திங்கள், 13 செப்டம்பர், 2021

திராவிட என்னும் குறிப்புச் சொல் - 1



நண்பர்களே, நான் கவனித்து வந்துள்ள அளவில் திராவிடச் சிந்தனைகளின் ஆதரவாளர்களின் மத்தியில் ஒரு நெருடல் இருப்பதாகத் தெரிகிறது. ”திராவிடம் என்பது தமிழர்களைக் குறிக்காமல் தெலுங்கர், மலையாளி, கன்னடர் உள்ளிட்ட தென்னிந்தியர்கள் அனைவரையும் சேர்த்து குறிக்கும் பொதுச்சொல்லாக இருக்கிறதே. மதராஸ் மாகாணம் இருந்த காலத்தில் வேண்டுமானால் அது தேவைப்பட்ட குறியீடாக இருந்திருக்கலாம். ஆனால், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்து சென்றுவிட்ட பிறகு மொழிவழி தேசியமாகத் தமிழர்களுக்குத் தமிழ்த்தேசியம் தானே சரியாக இருக்கமுடியும். நாம் இன்னும் திராவிடம் என்று பேசிக் கொண்டிருப்பதால் தமிழ்த்தேசிய போலிகள் பல நேரங்களில் கேலி பேசுகின்றனவே” என்று.

திராவிடம் என்பது மொழியியல் ரீதியாகவும், கோட்பாட்டு ரீதியாகவும் இருமுனையில் அணுகத்தக்கதானத் தன்மையைப் பெற்றிருக்கிறது. மொழியியல் ஆய்வுகளின்படி திராவிடம் என்ற சொல் உண்மையில் தமிழைத்தான் குறிக்கிறது. அது தென்னிந்தியாவின் பிற எந்த மொழியையும் குறிக்கவில்லை. அதற்குப் பட்டியல் போட்டுக் கூறத்தக்கதாகப் பல சான்றுகள் உள. மலையாளம் தோன்றி இராத காலகட்டத்தில் தெலுங்கையும் தமிழையும் 'ஆந்திர-திராவிடப் பாஷா' என்ற சொற்றொடரில் குறித்த 7-ம் நூற்றாண்டின் குமரில பட்டர், திருஞானசம்மந்தரை 'திராவிட சிசு' என்றழைத்த ஆதிசங்கரர் தொடங்கி 19-ம் நூற்றாண்டின் ராபர்ட் கால்டுவெல் வரை தமிழைக் குறிக்கத் திராவிடம் என்னும் சொல்லே பயன்பட்டு வந்திருப்பதை ஆய்வுகள் சுட்டுகின்றன.

குறிப்பாக அதன் பயன்பாடு விரிவடையக் காரணமாகக் கூறப்படும் கால்டுவெல் பாதிரியார் தன்னுடைய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலில் தமிழைக் குறிப்பிடும் இடத்தில் dravira or tamil-proper என்று interchangeable ஆக இணைபொருளில் கையாள்கிறார். மொழிக்குடும்பம் என்று வகைப்படுத்தும் போதுதான் பிற தென்னிந்திய மொழிகளைத் திராவிட மொழிக்குடும்பமாக ஒரு குடையின் கீழ் ஒன்று கூட்டுகிறார். திராவிடம் என்பது தமிழ்தான் என்பதற்கு இன்னொரு ஆதாரமாக கிருஷ்ணதேவராயர் இயற்றிய 15-ம் நூற்றாண்டை சேர்ந்த 'அமுக்தமால்யதா' நூலை தெலுங்கு பல்கலை ஆய்வாளர் டாக்டர்.எஸ்.செல்லப்பா குறிப்பிடுகிறார். அதில் 'திராவிடக் குடும்பி' என்ற பதத்தில் தமிழ்க் குடும்பங்கள் சுட்டப்பட்டிருக்கின்றன.

இவ்வாறு கிடைக்கும் மொழியியல் சான்றுகள் மறுக்க இடமளிக்கா வண்ணம் தமிழின் மாற்றுமொழிப்பெயர் தான் திராவிடம் என்றே நிறுவுகின்றன. அத்துடன், மொழியியல் வல்லுநர்கள் தமிழ் என்ற வேர்சொல்தான் வடமொழிப் பயன்பாட்டில் த்ரமில என்று மொழியப்பட்டு மருவி திராவிட என்றானது என்றும் முடிபு எய்துவதை ஒட்டியும்கூட எந்தவித உறுத்தலும் இல்லாது தமிழர்கள் பயன்படுத்தத்தக்கதொரு வார்த்தைதான் திராவிடம். பாரசீகர்களால் சிந்து நதிக்கு அப்பால் வாழ்ந்த அனைவரும் ஹிந்து என்றழைக்கப்பட்டுக் காலப்போக்கில் அப்படியே இந்திய பெருநிலப்பரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பதத்துக்கு 13-ம் நூற்றாண்டுக்கு முன் வரலாறே கிடையாது. ஆனால் இன்றைய தேதியில் அந்த வார்த்தையை விலக்கிவிட்டு இந்திய துணைக் கண்டத்தின் வரலாறை எழுதுவது என்பது இயலாத காரியம். திராவிட என்கிற சொல்லின் பயன்பாடு ஹிந்து என்ற சொல்லின் பயன்பாட்டை விடத் தொன்மையானது. தமிழ் மக்கள், மொழி, கலாச்சாரத்தைக் குறிப்பதாக நேரடி பொருள் கொண்டது.

அப்படியானால், திராவிடம் என்னும் அடையாளத்திற்குள் பிற தென்னிந்திய மொழிகளும் ஒருங்கே அர்த்தப்படும் சூழல் உருவானது எப்படி என்ற கேள்வி பிறக்கிறது. இது கால்டுவெல் ஏற்படுத்தி வைத்த குழப்பம். அவர்தான் திராவிடம் என்னும் தமிழ் சுட்டுக்குள் இதர மொழிகளையும் உள்ளடக்கி குறியீட்டுச் சொல்லாக்கினார். ஆனால் அவர் செய்தது மொழியியல் வகைப்பாடு நோக்கில். கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம் 1856-ல் வெளியானது. அதனையடுத்துத் திராவிடம், திராவிடன் என்கிற சொல்லாட்சி இதழியல் மற்றும் அரசியல் தளங்களிலும் அதிகரிக்கத் தொடங்கியது. அந்த வகையில் சென்னை வெஸ்லி பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்து பின்னர் மாகாண கவுரவ நீதிபதியாக உயர்ந்த ஜான் இரத்தினம் 1882-ல் திராவிடர் கழகம் என்ற அமைப்பை தொடங்கி நடத்தியதுதான் முதல் பதிவாக உள்ளது. இவர் தமிழ்த்தென்றல் திரு.வி.க.வின் நல்வழிகாட்டி (mentor). அச்சமயத்தில் ஊட்டியில் இருந்து சென்னை திரும்பியிருந்த அயோத்திதாசர் ஜான் இரத்தினத்துடன் சேர்ந்து திராவிட பாண்டியன் (1885) பத்திரிக்கையைத் துவக்கி நடத்தினார். திராவிடம் என்னும் சொல்லின் மலர்ச்சிக்கு வித்திட்டவர்களாக இவர்கள் இருவரையும் குறிப்பிடலாம். திராவிட பாண்டியனைத் தொடர்ந்து திராவிட மித்திரன் (1885), திராவிட கோகிலம் (1907) போன்ற இதழ்கள் வெளியாகின. அயோத்திதாசர் 1891-ல் திராவிட மகாஜனசபாவை தொடங்கினார். இந்த அமைப்புகள் மற்றும் இதழ்களின் மையமான ஒற்றுமை - இவைகள் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையைப் பேசியவை என்பதாகும்.

இதன் விளைவுகளில் ஒன்றாகப் பஞ்சமர், பறையர், தீண்டப்படாதார் என்ற இழிச்சொல்களுக்குப் பதிலாக ஆதிதிராவிடர் என்னும் சொல்லால் அவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளத் துவங்கினர். மேலும் மேற்கண்ட இதழ்கள், அமைப்புகள் அனைத்தும் தமிழ்நாட்டு பகுதியை சேர்ந்தவர்களால் துவக்கப்பட்டவை. இதுவரை நாம் பார்த்த திராவிடச் சொல் பயன்பாட்டு புழக்கமும் தமிழ் மண்ணில் மட்டுமே இருந்தது. மகாராஷ்டிராவில் ஜோதிராவ் பூலே அங்குள்ள தாழ்த்தப்பட்டவர்களை ஆதிசூத்திரர் என்ற பெயரால் குறிப்பிட்டதன் விளைவாகவே இங்கும் (தமிழ்நாட்டில்) ஆதிதிராவிடர்கள் என்னும் சொல் புழக்கத்துக்கு வந்ததாக பெ.சு.மணி திராவிடன் நாளிதழ் ஓர் ஆய்வு என்கிற நூலில் குறிப்பிடுகிறார்.

இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் சென்னை மாகாணத்தைச் சார்ந்தவர்களாக இருந்தபோதிலும் ஆந்திராவை சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்கள் தங்களை ஆதிதிராவிடர்கள் என்று அழைத்துக் கொள்ளவில்லை. ஆதிஆந்திரர் என்றுதான் அழைத்துக் கொண்டார்கள். அந்தந்த மண்ணின் அடையாளங்களாவன மண்ணின் மைந்தர்கள் தங்களுக்குச் சூடிக்கொண்ட பெயர்களிலும் எதிரொலித்தன. இதன்படியும் திராவிடர் என்பது தமிழர்களையே குறித்து வந்திருப்பது திட்டவட்டமாகிறது. இவ்வாறு மொழியியல் ரீதியில் உருவான ஒரு சொல் அரசியல் துறையிலும் முக்கியத்துவம் அடைந்து பரவலானது. ஆதிதிராவிடர் மகாஜன சபையின் சட்டசபை உறுப்பினராக இருந்த எம்.சி.ராஜாவால் முன்மொழியப்பட்டு நீதிக்கட்சியின் ஆட்சியில் 1922-ல் அரசாணை வெளியிடப்பட்டு அதன் அடிப்படையில் ஆதிதிராவிடர் சொல் அரசு ஏடுகளிலும் அலுவல் ரீதியாகப் புழக்கத்துக்கு வந்தது.

அதுவரை தாழ்த்தப்பட்ட சமூகத்தினரால் மட்டும் எடுத்தாளப்பட்டு வந்த திராவிட சொல்லாடல் பிற சாதிகளின் மட்டத்திலும் புழக்கத்துக்கு வர அடிகோலியவராக இருந்தவர் நீதிக்கட்சியின் நிறுவனராகவும், திராவிட இயக்கங்களின் முன்னோடி தலைவராகவும் இருந்த டாக்டர் நடேச முதலியார் எனலாம். 1912-ல் பிராமணரல்லாத அரசு ஊழியர்களால் மெட்ராஸ் யுனைடேட் லீக் என்ற அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. அதன் மூளையாகப் பின்னணியில் இருந்தவர் நடேச முதலியார். அது பின்னர் மெட்ராஸ் திராவிடச் சங்கம் என்று பெயர் மாற்றப்பட்டது. இந்த விதமான சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டதற்கு இரண்டு காரணங்கள் பிரதானமாக இருந்தன. அரசு அலுவலங்களின் உயர் பதவிகளை அனைத்து மட்டங்களிலும் அலங்கரித்துக் கொண்டிருந்த பிராமண அதிகாரிகளால் பாரபட்சமாக நடத்தப்பட்டுப் பதவி உயர்வுகள் மறுக்கப்பட்டுப் பலவிதங்களிலும் அவமதிப்புக்கு உள்ளாகி வந்த பிராமணரல்லாத அரசு ஊழியர்கள் தங்கள் குறைகளை விவாதித்துக்கொள்ளவும் கோரிக்கைகளையும் தீர்வுகளையும் ஆலோசித்து முடிவு எடுக்கவும் ஒரு அமைப்புத் தேவையாக இருந்தது ஒரு காரணம் எனலாம்.

இன்னொரு காரணமாக, சமூக நடப்புகளில் பிராமணர்களால் பொது இடங்களிலும்கூடக் கடைபிடிக்கப்பட்ட தீண்டாமை அமைந்தது. உதாரணமாக ’பிராமணாள் கபே’வை கூறுவார்கள். பணம், பதவி, அந்தஸ்து ஆகிய சம்பத்துகளில் பிராமணர்களுக்குச் சரிக்குச் சமமாக இருந்தபோதிலும் சென்னையின் பிரபல கபேக்களில் சூத்திரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு பிராமணர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். அந்த இழி நடைமுறைக்கு ஆதரவாக ஹைகோர்ட் ஜட்ஜ்களாகவும், மாஜிஸ்ட்ரேட்டுகளாகவும், திவான்களாகவும் மேலும் எத்தனை அதிகாரம் மிக்கப் பதவிகளோ அத்தனையையும் தம் வசப்படுத்திக் கொண்டு இருந்த பிராமணச் சமூகம் இருந்தது. இது கல்வியறிவு பெற்று அறிவிலும் மான உணர்ச்சியிலும் எழுச்சி பெற்று வந்த பிராமணரல்லாதவர்களைச் சினப்படுத்தியது. அம்மாதிரி கபேக்களில் உள்ளே நுழைய பூணூலை காண்பித்தால் மட்டும் போதாது சந்தியாவந்தனமும் சொல்ல வேண்டும் என்பார் ராண்டர் கை. தமிழ்தாத்தா உ.வே.சா.,வுக்கே அவ்வாறு சந்தியா வந்தனம் சொல்லும் நிலை ஏற்பட்டதாக அவர் பதிவுச் செய்கிறார். இது ஆரியத்தின் ஆதிக்கத்திற்கு எதிராகச் சாதிவேற்றுமைகளைக் கடந்த பொதுமுழக்கமாகத் திராவிடம் எழுச்சி பெற அடியோட்டமாக அமைந்த அக்காலச் சூழல்.

நீதிக்கட்சியின் முப்பெரும் தலைவர்களாகச் சொல்லப்படுபவர்களில் முதன்மையானவர் நடேச முதலியார் என்பது சாலப்பொருத்தமானது. மெட்ராஸ் திராவிடச் சங்கத்தைத் தொடர்ந்து அடுத்தக் கட்டத்துக்கான பெரிய அளவிலான அமைப்பை திட்டமிட்டபோது அவருடைய நினைவில் வந்தவர்கள் பிட்டி தியாகராயர் மற்றும் டாக்டர் டி.எம்.நாயர் என்னும் இரு சமூக மதிப்பு மிக்க ஆளுமைகள். ஆனால் இருவரும் மெட்ராஸ் கவுன்சிலில் இரு கோஷ்டிகளாகப் பிரிந்து எலியும் பூனையுமாக மோதி வந்தனர். அவர்களை ஒன்றிணைத்து தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (நீதிக்கட்சி) தொடங்கப்பட்டு, அதன் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க மூன்று பத்திரிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ், தமிழில் திராவிடன், தெலுங்கில் ஆந்திர பிரகாசினி ஆகிய பெயர்களில் அவை வெளியாகின. நீதிக்கட்சியின் திராவிடன் பத்திரிக்கையின் மூலம் திராவிடர் என்னும் சொல் வெகுஜனங்களின் மத்தியிலும்கூடச் சரளமான புழக்கத்துக்கு வந்துவிட்டிருந்தது. திராவிடன் நாளேட்டின் முதல் இதழ் தான் தொடங்கப்பட்டிருப்பதன் நோக்கம் பற்றி இவ்வாறு அறிவித்துக் கொண்டது: “தேசிய திராவிடர்களாகிய நம்மனோர் முன்னுக்கு வருவதற்குத் தடையாக உள்ள தப்பான அபிப்ராயங்களையும் விபரீதக் கொள்கைகளையும் பேதித்தெறிந்து உண்மையைச் சாதித்து நிலை நிறுத்துவதே திராவிடனாகிய இப்பத்திரிக்கையின் திருத்தமுள்ள நோக்கமாகும்”.

திராவிட என்ற சொல்லையே பெரியார்தான் கண்டுபிடித்துப் புகுத்தினார் என்றே பாமரர் பலரும் நம்பிவிட்டிருக்கிற அளவிற்கு அது அவருடைய அரசியலுடன் அடையாளப்பட்டு விட்டது. ஆனால் அவருக்கு முன்பே அந்தக் குறிப்புச் சொல் இவ்வாறான சரித்திரத்தின்படி தனக்கெனத் தனி வரலாறு உடைய ஒன்று. அடுத்து பெரியார் எப்போதிருந்து திராவிடத்தைக் கையிலெடுத்தார் என்று ஆராய்வோமானால் அது நம்மை 1937-38 இந்தி எதிர்ப்பு போராட்ட காலகட்டத்துக்கு இட்டுச் செல்கிறது.
- சிவசங்கரன் சரவணன் முகநூல் பதிவுு 11.11.2018,(திராவிட ஆய்வு முகநூல் குழு)

ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

திராவிடம் என்ற சொல்லுக்கு பெரியார் தந்தை அல்ல! மகன்!

 

 .திருமாவேலன்

இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்என்ற தலைப்பில் பத்திரிகையாளர் .திருமாவேலன் பெரியார் பற்றி எழுதி இருக்கும் நூல் விரைவில் வெளியாகிறதுதற்போதைய தமிழ்நாடு சூழலில் திராவிடம்தமிழ் தொடர்பான பல தத்துவார்த்த விவாதங்களில் இணையும் முகமாக உருவாகும் இந்நூல் பலத்த விமர்சனங்களையும் பாராட்டுகளையும் ஒருசேரப் பெறக்கூடும்நூலாசிரியரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

ஏன் இந்த நூல்?

தந்தை பெரியார் குறித்தும் திராவிடர் கழகம் குறித்தும்திராவிட இயக்கத்தின் மூலத்தத்துவம் குறித்தும் சில தப்பான பாடங்களை தமிழ்த்தேசியம் என்ற பெயரால் சிலர் செய்துவரும் அவதூறுகளுக்கான அடிப்படை பதில் தான் இந்தப் புத்தகம்பெரியாருக்கு தமிழைப் பிடிக்காதுஅவர் தெலுங்கர்களுக்கு சார்பானவர்மொழிவாரி மாகாணத்துக்கு எதிராக இருந்தார்ஏனென்றால் அவர் தெலுங்கர் என்றெல்லாம் இந்தச் சிலர் வாய்க்கு வந்ததை எல்லாம் வரலாறாகத் திரித்து எழுதியும் பேசியும் வந்தார்கள்வருகிறார்கள்இந்த அரைகுறைத்தனக் குற்றச்சாட்டுகளை ஜாதியவாதமதவாத சக்திகள் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் அதிகமாகப் பயன்படுத்திக் கொண்ட அவலம் நடக்கிறது.

திராவிடத்தை எதிர்க்க தமிழாயுதம் எடுத்து வருகிறார்கள்அதாவதுதிராவிடத்தை எதிர்க்கும் ஆரியத்துக்கு ஆயுதம் தயாரித்துத் தரும் வேலையைத் தான் இந்த தமிழ்த் தேசிய சக்திகள் செய்து வருகிறார்கள்அதற்கான பதிலை மனதளவில் நான் தேடித் தெரிந்து கொள்ள நினைத்தேன், 1995ஆம் ஆண்டு 'திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற பெங்களுரு குணாவின் நூல் வந்ததுஅதில் இருந்து செய்திகளைச் சேகரிக்கத் தொடங்கினேன்பின்னர்பெ.மணியரசன்மிகக்கடுமையாக பெரியாரை விமர்சிக்கத் தொடங்கினார்குணாமணியரசன் இருவரும் ஓரளவாவதுபெரியாரைக் தெரிந்து கொண்டு விமர்சித்தார்கள்அதன்பிறகு சில சில்லுண்டிகள் உருவானார்கள்இவர்களுக்கு பெரியார் தாடி வைத்திருப்பார் என்பதைத் தவிர எதுவும் தெரியாதுஇந்தக் குருட்டுக் கூட்டம்இணையத்தளங்களில் குருட்டாட்டம் ஆடி வரும் எரிச்சல் அதிகமானதால் இப்படி ஒரு நூல் காலத்தின் தேவையாக எனக்குப் பட்டது.

1600 பக்கங்கள் கொண்ட இந்நூலை உருவாக்கிய அனுபவம்?

புத்தகமாக எழுதுவதற்காக அல்லமுதலில் என்னளவில் தெளிவு பெற வேண்டும் என்பதற்காகவே நான் இதற்கான பதில்களைத் தேடத் தொடங்கினேன்குடி அரசுவிடுதலை ஆகிய இதழ்களை முழுமையாகப் படிப்பது என்று முடிவெடுத்தேன்சுமார் 20 ஆண்டுகாலம் (1925-45) வெளியானது குடி அரசு. 1937 இல் தொடங்கப்பட்ட விடுதலை நாளிதழை பெரியார் மறைந்த 1973 வரையில் பார்க்க வேண்டும் எனத் திட்டமிட்டேன்.

2000 ஆம் ஆண்டில் இதற்கான திட்டமிடுதல் தொடங்கி அது 2004 வரைக்கும்தான் படிக்க வாய்ப்பு கிடைத்ததுஇக்காலகட்டத்தில் 'குடி அரசுஇதழை முழுமையாக முடித்தேன்வார இதழ் என்பதால் அது கொஞ்சம் இலகுவாய் இருந்தது. 2005 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் இப்பணியை என்னால் மேற்கொள்ள முடியாத அளவுக்கு பணிச்சூழல் இருந்ததுமீண்டும் 2011 இல் தொடங்கினேன்கொஞ்சம் சுணக்கமான மனநிலை இருந்தது தொடக்கத்தில்ஆனால் 2014ஆம் ஆண்டு மத்தியில் நடந்த ஆட்சி மாற்றம்அது இந்தியச் சமூகத்தில் எதிர்காலத்தில் ஏற்படுத்தப் போகும் தாக்கங்களை உணர்ந்த நிலையில் இப்பணியை எவ்வளவு சீக்கிரம் விரைந்து முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடித்தாக வேண்டும் என்ற பதற்றத்தை என்னுள் ஏற்படுத்தியது. 1937 முதல் 1973 வரையிலான விடுதலையை முழுமையாகப் பார்வையிட்டு குறிப்புகள் எடுத்தேன்எனது பத்திரிகை வேலையை பார்த்துக் கொண்டே இந்த பணியைப் பார்ப்பது என்பது சுலபமாக இல்லை.

இது இலகுவாய் முடியும் வேலையாக இல்லை . இதற்கு இடையில்தான், 'ஆதிக்க ஜாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா?' என்ற புத்தகத்தை முடித்துவிடலாம் என்று மனம் மாறியதுபெரியார் மீது தலித் சிந்தனையாளர்கள் வைக்கும் விமர்ச னத்துக்கான பதிலாக அது எழுதப்பட்டதுஅதனால் 2015-2017 அதில் போனது. 2018ஆம் ஆண்டு அந்த நூல் (382 பக்கங்கள்வெளியானதுஅது வெளியானதும்ஏற்பட்ட கூடுதல் உற்சாகம் இந்தப் புத்தகத்தை முடிக்கும் முயற்சியை விரைவுபடுத்தியதுஇப்படியாக 2021ஆம் ஆண்டையும் தொட்டு விட்டேன்.'

இத்தனை பக்கம் நீண்டு சென்றது எதனால்?

பெரியாரது வாழ்க்கையின் நீட்சிஅவரது உழைப்பின் நீட்சி தான் இந்தப் புத்தகத்தின் பக்கங்களையும் நீட்டித்துவிட்டதுகுடி அரசுவார இதழ், 'விடுதலைநாளிதழ் ஆகிய இரண்டையும் முழுமையாகப்பார்த்து விட்டு எழுத வேண்டும் என்று நினைத்தேன்அப்படி பார்க்க முடியும் போது இந்தப் புத்தகம் வெளியானால் போதும் என்பது தான் என்னுடைய எண்ணமாக இருந்தது.

இருபது ஆண்டுகள் வெளியாகி இருக்கிறது. 'குடி அரசு. 'விடுதலை'யில் நான் எடுத்துக் கொண்ட காலகட்டமானது சுமார் 36 ஆண்டுகள்எத்தனை பக்கங்கள் என்று கணக்குப் போட்டுப் பாருங்கள்ஒரு நாளைக்கு நான்கு பக்கம்ஓராண்டுக்கு 1460 பக்கம்என்றால் 36 ஆண்டுக்கு 52,560 பக்கங்கள் என்று தோராயமாகச் சொல்லலாம் (ஒரு சில மாதங்களின் விடுதலை இதழ் கிடைக்க வில்லை ). இவற்றில் இருந்து கிடைக்கும் தகவல்கள்மலையளவு இருந்தனஇவை அனைத்தையும் சேர்க்கச் சேர்க்க அது பக்கத்தை கூட்டிவிட்டது.

உதாரணத்துக்குமொழி வாரி மாகாணங்கள் பிரச்சினையை மட்டுமே பார்த்தால் அது 1930 முதல் 1963 வரையிலான பிரச்சினை. 'சென்னை எங்கே இருந்தால் என்னதிராவிட நாட்டுக்குள் தானே இருக்கிறது?' என்று பெரியார் சொன்னதாக .பொ.சிஒரு வரியில் சொல்லிவிட்டுப் போய்விட்டார்ஆனால் இந்த 'தமிழ்நாடுஉருவாக்கப்பட பெரியார் உழைத்த 25 ஆண்டு கால உழைப்பைச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறதுஅதனால் தான் புத்தகம் நீண்டு விட்டது.

'உனது தமிழ் இலக்கியத்தில் ஆரியம் புகாத இலக்கியம் எது?' என்று பெரியார் கேட்டுவிட்டுப் போய்விட்டார்தொல்காப்பியம் தொடங்கி தமிழ் இலக்கியம் அனைத்திலும் எங்கு எப்போது எப்படி ஆரியம் புகுந்ததுபுகுத்தப்பட்டது என்பதைச் சொல்லி பெரியாரின் குற்றச்சாட்டை நிரூபிக்கும் தேவை ஏற்படுகிறதுஅதனால் தான் இந்தப் புத்தகம் நீண்டு விட்டது.

இதற்கான செய்திகளை ஆதாரங்களைத் தேடிய கதைஉதாரணமாகநீண்டநாள் தேடி கடைசியில் கிடைத்த 'யுரேகாஆதாரம் ஏதும் உண்டா?

யாராலும் கண்டுபிடிக்க முடியாத புதையலை நான் கண்டு பிடித்துவிடவில்லைபெரியார் தான் வாழ்ந்த காலத்திலேயே தனது சிந்தனைகள் மொத்தத்தையும் புத்தகங்களாக ஆக்கிவிட்டுப் போய்விட்டார்அவர் நடத்திய 'விடுதலைதான் அவரது நாட்குறிப்புஇதனை முழுமையாகப் பார்த்தாலே

போதும் என்று நினைத்தேன்இவை அனைத்தும் சென்னை பெரியார் திடல் நூலகத்தில் முழுப்பாதுகாப்போடு இருக்கிறது.

இந்தப் புத்தகத்துக்கான களம் என்பது பெரியார் திடல் தான்ஆதாரங்களுக்காக அலையவில்லை . ஒரே இடத்தில்தான் இருக்கிறது.

யுரேகா’ போல ஆதாரம் உண்டா என்றால்இந்தப் புத்தகமே பலருக்கும் ‘யுரேகா போலத் தான் இருக்கும்.

பெரியார் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையா எனத் தேடிய நான்பெரியாரைப் படிக்கப் படிக்க மேலும் மேலும் அவர் மீது மரியாதை அதிகமாகியே வந்ததுஅதுதான் உண்மை!

பெரியாரைத் தெலுங்கர் என்று குற்றம் சாட்டும் குறுமதியாளர்களே அதிர்ச்சி அடையும் தகவல்கள் இதில் உள்ளன.

1941ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்பெஜவாடா போனார் பெரியார்அவரைக் கடுமையாக ஆந்திரர்கள் எதிர்த்தார்கள்ஆந்திர வைரிஆந்திரத் துரோகி என்று கண்டித்து முழக்கம் எழுப்பினார்கள். ‘ஆந்திர தேசத் துரோகி ராமசாமி வருகிறார்மறுபடியும் தமிழ் மாயையில் விழ வேண்டாம்‘ என்று துண்டு வெளியீடுகளை அச்சடித்து வழங்கினார்கள்அவர் தமிழ் சம்பிரதாயத்தில் பட்டு தமிழ் மாதாவைப் பூஜிப்பவராக இருக்கிறார்தெலுங்கு ஜில்லாக்களை திராவிட ஸ்தானமென்ற பேரில் தமிழ் ஜாதியார்களின் ஆதிக்கத்திற்கு உட்படுத்த சங்கல்பம் செய்து கொண்டிருக்கிறார்பிராமணர்கள் பரம துன்மார்க்கர் களென்றும் கூறி நமக்குள்ளேயே பேதம் கற்பித்து வருகிறார்உத்தியோகங்களனைத்திலும் தெலுங்கு பிராமணரல்லாதார்களுக்கு ஒன்றும் கிடைக்காமல் செய்து ஜஸ்டிஸ் கட்சியின் பேரால் எல்லா வற்றையும் தமிழ் பிராமணரல்லாதாராகிய முதலியார்கள்பிள்ளை களாகியவர்களுக்கு ஆக்கி வைத்து வருகிறார்.

ஜஸ்டிஸ் என்ற பெயரில் ஆந்திர தேசத்துக்கு அநியாயம் செய்துவரும் வேஷதாரிகள் சங்கமாகிய தென்னிந்திய நல உரிமைச் சங்கமென்னும் இயக்கத்தின் தலைவராக இந்த மகா துஷ்ட நாயக்கர் இருந்து வருகிறார். ....... என்ற அந்தத் துண்டறிக்கை மிக நீளமானதுஆந்திர மாதாவிற்கு ஜயம் உண்டாகுகஆந்திர மாதாதுரோகிகளுக்கு அபஜயம் கூடுக - என்று அது முடியும்பாண்டுரங்க கேசவராவ் என்ற ஆந்திரா பார்லிமெண்டரி தலைவர் அச்சடித்த துண்டறிக்கை இது. (விடுதலை, 12.2.1941)

இதையெல்லாம் பொருட்படுத்தாமல் பெரியார்ஆந்திர சுற்றுப்பயணம் முடித்துவிட்டு சென்னை திரும்பினார்இந்த நிலையில் பாண்டுரங்க கேசவராவ் ஒரு மிரட்டல் கடிதம் அனுப்பி வைத்தார். ‘மகிஷா சூரமர்த்தினி பலி கேட்பாள்’ என்று சொல்கிறது அந்தக் கடிதம்ஆறு மாதத்தில் உன் குடும்பத்தில் மகிஷா சூர மர்த்தினி பலி கேட்பாள் என்றும் ஆந்திர ரத்தம் உன்னிடம் இல்லையா என்றும்திராவிட நாடு பிரிவினை ஆந்திரர்க்கு எதிரானது என்றும் அதில் கூறப்பட்டதுஇந்தக் கடிதம் முன்னாள் முதல்வர் ரெட்டி நாயுடு குடும்பத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதுஇவர் நீதிக்கட்சியைச் சேர்ந்தவர், (விடுதலை 13.2.1941)

அதாவது பெரியார்யார் என்பதை 1940ஆம் ஆண்டே ஆந்திரர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள்ஆனால்தமிழர்கள் சிலருக்குத்தான் 2021ஆம் ஆண்டிலும் தெரியவில்லை.

பெரியாருடன் பயணித்த ஆளுமைகள் பத்து என்று ஒரு கட்டுரை உள்ளதாகப் பார்த்தேன்யார் யார்?

கப்பலோட்டிய தமிழன் ..சி... தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகள்தமிழ்த் தென்றல் திருவி.., நாவலர் சோமசுந்தர பாரதியார்முத்தமிழ்க்காவலர் கி..பெ.விசுவநாதம்புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்திராவிட மொழி நூல் ஞாயிறு தேவநேயப் பாவாணர்தனித்தமிழ் பேராசிரியர் இலக்குவனார்தனித்தமிழ் அரிமா அண்ணல் தங்கோதவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆகியோர் தான் அந்த பத்துப் பேர்இவர்களோடு பெரியாரின் பயணம் விரிவாக உள்ளது.

இவை போக திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள் முதல் நன்னன் வரையிலான அய்ம்பது தமிழ்ப்புலவர்களுக்கும் பெரியாருக்குமான தொடர்பு குறித்த வரலாற்றுக் குறிப்புகள் உள்ளனதான் வாழ்ந்த காலத்துத் தமிழ்ப்புலவர்கள் அனைவரோடும் அவர் இணைந்து இருந்துள்ளார்அவர்களும் தங்களவராகப் பெரியாரை மதித்துப் போற்றி இருக்கிறார்கள்.

உண்மையாகவே பெரியாருக்கு தமிழ் இலக்கியங்கள் மீது

பற்று இல்லையா?

பெரியார் விரும்பியது ஆரியம் விலக்கிய தமிழ்’ உண்மையான தமிழ்ப்பற்று இருப்பதால் தான் தூய்மையான தமிழ்ச்சிந்தனையை தமிழில் எதிர்பார்த்தார்.

இராமாயணத்தை கொளுத்தச் சொன்னார்சங்க இலக்கியங்களை அல்லஅவர் கம்பரை எதிர்த்தார்வள்ளுவரை அல்ல. 'இராமாயணம் கொளுத்தப்பட்ட இடத்தில் திருக்குறளை வைக்க வேண்டும் என்றார்வள்ளுவரைத் தாண்டிய சிந்தனை பாரதிதாசனிடம் இருக்கிறதுஎனவே புரட்சிக்கவிஞரை அந்த இடத்தில் வைக்க வேண்டும் என்றார். 'தமிழில் இருந்து சைவத்தையும் ஆரியத்தையும் போக்கிவிட்டால் நம்மை அறியாமல் நமக்கு பழந்தமிழ் கிடைத்துவிடும்என்றார்ஆரியமும் சமயமும் தமிழரை ஆக்கிரமிக்க தமிழை கபளீகரம் செய்துவிட்டது என்று பெரியார் நினைத்தார்அதனாலேயே ஆரியச் சிந்தனை வயப்பட்ட தமிழ் இலக்கியத்தை விமர்சித்தார்.

.வே.சா.வையும் வையாபுரியாரையும் தான் அவர் விமர்சித்தாரே தவிரபாவாணரையும் இலக்குவனாரையும் அல்லஇந்த நுட்பத்தை அனைவரும் உணர வேண்டும்.

கபிலர்பாய்ச்சலூரார்வள்ளுவர்அவ்வை ஆகியோரைப் போற்றினார்கம்பர்சேக்கிழார்அருணகிரிநாதரை விமர்சித்தார்இந்த பாட வேறுபாடு உணராதவர் தான் பெரியாரை தமிழ் இலக்கியத்துக்கு எதிரியாகப் பார்ப்பார்கள்.

இந்த நூல் வாசிப்பவர்கள் இதன் மூலம் எதைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று கருதுகிறீர்கள்?

உண்மைப் பெரியாரைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்அவர் விரும்பியது ஆரியம் விலக்கிய தமிழ்ஆரியம் உள்ளடக்கிய தமிழை அவர் விமர்சித்தார்தமிழ் இலக்கியத்தை பகுத்தறிவு விமர்சன நெறிப் பார்வையுடன் பார்த்தார்இது ஒரு விமர்சனப் பார்வைஒப்பியல் நோக்கு போல இது பகுத்தறிவு நோக்கு.

அவரது சமூகநீதி என்பது தமிழன் அனைத்து இடங்களையும் கைப்பற்றி முன்னேறி விட வேண்டும் என்பதற்கான கதவுகோட்டை முதல் கோவில் வரை உள்ளே நுழைந்துவிடவேண்டும் தமிழன் என்று நினைத்தார்அதற்கான திட்டம் தான் சமூகநீதிதமிழ்நாடு தமிழருக்கே என்று  1938 இல் தொடங்கியவர் அவர்இறுதிவரை அந்த முழக்கத்தை விடவில்லைவாக்கு அரசியலில் புரண்டும் கிடக்கும் சிலர் தங்களை மாவீரர்களாகவும்பெரியாரை துரோகியாகவும் சித்தரிக்கும் அளவுக்கு இந்தத் தமிழ்ச்சமூகத்தின் சிந்தனையை சில டாலர் கரன்சி கரையான்கள் செல்லரிக்க விடக்கூடாது என்ற ஆற்றாமையின் விளைவு தான் இந்த நூல்!

பெரியாரின் எழுத்துகள் திராவிடர் கழகம்வே.ஆனைமுத்துபெரியார் திராவிடர் கழகம் ஆகியோரின் தொகுப்புகளாக உள்ளன.

இந்நூல் எப்படி வேறுபட்டது?

இது பெரியார் சிந்தனைகளின் தொகுப்பு நூல் அல்லகுடி அரசுவிடுதலை இதழ்களின் தொகுப்பும் பதிப்பும் அல்லபெரியார் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் மறுப்பு நூல் இது.

திராவிடம் என்ற சொல்லுக்கு பெரியார் தந்தையல்லமகன்தான் என்பதைச்சொல்லி இருக்கிறேன்பெரியாருக்கு முன்னாலே திராவிடம் என்பது மொழிஇனஇடச் சொல்லாக அடையாளப்படுத்தப்பட்டு வந்திருப்பதை பல்வேறு அகராதிகள் மூலமாக எடுத்துக் காட்டி இருக்கிறேன்பண்டித அயோத்திதாசர்திராவிடம் என்ற சொல்லை எந்த வகையில் கையாண்டார் என்பதை அவரது ‘தமிழன்’ இதழின் பக்கங்கள் மூலமாகச் சொல்லி இருக்கிறேன்.

1930-1945 காலகட்டத்தில் தமிழின எழுச்சிக்கு பெரியாரின் பங்களிப்புகளை முழுமையாக அறியலாம். ‘தமிழ்த்தேசியம்‘ என்பதற்கு சோழகந்த சச்சிதாநந்தன் ஆற்றிய பங்களிப்பு இன்றைய தமிழ்த்தேசிய மேதைகள் அறியமாட்டார்கள்அதே போல் இவர்களுக்கு பண்டித எஸ்.எஸ்.ஆனந்தரைத் தெரியாதுஇவர்கள் ‘விடுதலையில் அதிகமாக எழுதி உள்ளார்கள்இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்பெரியார் ‘தமிழிய ‘மே பேசினார் என்பதையும்அனைத்துத் துறைகளிலும் தமிழே இருக்க வேண்டும் என்பது குறித்து எழுதியதையும் விரிவாக எடுத்துக் காட்டி இருக்கிறேன்.

இறுதியாகதமிழீழமும் தந்தைப் பெரியாரும் என்ற கட்டுரை உள்ளதுதனித்தமிழீழம் காண அறவழியில் முயற்சித்த தந்தை செல்வாவையும்ஆயுதவழியில் அன்று போராடிய சத்தியசீலனையும் (இவரது அமைப்பில் தான் மாணவர் அமைப்பில் புலித்தலைவர் பிரபாகரன் இருந்தார்நேரில் சந்தித்து தனது ஆதரவை வழங்கியவர் பெரியார் என்பதையும் சொல்லி இருக்கிறேன்.

நன்றி: 'அந்திமழை', செப்டம்பர் 2021