பெரியார் திடலின் Historical Research Centre ஏற்பாடு செய்த “குடியம் குகைக்கு” (நிலவியல் படி கோண்ட்வானா காலகட்டத்தை சேர்ந்த நிலப்பகுதி) செல்லும் ஒரு அறிவியல் பயணத்திற்கு ஆயத்தமானது.
ஞாயிறு அதிகாலை உற்சாகத்துடன் விடிந்தது. பெரியார் திடலில் 6.45 amக்கு பேருந்து கிளம்பி, பூந்தமல்லியில் இறுதியாக எல்லோரையும் ஏற்றிக்கொண்டு, 36 பேர் கொண்ட குழுவுடன் திருவள்ளூர் மாவட்டத்தின் பூண்டி நீர்த்தேக்கம் நோக்கி, பேருந்து சென்று கொண்டிருந்தது. கடல்சார் வரலாற்று ஆய்வர், திரு ஒரிசா பாலு (archaeologist) அவர்கள் எங்கள் பயணத்தின் வழிகாட்டியாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு... அழைத்து சென்றார்.
இப்படியாக பூண்டி நீர்தேக்க பகுத்திக்கு காலை8.30 மணிக்கு வந்து சேர்ந்தோம். ஒரிசா பாலு அவர்கள் சத்திய மூர்த்தி நீர்த்தேக்கம் என்றழைக்கப்பட்ட நீர்த்தேக்க பகுதியை சுற்றி இருக்கும் வளமான இயற்கை சூழலை பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். சென்னையிலிருந்து ஒரு 90 km தொலைவில் வாழும் அப்பகுதி மக்கள் இன்னும் யூரியா போன்ற உரங்களை உள்நுழைய அனுமதிக்காமல் இயற்கை விவசாயம் செய்வதாகவும் பழைய பயிர்வகைகளான “கார் சம்பா” போன்ற பயிர்வகைகளை அங்கு காண முடியும் எனவும் மிக பழமையான பலவகைப்பட்ட தாவர வகைகள் அந்த மக்களின் கூட்டு முயற்சியால் இன்னும் அழியாமல் பாதுகாக்கப்படுவதாக சொல்லிக் கொண்டிருந்தார்.
பூண்டி நீர்த்தேக்கத்தில் இறங்கி காலை உணவை முடித்து,காலை 9.30 மணிக்கு குடியம் குகை நோக்கி பயணமானோம்.
குழு வழிகாட்டி ஒரிசா பாலு
ஒரிசா பாலுவுடன் ஆராய்ச்சி மாணவர் தீபிகா
காலப் பயண குழுவினர்
ஒரிசா பாலுவுடன் ஆர்.டி.வீரபத்திரன்
அரும்பாக்கம் சா.தாமோதரன்
செ.ர.பார்த்தசாரதி
தளபதி பாண்டியனுடன் செ.ர.பார்த்தசாரதி
தளபதி பாண்டியனுடன் அரும்பாக்கம் சா.தாமோதரன்
பூண்டி நீர்த்தேக்கம் வாயிலில் உள்ள பெரியார் நினைவு கல்வெட்டு
பூண்டி நீர்த்தேக்கம் கரையில் வளர்ந்துள்ள மருள் ஊமத்தை மூலிகை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக