''திராவிடர்'' என்பதற்கு பதிலாக ''தமிழர்கள்'' என்று வைத்து கொள்ளலாமே என்று கேட்பவர்களுக்கு பெரியாரின் பதில் 👇
''தமிழர்'' என்று சொன்னாலே பார்ப்பனர்கள் தாங்களும் ''தமிழர்கள்'' தான் என்று கூறி அதில் சேர்ந்து கொள்கிறார்கள். நாங்களும் தமிழ்நாட்டில் பிறக்கிறோம், வளர்கிறோம்
தமிழ் பேசுகிறோம். அப்படி இருக்கும் போது எப்படி எங்களை தமிழர்கள் அல்லர் என்று நீங்கள் கூற முடியும் என்று கேட்கிறார்கள்.
ஒரு காலத்தில் ''தமிழர்'' என்பது (திராவிட) பண்பு உள்ள மக்களுக்கு உரிய பெயராக இருந்திருக்க கூடுமானாலும் ஆனால் இன்று அது பொதுப் பெயராக மாறிவிட்டிருப்பதால் அம்மொழி பேசும் ஆரிய பண்புடைய மக்கள் யாவரும் தாமும் ''தமிழர்'' என்று உரிமை பாராட்ட முன் வந்து விடுகிறார்கள். அதோடு ஆரிய பண்பை நம் மீது சுமத்த அந்த சேர்க்கையை பயன்படுத்தி விடுகிறார்கள்.
அவர்களும் நாமும் ஒரு கூட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தான் நாம்
சூத்திரர்களாகி விடுகிறோம். ஆக நம் கூட்டத்தில் இருந்து விலக்கி பேசத்தான் நாம் ''திராவிடர்'' என்று அழைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. நம்மில் ''தமிழன்'' என்று சொல்லும் ஏமாளிகளை தான் பார்ப்பனர்களால் ஏமாற்ற முடியுமே ஒழிய 'திராவிடர்' என்றால் அவர்களால் ஏமாற்ற முடியாது.
தன்னையும் திராவிடன் என்று கூறிக்கொண்டு ஒரு பார்ப்பான் முன் வருவான் ஆனால் உடனே நீ திராவிடனா? திராவிடனுக்கு ஏது? பூணூல் அதை கத்தரித்து கொள் என்போம். அதற்கு துணிவனால் திராவிடருக்கு ஏது நாலு சாதி. நீ ''பிராமணன்'' அல்ல என்பதை ஒப்புக் கொள் என்று கூறுவோம்.
அதற்கு எந்தப் பார்ப்பானும் உடன்பட மாட்டான். அதற்கும் அவன் ஒப்புக் கொண்ட பிறகு அவனைப் பற்றி கவலை ஏது. சாதி வேறுபாடுகள் உயர்வு தாழ்வுகள் ஒழிய வேண்டும் என்பதே நமது ஆசை.
சாதியை கைவிட்டு, சாதி ஆச்சாரத்தை விட்டு அனைவரும் ஒன்றே என்ற கொள்கையை ஏற்க முன் வரும் பார்ப்பானை நாம் ஏன் ஒதுக்கப் போகிறோம்?
விடுதலை 05.10.1948
Harrah's Resort Southern California - Mapyro
பதிலளிநீக்குHarrah's Resort 성남 출장샵 Southern California is a 전라남도 출장안마 casino in 고양 출장샵 Valley Center, California and is open daily 24 hours. The casino's 80000 square foot gaming space Address: 777 강릉 출장안마 Harrah's Rincon WayOpening date: November 18, 2004; 22 오산 출장안마 years ago
Casino near me - MapyRO
பதிலளிநீக்குCasino near me - MapyRO, Casino 인천광역 출장샵 and Casino is Near Reno, Nevada on 구리 출장안마 MapYRO. the location of the casinos near 남원 출장샵 you. Get directions, 당진 출장마사지 reviews 대전광역 출장마사지 and directions for