திங்கள், 28 ஆகஸ்ட், 2023

தென் மாநிலங்கள் முழுவதும் 'திராவிட மொழிகள் நாள்' ஜனவரி 25-இல் கடைப்பிடிப்பு

 

 'நாம் திராவிடர்' அமைப்பின் முன்னோட்டக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது

v6

'நாம் திராவிடர்' (We Dravidians), 'நாங்கள் தென் இந்தியர்(We are South Indians)  அமைப்பினர் சார்பாக ஜனவரி 25ஆம் நாள் 'திராவிட மொழிகள் நாளாக'  (Dravidian Lauguages Day)  கொண்டாடத் திட்டமிடப்பட்டு அதனை நடைமுறைப்படுத்து வதற்கான முன்னோட்டக் கூட்டம் சென்னை  பெரியார் திடலில் 22.1.2021 அன்று மாலை 6 மணி யளவில் தொடங்கி நடைபெற்றது.

தமிழ்நாடு,  ஆந்திரம்கர்நாடகம்கேரளா மாநி லத்தைச் சார்ந்த அமைப்பினர் பலர் இந்தக் கூட் டத்தில் பங்கேற்றனர்கூட்டத்திற்கு திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவர் சுஅறிவுக்கரசு தலைமை வகித்தார்திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் வீரர் கலைமாமணி ஜாகிர் உசேன்பத்திரிகையாளர் 'நக்கீரன்கோவிலெனின்திராவிடர் கழகப் பொருளாளர் வீகுமரேசன் மற்றும் கூட்ட அமைப்பினைச் சார்ந்த அபிகவுடா (கன்னடம்திராவிட சுரேஷ் (தெலுங்குஅருள் பிரகாசம்ஆர்.எஸ்கதிர்சூர்யா ஆகியோர் உரையாற்றினர்.

தந்தை பெரியார் நினைவிடத்தில் 'திராவிட மொழிகள் நாளை கொண்டாடுவோம்எனும் வாசகம் பொறித்த பதாகையை தூக்கி  முழக்கம் எழுப்பிய தோழர்கள் ஊர்வலமாக வந்து தந்தை பெரியார் சிலையின் முன்பு கூடி கூட்டம் தொடங்கியது.

'நாம் திராவிடர்அமைப்பினைச் சார்ந்தோர் சென்ற ஆண்டு திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் கிவீரமணி அவர்களைச் சந்தித்து 'திராவிடர்'  அடையாளம் போற்றப்பட வேண்டும்அதற்கான பரப்புரையை களப் பணியினை தாங்கள் செய்து வருவதாகக் கூறினார்கள்தமிழர் தலைவர் 'நாம் திராவிடர்அமைப்பைச் சார்ந்தவர்களை மிகவும் பாராட்டிதென் மாநிலம் முழுவதும் இந்த திராவிடர் உணர்வுகள் பலப்பட வேண்டும்அதற்கான பணியினை அவசியம் மேற்கொள்ளுங்கள் என ஊக்கமூட்டினார்.

கன்னட மொழி பேசும் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியைச் சார்ந்த அபிகவுடா இதற்கான முயற்சிகளை திராவிடர் மொழிகள் பேசும் தோழர்களுடன் மேற்கொண்டார்இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரில் உயிர் நீத்த தியாகிகளைப் போற்றி வீர வணக்க நாள் - ஜனவரி 25 நிகழ்ச்சிகள் தமிழ் நாடெங்கும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறதுஇந்தித் திணிப்பை எதிர்த்து பல தளங்களில் எதிர்ப்புக் குரல்கள் கர்நாடகம்,  ஆந்திரம்கேரளா மாநிலங் களிலும் இப்பொழுது வெளிக் கிளம்பத் தொடங்கி விட்டனமொழி அடிப்படையில் திராவிடர்கள் பிரிக்கப்பட்டுஇந்தி  சமஸ்கிருத திணிப்பிற்கு ஆளாகி வரும் நிலையில் திராவிட மொழிகளான தமிழ்தெலுங்குகன்னடம்மலையாளம்துளு ஆகியவற்றை தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் அந்த ஒருங்கிணைந்த செயல்பாட்டின் முதல் பணியாக ஜனவரி 25ஆம் நாளே "திராவிட மொழிகள் நாள்என தென்  மாநிலங்களில் கூட்டம் நடத்திட உள்ளதை  'நாம் திராவிடர்அமைப்பினர் தெரிவித்தனர்மொத்தம் 127 மாவட்டங்களில் 'திராவிட  மொழிகள் நாள்கொண்டாடப்பட உள்ளதுதொடர்ந்து ஜனவரி 25ஆம் நாள் தமிழகத்தில் மட்டும் வீர வணக்கம் செலுத்தும் நாளாக கடைப்பிடிக்கப்படுவது அனைத்து தென் மாநிலங்களிலும் - திராவிட மொழிகள் பேசும் மாநிலங்களிலும் இந்தி - சமஸ்கிருதத் திணிப்பை எதிர்க் கும்  உணர்வாக வெளிப்படுத்தும் நிகழ்வாக அமையும் என அந்த அமைப்பினர் தெரிவித்தனர்இதற்குத் தமிழ்நாட்டில் குறிப்பாக திராவிட இயக்கங்களின் ஆதரவினை பெரிதும் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தனர்.

கூட்டத்தில் பேசிய கழக செயலவைத் தலைவர் சுஅறிவுக்கரசு அவர்கள் இந்தித் திணிப்பானது அன்று தந்தை பெரியார் காலம் தொடங்கி இன்று தமிழர் தலைவரின் காலத்திலும் எவ்வாறு எதிர்க்கப்பட்டது என்பதைச் சுருக்கமாக எடுத்துரைத்தார்கலை மாமணி  ஜாகீர் உசேன்கலைத் தளத்தில்பண்பாட்டுத் தளத்தில் இந்தி  எதிர்க்கப்பட வேண்டும்அதற்கு திராவிட மொழிகளின் அடையாளம் வெகுப் பொருத் தம் எனக் கூறினார்பத்திரிகையாளர் நக்கீரன் கோவிலெனின், 'திராவிடம்என்பது தென் மாநிலங்கள் மட்டும் சார்ந்தது அல்லஇந்தியா முழுவதும் 'திராவிடஅடையாளத்தின் சின்னங்களைப் போற்றக் கூடிய மக்கள் - குறிப்பாக தொல்குடி மக்கள்  வாழ்ந்து வரு கின்றனர்எடுத்துக்காட்டாக 'ராம்லீலாஎன ராவண உருவத்தை எரிக்கும் ஆதிக்க மனப்பான்மையை விட ராவணனைப் போற்றும் பல நிகழ்ச்சிகள் ஆக்க  ரீதியாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருவதை எடுத்துக் கூறினர்தொடந்து 'திராவிடஅடையாளம் போற்றப்படும். 'திராவிடம் வெல்லும்என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பலரும் உரையாற்றினர்.

நிகழ்ச்சியில் கழகத் தோழர்கள்வழக்குரைஞர் பாமணியம்மைசெந்துறை ராஜேந்திரன்கோசுரேஷ்வைகலையரசன்கலைமணி மற்றும் நாம் திராவிடர்  அமைப்பினைச் சார்ந்த தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தொகுப்புவீகுமரேசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக