சிவகங்கை கீழடி அகழாய்வில் நகர வாழ்வு:
அடுத்தகட்ட தொடர் ஆய்வுக்கு மத்திய அரசுக்குப் பரிந்துரை
சிவகங்கை, செப்.30 சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய தொல்லியல் அகழாய்வுத் துறை யினர் மேற்கொண்ட ஆய்வில் மண்பானை ஓடுகள் உள்ளிட்ட 5,300 சங்க கால பொருள்கள் கிடைத்துள்ளன.
எனவே அடுத்த கட்ட தொடர் ஆய்வுக்கு மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகர் 4 ஆயிரம் ஆண்டுகள்பழமையானநகர் என்று இலக்கியம், தொல் லியல் துறை சார்ந்த ஆய்வு கள் தெரிவிக்கின்றன. இந் நிலையில், வைகை ஆற்றை ஒட்டிய பகுதிகளில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் தொல்லியல்துறை அகழாய்வு பெங்களூருப் பிரிவு கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் சிறப்புக்குழுவினர் ஆய்வை மேற்கொண்டனர்.
சிவகங்கை மாவட்ட எல் லையில் உள்ள கீழடியில் 2015 ஜனவரி முதல் செப்டம்பர் வரை முதல்கட்ட ஆய்வு நடத்தப்பட்டது. இதில்43 தொல்லியல்குழிகள்இடப் பட்டு ஆய்வை மேற்கொண்ட னர். முதல் கட்ட ஆய்வில் மட்டும் 1800 சங்க கால தமிழர்கள் பயன்படுத்திய பொருள்கள் கிடைத்துள்ளன. மேலும் தமிழகத்தில் முதன் முறையாக சங்க கால நகர நாகரீகத்துடன் கூடிய கட்டட அடித்தளம்,கால்வாய்அமைப் புகளும் இங்கு கண்டறியப்பட் டுள்ளன. சுட்ட செங்கற்களால் ஆன வீட்டுச் சுவர்கள், உறைக் கிணறுகள், திறந்த, மூடிய, உருளை வடிவம் என கால்வாய்களும் கண்டறி யப்பட்டன.
எழுத்துகளுடன் உள்ள 32 சுடுமண்பானைகள் கண்டு பிடிக்கப்பட்டன.2ஆவதுகட் டமாக 2016 ஜனவரி முதல் செப்டம்பர் வரை நடத்தப்பட்ட 59 குழிகளின் ஆய்வுகளிலும் 3800 அரிய வகை சங்க கால மக்கள் பயன்படுத்திய பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அதே போல் யானைத் தந்தத்தினால் ஆன தாயக்கட் டைகள், சதுரங்கக் கட்டைகள், பெண்கள் அணியும் காதணி கள், மான் கொம்பினால் ஆனகத்திபோன்ற அமைப்பு கள்ஆகியவையும்மீட்கப்பட் டுள்ளன. மேலும், எழுத்துகளு டன் 39 சுடுமண் பானைகளும் கிடைத்தன. அதில் உள்ள எழுத்துகளை ஆய்வு செய்த போது, உதிரன், சேந்தன், முயன் என தனிப்பட்ட நபர் களது பெயர்களாக அவை இருப்பது தெரியவந்துள்ளது. மேலும்பிராகிருதம்எனப் படும் வடமொழி எழுத்து களும் பானை ஓடுகளில் காணப்படுவதாகஆய்வில்ஈடு பட்டுள்ளதொல்லியல்கண் காணிப்பாளர் கே.அமர்நாத்ராம கிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளில் நாலரை ஏக்கர் பரப்பளவில் 102 குழிகள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளன. இதன் மொத்த பரப்பு 50 சென்ட் அளவுதான் இருக்கும். தனி யார் நிலத்தில் ஒப்பந்த அடிப்படையில்ஆய்வுநடத் தப்பட்டு பொருள்கள் மீட்கப் பட்டுள்ளன.
அவை கர்நாடக மாநி லம்பெங்களூருவில்உள்ள தொல்லியல்துறை ஆய்வுக் கூடத்துக்கு எடுத்துச் செல் லப்படும். கீழடியில் அடுத்த கட்ட ஆய்வு நடத்தவும் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளோம். அனுமதி கிடைத்ததும் ஆய்வு தொடரும் என்றார்.
கடந்த இரு ஆண்டுகளில் தொல்லியல்துறை கண் காணிப்பாளர், துணைக் கண் காணிப்பாளர், 2 உதவியாளர்கள், 6 ஆய்வாளர்கள் ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். ஆய்வுக்காக 2015-இல் ரூ.25 லட்சமும், 2016 செப்டம்பர் வரை ரூ.30 லட்சமும் செல விடப்பட்டுள்ளது என்றும் தொல்லியல்துறையினர் கூறு கின்றனர்.
இதுவரை தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய் வுகளிலேயே கீழடி ஆய்வுதான் மிகச்சிறப்பானதாகும். புதிய தமிழ்ச் சொற்களும் இங்குதான் கிடைத்துள்ளன.
ஆகவே இப்பொருள்களை அங்கேயே வைத்து காட்சிப் படுத்தும் வகையில் அருங் காட்சியகம் அமைக்க தமி ழக அரசு நிலம் ஒதுக்கித் தரவேண்டும்என்பதே தமிழ் ஆர்வலர்களின் கோரிக்கையா கும்
கீழடி அகழ்வாய்வில் கிடைத்த பொருட்கள்
மைசூரு கொண்டு செல்ல இடைக்காலத் தடை
மதுரை அருகே கீழடி அகழ்வாய்வில் கிடைத்த பழங்கால பொருட்களை சிவ கங்கை மாவட்டத்தை விட்டு வெளியே கொண்டு செல்லவும், அகழ்வாய்வு மேற் கொள்ளப்பட்ட குழிகளை மூடவும் உயர்நீதி மன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கீழடிஅகழ்வாய்வில்,2,500 ஆண்டுக்கு முந்தையநகரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதுடன், அந்த நகர மக்கள் பயன் படுத்திய 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களும் கிடைத்துள்ளன.
இவற்றை மைசூருஅருங்காட்சியகத்திற்கு கொண்டு செல்ல முடிவெடுக்கப்பட்டு, 2 நாட்களில் அங்கு கொண்டு செல்லப்பட இருந்தது. ஆனால், அவற்றை மைசூரு கொண்டு செல்லக்கூடாது என்றும், கீழடி பகுதியிலேயே ஒரு அருங்காட்சியகத்தை ஏற்படுத்தி பாதுகாக்க வேண்டும் என்று அதற்கான 2 ஏக்கர் நிலத்தைதமிழக அரசு வழங்கவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கம் உள்ளிட்ட கலை- இலக்கிய அமைப்புக்களும் கோரிக்கை விடுத்திருந்தன.
இந்நிலையில், கனிமொழி மதி என்ப வர் இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். வியாழனன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நாகமுத்து, முரளிதரன்ஆகியோர் அடங்கிய அமர்வு, அகழ்வாய்வில் கிடைத்த அரும் பொருட்களை அக்டோபர் 18- ஆம் தேதி வரை கீழடியிலிருந்து எடுத்துச் செல்லக் கூடாது; ஆய்வுக் குழிகளை மூடக் கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. மேலும், கனிமொழி மதியின் மனு தொடர்பாக, இந்தியத் தொல்லியல் துறையின் இயக்குநர் ஜெனரலுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி கள் உத்தரவிட்டனர்.
விடுதலை,30.9.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக