புதன், 21 ஏப்ரல், 2021

தமிழின் திரிபே திராவிடம்

"திராவிடம்" 
என்பது தமிழின் திரிபே என்றால், திரிபை ஏன் ஏற்க வேண்டும் "தமிழ்" என்பதைத்தானே ஏற்க வேண்டும், நல்ல பால் இருக்க  திரிந்த பாலை புத்தியுள்ளவர் அருந்துவரா, அருந்தச் சொல்வரா?
எனவே திராவிடம் என்று கொம்பு சுத்த வேண்டாம், தமிழ் என்றே கூறுங்கள்...

என்று 'சே.ந.சீ' எனும் நண்பர் என்னைக் கேட்டுக் கொண்டார்.

ஒரு திராவிடனாகிய நான் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

பல்வேறு மொழியியல் அறிஞர்களின் ஆய்வின்படி  "வளமான தமிழ் மொழியே கூட ஒரு திராவிட மொழிக் குடும்பத்தின் கிளை மொழியே" எனும் போது 

திராவிடம்' தமிழ்ச்சொல்லா ?
என்று தொடர்ந்து கேட்பது "அறிவீனம்"
அல்லவா ?

பெரியார் முன்னெடுத்த திராவிட இயக்கம், போராடி வென்றெடுத்த

இன உணர்வு ,
மொழியுணர்வு
சுயமரியாதை, 
சமூக நீதி
பகுத்தறிவு, 
மத எதிர்ப்பு கொள்கை,
சாதிய எதிர்ப்பு, 
பெண் கல்வி,
பெண்கள் முன்னேற்றம்,
தேவதாசி முறையையும், குழந்தைகள் திருமணத்தையும் தடைசெய்தது,

போன்றவைகளைப் பற்றியெல்லாம் பேசமாட்டோம், வெறும் 
'திராவிடம்' 
என்ற சொல்லை மட்டுமே தூக்கிக் கொண்டு அலைவோம், அலைவதோடு மட்டுமின்றி, பிறரையும் அதையே நம்ப வைப்போம் என்ற உறுதியோடு போலி தமிழ் தேசியவியாதிகள் நீங்களே  இருக்கும் போது....

பெரியாரைப் படித்து, அவர் படிக்கச் சொன்ன நூல்களையெல்லாம் அறிவுக் கண் கொண்டு ஆராய்ந்தறிந்து படித்துக் கொண்டிருக்கும், திராவிட இரவிச்சந்திரன் அதை ஆதாரங்களுடன் மறுப்பது தானே சிறப்பு.

முதலில் தமிழ் என்ற சொல்லே திரி சொல் என நிரூபிக்கிறேன்..

'தமிழ்' என்ற சொல்லின் வேர்ச் சொல்  எது?
 தாய், தம்பி, தமக்கை, தங்கை , தந்தை போன்ற சொற்கள் எந்த வழிமுறையில் வந்ததோ, அதே வழியில் தான் 'தமிழும்' வந்தது.

'தம்' என்பது படர்க்கையை குறிக்கும் என்பது தொல்காப்பியன் கூறும் இலக்கணம்.

தம் + ஆய் = தாய்
தம் + ஐயன் = தமையன்
தம் + அக்கை = தமக்கை
தம் + கை = தங்கை
தம் + எந்தை = தந்தை

அதுபோல 

தம் + மொழி = தமிழ்

ஹஹ்ஹஹ்ஹா...

தம்+மொழி எப்படி அய்யா தமிழாகும்....
என அவசரப்பட வேண்டாம் 
'முன் +தெரி+ கொட்டைகளே'...அதாவது முந்திரிக் கொட்டைகளே!

தம்+மொழி = தம்மொழி > தமிழி > தமிழ் என நிலைத்தது.

அதுபோல் 'திராவிடம்' என்ற சொல்லும் நீங்கள் உளறுவது போல சமஸ்கிருத சொல்லல்ல ! அதுவும்
தமிழ்ச்சொல்லே!

தமிழம்- திரமிளம்-திராவிடம் என்று திரிபாயிற்று.
இதை மறுப்போர் ஆதாரங்களுடன் மறுத்தால் நான் பதிலளிக்கிறேன்.

'கூகுளை' மட்டும் தூக்கிக் கொண்டு வந்து ஆதாரம் எனக் காட்டவேண்டாம்.

இப்போது கூறுங்கள்...

நல்ல பால் இருக்க  திரிந்த பாலை புத்தியற்று அருந்துபவர், நீங்களா, நானா ?

ஆரோக்கியமான விவாதத்திற்கு காத்திருக்கும்....

பெரியாரின் பேரன் நான்.
- முகநூல் பக்கம், 22.4.20