உலகின் பண்டைய நாகரிகங்களுள் சிறந்து விளங்கிய நாகரிகம் சிந்துவெளி நாகரிகம். இந்நாகரிகத்தின் சிறப்பு, அம்மக்கள் பிறரிடம் கொண்டிருந்த வணிகத் தொடர்பு, கட்டடக் கலையில் அவர்களின் நுண்கலையறிவு, உற்பத் தித்திறன் மற்றும் அந்நாகரிகத்தின் பரப்பு போன்ற பலவும் வியக்கத்தக்க வகையில் இருந்தன. இவற்றை அப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ் வாய்வுச் சான்றுகள் மூலம் விளங்கிக் கொள்ள முடியும். இச்சிறப்பின் காரண மாக வரலாறு, தொல்லியல், மானுடவி யல், மொழியியல், கணிதவியல், புள்ளி யியல் வானவியல், கணினி அறிவியல், கட்டடக் கலை என பல்துறைசார்ந்த அறிஞர்களும் இத்துறையில் ஈடுபட் டுள்ளனர்.
இப்பெரும் நாகரிகத்தின் வீழ்ச்சிக் கான காரணம் இன்னும் முழுமையாக ஆராயப்படாத நிலையில் உள்ளன. அதே போன்று சிந்துவெளி எழுத்துக் களும் முழுமையாகப் படிக்கப்படாத நிலையிலேயே உள்ளது. இவ்விரு கார ணங்களும் ஆய்வாளர்களின் கவனத்தை அதன் பக்கம் ஈர்த்துள்ளது. ஆகையால் அவ்வெழுத்துகளைப் படிப்பதற்கான முயற்சிகள் உலகின் பல்வேறு இடங் களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சிந்துவெளி நாகரிகம் அழியாமல் இன்றுவரை நம்மிடையே நீடித்திருக் கிறது என்பதற்குப் பல சான்றுகள் உள் ளன. உதாரணமாக அவை நடை முறை யில் தொன்மக் கதைகளாகக் குறியீட்டு வடிவில் காணப்படுகின்றன. சிந்துவெளி மக்கள் பேசிய மொழி, பண்டைய திராவிட மொழி என்பதற்கான நம்பத் தகுந்த சான்றுகள் உள்ளன. சிந்து வெளிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள தொடர்பு குறித்து அய்ராவதம் மகா தேவன், அஸ்கோ பர்போலா போன்ற ஆய்வறிஞர்கள் தங்களின் ஆய்வுகள் மூலம் நிறுவியுள்ளனர். மேலும் இவ் விரண்டு நிலப் பரப்பிற்குமான பண் பாட்டுத் தொடர்புகளையும் சுட்டிக் காட்டியுள்ளனர். மாண்புமிகு தமிழக முதலமைச்சரும் இத்தொடர்புகளை அடையாளம் கண்டு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கான சின்னத் தில் சிந்து வெளிக் கூறுகளை இணைத் துள்ளார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, சிந்துவெளி நாகரிகத்தின் சிறப்பையும் பண்டைய நாகரிகங்களான திராவிட நாகரிகத்திற்கும் சிந்துவெளி நாகரிகத்திற்கும் இடையே உள்ள பண்பாடு மற்றும் மொழியியல் தொடர் பையும் இக்கண்காட்சி மூலம் காட்டுவ தற்கான வாய்ப்பை நல்கியுள்ளது.
சிந்துவெளி காலக் கணக்கீடு
உலகின் பழமையான நாகரிகங்கள்
பழமையான நாகரிகங்களில் மக்கள் மிகப் பெரிய கட்டடங்களைக் கட்டியுள்ளனர். கி.மு. 25ஆம் நூற்றாண்டில் எகிப்து நாட்டில் பிரமிடுகள் கட்டப்பட்டுள்ளன. இடப்பக்கம் மன்கவுரேயின் பிரமிடும், நடுவில் குஃப்ரேயின் பிரமிடும் வலப்பக்கம் குஃபுவின் பிரமிடும் காணப்படுகின்றன.
கி.மு. 21ஆம் நூற்றாண்டில் ஊர்நம்மு என்னும் அரசனால் கட்டப்பட்ட பெரும் ஸிகுரெட் (வழிபாட்டுத்தலம்) இது சுமேரியாவின் ஊர் என்னும் பகுதியில் உள்ளது.
கி.மு.2600 - கி.மு. 1700 ஆண்டுகளில் மொகஞ்சதாரோவில் மிகப் பெரிய கட்டங்கள் கட்டப்பட்டுள்ளன. மேல் பகுதியில் காணப்படும் புத்த ஸ்தூபம் பிற்காலத்தைச் சேர்ந்தது.
-விடுதலை,1.3.14
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக