-விடுதலை ஞா.ம.,9.1.16
வியாழன், 30 ஜூன், 2016
சிந்துச் சமவெளி திராவிடர் நாகரிகமே!
தமிழகத்தின் புதிய கற்கால கோடரி- கண்டுபிடிப்பு
சிந்து சமவெளி நாகரிக எழுத்து களுடன் புதிய கற்காலக் கோடரி தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. நம் நாட்டில் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு பொறிக்கப்பட்ட கல் ஆயுதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழரின் எழுத்துத் தொன்மையை உறுதிப்படுத்தும் மிகச் சிறந்த சான்று இது என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். நாகப்பட்டினம் மாவட் டம் மயிலாடுதுறை வட்டம் செம்பியன் கண்டியூரில் கடந்த பிப்ரவரியில் மேற்கொண்ட கள ஆய்வில் இரண்டு புதிய கற்காலக் கைக்கோடரிகள் கண்டெடுக்கப்பட்டன.
அவற்றில் ஒன்றில் 3,500 ஆண்டு களுக்கு முற்பட்ட (கி.மு.15,00) மொஹஞ் சதாரோ - _ ஹரப்பா பண்பாட்டுக் கால எழுத்துகள் பொறிக்கப்பட்டுள் ளது தெரிய வந்துள்ளது என்று தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் சிறப்பு ஆணையர் சிறீதர் தெரிவித்தார்.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற சிறப்புச் சொற்பொழிவில் பேசிய அவர் இது குறித்து கூறியது.
இதுவரை இதுபோன்ற குறியீடுகள் தமிழகப் பாறை ஓவியங்களிலும் இரும்புக்கால ஈமச்சின்னங்களில் இருந்து கிடைத்த பானை ஓடுகளிலும் மட்டுமே கிடைத்துள்ளன.
தற்போது கற்கருவி கிடைத்த செம்பியன் கண்டியூரில் இரும்புக் காலத்தைச் சேர்ந்த தாழிகள், கருப்பு -_ சிவப்பு மட்கலன்கள், குறியீடு பொறிக் கப்பட்ட பானை ஓடுகள் மற்றும் எலும்புத் துண்டுகள், சாம்பல் நிற மட் கலன்கள் ஆகியவையும் கிடைத் துள்ளன.
கருவியில் நான்கு பொறிப் புகள் உள்ளன. முதற்பொறிப்பு குத் திட்டு அமர்ந்த நிலையில் உள்ள மனித வடிவுடையதாகவும். அடுத்த பொறிப்பு கோப்பை வடிவிலும், மூன்றாவது பொறிப்பு ஏறத்தாழ முத்தலைச் சூலம் போன்ற அமைப்பிலும், நான்காவது பொறிப்பு குத்திட்ட பிறை வடிவின் நடுவில் ஒரு வளையத்தை இணைத்தது போலவும் உள்ளது.
தொல்லியல் ஆய்வாளர் அய்ராவ தம் மகாதேவன் ஆய்வின்படி, முதலிரு பொறிப்புகளுக்கும் முரு என்றும் அன் என்றும் பொருள் கொள்ளலாம்.
புதிய கற்காலக் கற்கருவியில் இவ்வெ ழுத்துப் பொறிப்புகள் கிடைத்ததன் மூலம் புதிய கற்காலத் தமிழக மக்கள் ஹரப்பா பண்பாட்டு மற்றும் நாகரிகக் கூறுகளைத் தொடர்ந்து பின்பற்றிய வர்கள் என்பது உறுதியாகிறது என்றார் சிறீதர்.
இக்கண்டுபிடிப்பின் மூலம் சிந்துவெளி நாகரிகமும், தொல் தமிழ் நாகரிகமும், திராவிட நாகரிகம் என உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ‘தினமணி’யின் முன்னாள் ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான அய்ரா வதம் மகாதேவன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் சிந்துவெளி எழுத் துகள் பொறித்த ஒரு கற்கால கருவி என்பதுதான் இக்கண்டுபிடிப்பின் முக்கியத்துவமாகும். இப்புதிய கற்காலக் கருவி சுமார் கிமு.1,500-க்கு மேற்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
கி.மு. 1,000த்துக்குப் பிறகு, இரும்பு வந்த பிறகு இக்கருவிகள் உருவாக்கப்படவில்லை. இதில் ஒரு பீடத்தில் உட்கார்ந்து இருக்கும் உருவத்தை அக்காலக் கடவுள் என்றும், அது முருகனைக் குறிக்கிறது என்றும் கூறுகிறார் அவர். இதே உருவங்கள் பொறித்த பெருங்கற்கால பானைகள் திண்டிவனம் சானூர், திருநெல்வேலி மாங்குடி கேரளத்தில் முசிறி ஆகிய இடங்களில் கிடைத்துள்ளது என்று அய்ராவதம் மகாதேவன் தெரிவித்தார்.
(‘தினமணி’ 2.5.2006)
குறிப்பு: சிந்துசமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமே என்று பொய்ப் பிரச்சாரம் செய்யும் பார்ப்பனர்களுக்கு இந்த ஆதாரம் மரண அடியாகும்.
-விடுதலை ஞா.ம.9.1.16
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)