ஆரிய இரத்தம் திராவிட இரத்தத்தோடு கலந்து விட்டதா? அல்லது திராவிட இரத்தம் ஆரிய இரத்தத்தோடு கலந்து விட்டதா? என்பதல்ல, இங்கு இப்போதுள்ள பிரச்சினை. இரு இனத்தின் இரத்தமும் ஒன்றாகக் கலந்து எல்லோரும் ஒரே இனம் என்ற முறையில் வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் நடந்து காட்ட வேண்டுமென்பதை எந்தப்பகுத்தறி வுடையவரும் மறுக்கமாட்டார்கள். ஆனால், ஒரு இனம்,தங்களை உயர்ந்தவர்கள் என்றும் தங்கள் நாகரிகமே சிறந்ததென்றும், தங்கள் மொழியே சிறப்புடையதென்றும் கூறிக்கொண்டு மற்ற இன மக்களையும் அவர்களின் மொழி, கலாச்சாரம் ஆகியவற்றையும் இழிவாகப் பேசும் போக்கையே நாம் கண்டிக்கிறோம்-வெறுக்கிறோம். ஆரியரா வது திராவிடராவது-ஒன்றும் இல்லை எல்லாரும் ஒன்றாகக் கலந்துவிட்டனர் என்று யார் வாய் வேதாந்தம் பேசு கிறார்களோ, அவர்களே இன்றும் தங்களை ஆரியர்கள் என்றும், தங்கள் மொழியான சமஸ்கிருதமே கோயில்களிலும், பிற இடங்களிலும் முதலிடம் பெற வேண்டுமென்றும் கூறி வருவதோடு, திராவிடர் களையும், திராவிட மொழிகளையும் இழிவாகவும்பேசிவருகின்றனர். ஆரியர்களில் படித்தவர், படி யாதவர் யாராயிருந்தாலும் தங்க ளுடைய வேதம் நான்கென்றும், அவை ரிக்கு யசுர், சாமம், அதர் வணம் என்றும் கூறுகின்றனரே யன்றி, திருக்குறளையோ, சிலப்பதி காரத்தையோ ஏனைய தமிழ் இலக்கியங்களையோ தங்களு டைய நூல்களாக ஒப்புக் கொள்வதே கிடையாது. திருக்குறள் முதலான தனித்தமிழ் நூல்களைக் கூடச் சமஸ்கிருதத்தின் மொழி பெயர்ப் புத்தான் என்று கூறி, ஒன்றாயினும் தனித்தமிழ் நூலுண்டோ என்று இகழ்ந்து பேசுவதைத்தான் காண் கிறோமேயன்றி, தமிழுக்கோ, தமிழ் நூல்களுக்கோ அவர்கள் சிறப்புக் கொடுப்பதும் இல்லை- அவற்றை மதிப்பதுமில்லை. இரு இனங்களுக் கிடையே இத்துணை வேறுபாடுக ளைக் கற்பித்து வைத்துக்கொண்டு, அவற்றை நடைமுறையிலும் செய்து காட்டிக்கொண்டு ஆரியர் வேறு-திராவிடர் வேறு என்று கூறுவது வெறும் பொய்க் கூச்சல் என்று புலம்புவதில் யாதாயினும் பொருள் இருக்க முடியுமா? என்பதனை எண்ணிப்பார்க்கவேண்டாமா?
- திராவிட நாடு 8.5.1949 பக்கம் 13-14
- திராவிட நாடு 8.5.1949 பக்கம் 13-14
-விடுதலை ஞாயிறுமலர்,19.12.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக