கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெருங்கற்கால மக்களின் வரலாற்றுத் தடயங்கள், கி.பி. 11-13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மக்கள் வாழ்விடப் பகுதி ஆகியவற்றை அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
விருத்தாசலத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் முதனை கிராமம் உள்ளது. இவ்வூரில் உள்ள செம்பையனார் கோயிலின் கிழக்குப் பகுதியில் உள்ள சின்ன ஓடையில் சிலர் மண் தோண்டும் போது முதுமக்கள் தாழிகள் வெளிப்பட்டுள்ளன. இதை அறிந்த இவ்வூரைச் சேர்ந்த ஆசிரியர் குணசேகரன், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைக்குத் தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில், அப்பகுதிக்கு பல்கலைக்கழக தொல்லியல் ஆய்வாளரும், பேராசிரியர்களு மான சிவராமகிருஷ்ணன், கலைச்செல்வன் ஆகியோருடன் ஆய்வு மாணவர்கள் சென்று ஓடையில் ஆய்வு மேற்கொண்டனர்.
உடைந்த முதுமக்கள் தாழிகள்: மண் எடுக்கப் பட்ட பள்ளத்தில் 15 அடி இடைவெளியில் மூன்று முதுமக்கள் தாழிகள் முற்றிலும் உடைபட்ட நிலையில் கிடந்தன.
அதன் அருகே கருப்பு- சிவப்பு மட்கல ஓடுகளும், வழுவழுப்பான கருப்பு நிற மட்கல ஓடுகளும், உடைந்த விளக்குத் தாங்கிகளும் காணப்பட்டன.
ஆய்வு செய்ததில் இவற்றின் காலம் கி.மு 3-4-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் எனத் தெரியவந்தது. மேலும், மனித எலும்புத் துண்டுகளும் காணப்பட்டன. இவை சிதைந்த நிலையில் இருந்ததால், டிஎன்ஏ சோதனைக்கு உள்படுத்த முடியாது என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். முதனை கிராமத்தின் மேற்குப் பகுதி முழுவதும் கள ஆய்வு நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.
பழையபட்டினம்: விருத்தாசலம் வட்டத் துக்கு உள்பட்ட பழையபட்டினம் கிராமத்தின் கிழக்குப் பகுதியில் தமது முதல் கட்ட தொல் லியல் கள ஆய்வை கடந்த இரண்டு மாதங் களாகச் செய்து வருகின்றனர். இதன் மூலம், இவ்வூரைப் பற்றிய பல புதிய வரலாற்றுத் தகவல்களை கண்டறிந்துள்ளனர்.
பொதுவாக, பட்டினம் என முடியும் ஊர்கள் பண்டைய காலத்தில் வணிக, வர்த்தக மய்யங் களாக விளங்கியவை என்ற அடிப்படையில் இவ்வூரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நீராழி மேடு: சுமார் அய்ந்து ஏக்கர் பரப் பளவில் உள்ள நீராழி மேட்டை சுற்றி நடத்தப் பட்ட கள ஆய்வில் உடைந்த சிவப்பு நிற மட்கல ஓடுகளும், செங்காவி நிறம் பூசப்பட்ட மட்கல ஓடுகளும், சொரசொரப்பான சிவப்பு நிற மட்கல ஓடுகளும், தானியங்களை சேமித்து வைக்கப் பயன்படும் பெரிய அளவிலான மட்பாண்டங்களின் உடைந்த ஓடுகளும் இப்பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும், செங்கற்களும், கட்டடங்கள் கட்ட பயன்படுத்தப்பட்ட சுண்ணாம்புக் காறைகளும் இப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன.
"ட' வடிவ கூரை ஓடுகள்: இந்தப் பண்பாட் டுப் பகுதியின் கிழக்குப் பகுதியில் உடைந்த "ட' வடிவ கூரை ஓடுகளின் பாகங்கள் கிடைத்துள் ளன. இவ்வகை கூரை ஓடுகள் இடைக்கால பண்பாட்டுப் பகுதிகளான கங்கைகொண்ட சோழபுரம், சேந்தமங்கலம் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ள அகழ்வாய்வுகளிலும் கிடைத்துள்ளன.
எனவே, பழையப்பட்டினம் நீராழி மேட்டுப் பகுதியிலும் இதே கால கட்டத்தைச் சார்ந்த அதாவது கி.பி. 11-13-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த மக்கள் இப்பகுதியில் வாழ்ந்திருக்கலாம் எனத் தெரிய வருகிறது.
மேலும், இப்பகுதியில் சேகரிக்கப்பட்டுள்ள மட்கல ஓடுகள், அதில் உள்ள கோடுகள், பூ வேலைப்பாடுகள் அதன் வளைவு தொழில்நுட்பம் போன்றவை இடைக் கால பண்பாட்டுத் தாக்கத்தோடு உள்ளன என் பதையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவ்வூரில் தொடர்ந்து களஆய்வு நடைபெற்று வருகிறது.
இந்த இரண்டு இடங்களையும் சேர்த்து கடலூர் மாவட்டத்தில் இதுவரை 306 இடங் களில் பண்டைய கால மக்களின் வரலாற்றுத் தடயங்களை கண்டறிந்து முறையான ஆவணப் பதிவு செய்யப்பட்டுள்ளன என்கிறார் வர லாற்று ஆய்வாளர் பேராசிரியர் சிவராம கிருஷ்ணன்.
விடுதலை ஞாயிறு மலர்,7.3.15பக்கம்-3
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக