திங்கள், 21 டிசம்பர், 2020

ஆதிசங்கரர் யார், 'தினமணி'க்குப் பதில்!


ஆதிசங்கரர் யார்?


'தினமணி'க்குப் பதில்!


9.10.2020 நாளிட்ட 'தினமணி' நடுப் பக்கக் கட்டுரையின் தலைப்பு "ஆதி சங்கரரும் திராவிடமும்" என்பதாகும். கட்டுரையை எழுதியவர் ஊடகவியலாளர் கோதை ஜோதி லட்சுமி என்பவர் ஆவார்.


இவர் அடிக்கடி 'தினமணி'யில் ஒரு பக்கக் கட்டுரையை எழுதிக் கொண்டு இருக்கக் கூடியவர். அவற்றில் பெரும்பாலும் ததும்புவது எல்லாம் 'தாம் ஒரு பிராமணர்' என்பதுதான்.


பார்ப்பனர்களின் இனப்பற்று என்பது நாடறிந்த ஒன்றே  - அதுவும் 'தினமணி' ஆசிரியரும் எத்தகையவர் என்பது நன்கு தெரிந்த ஒன்றே! இதனைத் 'தினமணி' படிக்கும் வாசகர்கள் அறிந்த ஒன்றே!


ஆதி சங்கரரை இந்தக் கட்டுரையில் - இதற்கு மேல் தலையில் தூக்கி வைத்து ஆட முடியாது என்கிற அளவுக்கு எழுத்துகள் அணி வகுத்து ஆரவாரம் செய்கின்றன.


ஆதிசங்கரர் பற்றி - நாம் சொன்னால் அதற்கு உள்நோக்கம் கற்பிக்கத் தயாராக இருப்பார்கள்!


அமெரிக்கா வரை சென்று பிராமண மதத்தை (இந்து மதத்தையல்ல) பிரச்சாரம் செய்த விவேகானந்தர் இதே ஆதிசங்கரர்பற்றி என்ன கூறுகிறார்?


"சங்கரருடைய புத்தி நாவிதன் கத்தியைப்போல மிகவும் கூர்மையாய் இருந்தது; அவர் வாதம் புரிவதில் வல்லவர்; மஹா பண்டிதர்; அதில் அய்யமில்லை. என்றாலும், அவரிடத்தில் அகண்ட நோக்கமில்லை; அவருடைய இதயமும் அத்தகையதாகவே காணப்பட்டது. மேலும், அவர் தமது பிராம்மணத்துவத்தில் பெருமை பாராட்டுபவர்.


இக்காலத்துத் தென்னிந்திய பிராம்மணப் புரோகித வகுப்பார் போல, அவர் இயற்றிய வேதாந்த சூத்திர வியாக்கியானத்தில் பிராம்மணர் அல்லாத வகுப்பார் மேலாகிய பிரம்மஞானத்தை அடைய மாட்டார் என்று எவ்வளவு வாதாடுகிறார்! அவர் காட்டும் நியாயங்களோ எவ்வளவு நகைப்புக்கிடமாகின்றன. விதுரன் பிரம்மஞானத்தை அடைந்தான்; அது முற்பிறவியிலே அவன் பிராம்மணத் திருமேனியோடு பிறந்த காரணத்தினால் என்கின்றார்.


நல்லது; இந்நாளில் சூத்திரன் ஒருவன் பிரம்ம ஞானத்தையடைந் தால், உங்கள் சங்கரர் சொல்லுவது போலவே, அவன் முற்பிறப்பிலே பிராம்மணனாயிருந்த காரணத்தினால் அத்தகைய ஞானத்தை அடைந்தானென்று சொல்ல வேண்டுமா?


அய்யோ பாவம்! பிராம்மணத்துவத்தை இவ்வளவு தூரம் இழுத்து வாதாடுவதில் என்ன பயன்? உயர்ந்த மூன்று வருணத்தாரும் வேதங்களை ஓதுவதற்கும், பிரம்மத்தை அடைவதற்கும் உரியவரென்று வேதம் கூறவில்லையா? வேதப் பிராம்மணத்திற்கு எதிராகச் சங்கரர், இந்த விஷயத்தில் தமது புத்திசாலித்தனத்தைக் காட்டுவது வேண்டப்படாத தொன்று.


வாதத்திலே தோல்வியடைந்த எத்தனையோ புத்த சந்நியாசிகளை நெருப்புக்கு இரையாக்கின. அவருடைய இதயத்தை என்னவென்று சொல்வது! 'வாதத்திலே தோல்வியுற்றோம்!' என்று நெருப்பிற் புகச் சித்தமாயிருந்த பவுத்தரும் மூடர். சங்கரர் இந்தச் செய்கையைச் செய்தது மூடப் பிடிவாதமன்றி வேறு என்ன?


புத்த தேவருடைய இதயத்தை இதனோடு ஒப்பு வைத்து நோக்குவாயாக, சிறு ஆட்டுக் குட்டியினுடைய உயிரைக் காப்பாற்றத் தமது உயிரைக் கொடுக்கச் சித்தமாயிருந்தார் புத்தர்; 'பஹுஜன ஹிதாய பஹுஜன ஸுகாய' - பலருடைய இதத்திற்காகவும் பலருடைய நலத்திற் காகவும் வாழ்ந்தார். எவ்வளவு அகண்ட சிந்தை! எவ்வளவு இரக்கம்!"


"இரக்கம் அற்றவர் பிராமணன் என்பதில் செருக்குற்றவர் வருண தர்மத்திலே எத்தகைய  வெறி கொண்டவர்" என்று ஆதி சங்கரரின் முகமூடியைக் கிழித்து உள்ளத்தில் ஊற்றெடுக்கும் ஆரிய பிராமண நஞ்சை வெளியே எடுத்து அம்பலப்படுத்துகிறார். (ஆதாரம்: "சுவாமி விவேகானந்தர் சம்பாஷணைகள்", பக்கம் 20-21) முடிந்தால் இதற்கு மறுப்புச் சொல்ல முன்வரட்டும்.


ஆரியர் - திராவிடர் என்பது கட்டுக்கதையாம்.


பிரித்தாளுவதற்காக பிரிட்டிஷாரின் தந்திரமாம். பார்ப்பனர்களின் பழைய புளித்துப் போன பல்லவிதான் இது.


கட்டுக் கதையா - உண்மை வரலாறு என்பதற்கு சல்லடை போட்டுத் தேடிஅலைய வேண்டாம் இதே 'தினமணி'யின் ஆசிரிய ராக இருந்த அய்ராவதம் மகாதேவன் அவர்கள் சிந்து சமவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகம் என்றாரே - தொல் பொருள் ஆய்வில் குறிப்பிடத்தகுந்தவர் அவர் என்பதை ஏற்றுக் கொண்டால், அவர் கூறிய 'திராவிட' என்பதையும் ஏற்க வேண்டுமே - என்ன பதில்?


'தினமணி' வட்டாரத்துக்கு மிகவும் பிடித்தமான ஆர்.எஸ்.எஸின் குருநாதர் எம்.எஸ். கோல்வால்கர், ஆர்.எஸ்.எஸின் வேத நூல் என்று போற்றப்படும் Bunch of Thoughts ("ஞானகங்கை" என்று தமிழிலும் வெளிவந்துள்ளது) நூலில் "நாம் ஆரியர்கள் - அறிவு திற மிக்கவர்கள்" என்று மார் தட்டுகிறாரே - இதற்கு என்ன பதில்?


இராமாயணம் என்பது ஆரியர் - திராவிடர் போராட்டமே என்று எத்தனை எத்தனை வரலாற்று ஆசிரியர்கள் ஆதாரத்துடன் குவித்திருக்கிறார்கள் - இவை எல்லாம் 'தினமணி' வகையறாக் களுக்குத் தெரியுமா, தெரியாதா?


"ஆரியர்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரிகளாகிய திராவிடர் களை, ஆரியர்கள் தங்களுடைய புத்தகங்களில் தஸ்யூக்கள் என் றும், தானவர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டிருக் கிறார்கள்."


சி.எஸ். சீனிவாசாச்சாரி எம்.ஏ., எம்.எஸ்., ராமசாமி அய்யங்கார் எம்.ஏ. ஆகிய வரலாற்று ஆசிரியர்கள் "இந்திய சரித்திரம் முதல் பாகம்" எனும் நூலில் "இந்து இந்தியா" எனும் தலைப்பில் 16,17ஆம் பக்கங்களில் குறிப்பிட்டுள்ளனரே - இவர்களும் திராவிடர் இயக்கத்தின் தாக்கத்திற்கு  - பிரிட்டீஷாரின் தந்திரத்துக்குப் பலியாகி விட்டனர் என்று சொல்லப் போகிறார்களா?


"திராவிடர்களும், நாகர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் கள்" என்று டாக்டர் அம்பேத்கர் கூறியது தெரியுமா? (நூல்: "மண்ணின் மைந்தர்கள் மறைக்கப்பட்ட வரலாறு" (தமிழில்) பக்கம் 74,75) இவ்வாறு வரலாறுகள் குவிந்து கிடக்கின்றனவே!


கடைசியாக ஒரு கேள்வி "நீங்கள் ஆரியரா, திராவிடரா - அல்லது தமிழரா? - உங்கள் தாய்மொழி எது?" என்று கொஞ்சம் வெளிப்படையாக சொல்லுங்கள் பார்க்கலாம்.


திராவிட மானிடவியல்

ஒற்றைப் பத்தி : திராவிட மானிடவியல்

ஆரியராவது- திராவிட ராவது என்பவர்களுக்கும், திராவிடர் என்று சொல்லக் கூடாது - தமிழர் என்று மட்டுமே சொல்லவேண்டும் என்பவர்களுக்கும், பிராம ணர்களுக்குப் பெயர்தான் திராவிடர்கள் என்று கூறும் பேர்வழிகளுக்கும் ‘‘திராவிட மானிடவியல்'' எனும் (நூல் ஆசிரியர் பக்தவத்சல பாரதி) நூல் ஆய்வுப் பூர்வமாக பதிலடி கொடுக்கிறது.

அதில் இதோ ஒரு பக்கம்....

‘‘உண்மையில் திராவிடக் குடிகள் இந்தியத்துணைக் கண் டத்தில் மிக நீண்ட வரலாற்று அசைவியக்கம் கொண்டவர் கள். இத்துணைக் கண்டத்தின் அனைத்து நிலப்பரப்போடும் தொடர்புடையவர்கள்; வாழ்ந்த வர்கள்; இன்றும் வாழ்ந்து வருபவர்கள்.

இன்று இந்தியாவில் உள்ள 461 பழங்குடிகளிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட பழங்குடி கோண்டுகள் ஆவர். இவர்கள் திராவிடப் பழங் குடியினர். நடு இந்தியப் பகுதி களில் வாழ்கிறார்கள். அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது பழங்குடி பீல்கள். ராஜஸ்தான் தொடங்கி வட இந்தியாவில் 7 மாநிலங்களில் பரவி வாழ்கின்றனர். இவர் களும் திராவிடப் பழங்குடி களே. நான்காவது பெரிய பழங்குடியான ஒராவன் திரா விடப் பழங்குடியே. இந்தியா வின் ஏழாவது பெரிய பழங் குடியான கோந்த் பழங்குடியும் திராவிடப் பழங்குடியே. ஒரிசா விலும் அதனை ஒட்டிய மாநி லங்களிலும் இவர்கள் வாழ் கிறார்கள்.

இந்நிலையில் திராவிடப் பழங்குடிகள் என்ற சொல் லாட்சியை எங்ஙனம் கையாள வேண்டும் என்பது இப்போது நமக்குத் தெளிவாகிறது. பண் டைய தமிழ்ச் சமூகத்தின் தொல் கூறுகளை அறிவதற்கு இந்த வடஇந்தியத் திராவிடப் பழங்குடிகளை ஆராய வேண் டியது அவசியமாகிறது.

அடுத்ததாகப் பண்டைய திராவிடப் பழங்குடிகளுக்கான உறவினை ஆராய இன்றைய தென்னிந்தியாவை மட்டும் கணக்கில் கொள்ள முடியாது. பண்டைய திராவிடப் பகுதி விரிந்த பரப்புடைய ஒரு அகண்ட பிரதேசமாக இருந் ததை நாம் அறிவோம். இந் நிலையில் பழந்தமிழர் மரபின் பல கூறுகளை இன்றும் எச் சங்களாக இந்த அகண்ட தமி ழகத்தில் தான் காணமுடிகிறது. இன்றைய தமிழகத்தில் பல கூறுகளை இனங்காண முடிய வில்லை.

பிராமணர்கள் வீட்டிற்கு வந்து சென்றவுடன் தீட்டுப் பட்டுவிட்டதாக எண்ணி வீட்டைச் சுத்தம் செய்யும் பழங்குடியை அறிந்திருக்கி றோமா? குறிச்சன் பழங்குடி யினர், பிராமணர்களிடம் மிகுந்த வெறுப்புடையவர்கள். பிராமணன் ஒருவன் குறிச்சன் இல்லத்திற்கு வந்து சென்றதும் அவன் உட்கார்ந்திருந்த இடத் தினைச் சாணியால் மெழுகித் தீட்டு நீக்குவர் (தர்ஸ்டன் 1909, 4:157) என்பதைக் கவனத்தில் கொண்டுள்ளோமா? பிரா மணர்களின் பிற்கால ஜாதி உயர்வினைப் பண்பாட்டு ரீதி யில் விளக்குவதற்குப் பழங் குடியியல் ஆய்வு உதவ முடியும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டுமல்லவா?''

சிந்திப்பீர்!

 - மயிலாடன்

வெள்ளி, 11 டிசம்பர், 2020

சிந்து சமவெளி நாகரிக மக்கள் மாடு,பன்றி போன்றவற்றின் இறைச்சியை உண்டுள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்தியாவில் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களை பண்பாடு,பாரம்பரியத்திற்கு எதிரானவர்கள் என்று தாக்கும் போக்கு அதிகரித்து வரும் சூழ்நிலையில் இந்திய பண்பாட்டின் தொடக்கமாக கருதப்படும் சிந்து சமவெளி நாகரிக மக்கள் மாடு,பன்றி போன்றவற்றின் இறைச்சியை உண்டுள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி படிக்கும் அக்‌ஷ்யேதா சூரிய நாராயணன் என்பவர் தனது Lipid residues in pottery from the Indus Civilisation in northwest India என்ற தலைப்பில் ஒரு ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரின் ஆய்வானது ஹரப்பா மற்றும் அன்றைய சிந்து சமவெளி நாகரிக மக்கள் வாழ்ந்த பகுதிகளில் இருந்து கிடைத்த பொருள்களை கொண்டு நடத்தப்பட்டுள்ளது.


 
இவரது ஆய்வில் கிடைத்த முடிவுகளின் அடிப்படையில் சிந்து சமவெளி மக்கள் பயன்படுத்திய கால்நடைகளில் 50% இருந்து 60% வரை மாடுகளாகவே இருந்துள்ளது. வெறும் 10% மட்டுமே ஆடுகளை பயன்படுத்தி இருக்கிறார்கள். சிந்து சமவெளிகளில் கிடைத்துள்ள பண்டைய எலும்புகளில் அடிப்படையில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அக்‌ஷ்யேதா தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் சிந்து சமவெளி மக்கள் அதிகம் மாட்டிறைச்சியை உண்டு இருக்கிறார்கள் என்றும் அதன் பின்பு ஆட்டிறைச்சியை அதிகம் உண்டிருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் பன்றி, கோழி, முயல், இதர பறவைகளின் இறைச்சியையும் அவர்கள் உண்டிருக்கிறார்கள் என்ற தகவலையும் அந்த கட்டுரையில் கொடுத்திருக்கிறார். இதுவரை சிந்து சமவெளி மக்கள் உண்ட பயிர்கள், தானியங்கள் பற்றிய ஆய்வுகளே அதிகம் நடந்திருக்கும் நிலையில் தற்போது அவர்கள் உண்ட அசைவ உணவுகள் பற்றிய இவரின் ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது.


 
இதற்கு முன்பு நடந்த ஆய்வில் சிந்து சமவெளி மக்கள் கத்திரிக்காய், மஞ்சள், பூண்டு, இஞ்சி போன்றவற்றை பயன்படுத்தியது தெரியவந்தது. அதை தொடர்ந்து வெளிவந்த ஆய்வில் சிந்து சமவெளி மக்கள் ஆடு, செம்மறி ஆடு மற்றும் சீஸ் மற்றும் பன்னீர் போன்ற பொருட்களை தயாரித்து வெண்ணெய் மற்றும் தயிர் போன்ற உணவு பொருட்களை பயன்படுத்தியதும் தெரியவந்தது.

இந்த ஆய்வை நடத்திய அக்‌ஷ்யேதா கடந்த பிப்ரவரி மாதம் தன்னுடைய முனைவர் ஆராய்ச்சி படிப்பை முடித்துவிட்டு தற்போது பிரான்ஸ் தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றி வருகிறார்.

சனி, 5 டிசம்பர், 2020

'தமிழாற்றுப்படை’ நூலில் திராவிடர் ஆய்வு

ஞாயிறு, 18 அக்டோபர், 2020

திராவிடத்தை ஏற்ற விடுதலை புலிகளும் ஈழமும்

 
தோழர் மனோஜ் அவர்களின்
வாட்ஸ் அப் பதிவு...
புலிகள் திராவிடத்தை ஏற்றார்களா ?? இங்குள்ளவர்கள் ஈழத்தமிழர்களை திராவிடர்களாக ஏற்பார்களா??
.- நாம் தமிழர் கல்யாணசுந்தரம்
*முதல்_படம்* - "பூர்வகுடி இலங்கை தமிழர்கள் கூட்டமைப்பு" என்ற அமைப்பு அன்று ஆட்சி செய்து கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு ஓர் கடிதம் எழுதியது,,,அந்த கடிதத்தில் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கையில் திராவிடர்கள் என அடையாளப்படு்த்திக் கொண்டனர்,,,
இந்த கடிதம் எழுதப்பட்டது 1940 ஆம் ஆண்டு,,,அதாவது தமிழ்நாட்டிலேயே திராவிடர் கழகம் உருவாகாத ஆண்டு,,,திராவிடர் கழகம் 1944 ஆம் ஆண்டு தான் உருவானது,,,,
*இரண்டாம்_படம்* - 1978 ஆம் ஆண்டு கியூபாவில் நடைபெற்ற தேசிய இன விடுதலை இயக்கங்களுக்கான மாநாடு நடைபெற்றது,,,அதில் பங்கு பெற்ற தமிழீழ விடுதலைப்புலிகள் (LTTE) தங்களை திராவிடர்கள் என்றே அறிமுகப்படுத்திக் கொண்டனர்,,,,
*மூன்றாம்_படம்*- தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆசான் என அழைக்கப்பட்ட ஆண்டன் பாலசிங்கம் அவர்கள் "போரும் சமாதானம்" என்ற புத்தகத்தை எழுதினார்,,, அதில் தங்களை திராவிடர்கள் என்றே அடையாளப்படுத்திக் கொண்டார்,,,,
இதற்கு நாம் தமிழரை சேர்ந்த ஈன,மான,ரோசமுள்ள யாராவது பதில் அளிப்பாளர்களா ??
உங்களின் வயித்துப் பிழைப்பிற்காக நீங்கள் ஆரியத்தின் காலை நக்கிப்பிழைக்க திராவிட எதிர்ப்பு அரசியல் பேசிவிட்டு போங்கள்,,,என்ன வெங்காயத்துக்கு புலிகளின் வரலாறையும்,ஈழத்தமிழர் வரலாற்றையும் நீங்கள் மாற்றுகிறீர்கள் ??

புதன், 2 செப்டம்பர், 2020

திராவிட இயக்கங்களில் பார்ப்பனர்களின் பங்கு

#திராவிட_இயக்கங்களில் #பிராமணர்களின்_பங்கு.

வ.ரா.1889-1951

திங்களூரில் ஆச்சாரமான ஐய்யங்கார் குடும்பத்தில் பிறந்தவர்.
முழு பெயர் #வரதராஜ_ராமசாமி.

காந்தி காங்கிரஸ் மேல் பற்று கொண்டவர். ஒருகட்டத்தில் 
இந்த நாட்டின் சாபக்கேடு சாதி என்று உணர்ந்தார். சாதிக்கு எதிராக தன் வாழ்வை அர்ப்பணித்தார்.
குல ஆச்சாரங்களை கைவிட்டார்.

குறிப்பாக #பூணுலைஅறுத்து_எறிந்தார்.
குடுமியை துறந்தார்.

சாகும் வரை சடங்குகளுக்கும் 
மூட பழக்கங்களுக்கும் 
எதிராக செயல்பட்டார். பெரியார் மீது பற்று கொண்டார். திராவிட இயக்கங்களை தூக்கி சுமந்தார்.

ஏ.எஸ்.கே. 1907-1978

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ஆச்சாரமான ஐயங்கார் குடும்பத்தில் பெங்களூரில் பிறந்தார்.

1934ல் சென்னை வந்தவருக்கு சிங்காரவேலருடனும் 
தந்தை பெரியாருடனும் நட்பு ஏற்ப்பட்டது.

பொதுஉடமை சிந்தனை உடைய இவர் சாதிகொடுமைகள்
ஏற்ற தாழ்வுகளையும் கண்டு 
மனம் குமுறினார்.

விளைவாக பெரியாருடன் கைகோர்த்தார்.

#ஆவியூர்சீனிவாசகிருஸ்ணமாச்சாரி 
எனும் தன் பெயரை 
ஏஎஸ்கே என மாற்றிக்கொண்டார்.

இவருடைய ‘பகுத்தறிவின் சிகரம் பெரியார்’ என்னும் நூல் இந்திய தத்துவ ஞான மரபில் பெரியாரின் இடம் எப்படி மறுதலிக்க முடியாதது 
என்பதை விளக்க கூடியது.

ஏஎஸ்கே அண்ணன்கள் துரைசாமி 
சாதி கடந்த மணமும், 
பார்த்தசாரதி மதம் கடந்த மணமும் செய்து கொண்டனர்.

ஏஎஸ்கே மணம் செய்து கொள்ளாதவர்.
                   #ந_சுப்பிரமணியன்.1915-2013

சிதம்பரத்தில் ஆச்சாரியமான ஐய்யங்கார் குடும்பத்தில் பிறந்தார்.

சாதிக்கொடுமைகள் உண்டாக்கிய கோபம் தான் இவரையும் 
திராவிட இயக்கம் சாதி ஒழிப்பு பிரச்சாரத்தில் சேர்த்தது.

தந்தை பெரியார் ஆசிரியர் வீரமணி மீது மரியாதை கொண்டு இருந்தார்.

தான் இறந்தால் தன் உடலுக்கு அருகில் தானும் வீரமணியும் உள்ள படத்தை வைக்ககோரினார்.

#விபி_இராமன்.1932-1991

சென்னையில் ஆச்சாரமான ஐயர் குடும்பத்தில் பிறந்தவர் 

#வேங்கடபட்டாபிராமன் சட்டவல்லுனர் திராவிட இயக்கத்தின் பால் கொண்ட நாட்டமும் மாநிலங்கள் உரிமையில் கொண்டிருந்த அக்கரையும் 
திமுகவில் இணைத்தது.

திமுகவுக்கான சாசனத்தை உருவாக்க பேரறிஞர்அண்ணா தேர்ந்தேடுத்த மூவர் குழுவில் 
ஈ.வெ.கி.சம்பத், இரா.செழியன், இவர்களுடன் வி.பி.ராமனும் 
இணைந்து பணி செய்தார்.
                ***
#சின்னக்குத்தூசி.1934-2011

திருவாரூர் ஆச்சாரமான அய்யர் குடும்பத்தில் பிறந்தார்.

இயற்பெயர் #ரா_தியாகராஜன் இளமையிலே சாதிக்கு எதிரான உணர்வை பெற்றவர்.

திருச்சி பெரியார் ஆசிரியர் பயிற்சி பள்ளியின் தொடக்க ஆண்டில் 
படித்த மாணவர்களில் ஒருவர்.

பெரியாரியத்தின் மீது மிகுந்த பற்று கொண்டவர். குத்தூசியின் எழுத்தால் கவரப்பட்டு தன் பெயரை சின்ன குத்தூசி என்று மாற்றிக்கொண்டார்.

பின்னாளில் திமுகவின் இதழியல் குரல் ஆனார். முரசொலியில் இவரின் எழுத்துக்களுக்கு தனி வாசகர் வட்டமே இருந்தது.
                 *****
நன்றி: திரு.Napa #fb Lakshmanan SK

m.facebook.com/story.php?stor…

#பெரியார்

(பிராமணர் என்ற சொல்லில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் பார்ப்பனர்கள் எதார்த்த நிலையை புரிந்து கொண்டு இவர்களைப் போல வாழ்ந்தால் நாம் மதித்து ஏற்றுக் கொள்வோம். எப்படியிருப்பினும் திராவிடர் கழகத்தில் உறுப்பினர் ஆக முடியாது. Isai Inban)

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

50 வருடங்களாக திராவிடம் தமிழுக்கு என்ன செஞ்சதுன்னு தெரியனும். அதானே?

👉 50 வருடங்களாக திராவிடம் தமிழுக்கு என்ன செஞ்சதுன்னு தெரியனும். அதானே?

1. எழுத்துச் சீர் திருத்தம்.

2. இலக்கிய பரவல்.

3. புதுக்கவிதை புரட்சி.

4. நாடகத் தமிழ் வளர்ச்சி.

5. பரவலாக்கப்பட்ட பழந்தமிழர் இலக்கியம்.

6. இந்தியை எதிர்த்து தமிழின் ஆளுமையை நிலைநாட்டல்.

7. உலகத் தமிழ் மாநாடுகள்.

8. புதுச்சொல் அறிமுகம்.

9. செம்மொழி அங்கீகாரம்.

10. தமிழிலே பெயர் பலகை கட்டாயம்.

11. வள்ளுவர் கோட்டம்.

12. வள்ளுவர் சிலை.

13. சிலப்பதிகார அருங்காட்சியகம்(பூம்புகார்).

14. தமிழ் எண்முறை உள்ளீடு வளர்ச்சி.

15.கணினி எழுத்துரு அறிமுகம்.

16. கீழடி அகழாய்வு முடிவுகளை அறிவித்தல்.

17. செம்மொழிப் பூங்கா.

18. இரயில் பயணச்சீட்டில் தமிழ் மொழியை இடம்பெற வைத்தல்.

19. தேசிய தேர்வுகளை தமிழ் மொழியில் நடத்த சட்டப்போராட்டம்.

20. தமிழ் வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களுக்கு அரசு முறை விருதுகள்.

21. மாநிலப் பிரச்சனைகளை தீர்த்து நட்புறவு மேம்பட பெங்களூரூவில் திருவள்ளுவர் சிலை நிறுவுதல்.

22. அலி போன்ற பெயர்களை ஒழித்து திருநங்கை சொல் புகுத்தல்.

23. ஊனமுற்றோர் சொல்லுக்கு பதிலாக மாற்றுத்திறனாளிகள் பெயர் அளித்தல்.

24. விதவை என்ற பெயருக்கு பதிலாக கைம்பெண் என மாற்றுதல்.

25. தஞ்சையில் தமிழ் பல்கலைக்கழகம் துவக்கம்.

26. ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி இருக்கைக்கு நிதி அளித்தல்.

27. பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழி கட்டாயம்.

28. இன்ஜினியரிங் படிப்பில் தமிழ்வழியை அறிமுகம் செய்தல்.

29. தமிழ்வழியில் படித்தோருக்கு இட ஒதுக்கீடு.

30. செம்மொழி தமிழாய்வு நிறுவனம் துவக்கம்.

31. உலக தமிழாராய்ச்சி நிறுவனம்.

32. கோயில்களில் தமிழ்மொழியில் அர்ச்சனை.

33. தமிழ் வளர்ச்சிக்கு தனி அமைச்சகம் அமைத்தல்.

34. தமிழ் ஓலைச்சுவடிகளை கணினிமயமாக்கல்.

35. டால்மியாபுரம் என மாற இருந்த பெயரை கல்லக்குடி என்ற தமிழ் பெயரையே போராடி நிலைநாட்டியது.

36. மதராஸ் மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என மாற்றியது.

37. மதராஸ் என்ற பெயரை சென்னை என மாற்றியது.

38. செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் துவக்கப்பட்டது.

39. தொல்காப்பிய பூங்க திறப்பு.

40. வாகன பதிவெண்களை தமிழ் மொழில் எழுத சட்ட அங்கீகாரம்.

41. இளம்அறிவியல் படிப்பபில் பயிற்று மொழி தமிழ்.

42. தமிழ் தாய் கோயில் கட்டப்பட்டது.

43. பாவேந்தர் செம்மொழித் தமிழாய்வு நூலகம் துவக்கம்.

44. ஆசியாவின் முதல் ஈரடுக்கு மேம்பாலத்திற்கு திருவள்ளுவர் பெயர் சூட்டல்.

45. கிறிஸ்து ஆண்டுக்கு பதிலாக திருவள்ளுவர் ஆண்டை அரசிதழில் வெளியிடல்.

46. கொரோணா காலத்தில் wfh, இணைய வகுப்பை போல 1999ஆம் ஆண்டு உலகத் தமிழ் இணைய மாநாடு.

47. பேருந்துகளில் திருக்குறள் கட்டாயம்.

48. பேரவையின் துவக்கத்தில் அவைத்தலைவரின் திருக்குறள் உரை.

49. குறிஞ்சி நில மரபணு பூங்கா துவக்கம்.

50. மொழிப்போர் தியாகிகளுக்கு ஓய்வூதியம்.

51. இந்தியாவில் முதல் முறையாக கணினி அறிவியல் பாடம் அறிமுகம். அதுவும் தமிழில்!!

இன்னும் பல சாதனைகள்
ஐம்பது ஆண்டுகால திராவிட ஆட்சியில் தமிழ் வளர்ச்சிக்கு செய்த ஐம்பத்தி ஒன்னு காரியங்களை அடுக்கிவிட்டேன்
தமிழை வஞ்சிக்காது வாழ வைத்த திராவிடத்தை போல வேறு இயக்கம் தான் உலகத்தில் உண்டோ...!

👉 ஆம். தமிழ், திராவிடத்தின் குடும்ப சொத்து. 
- கட்செவி வழியாக கிடைத்தது...

திங்கள், 13 ஜூலை, 2020

திராவிடரா? தமிழரா? பெரியாரின் பதில்

''திராவிடர்'' என்பதற்கு பதிலாக ''தமிழர்கள்'' என்று வைத்து கொள்ளலாமே என்று கேட்பவர்களுக்கு பெரியாரின் பதில் 👇

''தமிழர்'' என்று சொன்னாலே பார்ப்பனர்கள் தாங்களும் ''தமிழர்கள்'' தான் என்று கூறி அதில் சேர்ந்து கொள்கிறார்கள். நாங்களும் தமிழ்நாட்டில் பிறக்கிறோம், வளர்கிறோம் 
தமிழ் பேசுகிறோம். அப்படி இருக்கும் போது எப்படி எங்களை தமிழர்கள் அல்லர் என்று நீங்கள் கூற முடியும் என்று கேட்கிறார்கள். 

ஒரு காலத்தில் ''தமிழர்'' என்பது (திராவிட) பண்பு உள்ள மக்களுக்கு உரிய பெயராக இருந்திருக்க கூடுமானாலும் ஆனால் இன்று அது பொதுப் பெயராக மாறிவிட்டிருப்பதால் அம்மொழி பேசும் ஆரிய பண்புடைய மக்கள் யாவரும் தாமும் ''தமிழர்'' என்று உரிமை பாராட்ட முன் வந்து விடுகிறார்கள்.  அதோடு ஆரிய பண்பை நம் மீது சுமத்த அந்த சேர்க்கையை பயன்படுத்தி விடுகிறார்கள்.

அவர்களும் நாமும் ஒரு கூட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தான் நாம் 
சூத்திரர்களாகி விடுகிறோம். ஆக நம் கூட்டத்தில் இருந்து விலக்கி பேசத்தான் நாம் ''திராவிடர்'' என்று அழைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. நம்மில் ''தமிழன்'' என்று சொல்லும் ஏமாளிகளை தான் பார்ப்பனர்களால் ஏமாற்ற முடியுமே ஒழிய 'திராவிடர்' என்றால் அவர்களால் ஏமாற்ற முடியாது. 

தன்னையும் திராவிடன் என்று கூறிக்கொண்டு ஒரு பார்ப்பான் முன் வருவான் ஆனால் உடனே நீ திராவிடனா? திராவிடனுக்கு ஏது? பூணூல் அதை கத்தரித்து கொள் என்போம். அதற்கு துணிவனால் திராவிடருக்கு ஏது நாலு சாதி. நீ ''பிராமணன்'' அல்ல என்பதை ஒப்புக் கொள் என்று கூறுவோம். 
அதற்கு எந்தப் பார்ப்பானும் உடன்பட மாட்டான். அதற்கும் அவன் ஒப்புக் கொண்ட பிறகு அவனைப் பற்றி கவலை ஏது.  சாதி வேறுபாடுகள் உயர்வு தாழ்வுகள் ஒழிய வேண்டும் என்பதே நமது ஆசை.

சாதியை கைவிட்டு, சாதி ஆச்சாரத்தை விட்டு அனைவரும் ஒன்றே என்ற கொள்கையை ஏற்க முன் வரும் பார்ப்பானை நாம் ஏன் ஒதுக்கப் போகிறோம்?

விடுதலை 05.10.1948

புதன், 1 ஜூலை, 2020

டாக்டர்.தாரவாட் மாதவன் நாயர்!

திராவிட இயக்க வரலாற்றில் உருவான முதல் தளபதி.பிட்டி.தியாகராயரின் தளபதியாகவே செயல்பட்டவர்.அன்றைய காங்கிரசாராலும்-ஹோம்ரூல் இயக்கத்தினராலும் அதிக தாக்குதலுக்கு உள்ளானவர்.

சென்னை மாநிலக் கல்லூரியில் எம்.ஏ படித்து பின்பே சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து சில காலமே பயின்று மேனாட்டில் மருத்துவம் பயில விரும்பி 1889இல் இங்கிலாந்து சென்றார். 1894ல் எம்.பி.சி.எம் என்ற உயர்ந்த பட்டத்தைப் பெற்றார்.

அதன் பின் பிரைட்டன் நகரில் ENT மருத்துவராக பணியாற்றினார்கள்.1896இல் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் எம்.டி பட்டம் பெற்றார். பிரான்சின் பெருநகரான பாரிசில் செவி-மூக்கு-தொண்டை பற்றிய ஒராண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இக்காலக்கட்டத்தில் "கிரேக்க" மொழியைக் கற்றுக் கொண்டார்.

1897ல் சென்னைக்கு திரும்பி இத்துறையில் ஈடு இணையற்ற மருத்துவராக விளங்கினார்.

இவர் கம்பீரமான தோற்றமுடையவர்.ஆறரை அடி உயரமும் உயரத்திற்கேற்ற உடலமைப்பு கொண்டவர்.இவரது தோற்றத்தைக் கண்ட இந்திய அமைச்சர் "மாண்டேகு" வியப்படைந்து தமது இந்திய  டைரியில் இவரைப் பற்றி எழுதியிருக்கிறார்.

டாக்டர் நாயர் ஆண்டி செப்டிக் என்ற பெயரில் மாதஇதழை நடத்தினார்.அந்த இதழே இங்கே முதன் முதலில் தோன்றிய மருத்துவ இதழாகும்.

1914ல்  மெட்ராஸ் யுனைட்டெட் லீக் திராவிடர் சங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பின்பு  திருவில்லிக்கேணி உயர்நிலைப்பள்ளி ஒன்றில் டி.எம்.நாயர் ஆற்றிய உரையில் ஒரு வாக்கியத்தைக் கூறி தனது உரையை முடித்தார்கள்.

[ விழியுங்கள்!  எழுங்கள்!!  இன்றேல் என்றும் நீவீர் வீழ்ந்துபட்டோராவீர்!!!
-Awake, Arise or be forever fallen! - ]

இவர்தான் முதன்முதலில் சென்னை மெடிக்கல் ரிஜிஸ்ட்ரேசன் சட்டத்தை அரசினர் கொண்டு வர காரணமாக இருந்தார். 
  
பிறகு பிரிட்டிஷ் இந்திய அரசு அமைத்த தொழிலாளர் கமிசனில் இவரை உறுப்பினராக்கினார்கள்.கமிசன் பணிக்காக இந்தியா முழுவதும் சுற்றி தொழிலாளர்களின் நிலையையறிந்து  அறிக்கையை அளித்தார்.பிரிட்டிஷ் அரசின் இந்தியமைச்சர் இவருடைய கருத்தைத்தான் ஏற்றுக்கொண்டார்.

மாண்டேகு செம்ஸ்போர்டு அறிக்கை  சட்டம் ஆவதற்கு முன் லண்டன் சென்று " தாழ்த்தப்பட்டோருக்கும் பார்ப்பனரல்லாதோருக்கும் இட ஒதுக்கீடு தேவை என்று வற்புறுத்தினார்.இதற்காக பிரிட்டிஷ் அரசாங்கம் கருத்து தெரிவிக்கத் தடை போட்டும் தளர்ச்சியடையாமல் ஆங்கிலேய அதிகாரிகளை தனிதனியாகச் சந்தித்து தடையை நீக்கி இங்கிலாந்து பார்லிமென்டில்  தனது கருத்துகளை எடுத்து வைத்தே சென்னை திரும்பினார்.

"நீங்கள் பார்ப்பனர்களுக்கு பதவிகளை வழங்குகிறீர்கள்.ஆனால் ஹோம்ரூல் இயக்கம் மூலமாக நீங்கள் போராடிக்கொண்டிருக்கும் ஜெர்மானியர்களிடம் பணம் பெறுகிறார்கள்"

"திராவிடநாடு திராவிடருக்கே" என்ற முழக்கத்தை எடுத்து வைத்தவாறு பிரிட்டிஷ் பாராளுமன்ற குழுவிடம் சாட்சியம் அளிக்க லண்டன் சென்ற நாயர் அதற்கு முன்பாகவே 17.7.1919 அன்று மறைந்து போனார்.

டாக்டர் டிஎம்.நாயரின் உடல் லண்டனில்  "கோல்டர்ஸ் கீரின்" என்ற இடத்தில் எரியூட்டப்பட்டது.

அவரின் பேச்சுரைகளில் தெறிக்கவிட்ட சில!

1] பாரிஸ்டர் காந்தி தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக கடவுள் படைப்பில் இதென்ன வித்தியாசம் ? இது தவறு என கிளர்ச்சி செய்தாராம். இந்திய நாட்டு வண்டவாளங்கள் எல்லாம் அறிந்த ஒரு வெள்ளையர் காந்தியிடம் போய் "உம் நாட்டில் ஆதிதிராவிட பறையர் எனவும் அவர்களை சேரியில் மட்டுமே குடியிருக்கவேண்டும்மெனவும்,கோயிலுக்குள் வரக்கூடாது எனவும், பார்ப்பனரல்லாதரை சூத்திரன் எனவும் வேசி மகன்கள் எனவும் சொல்லிக்கொண்டே இங்கு வந்து உபதேசமா எனக் கேட்டவுடன் காந்திக்கு மூஞ்சி செத்து போச்சாம்.

african colour -bar-all u hate !
aryan caste-bar- dooms our fate!

2] கடவுளின் தலையில்-கையில்-இடுப்பில்-பாதத்திலிருந்து பிறந்தவர்கள் என பல பிறப்புகளைச் சொல்லுகிறார்கள்.

ஆனால் இங்கிலாந்தில் பல ஆண்டுகளாக வைத்திய தொழில் செய்து வருகிற நான் இம்மாதிரியான டெலிவரி கேசுகளை கண்டதுமில்லை!கேட்டுமறியோன்!

3] எனது அருமை தலைவர் தியாகராயரின் சமூகமான நெசவாள திராவிடர்களுக்கு தேவாங்க பிராமணர் பட்டம் கொடுத்தனர்.அது போலவே பட்டுநூல் வியாபாரிகளை சௌராஷ்டிர பிராமணர்கள்-திராவிட பொற்க்கொல்லர்களை விஸ்வகர்மா பிராமணர்கள் என பிரமோசன் கொடுத்தார்கள்.

ஆனால் திராவிடருக்கு பெயரளவில் பட்டம் கொடுத்து சங்கராச்சாரி முதலான பீடங்களில் நம் தலைவர் தியாகராயர் முதல் வேறெந்த டூப்ளிகேட் பிராமணர்கள்  அமரமுடியாது.அமர ஆசைப்பட்டால் "ராமனால் தலையிழந்த சூத்திர சம்பூகன் கதிதான்!

3] ஆரிய இனம் எங்கெங்கு நுழைந்ததோ அங்கெல்லாம் பழங்குடி மக்களை ஒழித்துக்கட்டி அடிமையாக்கு அவர்களின் உல்லாசபுரி வாழ்கையை நிலைநாட்டியிருக்கிறார்கள் என்பதே வரலாறு கூறும் உண்மை.

இங்கிலாந்து நாட்டின் "கெல்ட்ஸ்" பழங்குடிகளை கூடியவரை ஒழித்த இன்று ஆளும் வர்க்கத்தின் முன்னோர்கள் கிறிஸ்தவ மத பரந்த மனப்பான்மை காரணமாக கலப்புமணம் மூலம் இரண்டறக் கலந்து விட்ட இனம்தான் இன்றுள்ள ஆங்கில இனம் என்ற மாஜி ஆரிய இனம்!

ஆனால் இந்நாட்டு ஆரியர்களோ காலணா கொடுத்து வாங்கிய பூணூலொன்றை மாட்டிக்கொண்டு இன்றும் பிறந்தமேனியாகவே  இருக்கிறார்கள். வெட்கம்!

அடுத்ததாக நூற்றாண்டைக் கடந்த அவரின்  "Mass" வாக்கியங்கள்.

1] சாதிகளால் சூழப்பட்ட இந்தியா ஒரு விபரீதமான நாடு.

2] பார்ப்பான் கெஞ்சினால் மிஞ்சுவான்.மிஞ்சினால் கெஞ்சுவான்.

3] சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும்,எத்தியோப்பியன் தன் நிறத்தை மாற்றிக்கொண்டாலும் பார்ப்பான் தன் பிறவிக்குணத்தை மாற்றிக்கொள்ளவே மாட்டான்.

நெருப்புப் பொறி பறக்கின்ற வகையில் அவர் பேசியதனாலே என்னவோ லண்டனில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் அவர் "மரணமடைய வேண்டும்" என பார்ப்பனர்கள் விசேச அர்ச்சனைகள் செய்தார்கள் என்பதே வரலாறு கூறும் உண்மை.இந்த நிகழ்வுகள் ஏ.டி.பன்னீர் செல்வம்-பெரியார்-அண்ணா-கலைஞர் வரையிலும் தொடர்ந்தது.

இப்படியெல்லாம் தன்னலமற்ற தனிப்பெரும் தலைவன்கள் இம்மக்களுக்காவே பாடுபட்ட வரலாறு திராவிட இயக்கத்திற்கு மட்டுமே உண்டு!

வாழ்க டாக்டர். டி.எம்.நாயர் புகழ்!
 - விஜய் கார்த்திக் (திராவிட ஆய்வு) முகநூல் பதிவு, 1.7.20

சனி, 13 ஜூன், 2020

திராவிடர் தளபதி ஏ.டி.பி


திராவிடர் இயக் கத்தைப் பற்றி குறை சொல் வதைச்சிலர் தொழிலாக்கிக் கொண்டு இருக்கின்றனர். இன்னும் சில அதிகப் பிர சங்கிகள், கேரளாவில் அதிகம் படித்து இருக் கிறார்களே. அதற்கெல்லாம் திராவிடர் இயக்கம் தானா காரணம்? என்று அதி மேதாவித்தனமாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு உளறியும் வருகின்றனர்.
ஒவ்வொரு மாநிலத் திலும் ஒவ்வொரு வகை யான சூழல் உண்டு. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை கல்வி உரிமைக்காக குரல் கொடுத்தவர்கள் யார்? போராடியவர்கள் யார்?
கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இடஒதுக் கீடுக்கான ஆணைகளைப் பிறப்பித்தவர்கள் யார்? குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்து அரை நேரம் படித்தால் போதும், அரை நேரம் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்ற முதல் அமைச்சர் ஆச்சாரியாரின் (ராஜாஜியின்) வருணாசிரம நோக்கத்தை ஒழித்துக் கட்டிய தலைவர் யார்? இயக்கம் எது? என்று அடுக்கடுக்கான கேள்வி கள் உண்டு.
அரசு அமைந்தால் பள்ளிகளைத் திறப்பார்கள் - ஆனால் ராஜாஜி இரு முறை ஆட்சிக்கு வந்த போதும் 1937களில் 6000 கிராமப் பள்ளிகளையும் 1952இல் 8000 பள்ளி களையும் மூடினாரே - இது கேரளாவில் நடந்ததா? தமிழ்நாட்டில் தானே நடந் தது? அதனை எதிர்த் ததோடு - அதனைக் கொண்டு வந்த ஆச்சாரி யாரையே பதவியை விட்டு விரட்டினோமே - வரலாறு புரியாமல் உளறலாமா?
இன்று திராவிடர் தள பதி ஏ.டி. பன்னீர்செல்வம் பிறந்த நாள் (1888) அவர் தஞ்சாவூர் மாவட்டக் கழகத் தலைவராக (டிஸ் டிரிக்ட் போர்டு பிரசிடன்ட் 1924-1930) இருந்தபோது எத்தகைய கல்விச் சாத னைகளை முத்திரையாகப் பொறித்தார்?
உரத்தநாடு, இராசா மடம் ஆகிய இடங்களில் மன்னர்களால் கட்டப்பட்டு இருந்த சத்திரங்கள் முழுக்க முழக்கப் பார்ப்பன சிறு வர்களுக்குப் பயன்பட் டதை மாற்றி அமைத்தவர் அவர் தானே?.
திருவையாற்றில் ஒரு கல்லூரி - சமஸ்கிருத கல் லூரியாக மட்டும் இருந் ததை மாற்றி - தமிழ்ப் புலவர் பட்டப்படிப்புக்கும் வழி வகுத்து சமஸ்கிருதக் கல்லூரி என்றிருந்த பெயரை மாற்றி அரசர் கல்லூரி என்று புதுப் பெயர் சூட்டினாரே!
பார்ப்பனர்களுக்கு மட்டும் இருந்த விடுதியை அனைவருக்கும் பொது வானதாக மாற்றினாரே!
இதுதான் தமிழ் நாட் டுச் சூழல் - வாய்ப் புளித்ததோ, மாங்காய்ப் புளித்ததோ என்று உளற வேண்டாம்.
- மயிலாடன்

திங்கள், 8 ஜூன், 2020

பார்ப்பனர் ஆரியர் என்பதற்குச் சான்றுகள் - பாவாணர்

பாவாணர்

பார்ப்பனர் ஆரியர் என்பதற்குச் சான்றுகள்

(1) உருவம் - நிறம் : பார்ப்பனர் வடக்கேயுள்ள குளிர்நாட்டி னின்றும் வந்தவராதலின், தமிழ்நாட்டிற்கு வந்த புதிதில் மேனாட் டாரைப்போல் வெண்ணிறமாயிருந்தனர்; பின்பு வெயிலிற் காயக் காயச் சிறிது சிறிதாய் நிறமாறி வருகின்றனர்.

‘கருத்தப் பார்ப்பானையும் சிவத்தப் பறையனையும் நம்பக் கூடாது’ என்பது பழமொழி. பார்ப்பனருக்குரிய நிறம் வெள்ளை யென்பதும், வெயிலிற்காயும் பறையனுக்குரிய நிறம் கருப்பென் பதும் இவர் இதற்கு மாறான நிறத்தினராயிருப்பின் அது பிறவிக்குற்றத்தைக் குறிக்குமென்பதும் இதன் கருத்து.

குடுமி : பண்டைத் தமிழருள் ஆடவர் (புருஷர்) குடுமி வைத்திருந் தனரேனும், பார்ப்பனரைப்போல மிகச் சிறிய உச்சிக்குடுமி வைத்திருந்ததாகத் தெரியவில்லை. பெண்டிர் இன்றுபோலத் தலைமயிர் முழுவதையும் வளரவிட்டனர். ஆடவர் சுற்றிவரச் சிறிது ஒதுக்கிக்கொண்டனர். ஆடவர் முடி சிறிதாயும் பெண்டிர் முடி பெரிதாயுமிருந்ததினால், இவை முறையே குஞ்சியென்றும் கூந்தலென்றும் கூறப்பட்டன. குடுமி என்பது உச்சிப் பாகத்தி லுள்ளதைக் குறிக்கும்.

அன்னாய் வாழிவேண் டன்னை நம்மூர்ப்
பார்ப்பனக் குறுமகப் போலத் தாமுங்
குடுமித் தலைய மன்ற
நெடுமலை நாட னூர்ந்த மாவே (ஐங். 202)

என்னும் ஐங்குறுநூற்றுச் செய்யுளில், குதிரையின் தலையாட் டத்திற்குப் பார்ப்பனச் சிறுவனின் குடுமியை உவமை கூறி யிருப்பது, அது தமிழ்ச் சிறுவனின் குடுமியினும் மிகச் சிறிதா யிருந்தமைபற்றியே.

மீசை : மீசையைச் சிரைத்துக்கொள்ளும் வழக்கம் ஆரியரதே. தமிழரிற் சிலர் மேனாட்டாரியரைப் பின்பற்றி இப்போது மீசையைச் சிரைத்துக்கொள்கின்றனர்.

(2) உடை : பார்ப்பனருள் ஆடவர் பஞ்சகச்சம் கட்டுகின்றனர்; பெண்டிர் தாறு பாய்ச்சிக் கட்டுகின்றனர். இவை தமிழர் வழக்க மல்ல. விசுவப் பிராமணரென்று தங்களைக் கூறிக்கொள்ளும் கம்மாளர், பார்ப்பனரோடு இகலிக்கொண்டே சிலவிடத்து அவரது உடுமுறையைப் பின்பற்றுகின்றனர்.

நூல் : பூணூலணிதல் பார்ப்பனர்க்கே உரியது, ‘நூலெனிலோ கோல்சாயும்’ என்னுஞ் செய்யுளும், ‘ஊர்கெட நூலைவிடு’ என்னும் பழமொழியும் இதனை வற்புறுத்தும்.

தமிழ்நாட்டு வணிகரும் ஐவகைக் கம்மியரும் பூணூல் பூண்டது, அறியாமைபற்றி ஆரிய முறையைச் சிறந்ததாகக் கருதிய பிற்காலமாகும்.

ஆரியம் தமிழ்நாட்டில் வேரூன்றிப் பார்ப்பனருக்குத் தலைமை யேற்பட்டபின், பல தமிழ் வகுப்பினர் தங்களுக்கு ஆரியத் தொடர்பு கூறுவதை உயர்வாகக் கருதினர். ஆரியக் குலமுறைக் கும் திராவிடக் குலமுறைக்கும் இயையு இல்லாவிடினும், ஆரியரல்லா தவரெல்லாம் சூத்திர வகுப்பின் பாற்பட்டவர் என்னும் தவறான ஆரியப் பொதுக்கொள்கைப் படி, தமிழ ரெல்லாருக்கும் சூத்திரப் பொதுப்பட்டம் சூட்டின பிற்காலத் தில், தமிழ் நாட்டிலுள்ள வணிகர் தங்களை வைசியரென்று சொல்லிக் கொண்டால், சூத்திரப்பட்டம் நீங்குவதுடன் ஆரியக் குலத் தொடர்புங் கூறிக்கொள்ளலா மென்று, ஆரிய முறையைப் பின்பற்றி வைசியர், சிரேஷ்டி (சிரேட்டி - செட்டி) என்னும் ஆரியப் பெயர்களையும், பூணூலணியும் வழக்கத்தையும் மேற்கொண்டனர். வணிகர் செல்வமிகுந்தவராதலின் அவரது துணையின் இன்றி யமையாமையையும், தமிழர்க்குள் பிரிவு ஏற்பட ஏற்பட அவரது ஒற்றுமை கெட்டுத் தங்கட்குத் தமிழ்நாட் டில் ஊற்றமும் மேன்மையும் ஏற்பட வசதியாயிருப்பதையும், பார்ப்பனர் எண்ணித் தமிழ் வணிகருக்குத் தாராளமாய் வைசியப்பட்டம் தந்தனர்.

ஆரியர்க்குள், பூணூலணிவது பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் என்னும் மேல் மூவரணத்தார்க்கும் உரியதேனும், அது ஆரியரொடு தொடர்பில்லாத தமிழர்க்குச் சிறிதும் ஏற்பதன்று. ஒவ்வொரு நாட்டிலும் மறையோர், அரசர், வணிகர், உழவர் என்னும் நாற்பாலார் உளர். அவரையெல்லாம் (சிறிது வேறு பட்ட) ஆரிய முறைப்படி முறையே பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்று கொள்ளின், இங்கிலாந்திலுள்ள கந்தர்புரி (Canterbury) அரசக் கண்காணியாளரைப் (Arch Bishop) பிராமணரென்றும், மாட்சிமை தங்கிய ஆறாம் ஜியார்ஜ் மன்னரை க்ஷத்திரியரென்றும், அங்குள்ள வணிகத் தொழிலா ளரை வைசியரென்றும், உழவரையும், கூலிக் காரரையும் சூத்திர ரென்றும் கூறவேண்டும். ஆங்கிலேயர் ஒரு கலவைக் குலத்தா ரேனும், உறவுமுறையில் எல்லாரும் ஒரே குலத்தார் என்பது சரித்திரமறிந்த அனைவர்க்கும் தெளிவாய்த் தெரிந்ததே. பிராம ணர்கள் பிற நாடுகளிலுள்ளவர்களையும் ஆரியக்குல முறைப் படி பகுத்தாலும் பிராமணக் குலத்தன்மை மட்டும் தங்கட்கே யுரியதாகக் கொள்வர். அதோடு கூடியவரை எல்லாரை யும் சூத்திரரென்று பொதுப்படச் சொல்லி, பின்பு ஒரு பயனோக்கி அரசரை க்ஷத்திரியரென்றும், வணிகரை வைசியரென்றும் முன்னுக்குப்பின் முரண்படக் கூறுவது அவர் வழக்கம்.

கம்மியர் (கம்மாளர்) நெடுங்காலமாகப் பிராமணரொடு இகல்கொண்டு வருவதனால், தாமும் பிராமணரும் சமம் என்று காட்டுவதற்காகப் பூணூலணிந்து வருகின்றன ரேயன்றி வேறன்று.

தமிழ்நாட்டில் பூணூலணியும் தமிழரெல்லாம் ஏதேனும் ஒரு வணிகத் தொழிலராயும், கம்மியத் தொழிலராயுமே இருப்பர்.

தமிழரின் நாகரிகத்தையும், சரித்திரத்தையும் அறியாத தமிழர், ஆரிய நாகரிகத்தை உயர்ந்ததென மயங்கி, இக்காலத்தும் ஆரிய வழக்கத்தை மேற்கொள்வதால் உயர்வடையலாமென்று கருது கின்றனர். சில ஆண்டுகட்குமுன் சிவகாசி, சாத்தூர் முதலிய சில இடங்களிலுள்ள தனித் தமிழரான நாடார் குலத்தினர், புதிதாகப் பூணூலணிந்து கொண்டதுடன், தங்களை க்ஷத்திரியரென்றும் கூறிக்கொண்டனர். நாடார் குலத்தினர் வணிக குலத்தைச் சேர்ந்தவரென்பது உலக வழக்காலும், நூல் வழக்காலும் தெளிவாயறியக் கிடக்கின்றது. வைசியர், க்ஷத்திரியர் என்னும் பெயர்கள் வடசொற்களாயிருப்பதுடன், க்ஷத்திரியர் என்னும் பெயர் நாடார் குலத்திற்கு ஏற்காததாயு மிருக்கின்றது.

நூல் என்பது புத்தகத்திற்கும் இழைக்கும் பொதுப் பெயராத லின், நூலோர் என்னும் பெயர் அறிஞரையும் பார்ப்பனரையுங் குறிக்கும் இடம் நோக்கி யறிந்து கொள்க.

(3) நடை : தொல்காப்பிய மெய்ப்பாட்டியலில், 12ஆம் சூத்திர வுரையில், “தன்மையென்பது சாதித் தன்மை; அவையாவன பார்ப்பாராயிற் குந்திமிதித்துக் குறுநடை கொண்டு வந்து தோன்றலும்” என்று நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். இத் தன்மையை இன்றும் ஆங்கில நாகரிகம் நுழையாத சிற்றூர்களிற் காணலாம்.

(4) மொழி : பார்ப்பனரின் முன்னோர் பேசிய மொழி கிரேக்கத்தையும் பழம் பாரசீகத்தையும் வேத ஆரியத்தையும் ஒட்டியதாகும். வேத ஆரியர் மிகச் சிறுபான்மையரா யிருந்ததனாலேயே, கடல்போற் பரந்த வடஇந்தியப் பழந்திராவிட மக்களுடன் கலந்து தம் முன்னோர் மொழியைப் பேசும் ஆற்றலை இழந்தனர். அதனால், அவர் வழியினர் இன்று எம் மாநிலத்தில் உள்ளனரோ அம் மாநிலமொழியையே தம் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். ஆயினும் வேத ஆரிய மொழியுடன் அக்காலத்து வட்டார மொழிகளாகிய பிராகிருதங்களைக் கலந்து செயற்கையாக அமைத்துக்கொண்ட சமற்கிருதம் என்னும் வடமொழிமீது வரையிறந்த பற்றும், தாம் பேசும் வட்டாரமொழிகளில் இயன்ற வரை சமற்கிருதத்தைக் கலப்பதும், அவரெல்லார்க்கும் பொது வியல்பாகும்.

வடமொழி செயற்கையான வடிவில் மிக முதிர்ந்ததாதலின் வழக்குறாது போய்விட்டது. ஆனாலும், பிராமணரின் வழியினரான பார்ப்பனர் இன்று வடமொழியைத் தம்மாலியன்ற வரை பாதுகாத்து வருகின்றனர். பிராமணர் இந்தியாவில் எந்த இடத்திலிருந்தாலும், எந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் வடமொழிப் பயிற்சியை மட்டும் விடார். மற்ற வகுப்பாரோ பெரும்பாலும் தத்தம் தாய்மொழிகளையே அறிந்திருப்பர். வடமொழியின் கடினம்பற்றிச் சில பார்ப்பனர் அதைக் கல்லாதிருப்பினும், அதன்மேல் வைத்திருக்கும் பற்றில் மட்டும், அதைக் கற்றவரினும் எள்ளளவும் குறைந்தவராகார். பார்ப்பனர் பிற மொழிகளைத் தாய்மொழிகளாகக் கொண்டிருப்பதும், வடமொழி வழக்கற்றவிடத்து வேறு போக்கின்றியே யன்றி வேறன்று.

பார்ப்பனர் வடமொழியைப் பேசாவிடினும் வளர்ப்பு மொழியாகக் கொண்டுள்ளமையின், அவர்க்கு வடமொழியாளர் என்று பெயர்.

மணிமேகலையில், ‘வடமொழியாளர்’ (5 : 40) என்று பார்ப்பனர்க் கும், ‘வடமொழி யாட்டி’ (13 : 78) என்று பார்ப்பனிக்கும் வந்திருத் தல் காண்க.

வடமொழிக்குத் தமிழ் நூல்களில் ஆரியம் என்னும் பெயரும் வழங்குகின்றது. இப் பெயரொன்றே பார்ப்பனரைத் திராவிடரி னின்று வேறான ஆரியராகக் கொள்ளப் போதிய சான்றாகும். ஆரிய நாடு, ஆரியபூமி, ஆரியாவர்த்தம் என்று சொல்லப்படுவது பனி (இமய) மலைக்கும் விந்திய மலைக்கும் இடையிலுள்ள பாகமாகும். இதுதான் ஆரியர் இந்தியாவில் முதலாவது பரவி நிலைத்த இடம். இங்கு வழங்கினதினால்தான் ஆரிய மொழிக்கு ‘வடமொழி’ யென்றுபெயர்.

வடநாட்டில், ஆரியரும் ஆரியர்க்கு முந்தின பழங்குடிகளும் பெரும்பாலும் கலந்துபோனமையின், பிற்காலத்தில் வட நாட்டார்க்கெல்லாம் பொதுவாக ‘வடவர்’ ‘ஆரியர்’ என்னும் பெயர்கள் தமிழ் நூல்களில் வழங்கிவருகின்றன.

ஆரியம் என்னும் பெயரால் தமிழ்நாட்டில் கேழ்வரகு தவிர வேறு ஒரு பொருளுங் குறிக்கப்படுவதில்லை. ஆரியக் கூத்து என்பது தமிழ்நாட்டில் இசைத் தமிழும் நாடகத் தமிழும் வழக்கற்றபின், வடநாட்டார் வந்து ஆடிய நாடகத்திறமேயன்றி, பல்கலைக்கழக அகராதியிற் குறிக்கப்பட்டுள்ளபடி கழைக் கூத்தன்று.

ஆரியன் என்னும் பெயருக்கு, ஆசிரியன், பெரியோன், பூசாரியன் முதலிய பொருள்களெல்லாம் தமிழில் தோன்றினது தமிழ் நாட்டில் பார்ப்பனத் தலைமை ஏற்பட்ட பிற்காலத்தேயாகும். இப் பொருள்களும் நூல் வழக்கேயன்றி உலக வழக்காகா.

வடமொழி, தென்மொழியின் செவிலித்தாயென்றும், நற்றா யென்றும், இந்தியப் பொதுமொழியென்றும் ஆராய்ச்சியில்லாத பலர் கூறி வருகின்றனர். உலக மொழிகளில், ஆரிய மொழிகளும் திராவிட மொழிகளும் மொழிநிலையில் மிக வேறுபட்டன வாகும். திராவிடக் குடும்பம் மிக இயல்பானதும் ஆரியக் குடும்பம் மிகத் திரிந்ததுமாகும். அவற்றுள்ளும், இயல்பிற் சிறந்த தமிழும் திரிபில் முதிர்ந்த வடமொழியும் மிக மிக வேறு பட்டனவாகும்.

பார்ப்பனர் தமிழ்நூற்கன்றித் தமிழ்மொழிக் கதிகாரிக ளாகாமை

இப்போதுள்ள முறைப்படி, பார்ப்பனர் தமிழ்நூல்களைக் கற்றுச் சிறந்த புலவராகலாமேயொழியத் தமிழ்மொழிக்கும் தமிழ்க் கருத்துகட்கும் அதிகாரிகளாக முடியாது. அதற்குக் காரணங் களாவன:

(1) ஆரிய மனப்பான்மை

ஒவ்வொரு நாட்டார்க்கும் ஒவ்வொரு மனப்பான்மை யுண்டு. அதனால் சில கருத்துகள் வேறுபடும். கருத்து வெளிப்பாடே மொழி. ஒவ்வொரு மொழியின் அமைதியும், இலக்கணம் (ழுசயஅஅயச), மரபு (ஐனiடிஅ) என இருவகைப்படும். ஒரு மொழியின் இலக்கணத்தையும் அதிலுள்ள நூல்களையும், எவரும் அம் மொழியை எழுதப் படிக்கத் தெரிந்தவுடன், தாமே கற்கலாம்; ஆனால், அம் மொழியின் மரபையும், அம் மொழியாரின் விதப்புக் கருத்துகளையும் தாமே அறியமுடியாது.

பார்ப்பனர் தமிழ்நாட்டிற்கு வந்து பல நூற்றாண்டுகளாகியும், தமிழரோடு கலவாமல், தமித்தே யிருந்துவந்தமையின், தமிழ் மரபையும் தமிழ்க் கருத்துகளையும் முற்றும் அறிந்தாரில்லை.

பார்ப்பனர் எப்போதும் வடநாட்டையே தங்கள் முன்னோரின் நாடாகவும், வடமொழியையும் தங்கள் முன்னோரின் மொழி யாகவும் கருதிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், தமிழரோ எப் போதும் தென்னாட்டையே தங்கள் முன்னோரின் நாடாகவும், தமிழையே தங்கள் முன்னோரின் மொழியாகவும் கருதிக் கொண் டிருக்கின்றனர். இவ்வொரு வேறுபாடே இவ்விரு வகுப்பாரை யும் எவ்வளவோ பிரித்துக்காட்டும்.

நூல் என்னுஞ் சொல் முதலாவது, ஒரு சூத்திரத்தாலும் பல சூத்திரத்தாலும் ஆன இலக்கணத்தையும், இலக்கணம் போன்ற கலை (ளுஉநைnஉந)யையுங் குறித்ததாகும். இப்போது, அது புத்தகத் திற்கு வழங்கினும், புத்தகத்தின் பொருளைக் குறிக்குமேயன்றி, அதன் தாள்தொகுதியைக் குறிக்காது. புத்தகம் என்னும் பெயரே தாள் தொகுதியைக் குறிக்கும். இது பல பார்ப்பனருக்கு விளங்குவ தில்லை.

நண்டுக்குட்டி, கம்பவைக்கோல் என்பனபோன்ற மரபுவழு பார்ப்பனர்க்குள் மிகப்பொது.

(2) நாட்டுப்புறத்தாரோடு தொடர்பின்மை

ஒவ்வொரு மொழியிலும், சொற்கள் உலகவழக்கு, நூல் வழக்கு என இருபாற்படும். உலகவழக்கு பொதுமக்கட்கும், நூல்வழக்கு புலவர்க்கும் உரியனவாகும். பொதுமக்களிலும், நகர்ப்புறத் தாரினும் நாட்டுப்புறத்தாரே உலக வழக்கிற்குச் சிறந்தாராவர். உலகவழக்கு ஒரு மொழிக்கு உயிரும் நூல்வழக்கு அதற்கு உடம்புமாகும்.

பார்ப்பனர் தங்களை நிலத்தேவராக எண்ணிக்கொண்டு, குடியானவருடனும் தாழ்ந்தோருடனும் நெருங்கிப் பழகாமை யால், தமிழ்ச்சொற்கள் பலவற்றை அறிந்திலர்.

(3) வடமொழிப்பற்றும் தமிழ்ப்பற்றின்மையும்

வீணாக வடசொற்களை வழங்குவதினாலும், மணிப்பவள நடையிலும் தற்சம நடையையே பின்பற்றுவதாலும், ஆங்கிலச் சொற்கள் மொழிபெயர்க்காதே தமிழில் எழுதுவதாலும், ஒருகால் மொழிபெயர்ப்பினும் வடசொற்களாகவே பெயர்ப் பதாலும், தனித்தமிழை விலக்குவதாலும், தென்சொற்களை வடசொற்களென்று கூறுவதினாலும் பார்ப்பனருக்குத் தமிழ்ப் பற்றில்லையென்பது வெட்டவெளியாம்.

“ஸ்ரீய: பதியான ஸர்வேஸ்வரனது கிருபையால் ஸம்ஸாரி சேதநர்களின் உஜ்ஜீவனத்தின் பொருட்டு,” `யூநிவர்சிட்டி’ (பல்கலைக்கழகம்), லெக்சரர் (சொற்பொழிவாளர்), கமிட்டி (குழு), ஸ்கூல் பைனல் (பள்ளியிறுதி), ஆகர்ஷண சக்தி (இழுப் பாற்றல்), நிரக்ஷரேகை (நண்கோடு), மத்தியதரை (நண்ணிலம்), தசாம்சம் (பதின்கூறு), சதவீதம் (நூற்றுமேனி), வியாசம் (விட்டம்) முதலிய வழக்குகளால், தமிழ்ப்பற்றின்மை வெளியா தல் காண்க. (தேவநேயம் தொகுதி -10) (பக் 140-164)
- முத்துச்செல்வன் முகநூல் பதிவு, 4.6.20

ஞாயிறு, 7 ஜூன், 2020

திராவிடம் என்ற சொல் வந்தவழி

1) 1857 இல் ஆதி திராவிட அறிஞர்கள் பலர்கூடி
"ஆதிதிராவிடர் மகா சன சபை"
என்ற சமுதாய அமைப்பைத்
தொடங்கினர்.

2) 1883 ஆண்டிலே "திராவிடப் பாண்டியன்" எனும் இதழ்
மறைத்திரு டி. ஜான் இரத்தினம்
என்பாரை ஆசிரியராகக் கொண்டு நடத்தப்பட்டது.

3) 1890 இல் அயோத்திதாசர்
"திராவிடர் கழகம் " என்ற அமைப்பைத் தோற்றுவித்தார்.

4) 1890 இல் "திராவிட மகாசன சபை தொடங்கப்பட்டது.

5) 01.12.1891 அன்று உதகையில் "திராவிட மகாசன சபையின்" முதல் மாநாடு நடைபெற்றது.

6) 1892 இல் "ஆதி திராவிடர் மகா சன சபை தொடங்கப்பட்டது.

7) 1928 இல் "அகில இந்திய
ஆதி திராவிடர் மகாசன சபை"
எனப் பெயர் மாற்றம் பெற்றது.

8) 1944 இல் சேலம் மாநாட்டில்
நீதிக்கட்சியை "திராவிடர் கழகம்" என்று பெயர் மாற்றி
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செய்தித் தாள்கள் :

1) திராவிட மித்திரன் - 1885
2) திராவிடப் பாண்டியன் - 1885
3) திராவிட கோகிலம் - 1907
4) ஆதி திராவிடன் - 1919
5) ஆதி திராவிட மித்திரன் - 1939

"ஆரியரல்லாத ஆரியக்
கலப்பில்லாத மண்ணின்
மைந்தர்களான தமிழர்களைக்
குறிப்பதுதான் ' திராவிடர் '
என்னும் சொல் (பக்கம் 60)
என்கிறார் அயோத்திதாசப் பண்டிதர்.

சான்று : பக் 35 - 60.
'தமிழன்' அயோத்திதாசப் பண்டிதர்.
ஆசிரியர்:கோ.தங்கவேலு
வௌியீடு: நளினி பதிப்பகம்
சென்னை 600 080

"தமிழம் என்னும் பெயரின்
திரிபே திரவிடம்."

தமிழ்நாட்டின் பண்டைப்
பெயர் தமிழகம் என்பது.

இதைக் கிரேக்கரும், உரோமரும் " டமரிக்கே (Damarice) எனத் திரித்து வழங்கினர் .

வடநாட்டார் அல்லது ஆரியர் , "த" வை "த்ர"  என்றும் தமக்கு ழகரமின்மையால் ழகரத்தை ளகரமாகவும் திரித்துத் தமிழை முதலாவது த்ரமிளம் என வழங்கினர் .

பின்பு அது த்ரமிடம் - த்ரவிடம்
என மருவி, இன்று தமிழில்
திரவிடம் என வழங்குகின்றது.

இவ்வடிவங்களுள் த்ரமிளம்
என்பதே முந்தியதாதலாலும், 
அதற்கு முன்பும் தமிழ் என்னும்
பெயரே தமிழ் நாட்டில் வழங்கியதாலும், அன்று ஆரியக் கலப்பின்மையாலும், தமிழம்  என்னும் தனித் தமிழ்ப் பெயரே வடமொழி வழியாய் திரவிடம் என்று
திரிந்து வழங்குகின்றதென்க.

தமிழ் என்னும் பெயர் எங்கனம்
திரவிடம் என்று திரிந்ததோ ,
அங்கனமே தமிழ் மொழியும்
பிற திரவிட மொழிகளாய்
திரிந்ததென்று அறிக .

சான்று : பக்கம் 131 - 132.
சொல்லாராய்ச்சி கட்டுரைகள்.
தேவநேயப் பாவாணர்.
வௌியீடு : ஐந்திணைப் பதிபபகம்,
சென்னை - 5

தோழர்களே!

"திராவிடம்" எனும் சொல்லையே பலவாறு இழித்தும், பழித்தும் பேசும்,
தமிழர்கள் தமிழம், திராவிடம் என்பன ஒன்றே என்பதை அறிய வேண்டும்.

திராவிடர் என்ற சொல்லைப்
பெரியார் புகுத்தினார் என்று கருதுவோர் மேற்கண்ட கருத்துகளைச் சிந்திப்பீராக!
   - வி.சி. வில்வம்

வெள்ளி, 5 ஜூன், 2020

டாக்டர் டி.எம்.நாயரின் சீற்றம்!

ஒற்றைப் பத்தி - டாக்டர் டி.எம்.நாயரின் சீற்றம்!
June 5, 2020 • Viduthalai • மற்றவை

‘‘சில ஆண்டுகளுக்கு முன் ஒரு குளத்தில் ஒரு கனவானைச் சந்தித்தேன். அவரைப்பற்றி அவரையே விசாரித்தபோது அவர் பெரிய தனவந்தர், பல உயர்ந்த பதவிகளில் இருக் கிறவர். கல்வி கேள்விகளில் திறமை வாய்ந்தவர். பெரிய மனிதர்க்கு வேண்டிய யோக்கியதைகள் பூராவும் இருந்தன. எனினும், இவற் றையெல்லாம் கூறியதால் மட்டும் தன்னுடைய உயர் வான நிலைமையைச் சொல்லி விட்டதாக அவர் மனதுக்குச் சமாதான மில்லை. ஆதலால், எல்லாம் சொல்லியான பிறகு, அப் பக்கத்தில் மிகவும் செல் வந்தரான நம்பூதிரிப் பார்ப் பானுடைய பெயரைச் சொல்லி அவரைத் தெரி யுமா என்று கேட்டார். நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

‘‘ஹ! ஹா!! இப்பக்கங் களில் அவரைத் தெரியாத வர் இருக்கவே மாட்டார்கள். அத்திருமேனி குடும்பத்துக் கும், எங்கள் வீட்டுக்கும் பரம்பரையாய் ‘சம்பந்தம் உண்டு' எனச் சொல்லி மகிழ்ந்தார். தன்னுடைய செல்வத்தாலும், படிப்பாலும் மச்சு மாளிகை, காலால்  - கையாட்களாலும், உயர்ந்த உத்தியோகத்தாலும், தன் குடும்பத்திற்கு உயர்வு மேம்படவில்லை; ஆனால், ஒரு பார்ப்பான்  ..................ல் அப்பªருமை பூர்த்தியாகிற தென்ற எண்ணமும், வழக் கமும் கொண்ட வாழ்க்கை யாகயுள்ள ஹிந்து மதத்தை என்ன செய்வது.''

- கோவை அய்யாமுத்து கட்டுரைகள், நூல் பக்கம் 15

விவேகானந்தர் கேரளா வைப் பைத்தியக்காரர்களின் விடுதி என்று சொன்ன துண்டு. அவர் எந்தப் பொருளில் சொல்லியிருந் தாலும், எவ்வளவு மோசமாக நம்பூதிரிகளின் காமக்களி யாட்டம் கூத்தாடியது என்பது விளங்கும்.

நம்பூதிரி குடும்பத்தில் மூத்த மகன்தான் திருமணம் செய்துகொள்வான். மற்றவர்களுக்கு நாயர் வீட்டுப் பெண்கள்தான் - தன் விருப்பப்படி!

நீதிக்கட்சியின் முக்கிய மூளையான டாக்டர் டி.எம்.நாயர் கிளர்ந்து எழுந்தார்; வெகுண்டு கிளம்பினார் என்றால், இந்தக் கேவல மான நம்பூதிரிகளின், பார்ப் பனர்களின் ஆதிபத்திய - ஆபாச அட்டகாசத்தை எதிர்த்துதான் - கண்டுதான் என்பதை ஞாபகத்தில் வையுங்கள்!

 - மயிலாடன்

வியாழன், 4 ஜூன், 2020

திராவிட இயக்கத் தலைவர் நடேசனார்


சி. நடேசனார், 
திராவிட இயக்கத் தலைவர். 

சென்னை 
தியாகராய நகர் 
திருப்பதி 
தேவஸ்தானத்திற்கு 
எதிரே இருக்கும் 
நடேசன் பூங்காவில் 
நடந்து செல்வோர்க்கு 
டாக்டர் நடேசனை தெரியுமா 
என்ற கேள்விக்கு 
விடை தெரியல்லை!!. 

ஒரு நூற்றாண்டு காலம் 
தமிழ் நிலப்பரப்பின், 
தமிழ் நிலத்தின் 
வாழ்வியல் கூறுகளில், உரிமைகளில், 
என எல்லாவற்றிலும் 
புரட்சியை ஏற்படுத்திய இயக்கம் 
திராவிட இயக்கம்.

இன்று ஆலமரமாய் 
விழுது விட்டு 
வேப்பேரியில் 
பெரியார் திடல், 
தேனாம்பேட்டையில் 
விழுப்புரம், திருச்சி என, 
அண்ணா அறிவாலயங்கள் 
மாவட்டம் தோறும் 
முகவரிகளோடு 
திராவிட இயக்கம் 
உழைத்துக் கொண்டிருக்கிறது!

ஆனால் மொத்த 
திராவிட இயக்கத்தின் 
ஆதி முகவரி எதுவென்றால் 
வரலாற்றின் கைகளில் 
No. 13 
அக்பர் சாஹிப் தெரு, திருவல்லிக்கேணி.  
என்ற முகவரியைத்தான் காட்டும். 

பார்ப்பனரல்லாத,  பிற்படுத்தப்பட்ட 
திராவிட இன 
மாணவர்களுக்காக 
டாக்டர் சி. நடேசனார் 
நடத்திய 
திராவிட இல்லத்தின் 
முகவரிதான் அது. 

1908 மின்டோ-மார்லி 
அரசியல் சீர்திருத்த சட்டம் 
அமல் படுத்தப்பட்ட பின்பும் 
கல்வி நிறுவனங்களிலும், விடுதிகளிலும் 
பிராமணர் களுக்கு மட்டுமே 
இடம் ஒதுக்கப்பட்டது.

பிராமணரல்லாத 
பிற்படுத்தப்பட்ட
திராவிட இன 
மாணவர்களுக்கு 
இடம் மறுக்கப்பட்டது. 

அதனால் மாணவர்கள் 
மன உளைச்சலுக்கு 
ஆளாவதை தடுக்கவும் 
தங்கி படிக்கவும் 
தனியொரு மனிதனாக
டாக்டர் நடேசன் அவர்கள் 
1914ல் 
உருவாக்கியது தான் 
திராவிட இல்லம் 
(DRAVIDIAN HOME)

சென்னை 
திராவிட சங்கம் என்ற பிராமணரல்லாத 
அரசு ஊழியர்கள் சங்கமும் 
நடத்தி வந்தார். 
அந்த அமைப்பு 
திராவிட இல்லத்தில் வாரந்தோறும் விடுதியில் 
கூட்டம் நடத்தி 
விவாதமும் நடந்து வந்தது!  

இங்கு 
ம. வெ. சிங்காரவேலர், 
அன்னிபெஸண்ட் அம்மையாரும், 
சர். பிட்டி. தியாகராயரும், 
டி. எம். நாயரும் சொற்பொழிவு ஆற்றியிருக்கிறார்கள்!

இங்கு தங்கி படித்த 
R. K. சண்முகம் செட்டியார் 
சுதந்தர இந்தியாவின் 
முதல் நிதி அமைச்சராக இருந்தார். 
S. சுப்பிரமணியம் அவர்கள், 
நீதிபதியாகவும், 
நாராயணசாமி அவர்கள், 
அண்ணாமலை 
பல்கலை கழகத்தின் 
துணை வேந்தராகவும் ஆனார்கள்!

மனக்கசப்புகளால் பிரிந்திருந்த 
சர். பிட்டி. தியாகராயரையும் 
டி. எம். நாயரையும், 
இங்கு வைத்துதான் 
சமாதானம் 
செய்து வைத்தார்
டாக்டர். நடேசன். 

நீதிக்கட்சி என்ற 
தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை துவக்குவதற்கு 
டாக்டர் நடேசன் அவர்கள் தன்னோடு 
இரு நண்பர்களையும் இணைத்துக் கொண்டு 
அடித்தளம் அமைத்தார். 

1916 நவம்பர் 20ம் தேதி 
எத்திராஜ் கல்லூரி அதிபர் 
சர் எத்திராஜ்  அவர்களின் இல்லத்தில் பார்ப்பனரல்லாத தலைவர்கள் கலந்து கொண்டு ஒரு மனதாக 
நீதிக்கட்சியின் 
முதல் தலைவராக 
டாக்டர். நடேசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

சென்னை நகர 
குடித்தனக்காரர் 
பாதுகாப்புச்  சட்டம் 
கொண்டு வந்து நிறைவேற்றியவர்
டாக்டர். நடேசன்.

இந்தச் சட்டம்தான் 
பின்னாளில் தி. மு. க.
குடிசை மாற்று வாரியம் 
அமைத்து 
ஏழைகளுக்கு வீடு கட்டி தந்ததற்கான 
முன்னோடி சட்டம். 

வாக்குரிமை என்பது,  
சொத்து, படிப்பு 
வரிசெலுத்துவோர்களுக்கு மட்டுமே இருந்தது.   
ஏழைகள் வரி செலுத்தாமல் இருக்கலாம், 
ஆனால் ஏழைகளின் உழைப்பால்தான் 
செல்வந்தர்கள் 
வரி செலுத்துகிறார்கள் 
என்று வாதாடினார்.  

வாக்குரிமை என்பது அனைவருக்கும் 
பிறப்புரிமையாக இருக்கவேண்டும் 
என்கிற 
டாக்டர் நடேசனாரின் 
சிந்தனை தான் 
பனகல் அரசரின் ஆட்சியில் பெண்களுக்கு 
வாக்குரிமை வழங்கியது. 

பெண்களுக்கு 
வாக்குரிமை வழங்கியதில் 
இந்தியாவிலேயே 
முதன்மை மாநிலமாக 
திகழ்ந்தது. 

கல்வி, வேலைவாய்ப்பு சட்டமன்றத்தில் 
இட ஒதுக்கீடு வேண்டும் 
என்று முதன்முதலில் 
குரல் கொடுத்தவர் 
நடேசனார். 

1921ல் தாக்கல் 
செய்யப்பட்டு 
தோல்வியடைந்த 
வகுப்பு வாரி 
பிரதிநிதித்துவ சட்டத்தை,
மீண்டும் 
1928ல்  
மந்திரியாக இருந்த 
தனது நண்பர் 
சர்.முத்தையா முதலியாரை அணுகி 
உறுப்பினர் அவையில் 
தாக்கல் செய்து 
வெற்றி அடைந்தார். 

இந்திய 
துணைக்கண்டத்தில் முதன்முறையாக 
இட ஒதுக்கீடு 
என்ற முறை 
சென்னை மாகாணத்தில்தான் அமல் படுத்தப்பட்டது. 

இத்தகைய 
அரும்பெரும் 
சாதனைகள் செய்த 
டாக்டர். சி. நடேசன் 
1938ம் ஆண்டு 
தேர்தலில் போட்டியிட்டு 
தேர்தல் முடிவுகள் வருமுன்பே 
தன் இன்னுயிரை இழந்தார். 

திராவிட இயக்கத் 
தலைவர்களின் 
இறுதி ஊர்வலத்தில் 
நன்றியுள்ள 
தொண்டர்களின் 
உணர்ச்சி பொங்க நடைபெறுவதில்  
முன்னோடி 
டாக்டர். சி. நடேசன் 
அவர்களின் 
இறுதி ஊர்வலம் தான். 

வாசிப்பு அறிவை மேம்படுத்தும், 

ART.நாகராஜன் 
புத்தக வாசல், மதுரை. 
9894049160.
05.06.2020.

Kandasamy Kandasamy

செவ்வாய், 12 மே, 2020

தமிழர் ஒற்றுமையைத் தகர்ப்பதா திராவிடம்?


ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்,

தமிழர் ஒரு தனித் தேசிய இனம் என்னும் ஓர்மையை (மெய்ம்மையைஒழிப்பதற்கென்றே திராவிட ஓர்மை என்னும் பொய்மைத் தமிழரின் தலைமேல் பெரியாரால் சுமத்தப்பட்டதுஎன்பது குணாவின் அடுத்த குற்றச்சாட்டு.
இதற்கு நாம் பதிலோ விளக்கமோ சொல்லத் தேவையில்லாமல் இக்குற்றச்சாட்டிற்குக் கூறப்படுவதற்கு முன்பே பெரியாரே 1948இல் பதில் சொல்லியுள்ளார்.
தமிழர் என்பது மொழிப்பெயர்திராவிடர் என்பது இனப்பெயர்தமிழ்ப் பேசும் மக்கள் யாவரும் தமிழர் என்னும் தலைப்பில்கூற முடியும்ஆனால்தமிழ்ப்பேசும் அத்தனை பேரும் திராவிடர் (தமிழ் இனம்ஆகிவிட முடியாதுஎன்கிறார்.
இந்த நுட்பத்தைஇனப்போருக்கான அடித்தளத்தைஇன மீட்சிக்கான யுக்தியை உணர்ந்துகொள்ளும் நுட்பமும்கூர்மையும் இல்லாதவர்கள் சித்தாந்த ரீதியாக இப்பிரச்சினையை அணுகுவதாலே இது போன்ற குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
நான் முன்னமே சொன்னதுபோல் தெற்காசியா முழுமைக்கும் உரிமையுடையவர்கள் தமிழர்கள்அந்தத் தமிழர்களுடன் அயலவர் கலந்தபோது அவர்கள் மொழியும் தமிழுடன் கலந்து கன்னடம்தெலுங்குமலையாளம்துளு போன்றவையாக தமிழ் மாறிமொழியால் தமிழர்கள் பிரிந்து கன்னடர்தெலுங்கர்மலையாளி என ஆயினும் அவர்கள் யார்தமிழ் இனமக்கள் அல்லவாஆகதமிழ் இன மக்கள் மொழியால் பிரிந்தாலும் இனத்தால் தமிழ் இனம் என்பதால் அவர்களை இரத்த உறவோடு சேர்த்துக்கொண்டதுதான் மெய்ம்மைக் கோட்பாடாகும்மாறாகதமிழ் பேசுகின்றவர்கள் என்கின்ற அடிப்படையில்தமிழ்நாட்டில் இருப்பவர்கள் என்ற அடிப்படையில்தமிழர்களை மொழி அடிப்படையில் அணிசேர்க்கும்போது தமிழர் அல்லாதாரும்ஆரியர்களும் அக்கோர்வையில் வருகின்றனர்எனவேமொழி அடிப்படையில் தமிழ் மண்ணில் செய்யப்படும் பாகுபாடு உண்மைக்கும்உறவுக்கும் மாறான பொய்மைக் கோட்பாடாகும்.
மேலை நாடுகளின் மக்கள் பகுப்பு மொழி அடிப்படையில் நிகழ்த்தப்பட்டபோதுஅங்கு மொழியே இனத்திற்கு அடிப்படை ஆயிற்றுஇங்கு ஓர் இனம் பல மொழியைப் பேசும் நிலை இருப்பதால் மொழி அடிப்படையில் இனப்பகுப்பு இயலாமல் போனதுஇந்த இயல்பறிந்தே தந்தை பெரியார் திராவிடம் என்ற சொல் மூலம்இன அடிப்படையில் அணி சேர்த்தார்.
பெரியார் ஒரு பெரும் சிந்தனையாளர் என்பது மட்டுமல்லபெரியாரின் சிந்தனையைஇலக்கைகொள்கையைசெயல்பாட்டைதிட்டத்தைப் புரிந்துகொள்ளவே பெரும் சிந்தனை வேண்டும்அத்தகுதி குணா அவர்களுக்கு இல்லை என்பதைஅவர்களின் புரிந்துகொள்ளும் தன்மையும்திறனாய்ந்து கருத்து கூறும் பாங்கும் காட்டுகின்றன.
மொழி வழித்தேசிய இனங்கள் என்ற இக்கால மெய்ம்மைகளைப் புறக்கணித்துவிட்டுமொழியின் (தமிழ்வழியில் மக்கள் பிரிவுகளை விளக்குவது அறிவியலுக்கும் நடப்புக்கும் பொருந்தாது.
கொடியும் கொற்றமுமாய் மண்ணாண்ட பண்டைத்தமிழ்ப் பேரரசுகள்வீழவும்தமிழ் தாழவும்தமிழரினம் அடிமைப்படவும் பெருங்காரணமாய் இருந்த திராவிடர்களின் நலன்களையே முன்வைத்து உருவாக்கப் பெற்ற திராவிட மெய்யினக் கொள்கையை ஒரு பொய்மான் என்று ஓர்ந்துணர்ந்துதமிழறிஞர்கள் போர்க்கோலம் பூண்டாலன்றித் தமிழினத்திற்கு வாழ்வில்லைவழியில்லைவருங்காலமும் இல்லை... என்கிறார் குணா.
மேற்கண்ட குணாவின் கூற்றைக் கூர்ந்து நோக்கின் அத்தனையும் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற உளறல்கள் என்பது நன்கு விளங்கும்.
பரந்துபட்ட மண்ணைத் தமிழ் மன்னர்கள் ஆண்டனர் என்பது உண்மைஅவர்கள் வீழ்ந்தது திராவிடத்தாலாஅப்போது ஏது திராவிடச் சித்தாந்தம்.
அப்போது தமிழனுக்குள்ளே ஒற்றுமை இல்லையேஅன்றைக்கு மலையாளமே உருவாகவே இல்லையேதூயத் தமிழ் பேசிய சேரன் ஆண்ட பகுதியல்லவா கேரளமான சேரநாடுஅது மலையாளமாய்கேரளமாய் மாறியது ஆரியர் கலப்பால் ஆதிக்கத்தால்சமற்கிருத கலப்பால் ஆதிக்கத்தால் அல்லவாஉண்மை இப்படியிருக்கதிராவிடத்தால் தமிழரசுகள் வீழ்ந்தன என்பது தொடர்பற்ற உண்மையற்ற உளறல் அல்லவா?
தெற்காசியப் பகுதிக்கு ஒட்டுமொத்த உரிமையுடைய தமிழினம் சிதைந்ததற்கும்தாழ்ந்ததற்கும்வீழ்ந்ததற்கும் ஆரியர் வருகையும் சமஸ்கிருத கலப்பும் அல்லவா காரணம்இதை மொழியியலும்மாந்தவியலும் அய்யத்திற்கு இடமின்றி ஆதாரத்தோடு உறுதி செய்கின்றனவேஆரியருக்கு அடுத்து அரேபியர்மங்கோலியர்பாரசீகர் என்று பலரும் ஊடுருவியதன் விளைவல்லவா தமிழினம் கலந்துசிதைந்து போகவும்தமிழில் பிற மொழி கலந்து கன்னடம்தெலுங்குமலையாளம் என மாறவும் காரணம்.
இளங்கோ காலத்தில் மலையாளம் இல்லையேஅது சுத்த தமிழ் பேசிய சேர நாடல்லவாசமஸ்கிருத கலப்பும்ஆரிய ஆதிக்கமும்தானே மலையாளம் உருவாகக் காரணம்திராவிடமா காரணம்திராவிடம் என்பது அப்போது இல்லையேஉண்மை இப்படியிருக்க எல்லாம் திராவிடத்தால் கெட்டதாகவும்அதை எதிர்த்தால் மட்டுமே வாழ்வு என்ற ஒரு தவறான வழியைத் தீர்வை குணா காட்டுவது குருடன் வழி காட்டும் கேட்டையே உருவாக்கும்.
இன்றைய உலகமயமாக்கல் நிலையில் எல்லாமே மாறிஇளைஞர் சிந்தனைகள் இனம்மதம்நாடு என்ற எல்லைகள் கடந்து எல்லாம் கலந்து வரும் சூழலில் நடைமுறைக்கு ஒவ்வாத தீர்வுகளைக் கூறிஆற்றலையும்பொழுதையும் குணா போன்ற குறுக்குசால் பேர்வழிகள் வீணடித்துக் கொண்டுள்ளனர்.
தந்தை பெரியார் பிறப்பால் கன்னடராயிருந்தாலும்அவர் தமிழராகவே வாழ்ந்தார்இந்த உண்மையைத் திரித்தோமறைத்தோ எவர் கூறினாலும் அவர் கடுமையான கண்டனத்திற்கு உரியவர்கள்கண்காணிக்கப்பட வேண்டியவர்கள்சுருங்கச் சொன்னால் அவர்கள் ஆரியத்திற்குக் கைக்கூலிகளாகத்தான் கட்டாயம் இருப்பார்கள்இந்தக் கணிப்பு உணர்ச்சிவசப்பட்டு உரைப்பதன்றுஇது அப்பட்டமானஅப்பழுக்கற்ற உண்மை!
பெரியார் காலச் சூழலுக்கும்இந்தியாவில் நிகழ்ந்த அரசியல்சமூக மாற்றங்களுக்கும் ஏற்ப தன்னுடைய அணுகுமுறைகளை மாற்றி வழி நடத்தினார்அதில் ஏற்படுவது மாறுபாடுகள்வேறுபாடுகள்முரண்பாடுகள் அல்லஅவை பரிணாம வளர்ச்சிப் போக்குகள்அந்த அடிப்படையில்தான் அவர் சூழலுக்கேற்ப முதலில் திராவிட நாடு கோரிக்கையை எடுத்தார்அதன்பின்தமிழ்நாடு கோரிக்கையை எழுப்பினார்.
மொழியடிப்படையில் மாநிலப் பிரிவுகள் என்றவுடன்சென்னை இராஜ்யம் என்பதைதமிழ்நாடு என்று பெயர் மாற்றவும் செய்யவேண்டும் என்று முதன்முதலில் கோரிக்கை வைத்தவர் பெரியார் என்பதை குணா மறைத்துக் குற்றஞ் சாட்டுவது மோசடியல்லவாபெரியார் அப்போது கூறியவற்றைப் பாருங்கள்.
திராவிடத்தை அல்லது தமிழ்நாட்டைவிட்டு ஆந்திரர்கர்நாடகர்மலையாளிகள் பிரிந்து போன பின்புகூடமீதியுள்ள யாருடைய ஆட்சேபணைக்கும் (எதிர்ப்பிற்கும்இடமில்லாத தமிழகத்திற்குத் தமிழ்நாடு என்ற பெயர்கூட இருக்கக்கூடாது என்று பார்ப்பானும்வடநாட்டானும் சூழ்ச்சி செய்துஇப்போது அந்தப் பெயரையே மறைத்து ஒழித்துப் பிரிவினையில் சென்னை நாடு என்று பெயர் கொடுத்திருப்பதாகத் தெரிய வருகிறது.
இது சகிக்க முடியாத மாபெரும் அக்கிரமமாகும்எந்தத் தமிழனும்அவன் எப்படிப்பட்ட தமிழன் ஆனாலும் இந்த அக்கிரமத்தைச் சகித்துக் கொண்டிருக்கமாட்டான் என்றே கருதுகிறேன்அப்படி யார் சகித்துக் கொண்டிருந்தாலும் என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாதென்று சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன்.
இதைத் திருத்ததமிழ்நாட்டு மந்திரிகளையும்சென்னைடெல்லிசட்டசபைகீழ் மேல் சபை அங்கத்தினர்களையும் மிக மிக வணக்கத்துடன் இறைஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்... என்று 1955ஆம் ஆண்டே உரிமைக் குரலை உணர்வு பொங்க எழுப்பிய உன்னத தலைவர் பெரியார்.
விடுதலை அறிக்கை, 11.10.1955
இதைவிட தமிழ் உணர்வுடன்தமிழர் பற்றுடன் வேறு என்ன கூறமுடியும்மேற்கண்ட பெரியாரின் வார்த்தைகளைக் கூர்ந்து கவனித்தால் அவர் எவ்வளவு உண்மையாகவும்உணர்வு பூர்வமாகவும் இந்தக் கருத்தைஇக்கோரிக்கையை வைத்துள்ளார் என்பது எவருக்கும் விளங்கும்.
மொழிவழி மாநிலம் வந்தபின் இனி இந்தியாவில் பிரிவினை கோரிக்கை நடைமுறை சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்து திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டார்.
உண்மை இப்படியிருக்க அவர் தமிழர் தேசிய மெய்ம்மையை மறைக்க திராவிடப் பொய்மையைத் திணித்தார் என்பது உள்நோக்கத்துடன் கூறப்படும் குற்றச்சாட்டு ஆகும்.
அவர்தமிழர் நாடு என்ற தமிழ்த் தேசிய உணர்வை மறைக்க விரும்பியிருந்தால்தமிழ்நாடு என்று பெயர் வேண்டி அவ்வளவு உருக்கமாக வேண்டுகோள் வைப்பாராதமிழ்நாடு தமிழனுக்கே என்ற முழக்கத்தை முதன்முதலில் வைத்திருப்பாரா?
தந்தை பெரியார் ஊட்டிய விழிப்பும்உணர்வும் பரவியதன் விளைவே இன்று தமிழ்த் தேசியம் பேசும் எழுச்சி எழுந்ததற்குக் காரணம்.
குணா போன்ற குறுக்குசால் பேர்வழிகள் நான்கு சுவற்றுக்குள் நாற்காலியில் அமர்ந்து ஆலோசனை சொல்வதற்கு மாறாய்பெரியார் ஊட்டிய விழிப்பையும்உணர்வையும் களமாக அமைத்து தமிழ்த் தேசியத்தை உருவாக்கச் செயல்படட்டும்அதற்கு ஒரு துரும்பைக்கூட அசைக்க முடியாத வாய்ச்சொல் வீரர்கள் 80 ஆண்டுகளுக்கு முன் பெரியார் கூறிய திராவிட நாடு கோரிக்கையால்தான் தமிழன் வீழ்ந்தான் என்று குற்றஞ் சாட்டிக் கொண்டிருப்பது உள்நோக்கம் உடையதாகும்  நரித் தந்திரமாகும்ஆரியத்திற்கு ஆதரவான செயல்பாடாகும்.
திராவிடம் என்பதைத் தமிழர்க்கு எதிராகத் திட்டமிட்டுக் கன்னடரான பெரியார் திணித்தார்காரணம்அவர் தமிழர் தனித் தன்மையுடன் மேல்வருவதை விரும்பவில்லை என்று கூறும் குற்றச்சாட்டு முழுவதும் மோசடியானதுஉண்மைக்கும்நேர்மைக்கும் எதிரானதுகாரணம்திராவிடம் என்ற சொல் நான் முன்னமே ஆதாரங்களுடன் காட்டியதுபோலஅது பெரியார் நீதிக் கட்சிக்கு வருவதற்கு முன்பே பயன்படுத்தப்பட்டதுஅதன்பின் அனைவராலும் ஏற்கப்பட்டது.
கேரளம்கன்னடம்ஆந்திரம்தமிழ்ப் பிரதேசங்கள் அடங்கியது தென்னிந்தியாஇவைகள் சேர்ந்தே இன்றைய சென்னை மாகாணம்இந்தத் தென்னிந்தியாவில் வாழும் மக்கள் ஒரே கூட்டத்தவர்இந்த நான்கு சகோதரர்களும் பேசும் மொழிகள் ஒரே மூலத்திலிருந்து பிறந்தவைஇந்தத் தென்னிந்தியா இந்தியாவின் மத்திய அரசிலிருந்து விலகிநான்கு பிரதேசங்களுக்குள்ளும் சேர்ந்த கூட்டு அரசு ஏற்பட வேண்டும்எங்கள் தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் அதற்காகவே ஏற்படுத்தப்பட்டதுஅதற்காகவே பாடுபடப் போகிறது. (ஜஸ்டிஸ் 09.11.1917) என்று டி.எம்நாயர் குறிப்பிடுகிறார்.
திராவிடம் என்பது அதனுடைய மரபின் பொருளில் மிகத் தொடக்கக் காலத்தில் தமிழ்மொழி பேசுபவர்களுடன் மட்டும்தான் அடையாளப்படுத்தப்பட்டதுஏனெனில் நவீன இந்தியாவில் பேசப்படும் திராவிட மொழிகளில் மிகத் தொன்மையானது தமிழ்தான் என்று கருதப்பட்டதுதிராவிடர் என்ற தகுதிக்கு உரிமை பாராட்டிக் கொள்வதில் தெலுங்கர்களுக்கு அத்தகைய ஆர்வம் ஏதும் இருக்கவில்லைஏனெனில் தமிழைப் போலன்றி தெலுங்கு மொழி ஏராளமான சமஸ்கிருதச் சொற்களைக் கொண்டிருந்ததுஅக்காரணத்தால் தெலுங்கு பண்பாடு என்பது ஆரியச் செல்வாக்கு எனக் கூறப்படும் ஒன்றிற்குக் கட்டுப்படாத சுயேச்சையான பண்பாடு என்று உரிமை பாராட்டிக் கொள்வதற்கான வாய்ப்பைக் குறைத்ததுமற்றொரு காரணம் என்னவென்றால்வேளாளர்களுக்கும்தமிழ்ப் பார்ப்பனர்களுக்கும் இடையே இருந்த போட்டியுணர்வுபகையுணர்வு தெலுங்குப் பகுதியில் இல்லை.
இக்காரணங்களால்தான் தென்னிந்தியாவில் முதன்மையான திராவிட மொழிக் குழுக்கள் அனைத்தையும் சேர்ந்த பார்ப்பனர் அல்லாதாரில்பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு தமிழர்களிடம் மட்டுமே முழுமையாய் இருந்தது... என்கிறார் இர்ஷிக் (Irschik   - 275-276).
அயோத்திதாசர்  தமிழ்திராவிடம் இரண்டும் ஒன்றே என்கிறார்.
திராவிடம்திராவிடர்திராவிட நாகரிகம் என்பன தமிழர்களால் உருவாக்கிக் கொள்ளப்பட்ட மொழிபண்பாட்டுசமூக மரபினஅரசியல் குறிப்புச் சொற்களே என்பதும்இந்தி எதிர்ப்புப் போராட்டக் காலகட்டத்தில் முகிழ்த்த தமிழ்த் தேசிய அரசியலுக்கான குறிப்புச் சொல்லாக அமைந்தன என்பதும் அத்தமிழ்த் தேசிய அரசியலுமே ஏறத்தாழ 50 ஆண்டு காலப் பார்ப்பன எதிர்ப்பு இயக்கங்களின் அளவு ரீதியான வளர்ச்சி பண்பு ரீதியான பாய்ச்சலாக மாறியதன் வெளிப்பாடே என்பதும்தமிழர்களின் சுய அடையாளத்தையோதேசிய உணர்வையோ நசுக்குவதற்காகநீதிக்கட்சியிலிருந்த தெலுங்கர்களாலோ அல்லது சுயமரியாதை இயக்கத்திலிருந்த கன்னடர்களாலோ உருவாக்கப்பட்டவையல்ல என்பதும் தெளிவு.
நீதிக்கட்சியிலிருந்த தமிழர்களைப் போலவே பெரியாரும்திராவிடம் என்ற குறிப்புச் சொல்லை முதன்மையாகத் தமிழர்களையும்தமிழ்மொழிபண்பாடு ஆகியவற்றையும் மட்டுமே குறிக்கப் பயன்படுத்தினர்இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது முகிழ்த்தத் தமிழ்த் தேசியத்தைக் குறிக்கவும் பெரியார் பயன்படுத்தினார்பின்னர்அன்றைய அரசியல் மாற்றங்களைக் கருத்தில் கொண்டுதிராவிடம் என்பதைத் தமிழ்ப்பகுதி உள்ளிட்ட முழு சென்னை மாநிலத்தையும் குறிக்கப் பயன்படுத்தினார்அதற்காகதம் காலத்தில் நிலவிய மொழியியல்மரபின வரலாறுகளைப் பயன்படுத்திக் கொண்டார்... என்று மிகச் சரியாகக் கூர்மையாகக் கணித்துக் கருத்து தெரிவிக்கிறார் திருஎஸ்.விஇராஜதுரை அவர்கள்.
 - (பெரியார் சுயமரியாதை சமதர்மம்பக்கம் 713-714).
அது மட்டுமல்லகுணா போன்ற குறுக்குசால் பேர்வழிகள் குற்றம் சுமத்திகுறுக்குசால் ஓட்டுவதற்கு மாறாகஉருப்படியான காரியங்களைச் சொல்ல வேண்டும் என்றும் கூறுகிறார்.
குற்றச்சாட்டுகளைத் தொடுத்துக் கொண்டிருப்பதற்குப் பதிலாகஒரு தனி நாட்டுக் கோரிக்கைக்கான ஆதரவு ஏன் தமிழ் அல்லது தெலுங்கு முதலாளிகளிடமிருந்து வரவில்லைபார்ப்பனிய ஒழிப்பு இல்லாத தமிழ்த் தேசியம் யாருக்குப் பயன்படும்மக்கள் ஆதரவு என்பதை முன்நிபந்தனையாகக் கொண்டுதான் தனிநாடு அல்லது தன்னுரிமைக் கோரிக்கையை ஓர் இயக்கம் எழுப்ப வேண்டுமாஉலக சோசலிச (பொது உடைமைஇயக்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டபின்உலகெங்கும் தோன்றியுள்ள தேசியங்கள் அந்தந்த மக்களின் நலன்களை முன்னுக்கு எடுத்துச் சென்றுள்ளனவாஇந்தியாவில் பல பத்தாண்டுகளாய் நடைபெற்று வரும் தேசிய இனப் போராட்டங்கள் வெற்றி பெறாமைக்குக் காரணங்கள் என்னஉலக முதலாளியம் ஒன்றுபட்டுச் சுரண்டிக் கொண்டிருக்கும் இந்த நாட்களில் ஒடுக்கப்பட்ட தேசங்களும் மக்கள் வர்க்கங்களும் ஜாதிகளும் ஒன்றுபட்டுப் போராட ஒரு வழிமுறையைக் கண்டறிவது இன்றிமையாததல்லவாஇப்படிப்பட்ட வகையில் சிந்தித்துத் தீர்வு காண்பதே தமிழ்த் தேசியம் உருவாக துணை நிற்கும் என்கிறார் திருஎஸ்.வி.இராஜதுரை அவர்கள்.

இவர் ஆய்வாளர்உண்மையில் தமிழர்மீது பற்றுடன் எழுதுகிறார்உண்மையான திசையை நோக்கி வழிநடத்துகிறார்இதை மனதில் வைத்துக்கொண்டு குணாவின் குற்றச்சாட்டுகளைப் பாருங்கள்நான் சொன்னதுபோல அவர் ஓர் ஆரியக் கைக்கூலிபெரியாரைதிராவிட இயக்கத்தைக் கொச்சைப்படுத்தி ஆரியத்திடம் சபாஷ் வாங்கவே இந்நூலை எழுதியுள்ளார் என்பது எளிதில் விளங்கும்.

நூல் - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம் 
- ஆசிரியர் - மஞ்சை வசந்தன்