திராவிடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திராவிடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 16 ஜூன், 2026

தாயுமானவர் பாடலில் ‘திராவிடம்’ ஆய்வாளர் ராஜசேகர் பாண்டுரங்கன்

தற்கால அரசியல் சூழலில் ‘திராவிடம்’ என்ற சொல் கால்டுவெல் அல்லது 20-ஆம் நூற்றாண்டு அரசியல் தலைவர்களால் உருவாக்கப்பட்டதாக ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. ஆனால், 18-ஆம் நூற்றாண்டிலேயே (1705–1742) வாழ்ந்த தாயுமானவர் சாமிகள், இச்சொல்லைத் தமிழைக் குறிக்கும் சொல்லாகத் தனது பாடல்களில் கையாண்டுள்ளார்.

இவர் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில், ‘திருமறைக்காடு’ எனப் போற்றப்படும் வேதாரண்யத்தில் சைவ வேளாளர் மரபில் பிறந்தார். இவருடைய தந்தையார் கேடிலியப்ப பிள்ளை மற்றும் தாயார் கெசவல்லி அம்மையார் ஆவர். இவர் தமிழ் மற்றும் வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் பெரும் புலமை பெற்றிருந்தார்.

கால்டுவெல் தமிழகத்திற்கு வருவதற்கு (1838) ஒரு நூற்றாண்டுக்கு முன்பே தாயுமானவர் திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இச்சொல் இறக்குமதி செய்யப்பட்டது அல்ல, மாறாகத் தமிழுக்கு நிகராகப் பன்னெடுங்காலமாகப் புழக்கத்தில் இருந்த ஒன்று என்பது உறுதியாகிறது.

தாயுமானவர் பாடல் விளக்கம்

தாயுமானவர் தனது ‘சித்தர்கணம்’ எனும் பகுதியில் பாடியுள்ள பாடல்:

“…வடமொழியிலே

வல்லா னொருத்தன்வர வுந்த்ரா விடத்திலே

வந்ததா விவகரிப்பேன் ;

வல்லதமி ழறிஞர்வரி னங்ஙனே வடமொழியின்

வசனங்கள் சிறிதுபுகல்வேன் ;

வெல்லாம லெவரையு மருட்டிவிட வகைவந்த

வித்தையென் முத்திதருமோ?…”

இந்தப் பாடல், வெறும் ஏட்டுச் சுரைக்காயான கல்விச் செருக்கையும், விவாதம் செய்து பிறரை மிரட்டும் போலிப் புலமையையும் விமர்சிக்கும் ஆழமான தத்துவப் பாடலாகும்.

இதன் நேரடிப் பொருளையும், உட்பொருளையும் கீழே விரிவாகக் காண்போம்:

“வடமொழியிலே வல்லா னொருத்தன்வர வுந்த்ரா விடத்திலே வந்ததா விவகரிப்பேன்”

சமஸ்கிருத (வடமொழி) இலக்கண இலக்கியங்களில் பெரும் புலமை பெற்ற ஒருவன் என்னிடம் வாதிட வந்தால், அவனிடம் “நீ கூறும் அத்தனை பெருமைகளும் ‘திராவிடம்’ எனப்படும் எங்களின் தமிழ் மொழியிலிருந்தே வந்தது” என்று தர்க்கம் செய்வேன். (இங்குத் ‘திராவிடம்’ என்ற சொல்லைத் தாயுமானவர் தமிழுக்கு நிகராகப் பயன்படுத்துகிறார்).

“வல்லதமிழறிஞர்வரி னங்ஙனே வடமொழியின் வசனங்கள் சிறிதுபுகல்வேன்”

ஒருவேளை, தலைசிறந்த தமிழ் அறிஞர் ஒருவர் என்னிடம் விவாதிக்க வந்தால், அவரிடம் என் மேதாவித்தனத்தைக் காட்ட வடமொழிச் சொற்களையும் வாக்கியங்களையும் (வசனங்கள்) இடையில் கலந்து பேசி அவரைத் திணறடிப்பேன்.

“வெல்லாம லெவரையு மருட்டிவிட வகைவந்த வித்தையென் முத்திதருமோ?”

உண்மையான அறிவால் யாரையும் நேர்மையாக வெல்லாமல், இப்படிச் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தாற்போல் வார்த்தை ஜாலங்களால் எதிராளியைக் குழப்பியும் மிரட்டியும் (மருட்டிவிட) தப்பிக்கும் இந்த வித்தையானது, எனக்கு முக்தியை (இறைவனை அடைதல் / வீடுபேறு) பெற்றுத் தருமா? தராது.

இறைவனை அடைவதற்கு மொழிச் செருக்கோ, விவாதத் திறமையோ, அல்லது அடுத்தவரைத் தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்போ எந்த வகையிலும் உதவாது. உண்மையான ஞானம் என்பது அடக்கத்திலும், தர்க்கங்களைக் கடந்த அமைதியிலுமே உள்ளது என்பதைத் தாயுமானவர் தன் மீதே வைத்து சுயவிமர்சனமாகப் பதிவு செய்துள்ளார்.

திராவிடம் என்பது கால்டுவெல்லோ, அயோத்திதாசரோ அல்லது பெரியாரோ கண்டுபிடித்த சொல் அல்ல. அது பக்தி இலக்கியக் காலத்திலேயே தமிழைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தாயுமானவர் இச்சொல்லைச் சமஸ்கிருதத்திற்கு இணையான தமிழ் மொழியைக் குறிக்கப் பயன்படுத்துகிறார். இங்குத் திராவிடம் என்பது நேரடியாகத் தமிழையே குறிக்கிறது.

இங்குத் தான் திராவிடம் என்ற சொல் “வடமொழிக்கு எதிராக” முதன்முதலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தமிழே திராவிடம்.

- விடுதலை நாளேடு,11.05.26

வெள்ளி, 29 டிசம்பர், 2023

திராவிடம்'' சொல் வரலாறு: சிறுபார்வை

"திராவிடம்'' சொல் வரலாறு: சிறுபார்வை
       
 
1)இந்தியாவில் கால் ஊன்றிய ஆரியம் இந்தியா முழுதும் இருந்த ஆதிகுடிகளில் ஒன்றை ""வேதங்களை ஏற்காத நால்வருண பாகுபாட்டை கடைபிடிக்காத தாழ்ந்த மக்கள் குழு"என குறிக்கும் சொல்லாக 
கிமு.1500 களில் ரிக்வேதத்தில் குறிப்பிடும்  த்ரவிடர்  எனும் சொல் வரலாற்றில் திராவிடத்தை குறிக்கும் முதல் தரவாகும்.

2)கிமு 1150  களில் ஆண்ட திராவிடராணி பற்றிய செய்தி....

 (3)கி மு இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த  கலிங்க மன்னன் காரவேலன் கல்வெட்டில் உள்ள த்ரமிளர் சங்காத்தம் எனும்சொல்,.

3)அகத்தியர் கால அரசரான திராவிடபூபதி என்பவர் பற்றிய தகவல்....
       
4) மகாபாரத்தில் குறிப்பிடப்படும் 56 தேசங்களில் திராவிடம் என்ற நாடு பற்றிய குறிப்பு..

5)திரவிடன் என்னும் சூரியவம்சத்து அரசன் பற்றிய தகவல்... 
       
6) கிபி 5 ஆம் நூற்றாண்டில் வஜ்ரநந்தி என்ற சமணத்துறவி மதுரையில் த்ரமிள (திராவிட)சங்கம் உண்டுபண்ணி தமிழ் தொண்டாற்றியது பற்றிய தகவல்கள்.
     
7) கிபி 7 நூற்றாண்டில் வாழ்ந்த  ஆதிசங்கரர் தனது சௌந்தர்ய லஹிரி - யில் திருஞானசம்பந்தரை  திராவிடச்சிசு என்று வர்ணித்தது..இதில் வியப்பு ஆதிசங்கரர் திருஞானசம்பந்தர் இருவருமே பிராமணர் என்பது.
        
8) ஆதிசங்கருக்கு முன்பே அத்வைத கருத்துக்களை பரப்பிய வேதாந்த சூத்திரத்திற்கு பாஷ்யம் எழுதிய திராவிடாசாரி பற்றிய தகவல்கள்.
       
9) கிபி 8 நூற்றாண்டைச்சேர்ந்த குமரிலப்பட்டர் தனது நூலில்  ஆந்திர திரவிட பாஷா எனும்
சொல்லாடலின் மூலம்  தென்னாட்டு மொழிளில்  தெலுங்கை தவிர பிறமொழிகளை திரவிடமொழி  என அழைக்கிறார்.
      
10)  கிபி13 ம் நூற்றான்றை சேர்ந்த அழகிய மணவாளமுனிகள் வேதங்களை சமஸ்கிருத வேதம் ,திராவிடவேதம் என இரண்டாக வகைபடுத்தி உள்ளார்....அவர் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை திராவிட வேதம் எனும் பொருளில் த்ராவிடோபநிஷத் என்றே குறிப்பிடுகிறார்.
         
11)இந்த காலகட்டங்களில் தென்னாட்டு பிராமணர்களை திராவிடபிராமணர் என அழைக்கும் பழக்கம் உருவாகியது.

12) மேற்கண்டவைகளை ஆதாரமாக கொண்டு  அயர்லாந்தைச் சார்ந்த வரலாற்றாசிரியர் ராபர்ட் கால்டுவெல் அவர்களின் ஆய்வில்  1854 ல் வெளியான 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கனம் ' எனும் நூல் ,,இந்நூல் இந்தோ -ஆரிய  மொழிக்கூட்டமல்லாத "திராவிடமொழிகள்" என ஒரு மொழிக்கூட்டத்தை வரையறை செய்தது,,அம்மொழிகளின் மூலம் மூலத்திராவிடம் எனும் கருத்தை இவர் வைத்தார்,,இம்மொழிக்கூட்டத்தில் தமிழே மிகப்பழமையான மொழி என்று குறிப்பிட்டுள்ளார்.

12)1885 - ல் அயோத்திதாச பண்டிதரால் உருவாக்கப்பட்ட திராவிடபாண்டியன் இதழ்.

13) 1891 இல் மனோன்மணியம் எழுதிய
சுந்தரம்பிள்ளை, தன்னுடைய தமிழ்த் தெய்வ வணக்கம் பாடலில் "திராவிட நற்றிருநாடு"
என்று குறிப்பிடுகிறார்.
         
14) 1892 - ல் அயோத்திதாசர் தாழ்த்தப்பட்ட மக்களை ஆதிதிராவிடர் எனக் கூறவேண்டி ஆங்கிலேய அரசிடம் மனு கொடுத்தது
         
15) 1894 - ல் இரட்டைமலை சீனிவாசன் ஐயா வின் ஆதிதிராவிடர் மகாஜனசபை

16) 1911, டிசம்பர 11 இல் தாகூர் ஜனகணமன நாட்டுப்பண்ணை எழுதுகிறார். அதில் திராவிடம் என்று குறிப்பிடுகிறார். இதனை இந்திய
அரசமைப்புச் சட்டம் அங்கீகரிக்கிறது.
         
17) 1913 - ல் ஐயா நடேசனாரால் உருவாக்கப்பட்டது  திராவிட சங்கம்
         
18) 1944 - ல் பெரியாரின் திராவிடர் கழகம் உருவானது
         
19) 1948 - ல்  அறிஞர் அண்ணாவின்        திராவிட முன்னேற்றக் கழகம் நிறுவப்பட்டது.

20) 1957 இல் திராவிட முன்னற்றக் கழகத்தை,
இந்தியத் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கிறது
         
20)  பின்னர் அதிமுக ..மதிமுக,.தேமுதிக..
பெரியார் திராவிட கழகம்....தந்தை பெரியார் திராவிட கழகம்..திராவிட இயக்க தமிழர் பேரவை என நிறைய இயக்கங்களை உருவாகின. இவற்றுள் சில
கட்சிகளும் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம்
பெற்றன.

தமிழ்..தமிழம்..த்ரமிளம் ..த்ரவிடம் ..திராவிடம் என... தமிழ்தான் திராவிடம் என்று வடமொழியினரால் திரித்து கூறப்பட்டது என்பது ஓரளவு சரியான வாதமாகக் கொள்ளலாம்,,

திராவிடம் வரலாறு எழுதத்தொடங்கிய காலத்திலிருந்தே வழங்கப்படும் சொல்லாடலாகும்.

முதலில் அது ஒரு மக்கள் கூட்டத்தின் பெயராகவும்,,

பின்னர் ஒரு மொழிக்கூட்டத்தின் பெயராகவும்

அதன்வழியாக பின்னர் ஒரு இனக்கூட்டத்தின் பெயராகவும் 

வழங்கப்பட்டு வந்துள்ளது.

தற்போது ஒரு தத்துவத்தின் பெயராக பெரியாரியல் தொண்டர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது,

          ✍️ பல்வேறு தரவுகளின் தொகுப்பு✍️

           ⚖️ #துலாக்கோல்/29.12.2023⚖️
- சோம நடராஜன் முகநூல் பதிவு

வெள்ளி, 21 ஜூலை, 2023

திராவிடப் பல்கலைக்கழகம்


ஆந்திரப் பிரதேசத்தில், சித்தூர் மாவட்டத்தில் இருக்கும் குப்பம் என்னும் இடத்தில்..

திராவிடப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது..

இந்தப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கேரளம் மற்றும் கர்நாடக அரசுகளின் உதவிகளுடன் நடைபெறுகிறது.

இங்கு, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற திராவிட மொழிகளின் வரலாறு, தத்துவம், நாட்டுப்புறவியல் ஆராய்ச்சி போன்ற துறைகள் உள்ளது..

இன்னும் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள்.. இந்தியத்துணைக்  கண்டத்திலேயே..!

ஒரு மொழி குடும்பத்திற்காக செயல்படும் ஒரே ஒரு பல்கலைக்கழகம் என்றால் அது
திராவிடப் பல்கலைக்கழகம் மட்டும் தான்..

திராவிட இனத்தின் முதல் குடியே தமிழர்கள், திராவிட இனத்தின் மூத்த மொழியே தமிழ் தான்..

அதை அடையாளமாகக் கொண்டே, இந்த பல்கலைக்கழகத்தின் லோகோ வை, வடிவமைத்து உள்ளார்கள்..

www.dravidanuniversity.ac.in
திராவிட பல்கலைக்கழகத்தில் ஆந்திர நாத்திக சங்கத்தினர்

வெள்ளி, 28 ஏப்ரல், 2023

திராவிடம் - தமிழ் தேசியம் குறித்த சர்ச்சைகள் தற்போது அதிகளவில் விவாதிக்கப்பட்டு வருகிறதே?’’ என்று திருமாவிடம் ‘ஆனந்தவிகடன்’ !

“திராவிடம் - தமிழ் தேசியம் குறித்த சர்ச்சைகள் தற்போது அதிகளவில் விவாதிக்கப்பட்டு வருகிறதே?’’ என்று திருமாவிடம் ‘ஆனந்தவிகடன்’ கேட்டதற்கு,
“ஒவ்வொருவரும் அவரவர் காலத்துக்கு ஏற்பதான் அரசியல் செய்ய முடியும். 1956க்கு முன்பு நாம் பிறந்திருந்தால், தமிழ்நாடு என்ற மாநிலம் இருந்திருக்காது; சென்னை மாகாணம் என்றுதான் இருந்திருக்கும். ஆக, அந்த சென்னை மாகாணத்துக்கான திராவிட அரசியலைத்தான் நாம் உயர்த்திப் பிடித்திருப்போம். 

அதேபோல், இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னர் பிறந்திருந்தால், நானும்கூட சுதந்திரப் போராட்டப் போராளியாகத்தான் இருந்திருப்பேன்.

ஆனால், மொழிவழி மாநிலம் என்று பிரிக்கப்பட்ட பிறகு, ‘தமிழ்நாடு’ என்னும் பெயர் சூட்டப்பட்ட நிலப்பரப்பில் பிறந்த நான் இன்றைய சூழலுக்கு ஏற்ப பேசிக் கொண்டிருக்கிறேன். 

இன்றைக்கு இருக்கிற இந்த அரசியலை அன்றைக்கே பெரியார் பேசியிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பதோ அல்லது ‘பெரியார் பேசியது தவறு’ என்று விமர்சிப்பதோ புரிதல் குறைவாகவே பார்க்கிறேன்’’ என்ற பதில் அளித்துள்ளார்.

இன்று தமிழ்த் தேசியம் பேசி பெரியாரைக் கொச்சைப்படுத்தும், பேர்வழிகளுக்கும் இத்தெளிவு வேண்டும்.

திராவிடம், திராவிடர் என்ற சொல்லை நாம் பயன்படுத்துவது ஆரிய பார்ப்பனர்கள் தாமும் தமிழர்கள் என்று சேர்ந்து தமிழர் உரிமையை, போர்த் தீவிரத்தைக் கெடுக்கக் கூடாது. இனத்தால் ஆரியர் வேறானவர் என்பதைக் காட்டவே.
மற்றபடி திராவிடர் கழகமோ, தி.மு.க.வோ, தமிழர்களுக்காகத்தான் போராடுகிறார்களே தவிர கன்னடர்களுக்கோ, தெலுங்கர்களுக்கோ, மலையாளிகளுக்கோ அல்ல என்பதைச் சிந்தித்துப் பேச வேண்டும். 

தமிழக மக்களும் இத்தெளிவைப் பெற வேண்டும். இது சார்ந்த யார் என்ன விளக்கம் கேட்டாலும் சொல்லத் தயாராய் உள்ளேன்.

தமிழர்க்காக, தமிழர் சிறப்பை, உரிமையை மீட்பதற்காக, தமிழர் ஆட்சியை அமைப்பதற்காக முயற்சிக்கின்றவர்கள். அவர்களின் செயல்பாடுகளின் வழி மக்களின் (தமிழர்கள்) ஆதரவைப் பெறவேண்டுமே தவிர, தமிழர்களுக்காகப் பாடுபடக்கூடிய மற்றவர்களை கொச்சைப்படுத்துவது, தமிழர்க்கு எதிரிகளாகக் காட்டுவது கூடாது. அப்படி செய்வது சுயநல அரசியலாகுமே தவிர, உண்மையான தமிழ்ப் பணியாகாது!

   #மீள்பதிவு
- 'இசை இன்பன்' முகநூல் பதிவு, 27.04.23

வெள்ளி, 1 அக்டோபர், 2021

வெற்றுச் சொல்லா திராவிடம்?

 

கவிஞர் கலிபூங்குன்றன்

திராவிடர்திராவிடம் என்பது ஆரி யத்தின் அடி வயிற்றைக் கலக்கிக் கொண்டுள்ளதுஇதன் தன்மையைப் பார்ப்பனர்கள் புரிந்து கொண்டு விட்டார்கள்அதனால்தான் அந்தச் சொல்லின் வீரியத்தில் வீற்றிருக்கும் "அணுகுண்டின்ஆபத்தைப் புரிந்து கொண்டு அலறுகிறார்கள்.

"ஆரியமாதிராவிடமா?" என்று கேட்டால் நாங்கள் ஆரியத்தின் பக்கமே என்று கூறும் எட்டப்பர்களும் வழக்கம்போல் நம் இனத்தில் தலை எடுத்துள்ளார்கள்அதை இடறித் தள்ளுவோம்!

'தினமணிஎன்னும் ஏட்டில் (24.9.2021) "திராவிடம் என்பதோர் வெற்றுச் சொல்!"  எனும் தலைப்பில் நடுப்பக்கக் கட்டுரை ஒன்றை திருஜெயபாஸ்கரன் என்பவர் எழுதி இருக்கிறார்.

பாறாங்கல்லை விழுங்கியவன் பஞ்சு மிட்டாய் சாப்பிட்டதாகக் கூறுவதைப்போல - அண்டப் புளுகின் அப்பனாகவும் ஆகாயப் புளுகின் பாட்டனாகவும் ஒரு தகவல் இதோ:

"தமிழ்நாட்டில் 1920களில் 'தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்!' என்ற பெயரில் தீவிரம் பெற்றிருந்ததுஅரசியல் இயக்கம் ஒன்று 1944ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம்சேலம் மாநகரில் நடத்தப்பட்ட அவ்வியக்கத்தின் மாநாட்டுத் தீர்மானத்தில் அது 'திராவிடர் கழகம்என்று பெயர் மாற்றம் பெற்றது.

அப்படியொரு தீர்மானம் மாநாட்டின் உணவு இடைவேளையின்போதுஒரு சிலரால் திட்டமிடப்பட்டுஅவசர அவசரமாக முடிவு செய்யப்பட்டதென்றும்அந்தத் தீர்மானத்தை மேடையில் நின்று படித்தவருக்கே அப்போது தான் அச்செய்தி தெரியும் என்கிற அளவுக்குஅது தந்திரமானதாக இருந்தது என்றும் சுட்டிக்காட்டுகிறார்கள்அரசி யல் ஆய்வாளர்கள்இதுதான் திராவிடம் என்பதோர் வெற்றுச் சொல்என்ற தலைப்பில் கட்டுரை எழுதிய 'வெத்து வேட்டுகுறிப்பிட்டுள்ளது.

அரசியல் ஆய்வாளர்கள்  குறிப்பிடுகிறார்களாம்யார் அந்த அரசியல் ஆய்வாளர்கள்குறிப்பிட ஏன் தயக்கம்இப்படி ஆதாரமின்றி 'அத்திரிபாட்சா கொழுக்கட்டைஎன்ற ரீதியில் அவாள் எழுதுவது வழமைதான்.

புகழ் பெற்ற "அண்ணா துரை தீர்மானம்என்பது அவர்களுக்கு அவ்வளவு அலட்சியமாகப் போய் விட் டதுஅந்தத் தீர்மானம் தந்தை பெரியாரிடம் அண்ணா அவர்கள் மாநாட்டுக்கு ஒரு வாரத்துக்கு முன்பே தங்கி தந்தை பெரியாராலும் தீட்டப்பட்ட ஒன்று.

இரு நாள் நடைபெற்ற சேலம் மாநாட்டில் தீர்மானங்கள் விஷயாலோசனைக் கூட்டத்தி லும் விவாதிக்கப்பட்டன என்ற வரலாறு எல்லாம் தெரியாமல்இடைவேளை நேரத்தில் அவசரகதியில் நிறை வேற்றப்பட்டதாக எழுதுவது எல்லாம் அசல் போக்கிரித்தனம் அல்லவா?

அக்கிரகாரப் பேர்வழி களின் எடை மேடையின் கண்ணோட் டத்தில் அண்ணா அவர்கள்கூட சாதாரணமானவர்தானோபல்லாயிரக்கணக்கானோர் திரண்ட ஒரு மாநாட்டில் அவசர அவசரமாக உணவு இடைவேளையின் போது நிறை வேற்றப்பட்டது என்றும்தீர்மானத்தைப் படித்தவருக்கே அப்போதுதான் அந்த செய்தி தெரியும் என்றும் எழுதுகிற அளவுக்குச் செல்லுகிறார்கள் என்றால்இவர்கள் வேறு எதைத்தான் திரித்து எழுதத் தயங்குவார்கள்?

அண்ணா என்றாலே 'தினமணிவட்டாரத்துக்கு ஒவ்வாமை எப்போதுமே உண்டு.

"முடிவை மாற்றுங்கள்என்பது தினமணியின் தலையங்கம் (6.5.2020) அதில் ஆச்சாரியர் பெயர் வரும் போதெல்லாம் ராஜாஜி ராஜாஜி ராஜாஜி என்று மூன்று முறை குறிப்பிட்டு ஆராதனைஆனால் அதே தலையங்கத்தில் அண்ணா என்று எழுதிட மனம் வரவில்லைஅண்ணாதுரை - எம்.ஜி.ஆரைக் குறிப்பிடும் இடங்களிலோ எம்.ஜி.இராமச்சந்திரன்.

இதற்குப் பெயர்தான் ஆரியம் - திராவிடம் வேறுபாடு என்பது.

"எது எப்படி இருப்பினும் 'திராவிடம்', 'திராவிடர்', 'திராவிட நாடுஆகியவை எல்லாம் குழப்பத்திலும் சிக்கலிலும்பாதுகாப்பு உணர்விலும் தமிழுக்கும்தமிழர் களுக்கும் எதிரான ஏதோவோர் உள்ளுணர்விலும் கண்டறி யப்பட்ட வெற்று வாளாகவும் போலிக் கேடயமாகவும் வடிவமைக்கப்பட்டுதமிழ் நாட்டில் அரசியலில் இன்றளவும் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டு இருப்பதை எவராலும் மறுக்க முடியாது"

இப்படியாக தன் முதுகைத்தானே தட்டிக் கொள்வதுடன் அவரே நான்கு வரிகளை கிறுக்கி விட்டுஎவராலும் மறுக்க முடியாது என்று கித்தாப்பு வேறு!

'தினமணி'யின் இந்தக் கூற்றுக்குத் 'தினமணியைக் கொண்டே சூடு கொடுத்து விடலாம்இதோ 'தினமணி':

"தமிழ் உள்ளிட்ட 82 மொழிகளை உள்ளடங்கிய திராவிட மொழிக் குடும்பம் 4500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது என்று ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதுஅவற்றில் தமிழ்தான் மிகப் பழைமையான மொழி என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளதுசமஸ்கிருதம் போல சிதைந்து அழியாமல்தமிழ்மொழி தொடர்ந்து செழுமையோடு பயன்பாட்டில் இருப்பதாகவும் தெரிவிக் கப்பட்டுள்ளது." ('தினமணி' 22.3.2018).

'தினமணியேதினமணியேதிரா விடம் என்பது வெற்றுச் சொல் என்று இப்பொழுது எழுதியதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டாம் - கருத்தை மாற்றிக் கொள்கிறோம் என்று கண்ணியத்தை எதிர்பார்க்கலாமா?

திராவிடம்திராவிடர் என்பதெல்லாம் தந்தை பெரியாரால் புதிதாகக் கற்பிக் கப்பட்டதில்லைஅதற்கென்று வர லாற்று ஆவணங்கள் வலிமையாக வளமையாகவே உண்டு.

மறுபடியும் 'தினமணிக்கேவரு வோம். 'தினமணி'யின் ஆசிரியர் திருஅய்ராவதம் மகாதேவன் "சிந்து சமவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகம்!" என்று அறுதியிட்டுச் சொன்னது வெற்றுச் சொல்தானா!

மேனாள் 'தினமணிஆசிரியர் அய்ராவதம் மகாதேவன்மீது இன்றைய 'தினமணிஆசிரியர் திருவாளர் வைத் தியநாதய்யருக்கு என்ன வஞ்சினமோ யாம் அறியோம்.

வரலாற்று ஆசிரியர்கள் என்ன சொல்லுகிறார்கள்?

திராவிடர்களை ஆரியர்கள் வென்று விட்ட அகங்காரத்தால் குரங்குகள் என்றும்கரடிகள் என்றும்ராட்சதர்கள் என்றும் எழுதிவைத்தார்கள்ஆனால்இந்தப்படி இழிவுபடுத்தப்பட்ட வகுப்பாரிடமிருந்தே (திராவிடர்களிடமிருந்தேபல நாகரீ கங்களை இந்தப் பிராமணர்கள் கற்றுக் கொண்டார்கள்”.

இது ஷோஷி சந்தர்டட் எழுதிய “இந்தியா அன்றும் இன்றும்” என்னும் புத்தகத்தின் 15-ஆவது பக்கத்தில் இருக் கிறது.

"ஆரியர்கள் தங்களால் தோற்கடிக்கப் பட்ட எதிரிகளாகிய திராவிடர்களைத் தங்களுடைய புத்தகங்களில் திராவி டர்கள் தஸ்யூக்கள் என்றும்தானவர்கள் என்றும்ராட்சதர்கள் என்றும் குறிப்பிட் டிருக்கிறார்கள்”.

ஆரியக் கவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை இது காட்டுகிறதுஏனெனில்ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து ஆதிக்கம் பெறுவதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதினார்கள்".

(இது சி.எஸ்சீனிவாச்சாரி எம்.., & எம்.எஸ்ராமசாமி அய்யங்கார் எம்.., ஆகிய சரித்திர போதகர்கள் எழுதிய “இந்திய சரித்திரம் முதல் பாகம்” என்னும் புத்தகத்தில் “இந்து இந்தியா” என்னும் தலைப்பில் 16, 17-ஆவது பக்கங்கள்)

"ஆரியர்களில் சமஸ்கிருதம் பேசியவர்கள் மட்டும் இந்தியாவின் மேற்குக் கணவாய் வழியாக நுழைந்து வட இந்தியாவை அடைந்தார்கள்அங்கு தங்களைவிட முன்னேற்றமான திராவிடர்களைக்கண்டு அவர்களிடமி ருந்து பல நாகரீகங்களைக் கற்றுக் கொண் டார்கள்”.

இது எச்.ஜிவெல்ஸ் எழுதிய “உலகத் தின் சிறு சரித்திரம்” என்னும் புத்தகத்தின் 105-ஆவது பக்கம்.

"தமிழர்கள் என்பவர்கள் இந்தியாவின் தென்கிழக்கிலும்இலங்கையின் சில பாகத்திலும் வசிக்கும் ஆரியரல்லாத திராவிட மக்கள் ஆவார்கள்தமிழ் என்பது மேற்படியார்களால் பேசும் பாஷை”.

(சர்-ஜேம்ஸ்மர்ரே எழுதிய  அகராதி யின் பக்கம் 67)

தென்னிந்தியாவில் வசித்துவந்த ஆரியரல்லா தார்களையே - குரங்குகள் என்றும்அசுரர்கள் என்றும் ராமாயணக் கதையில் எழுதி ". வைக்கப்பட்டிருக்கிறது”.

இது ரோமேஷ் சந்திரடட் C.I.E.I.C.S  எழுதிய “புராதன இந்தியா” என்னும் புத்த கத்தில் 52-ஆவது பக்கத்தில் இருக்கிறது.

திராவிடர்கள் தங்கள்மீது படையெ டுத்து வந்த ஆரியர்களோடு கடும்போர் புரியவேண்டி இருந்ததுஇந்த விஷயம் ரிக் வேதத்திலிருந்து அநேக சுலோகங்களாக இருக்கின்றன."

இது டாக்டர் ரோமேஷ் சந்திர மஜும்தார் எம்., யின் “பூர்வீக இந்திய சரித்திரமும்நாகரீகமும்” என்னும் புத்த கத்தின் 22-ஆவது பக்கத்தில் இருக்கிறது.

ராமாயணக் கதை என்பது ஆரியர்கள் தென் இந்திய தஸ்யூக்கள் அல்லது திரா விடர்கள் மீது படையெடுத்து வெற்றி பெற்றதைச் சித்திரித்துக் காட்டுவதாகும்”.

(பிசிதம்பரம்பிள்ளையின் 'திராவி டரும் - ஆரியரும்பக்கம் 24)

ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தபோது பல புதிய பிரச்சினைகள் கிளம்பினஇனத்தாலும்அரசியலாலும் மாறுபட்ட திராவிடர்கள் ஆரியர்களால் தோற்கடிக்கப்பட்டனர்திராவிடர்கள் நீண்டகால நாகரிகத்துடன் வாழ்ந்து வந்த படியால்இவர்களை விடத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்ட ஆரியர்களுக்கும்திராவிடர்களுக்கும் இடையே விரிந்த பெரிய பிளவு ஏற்படட்து.

(ஜவகர்லால் நேருவின் Discovery of India பக்கம் 82)

இவர்கள் எல்லாம் வரலாற்று ஆசிரி யர்களே இல்லை என்று விதண்டாவாதம் பேசப் போகிறார்களா?

(காலப் பிழையோடுஇவர்களும் .வெ.ராபேச்சைக் கேட்டுக் குட்டிச்சுவர் ஆனவர்கள் என்கிற அளவுக்குப் போனா லும் போவார்கள் - புகைக்க புகைக்கப் புனை சுருட்டு ஊதுவதில் இந்த உஞ்சி விருத்திகளுக்கு இணை வேறு எவர்?)

இப்பொழுது 'தினமணி'கள் அடுத்த கட்டத்துக்கு வந்தாக வேண்டும்.

மனு தர்மத்தை திராவிடர் கழகம் கொளுத்தியதுண்டு - இப்பொழுது அதே வேலையை சிண்டைத் தட்டிக் கொண்டு செய்தாலும் செய்வார்கள்.

இதோ மனுதர்மம் பேசுகிறது:

மனுதர்மம் 10ஆவது அத்தியாயம் 22 மற்றம் 44 ஆவது சுலோகங்களில் திராவிடம் என்ற சொல் உள்ளது.

விராத்திய க்ஷத்திரியனுக்கு அவ்வித க்ஷத்திரிய ஸ்த்ரீயினடத்தில் சல்லன் பிறக்கிறான்அவனுக்கு மல்லன்நிச்சு விநடன்கரணன்கஸன்திராவிடன் என அந்தந்த தேசத்தில் வெவ்வேறு பெய ருண்டு. (அத்தியாயம் 10; ஸ்லோகம் 22)

பௌண்டரம்ஔண்டரம்திரா விடம்காம்போசம்யவநம்சகம்பாரதம்சீகம்கிராதம்தரதம்கசம் இந்தத் தேசங்களையாண்டவர்களைவரும் மேற் சொன்னபடி சூத்திரர்களாய் விட்டார்கள். (அத்தியாயம் 10; ஸ்லோகம் 44).

சிறீமத் பாகவதம் வேதவியாசம் எழுதிவேணுகோபாலாச்சாரி தமிழில் மொழிபெயர்த்துபாகவதம் பக்கம் 404இல் திராவிடம் குறிப்பிடப்பட்டுள்ளது.

'தினமணிதிருவாளர்கள் மனுதர்மத் தையும் சிறீமத் பாகவத்தையும் என்ன செய்யப் போவதாக உத்தேசம்?

தனக்குத்தானே கோலடிப்பது (Self Side Goal) என்பார்கள்அதனையும் திருவாளர் ஜெயபாஸ்கர் சாங்கோ பாங்கமாக செய்து முடித்து விட்டார்உண்மையைச் சொன்னால் அதில் முரண்பாடு கதவு திறக்க வாய்ப்பு இல்லைபொய்யென்று தெரிந்திருந்தும் ஓரிடத்தில் சொன்னால் கடைசி வரை அதைக் காப்பாற்றுவது முயற்கொம்பே!

ராபர்ட் கால்டுவெல்லில் ஆரம்பித்து மனோன்மணியம் சுந்தரனாரை உள்ளுக் குள்அழைத்து தேசிய கீதம் பாடல் எழுதிய நோபால் கவிஞர் இரவீந்திரநாத்தையும் துணைக்கழைத்து, "திராவிடம்எனும் நியாயத்துக்கு உண்மை வரலாற்றுக்கு முடிசூட்டு விழாவினையும் நடத்தி தனது திராவிடத்துக்கு எதிரான கருத்துக்கு முடிவுரை எழுதித் தீர்த்து விட்டாரேநமது ஆழ்ந்த இரங்கல்!

திராவிடத்தின் உண்மையை உறுதி செய்து கொள்ள வாக்கெடுப்பு நடத்தலாம் என்று இலவசமாக ஆலோசனை கூறுகிறது 'தினமணி!'. தினமணியேகூட நடத்தலாமேஅப்படியே ராமன் கோயில் கட்டுவதுஇந்து ராஜ்ஜியம்பூணூல் அணிவதுசங்கராச்சாரியார் கூறும் தீண்டாமை க்ஷேமகரமானதுஉயர்ஜாதி ஏழைகளுக்கு இடஒதுக்கீடு  (EWS) இவற்றுக்கெல்லாம்கூட வாக்கெடுப்பு நடத்துங்கள் வரவேற்கிறோம்.

திராவிடர் இயக்கம் தோற்றுவிக்கப் படுவதற்கு முன்பே "ஆதி திராவிட ஜனசபை"யை (1892) அயோத்திதாசர் தோற்றுவிக்கவில்லையாஇரட்டைமலை சீனிவாசன் "திராவிட மகாஜன சபையைஉண்டாக்கவில்லையா? (1894).

அதே இரட்டைமலை சீனிவாசன் 1906இல் தம்மால் தொடங்கப்பட்ட இதழுக்கு "ஒரு பைசா தமிழன்என்று பெயர் சூட்டினார்இது முரண்பாடல்ல - இரண்டும் ஒரு பொருளைக் குறிக்கின்றன என்பதுதானே இதன் பொருள்.

தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற பார்ப்பனர் அல்லாதார் இயக்கம்தான் திராவிடர் கழகமாகப் பெயர் மாற்றம் பெற்றது.

1910 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பற்றி அயோத்திதாசர் வெளியிட்ட அறிக்கை என்ன கூறுகிறது?

"இத்தேச பூர்வ சரித்திரங்கள் ஆதாரங்களை சொல்லும் இத்தேசப் பூர்வ சரித்திரங்களைக் கொண்டும் பூர்வக் குடிகளை  ஜாதி பேதமுள்ள இந்துக்களினின்று பிரித்துஜாதி பேதமற்ற திராவிடர்கள் என்றே எழுதும்படியான உத்தரவளிக்க வேண்டுகிறோம்என்று கூறிடவில்லையா? ("அயோத்தியதாசர் சிந்தனைகள்" - தொகுதி 1 பக்கம் 367-368)

திராவிட நாகரிகம் குறித்து மறை மலை அடிகளார் சென்னையில் சொற் பொழிவாற்றவில்லையா? (1913)

டாக்டர் நடேசனார் திராவிட சங்க விடுதியை தோற்றுவித்ததும் (1913) திரா விடர் இல்லம் என்ற விடுதியையும் தோற்றுவித்தது எதற்காக? (1916)

கல்லூரிகளில் படிக்க வேண்டும் என் றால் சென்னைக்கு வர வேண்டும்வசதி வாய்ப்புள்ள பார்ப்பனர் அல் லாத மாணவர்கள்கூடத் தங்கிப் படிக்க வசதியில்லைபெரும்பாலும் பார்ப்பனர் களால் நடத்தப்படும் உணவு விடுதிகளில் 'சூத்திரர்கள்' 'பஞ்சமர்கள்என்று கருதப் பட்டவர்கள் எடுப்பு சாப்பாடு முறையில் உணவருந்த முடியுமே தவிரஉள்ளே அமர்ந்து சாப்பிட முடியாதுஇந்த நிலையில் டாக்டர் நடேசனாரின் திராவிட விடுதி இல்லம் (சென்னை திருவல்லிக்கேணிஎத்தகைய தாக்கத்தை உண்டாக்கியது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டாமா?)

சென்னை நகர ஓட்டல்களில் பஞ்சமர்களும்நாய்களும்பெரு நோய்க் காரர்களும் நுழையக் கூடாது!" (குடிஅரசு 3.5.1936) என்ற அறிவிப்புப் பலகைகள் இருந்தன என்பது எதைக் காட்டுகிறது?

டாக்டர் நடேசனாரின் 'திராவிட விடுதி இல்லம்என்ற விடுதியில் தங்கிப் படித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் யார் யார் தெரியுமா?

இரயில்வே நிலையங்களில் பிராம ணர்கள்இதராள் சாப்பிடும் இடம் இருந் ததும்அது தந்தை பெரியாரின் எதிர்ப்புக் குரலால் டாக்டர் இராமசாமி முதலியார் இரயில்வே போர்டு உறுப்பினராக இருந்த போது ஒழிக்கப்பட்டதெல்லாம் தெரியுமா?

ஆர்.கேசண்முகம் (பிற்காலத்தில் ஒன்றிய நிதி அமைச்சர்பாரிஸ்டர் ரெங்கராமானுஜநாயுடுடி.எம்நாரா யணசாமிஎஸ்.ஜிமணவாளராமா னுக்கு (பிற்காலத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள்சுப்பிரமணிய நாடார் (பிற்காலத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிசடகோப முதலியார் (பிற்காலத்தில் காங்கிரஸ் முக்கிய தலைவர்). இவர்களுக்கெல்லாம் அடைக்கலம் கொடுத்தது திராவிடர் இல்லம்.

திராவிடன் என்பது ஒரு கோட் பாட்டுத் தத்துவம் என்பது இன்னும் புரியவில்லையாஇல்லை புரியாதது போல வேடம் கட்டிஆட்டமா?

அறிஞர் அண்ணா அவர்கள் மாநிலங் களவை உறுப்பினராக சென்றபோது தனது கன்னிப் பேச்சில் "I belong to Dravidian Stock" என்று சொன்னதும்அதையே சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு முத்து வேல் கருணாநிதி அவர்களும்  தற்போது முழங்கியதும் கூடவா தெரியாது.

நாடாளுமன்றத்தில் பதவிப் பிர மாணம் எடுத்த தமிழ்நாடு உறுப்பினர்கள் "பெரியார் வாழ்க!" "திராவிடம் வெல்க!" என்று முழக்கமிடவில்லையா?

இந்த உணர்வுகளின் அதிர்வு அலைகளால் தாக்கப்பட்ட பார்ப்பனர்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர்அதன் ஆத்திர ஓசைதான்ஆற்றாமையின் கூக்குரல் தான் தந்தை பெரியார் பற்றியும்திராவிடம் பற்றியும்தினமணி வகையறாக்களின் வெளிப்பாடு!

திராவிடம் வெல்லும் - நாளை வரலாறு அதனைச் சொல்லும்!

வாழ்க பெரியார்!

வெல்க திராவிடம்!