திராவிட இயக்க வரலாற்றில் உருவான முதல் தளபதி.பிட்டி.தியாகராயரின் தளபதியாகவே செயல்பட்டவர்.அன்றைய காங்கிரசாராலும்-ஹோம்ரூல் இயக்கத்தினராலும் அதிக தாக்குதலுக்கு உள்ளானவர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் எம்.ஏ படித்து பின்பே சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து சில காலமே பயின்று மேனாட்டில் மருத்துவம் பயில விரும்பி 1889இல் இங்கிலாந்து சென்றார். 1894ல் எம்.பி.சி.எம் என்ற உயர்ந்த பட்டத்தைப் பெற்றார்.
அதன் பின் பிரைட்டன் நகரில் ENT மருத்துவராக பணியாற்றினார்கள்.1896இல் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் எம்.டி பட்டம் பெற்றார். பிரான்சின் பெருநகரான பாரிசில் செவி-மூக்கு-தொண்டை பற்றிய ஒராண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இக்காலக்கட்டத்தில் "கிரேக்க" மொழியைக் கற்றுக் கொண்டார்.
1897ல் சென்னைக்கு திரும்பி இத்துறையில் ஈடு இணையற்ற மருத்துவராக விளங்கினார்.
இவர் கம்பீரமான தோற்றமுடையவர்.ஆறரை அடி உயரமும் உயரத்திற்கேற்ற உடலமைப்பு கொண்டவர்.இவரது தோற்றத்தைக் கண்ட இந்திய அமைச்சர் "மாண்டேகு" வியப்படைந்து தமது இந்திய டைரியில் இவரைப் பற்றி எழுதியிருக்கிறார்.
டாக்டர் நாயர் ஆண்டி செப்டிக் என்ற பெயரில் மாதஇதழை நடத்தினார்.அந்த இதழே இங்கே முதன் முதலில் தோன்றிய மருத்துவ இதழாகும்.
1914ல் மெட்ராஸ் யுனைட்டெட் லீக் திராவிடர் சங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பின்பு திருவில்லிக்கேணி உயர்நிலைப்பள்ளி ஒன்றில் டி.எம்.நாயர் ஆற்றிய உரையில் ஒரு வாக்கியத்தைக் கூறி தனது உரையை முடித்தார்கள்.
[ விழியுங்கள்! எழுங்கள்!! இன்றேல் என்றும் நீவீர் வீழ்ந்துபட்டோராவீர்!!!
-Awake, Arise or be forever fallen! - ]
இவர்தான் முதன்முதலில் சென்னை மெடிக்கல் ரிஜிஸ்ட்ரேசன் சட்டத்தை அரசினர் கொண்டு வர காரணமாக இருந்தார்.
பிறகு பிரிட்டிஷ் இந்திய அரசு அமைத்த தொழிலாளர் கமிசனில் இவரை உறுப்பினராக்கினார்கள்.கமிசன் பணிக்காக இந்தியா முழுவதும் சுற்றி தொழிலாளர்களின் நிலையையறிந்து அறிக்கையை அளித்தார்.பிரிட்டிஷ் அரசின் இந்தியமைச்சர் இவருடைய கருத்தைத்தான் ஏற்றுக்கொண்டார்.
மாண்டேகு செம்ஸ்போர்டு அறிக்கை சட்டம் ஆவதற்கு முன் லண்டன் சென்று " தாழ்த்தப்பட்டோருக்கும் பார்ப்பனரல்லாதோருக்கும் இட ஒதுக்கீடு தேவை என்று வற்புறுத்தினார்.இதற்காக பிரிட்டிஷ் அரசாங்கம் கருத்து தெரிவிக்கத் தடை போட்டும் தளர்ச்சியடையாமல் ஆங்கிலேய அதிகாரிகளை தனிதனியாகச் சந்தித்து தடையை நீக்கி இங்கிலாந்து பார்லிமென்டில் தனது கருத்துகளை எடுத்து வைத்தே சென்னை திரும்பினார்.
"நீங்கள் பார்ப்பனர்களுக்கு பதவிகளை வழங்குகிறீர்கள்.ஆனால் ஹோம்ரூல் இயக்கம் மூலமாக நீங்கள் போராடிக்கொண்டிருக்கும் ஜெர்மானியர்களிடம் பணம் பெறுகிறார்கள்"
"திராவிடநாடு திராவிடருக்கே" என்ற முழக்கத்தை எடுத்து வைத்தவாறு பிரிட்டிஷ் பாராளுமன்ற குழுவிடம் சாட்சியம் அளிக்க லண்டன் சென்ற நாயர் அதற்கு முன்பாகவே 17.7.1919 அன்று மறைந்து போனார்.
டாக்டர் டிஎம்.நாயரின் உடல் லண்டனில் "கோல்டர்ஸ் கீரின்" என்ற இடத்தில் எரியூட்டப்பட்டது.
அவரின் பேச்சுரைகளில் தெறிக்கவிட்ட சில!
1] பாரிஸ்டர் காந்தி தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக கடவுள் படைப்பில் இதென்ன வித்தியாசம் ? இது தவறு என கிளர்ச்சி செய்தாராம். இந்திய நாட்டு வண்டவாளங்கள் எல்லாம் அறிந்த ஒரு வெள்ளையர் காந்தியிடம் போய் "உம் நாட்டில் ஆதிதிராவிட பறையர் எனவும் அவர்களை சேரியில் மட்டுமே குடியிருக்கவேண்டும்மெனவும்,கோயிலுக்குள் வரக்கூடாது எனவும், பார்ப்பனரல்லாதரை சூத்திரன் எனவும் வேசி மகன்கள் எனவும் சொல்லிக்கொண்டே இங்கு வந்து உபதேசமா எனக் கேட்டவுடன் காந்திக்கு மூஞ்சி செத்து போச்சாம்.
african colour -bar-all u hate !
aryan caste-bar- dooms our fate!
2] கடவுளின் தலையில்-கையில்-இடுப்பில்-பாதத்திலிருந்து பிறந்தவர்கள் என பல பிறப்புகளைச் சொல்லுகிறார்கள்.
ஆனால் இங்கிலாந்தில் பல ஆண்டுகளாக வைத்திய தொழில் செய்து வருகிற நான் இம்மாதிரியான டெலிவரி கேசுகளை கண்டதுமில்லை!கேட்டுமறியோன்!
3] எனது அருமை தலைவர் தியாகராயரின் சமூகமான நெசவாள திராவிடர்களுக்கு தேவாங்க பிராமணர் பட்டம் கொடுத்தனர்.அது போலவே பட்டுநூல் வியாபாரிகளை சௌராஷ்டிர பிராமணர்கள்-திராவிட பொற்க்கொல்லர்களை விஸ்வகர்மா பிராமணர்கள் என பிரமோசன் கொடுத்தார்கள்.
ஆனால் திராவிடருக்கு பெயரளவில் பட்டம் கொடுத்து சங்கராச்சாரி முதலான பீடங்களில் நம் தலைவர் தியாகராயர் முதல் வேறெந்த டூப்ளிகேட் பிராமணர்கள் அமரமுடியாது.அமர ஆசைப்பட்டால் "ராமனால் தலையிழந்த சூத்திர சம்பூகன் கதிதான்!
3] ஆரிய இனம் எங்கெங்கு நுழைந்ததோ அங்கெல்லாம் பழங்குடி மக்களை ஒழித்துக்கட்டி அடிமையாக்கு அவர்களின் உல்லாசபுரி வாழ்கையை நிலைநாட்டியிருக்கிறார்கள் என்பதே வரலாறு கூறும் உண்மை.
இங்கிலாந்து நாட்டின் "கெல்ட்ஸ்" பழங்குடிகளை கூடியவரை ஒழித்த இன்று ஆளும் வர்க்கத்தின் முன்னோர்கள் கிறிஸ்தவ மத பரந்த மனப்பான்மை காரணமாக கலப்புமணம் மூலம் இரண்டறக் கலந்து விட்ட இனம்தான் இன்றுள்ள ஆங்கில இனம் என்ற மாஜி ஆரிய இனம்!
ஆனால் இந்நாட்டு ஆரியர்களோ காலணா கொடுத்து வாங்கிய பூணூலொன்றை மாட்டிக்கொண்டு இன்றும் பிறந்தமேனியாகவே இருக்கிறார்கள். வெட்கம்!
அடுத்ததாக நூற்றாண்டைக் கடந்த அவரின் "Mass" வாக்கியங்கள்.
1] சாதிகளால் சூழப்பட்ட இந்தியா ஒரு விபரீதமான நாடு.
2] பார்ப்பான் கெஞ்சினால் மிஞ்சுவான்.மிஞ்சினால் கெஞ்சுவான்.
3] சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும்,எத்தியோப்பியன் தன் நிறத்தை மாற்றிக்கொண்டாலும் பார்ப்பான் தன் பிறவிக்குணத்தை மாற்றிக்கொள்ளவே மாட்டான்.
நெருப்புப் பொறி பறக்கின்ற வகையில் அவர் பேசியதனாலே என்னவோ லண்டனில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் அவர் "மரணமடைய வேண்டும்" என பார்ப்பனர்கள் விசேச அர்ச்சனைகள் செய்தார்கள் என்பதே வரலாறு கூறும் உண்மை.இந்த நிகழ்வுகள் ஏ.டி.பன்னீர் செல்வம்-பெரியார்-அண்ணா-கலைஞர் வரையிலும் தொடர்ந்தது.
இப்படியெல்லாம் தன்னலமற்ற தனிப்பெரும் தலைவன்கள் இம்மக்களுக்காவே பாடுபட்ட வரலாறு திராவிட இயக்கத்திற்கு மட்டுமே உண்டு!
வாழ்க டாக்டர். டி.எம்.நாயர் புகழ்!
- விஜய் கார்த்திக் (திராவிட ஆய்வு) முகநூல் பதிவு, 1.7.20