ஞாயிறு, 7 ஜூன், 2020

திராவிடம் என்ற சொல் வந்தவழி

1) 1857 இல் ஆதி திராவிட அறிஞர்கள் பலர்கூடி
"ஆதிதிராவிடர் மகா சன சபை"
என்ற சமுதாய அமைப்பைத்
தொடங்கினர்.

2) 1883 ஆண்டிலே "திராவிடப் பாண்டியன்" எனும் இதழ்
மறைத்திரு டி. ஜான் இரத்தினம்
என்பாரை ஆசிரியராகக் கொண்டு நடத்தப்பட்டது.

3) 1890 இல் அயோத்திதாசர்
"திராவிடர் கழகம் " என்ற அமைப்பைத் தோற்றுவித்தார்.

4) 1890 இல் "திராவிட மகாசன சபை தொடங்கப்பட்டது.

5) 01.12.1891 அன்று உதகையில் "திராவிட மகாசன சபையின்" முதல் மாநாடு நடைபெற்றது.

6) 1892 இல் "ஆதி திராவிடர் மகா சன சபை தொடங்கப்பட்டது.

7) 1928 இல் "அகில இந்திய
ஆதி திராவிடர் மகாசன சபை"
எனப் பெயர் மாற்றம் பெற்றது.

8) 1944 இல் சேலம் மாநாட்டில்
நீதிக்கட்சியை "திராவிடர் கழகம்" என்று பெயர் மாற்றி
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செய்தித் தாள்கள் :

1) திராவிட மித்திரன் - 1885
2) திராவிடப் பாண்டியன் - 1885
3) திராவிட கோகிலம் - 1907
4) ஆதி திராவிடன் - 1919
5) ஆதி திராவிட மித்திரன் - 1939

"ஆரியரல்லாத ஆரியக்
கலப்பில்லாத மண்ணின்
மைந்தர்களான தமிழர்களைக்
குறிப்பதுதான் ' திராவிடர் '
என்னும் சொல் (பக்கம் 60)
என்கிறார் அயோத்திதாசப் பண்டிதர்.

சான்று : பக் 35 - 60.
'தமிழன்' அயோத்திதாசப் பண்டிதர்.
ஆசிரியர்:கோ.தங்கவேலு
வௌியீடு: நளினி பதிப்பகம்
சென்னை 600 080

"தமிழம் என்னும் பெயரின்
திரிபே திரவிடம்."

தமிழ்நாட்டின் பண்டைப்
பெயர் தமிழகம் என்பது.

இதைக் கிரேக்கரும், உரோமரும் " டமரிக்கே (Damarice) எனத் திரித்து வழங்கினர் .

வடநாட்டார் அல்லது ஆரியர் , "த" வை "த்ர"  என்றும் தமக்கு ழகரமின்மையால் ழகரத்தை ளகரமாகவும் திரித்துத் தமிழை முதலாவது த்ரமிளம் என வழங்கினர் .

பின்பு அது த்ரமிடம் - த்ரவிடம்
என மருவி, இன்று தமிழில்
திரவிடம் என வழங்குகின்றது.

இவ்வடிவங்களுள் த்ரமிளம்
என்பதே முந்தியதாதலாலும், 
அதற்கு முன்பும் தமிழ் என்னும்
பெயரே தமிழ் நாட்டில் வழங்கியதாலும், அன்று ஆரியக் கலப்பின்மையாலும், தமிழம்  என்னும் தனித் தமிழ்ப் பெயரே வடமொழி வழியாய் திரவிடம் என்று
திரிந்து வழங்குகின்றதென்க.

தமிழ் என்னும் பெயர் எங்கனம்
திரவிடம் என்று திரிந்ததோ ,
அங்கனமே தமிழ் மொழியும்
பிற திரவிட மொழிகளாய்
திரிந்ததென்று அறிக .

சான்று : பக்கம் 131 - 132.
சொல்லாராய்ச்சி கட்டுரைகள்.
தேவநேயப் பாவாணர்.
வௌியீடு : ஐந்திணைப் பதிபபகம்,
சென்னை - 5

தோழர்களே!

"திராவிடம்" எனும் சொல்லையே பலவாறு இழித்தும், பழித்தும் பேசும்,
தமிழர்கள் தமிழம், திராவிடம் என்பன ஒன்றே என்பதை அறிய வேண்டும்.

திராவிடர் என்ற சொல்லைப்
பெரியார் புகுத்தினார் என்று கருதுவோர் மேற்கண்ட கருத்துகளைச் சிந்திப்பீராக!
   - வி.சி. வில்வம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக