ஞாயிறு, 16 அக்டோபர், 2016

.திராவிடர்-திராவிடத் திமிர்(முகநூல் பக்கம்)

................திராவிடர்................
இந்த துணைக் கண்டம் முழுவதும் பரவி வாழ்ந்தவர்கள் தமிழர்களான நாகர்கள் தான் என்பதை உரைக்கும் சொல் "திராவிடம்"
நாங்கள் தான் இந்த மண்ணின் பூர்வ குடிகள் என்பதை நிறுவும் சொல் "திராவிடம்"
இந்த துணைக் கண்டம் முழுவதும் பேசப்பட்ட மொழி தமிழ் தான் என்பதை பறைசாற்றும் சொல் "திராவிடம்"
அப்படி இருந்த தமிழ் மொழியை,,சமசுகிருதம் வந்து சிதைத்ததால் தான் மற்ற மொழிகள் உருவானது என்பதை உரக்கச் சொல்லும் சொல் "திராவிடம்"
இந்த துணைக் கண்டத்தின் வரலாறு என்பதே ஆரியர் vs திராவிடர் போர் தான் என்பதை கூறும் சொல் "திராவிடம்"
இந்த இத்தனை அடையாளங்களையும்,,பெருமைகளையும் "திராவிடம்" என்ற அரசியல் சித்தாந்தம் தான் தாங்கி நிற்கிறது என்பதை உணர்வோம்,,,
ஏன்?? இந்த அடையாளங்கள் எல்லாம் தமிழர் என்ற சொல்லை வைத்து நிறுவ முடியாதா என்ற கேள்வி எழலாம்??
பெருமைக்கு,,,ஆசைக்கு பயன்ப்படுத்தலாமே ஒழிய எதிரியை வீழ்த்த பயன்படுமா??
நம் எதிரியான ஆரியத்தை வீழ்த்த எது போர் கருவியோ ,அதை தானே நாம் எடுக்க வேண்டும்???
இங்கே தமிழ் இலக்கியங்களில் ஆரிய ஆதிக்கம் உட்புகுந்து பல நூறாண்டுகள் ஆகின்றன,,,ஆரிய பார்ப்பனிய சிந்தனையை பல வடிவங்களில் இங்கே புகுத்தி,,,அதுவும் தமிழின் ஒரு அங்கம் தான் என நிற்கிறது,,,
ஆரிய பார்ப்பானும் இங்கே தமிழ் பேசிக் கொண்டு,,,தானும் தமிழன் என நிற்கிறான்,,,
இந்த அத்தனை இடைச் சொருகள்களையும் "திராவிடம்" என்ற சொல் அப்புறப்படுத்தி,,,நம்மை மண்ணின் மைந்தர்களாக,,,பூர்வகுடிகளான நிலைநிறுத்தும்,,,
இதனால் தான் எந்த ஒரு பாப்பானும் தன்னை திராவிடன் எனச் சொல்லிக் கொள்ள மாட்டான்,,,ஆனால் தமிழன் என பல்லை காட்டிச் சொல்வான்,,,
காரணம் தமிழன் என்பது வெறும் வாய்வழியே வரும் மொழியை கொண்டு கண்டறியும் ஒரு விசயமாக மாறிப்போனது,,,
இந்த குலறுபடிகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தான் ஆரிய பார்ப்பனியம்,,,,
தற்போதைய தனது கைக்கூலியான சீமானை விட்டு "" பார்ப்பனர்கள் சுத்த தமிழர்கள்,,அவன் வீட்டிலும்,நாட்டிலும் ,வெளிநாட்டிலும் போய் தமிழ் தான் பேசறான்"" என கூவ விட்டு,,,தன்னை தமிழர்களோடு ஐக்கியப்படுத்திக் கொண்டு,,,,நம்மை அழிக்கத் துடிக்கறது,,,
அரப்பா,மொகஞ்சதாரோவில் முதல் நாகரீகம் படைத்த நம்மை இன்று தமிழ்நாடு என்ற குறுகிய நிலப்பரப்பில் அடைத்தது பத்தாது என முழுவதும் அழிக்கத் திட்டமோ என்னவோ??
இந்த பண்டை பெறுமைகளை,,,நம்மின் தனிச் சிறப்புகளை காக்கும் கவசமாக இங்கே "திராவிடர்" என்ற போர்ச்சொல் நிற்கிறது,,,
ஆனால் திராவிடம் என்ற சொல்லை அப்புறப்படுத்த துடிப்பவர்கள்,,,
தமிழர்கள் இந்தியாவின் ஒரு மாநிலத்தின் மக்கள் தான் என்ற முத்திரை குத்த விரும்புபவர்கள்,,,
இந்தியாவில் உள்ள மொழிகளை போல தமிழும் ஒரு மொழி எனக் கூற முயல்பவர்கள்,,,
தமிழ்நாட்டின் வரலாறே 1956 ஆம் ஆண்டில் இருந்து தான் எனக் கூறத் துடிப்பவர்கள்,,,
தமிழன் இங்கே உள்ள ஏனைய மொழி பேசும் மக்கள் போல ஒரு குழு என்ற கூற முயல்பவர்கள்,,,
ஆக மொத்தம்,,,ஆரிய பார்ப்பனியத்தோடு கைக்கோர்த்து,,,நம்மை காட்டிக் கொடுக்கும் இனத் துரோகிகள்,,,
ஆனால் இந்த துரோகத்தை நேரடியாகச் செய்யாமல்,,,தமிழ் மொழி ,இனப் பற்றாளர்கள் போல காண்பித்துக் கொண்டு,,,தமிழர்களின் வரலாற்றை தமிழ்நாட்டோடு புதைக்கத் துடிக்கும் கருங்காலிகள்,,,
Manoj kumar

திராவிடர் இயக்க வரலாற்று நடைபயணம்- எனது பார்வை


சென்னை. 28.08.2016 (காலை 6.00 மணி-9.00 மணி வரை). சென்னை வாரத்தையொட்டி, ‘பெரியார்’ என்ற பட்டம் கொடுக்கப்பட்ட ஒற்றைவாடை தியேட்டர் உள்ளிட்ட திராவிடர் இயக்கம் ஆளுமை செலுத்திய பல்வேறு வரலாறுப்பகுதிகளை நடந்து சென்று பார்த்தும், கேட்டும் தெரிந்து கொள்ளும் நடைபய ணம் மேற்கொள்ளப்பட்டது.

ஆறாவது முறையாக நடைபயணம்!


காலை 6.00மணி அளவில் சென்னை மாநகராட்சி கட்டிடம் வாயிலிலிருந்து கோ.வி.லெனின் பிரின்சு என்னாறசு பெரியார், வை.கலையரசன் ஆகியோர் வழிகாட்டுதலுடன் தொடங்கியது.


இது விக்டோரியா அரங்கம்
நீதிக்கட்சி கூடி முக்கிய தீர்மானங்களை  இந்த இடத்தில் எடுத்த்து. தொடக்ககால கூட்டங்கள் மாநாடுகள் படப்பிடிப்புகள் நடைபெற்ற இடம்.



சென்ட்ரல் இரயில் நிலையம் எதிரில் பார்ப்பனர் அல்லாதார் தங்குவதற்காக கட்டப்பட்ட கட்டிடம்.

சென்ட்ரல் இரயில் நிலையம் எதிரில் பார்ப்பனர் அல்லாதார் தங்குவதற்காக கட்டப்பட்ட கட்டிடத்திற்கு அருகில் இஸ்லாமியர்கள் தங்குவதற்காக கட்டப்பட்ட கட்டிடம்.

மெமோரியல் அரங்கம்(பூங்கா நகர் பகுதி)
இதில் தொடக்ககால தி.மு.க. இளைஞரணி மாநாடு நடைபெற்றது. இதன் வாழிலில் அண்மைக்காலம் வரை மறியல்கள்,ஆர்ப்பாட்டங்கள்,உண்ணா நிலை போராட்டங்கள் என பல நிகழ்வுகள் நடந்துள்ளன.




சென்ரல் தொடர் வண்டி முனையம் முனையம் பின்புறம் கூடி அடுத்து செல்லவேண்டிய பகுதி குறித்து பிரின்ஸ்விளக்கமளிக்கிறார்.

இந்த இடம்.....(ஆனைகவுனி-வால்டாக்ஸ் சாலை)
பஞ்சமருக்கு இங்கு இடமில்லை என்று எந்த இடத்தில் எழுதிவைக்கப் பட்டிருந்ததோ, தலைகீழ் புரட்சியாக அதே இடத்தில் வைத்துத்தான் ஈ.வெ. ராமசாமி என்று அறியப்பட்டவருக்கு, அவரால் உரிமை பெற்ற பெண் கள் ஒன்றுகூடி, ‘பெரியார்’ என்ற பட்டம் கொடுத்த வர லாற்றுச் சிறப்புமிக்க ஒற்றை வாடை தியேட்டர் எதிரில்...



இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று, சிறையில் அடைக்கப்பட்டு இறந்த நடராசன்-தாளமுத்து நினைவிடம் அமைந்துள்ள மூலகொத்தளம் இடுகாடு (.5.12.38ல் ஈகி நடராசன் கைதாகி சிறையில் 15.1.39திலும் தாளமுத்து 12.3.39திலும் இறந்தனர்)








வள்ளலார் நகர்-தங்க சாலை மணி கூண்டு
நீதி கட்சியில் முக்கியமானர் சிவராஜ் அவர்கள்






தங்க சாலை அரசு அச்சகம்
நாணயம் அச்சடிக்கப்பட்ட இடம்




எல்லீஸ் அவர்கள் திருவள்ளுவர் உருவம் பொறித்த தங்க நாணயம் வெளியிட்ட படத்தை திறன்பேசி மூலம் காட்டுகிறார் பிரின்ஸ்.


இந்த இடம்- சிவஞானம் பூங்கா
இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்ற சிவஞானம் பூங்கா! ராமசாமி முதலியார் சத்திரம் 




 இடம்...
இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்ற சிவஞானம் பூங்கா! ராமசாமி முதலியார் சத்திரம் எதிரில் தந்தை பெரியார் முன்னிலையில் திறந்துவைக்கப்பட்ட தூண். இன்று பாடசாலை..


இந்த இடம்...{சவுகார் பேட்டை)
இந்தி எதிர்ப்பு போராட்டம் இந்த ''இந்து தியாலஜிகல் பள்ளி'' வாயிலி்ல் தான் 5.12.38ல் நடைபெற்றது.( ஈகி நடராசன் கைதாகி சிறையில் 15.1.39ல் இறந்தார்)




























திராவிடர் இயக்க வரலாற்று நடைபயணம்


சென்னை. செப், 5-. சென்னை வாரத்தையொட்டி, ‘பெரியார்’ என்ற பட்டம் கொடுக்கப்பட்ட ஒற்றைவாடை தியேட்டர் உள்ளிட்ட திராவிடர் இயக்கம் ஆளுமை செலுத்திய பல்வேறு வரலாறுப்பகுதிகளை நடந்து சென்று பார்த்தும், கேட்டும் தெரிந்து கொள்ளும் நடைபய ணம் மேற்கொள்ளப்பட்டது.
ஆறாவது முறையாக நடைபயணம்! 
சென்னை மற்றும் தமிழ் நாடு முழுவதிலுமுள்ள திராவி டர் இயக்கத்தின் வரலாற்றுப் பூர்வமான இடங்களுக்கு பய ணம் மேற்கொள்வதை இலக் காகக் கொண்டு தொடக்கமாக, திராவிடர் இயக்க வரலாற்று ஆய்வு மய்யம் சென்னை தியா கராய நகர், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் இதுவரையி லும் அய்ந்து நடைபயணங் களை ஒருங்கிணைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக சென் னையின் 377 ஆவது பிறந்த (22.08.1639) நாளையொட்டி 28.08.2016 ஞாயிறன்று காலை வடசென்னை பகுதியில், 6 மணிக்கு ரிப்பன் பில்டிங்கில் தொடங்கி காலை 8 மணிக்கு தங்கசாலையில் நிறைவு செய் யப்பட்டது. ஆறாவது முறை யாக நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச் சியை ச. பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்கள் ஒருங்கி ணைப்பு செய்திருந்தார்.
தலைகீழ் புரட்சிக்கு சாட்சிகள்!
இதில், நீதிக்கட்சியின் நீதி மான்கள் பலரும் ஆட்சி செய்து பல சாதனைகளைப் புரிந்த தற்கு சாட்சியமாக இன்றும் கம்பீரமாக நிற்கும் ரிப்பன் பில்டிங்! அதற்கு அடுத்துள்ள தும் டி.எம். நாயரின் புகழ் பெற்ற உரைகள் உள்ளிட்ட பல்வேறு வரலாற்றுப்பின்னணி கொண்டதுமான விக்டோரியா பப்ளிக் ஹால்! சென்னை பெரியார் திடலில் இன்றும் செம்மாந்து நிற்கும் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றம் தோன் றக் காரணமாக இருந்த மெமோ ரியல் ஹால்! பஞ்சமருக்கு இங்கு இடமில்லை என்று எந்த இடத்தில் எழுதிவைக்கப் பட்டிருந்ததோ, தலைகீழ் புரட்சியாக அதே இடத்தில் வைத்துத்தான் ஈ.வெ. ராமசாமி என்று அறியப்பட்டவருக்கு, அவரால் உரிமை பெற்ற பெண் கள்  ஒன்றுகூடி, ‘பெரியார்’ என்ற பட்டம் கொடுத்த வர லாற்றுச் சிறப்புமிக்க ஒற்றை வாடை தியேட்டர்! கவர்னர் எல்லீஸ் காலத்தில் வெட்டிக் கொடுக்கப்பட்ட ஏழுகிணறு பகுதி, மொழிப்போர் மறவர் களான தாளமுத்து நடராசன் ஆகியோரின் நினைவிடமான மூலகொத்தளம்! மேனாள் மேய ரான தந்தை என். சிவராஜன் அவர்களின் சிலை! இன்று அரசு அச்சகமாகவும், அன்று அரசின் நாணயச்சாலையாகவும் இருந்த தங்கசாலை! இங்கு தான் எல்லீஸ் கவர்னரால் திரு வள்ளுவர் உருவப்படம் பொறித்த தங்கக்காசு அச்சடிக்கப்பட்டது. இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்ற சிவஞானம் பூங்கா! ராமசாமி முதலியார் சத்திரம்! வால்டாக்ஸ் சாலை! மற்றும் இந்து தியாலஜிகல் பள்ளி! ஆகிய இடங்களுக்கு மாக சுமார் 5 கிலோமீட்டருக்கும் மேலாக நடந்து சென்று திரா விடர் இயக்கத்தின் அரிய வர லாற்றை தோழர்கள் கண்டு கேட்டு அசைபோட்டனர்.
காலப்பயணம் சென்ற உணர்வு!
இதழாளர் கோவி. லெனின், ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வை. கலையரசன் ஆகி யோர் வரலாற்றுக் குறிப்புகளை வந்தவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். இந்த நடைபய ணத்தில், ஆவணப்பட இயக்குநர் அன்வர், திராவிட இயக்கப் பற்றாளர் சரவணகுமார், மருத்துவர் தேனருவி, தென் சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, வழக்கறிஞர் சென்னியப்பன், க. தமிழ் செல்வன், த. அண்ணாதுரை, அரும்பாக்கம் தாமோதரன், தமிழ்நிலா, பெரியார் திடல் ஆனந்த், தமிழ்ச்செல்வி, பழனி குமார் ஆகியோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

பயணம் முடிந்ததும் அனை வருக்கும் சிற்றுண்டி ஏற்பாடு செய்துதரப்பட்டது. திராவிடர் இயக்கத்தின் சாதனைகளைப் பற்றி புத்தகத்தில் படித்த உணர் வையும் தாண்டி, அந்தந்த இடங் களுக்கே அந்தந்த காலகட்டத் திற்கே சென்றது போல ஒரு -நெகிழ்ச்சியான உணர்வு தோழர்களுக்கு ஏற்பட்டதை ஒரு வருடன் மற்றொருவர் பகிர்ந்து கொண்டு விடை பெற்றனர்.
-விடுதலை நாளேடு,5.9.16