மைசூர் நகரின் பழைய பெயர் மகிசாசூர் என்பது அனைவருக்கும் தெரியும், பிரிட்டீஷ் இந்தியா ஆட்சி யின் போது மைசூர் மகாராஜா அரண்மனையில் இருந்து திருட்டு போன ஒரு ஓவியம் இங்கிலாந்தில் உள்ள ஒரு செல்வந்தரிடம் பல கோடி ரூபாய்க்கு கைமாறபப்ட்டது. அந்த ஓவியத்தில் மகிசாசுரன் துர்காதேவி யுடன் உடலுறவு செய்வது போன்று வரையப்பட்டிருந்தது.
டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மகிசாசுரன் துர்கா புராணக்கதைதொடர்பான விவாதங் களும் கிளம்பியது, முக்கியமாக நாடா ளுமன்றத்தில் ஒரு புராணக் கதையை மய்யப்படுத்தி பேசிய ஸ்மிருதி இரானி நாடாளுமன்றத்தை தொலைக்காட்சி படப்பிடிப்பு அரங்கமாக மாற்றியதை நாம் அனைவரும் கண்டோம். தலித், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அனைவரும் மகிசாசுரன் வீரவணக்க நாள் கொண்டாடியதைக் கூறி அவர்கள் துர்கா தேவியை மிகவும் கேவலமாக வர்ணித்தார்கள் என்று கூறி கதை ஒன்றை நாடாளுமன்றத்தில் வாசித்தும் காண்பித்தார்.
மகிசாசுரன் இந்து மதப்புராணங் களின் படி கொடுமையான அரக்கன் என்று கூறப்பட்டுள்ளது, அவனை கொலைசெய்ய பல்வேறு உருவங்களை எடுத்து இறுதியில் கொன்றதாக கூறப்பட்டுள்ளது. இந்திரா காந்தி ஆட்சியில் பீகாரைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர் ஒருவர் பிகார் மாநி லத்தில் ஒரு அமைப்பினர் வெளியிட்ட நூல் ஒன்றில் துர்க்காதேவி மது அருந்துபவராக சித்தரிக்கப்பட்டிருப்ப தாக கூறி நாடாளுமன்றத்தில் பிரச் சினையை எழுப்பினார். இதற்கு பதிலளித்த அப்போதைய உள்துறை அமைச்ச்ர் பிரணாப் முகர்ஜி போரின் போது களைப்படையாமல் இருக்க துர்காதேவி தொடர்ந்து மது அருந்திய தாகவும், இதன் காரணமாக சூரி யனைப் போன்று சிவப்பு நிறத்தில் துர்க்காவின் கண்கள் மாறிவிட்டது என்று சண்டிபாட் துர்கா சரித்திர மானஸ்சில் (துர்கா வழிபாட்டு மாலை) உள்ளதாகவும் அதைத்தான் அவர்கள் தங்கள் நூலில் கொடுத்துள் ளார்கள் என்று கூறினார்.
2014-ஆம் ஆண்டு பார்வேர்ட் பிரஸ் பத்திரிகையில் இந்தியா முழுவதும் சொல்லப்பட்டுவரும் மகிசாசுரன் துர்காதேவிக் கதைகள் அச்சாகியது, இதில் மகிசாசுரனுக்கும் துர்க்காதேவிக் குமிடையே நடந்த உடலுறவு மற்றும் அதன் மூலம் பிறந்த குழந்தைகள் பற்றிய ஜார்கண்ட் மக்களின் நம் பிக்கை கதையும் வெளியானது, இந்த நிலையில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அந்த தொடர் குறித்து புகார்கள் வந்ததாக கூறியதை அடுத்து அந்த தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் டில்லியைச் சேர்ந்த ஒரு நபர் பார்வார்ட் பிரஸ் இதழில் வெளியாகும் இந்த தொடரின் மூலம் பாப்பனர்கள் மற்றும் பார்ப்பனர்கள் அல்லதவர்கள் இருபிரிவினருக்கு மிடையே கடும்பகையை ஏற்படுத்தும் விதமாக உள்ளது ஆகவே இதை எழுதியவர்களைத் தண்டிக்கவேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்றும் நீதிமன்றத்தில் நிலு வையில் உள்ளது.
இந்தியா முழுவதும் கொண்டாடப் படும் நவராத்திரிக்கும் வங்காளத்தில் கொண்டாடப்படும் துர்காபூஜாவிற் கும் வேறுபாடு உண்டு ராபர்ட் கிளைவ் பிளாசி போரில் இஸ்லாமிய சுல்தானை தோற்கடித்த பிறகு கொல்கத்தா நவாப் அந்த வெற்றியை விழாவாக கொண்டாட உத்தரவிட் டார். 1757--ஆம் ஆண்டு உருவாக இந்த விழா விரைவில் துர்காபூஜாவாக மாறி மகிசாசுரன் கதையும் அதில் சேர்ந்து கொண்டது. ஆரம்ப கால துர்காபூஜா இஸ்லாமியர்களை எதிரிகளாக கொண்டே கொண்டாடப்பட்டது. பிற்காலத்தில் உழைக்கும் வர்க்கம் வணங்கும் மகிசாசுரன் கொலை செய்வதைக் கொண்டாடும் பாணியில் மாறிவிட்டது.
ஆயிரம் ஆண்டுகளாக இந்தியா முழுவதும் வாழ்ந்த திராவிடர்கள் மகிசாசுரனை தெய்வமாக வணங்கி வருகின்றனர். அவர்களின் தலைமுறை யினர் மகிசாசுரனை கேவலப்படுத்தும் பார்ப்பனியச்சூழ்ச்சியை புரிந்து கொண்டு மக்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக மகிசாசுரன் வீரவணக்க நாள் 2010-திற்குப் பிறகு கொண்டாடப்பட்டு வருகிறது.
2011-ஆம் ஆண்டு முதல் முதலாக ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் மிகவும் பெரிய அளவில் மகிசாசுரன் வீரவணக்க நாள் கொண் டாடப்பட்டது, இந்த விழாவில் அன்றைய சட்டமன்ற உறுப்பினரும், இன்றைய பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான உதித்ராஜ் கலந்து கொண்டார். இந்தியா மட்டுமல்ல பாகிஸ்தானில் உள்ள பழங்குடியின ரும் மகிசாசுரனை குலதெய்வமாக வணங்கும் விபரம் தற்போது ஊட கங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இது வரை சுமார் 300 வகையான பழங் குடியினரிடையே மகிசாசுரன் தெய்வ மாக வணங்கப்படுவது தெரிய வந்துள்ளது
மதுரையில் புதூரில் உள்ள பூங்காவில் மகிசாசுரனின் சிலை மிகப் பெரிய அளவில் உள்ளது. பூங்காவில் அழகிய சிற்பங்கள், விளையாட்டு சாதனங்கள் இருக்கலாம் ஆனால் அங்கே கையில் ஆயுதமும் கோடூரப் பார்வையும் கொண்ட மகிசாசுரன் சிலை பிரமாண்டமாக உள்ளது. அங்குள்ள மகிசாசுரன் சிலை தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது, மகிசாசுரன் கோவில் நீண்டகாலமாக அந்தப் பகுதியில் உள்ள மக்களால் வணங்கப்பட்டு வந்ததாகவும், பூங்கா அமைக்க திட்டமிட்ட போது பூங்காவினுள் கோவில் வருவதால் அதை இடிக்க மதுரை மாநகராட்சி திட்டமிட்டது, ஆனால் நூற்றாண்டாக வழிப்பட்டு வரும் ஒரு கோவிலை இடிக்க அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து கோவிலை இடித்து சிறிய மகிசாசுரன் சிலைக்கு பதிலாக மிகபெரிய அளவில் மகிசாசுரன் சிலையை வைக்கும் திட்டத்தை எதிர்ப்பாளர்களிடம் மதுரை மாநகராட்சி வைத்தது, அதன் பிறகு அந்தச் சிலை அங்கே நிறுவப் பட்டு இன்றுவரை பிரமாண்டமாக காட்சி தருகிறது. புதிதாகக் கட்டப்படும் தெருப்பிள்ளையார் கோவிலுக்கு எல்லாம் எதிர்சேவை செய்யும் அழகர் நூற்றாண்டு காலமாக சாலைக்கு அருகில் உள்ள மகிசாசுரன் கோவி லுக்கு எதிர்சேவை ஏன் செய்வதில்லை என்பதில் இருந்தே பாகிஸ்தானில் இருந்து மதுரை வரை ஆரிய திராவிட பகைமை இன்றும் தொடர்வது கண்கூடாக தெரியவரும் பார்வேர்ட் பிரஸ் தொடர் வந்துகொண்டிருந்த போது நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப் பட்ட இயக்கத்தில் தலைவர்கள் உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் நடக்கும் மகிசாசுரன் வணக்கம் பற்றி தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் பார்க்கும் போது மகிசாசுர வதம் என்பது பார்ப்பனர்கள் இந்த நாட்டில் புகுந்து இங்குள்ள புகழ்பெற்ற மன்னர் ஒருவரை சூழ்ச்சியின் மூலம் கொலை செய்ததை கொண்டாடுகின்றனர் என்பது தெரியவரும்.
ஆரியர்களுக்கு மகிசாசுரன் ஒரு கொடிய அரக்கன், திராவிடர்களுக்கு ஒரு புகழ்பெற்ற தலைவன் ஆகும். புராணக் கதைகளை வரலாற்று ஆதா ரமாக எடுத்துக் கொள்ளமுடியாது. புராணங்களே உண்மைக்கு எதிராக இருக்கும் போது அதில் உள்ள வர்ண னைகளை வரலாற்றில் நடந்த சம்பவ மாக எக்காலத்திலும் எடுத்துக் கொள்ள முடியாது. அதாவது தீயதை (மகிசாசுரனை) நல்லது(துர்கா) வென்றதாக நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.மனித உடலும் எருமைத்தலையும் கொண்ட ஒரு அசுரன் அவனை ஆண்களால் வெல்ல முடியாதாம், ஆகையால் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் தங்களது சக்திகளையெல்லாம் திரட்டி துர்கா விற்கு கொடுத்தார்களாம் அந்த துர்கா தேவி மகிசாசுரனைக் கொலை செய்தாளாம்.
நாடாளுமன்றத்தில் ஸ்மிருதி இரானி அவசரத்தில் ஓர் உண்மையை போட்டுடைத்து விட்டார். புராணக் கதையில் துர்கா ஒரு பரத்தை என்றும், அவள் மகிசனிடமிருந்த அளவுகடந்த செல்வத்தைப் பெற அவனைத் திருமணம் செய்வது போல் நாடகம் நடித்து 7 நாட்கள் அவனுடன் உட லுறவு கொண்டு 8 ஆவது நாள் அவன் களைப்புற்று உறங்கும் போது அவனைக் கொலைசெய்தாள் என்று உள்ளது. மைசூர் அரண்மனையில் இருந்து களவு போன ஓவியத்தில் மகிசாசுரன் துர்கா உடலுறவுக் கோலத்தில் உள்ளதாக இருக்கிறது. இதனடிப்படையில் ஸ்மிருதி இரானி நாடாளுமன்றத்தில் கூறிய கதைக்கும் அந்த ஓவியத்திற்கும் ஏதோ தொடர்பு உள்ளது உண்மையாகிறது. துர்கா அல்லது தேவி வரலாற்றை எடுத்துக் கொண்டால் அது மார்கண்டேய புராணத்தில் இருந்து தொடங்குகிறது. மார்கண்டேய புராணம் கிபி 300-லிருந்து கிபி 500- காலகட்டத்தில் எழுதப்பட்டதாகும். அந்தப் புராணத் தில் ஸ்மிருதி இரானி கூறியதை விட நாகூசும் அளவிற்கு மிகவும் ஆபாச வருணனையில் மகிசாசுரனுக் கும் துர்காவிற்கு மிடையே நடந்த உடலுறவு பற்றி எழுதப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் தான் காமசூத்திரத்தில் சில இயற்கைக்கு மாறான உடலுறவுகள் வர்ணனை செய்து எழுதப்பட்டது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
இந்துமதப் புராணங்கள் அனைத் தும் ஒன்று ஆபாசங்கள் நிறைந்தி ருக்கும், மற்றொன்று மனசாட்சி களுக்கு இடமில்லாமல் எதையும் செய்யலாம் என்று எழுதப்பட்டி ருக்கும், முக்கியமாக எளியவர்களை தீயவர்களாக சித்தரித்து அவர்கள் கடவுளர்களால் கொலை செய்ய படுவதாக காட்டப்படும் வர்ணனை கள் நிறைந்திருக்கின்றன.
தமிழகத்தில் தந்தை பெரியார், மராட்டியத்தில் டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர், மகாத்மா பூலே போன்ற பெரும் தலைவர்கள் ஆரிய புரா ணங்கள் அனைத்தும் மண்ணின் மைந்தர்களை அடிமைகொள்ளவும் அவர்களை ஒருவித பயப்போதை யில் வைக்கவுமே இயற்றப்பட்டன என்று தொடர்ந்து கூறிவந்தனர். அதற்காக பல்வேறு சான்றுகளையும் அவரக்ள் எழுதிய புராண இதிகாசங் களில் இருந்தே எடுத்துரைத்தனர்.
அர்த்தசாஸ்திரம், காமசாஸ்திரம், இரண்டுமே ஆர்யர்களால் மிகவும் நீண்டகால நரித்தந்திர யோசனை யுடன் எழுதப்பட்டதாகும். காம சாஸ்திரத்தை காண்பித்து இம் மண்ணை ஆண்ட மன்னர்களை வசப்படுத்தி கொலைசெய்தனர். அல்லது அவர்களை கைப்பாவை களாக்கினர் என்று மகாத்மா பூலே கூறினார்.
தந்தை பெரியார் ராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் உள்ள புரட்டுக்களை வெளிக்கொண்டு வந்தார். தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் எழுதிய மகாபாரதத்தின் கீதையின் மறுபக்கம் என்ற நூலுக்கு இன்றுவரை மறுப்பு எதுவும் கூற முடியாமல் பார்ப்பனர்கள் தவித்து வருகின்றனர்.
இந்துத்துவ அரசியல் ராமன் என்ற ஒன்றை மய்யமாக வைத்தே நடக்கிறது. எந்த ராமனை தந்தை பெரியார், பாபாசாகிப் அம்பேத்கர், மகாத்மா பூலே போன்றோர் தீவிரமாக எதிர்த்தார் களோ அதே ராமன் இன்று அரசியல் மய்யமாகி இருக்கிறான் என்றால் பார்ப்பனியம் மீண்டும் தங்களது அடிமைகளாக மண்ணின் மைந்தர் களை மாற்ற முயற்சித்து வருகிறது என்று தானே பொருள். மகிசாசுரன், ராவணன், போன்ற கதாபாத்திரங்களின் மூலம் மண்ணின் மைந்தர்களை தீயகுணம் கொண்டவர்களாகவும், அவர்கள் அழிந்தே தீரவேண்டும் என்ற நோக்கோடு கதைகளாக புனையப் பட்டது என்பதும் இதனை மக்களி டையே எந்த வகையில் கொண்டு சென்றால் சமூகத்தில் பிளவை ஏற்படுத் தலாம் என்ற சூழ்ச்சியில் பார்ப்பனியம் கைதேர்ந்த ஒன்றாக உள்ளது என் பதைக் கண்கூடாகக் காண முடியும்.
இந்த மண்ணிற்கு வெளியில் இருந்து வந்த ஆரியர்கள் எழுதிய அத்தனை கதைகளுமே ஆரியர்களின் தலைவனை ஒரு நாயகனாகவும் திராவிடர்களை அரக்கர்களாகவுமே சித்தரித்துள் ளார்கள் என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக கைப்பற்றிய இடங்களில் தங்களது அரசாட்சியை ஏற்படுத்துவது ஒரு வழி அது வீரர்களின் வழி, ஆனால் கோழைகள் தாங்கள் உழைப்பின்றி வாழ கலாச்சாரசீரழிவை ஏற்படுத்தி அதன் மூலம் குழம்பங்களை விளை வித்து மக்களைப் பிரித்து சுகவாழ்வு வாழ்வதும் ஒருவழி இதைத்தான் முன்பு ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டு நுழைந்த ஆரியர்கள் செய்துவந்தனர்.
இந்த இடத்தில் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும் திராவிட இலக்கி யங்களில் அன்பு, இரக்கம், கருணை, பாசம், பரிவு, விட்டுக்கொடுத்தல், சமாதானம் போன்றவற்றிற்கு மிகவும் அதிக இடம் கொடுக்கப்பட்டுள்ளது. பார்ப்பனர்களைத் தவிர்த்த மற்றவர்கள் அனைவரும் சூத்திரர்கள் என்று மனு எழுதுவதற்கு பலநூற்றாண்டுகளுக்கு முன்பு தோன்றிய கணியன் பூங்குன் றனார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றார். வள்ளுவர் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றார்.
பார்ப்பனர்களுக்கு இன்றுவரை திராவிடர்களின் விழிப்புணர்வு எட்டிக் காயாக கசக்கிறது, அதனால் தான் தொலைக்காட்சிகளில் சிறப்பாக நடித்த ஸ்மிருதி இரானியைக் கொண்டு நாடாளுமன்றத்திலும் துர்காவிற்கு ஜே.என்.யு மாணவர்களால் அவமானம் ஏற்பட்டுவிட்டது என்று கூறவைத்தனர். இதன் மூலம் தங்களுக்கு எதிராக புறப்படும் எந்த ஒரு சக்தியையும் அவர்களின் கையைக் கொண்டே கண்ணைக் குத்தும் தந்திரத்தை இந்துத் துவக் கும்பல்கள் செய்துகொண்டு இருக்கின்றன.
- சரவணா ராஜேந்திரன்
-விடுதலை ஞா.ம.9.4.16