வியாழன், 28 பிப்ரவரி, 2019

திராவிடர் வரலாற்றை குழி தோண்டிப் புதைக்க சதி!




அரியானாவில் உள்ள ராகிகடி என்ற பகுதியில் உள்ள பண்டைய திராவிட நாகரிகத்தின் எச்சங்கள் இன்றும் உள்ளன. அரியானாவின்  ஃபதேகாபாத் பகுதியில் உள்ள ராகிகடி என்ற சிற்றூரில் 900 ஏக்கர் பரப்பளவில் இன்றும் வெளிப்படையாக அய்ந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திராவிட நாகரிகத்தின் எச்சங்கள் தெரிகின்றன. சமீபத்தில் புனே பல்கலைக் கழக வரலாற்றுப்பேராசிரியர் மற்றும் ரோகதக் அகழ்வாராய்ச்சி அமைப்பின் கூட்டு ஆய் வுக்குழு இந்தப் பகுதியை ஆய்வு செய்து அய்ந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மதச் சடங்குகள் எதுவுமின்றி நடந்த திருமணம் மற்றும் புதைகுழியில் எந்த ஒரு மதச்சடங்கு நடந்த அடையாளம் இல்லை என்பதை சான்றுகளோடு கூறியிருந்தது,

இந்த நிலையில் அந்த 900 ஏக்கர் பகுதியை ஆய்வு செய்ய மத்திய அரசு தடை விதித்த நிலையில் அதற்காக ஒதுக்கப்படும் நிதியும் இந்த நிதிநிலை அறிக்கையில் குறிப் பிடப்படவில்லை இதன் மூலம் மீண்டும் ஹரப்பா அகழாய்வை மண்மூடிப்போட மறைமுக உத்தரவிட்டுள்ளது.

இந்திய தீபகற்பத்தில் உலகின் நதிக்கரை நாகரிகத்தின் தாயான சிந்துநதி நாகரிகம் தோன்றியது, இந்த நாகரிகம் இன்றைய கட்டடக்கலையைப் போன்றே மிகவும் உச்சநிலையை அடைந்துள்ளது, நேர்த்தியான சாலைகள், சுகாதாரமான வீடுகள் என நாகரிகத்தின் உச்சத்தில் இருந்தது. இதில் முக்கியமாக அந்த நாகரிகத்தில் போர் குறித்த ஆயுதங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதன் மூலம் வணிகம் மற்றும் விவசாயத்தில் ஈடுபட்ட அம்மக்கள் அமைதியான ஒற்றுமை யுணர்வுடன் கூடிய சமூக வாழ்க்கை வாழ்ந் தனர் என்று தெரியவந்துள்ளது.

முக்கியமாக இந்த நாகரிகத்தின் எச்சங்கள் தமிழகத்தின் கீழடி, ஆதிச்சநல்லூர், போன்றவற்றுடன் கொண்ட நேரடி தொடர் பானது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. இதன் மூலம் இந்திய தீபகற்பம் முழுவதும் ஆரியர்கள் அல்லாத திராவிட நாகரிகம் இருந்தது என்பதற்கு உறுதியான சான்றுகள் கிடைத்துள்ளன.  இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புனேவைச்சேர்ந்த டெக்கன் காலேஜ் ஆப் ஆர்கியாலஜி என்ற கல்வி நிறுவனமும் அரியானாவின் ரொகதக் தனியார் அகழாய்வு அமைப்பு ஒன்றும் ராகிகடி பகுதியில் ஆய்வு மேற் கொண்டன, அப்போது அங்கு திருமணம் தொடர்பான சில சான்றுகள் மற்றும் இறந்தவர்களின் புதைகுழிகள் கண்டுபிடிக் கப்பட்டன.

இதில் வியப்பிற்குரியது என்னவென்றால் அன்றைய காலகட்டத் தில் திருமணத்தில் இன்று உள்ளது போல் தீயை வலம் வருதல், இதர சடங்குகள் எதுவுமே நடந்ததாக சான்றுகள் இல்லை, அது ஒரு எளிமையான கொண்டாட்டமாக நடந்துள்ளது என்பதற்கான அகழாய்வு சான்றுகள் கிடைத்துள்ளன. மேலும் இளம் இணையர்களின் எலும்புக்கூடுகள் ஒன் றாக கண்டுபிடிக்கப்பட்டன. இறந்துபோன இளம் இணையர்களை ஒன்றாகப் புதைப்பது தமிழகத்தில் பல இடங்களில் அகழாய்வில் கிடைத்த சான்றுகள் ஆகும். அதே போல் சங்ககாலப்பாடல்களும் இதை உறுதிசெய்கின்றன.

புனே அகழாய்வு நிறுவனம் வெளி க்கொண்டுவந்த இந்த ஆய்வுகள் சிந்து சமவெளிகாலத்தில் ஆரியக் கலாச்சாரம் முற்றிலும் இல்லை, அங்கு கடவுள் வழிபாடு போன்றவை கிடையாது என்று முற்றிலும் உறுதியானது. இதன் மூலம் பல்வேறு சந்தேகங்களுக்கும் முடிவு கிடைத்துள்ளது. புனே அகழாய்வியல் ஆய்வு குறித்த முடிவை வெளியிட 5 ஆண்டுகள் வரை அனுமதி அளிக்காமல் இருந்ததும் குறிப் பிடத்தக்கது, இது குறித்து அகழாய்வுக் குழுத்தலைவர் அரவிந்த் ஜம்கேடேகர் இந்துஸ்தான் டைம்ஸ் இதழில் கடந்த ஆண்டு ஆய்வு முடிவுகள் வெளியிட்ட போது கூறியிருந்தார். (ஹிந்துஸ்தான் டைம்ஸ், 31.8.2018) இந்த நிலையில் இந்திய வரலாறு மற்றும் கலாச்சார ஆய்வு மய்யத்தின் தலைவர் ஜம்கேடேகர் கூறியதாவது, அரியானா மாநிலம் ராகிகடி பகுதியில்  ஆயிரம் ஆண்டுகளாக மண்ணில் மறைந் திருந்த ஹரப்பாவின் உண்மைகளை புதை பொருள் ஆய்வுகள் மூலம்  வெளிக் கொண்டு வந்தனர். முக்கியமாக இளம் இணையர்களின் எலும்புக்கூடுகளை ஆய்வு செய்ததன் மூலம் உலக அகழ்வாய்வு ஆர்வலர்களின் கவனம் இங்கு திரும்பி யுள்ளது. முக்கியமாக அன்றைய கால கட்டத்தில் மக்களிடையே இருந்த கலாச் சாரம் தொடர்பான பல உண்மைகள் வெளிவந்துள்ளன.

மேலும் ராகிகடி பகுதியில் 900 ஏக்கர் பகுதியில் இந்த அகழாய்வை நடத்தவிருந்தோம் இந்த நிலையில் மத்திய அரசும் அரியானா அரசும் அகழாய்வை நிறுத்தச்சொல்லி விட்டன, மேலும் இதற்கான செலவுத் தொகை ஒதுக்குவதையும் நிறுத்திவிட்டது, இந்தப் பகுதியில் நடந்துவரும் வேலையை நிறுத்திவிட்டு உடனடியாக வெளியே செல்லுமாறு அரியானா அரசு கூறியதைத் தொடர்ந்து நாங்கள் அகழாய்வை பாதியில் கைவிட்டுவிட்டு செல்கிறோம் என்று கூறினார்.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அரியானா ராஜஸ்தான் பகுதியில் ஆரிய நாகரிகம் துவங்கிய இடம் என்று கூறும் சரஸ்வதி நாகரிகத்தை தேடிக்கொண்டு இருந்தவர்களுக்கு ராகிகடி பகுதியில் ஆரியக்கலாச்சாரத்தின் அடையாளம் எதுவுமே இல்லாத கலாச்சார எச்சங்கள் கிடைத்துள்ளது, இதன் மூலம் ஆரியர்கள் வெளியில் இருந்துவந்தவர்கள் தான், இங்கு திராவிடநாகரிமே இருந்தது என்ற உண்மை மீண்டும் உறுதியாகியுள்ளது. மேலும் அங்கு அகழாய்வு நடத்தினால் இத்தனை ஆண்டுகளாக தாங்கள் நடத்தி வந்த நாடகம் உலகிற்கு தெரியவரும் என்ற நிலையில் அங்கு தொடர்ந்து நடக்க இருந்த பணியை நிறுத்தியுள்ளது என்று தெரியவருகிறது.

வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது - மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோசியால் சிந்து சமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமே என்று காட்ட பெருமுயற்சி மேற்கொள்ளப் பட்டது. காளையை குதிரையாக கிரா பிக்ஸ் மூலம் மாற்றம் செய்வதை எல்லாம் நினைவு கூர்க.

- சரவணா ராஜேந்திரன்
-  விடுதலை ஞாயிறு மலர், 9.2.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக