சனி, 17 அக்டோபர், 2015

ஹிந்துஸ்தானும் சமஸ்கிருதமும்


பொறியாளர்
ப. கோவிந்தராசன்
BE, MBA,MA(History)MA(Linguistics)
ஹிந்துஸ்தான் எங்கே உள்ளது ?
வடஇந்தியாவில் உள்ள சிந்து சம வெளியும் கங்கைச் சமவெளியும் அடங்கிய நிலப்பரப்புக்கு இநதுஸ்தான்  அல்லது ஆரிய வர்த்தம் என்று பெயர். விந்திய மலைக்கு தெற்கே திராவிடர்கள் வாழ்ந்த பகுதி (குஜராத் உள்பட) திராவிடஸ்தான் அல்லது திராவிடம் என்று அழைக்கப்பட்டது.
ஹிந்துஸ் தானில் இருந்த சிந்து சமவெளியின் பெரும்பகுதி தற்போது பாகிஸ்தானில் உள்ளது ஒரு பகுதி ஆப்கானிஸ்தானில் உள்ளது. கங்கைச் சமவெளியின் கிழக்குப்பகுதி தற்போது பங்களா தேஷில் உள்ளது. எனவே ஹிந்துஸ் தான் தற்போது மிகவும் சுருங்கி விட்டது.
ஹிந்துஸ்தான் என்ற பெயர் துரக்மேனிஸ்தான் கஜகிஸ்தான போன்று அந்நியரால் பாரசீகர்களால் வைக்கப்பட்ட பெயர் அதை ஜம்புத் தீபத்தில் (நாவலந்தீவு) உள்ளவர்கள் பயன்படுத்துவது மதப்பற்று அல்ல ஏனென்றால். ஹிந்துஸ்தான் மதம் சார்ந்த பெயர் அல்ல. மேலும் ஹிந் துஸ்தான் என்ற பெயர் நமது தேசிய கீதத்தில் இல்லை. ஆனால் திராவிடம் என்ற பெயர் தேசிய கீதத்தில் உள்ளது.
இந்துஸ்தானும் சமஸ்கிருதமும்
பாஜக மத்திய அரசில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் ஹிந்துஸ்தான் என்ற பெயர் இந்தியாவிற்குப் பதிலாக பாஜக தலைவர்களால் பேசப்படு கின்றது. கங்கைச் சமவெளியில் ஆரியர் கள் குடியேறிய பின் யாகங்கள் நடந்தன. யாகங்களில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டன. விவ சாயம் பாதிக்கப்பட்டது. அந்த விவ சாயிகள் ஆரியர்களை எதிர்த்தனர்.
இதனால் விவசாயிகள் சூத்திரர்கள் என்று ஆரியர்களால் அழைக்கப்பட்டு இழிவுபடுத்தப்பட்டனர். இதன் விளைவாக புத்த சமண மதங்கள் தோன்றின. இநத மதங்களால் ஆரியர் களின் வேதமதம் ஹிந்துஸ்தானில் வழக்கு ஒழிந்தது
பின்னர் கிரேக்க வீரர் அலெக் சாண்டரின் ஆட்சி ஹிந்துஸ்தானில்  கிமு-326-ல் ஏற்பட்டது. அப்போது இலக் கண அறிஞர் பாணினி இஸ்லாமாபாத் அருகே அட்டாக் மாவட்டத்தில கிமு300-ல் பிறந்தார் அவர் தன் கிராமத்தில் உயர் வகுப்பினரால் (எலைட்) பேசப்பட்ட மொழிக்கு இலக்கணம் அமைத்தார். அப்போது சமஸ்கிருத மொழி தோன்றவில்லை.
மௌரியர்கள் புத்த மதத்தையும் பாலி மொழியையும் ஆதரித்தனர். ஆனால் சமஸ்கிருதத்தை ஆதரிக்கவில்லை. கிமு 200ல் பதஞ்சலி என்ற அறிஞர் பாணினி உரை (மஹா பாஷ்யம்) எழுதினார். இதற்குப்பின் தான் சமஸ்கிருதம் செய்யப்பட்டிருக்கவேண்டும்.
கிபி 150-ல் திராவிடஸ்தானில் சௌராஷ்டிரா பகுதியில் (குஜராத்தில்)  ஜூனாகட் ராஜ்ஜியத்தில சமஸ்கிருத கல்வெட்டு முதன் முதலாக ஆராயச்சி யாளர்களுக்கு கிடைத்தது. இது ருத்ரா தாமன் என்ற மன்னன் காலத்தில்தான் நடந்தது. இது ஹிந்துஸ்தானில் சமஸ் கிருதம் போதிய வளரச்சியைப் பெற வில்லை என்பதினைக் குறிக்கின்றது.
வேதமொழியும் சமஸ்கிருதமும்
வேத மொழி பாரசீக மொழியான அவெஸ்தன் மொழியுடன் கலந்து உருவான மொழி. இந்த மொழியில் ரிக் வேதம் எழுதப்பட்டது. ரிக்வேதத்தின ஒரு பகுதி இந்தியாவிற்கு வெளியே எழுதபட்டது என  கம்யூனிஸ்ட் தலைவர் இ எம் எஸ் நம்புதிரிபாட் தன் நூலில் (இந்திய வரலாறு- பக்கம்-28இ-ல்) கூறுகிறார்.
இந்துத்வா கொள்கைகளைப் பரப்பிய தலைவரான பால கங்காதர திலகர் ரிக் வேதத்தை ஆய்வு செய்தார். அதற்காக திலகர் அவெஸ்தன் மொழி கற்றார். தன் ஆய்வின் முடிவில் ஒரு நூல் (-தி ஆர்க்டிக் ஹோம் .இன் த வேதாஸ்--) எழுதினார். அதில் ஆரியர்கள்  ஆர்க்டிக் துருவப் பிரதேசத்திலிருந்து இந்தியாவிற்கு வந்தவர்கள் எனத் தெரிவித்தார்.
இத்தகைய வேத மொழியை சந்தஸி என்று பாணினி குறிப்பிட்டுள்ளார். புத்த மதம் பாலி மொழியை ஆதரித் தது. சமண மதம் அரத்த மாகதியை ஆதரித்தது. இவ்விரு மதங்களும் வேதமதச் சடங்குகளை எதிர்த்ததால் வேதமதம் அழிந்தது.
பின்னர் குப்தர்கள் காலத்தில் வைணவ மதம் செல்வாக்குப் பெற்றது. அப்போது செயற்கையாக உருவாக்கப்பட்ட சமஸ்கிருதம் வளர்ந்தது. அப்போது இராமாயணம் மகாபாரதம் மற்றும் புராணங்கள் உருவாகின. இந்த நூல்கள் வைணவ மதத்தை வளர்க்க பெரிதும் உதவின.
பாணினியும் சமஸ்கிருதமும்
பாணினி எழுதிய இலக்கண நூலைப் பின்பற்றி பாணினி காலத் திற்குப் பின் சமஸ்கிருதம் செயற்கை யாக உருவாக்கப்பட்டது. சமஸ்கிருதம் என்றால் பல மொழிகள் சேர்ந்து உருவாக்கப்பட்டது என்று சமஸ்கிருத நூல்கள் பொருள் தருகின்றன.
பாணினி காலத்துக்குப் பின் சமஸ் கிருதம் செயற்கையாக உருவாக்கப் பட்டது.
சாகித்ய அகாடெமி வெளியீடு சமஸ்கிருதம்பற்றி கூறுவதென்ன?
டாக்டர் சரோஜ் பாட்டே என்ற அம்மையார் புனே பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருதத்துறைப் பேராசியர். இவர் பாணினி இலக்கணத்தைப்பற்றி ஒரு நூல் எழுதியுள்ளார். அதை சாஹித்ய அகாடெமி வெளியிட்டுள்ளது.   அந்த நூலில் தெரிவிக்கப் பட்டுள்ள கருத்துக்கள் கீழே கூறப்பட்டுள்ளன.
1. பாணினி தான் இலக்கணம் அமைத்த மொழியின் பெயரை சமஸ்கிருதம் என்று குறிப்பிடவே இல்லை. பாஷா என்று தான் குறிப்பிடுகிறார். (ஏனென்றால் பாணினி காலத்தில் சமஸ்கிருதம் என்ற மொழி இல்லவே இல்லை. கிமு 100-க்குப் பின்தான் பல மொழிகளைச் சேர்த்து கலவை மொழியாக செயற்கையாக உரு வாக்கப்பட்டது).
2. பாணினி தன்னுடைய நூலுக்கு அஷ் டத்யாயி என்று பெயரிடவில்லை. பாணினி தனது நூலை எட்டு  அத்தியாயங்களாகப் பிரிக்கவில்லை. பிற்காலத்தில் உரையாசிரியர்கள் பிரித்திருக்கலாம் (பக்கம் 12).
3. பாணினி தனது மாடல் இலக்கண நூலில் மொத்தம் 3995 சூத்திரங் களை எழுதியுள்ளார். அதில் 300 சூத்திரங்கள் மட்டும் வேத மொழி யுடன் (சந்தஸி) தொடர்பு உடையது.
4.    உயர் வகுப்பு பேச்சு மொழியாக விளங்கிய மொழிக்குத்தான் பாணினி இலக்கணம் அமைத்தார் என்று கூறப்படுவதால் பாணினி பேச்சு வழக்கற்ற சமஸ்கிருதத்திற்கு இலக் கணம் அமைக்க வில்லை என அறியலாம்.
5.    மெட்டாலாங்வேஜ் (சமஸ்கிருதம் அல்லாத) மொழியில் இலக்கணம் அமைத்தார். இந்த மொழி கருவி மொழி என்று அழைக்கப்படுகிறது. இந்த மெட்டா லாங்வேஜ் சமஸ் கிருதத்தைச் சேராத சொற்களையும் வாக்கிய அமைப்பையும் கொண்டது என கூறுகிறார் (பக்கம் 26).
6.    பாணினி தன் நூலை மிகவும் சுருக்க மாக அமைத்துள்ளதால் எழுத்து வடிவில் எழுதப் படவில்லை எனக் கருதப்படுகின்றது.
7.    பாணினி இலக்கணத்தை அடிப் படையாக கொண்டவை கன்னட, தெலுகு, மராத்தி, மலையாளம் மொழிகளின் இலக்கண நூல்கள் ஆகும். ஆனால் தமிழ் மொழியின் இலக்கணம் தொல்காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டது. தொல்காப்பியம் பாணினி காலத் திற்கு முந்தியது.
8.    பாணினி இலக்கணத்தைப் பயன் படுத்தி உருவாக்கப்பட்ட சமஸ் கிருதத்தில் இலக்கியம் இதிகாசம் மற்றும் புராணங்கள் உருவாக்கப் பட்டன.
9.    பாணினி இலக்கணத்தை சமஸ் கிருதம் பயன்படுத்தியதால் பேச்சு வழக்கற்ற மொழி ஆனது என சமஸ்கிருத மொழி அறிஞர்கள் சிலர் கருதுகிறார்கள்.
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியீடு சமஸ்கிருதம் பற்றிக் கூறுவதென்ன?
இந்த நிறுவனம் பாணினி எழுதிய அஷ்டாத்தியாயி என்ற இலக்கண நூலை தமிழாக்கத்தில் வெளியிட்டுள் ளது. இதன் ஆசிரியர் முனைவர் கு. மீனாட்சி ஆவார். அவர் இந்த  நூலில் பாணினி எந்த மொழிக்கு இலக்கணம் அமைத்தார் என்பதினை கீழ்க்கண்ட வாறு கூறுகிறார்.
வேத மொழிக் கூறுகளை  சமஸ் கிருதம் என்ற பெயரால் கூறாமல் சந்தஸி என்ற பெயரால் பாணினி கூறு கிறார். இதனால் வேதம் இயற்றப்பட்ட வேத மொழியை சந்தஸி என்று பாணினி அழைக்கிறார் எனக் கூறலாம்
உதாரணம் ------
1.1. சந்தஸி  பரே அபி (அத்தியாயம்--- 1இல் சூத்திரம்- -4.81) முதல் பாகத்தில்.
1.2. கிதேஸ் சந்தஸி----அத்தியாயம் 6இல் சூத்திரம்-- 1.52 (மூன்றாம் பாகம்).
1.3. யத்திது பரம் சந்தஸி---அத்தியாயம்- 8இல்- சூத்திரம் 156 (மூன்றாம் பாகம்).
1.4-. ---சந்தஸிடஞ்---- அத்தியாயம் 4-இல் சூத்திரம் 1.இல் 19. (இரண்டாம் பாகம்)
1. இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் மேல் வகுப்பினரால் (எலைட்) பேசப்பட்ட ஒரு மொழிக்கு பாணினி இலக்கணம் வகுத்தார் என்று நம்பப்படுகின்றது. எனவே சமஸ் கிருதத்திற்கு இலக்கணம் பாணினியால் அமைக்கப்படவில்லை
2. பாணினி தான் இலக்கணம் அமைத்த மொழி சமஸ்கிருதம் தான் என்று தனது நூலில் எந்த இடத்திலும் கூறவில்லை. (ஆனால் அவ்வாறு முதன் முதலாக இராமாயணத்தில்தான் கூறப்பட்டுள்ளது.)
3. பாணினி தான் இலக்கணம் அமைத்த மொழியை பாஷா என்றே குறிப்பிடுகின்றார்.
4. பாணினி தனது இலக்கணத்தை விளக்க சமஸ்கிருதத்திலிருந்து வேறு பட்ட மொழியை மாதிரியாகக் கொண்டு விளக்கினார். இந்த மொழி கருவி மொழி அல்லது மெட்டாலாங்வேஜ் என்று அழைக்கப்படுகின்றது
5. மேலும் பாணினியின் இலக் கணத்தைப் புரிந்து கொள்ள கீழ்க்கண்ட நூல்களையும் படிக்க வேண்டும்
1) கார்த்தியாயனரின் வார்த்திகம் 2) பதஞ்சலியின் மஹாபாஷ்யம் 3) வாமனரின் ஜயாதித்தரின் காஸிகா மற்றும் 4) பாணினி காலத்துக்கு முற்பட்ட பத்துக்கு மேற்பட்ட பழைய இலக்கண நூல்கள். 5) துணை நூல்கள் -ஏழு (சிவ சூத்திரம், தாது பாடம், கண பாடம், உணாதிசூத்திரம், சூத்திரம் லிங்கானுஸாஸனம் மற்றும் சிசஷா).
இதிலிருந்து பாணினி இலக்கணம் எவ்வளவு கடினமானது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.  மேலும் ஒரு மொழி பேச்சு வழக்கில் இருந்தால்தான் இலக்கணம் எளிதாக அமையும்.
முடிவுரை
1. ஹிந்துஸ்தான் என்பது இமய மலைக்கும் மற்றும் விந்திய மலைக்கும் இடைப்பட்ட சமவெளி பகுதி ஆகும். எனவே ஹிந்துஸ்தானத்தின் பொருளா தார வளர்ச்சியை ஒட்டு மொத்த இந்தி யாவின் வளர்ச்சியாகக் கருதமுடியாது
2. ரிக் வேதம் சந்தஸி என்ற மொழி யில் உருவாக்கப்பட்டது.
3. பாணினி இலக்கணம் அமைத்தது வேத மொழிக்கு இல்லை
4. பாணினி (கிமு. 300) எழுதிய இல்க்கண நூலுக்குப் பின்தான் சமஸ்கிருதம் உருவாக்கப்பட்டது.
5. புத்த மதம் இந்தியாவில் தோன்றி உலகமெலாம் பரவிய பின் தோன்றிய மொழி சமஸ்கிருதம் ஆகும். இத்தகைய சமஸ்கிருத மொழி உலக மொழிகளின் தாயாக விளங்கக்கூடிய வாய்ப்பு சிறிதும் இல்லை.
-விடுதலை,28.2.15
.

வெள்ளி, 2 அக்டோபர், 2015

திராவிடர்களின் குடியம் குகைகளுக்கு ஒருநாள் சுற்றுப்பயணம்!

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் ஒருங்கிணைப்பில்
உலகின் மூத்த மனிதனான திராவிடர்களின் குடியம் குகைகளுக்கு ஒருநாள் சுற்றுப்பயணம்!

திருவள்ளூர், செப். 13- இன்று தமிழ்நாடு என்றழைக்கப்படும் இந்த நிலத்தின் தொன்மையை உணர்த்தும் விதமாகவும், வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த கற்கால மனிதர்களின் வாழிடங்களைத்தேடி சென்னையிலிருந்து ஒருநாள் சுற்றுப்பயணம் நடைபெற்றது.
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் சார்பில், திராவிடப் பண்பாட்டு, வரலாற்று இடங்களுக்கு செல்லும் வகையில் ஏற்கெனவே தியாகராய நகர் மற்றும் திருவல்லிக்கேணி பகுதிகளில் திராவிடர் இயக்க வரலாற்றோடு தொடர்புடைய இடங்களை மீள் பார்வை செய்யும் விதமாக சில நடைப்பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக இந்நிலத்தின் தொன்மையை விளக்கும் விதமாக ஆதி மனிதர்கள் வாழ்ந்த இடங்களுக்கு சென்றுவரத் திட்டமிடப்பட்டு ஜூலை மாதம் 26ஆம் தேதி காலப்பயணத்தின் முதல் பயணம் நடைபெற்றது.
பல்துறை அறிஞர்களுடன் பயணம்
திட்டமிட்டபடி ஜூலை 26 ஆம் தேதி, ஞாயிறன்று காலை 6:45 மணியளவில் தனி பேருந்தில், சென்னை பெரியார் திடலிலிருந்து திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள (சென்னையிலிருந்து  90 கி.மீ தொலைவில்) தொல்குடி மக்கள் வாழ்ந்த குடியம் பகுதியை நோக்கி பல கேள்வி களுடனும், அந்தக் கேள்களுக்கு பதிலை தேடும் பயணமா கவும் புறப்பட்டது. இந்தப் பயணத்தில் மூன்று மருத் துவர்கள், பல கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், அரசு அலுவலர்கள், பகுத்தறிவாளர்கள், தொல்லியல் துறை ஆய்வாளர்கள், கடலியல் ஆய்வாளர் என பல்துறைகளைச் சேர்ந்த மொத்தம் 36 பேர் கலந்து கொண்டனர். இந்த பயணத்திற்கு வழிகாட்டவும், குடியம் குகைகள் குறித்த விளக்கம் அளிப்பதற்கும் ஏற்கனவே பல முறை இக்குகைகளுக்கு வருகை தந்திருந்த கடலியல் ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்கள் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்திருந்தார். பயணத்திட்டத்தில் பூண்டி நீர்த் தேக்கம், பூண்டி தொல்பொருள் அருங்காட்சியகம், குடியம் குகைகள், கோனே அருவி (ஆந்திர மாநிலம்) ஆகிய இடங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த அரிய பயணத்தில் 15 வயதிலிருந்து 84 வயது வரையுள்ளவர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் காலப்பயணம் என்ற பெயர் பொறித்த தொப்பி வழங்கப்பட்டது.
வரலாறும் - பொழுதுபோக்கும்
வரலாற்றையும் பொழுதுபோக்கையும் ஒன்றாக ஒருங்கிணைத்திருந்த இந்தப்பயணம் இதில் கலந்து கொண்டவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், மிக அரிய கருத்துகளை தெரிந்துகொள்ள வாய்ப்புள்ளதாகவும் அமைந்தது. கூவம் நதி மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தமிழ்நாட்டில் தொடங்கும் இடம், பூண்டி நீர்த் தேக்கத்தில் திராவிட இயக்கத்தின் பங்கு, 12 லட்சம் ஆண்டு களுக்கு முன்பு கற்கால நாகரிக மக்கள் வாழ்ந்ததாக கண்டு பிடிக்கப்பட்டுள்ள குடியம் குகைகள் என்று மலையேற்றத் துடன் கூடிய வியக்கவைக்கும் பின்நோக்கிய காலப் பயணம். அதைத் தொடர்ந்து கோனே அருவியில் குளியல் என்று வரலாற்று அறிவுக்கும், மகிழ்ச்சிக்கும் ஏற்ற வகை யில் என்றென்றும் மறக்கமுடியாத பயணமாக அமைந்து விட்டது.
கூம்பு வடிவக் குடிசை
குடியம் கிராமத்திலிருந்து குகைக்கு செல்லும் 7 கிலோ மீட்டர் மலையேற்றப் பயணத்திற்கு தயாரானோம். அந்த கிராமத்தில் இருந்த கூம்பு வடிவக் குடிசைகள் ஆச்சர்யம் தந்தன, அவை பழங்காலத்தில் மனிதன் வசித்த குடியிருப் பின் வடிவம் என்றும், இன்று அவை வீடாக இல்லாமல் அவர்களது களஞ்சியமாக உபயோகத்தில் இருந்ததையும் காணமுடிந்தது. அதை கடந்து மலைப்பாதைக்கு வந்தோம்... கூழாங்கற்கள் குவிந்த அந்த மலைப்பாதை வித்தியாசமாக இருந்தது. தொல்பொருள் ஆய்வாளர் தீபிகா, இவை கூழாங்கற்கள் மட்டுமல்ல கற்கால மனிதனின் கல் ஆயுத கிடங்காக அவ்விடம் இருந்துள்ளது என, ஒரு கல்லை எடுத்து இது ஆதிமனிதன் ஆயுதமாக செதுக்கியது, இயற்கையில் உடைந்த கல்லுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு எனக் காட்டினார். அதைத் தொடர்ந்து ஆர்வம் தாங்காமல் மற்றவர்களும் ஆதி மனிதனின் ஆயுதத்தை கண்டறியும் ஆர்வத்துடன் அங்கு பரவியிருந்த கற்களின் குவியலில் தேடத் தொடங்கிவிட்டனர்.
குடியம் குகைகள் - ஆவணப்படம்
முன்னதாக இந்த பயணம் குறித்த ஒரு புரிதலை உண்டாக்குவதற்காக பயண நாளுக்கு முதல் நாளான ஜூலை 25 ஆம் தேதி சனிக்கிழமையன்று பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில், குடியம் குகைகள் பற்றிய ஒரு ஆவணப்படம் பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை சார்பில் திரையிடப்பட்டது. இந்த நிகழ்வில் இந்த ஆவணப்படத்தின் இயக்குநர் ரமேஷ் யந்த்ரா கலந்து கொண்டு இன்னும் கூடுதல் தகவல்களை கூறி சிறப்பித்த தோடு அடுத்த நாள் தொல்லியல் துறை ஆய்வாளர் குமரகுருவுடன் குடியம் குகைகளுக்கே வருகை தந்து, பிரெஞ்சு ஆய்வாளர் சாந்திபஃப் போன்றவர்களும் புரூஸ்புட், இராபர்ட்புரூஸ்  ஆகியோர் இங்கு வந்து ஆய்வு செய்திருப்பதையும், அதில் இராபர்ட்புரூஸ் மிகமுக் கியமான பங்காற்றி இங்கு கற்கால மனிதர்கள் -அதாவது 12 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருந்ததாக கண்டுபிடித்துக் கொடுத்திருப்பதாகவும் கூறி மேலும் மேலும் வியப்படையச் செய்துகொண்டேயிருந்தார்.
கல் ஆயுதத் தொழிற்சாலை
150 ஆண்டுகளுக்கு முன், தொல்லியல் துறை அறிஞரான, இராபர்ட் புரூஸ் என்ற ஆங்கிலேயர் முதன் முதலில் பழைய கற்கால மனிதர்கள் வாழ்ந்த பகுதியாக பல்லாவரத்தை கண்டறிந்ததாகவும் அப்போது தான் ஆதி மனிதனின் வாழ்விடமாக தமிழகத்தின் இப்பகுதி (குடியம் குகைகள்) இருந்திருக்கக் கூடும் என்ற உண்மை உணரப் பட்டு, இன்றுவரை பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குடியம் பகுதியின் வளமான ஆற்று படுகை யும் சூழலும் கற்கால மனிதனுக்கு ஆயுதங்களாக உறுதி யான கற்கள் கிடைத்ததால் அவ்விடத்தில் வாழ்ந்ததாகவும் தகவல் தந்தனர். குடியம் பகுதியில் தோண்டாமலேயே பூமியின் மேற்பகுதியில் கற்கால மனிதனின் ஆயுதங்கள் கொட்டிகிடப்பதால் அவ்விடம் தொல்லியல் துறையால் கல் ஆயுதத் தொழிற்சாலை என அழைக்கப்படுவதா கவும் கூறினார்.
வருத்தமும்? வியப்பும்!
அதுமட்டுமல்ல, 12 லட்சம் ஆண்டுகளுக்கு முன் குடியம் குகைகள் என்று சொல்லக்கூடிய இந்த மலைப்பகுதி வரையிலுமாக கடல் இருந்ததாகவும் (தரையிலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் உயரம்), கடல் அலைகள் அடித்து அடித்து அதனால் ஏற்பட்ட அரிப்பினால் இந்த குகைகள் உருவான தாகவும் கூறி அதற்கு ஆதாரமாக அந்தப்பாறைகளில் கிளிஞ்சல்கள் இருப்பதையும் சுட்டிக்காட்டினர். கடற்கோள் ஏற்பட்டு கண்டங்கள் பிரிந்தபின்,  பிரிந்த கண்டங்களுக் கிடையில் கடல்நீர் நுழைந்துவிட்டதால், குடியம் மலை உச்சி வரையிலுமிருந்த கடல் உள்வாங்கி இன்று உள்ள நிலைக்குச் சென்றிருக்கிறது என்று ஒரிசா பாலு விளக்கி யதும் அனைவரும் இப்படிப்பட்ட ஒரு அருமையான இடத்தை இவ்வளவு பக்கத்திலிருந்தும் பார்க்காமல் இருந்து விட்டோமே என்று வருத்தப்பட்டும், சரி இப்போதாவது பார்த்தோமே என்று வியந்தும் போயினர்.
அடுத்த பயணம் எப்போது ?
ஒட்டுமொத்தமாக திராவிட வரலாற்று ஆய்வு மய்யம் ஒருங்கிணைக்கும் அடுத்த பயணம் எங்கே? எப்போது? என்று கலந்துகொண்ட அனைவரும் வாய்விட்டே கேட்டு விட்டனர். காலை உணவும், மதிய உணவும் பூண்டி நீர்த் தேக்கத்தில் உள்ள பூங்காவில் உண்ணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததது. மதிய உணவை கொள்கைப் பாச உணர்வுடன் திருவள்ளூரிலுள்ள பாரதிதாசன் மெட்ரி குலேசன் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் .உமாசங்கர் அவர்கள்  மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்துகொடுத்திருந்தார். திரும்பும்போது, அனைவருக்கும் இந்த பயணம் குறித்த கருத்தறியும் படிவம் கொடுக்கப்பட்டு அதை பூர்த்தி செய்து கொடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. காலையில் தொடங்கிய இந்தக் காலப் பயணம் இரவு 9 மணிக்கு தொடங்கிய இடத்திற்கு திரும்பியது. இப்பயணத்திற்கான ஏற்பாடுகளை திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் பிரின்சு என்னாரெசு பெரியார், உடுமலை வடி வேல், தொல்லியல் ஆய்வாளர் தீபிகா மற்றும் இராமநாதன், தேவகிதாசன் ஆகியோர்  மேற்கொண்டனர்.

-விடுதலை,13.9.15