வியாழன், 4 ஜூன், 2020

திராவிட இயக்கத் தலைவர் நடேசனார்


சி. நடேசனார், 
திராவிட இயக்கத் தலைவர். 

சென்னை 
தியாகராய நகர் 
திருப்பதி 
தேவஸ்தானத்திற்கு 
எதிரே இருக்கும் 
நடேசன் பூங்காவில் 
நடந்து செல்வோர்க்கு 
டாக்டர் நடேசனை தெரியுமா 
என்ற கேள்விக்கு 
விடை தெரியல்லை!!. 

ஒரு நூற்றாண்டு காலம் 
தமிழ் நிலப்பரப்பின், 
தமிழ் நிலத்தின் 
வாழ்வியல் கூறுகளில், உரிமைகளில், 
என எல்லாவற்றிலும் 
புரட்சியை ஏற்படுத்திய இயக்கம் 
திராவிட இயக்கம்.

இன்று ஆலமரமாய் 
விழுது விட்டு 
வேப்பேரியில் 
பெரியார் திடல், 
தேனாம்பேட்டையில் 
விழுப்புரம், திருச்சி என, 
அண்ணா அறிவாலயங்கள் 
மாவட்டம் தோறும் 
முகவரிகளோடு 
திராவிட இயக்கம் 
உழைத்துக் கொண்டிருக்கிறது!

ஆனால் மொத்த 
திராவிட இயக்கத்தின் 
ஆதி முகவரி எதுவென்றால் 
வரலாற்றின் கைகளில் 
No. 13 
அக்பர் சாஹிப் தெரு, திருவல்லிக்கேணி.  
என்ற முகவரியைத்தான் காட்டும். 

பார்ப்பனரல்லாத,  பிற்படுத்தப்பட்ட 
திராவிட இன 
மாணவர்களுக்காக 
டாக்டர் சி. நடேசனார் 
நடத்திய 
திராவிட இல்லத்தின் 
முகவரிதான் அது. 

1908 மின்டோ-மார்லி 
அரசியல் சீர்திருத்த சட்டம் 
அமல் படுத்தப்பட்ட பின்பும் 
கல்வி நிறுவனங்களிலும், விடுதிகளிலும் 
பிராமணர் களுக்கு மட்டுமே 
இடம் ஒதுக்கப்பட்டது.

பிராமணரல்லாத 
பிற்படுத்தப்பட்ட
திராவிட இன 
மாணவர்களுக்கு 
இடம் மறுக்கப்பட்டது. 

அதனால் மாணவர்கள் 
மன உளைச்சலுக்கு 
ஆளாவதை தடுக்கவும் 
தங்கி படிக்கவும் 
தனியொரு மனிதனாக
டாக்டர் நடேசன் அவர்கள் 
1914ல் 
உருவாக்கியது தான் 
திராவிட இல்லம் 
(DRAVIDIAN HOME)

சென்னை 
திராவிட சங்கம் என்ற பிராமணரல்லாத 
அரசு ஊழியர்கள் சங்கமும் 
நடத்தி வந்தார். 
அந்த அமைப்பு 
திராவிட இல்லத்தில் வாரந்தோறும் விடுதியில் 
கூட்டம் நடத்தி 
விவாதமும் நடந்து வந்தது!  

இங்கு 
ம. வெ. சிங்காரவேலர், 
அன்னிபெஸண்ட் அம்மையாரும், 
சர். பிட்டி. தியாகராயரும், 
டி. எம். நாயரும் சொற்பொழிவு ஆற்றியிருக்கிறார்கள்!

இங்கு தங்கி படித்த 
R. K. சண்முகம் செட்டியார் 
சுதந்தர இந்தியாவின் 
முதல் நிதி அமைச்சராக இருந்தார். 
S. சுப்பிரமணியம் அவர்கள், 
நீதிபதியாகவும், 
நாராயணசாமி அவர்கள், 
அண்ணாமலை 
பல்கலை கழகத்தின் 
துணை வேந்தராகவும் ஆனார்கள்!

மனக்கசப்புகளால் பிரிந்திருந்த 
சர். பிட்டி. தியாகராயரையும் 
டி. எம். நாயரையும், 
இங்கு வைத்துதான் 
சமாதானம் 
செய்து வைத்தார்
டாக்டர். நடேசன். 

நீதிக்கட்சி என்ற 
தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை துவக்குவதற்கு 
டாக்டர் நடேசன் அவர்கள் தன்னோடு 
இரு நண்பர்களையும் இணைத்துக் கொண்டு 
அடித்தளம் அமைத்தார். 

1916 நவம்பர் 20ம் தேதி 
எத்திராஜ் கல்லூரி அதிபர் 
சர் எத்திராஜ்  அவர்களின் இல்லத்தில் பார்ப்பனரல்லாத தலைவர்கள் கலந்து கொண்டு ஒரு மனதாக 
நீதிக்கட்சியின் 
முதல் தலைவராக 
டாக்டர். நடேசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

சென்னை நகர 
குடித்தனக்காரர் 
பாதுகாப்புச்  சட்டம் 
கொண்டு வந்து நிறைவேற்றியவர்
டாக்டர். நடேசன்.

இந்தச் சட்டம்தான் 
பின்னாளில் தி. மு. க.
குடிசை மாற்று வாரியம் 
அமைத்து 
ஏழைகளுக்கு வீடு கட்டி தந்ததற்கான 
முன்னோடி சட்டம். 

வாக்குரிமை என்பது,  
சொத்து, படிப்பு 
வரிசெலுத்துவோர்களுக்கு மட்டுமே இருந்தது.   
ஏழைகள் வரி செலுத்தாமல் இருக்கலாம், 
ஆனால் ஏழைகளின் உழைப்பால்தான் 
செல்வந்தர்கள் 
வரி செலுத்துகிறார்கள் 
என்று வாதாடினார்.  

வாக்குரிமை என்பது அனைவருக்கும் 
பிறப்புரிமையாக இருக்கவேண்டும் 
என்கிற 
டாக்டர் நடேசனாரின் 
சிந்தனை தான் 
பனகல் அரசரின் ஆட்சியில் பெண்களுக்கு 
வாக்குரிமை வழங்கியது. 

பெண்களுக்கு 
வாக்குரிமை வழங்கியதில் 
இந்தியாவிலேயே 
முதன்மை மாநிலமாக 
திகழ்ந்தது. 

கல்வி, வேலைவாய்ப்பு சட்டமன்றத்தில் 
இட ஒதுக்கீடு வேண்டும் 
என்று முதன்முதலில் 
குரல் கொடுத்தவர் 
நடேசனார். 

1921ல் தாக்கல் 
செய்யப்பட்டு 
தோல்வியடைந்த 
வகுப்பு வாரி 
பிரதிநிதித்துவ சட்டத்தை,
மீண்டும் 
1928ல்  
மந்திரியாக இருந்த 
தனது நண்பர் 
சர்.முத்தையா முதலியாரை அணுகி 
உறுப்பினர் அவையில் 
தாக்கல் செய்து 
வெற்றி அடைந்தார். 

இந்திய 
துணைக்கண்டத்தில் முதன்முறையாக 
இட ஒதுக்கீடு 
என்ற முறை 
சென்னை மாகாணத்தில்தான் அமல் படுத்தப்பட்டது. 

இத்தகைய 
அரும்பெரும் 
சாதனைகள் செய்த 
டாக்டர். சி. நடேசன் 
1938ம் ஆண்டு 
தேர்தலில் போட்டியிட்டு 
தேர்தல் முடிவுகள் வருமுன்பே 
தன் இன்னுயிரை இழந்தார். 

திராவிட இயக்கத் 
தலைவர்களின் 
இறுதி ஊர்வலத்தில் 
நன்றியுள்ள 
தொண்டர்களின் 
உணர்ச்சி பொங்க நடைபெறுவதில்  
முன்னோடி 
டாக்டர். சி. நடேசன் 
அவர்களின் 
இறுதி ஊர்வலம் தான். 

வாசிப்பு அறிவை மேம்படுத்தும், 

ART.நாகராஜன் 
புத்தக வாசல், மதுரை. 
9894049160.
05.06.2020.

Kandasamy Kandasamy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக