செவ்வாய், 5 அக்டோபர், 2021

நாங்கள் இந்து மதம் அல்ல..! திராவிட மதம்!!



1860இல் ராமநாதபுரம் மன்னர் இறக்கிறார்.
அவருக்கு ஆண் வாரிசு இல்லை.
மன்னருக்கு ஆண் வாரிசு இல்லையென்றால் இராணி உயிரோடு இருக்கும் வரை அதை அனுபவிக்கலாம். 
அதன் பிறகு இங்கிலாந்து அரசின் கட்டுபாட்டுக்குள் வந்து விடும் என்பது அப்போதைய (பிரிட்டிஷ்) சட்டம்.

ஆனால் இராணியாரோ கணவர் இறந்த பிறகு 
ஒரு ஆண் மகனை தத்து எடுத்து 
“முத்துராமலிங்க சேதுபதி” என பெயர் சூட்டி 
இளவரசராக்குகிறார்.

ராணி இறந்த உடன் முத்துராமலிங்க சேதுபதி மன்னராகிறார். 

இந்நிலையில் மதுரை கலெக்டர் இதை எதிர்த்து வழக்கு தொடுக்கிறார். 

அந்த வழக்கு மேல்முறையீட்டில் இங்கிலாந்து உச்சநீதி மன்றத்தில்
(Privy Council, London) நடக்கிறது.

அங்கே கலெக்டர் தரப்பு “இந்து மதத்தில் ஒருவரை தத்து எடுக்க வேண்டும் என்றால் கணவர் இறப்பதற்கு முன்பே தன் மனைவியிடம் சொல்லியிருந்தால் மட்டுமே தத்து எடுக்க முடியும்.அது தான் இந்து மத சட்டம் (மனுஸ்மிருதி )” என்று வாதிடுகிறார்.

அதற்கு எதிராக மன்னர் சேதுபதி தரப்போ 

“நாங்கள் இந்துக்கள் அல்ல; நாங்கள் திராவிட இனத்தை சேர்ந்தவர்கள்.
எங்கள் திராவிட ஆகம விதிகளின்படி “பங்காளிகள் ஒத்துக் கொண்டால் போதும்; அந்த தத்தெடுப்பு செல்லும்”

என்று வாதாடி 1868 இல் வெற்றி பெறுகிறார்.

உச்சநீதி மன்றமும் “இந்து மதம் வேறு; திராவிட இனம் வேறு; திராவிட இனம் இந்து மதத்தில் அடக்கமான ஒரு பிரிவு அல்ல”

என்ற உண்மையை உணர்ந்து, வெள்ளைக்கார கலெக்டருக்கு எதிராகவே தீர்ப்பளித்தது; எவ்வளவு நேர்மையான தீர்ப்பு அது?

---வழக்கறிஞர் அருள்மொழி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக