதவிகளிலும் இருந்தனர், அதை நமது நீதிக்கட்சி எப்படியெப்படி முறியடித்தது என்பது பற்றியும்,
அதற்கடுத்தாண்டு (1916) மத்திய சட்டசபைத் தேர்தலில் டாக்டர் டி.எம். நாயர் தோற்கடிக்கப்பட்டு - அந்தத் தோல்வி காரணமாக தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டதும், அது வெளியிட்ட பார்ப்பனரல் லாதார் கொள்கை அறிக்கை எப்படி நமது இன்றைய வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்திருக்கிறது என்பதையும், அதைத்தொடர்ந்து நீதிக்கட்சித் தலைவர்கள் லண்டன் பாராளுமன்றத்தில் வகுப்புரிமைக்காக வாதாடிப்பெற்ற உரிமைகள் என்னென்ன என்பது பற்றியும், இதன் தொடர்ச்சியாக நீதிக்கட்சி பெண்களுக்கு இந்தியத் துணைக்கண்டத்திலேயே முதல் முதலில் வாக்குரிமையைப் பெற்றுத்தந்ததும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களை கல்லூரியில் சேர்ப்பதற்கு குழுக்கள் அமைத்து நமக்கு கல்விச்செல்வத்தை எப்படியெல்லாம் பெற்றுத் தந்தது என்பது பற்றியும்,
பஞ்சமர், சூத்திரர் என்ற பெயர்களை அரசு ஆவணங்களிலிருந்து நீக்கி நமது மானத்தைக் காப்பாற்றியது நீதிக்கட்சிதான் என்பது பற்றியும், 1923 இல் பதவி உயர்வுகளுக்கும் வகுப்புவாரி உரிமை உத்தரவு செல்லும் என்று உத்தரவிட்டது நீதிக்கட்சி அரசுதான் என்பதைப்பற்றியும், இன்னும் தாழ்த்தப்பட்ட மாணவர்களை கல்வி நிலையங்களில் மிகுதியாக சேர்த்திட பாடுபட்ட கட்சி நீதிக்கட்சிதான் என்பதைப்பற்றியும், கோயில் பார்ப்பனப் பெருச்சாளி களிடம் சிக்கி கொள்ளை போய்க்கொண்டிருந்ததைத் தடுத்திடும் விதமாக இந்து அறநிலையச்சட்டம் கொண்டு வந்ததும், அரசு அலுவல கங்களில் தான்தோன்றித்தனமாக பணி நியமனங்கள் நடைபெற்று வந்ததை மாற்றிட சென்னை பப்ளிக் சர்வீஸ் கமிஷன் என்ற அமைப்பைத் தொடங்கி நமக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்ததும் இதே நீதிக்கட்சிதான் என்று நீ....ளுகின்ற நீதிக்கட்சியின் சாதனைகளை ஒரு ஆவணப்படமாக 1912 இல் தொடங்கி 1930 வரையிலுமான ஒரு தொகுப்பு, சென்னை பெரியார் திடலில் 20-11-2015 அன்று நடைபெற்ற நீதிக்கட்சியின் 100 - சுயமரியாதை இயக்கம் 90 ஆம் ஆண்டு விழாவில் முதல் நிகழ்ச்சியாக ஒளிபரப்பட்டது.

இது மக்கள் பார்க்கும் வண்ணம் தனியாக பெரிய திரையிலும், மேடையிலிருக்கும் திராவிட இயக்கத் தலைவர்கள் மற்றும் உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதியரசர்களுக்குமான பார்வைக்கென தனியாக ஒருதிரையிலுமாக ஒளிபரப்பட்டது. இந்த ஆவணப் படமும், அதைத் தொடர்டர்ந்து இரவு 9;30 மணி வரையிலும் நடைபெற்ற நீதிக்கட்சியின் 100- சுயமரியாதை இயக்கத்தின் 90 ஆம் ஆண்டின் அனைத்து நிகழ்ச்சிகளும் இணையம் வழியாக பெரியார் வலைக்காட்சி மூலமாக நேரலை செய்யப்பட்டது. இதை உலகெங்கிலும் உள்ள பலரும் கண்டு களித்தனர். பெரியார் வலைக்காட்சி இவ்வாவணப்படத்தை தயாரித்தது குறிப்பிடத்தக்கது
-விடுதலை,23.11.15

பனகல் அரசர்
தமிழர்களால் என்றென்றும் மறக்கப்பட முடியாத மாமனிதர் இராமராய நிங்கர் என்ற பனகல் அரசர்.  அவரின் பிறந்த நாள் இந்நாள் (1866).
தேடற்கரிய, ஒப்புயர்வற்ற நமது அருமைத் தலைவர் கனம் பகனல் ராஜா சர். இராமராய நிங்கவாரு திடீர் என்று நம்மைவிட்டுப் பிரிந்து விட்டார் என்கிற சங்கதி யைக் கேட்டவுடன் பொதுவாக இந்திய மக்களுக்கும், சிறப்பாக தமிழ்நாட்டுப் பார்ப்பனர் அல்லாத மக்களுக்கும் ஏற்பட்ட அதிர்ச்சிக்கும், துக்கத்திற்கும் அளவே  இருக் காது என்று தந்தை பெரியார் குறிப்பிட்டு எழுதுகிறார் என்றால், பனகல் அரசரின் அருமை பெருமை எளி தாகவே விளங்கும்.
ஏன் அப்படி எழுதினார்? காரணங்கள் ஏராளம்! ஏராளம்!! பனகல் அரசர் சென்னை மாநில பிரதமராக இருந்த காலத்தில் பார்ப்பனர் அல்லாத மக்களுக்காக அவர் பொறித்த சாதனைகள் அசாதாரணமானவை. மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்றிருந்த தடையை உடைத்துத் தூக்கி எறிந்த பெருமகன் அவர்.
அந்தக் காலகட்டத்தில் கல்லூரிகளில் முதல்வர்களாக இருந்தவர்கள் எல்லாம் பெரும்பாலும் பார்ப்பனர்கள்தாம்.
பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் கல் லூரியில் நுழைவது என்பது குதிரைக் கொம்பாகவே இருந்தது. அத்தகு கசப்பான சூழலில், கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கென்றே ஒவ்வொரு கல்லூரி யிலும் குழு ஒன்றை அமைத்து, அவர்கள் மாணவர்களைச் சேர்க்க வழிவகை செய்து, பார்ப்பனர் அல்லாதார் வயிற்றில் பாலை வார்த்தார்.
பார்ப்பனர்களின் வேட்டைக்காடாக இருந்த கோயில் களின் நிருவாகத்தை ஒழுங்குபடுத்த இந்து அறநிலையத் துறை என்ற ஒன்றைக் கொண்டுவந்தவரும் அவரே! பறையன், பஞ்சமன் என்றிருந்த பெயர்களை மாற்றி ஆதிதிராவிடர் என்றே அழைக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தவரும் அவரே!
தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். மகாமகா தந்திரசாலி என்று பார்ப்பனர்களாலேயே ஒப்புக்கொள்ளப்பட்டவர். அத்தகைய ஒருவரின் பிறந்த நாள் என்பது ஒளிவீசும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்பதில் அய்யமுண்டோ!
விடுதலை,20.11.15
 
வீர வணக்கம்!
அய்யா நடேசனாரே! நாடு போற்றும் மருத் துவரே! 1937  (பிப்ரவரி 18) நீவிர் மறைந்திருக்கலாம் - ஆனால் பார்ப்பனர் அல்லா தார் இயக்கத்துக்கு விதை போட்ட தங்களையும், நிரூற்றி வளர்த்து வேலி போட்ட வெள்ளுடை வேந்தர் பிட்டி. தியாகராய ரையும், தென்னாட்டு லெனின் என்று தந்தை பெரியாரால் போற்றப்பட்ட - தோற்றத்தில் கர்ச்சிக்கும் சிங்கமாய்க் காட்சி அளிக் கும் - பார்ப்பனர்களைக் குலை நடுங்கச் செய்யும் குகை வாழ் புலியாய் வாழ்ந்த டாக்டர் டி.எம். நாயரையும் எண்ணற்ற ஈடிணையில்லா நீதிக்கட்சிப் பெருமான்களையும் மறக்க முடியுமா?
திராவிடப் பெருங்குடி மக்களின் ஒவ்வொரு குருதித் துளியும் உங்களை யெல்லாம் நினைத்து ஒவ்வொரு சுழற் சியையும் மேற்கொள்கிறது.

இவை எல்லாவற்றிற் கும் மேலாக, காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும், இருந்தபோதே நீதிக் கட்சியின் நெடுங்குரலை வழிமொழிந்து வாழ்நாள் எல்லாம் நம் மக்களின் தன்மானத்துக்கும், சமூக நீதிக்கும் பாலியல் உரிமைக் கும், மூடநம்பிக்கை தகர்ப் புக்கும் தள்ளாத வயதிலும் தடியூன்றி, தமிழ்மண் பரப் பெல்லாம் ஒற்றை மனித இராணுவமாய் பறந்து பறந்து சென்று, நம் மக் களின் உணர்வில் நீக்கமறக் கலந்து விட்ட நீடு துயில் நீக்க வந்த கதிரவனாய் ஒளி வீசி வெடித்தது யார்? வெகு மக்கள் புரட்சி என்று வர லாறு மெச்சும் அளவுக்குத் தொண்டு செய்து பழுத்த பழமான தந்தை பெரியார் அல்லவா! அவர்களை யார்தான் மறக்க முடியும்?

உலகளாவிய இயக்க மாக இன்று பரந்து பட்டு நிற்கிறது என்பதை நினைத் துப் பார்க்கிறோம்.

பறையர்களும், நாய் களும், தொழு நோயாளி களிலும் உயர் ஜாதிக்காரர் களின் உணவு விடுதிக்குள் நுழையக் கூடாது என்று அறிவிப்புப் பலகை வைத் தது. தலைநகரமாம் சென்னை.
இரயில்வே நிலையங் களில் பிராமணாள் - இத ராள் என்று பச்சையாகப் பார்ப்பனியப் பாம்பு பல கையில் எழுதி வைத்திருந் தது. சுயமரியாதை இயக்க சூரியனாம் தந்தை பெரியார் அவர்களின் தடிபட்டு அவை எல்லாம் சுக்கல் நூறாக உடைத்தெறியப்பட்டன.

தாழ்த்தப்பட்ட சமூ கத்தைச் சேர்ந்த  ஏ. வரத ராசனை உயர்நீதிமன்றத்தி லும் - ஏன் உச்சநீதிமன்றத் திலும் உட்கார வைத்து, உச்சிக் குடுமிகளை பற்றி எரியூட்டச் செய்தவர்கள். தந்தை பெரியார் மானமிகு முதல் அமைச்சர் கலைஞர் தான் என்றாலும், அந்தச் சாதனைக்குள் நீதிக்கட்சிப் பெரியோர்களே! நீங்கள் உள்ளீடாக உயர் சிம்மாச னத்தில் அல்லவா உட் கார்ந்திருக்கிறீர்கள்!

உங்கள் உணர்வு களுக்கே ஒரு குன்றி மணி அளவுக்குக்கூட சேதாரம் ஏற்படாமல் தமிழர் தலை வர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் ஒப் பற்ற தலைமையின்கீழ் செயலூக்கம் செய்து காட்டி வருகிறது திராவிடர் கழகம். நீங்கள் விதைத்த விதை விருட்சமாகிப் பலன் கொடுத்துக் கொண் டிருக்கிறது. உங்கள் வேர் களுக்கு எங்களின் தலை தாழ்ந்த வீர வணக்கம்! வீர வணக்கம்!!
- மயிலாடன் 
விடுதலை,20.11.15
பார்ப்பனர் அல்லாத மக்கள் சமுத்திரத்தின் ஒவ் வொரு துளியும் எழுந்து நின்று இந்நாளில் நன்றி கூர்வோம்! பார்ப்பனர் அல்லாத மக்களின் உரிமைக்கும், வளர்ச்சிக்கும், அடிக்கல் நாட்டப்பட்ட திருப்பத்திற்கான திருநாள் இந்நாள்!

சென்னை வேப்பேரியில் திருவாளர் எத்தி ராஜுலு முதலியார் இல்லத்தில் கூடி, பார்ப்பனர் அல்லாதாருக்கென சொந்தமாக ஓர் அரசியல் கட்சி தொடங்கப்பட வேண் டியதன் அவசியம் குறித்து ஆலோசிக்கப்பட்டது இந்நாளில்தான் (20.11.1916).

1) பிட்டி தியாகராயர், 2) டாக்டர் டி.எம். நாயர், 3)
பி. இராஜரத்தின முதலியார் 4) டாக்டர் சி. நடேச முதலியார், 5) பி.எம். சிவஞான முதலியார் 6) எம்.ஜி. ஆரோக்கிய சாமி பிள்ளை 7) பி. இராமராய நிங்கர் (பனகல் அரசர்)
8) ஜி. நாராயணசாமி செட்டி 9) ஓ. தணிகாசலம் செட்டி,

10) டாக்டர் முகம்மது உஸ்மான் சாகிப் 11) ஜெ.எம். நல்லசாமி பிள்ளை 12) எம்.சி. ராஜா 13) கே. வெங்கட்ட ரெட்டி நாயுடு 14) ஏ.பி. பாத்ரோ 15) டி. எத்திராஜுலு முதலியார்
16) ஓ. கந்தசாமி செட்டியார் 17) ஜே.என். இராமநாதன்
18) ஏ.கே.ஜி. அகம்மதுதம்பி மரைக்காயர் 19) அலமேலு மங்கைத் தாயாரம்மாள் 20) ஆற்காடு ஏ. இராமசாமி முதலியார், 21) கருணாகர மேனன், 22) டி. வரதராசலு நாயுடு, 23) மதுரை வழக்குரைஞர் எல்.கே. துளசிராம்
24) கே. அப்பாராவ் நாயுடுகாரு, 25) எஸ். முத்தையா முதலியார் 26) மூப்பில் நாயர் ஆகிய பெரு மக்கள் ஒன்று கூடிதான் பார்ப்பனர் அல்லாதாருக்கென ஓர் அரசியல் கட்சியைத் தொடங் குவது என்று முடிவு செய்தனர்.

அவ்வமைப்புக்கான அறிக்கைதான் புகழ் பெற்ற “பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கை” (The Non - Brahmin Manifesto) என்பதாகும். அதனை வெளி யிட்டவர் வெள்ளுடை வேந்தர் என வரலாற்றில் போற்றி மதிக்கப்படும் பிட்டி தியாகராயர் அவர்கள் ஆவார்.  அவ் வறிக்கை வெளி யிடப்பட்டது 1916 டிசம்பர் 20ஆம் நாளாகும். வெளியிடப்பட்ட இடம் சென்னை விக்டோரியா பப்ளிக் ஹால் ஆகும்.

சென்னை மாநகராட்சி அலுவலகம் அருகில் இருக்கும் இப்பழம் பெரும் கட்டடத்தினை மானமிகு மா. சுப்பிர மணியம் அவர்கள் கடந்த முறை சென்னை மேயராக இருந்தபோது புதுப்பித்து அதே நேரத்தில் அதன் பழைமை அம்சத்திற்கு, வடிவத்திற்குச் சேதாரமில்லாமல் கட்ட மைப்புச் செய்தார் - அதன் பின்னர் வந்த நிருவாகத்தின் கீழ் சென்னை மாநகராட்சி வந்த நிலையில் அப்பணி முற்றுப்பெறாமல் முடக்கப்பட்டது என்பது வேதனைக் குரியதாகும்).

பார்ப்பனர்கள் சமுதாய தகுதியிலும், கல்வியிலும், உத்தியோகங்களிலும் எந்தளவு ஆதிக்கப் புரியினராக இருக்கின்றனர்? என்பதையும் எடுத்துக் காட்டியதுடன் பார்ப்பனர் அல்லாதார் கல்வி, சமுதாயம், அரசியல், பொருளாதாரம் முதலிய பல துறைகளிலும் முன்னேறு வதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று அவ் வறிக்கை கூறுகிறது. சுயமரியாதையுடன் சம நிலையி லிருந்து மற்றவர்களுடன் பணியாற்றுவதையே ஒவ்வொரு வரும் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும் என்று முழக்கமிட்டார் வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர்.
பார்ப்பனர்கள் வெள்ளைக்காரர்களை எதிர்த்தது எந்தக் கால கட்டத்தில் என்பதனைத் தந்தை பெரியார் குறிப் பிடுகிறார்.

“வெள்ளையர் வழங்கிய உத்தியோக சலுகைகளில் நம் இனத்தவருக்குரிய பங்கு வேண்டும் என்று கேட்க ஆரம்பித்த பிறகுதான், வெள்ளையர்களும் நமக்குக் கொஞ்சம் சலுகை தர ஆரம்பித்த பிறகுதான், காங்கிரஸ் இயக்கமானது தேசிய ஸ்தாபனமாக மாறி வெள்ளையர்கள் வெளியேற வேண்டும் என்று கூறிற்றே ஒழிய - அதுவரை அது பார்ப்பனர்களுக்குப் பதவி தேடித் தரும் ஸ்தாபன மாகத்தான் இருந்து வந்தது என்பது கண் கூடு” என்று கூறுகிறார் தந்தை பெரியார் (‘விடுதலை’ 14.12.1950).

முழுக்க முழுக்க வெள்ளையர்களுக்கு வெண் சாமரம் வீசி, அவர்கள் மூலம் உயர்நீதிமன்ற நீதிபதி பதவிகள் வரை பார்ப்பனர் பெற்றுக் கொண்ட நிலையில், முஸ்லிம்களும் தங்கள் பங்கைக் கேட்க ஆரம்பித்தனர். பார்ப்பனர் அல்லாதாரும் தங்களுக்கான வாய்ப்பினை அழுத்தமாகக் கோர ஆரம்பித்தனர்; இனி ஆங்கிலேயர்கள் நமக்குப் பயன்பட மாட்டார்கள் என்ற நிலையில்தான் காங்கிரசின் போக்கிலே சுதந்திர இந்தியா என்ற கோரிக்கை கிளர்ந்தது.

பார்ப்பனர் அல்லதார் இயக்கமான நீதிக்கட்சி சென்னை மாநிலத் தேர்தலில் நின்று வெற்றி பெற்று மளமளவென நீதிகோல் சாயாமல் பார்ப்பனர் அல்லாத பெரும்பான்மை மக்கள் கல்வி, வேலை வாய்ப்பு, சமூக நீதி இவற்றில் மேலே முன்னேற வழிவகை செய்தனர்.

எத்தனை எத்தனையோ வகைளில் பார்ப்பனர் அல்லாதாருக்கு நீதிக்கட்சி பேருதவிகளைச் செய்திருந் தாலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவ உரிமைக்கான ஆணையைப் பிறப்பித்ததே, அது ஒன்றுக்காவது பார்ப் பனர் அல்லாத மக்கள் காலாகாலத்திற்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளனர்.

நீதிக்கட்சி ஆதரவு பெற்ற டாக்டர் பி. சுப்பராயன் அவர்களின் தலைமையிலான அமைச்சரவையில் இருந்த எஸ். முத்தையா முதலியார் அவர்களின் அரும் முயற்சி யால் முதன் முதலில் கொண்டு வரப்பட்டு செயல்படுத்த வைக்கப்பட்டது. வகுப்புவாரி உரிமை சட்டமாகும். (நிஷீ விs 744 ஞிணீtமீபீ 3.9.1928).

மொத்தம் 14 இடங்கள் என்றால் பார்ப்பனர் அல்லா தாருக்கு (இந்து) 5 இடங்கள், பார்ப்பனருக்கு 2 இடங்கள், ஆங்கிலோ இந்தியர்கள் மற்றும் கிறித்தவர்களுக்கு 2, முஸ்லிம்களுக்கு 2, தாழ்த்தப்பட்டோருக்கு 1 என்ற ரீதியில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதனுடைய பரிணாம வளர்ச்சிதான் இன்று தமிழ்நாட்டில் 69 சதவிகித இடஒதுக்கீடு கொடி கட்டிப் பறப்பதாகும்.
பொது வீதிகளில் குளங்களில், கிணறுகளில் அனை வரும் தாழ்த்தப்பட்டோர் உட்பட சரி சமமாகப் புழங்கு வதற்கு அடிப்படை ஆணை பிறப்பித்ததிலிருந்து அடுக் கடுக்காக எத்தனை எத்தனையோ உரிமைகள் பார்ப்பனர் அல்லாதாருக்கு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிடைத்துள்ளது என்றால் அந்தச் சாதனைக்கான முழுப் பெருமை நீதிக்கட்சியையே சாரும்.

அத்தகு நீதிக்கட்சிக்கும், அதனை உருவாக்கி செயல்படுத்திய அதன் அருந் தலைவர்களுக்கும், நீதிக்கட்சி பிறந்த இந்நாளில் தலை தாழ்த்தி வணக்கம் செய்வோம் - மன நிறைந்த நன்றி உணர்வினையும் காணிக்கையாக்குவோமாக.
(சுயமரியாதை இயக்கம் குறித்து நாளை எழுதுவோம்)

கி.வீரமணி
விடுதலை,20.11.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக