• Viduthalai
(1995-ஆம் ஆண்டுவரை இந்தியாவின் மிகப் பெரிய அருங்காட்சியகமான மும்பை பிரின்ஸ் வேல்ஸ் அருங்காட்சியகத்தின் நுழைவு வாயிலில் திராவிட இனக்குழு என்பது ஆங்கிலத்தில் 'திராவிடன் சிவிலைசேசன்' (Dravidan Civilization) என்று இருந்தது. 1995ஆம் ஆண்டு முதல் முதலாக அங்கு சிவசேனா ஆட்சி அமைந்தது, முதலமைச்சராக மனோகர் ஜோஷி பதவியில் அமர்ந்தார். அப்போது அவர்கள் செய்த முதல் வேலை திராவிட சிவிலைசேசன் என்று இருந்த கல்வெட்டை அகற்றி அங்கு 'அன்னோன் சிவிலைசேசன்' (Unknown Civilization) (அடையாளம் தெரியாத இனக்குழு) என்று மாற்றினார்கள். ஹிந்துத்துவவாதிகள் திராவிடம் என்ற பெயரைக் கேட்டாலே காந்தாரம் முதல் குமரிவரை வெறுப்பாகத்தான் பார்க்கிறார்கள் என்பதற்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டு)
தெற்கு பாகிஸ்தானின் தூசி நிறைந்த தற்போதைய சிந்து சமவெளிப்பகுதிகள், உலகின் மிகவும் பழைமைவாய்ந்த நகரங்களின் எஞ்சியவையாக இருக்கின்றன. இவற்றைப்பற்றி பெரும்பாலான மக்கள் ஒரு போதும் அறிந்திருக்கவில்லை.
இந்தியாவில் ஹரப்பாவை அறிந்ததை போன்று மொகஞ்சதாரோவைப் பற்றி நிறைய அறிந்திருக்கவில்லை. மொகஞ்சாதோரோ மூன்று கட்டங்களாக எழுந்து அழிந்துள்ளது.
ஒன்று 4000 ஆண்டுகளுக்கு முன்பு திராவிட நாகரீகம், 2500 ஆண்டுகளுக்கு முன்பு பவுத்த நாகரீகம், அதன் பிறகு கிறிஸ்துபிறப்பிற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு - அதன் பிறகு சில ஆண்டுகளில் அழிந்துபோன கிரேக்க இந்திய நாகரீகத்தை கொண்ட மக்கள் குழு சிந்து சமவெளி நாகரீகத்திற்கு பிறகு வந்த இரண்டு நாகரீகங்களும் திராவிட நாகரீகத்தை பாதுகாத்தன.
ஆங்கிலேயர்கள் 1807 ஆம் ஆண்டு அங்கு சென்ற போது பழங்கால பவுத்த ஸ்தூபம் காலத்தால் பழுதடைந்த தெருக்களில் உயர்ந்து நிற்கிறது. அத்துடன் பெரிய சமூக குளம், முழுமையான விரிவான படிகளுக்கு கீழே இருந்தது. அங்கு சில ஆடுமாடு மேய்க்கும் நாடோடிகளின் கூடாரங்களைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை.
தெற்கு பாகிஸ்தானின் லார்கானா எனும் தூசி நிறைந்த நகருக்கு வெளியே ஒரு மணி நேரப்பயணத்தில் மொகெஞ்சதாரோ பகுதிஉள்ளது.
இன்றைக்கு அந்த நகரின் இடிபாடுகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. 4,500 ஆண்டுகளுக்கு முன்பு, உலகின் முந்தைய கால நகரங்களில் ஒன்றாக இது இருந்தது என்பது மட்டுமின்றி, செழிப்பான பெருநகரில் இடம் பெறக் கூடிய உயர்ந்த நவீன கட்டமைப்புகளை கொண்டிருந்தது.
மொகஞ்சதாரோ என்றால், வட்டார மொழியில் (மொகன்+சதாரோ) இறந்த மனிதர்களின் குன்று அல்லது மேடு என்று பொருளாகும். உலோகக் காலத்தின் போது வடகிழக்கு ஆப்கானிஸ்தான் முதல் வடமேற்கு இந்தியா வரையிலான ஆட்சிக்கு உட்பட்டிருந்த, ஒரு காலத்தில் செழுமையாக இருந்த சிந்து சமவெளி (ஹரப்பா என்றும் அறியப்படுகிறது) நாகரீகத்தின் பெரிய நகரமாக இருந்தது. ஏறக்குறைய 40,000 குடிமக்கள் இங்கு வசித்ததாக நம்பப்படுகிறது.
இது ஒரு நகர மய்யமாக மெசபடோமியா, எகிப்து ஆகிய நாடுகளுடன் சமூக, கலாச்சார, பொருளாதாரம் மற்றும் ஆன்மீகத் தொடர்புகளைக் கொண்டிருந்தது.
ஆனால், ஏறக்குறைய அதே காலகட்டத்தில் செழித்தோங்கி வளர்ச்சி பெற்ற பண்டையகால இதர நகரங்களான எகிப்து, மெசபடோமியா ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது, மொஹஞ்சதாரோ குறித்து சிலர் மட்டுமே அறிந்திருக்கின்றனர். கி.மு.1700 ஆம் ஆண்டில் இந்த நகரம் கைவிடப்பட்டது. ஏன் இங்கு குடியிருந்த மக்கள் வெளியேறினர் அல்லது அவர்களை யார் வெளியேற்றினார்கள் என்பது இன்றுவரை புரியாத ஒன்றாக உள்ளது.
இந்தப் பகுதியில் சில செங்கற் கட்டடங்கள் இருந்ததாக கேள்விப்பட்டு 1911ஆம் ஆண்டு முதன் முதலில் இந்தப் பண்டைய நகரத்துக்கு தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் வருகை தந்தனர். எனினும், இந்த செங்கற்கள் எந்தவிதத் தொன்மையும் கொண்டவை அல்ல என்று அன்றைய இந்திய தொல்லியல் துறை நிராகரித்தது. இந்த இடம் தொடர்ந்து பல ஆண்டுகளாகவே அமைதியான இடமாக இருந்து வருகிறது. பின்னர் இந்திய தொல்லியல் துறை அதிகாரியான ஆர்.டி. பானர்ஜி என்பவர், பவுத்தர்கள் வழக்கமாக தியானம் செய்யும் திட்டு போன்ற கட்டமைப்பை, புதைக்கப்பட்ட ஸ்தூபியை பார்த்ததாக கூறினாராம்.
அவரது இந்த ஆரம்ப கட்ட ஆய்வைத் தொடர்ந்து, மேலும் குறிப்பாக பிரிட்டிஷ் தொல்லியலாளர் சர் ஜான் மார்ஷெல் போன்றோர் அதிக எண்ணிக்கையிலான அகழாய்வு பணிகள் மேற்கொள்வதை நோக்கி இது இட்டுச் சென்றது. இறுதியில் மொஹஞ்சதாரோ, 1980ஆம் ஆண்டு யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய இடங்களில் ஒன்று என பெயரிடப்பட்டது.
எஞ்சியிருந்தவற்றில் கண்டுபிடிக்கப்பட்டதன் வாயிலாக இதற்கு முன்பு வரலாற்றில் காணப்படாத நகரமயமாக்கலின் ஒரு நிலையாக அந்த நகரம் இருந்தது தெரியவந்தது. சிந்துச் சமவெளியின் மொகஞ்சதாரோவை சிறப்பாக பாதுகாக்கபட்ட சிதைவு என யுனேஸ்கோ பாராட்டுகிறது.
சமகால நகரங்களுக்கு அப்பால் இந்த நகரம் மிகவும் வியப்பான அம்சங்களுடன் கூடிய ஒரு சுகாதார கட்டமைப்பை ஒருவேளை கொண்டிருந்திருக்கலாம். மெசபடோமியா, எகிப்து நகரங்களில் கழிவு நீர் மற்றும் தனிநபர் கழிப்பறைகள் பணக்காரர்களின் ஆடம்பரமாகக் காணப்பட்டன. மொஹஞ்சதாரோவில் மறைக்கப்பட்ட கழிப்பறைகள் மற்றும் மூடப்பட்ட வடிகால்கள் எல்லா இடங்களிலும் இருந்தன.அகழாய்வு பணிகள் தொடங்கியது முதல், 700 கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
கீழடியில் தொடர்ந்து கிடைத்துக்கொண்டு இருக்கும் உறைகிணறுகள் மற்றும் இதர குடியிருப்பு கட்டுமானங்களும் இதர தொழிற்கூடங்களும் மொகஞ்சாதரோவில் அன்று கிடைத்தவைகளும் ஒரே மாதிரியானவை என்பது கூடுதலான தகவல்.
"12 மீட்டர் மற்றும் 7 மீட்டர் நீள அகலங்களைக் கொண்ட பொது உபயோகத்துக்கான பெரிய குளியல் மற்றும் தனிநபர் குளிப்பதற்கான அறையும் இருந்தன. நம்ப முடியாத அளவுக்கு பல தனி வீடுகளில் கழிப்பறைகள் காணப்பட்டன. நகரம் முழுவதும் அமைக்கப்பட்ட அதிநவீன, சுகாதார கட்டமைப்பு மூலம் கழிவுகள் மறைவாக அகற்றப்பட்டன.இன்றைக்கு நாம் வாழ விரும்பும் ஒரு நகரத்தில் உள்ளது எல்லாவற்றையும் 4500 ஆண்டுகளுக்கு முன்பே அமைத்து வாழ்ந்துள்ளனர்” என்கிறார் புரூக்ளின் பிராட் மய்யத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் மற்றும் இணைப் பேராசிரியர் உஸ்மா இசட் ரிஸ்வி. இவர் வீடு மற்றும் கழிவுகளின் வீடு. (ஜிலீமீ ஙிஷீபீஹ், ணீஸீபீ tலீமீ ஞிஷீனீமீstவீநீணீtவீஷீஸீ ஷீயீ கீணீstமீ) என்ற தலைப்பில் மொஹஞ்சதாரோ குறித்த கட்டுரையை 2011ஆம் ஆண்டு எழுதியுள்ளார்.
தவிர மொஹஞ்சதாரோவில் வசித்த குடிமக்கள் தங்களின் சுற்றுச்சூழலை அறிந்திருந்தனர். இந்த நகரம் சிந்து ஆற்றின் மேற்குப் பகுதியில் இருந்ததால், ஆண்டு தோறும் ஏற்படும் வெள்ளத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான வடிகால் முறைகளை, வெள்ளத்தில் இருந்து தற்காத்துக்கொள்ளும் தளங்களை திறமையாக உருவாக்கினர். கீழடியிலும் அகரத்திலும் வைகை ஆற்றில் வெள்ளத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள சில கட்டுமானங்களை அமைத்திருந்தனர்.
மேலும் அவர்கள் மத்திய ஆசியாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகள் வரை விரிவாக்கம் பெறும் வகையிலான கடல்வழி கட்டமைப்பின் முக்கிய பங்கெடுப்பாளர்களாக திகழ்ந்தனர். பல நூற்றாண்டுகளாக அவர்கள் நுணுக்கமாக செதுக்கப்பட்ட மட்பாண்டங்கள், நகைகள், சிலைகள் மற்றும் வேறு பொருட்களையும் தயாரித்தனர். அவை மெசபடோமியா, எகிப்து மற்றும் கிரேக்கம் வரை எல்லா இடங்களுக்கும் அனுப்பப்பட்டன
இன்று மொகஞ்சாதரோவிற்கு பாகிஸ்தானின் இதர பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் அரிதாகவே சுற்றிப்பாக்க வருகின்றனர். வெளிநாட்டு பயணிகளும் அரிதாகவே வருகின்றனர்.
பழங்கால கட்டடம் போன்ற தெருக்கள் கிணறுகள் அதன் உயரமான சுவர்கள், மூடப்பட்ட வடிகாலையும் கொண்டிருந்தன.இவை அனைத்தும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைக்கப்பட்டவை
மொஹஞ்சதாரோவாசிகள் சுகாதாரம் மற்றும் கழிவு நீர் வெளியேற்றல் கட்டமைப்புகளை அதி நவீன அம்சங்களை கொண்டதாக மட்டுமின்றி, அதில் திறன் பெற்ற கலைஞர்களாகவும் தொடக்க கால இதர நாகரீகங்களை சேர்ந்த குடிமக்களுக்கு மாறாக, அமைத்திருந்தனர். பல கருவிகளை கட்டுமானத்திற்கு உபயோகித்தனர் என்று தொல்லியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
“அனைத்து செங்கற்களும் ஒரே வடிவத்தில் இல்லாவிட்டாலும் கூட 4;2;1 என்ற விகிதத்தில் இருந்தன” என்பது முக்கியமாகும். தங்கள் நகரம் எப்படி இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள் என்ற உணர்வு இருந்திருக்கிறது.
இந்த செங்கற்கள் சூரிய ஒளியில் காயவைத்தும் மற்றும் முடிவாக சூளை தீயில் வேக வைத்தும் உருவாக்கப்பட்டன. குடியிருப்புகள் பொழுதுபோக்குத் தலங்கள் மற்றும் ஆடம்பரமான கட்டடங்கள் கட்டப்பட்டபோது, மொஹஞ்சதாரோ நகரம் தொழில்முறையிலான அமைப்பு ஆகும் - அங்கு உள்ள வீடுகள் மற்றும் இதர பகுதிகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டாதாக இருந்தது.
இதன் மூலம் அங்கு வழிபாட்டுக் கட்டடக்கலை (கோவில்கள், இதர பலிபீடங்கள் அங்கு அமைக்கப்படவில்லை காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நதிக்கரை நாகரீக நகரங்களில் கோவில்கள் வழிபாட்டுத்தலங்கள் தனித்து முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக அடையாளமிடப்பட்டது. எடுத்துக்காட்டாக எகிப்து கோவில்கள், மாயா வழிபாட்டுத் தலங்கள், மொசபடோமிய கடவுளர்களின் பூஜைக்கான இடங்கள் போன்றவைகள் ஹரப்பாவிலும் மொகஞ்சாதரோவிலும் கிடைக்கவில்லை. கீழடியிலும் இன்றுவரை கிடைக்கவில்லை.
12 குறுகிய தெருக்கள் 90 டிகிரி கோணத்தில் சரியான திட்டமிடப்பட்ட அமைப்பில் பரந்து விரிந்திருந்தன. குளியல் அறைகள் உள்ளிட்ட, உள்ளூர் வீடுகளின் கதவு வழிகள், எந்த ஒரு வீடுகளிலும் அல்லது கட்டடங்களிலும் இன்றைக்கு காண்பதைப் போல அல்லாமல் நடைமுறைக்கேற்ற நிலைக்கதவுகளைக் கொண்டிருந்தன.
மொஹஞ்சதாரோ அருங்காட்சியகத்தில், காளை மற்றும் ஆடுகளின் அம்சத்தைக் கொண்ட நூற்றுக்கணக்கான முத்திரைகள், தோண்டி எடுக்கப்பட்ட சிலைகள், நகைகள், கருவிகள், பொம்மைகள் மற்றும் மட்பாண்ட துண்டுகள் இருந்தன - நன்கு பாதுகாக்கப்பட்டன.
கலைப்பொருட்களுக்கு இடையே நகைகள் அணிந்த சிக்கலான சிகை அலங்காரம் கொண்ட இளம் பெண் சிற்பம் உள்ளது. கீழடியிலும் இதே போன்று ஒரு சிற்பம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது
“உடல் அலங்காரம் மற்றும் உடல் பராமரிப்பு என்று வரும்போது “அங்கு வசித்த குடிமக்கள் தங்களைத் தாங்களே எப்படி கவனித்துக் கொண்டனர் என உள்ளார்ந்த விஷயங்களை இது அளிக்கிறது. வடிவவியல் மீதான புரிதல் அங்கே இருந்தது தெளிவாகிறது. அழகுபடுத்துதல் பற்றிய புரிதல் அங்கே இருந்தது என்பதும் தெளிவாகிறது” என்றார்.
எனினும், குடிமக்களின் வாழ்க்கை மற்றும் காலங்களைப் பற்றி இன்னும் அதிகமாக அறிந்துகொள்ளக்கூடிய ஒரு முக்கிய விவரம் தொடர்ந்து அறியப்படாமல் உள்ளது.
பண்டைய எழுத்துகள் பெரும்பாலும் நாகரீகங்களின் ரகசியங்களை சொல்லும் நிலையில், மொஹஞ்சதாரோ நிகழ்வில் அவ்வாறு சொல்லப்படவில்லை. சிந்து சமவெளி எழுத்துகள் என்று அறியப்படுவதை அதன் குடிமக்கள் உபயோகித்தனர். “இது படம் அடிப்படையிலான மொழியானதாக இருக்கிறது. இது 400க்கும் மேற்பட்ட அடையாளங்களைக் கொண்டுள்ளது. இது இன்னும் பகுப்பாய்வு செய்யப்படவில்லை,” மொகஞ்சதாரோவுக்கு உண்மையில் என்ன நடந்தது என்பது இன்னொரு தீர்க்கப்படாத புதிராகவே இருக்கிறது.
பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து, 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானில் தீவிர மழை வெள்ளப் பேரழிவுக்குப் பின்னர் இந்த நகரம் பாதிக்கப்பட்டிருக்குமோ என்ற தொல்லியலாளர்கள் உண்மையில் அச்சப்படுவதை விடவும் குறைவாகவே இந்தப் பகுதியில் வெள்ளம் சூழ்ந்து மொகஞ்சதாரோ சேதம் அடைந்திருக்கிறது.
இதற்கு காரணம் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் அமைத்த வடிநீர்க்கால்வாய்களின் எச்சங்கள் மூலம் வெள்ள நீர் விரைவாக அப்பகுதியிலிருந்து வெளியேறி உள்ளது, அதாவது பாகிஸ்தானின் இன்றைய நாகரீக நகரங்கள் கூட கடுமையாக பாதிப்படைந்த போது மொகஞ்சதாரோ சேதமின்றி இருந்தது. மொஹஞ்சதாரோ பண்டைய நாகரீகத்தின் ஒரு பொக்கிஷம். மதுரை - காராச்சி தொடர்பு என்பது சுதந்திரத்திற்கு முன்புவரையிலும் பெரும் உறவாக இருந்தது.
பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு அதன் பிறகான பாகிஸ்தான் - இந்திய உறவு முரண்களுக்கு இடையே திராவிட நாகரீகம் திருவிழாவில் பிரிந்துபோன இரட்டை சகோதரிகளாக தவிக்கிறது.