வெள்ளி, 8 அக்டோபர், 2021

நாங்கள் ஹிந்து அல்ல... திராவிடர்!இலண்டனில் நடைபெற்ற வழக்கு!


பிரிட்டிஷ் மகாராணி இங்கிலாந்தில் ஒரு சட்டத்தை நிறைவேற்றினார்.

இந்தியாவை ஆளும் மன்னர்கள், பாளையக்காரர்கள், ஜமீன்களுக்கு ஆண் வாரிசு இல்லை என்றால், மன்னர் மற்றும் அவருடைய மனைவி இறந்த பின்பு அந்த நிலப்பகுதி பிரிட்டிஷ் அரசுக்குச் சொந்தம் எனச் சட்டம் இயற்றினார்.

இந்நிலையில் இராமநாதபுரம் சமஸ்தானத்தின் மன்னர் கிழவன் சேதுபதி இறந்துவிட, ராணியான பர்வதவர்த்தினி தன் சமஸ்தானத்தை ஆள முத்துராமலிங்கம் எனும் ஒரு ஆண் பிள்ளையைத் தத்தெடுத்தார். சிறிது காலத்தில் ராணியும் இறந்துவிட, இராமநாதபுரம் சமஸ்தானத்தின் மன்னராக முத்துராமலிங்கம் பதவியேற்கிறார்.

இதை எதிர்த்து மதுரை மாவட்டத்தின் வெள்ளைக்கார ஆட்சியர், இலண்டனில் உள்ள மகாராணி  சார்பில் நோட்டீஸ் அனுப்புகிறார்.
இதற்கு மறுப்புத் தெரிவித்து, முத்துராமலிங்கத்தைத் தத்தெடுத்தது சரியே எனச் சென்னை ராஜதானி நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெறுகின்றனர்!

இங்கு தான் பார்ப்பனர்கள் தங்களின் 'விஷம' விளையாட்டை தொடங்கினர். மீண்டும் அந்த வழக்கு இராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு எதிராக இலண்டனில் உள்ள பிரிவியூ கவுன்சிலுக்கு எடுத்து செல்லப்படுகிறது. 

ஹிந்து சட்டப்படி, ஒரு விதவைப் பெண் தத்தெடுக்க வேண்டுமானால் மன்னர் இறக்கும் முன்பே மன்னரின் முன் பலருடைய சாட்சிகளின் முன்னிலையில் தத்தெடுக்க வேண்டும் என ஸ்மிருதிகள் சொல்கின்றன. எனவே ஹிந்து மதப்படி முத்துராமலிங்கம் பதவி ஏற்றது செல்லாது எனக் கூறினர். 

இந்த வழக்கு 1867 ஆம் ஆண்டு இலண்டன் பிரிவியூ கவுன்சிலில் நடந்தது. இராமநாதபுரம் சமஸ்தானம் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் எங்களின் சட்டம் ஆரியன் ஸ்கூல் ஆப் லா-வின் (Aryan School Of Law) கீழ் வராது. எங்களுடைய சட்டம் திராவிடியன் ஸ்கூல் ஆப் லா-வின் (Dravidian School Of Law) கீழ் வரும் என வாதாடி வழக்கில் வெற்றி பெற்றார்கள். 

முத்துராமலிங்கம் VS மதுரை ஆட்சியர் வழக்கு என மூர்ஸ் ஜர்னல் (Moores Journal) எனும் இலண்டன் பத்திரிகையில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கு இடம் பெற்றுள்ளது.  இந்திய ஒன்றியத்தின் சட்டப் புத்தகத்தில் "ஹிந்து குடும்பச் சட்டத்திலும்" இவ்வழக்கு இடம் பெற்றுள்ளது!

நன்றி!
வழக்கறிஞர் அருள்மொழி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக