ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

குடியம்-புலிக்குன்று-காலப் பயணம்-1(பகுதி-2)அல்லிகுழி மலைத்தொடரின் புலிக்குன்றம் வனப்பகுதி

கடல்சார் வரலாற்று ஆய்வாளர் திரு.ஒரிஸா பாலு மற்றும் இந்திய 

நிலவியல் 

துறையின் ஓய்வுபெற்ற விஞ்ஞானி திரு.குமரகுருபரன்

கற்கால மனிதர்கள் வாழ்ந்த தடயங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் 
காலப் பயணம் (26, ஜூலை 2015)....
Geeta Ilangovan சொன்ன "காலப்பயணம்" என்ற பெயரே உற்சாகத்தைத் தர ஆர்வத்துடன் பெயர் பதிந்து காத்திருந்தோம்.பெரியார் திடலில் காலை 6.45 துவங்கிய பயணத்தில் இடையிடையே சேர்ந்த பயணிகளோடு நேமத்தை கடந்ததும் பயண வழிகாட்டியாக வந்திருந்த கடல்சார் வரலாற்று ஆய்வாளர் திரு.ஒரிஸா பாலு அவர்களின் அறிமுக உரையோடு எங்கள் பயணம் துவங்கியது.
சென்னை மாநகரில் கழிவுகளை ஏந்திச் செல்லும் கூவம் நதியையே பார்த்தவர்களுக்கு சாலையின் வலப்புறம் அமைந்த சுத்தமான கூவம் ஆற்றுப்படுகையை சுட்டிக்காட்டி, வெள்ளப்பெருக்கு காலங்களில் உபரிநீர் கொரட்டலை/கொஸஸ்தலை/குடத்தலையாறில் இருந்து கூவத்திற்கு திருப்பி விடப்படும் பண்டைய மக்களின் நீர்மேலாண்மையைப் பற்றிய சிறு அறிமுகத்தைக் கொடுத்து முடித்த போது பூண்டி நீர்த்தேக்கத்தை அடைந்தோம்.
பூண்டி நீர்த்தேக்கம் நிர்மாணம் செய்யப்பட்டதைக் குறித்த சிறிய உரையோடு காலை உணவை முடித்து குடியம் கிராமத்திற்கு புறப்பட்டோம்.இந்தப் பகுதி மக்கள் செயற்கை உரங்களை பயன்படுத்துவதில்லை என்றும் பண்டைய நெல்வகைகள், தானியங்களை இன்றளவும் பாரம்பரிய முறையில் பயிரிட்டு வருவதாகவும் தெரிவித்தார்.பழமையான சில தமிழ் சொற்கள் இன்றளவும் இந்தப் பகுதியில் பயன்பாட்டில் இருக்கிறதாம்.உதாரணத்திற்கு "இட்டிகா"; இன்று செங்கல் என நாம் அழைப்பதின் பழைய தமிழ் சொல்.
பூண்டியில் இருந்து ஊத்துக்கோட்டை சாலையில் சுமார் 15 கி.மீட்டர் தொலைவில் இருக்கிறது குடியம்.பேருந்து நின்ற இடத்தில் இருந்து சில அடிகள் தொலைவில் வட்ட வடிவிலான இரு குடில்கள் எங்களை வியப்பிலாழ்த்தின.பெரிய குடிலில் ஒரு குடும்பம் வசிப்பதையும் சிறிய குடில் வழிபாட்டு பயன்பாட்டில் இருப்பதையும் விசாரித்து தெரிந்துக்கொண்டோம். நேர்க்கோட்டுப்பாதையில் தாக்கும் காட்டு விலங்குகளை குழப்புவதற்காகவே வட்ட வடிவிலான குடிலை வடிவமைத்த முன்னோர்களின் திறமையை வியந்த வண்ணம் வனப்பகுதியில் நடக்கத் தயாரோனோம்.
குடியம் குகைகளைப் பற்றி ஆவணப்படம் எடுத்த திரு.ரமேஷ் மற்றும் இந்திய நிலவியல் துறையின் ஓய்வுபெற்ற விஞ்ஞானி திரு.குமரகுருபரன்(?) அவர்களின் முன்னுரையோடு அல்லிகுழி மலைத்தொடரின் புலிக்குன்றம் வனப்பகுதியின் அடர்ந்த புதர்களுக்கிடையேயான கூழாங்கற்பாதையில் நடக்க ஆரம்பித்தோம்.
ஏறக்குறைய இரண்டு கி.மீட்டர் தொலைவிற்கு நான்கடி அகலமுள்ள பாதை.அதன்பிறகான பாதை ஒருவரையொருவர் முந்திச் செல்ல முடியாத வகையிலான மனிதத் தடம் மட்டுமே.பிரமாண்ட மரங்கள் இல்லையெனினும் ஓங்கி உயர்ந்த அடர்ந்த புதர்களின் கிளைகள் உரச நடந்ததே வித்தியாசமான அனுபவம் தந்தது.Apocalypto திரைப்படத்தின் கதாநாயகன் தப்பி ஓடிவரும் காட்சி தான் ஞாபகத்திற்கு வந்தது.இடையிடையே புதர்களின் உள்ளே பிரின்ஸ் புகைப்படம் எடுத்த தருணங்கள் Mist glass போல ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தியது.எத்தனை விலங்குகள் எங்களை வேடிக்கை பார்த்தனவோ!.
பயணவழியில் கண்ட பலவிதமான மூலிகைகளை அறிமுகப்படுத்தி உற்சாகப்படுத்தியபடி வந்தார் திரு.ஒரிஸா பாலு.சுமார் ஆறு கி.மீட்டர் கடந்ததும் பெரிய கல் ஒன்றின் முன்னால் பொங்கலிடப்பட்ட தடயங்கள் குகையின் அருகாமையை உணர்த்தியது.இங்கிருந்து ஒரு கி.மீட்டர் தொலைவில் குகையின் நுழைவாயிலை எட்டியதும் ஆச்சர்யம்.சுமாராக 200 நபர்கள் தங்கக்கூடிய அளவில் மிகப் பிரமாண்டமாக அமைந்த குகையின் தோற்றத்தினையும் குடியம் குகைகளைப் பற்றி இதுவரை செய்யப்பட்டுள்ள ஆராய்ச்சிகளைப் பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது.
நிலவியல் படி அப்பர் கோண்ட்வானா காலக்கட்டத்தை சேர்ந்த இந்தப்பகுதியின் உருளை/கூழாங்கற்கள் அருகிலுள்ள நகரி மலைத்தொடரில் இருந்து ஆற்றினால் கொண்டுவரப்பட்டு இங்கே படிந்திருக்கிறதாம்.இந்த உருளை கற்களே கற்கால மனிதன் வேட்டையாட பயன்படுத்திய ஆயுதங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாம்.இயற்கையாக சிதைவுறும் கற்களுக்கும் மனிதனால் ஆயுதம் செய்ய செதுக்கிய கற்களுக்கும் இடையிலான வித்தியாசத்தை தொல்லியலாளர் Deepika Archy தெளிவாக விளக்கினார்.
கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கல் ஆயுதத்தை சென்னை பல்லாவரம் பகுதியில் கண்டெடுத்த இந்திய நிலவியல் துறையில் பணியாற்றிய ராபர்ட் புரூஸ் என்பவரே 1863 ல் குடியம் குகைகளை கண்டுபிடித்திருக்கிறார்.மதங்களேதுமற்ற மனிதர் என்ற அடையாளத்துடன் மட்டுமே வாழ்ந்த கற்கால மனிதர்களின் இருப்பிடத்தில் இன்றைய கிராம மக்கள் மணத்தாச்சம்மன் (மண் அரித்த அம்மன்) என்ற சிலையை நிறுவி வழிபாட்டுத் தலமாக மாற்றிவருகின்றனர்.
இங்கிருந்து திரும்பும் வழியில் உள்ள இரண்டாவது குகையையும் அதனருகில் உள்ள சுனையையும் கண்டு மகிழ்ந்து (களைப்பில்) திரும்பினோம்.
பேருந்தில் ஏறி அமர்ந்ததும் என் நினைவிற்கு வந்தது "திங்கட் கிழமைகள் செவ்வாய்க்கிழமைகளுடன் பின்னப்பட்டிருக்கின்றன.வாரமோ முழு வருடத்துடன்.உங்களுடைய சோர்ந்துபோன கத்தரிக்கோலால் காலத்தை வெட்ட முடியாது" என்ற பாப்லோ நெரூதாவின் வரிகள்.காலத்தை நம்மால் வெட்ட முடியாது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.ஆனால் காலத்தை மகிழ்ச்சியாக கடக்க முடியுமென்பதை இந்த ஒருநாள் பயணம் உணர்த்தியது.
காலப்பயணத்தை ஏற்பாடு செய்த பெரியார் திடல் "வரலாற்று ஆய்வு மையம்", பயணம் அறிவித்ததில் இருந்து இறுதிவரை தகவல்களை உரிய நேரத்தில் அளித்த திரு.உடுமலை வடிவேல், குறை சொல்ல முடியாத அளவிற்கு சிறப்பாக ஏற்பாடுகள் செய்த பிரின்ஸ், பயணம் முழுவதும் உற்சாகம் அளித்த நட்புகள் Geeta Ilangovan தம்பதிகள், மருத்துவர் கனகமணி தம்பதிகள், Meena SomuParimala Rama உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகள்!.
-தயா மலர் அவர்களின் கட்டுரை 
      குடியம் சிற்றூர் வனப் பகுதிக்குள் நுழையும் வழி(பாதுகாக்கப் பட்ட பகுதி)                                                                            (மு.ப.10.30 மணி)
                                வனக் காவலரும் பயணக்குழு ஒருங்கிணைப்பாளர்
                                                             பிரின்சு என்னாரசு பெரியார்
                         குடியம் சிற்றூர் (பழைய முறை வட்டவடிவ குடிசை) குடியம் சிற்றூர் அருகில் குடியம் குகைகளைப் பற்றி ஆவணப்படம் 

எடுத்த திரு.ரமேஷ் மற்றும் இந்திய நிலவியல் துறையின் ஓய்வுபெற்ற 

விஞ்ஞானி திரு.குமரகுருபரன் அவர்களும் குடியம் குகை பற்றியும்

 வரலாற்றுக்கு முந்திய மனிதர்கள் பற்றியும் விளக்கிக் கூறினார்.(மு.ப.11.00 மணி)
காட்டுப் பகுதி தொடங்கும் இடத்தில் 'சிறுகுறிஞ்சான்' மூலிகை
காட்டுப் பகுதி தொடங்கும் இடத்தில் 'சித்திர மூலம்' மூலிகை
காப்புக் காடு ஆனதால் தடுப்பு போடப்பட்டுள்ளது. தடுப்பிற்குள் நுழைந்து பயணிக்கும் குழுவினர்.

காட்டுப் பாதை தொடங்குகிறது.( 7கிலோ மீட்டர்)
                 பயணக் குழு கரடு முரடான பாதையில் நடந்தே முன்னேறியது.
வழியில் முந்திரிக் காடு தென்பட்டது.


            எங்கும் வழியில் ''விராலி'' மூலிகை செடி பரந்து வளர்ந்து கிடந்தது.
''திருகுக் கள்ளி'' மூலிகை
நடுப் பகுதியில் வளர்ந்துக்கிடக்கும் ''நரந்தம் புல்''(எலுமிச்சம் புல்-லெமன் கிராஸ்) மூலிகை
இரண்டாம் குகைப் பகுதி
         கூழாங் கற்களுடன் செம்மண் நிறத்தில் சிமென்ட்டு கலந்து கொட்டியது                                                        போன்ற தரைப்பகுதி தென்பட்டது.
        புதுவை மு.ந.நடராசன் அவர்களுடன் தென் சென்னை செ.ர.பார்த்தசாரதி

அரும்பாக்கம் சா.தாமோதரன்.
காடுகளில் அடர்த்தியாக வளர்திருக்கும் ''கொழுஞ்சி'' மூலிகை
இங்கிருந்து அடர்த்தியான காட்டில் ஒற்றையடி பாதையில் நண் பகல் 12.00 மணிக்கு மலையேறினோம்.
குகையை சுற்றியுள்ள புலிக்குன்றம் மலைகள்
                         குகையின் வாயிலில் உள்ள ''வெப்பாலை'' மூலிகை
      குன்றுகளில் எங்கு பார்த்தாலும் பெரிய வகை தேனீக்களின் மலைத்தேன்            கூடுகள் தொங்கிக்கொண்டிருந்தன.(கூச்சல் போட்டால் பறந்து வந்து                            தேனீக்கள் கொட்டும். குகையினுள் குளவிகளும் உள்ளன.
                                        குடியம் குகையினுள் நுழைகிறோம்....
      வராற்றுக்கு முந்திய கற்கால மனிதர்கள் வாழ்ந்த குடியம் குகையினுள்...
ஒரிசா பாலு அவர்கள் குகை பற்றி விளக்கிக்கூறுகிறார்   
இரண்டாவது குகை நோக்கி குழுவினரை அழைத்துச் செல்கிறார்.

                வேறு மலையில் இருக்கும் இரண்டாவது குகை நோக்கி குழுவினர்                                                                           மலையேறுகின்றனர்.
இரண்டாவது குகையினுள்..(200 பேர் தங்கும் படியான அரங்கம் போல் உள்ளது) பி.ப.2.00 மணி
குகைக்கு மேல் மலை உச்சியில்..
                            இரண்டாம் குகையின் மலை உச்சியிலிருந்து தெரியும்
                                                         முதல் குகை மலைப் பகுதி
                                           மலை உச்சியில் இருக்கும் சுனை நீர்.....

             பயணத்தை முடிக்க திரும்பி வரும் ஒருங்கிணைப்பாளர் உடுமலை                                            வடிவேலுவும் தென் சென்னை சா.தாமோதரனும்..

            பயணத்தை முடித்துக் கொண்டு திரும்புதல்....(தென் சென்னை மாவட்ட                                     திராவிடர் கழகச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி)பி.ப.3.00ணி
                                  மீண்டும் அடுத்த பயணத்தில் சந்திப்போம்! நன்றி!