செவ்வாய், 13 நவம்பர், 2018

தீபாவளி திடுக்கிடும் உண்மைகள்!



இந்துமதப் பண்டிகைகள் பெரும்பாலும் அசுரனைக் கொன்றதாக - அரக்கனைக் கொன்றதாகக் கூறி, அவற்றின் அடிப்படையில் கொண்டாடப்படுகின்றன. மகாவிஷ்ணு எடுத்த தாகக் கூறப்படும் அவதாரங்களும் அசுரர்களைக் கொன்றதாகவே இருக்கின்றன.

தீபாவளி கதையை எடுத்துக் கொண்டாலும், நரகாசுர னைக் (அசுரனை) கொன்றதாகத்தான் கூறப்படுகிறது. அசுரர்கள், அரக்கர்கள், தஸ்யூக்கள், ராட்சதர்கள், குரங்குகள், கரடிகள் என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம் யார்? வரலாற்றுப் பேராசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்?

தென்னிந்தியாவில் வசித்துவந்த ஆரியரல்லாதவ ர்களையே குரங்குகள் என்றும் அசுரர்கள் என்றும் ராமாயணக் கதையில் எழுதி வைக்கப்பட் டிருக்கிறது

(ரோமேஷ் சந்திர டட் எழுதிய புராதன இந்தியா எனும் நூல் பக்கம் 52)

ராமாயணக் கதை என்பது, ஆரியர்கள் தென் இந்திய தஸ்யூக்கள் அல்லது திராவிடர்கள் மீது படையெடுத்து வெற்றி பெற்றதைச் சித் திரித்துக் காட்டுவதாகும்/

(சிதம்பரம்பிள்ளை எழுதிய திராவிடரும் ஆரியரும் எனும் நூல் பக்கம் 24)

தென்னிந்தியாவில் இருந்த மக்களேதான் ராமாயணத் தில் குரங்கு கள் என்றும் , அரக்கர்கள் என்றும் அழைக்கப் பட்டிருக்கிறார்கள்

(விவேகானந்தரின் சொற்பொழிவு களும் கட்டுரைகளும் என்னும்

நூலில் ராமாயணம்  எனும் தலைப்பில் 587-589 ஆம் பக்கங்களில் இடம் பெற்றுள்ளது)

ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர்கள் என்றும், தஸ்யூக்கள், அசுரர்கள் என்றும் கூறப்பட் டிருக்கிறது. ஆரியருக்கும் ஆரியரல்லாதவருக்கும் இருந்து கொண்டிருந்த அடிப்படையான பகைமையைப் பற்றி ரிக் வேதத்தில் பல இடங்களில் காணலாம். இரு வகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும், அரசியல் வேற்றுமையுமே இந்தப் பகைமைக்குக் காரணமாகும்

(டாக்டர் ராதாகுமுத முகர்ஜி எம்.ஏ., பிஎச்.டி., எழுதிய இந்து நாகரிகம் எனும் நூல் பக்-69)

இராமாயணமும், மகாபாரதமும் இந்தோ ஆரியர் காலத்தையும் அவர்களுடைய வெற்றிகளையும், உள்நாட்டுச் சண்டைகளையும் பற்றிக் கூறுவதாகும்

(ஜவகர்லால் நேரு எழுதிய டிஸ்கவரி ஆஃப் இந்தியா நூல் பக்கம் 76-77)

இராமாயணம் என்பது தென்னிந்தியாவில் ஆரியர் பரவியதைக் குறிப்பதாகும்

(ஜவகர்லால் நேரு - அதே நூல் பக்கம் 82)

இந்த வரலாற்று உண்மைகளை அடிப்படையாகத் தெரிந்து கொண் டால், நாம் கொண்டாடும் பண்டிகை களில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் அசுரர்கள் எல்லாம் திராவிடர்கள்தாம் என்ற பேருண்மை சூரிய ஒளி போலத் தெரிந்துவிடும்.

நம்மை அழித்ததற்காக நாமே விழா கொண்டாடலாமா என்பதுதான் கேள்வி. காந்தியைக் கொன்றதற்காக கோட்சேக்கு விழா கொண்டாடலாமா?

தீபாவளிக் கதையைக் கொஞ்சம் கருத்தூன்றி இந்த வெளிச்சத்தில் படியுங்கள். உண்மை பளிச்சென்று தெரிந்து விடுமே! இதுபற்றி தந்தை பெரியார் என்ன கூறுகிறார்?

தீபாவளி என்றால் என்ன?


1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.

2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்துக் கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து  விரித்தார்.

3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றி யுடன்  கலவி  செய்ய ஆசைப்பட்டது.

4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு)  பூமியுடன் கலவி செய்தது.

5. அதன் பயனாக பூமி  கர்ப்பமுற்று நரகாசுரன் என்ற பிள்ளையையும் பெற்றது.

6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.

7. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசுர டனுடன் போர்  துவங்கினார்.

8. விஷ்ணுவால்  அவனைக் கொல்ல முடியவில்லை.  விஷ்ணுவின் மனைவி நரகாசுரனுடன் போர்தொடுத்து  அவனைக் கொன்றாள்.

9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

10.  இந்த மகிழ்ச்சி (நரகாசுரன் இறந் ததற்காக)  நரகாசுரனின்  இனத் தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.

மேற்கண்டவற்றை புராணங்களி லிருந்து தந்தை பெரியார் எடுத்துக்கூறி, இவை அறிவுக்குப் பொருந்துமா என்று நம்மை சிந்திக்கத் தூண்டியுள்ளார். தந்தை பெரியார் கூற்றில் நியாயமும், பகுத்தறிவும் இருக்கிறதா இல்லையா என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

சிந்திப்பதுதான் மனிதனுக்கு பகுத் தறிவு இருக்கிறது என்பதற்கு அடை யாளம்.

இந்த 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பூமிக்கும், பன்றிக்கும் கலவி நடந்தது _ பிள்ளை பிறந்தது என்பதை ஏற்றால், நாம் காட்டுமிராண்டிகள் அல்லவா! பக்தி என்று வந்துவிட்டால் சகலத்தையும் துறந்துவிட வேண்டுமா? மானமும் அறிவும் மனிதனுக்கு அழகல்லவா, சிந்திப்பீர்!

- விடுதலை  1-11-2013 நரகாசுரன் சிறப்பிதழிலிருந்து....

-  விடுதலை ஞாயிறு மலர், 3.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக