புதன், 20 மார்ச், 2019

நமது வரலாறு ஆரியர்களின் குடியேற்ற காலத்துக்கு நீண்ட காலம் முந்தைய காலத்தது

ஆகார் படேல்


சிந்து சமவெளி நாகரிகம் வேத கால நாகரிகம் அல்ல என்பதும், ரிக் வேத காலத்துக்கு நீண்ட காலம் முன்பே வந்தது அது என்பதும் உறுதியாகவும் இறுதியாகவும் மெய்ப் பிக்கப்பட்டுள்ளது.

"நம்மில் யார் ஆரியர்கள்?" என்ற ஆர்வமளிக்கும் புத்தகம் ஒன்றை இந்த வாரத்தில் நான் படித்தேன். நமது தோற்றத்தைப் பற்றி முடிவு செய்ய மரபணுவியல், மொழியியல் மற்றும் தொல்பொருள் ஆய்வு இயல் களங்களில் இருந்து கிடைத்த ஆதாரங்களை ஆய்வு செய்த வல்லுநர்களின் ஒரு கட்டுரைத் தொடர் அதில் வெளியிடப்பட்டிருந்தது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஹரப்பா, சிந்தியில் உள்ள மொஹஞ்சதாரோ மற்றும் இந்தியாவின் இதர பகுதிகளில் இந்த சிந்து சமவெளி நாகரிகம் நிலவியது என்பது 1920 ஆம் ஆண்டில் ஆங்கிலேய அரசு தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டு பிடிக்கப் பட்டது வரை  சிந்து சமவெளி நாகரிகம் என்ற ஒன்று இருந்தது என்பதை  இந்தியர்கள் அறிந் திருக்கவில்லை.

எனினும் அவற்றை முதலில் ஹரப்பாவில் கண்டு பிடித்து ஆய்வு செய்த ஆய்வாளர்களாலும் கூட, அவை என்ன என்பதை முழு மையாக அறிந்து கொள்ள முடிய வில்லை. ஆனாலும் அங்கு கிடைத்த முதல் தரம் வாய்ந்த செங்கற்களை ரயில்வே துறை கட்டுமானங்களில் ஆங்கிலேய அதிகாரிகள் பயன்படுத்திக் கொண்டனர். இத்தகைய அலட்சியத்தையும், ஆர்வம் அற்ற தன்மையையும் இன்றும் கூட நாம் காணலாம். முதன் முதலாக ஹரப்பாவுக்கு நான் சென்றிருந்தபோது  அனுமதி சீட்டும் வழங்கும் இடத்தில் இருந்த அலுவலர் அயல்நாட்டுப் பயணிகளுக்கான அனுமதிச் சீட்டு ஒன்றை எனக்கு வழங்கினார். இது உள்நாட்டு பயணி களுக்கான அனுமதிக் கட்டணத்தைப் போன்று  இரு மடங்கு கொண்டது. என்னை எவ்வாறு அயல்நாட்டுப் பயணி என்று முடிவு செய்தீர்கள் என்று அவரை நான் கேட்டபோது, இங்கு பாகிஸ்தானியர்கள் எவரும் வருவதில்லை என்று கூறினார். நான் இரண்டு முறை அங்கே சென்றிருந்த போதும், அதுவேதான் உண்மை யாகவும் இருந்தது. அழகு நிறைந்ததாக இருந்த அந்த இடம் பாலைவனம் போல் மக்கள் நடமாட்டம் அற்ற தாகக் காணப்பட்டது.

அதனை அடுத்து இருந்த ஒரு கிராமத்தில் பஞ்சாபியர்கள் இதுவரை பாரம்பரியமாக தலைமுறை, தலைமுறையாக மக்கள் தொகையைப் பெருக்கிக் கொண்டு, அந்த புராதன இடிபாடுகளைப் பற்றி சிறிதும் அக்கறையோ கவலையோ இன்றி,  வாழ்ந்து வருகின்றனர் .  1819 ஆம் ஆண்டில் ஒரு ஆங்கிலேய அதிகாரியால் கண்டு பிடிக்கப்பட்ட அஜந்தா மற்றும் எல்லோரா குகைக்கோயில் மற்றும் சித்திர அற்புதத்தை அடுத்து இருக்கும் கிராமத்தில் வசிக்கும்  மக்கள்  அதைப் பற்றிய வியப்போ ஆர்வமோ இன்றி  கடந்த 2000 ஆண்டு காலமாக வாழ்ந்து வருவதைப் போன்றதுதான் இதுவும்.  இந்த சிந்து சமவெளி நாகரிகம் எவ்வளவு ஆண்டு தொன்மை வாய்ந்தது என்று கண்டுபிடிக்கப் பட்டது,  முதல் இந்தியர்கள் எவ்வாறு தோன்றினார்கள் என்பது பற்றிய சிந்தனை முறையை மாற்றியமைத்து விட்டது. நமது நாகரிகத்தின் தொடக்க காலம் 3500 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ரிக்வேத காலத்தி லிருந்து தொடங்குகிறது என்றுதான் அதுவரை நாம் ஊகித்து வந்ததாகும். ஆனால், சிந்து சமவெளி நாகரிகம் வேதகால நாகரிகம் அல்ல என்பதும், ரிக் வேத காலத்துக்கு நீண்ட காலம் முன்பே வந்தது அது என்பதும் உறுதியாகவும் இறுதியாகவும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

ராகிகரி என்ற அரியானா மாநில கிராமம் ஒன்றிலிருந்து, 4500 ஆண்டுகளுக்கு முன்னர் ஓர் ஆண் வாழ்ந் திருந்ததாகக் கண்டெடுக்கப் பட்ட ஒரு மரபணுச் சான்று, (வடக்கு கிழக்கு அய்ரோப்பாவிலும், மத்திய தெற்கு ஆசியாவிலும் வாழ்ந்த மக்களுடையது என்று பொது வாக அறியப்பட்ட) ஆரியர்களின்   மரபணுவின் கூறு அல்ல என்பதைக் காட்டுகிறது. வெப்பமும், குளு மையும் மிகுதியாக நிலவும் நம் நாட்டில் மரபணுக்கள் பாதுகாக்கப்படுவதில்லை என்ற காரணத்தாலேயே, இதனைப் பற்றி தீர்மானிக்க இவ்வளவு காலம் பிடித்தது.

ஹரப்பா கலாச்சாரமும், சிந்து சமவெளி நாகரிகமும்,  சமஸ்கிருத மொழி தோன்றுவதற்கு ஆதாரமாக இருக்க வில்லை என்பதை ராகிகரி கண்டுபிடிப்புகள் காட்டு கின்றன. வேதகால மக்கள் தங்கள் கால்நடைகளுக்கான புல்வெளிகளைத் தேடி ஓரிடத்தில் தங்காமல் நகர்ந்து  சென்று கொண்டிருந்தவர்கள் ஆவர்.  (ஆர்யவர்த்தா என்ற சொல், ஒரு பெரிய கால்நடைக் கூட்டத்துடன் புலம் பெயரும் ஆரியர்களின் மாற்றம் என்ற பொருளைத் தருவதாகும்.) ஆனால், குஜராத் மாநிலத்தில் உள்ள லோத்தல், பாபர்காட் மற்றும் இன்று பாகிஸ்தானில் உள்ள ராகிகரி மற்றும் இதர இடங்களில் நிலவிய சிந்து சமவெளி நாகரிகமோ, திட்டமிடப்பட்ட முறையில் உருவாக்கப் பட்ட, கழிவு நீர் வடிகால் மற்றும் சுகாதாரமான வசதிகள் கொண்ட, நகரங்கள் மற்றும் நகர்ப் புறங்களைக் கொண்டதாகும்,

ஆரியர்கள் இந்தியா மீது படையெடுத்து வந்தவர்கள் என்ற கோட்பாடும் மதிப்பிழந்து போனது. ஆரியர்கள் என்று நாம் குறிப்பிடும், தங்களது கால்நடைகளுக்காகப் புல் வெளிகளைத் தேடித் திரிந்த மக்கள், மேற்காசியாவின் சிரியா நாடு வரையிலான இடங்களில் பரவி வாழ்ந் தவர்கள் ஆவர். இன்று நாம் செய்வது போல நாடுகளின் எல்லைகளை அவர்கள் அங்கீகரிக்கவில்லை. ஹரப்பா மற்றும் சிந்து சமவெளி நாகரிக மனிதர்களுடன் அவர்கள் திருமண உறவுகளை செய்து கொண்டதால், கலப்பின மக்கள் தோற்றம் பெற்றனர். அதனுடைய பெயர் குறிப் பிடுவது போல, சிந்து சமவெளி நாகரிகம் என்பது, முக்கியமாக சிந்து நதியின் கரையோர சமவெளி பகுதியில் நிலவியதேயாகும். வேதகாலத்தில் தங்கள் கால்நடைகளுக்கான புல்வெளிகளைத் தேடி மத்திய, மேற்கு ஆசிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு  வந்த ஆரியர்கள், கங்கை நதி சமவெளி மற்றும் பள்ளத் தாக்குகளில் தங்கி தங்கள் இனத்தைப் பெருக்கிக் கொண்டு வாழ்ந்தனர்.

சிந்து சமவெளி நாகரிகம் இன்னமும் நமக்கு வியப் பளிக்கும் ஒன்றாகவே இருக்கிறது. அவர்களது மொழி எது என்று இன்னமும் அடையாளம் காணப்படவில்லை என்பதே இதன் காரணம். அவர்களது நாகரிகத்தைப் புரிந்து கொள்வதற்கு அவர்களது கலைப்பொருள்கள் மட்டுமே நம்மிடம் உள்ளன. தட்ப வெப்ப மாற்றங்களும், நதிகளின் ஓடுபாதை மாற்றமும் அவர்களது நாகரிகம் முடிவு பெற்றதற்குக் காரணமாக இருந்திருக்கக் கூடுமே அன்றி,  நாட்டின் மீது படையெடுத்த அந்நியர்களின்  வன்முறைச் செயல்களால் முடிவுக்கு வந்ததாக இருக்க முடியாது.

இன்று நாம் அறிந்துள்ள, நடைமுறையில் பின்பற்றி வரும், ஜாதி நடைமுறை என்பது, வேத காலத்தில் தங்கள் கால்நடைகளுக்காகப் புல்வெளிகளைத் தேடி வந்த ஆரியர்களின் கண்டு பிடிப்பும், பாரம்பரியமுமே ஆகுமேயன்றி, சிந்து சமவெளி நாகரிக காலத்து மக்களால் தோற்றுவிக்கப் பட்டது அல்ல.  இந்துக்கள், முஸ்லிம்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள், இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் உள்ளிட்ட அனைத்து தெற்காசி யர்களும்,  ஹரப்பா மற்றும் சிந்து சமவெளி நாகரிக காலத்தின் போது, (RIA)  வருவதற்கு முன்னதாக), வாழ்ந்த ஒரு பொதுவான முன்னோர்களின் வழித் தோன் றல்களே என்பதை ராகிகரி மற்றும் இதர இடங்களில் கண்டெடுக்கப் பட்ட மரபணு பற்றிய ஆய்வுகள் காட்டு கின்றன. ஆப்பிரிக்க கண் டத்தில் இருந்து உலகின் பிறநாடுகளுக்கு முதன் முதலாக வந்த மனித இனத்தின் மரபணுக் குறி யீடுகள், நம்மில் பலரிடம், குறிப்பாக வட இந்தியர்களிடம் காணப்படுவது தெரிய வந்துள்ளது.

சிந்து நதி ஓரத்தில் வாழ்ந்த நமது முன்னோர்களின் கடவுள்களும், வெளி நாடுகளில் இருந்து வந்து அவர்களுடன் கலந்த ஆரியர்களின் கடவுள்களிலிருந்து மாறுபட்டு இருந்தவையே ஆகும்.  நாம் ஆரியர்கள் என்று அழைக்கும் வேதகால கால்நடை மேய்ப்பாளர் களும் கூட, இன்று  இந்தியாவில் புகழ் பெற்றிருக்கும் கட வுள்கள் அல்லாத இதர கடவுள்களை வணங்கி வந்தவர்களே ஆவர். பல இந்தியர்கள் இந் திரனையோ வருணனையோ வழிபடுவது இல்லை. இப்போது அவர்கள் வணங்கும் கடவுள்கள் புராணங் களில் கூறப் பட்டுள்ள ராமன், கிருஷ்ணன், கணேசன், லக்ஷ்மி போன்ற கடவுள்களே ஆகும்.

எந்தக் கடவுளும் மக்களின் நினைவில் நீண்ட காலத்துக்கு அழியாமல்  வாழ்வதில்லை என்று கூறும் அமெரிக்க பத்திரிகையாளர் எச்.எல்.மெங்கென் என் பவர், இன்று காணாமல் போய் இருக்கும் ரோமர், கிரேக்க, எகிப்திய கடவுள்களைப் பட்டியலிட்டுக் காட்டுகின்றார்.

இந்தியா ஒரு விசித்திரமான நாடாகும். நமது தோற்றம் மற்றும் பாரம்பரியம் பற்றிய மிகவும் முன்னேற்றமடைந்த அறிவியல் ஆய்வுகளை ஒரு பக்கத்தில் நாம் மேற் கொண்டிருக்கும் அதே நேரத்தில், மற்றொரு பக்கத்தில், நமது முதல் முன்னோர்கள் ஏதுமறியாமல் இருக்கும் ஒரு கடவுளுக்குக் கோயில் கட்டுவது பற்றி நம்முடன் நாமே சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம்.

நன்றி: 'தி டெக்கான் கிரானிகிள்' 10-03-2019

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

- விடுதலை நாளேடு, 16.3.19