'திராவிடம்' தமிழ்ச்சொல்லா ?
என்று தொடர்ந்து கேட்பதன் மூலம் தன்னை ஒரு மாபெரும் அறிவாளியாக முகநூலில் காட்டிக் கொள்ளும், போலி தமிழ் "தேசியவியாதிகளே!"...
திராவிடம் என்ற சொல் 'தமிழ்ச்சொல்' இல்லையென்றே வைத்துக் கொள்வோம்..
அதனால் நீங்கள் அடையப் போகும் Orgasm என்ன?
உங்களுக்கான பதிலை இறுதியில் தருகிறேன்.
நான் விலங்கியலில் முதுகலை பட்டம் பெற்றவன்..M.Sc., Zoology.
நான் அறிந்த வரையிலும், Jean-Baptiste Lamarck, Charles Darwin கூற்றுப் படியும்,
மனித இனம் Homo sapiens தோன்றியது ஆப்பிரிக்க கண்டத்தில்.
அவ்வாறு தோன்றிய மனித இனம் பல்வேறு பரிணாம வளர்ச்சியும் பெயரும் பெற்று Homo erectus (Upright man - Primate) என்ற பெயருள்ள மனித இனம் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறி பல்வேறு பகுதிகளிலும் இனக்கலப்பு அடைந்ததன் மூலம் தனித்தனியாகத் தோற்றம் பெற்றனர்.
அப்போது அவனுக்கு மொழி கிடையாது...
காரணம், அவனுடைய ஜீனில் FOXP2 என்ற ஒரு மரபணு கிடையாது. எனவே அவன் மொழி கூச்சல் ஒலி மட்டுமே.
பின்னாளில் அவன் எந்த மொழியில் பேசியிருப்பான் என்று உலக மொழியியல் ஆய்வாளர்கள் தமது ஆய்வுகளை மேற்கொண்டனர்.
பேராசிரியர் டாலர்மேன் அவர்களின் கூற்றுப்படி...
தொன்மையான மொழிகள் என நாம் குறிப்பிடும் பெரும்பாலான மொழிகள் எதுவுமே 6,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை அல்ல.
ஆனால், மொழியின் உண்மையான தொடக்கம் குறைந்தபட்சம் 50,000 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என்பதற்கான சுவடுகள் உள்ளன. அது திராவிட மொழிக் குடும்பமாக இருக்கலாம்.
இவரது ஆய்விற்கு வலு சேர்க்கும் விதமாக பேராசிரியர் போலே அவர்கள்...
பொதுவான தொன்மை மொழி,
இன்றைக்கு உலகில் பேசப்படும் பல்வேறு மொழிகள் பற்றிய ஆதாரங்கள் நிறைய இருந்தாலும், இப்போதைய மொழிகள் அனைத்துமே பொதுவான ஒரு தொன்மொழியில் இருந்து உருவானவையாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்கிறார்.
BBC ன் Royal Society Open Science என்ற மொழி ஆராய்ச்சி அமைப்பு,
பின்னாளில் பேசப்பட்ட மொழி குறித்தும்
திராவிட மொழிகள் மற்றும் அதனை பேசுவோரின் தொல் வரலாற்றையும் ஆய்வு செய்து இவ்வாறு வெளியிட்டது...
தெற்கு ஆசியாவில் ஏறத்தாழ 22 கோடி மக்களால் பேசப்படுவது திராவிட மொழிகளே !
திராவிட மொழி குடும்பத்தைச் சேர்ந்த 80 மொழிகளை, தெற்கு மற்றும் மத்திய இந்தியா மற்றும் இந்தியாவின் அருகே உள்ள நாடுகளில் வசிக்கும் ஏறத்தாழ 22 கோடி பேர் பேசுகிறார்கள்.
மேற்கில் ஆஃப்கானிஸ்தான் முதல் கிழக்கு வங்கதேசம் வரை பரந்து விரிந்திருக்கும் தெற்கு ஆசியாவில் பேசப்பட்டு வரும் "ஆறு மொழி குடும்பத்தைச் சேர்ந்த அறுநூறு மொழிகளுக்கு"
தாயாக திராவிட மொழி குடும்பமே விளங்குகிறது.
இந்த திராவிட மொழிகள் சுமார் 4500 ஆண்டுகள் பழமையானது என்று அந்த ஆய்வின் முடிவு காட்டுகிறது.
எனவே திராவிட மொழி குடும்பத்தில் பழமையான மற்றும் அதிக மக்களால் பேசப்படும் மொழிகள் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என்பது நிரூபணமாகிறது.
சரிப்பா, பதிவின் முதலில் நீ கேட்ட கேள்விக்கும், நீ இப்ப "ஆத்துற" உரைக்கும் என்ன தொடர்பு என்று கேட்பவரா நீங்கள்?
அப்ப கவனமாக படியுங்கள்...
பல்வேறு மொழியியல் அறிஞர்களின் ஆய்வின்படி "வளமான தமிழ் மொழியே கூட ஒரு திராவிட மொழிக் குடும்பத்தின் கிளை மொழியே" எனும் போது
திராவிடம்' தமிழ்ச்சொல்லா ?
என்று தொடர்ந்து கேட்பது "அறிவீனம்"
அல்லவா ?
சரி, நான் உங்களிடம் ஒரு கேள்வியை முன் வைக்கிறேன்....
பெரியார் முன்னெடுத்த திராவிட இயக்கம், போராடி வென்றெடுத்த
இன உணர்வு ,
மொழியுணர்வு
சுயமரியாதை,
சமூக நீதி
பகுத்தறிவு,
மத எதிர்ப்பு கொள்கை,
சாதிய எதிர்ப்பு,
பெண் கல்வி,
பெண்கள் முன்னேற்றம்,
தேவதாசி முறையையும், குழந்தைகள் திருமணத்தையும் தடைசெய்தது,
போன்றவைகளைப் பற்றியெல்லாம் பேசமாட்டோம், வெறும்
'திராவிடம்'
என்ற சொல்லை மட்டுமே தூக்கிக் கொண்டு அலைவோம், என்றால் நீங்கள் உண்மையிலேயே
"Homo sapiens" தானா ?
விமர்சனங்கள் செய்வோர் சற்று கவனமாக வரவும்...
தகுந்த ஆதாரங்களை கை நிறைய வைத்திருக்கும் துணிவில்.....
பெரியாரின் பேரன் நான்.
- கருப்பன் தமிழ், பெரியாரின் பேரன் நான், முகநூல் பக்கம் , 19.4.20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக