வெள்ளி, 28 ஏப்ரல், 2023

திராவிடம் - தமிழ் தேசியம் குறித்த சர்ச்சைகள் தற்போது அதிகளவில் விவாதிக்கப்பட்டு வருகிறதே?’’ என்று திருமாவிடம் ‘ஆனந்தவிகடன்’ !

“திராவிடம் - தமிழ் தேசியம் குறித்த சர்ச்சைகள் தற்போது அதிகளவில் விவாதிக்கப்பட்டு வருகிறதே?’’ என்று திருமாவிடம் ‘ஆனந்தவிகடன்’ கேட்டதற்கு,
“ஒவ்வொருவரும் அவரவர் காலத்துக்கு ஏற்பதான் அரசியல் செய்ய முடியும். 1956க்கு முன்பு நாம் பிறந்திருந்தால், தமிழ்நாடு என்ற மாநிலம் இருந்திருக்காது; சென்னை மாகாணம் என்றுதான் இருந்திருக்கும். ஆக, அந்த சென்னை மாகாணத்துக்கான திராவிட அரசியலைத்தான் நாம் உயர்த்திப் பிடித்திருப்போம். 

அதேபோல், இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னர் பிறந்திருந்தால், நானும்கூட சுதந்திரப் போராட்டப் போராளியாகத்தான் இருந்திருப்பேன்.

ஆனால், மொழிவழி மாநிலம் என்று பிரிக்கப்பட்ட பிறகு, ‘தமிழ்நாடு’ என்னும் பெயர் சூட்டப்பட்ட நிலப்பரப்பில் பிறந்த நான் இன்றைய சூழலுக்கு ஏற்ப பேசிக் கொண்டிருக்கிறேன். 

இன்றைக்கு இருக்கிற இந்த அரசியலை அன்றைக்கே பெரியார் பேசியிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பதோ அல்லது ‘பெரியார் பேசியது தவறு’ என்று விமர்சிப்பதோ புரிதல் குறைவாகவே பார்க்கிறேன்’’ என்ற பதில் அளித்துள்ளார்.

இன்று தமிழ்த் தேசியம் பேசி பெரியாரைக் கொச்சைப்படுத்தும், பேர்வழிகளுக்கும் இத்தெளிவு வேண்டும்.

திராவிடம், திராவிடர் என்ற சொல்லை நாம் பயன்படுத்துவது ஆரிய பார்ப்பனர்கள் தாமும் தமிழர்கள் என்று சேர்ந்து தமிழர் உரிமையை, போர்த் தீவிரத்தைக் கெடுக்கக் கூடாது. இனத்தால் ஆரியர் வேறானவர் என்பதைக் காட்டவே.
மற்றபடி திராவிடர் கழகமோ, தி.மு.க.வோ, தமிழர்களுக்காகத்தான் போராடுகிறார்களே தவிர கன்னடர்களுக்கோ, தெலுங்கர்களுக்கோ, மலையாளிகளுக்கோ அல்ல என்பதைச் சிந்தித்துப் பேச வேண்டும். 

தமிழக மக்களும் இத்தெளிவைப் பெற வேண்டும். இது சார்ந்த யார் என்ன விளக்கம் கேட்டாலும் சொல்லத் தயாராய் உள்ளேன்.

தமிழர்க்காக, தமிழர் சிறப்பை, உரிமையை மீட்பதற்காக, தமிழர் ஆட்சியை அமைப்பதற்காக முயற்சிக்கின்றவர்கள். அவர்களின் செயல்பாடுகளின் வழி மக்களின் (தமிழர்கள்) ஆதரவைப் பெறவேண்டுமே தவிர, தமிழர்களுக்காகப் பாடுபடக்கூடிய மற்றவர்களை கொச்சைப்படுத்துவது, தமிழர்க்கு எதிரிகளாகக் காட்டுவது கூடாது. அப்படி செய்வது சுயநல அரசியலாகுமே தவிர, உண்மையான தமிழ்ப் பணியாகாது!

   #மீள்பதிவு
- 'இசை இன்பன்' முகநூல் பதிவு, 27.04.23

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக