வியாழன், 25 அக்டோபர், 2018

இந்திய நாட்டின் வரலாறு



4.10.2018 முரசொலியில் வந்த கலைஞரின் கருத்து எப்படிப்பட்டது என்று அறியும் முன்பு இந்திய தீபகற்பம் முழுவதும் திராவிட இனம் வாழ்ந்துவந்தது என்பதை வரலாறு ஒப்புக் கொண்டுள்ளது. இன்றளவும் ஆரியர்கள் இந்திய தீபகற்பத்தின் மண்ணின் மைந்தர் களை சூத்திரர்கள் என்றும், இம் மண்ணின் மைந்தர்களான திராவிடர்களுக் கும், தங்களுக்குமிடையே ஒரு கோட்டை நூல் கொண்டு பிரித்து வைத்துள் ளனர்.

1812ஆம் ஆண்டு இன்றைய பாகிஸ்தான், இமயமலையை ஒட்டிய தென் மேற்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் அகழாழ்வு சில ஆங்கிலேய ஆர் வலர்களால் தனிப்பட்ட முறையில் மேற்கொள் ளப்பட்டது, இது அதி காரப்பூர்வ ஆய்வு இல்லை என்றாலும் அந்த ஆய்வில் இந்திய தீபகற்பம் பாகிஸ் தான், தென் மேற்கு ஆப் கானிஸ்தான் தொடங்கி, இன்றைய நேபாளத்தின் தெற்கு பகுதி, வங்கம் வரை ஒரே மொழி, ஒரே கலாச்சாரத்தை ஒத்த மனித இனம் வாழ்ந்து வந்தது என்பதை உறுதி செய்தனர். அது அதிகாரப்பூர்வமில்லாத ஆய்வு ஆகையால் அவர்களின் கூற்று பதிவாகவில்லை. இந்த நிலையில் 1908ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு அதிக்காரப் பூர்வமாக ஆய்வுகளைச் செய்ய அனுமதி அளித்தது,  அதனை அடுத்து அரப்பா, மொகஞ்சதாரோ பகுதிகளில் அகழாய்வுகள் 10 ஆண்டுகளாக தொடர்ந்தது, 1920, 21, 22 இந்த மூன்று ஆண்டுகள் தொடர்ந்து ஆய்வுகள்குறித்த ஆவணங்கள் வெளியாகிக்கொண்டே இருந்தன. அதில் ஆங்கிலேய ஆய்வாளர்களுக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன நாகரீகமாக தோன்றலாம், ஆனால் அக் குழுவில் உள்ள சிலர் இதே போன்று தென் னிந்தியாவில் இன்றளவும் பல அடை யாளங்கள் உள்ளன என்று கூறினர். அங்கிருந்துதான் தமிழகத்திற்கும் சிந்து வெளி நாகரீகத்திற்குமான உறவு வெளிப் படத் தொடங்கியது, தாய்வழி மரபு, இயற்கை வழிபாடு, வேதகலாச்சாரமல்லாத வாழ்க்கை முறை, இறந்தவர்களைப் புதைக்கும் முறை உள்ளிட்ட அரப்பா கலாச்சாரங்கள் என்ன என்ன வருகிறதோ அனைத்தும் 5000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போன்றே இன்றும் தமிழகத்தில் உள்ளது.

முக்கியமாக முதுமக்கள் தாழி இன்றும் ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பல இடங்களில் கண்டெடுக்கப்பட்டு வருகிறது, அந்த முதுமக்கள் தாழி என்னும் இறந்தவர்களைப் புதைக்கும் முறை அதில் உள்ள பொருட்கள்    சிந்துவெளி நாகரிகம் மற்றும் வைகைக்கரை நாகரிகமும் ஒன்றே என்று சான்றுகளோடு கூறப்பட்டுள்ளது.  இன்றும் மதுரை, விருதுநகர், நெல்லை போன்ற தெற்கு மாவட் டம் மற்றும் வட தமிழகங்களில் பல்வேறு அகழ்வாய்வுகளில் சிந்து நாகரிகம் மற்றும் தமிழக நாகரிகம் இரண்டும் ஒன்று என்று உறுதிபடக் கூறியுள்ளது.

இந்த நிலையில் இதில் ஆரியம் அதாவது வேதகால கலாச்சாரம் என்பது இடையில் வெளியில் இருந்து வந்தவை என்பதும் உறுதியாகியுள்ளது.

வெளியில் இருந்து வந்த வேதகால கலாச்சாரம் அதை பின்பற்றும் மக்கள் ஆரம்பத்தில் இருந்தே இந்திய வரலாற்றை மாற்ற பல்வேறு வகையில் முயற்சி செய்துகொண்டிருக்கின்றனர். இன்றளவும் செய்கின்றனர். எடுத்துக்காட்டாக இல்லாத சரஸ்வதி நதிக்கரை நாகரிகத்தைத் தேடி கோடிக்கணக்கான ரூபாய்களை செலவழித்து வருகின்றனர். அரியானா ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் எங்காவது ஊற்றுநீர் பெருக்கெடுத்து வந்தாலும் அது மண்ணில் மூழ்கிப்போன சரஸ்வதி நதி என்று பொய்யுரை செய்துவருகின்றனர்.

இந்த நிலையில் இந்த வரலாற்றை கங்கை கரையிலோ, யமுனைக்கரையிலோ எழு தினால் அது வேதகாலத்திற்கு சாதகமாகவே அமையும் -  ஆகவேதான் கலைஞர் இந்திய தீபகற்ப வரலாற்றை கிருஷ்ணா நதிக்கரை பள்ளத்தாக்கிலோ, காவிரி நதிப்பள்ளத் தாக்கிலோ, அல்லது வைகை பள்ளத்தாக்கிலோ எழுத வேண்டும் என்று கூறியிருந்தார். அவர் கூறியது போன்றே வைகை நதிக்கரையில் உள்ள கீழடியில் பாரிய திராவிட நாகரீகச் சமூகம் ஒன்று வாழ்ந்த நகரத்திற்கான சான்றுகள் கிடைத்துள்ளன; ஆனால் அந்தச் சான்றுகளை வெளிக்கொண்டுவரவிடாமல் தடுக்கும் வேலையில் மத்திய அரசும் அதற்கு இசைபாடும் மாநில அரசும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

- சரவணா ராசேந்திரன்

- விடுதலை ஞாயிறு மலர், 13.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக