- கிரீஷ் சஹானே
(கட்டுரையின் அய்ந்தாம் பகுதி)
5. 5000 ஆண்டு கால நாகரிகம்
பகவத் கீதையின் 5151 ஆவது ஆண்டுவிழாக் கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்றில் அண்மையில் நமது அயல்துறை
அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கலந்து கொண்டார்.
இவ் வாறு ஆண்டுக் கணக்கை குறிப்பிடு வதே
கட்டுப்பாடோ, வரையறையோ அற்ற வியப்பளிக்கும் இந்துத்துவ
வரலாறு என்பதைச் சார்ந் தது. ஆனால், இந்து
கலாச்சாரத்துடன் தொடர்புடைய எது ஒன்றினைப் பற்றி குறிப்பிடும்போதும் இந்த 5000 ஆண்டுக் கணக்கு பொதுவாகப் பயன்படுத்தப்
படுகிறது. வேதங்கள் குறைந் தது 5000 ஆண்டுகளுக்கு
முன்பு கூறப்பட்டவை; ஆயுர்வேதம். அதுவும் 5000 ஆண்டு களுக்கு முன்பு கண்டு பிடிக்கப்பட்டது.
யோகா, அதுவும் 5000 ஆண்டுகள் பழமையானது. இந்திய கலை, கணிதம், ஜோதிடம், இலக்கணம் எந்த
ஒன்றை நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அவை யெல்லாம் 5000 ஆண்டு கால பழமை வாய்ந்தவையே.
உண்மையைக் கூறுவதானால், இந்தியாவில் உள்ள எதுவுமே 5000 ஆண்டு கால பழமை வாய்ந்தது அல்ல. இந்தியாவில்
பழமையானது என்று கூறப்படும் ஹரப்பா நாகரிகத் தின் காலமே, அங்கிருந்த தாழிகள், கட்டடங்கள், முத்திரைகள் ஆகிய
வற்றைக் கொண்டு கி.மு. 2500
காலத் தைச் சேர்ந்தது என்று கூறப்படுகிறது.
நமது இலக்கியங்களில் பழமையானது என்று கூறப்படுவது 3500 ஆண்டு களுக்கு முன்பு எழுதப்பட்டதுதான். கி.மு. 500
க்கு முந்தையது என்று குறிப் பிடப்பட இயன்ற
கலைகள் மிகமிகக் குறைவானவையே. இந்தி யாவின் முக்கியமான கணித சாதனை களே
இடைக்காலத்தில் நிகழ்த்தப் பட்ட வைதாம்.
தற்கால யோகாவில் பின்பற்றப் படும் ஆசனங்களில்
பெரும்பாலானவை விவரிக்கப்பட் டுள்ள வரலாறு ஒரு நூற்றாண்டு காலத்துக்கும் சற்று
மேலா னதுதான்.
கலியுகத்தினாலோ, முஸ்லிம் களின்
படையெடுப்பாலோ, ஆங்கிலேய ஆதிக்கத்தினராலோ கெட்டுப் போவ தற்கு
முன்பு
இந்தியா இருந்த காலம் ஒரு பொற்காலம் என்று
நம்புபவர்களின் கைகளில் இந்த போலியான 5000 ஆண்டு பழமை என்ற விளையாட்டு சிக்கிக் கொண்டு சீரழிகிறது.
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்