திங்கள், 16 மே, 2016

திராவிடம் - ஒரு பார்வை

தமிழர்கள் தங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் போற்றப்பட வேண்டி யவர்கள் அறுவர். 1) அயோத்திதாசப் பண்டிதர் (1845 - 1914), 2) டாக்டர் சி.நடேசனார் (1875 - 1937), 3) டாக்டர் டி.எம்.நாயர் (1888 - 1919), 4) சர்.பிட்டி .தியாகராயர் (1852 - 1925), 5) தந்தை பெரியார் (1879 - 1973), 6) பேரறிஞர் அண்ணா (1909 - 1969).
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் ஆமைகளாய் ஊமைகளாய் அடங்கிக் கிடந்த கண்மூடிக் கொள்கைகளால் காலமெலாம் குருடராய் வாழ்ந்த தமிழ்ச் சமுதாயம் கண் திறப்பு ஏற்பட உரிமைக்குரல் கொடுத்தவர்கள் இந்த அறுவர் ஆவர்.
மிகவும் தொன்மையானதும் இந்து மதத்திற்கு முற்றிலும் மாறுபட்டதுமான திராவிடக் கருத்துகள் வேரூன்றி உள்ள தற்கு ஆயிரம் சான்றுகள் உள்ளன. 1856இல் திராவிட மொழிகளின் ஒப் பிலக்கணம் எனும் நூலை எழுதிய இராபர்ட் கால்டுவெல் திராவிட மொழி பேசும் மக்கள் எல்லோரும் ஒரே திராவிட இனத்தவர் என்னும் கருத்தை முன் வைத்தார்.
கி.பி.ஏழாம் நூற் றாண்டில் வாழ்ந்த வடமொழி ஆசான் குமாரிலபட்டர் ஆந்திர - திராவிட பாஷா எனும் சொற்றொடரை முதன் முதலாகப் பயன்படுத்தியதைக் கால்டு வெல் குறிப்பிடுகின்றார்.
1891ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கு பிராமணர், மராட்டியர்,  குடியேறிய முசல்மான் தவிர்த்து சென்னை மாகாணத்து மக்கள் முற்றிலும் திராவிடர்கள் என மக்கள் தொகை கணக்கெடுப்புப் பதிவில் (Census of India, 1891 Madras Report)
இடம் பெற் றுள்ளது.
கி.பி. 800இல் வச்சிர நந்தியால் திராவிடச்சங்கம் மறைத்திரு.ஜான் ரத்தினம் என்பரை இந்தியராகக் கொண்டு திராவிடப் பாண்டியன் என்னும் இதழை அயோத்திதாசப் பண்டிதர் நடத்தினார்.
1891இல் அயோத்திதாசர் பிராமண என்ற அமைப்பை நிறுவினார். 1909இல் இதனை திராவிட மகாஜன சபை என் றும் மாற்றினார். ஆரியன் என்றொரு மொழி இருந்ததும் இல்லை. அதற்கு அட்சரமும் இல்லை என்று உறுதிபட வாதிட்டு ஆரியத்தின் அடித்தளத் தையே ஆட்டம் காணச் செய்தார்.
1907ஆம் ஆண்டு அயோத்திதாசப் பண்டிதர் ஒரு பைசாத் தமிழன் என்ற பெயரில் இதழ் நடத்தி தமிழ் மொழி பேசுவோர் திராவிடர் என வழங்கி விடுதலை குறிப்பிட்டு நிலை நாட் டினார். 21.10.2005 அன்று மத்திய அரசு அயோத்திதாசப் பண்டிதருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு பெருமைப்படுத் தியது.
ஒரு பைசாத் தமிழன் இதழின் நூற்றாண்டு விழாவை 2.7.2008 அன்று சென்னை சர்.பிட்டி.தியாகராயர் அரங்கில் அந்நாள் முதல்வர் கலைஞர் பெருமகனார் மிகப்பெரும் அளவில் அரசு விழாவாகக் கொண்டாடி சிறப்பு சேர்த்தார். அயோத்திதாசப் பண்டிதர் திராவிடக் கருத்தியலின் முன்னோடி யாகத் திகழ்ந்தார். இக்கருத்தைத் தொடர்ந்து 1812இல் மாசத்தினைச் சரிதை என்னும் இதழ் தோன்றியது.
திராவிடன், ஆதிதிராவிடன் எனும் பெயர்களில் இதழ்கள் வரத்தொடங்கி யதையடுத்து, திராவிட தீபிகை (1845), திராவிட வர்த்தமானி (1822), திராவிட அபிமானி (1884), திராவிட மித்திரன் (1885), திராவிட ரஞ்சினி (1886), திராவிட நேசன் (1891), திராவிட மந்திரி (1893), திராவிட பானு (1906), திராவிட கோகிலம் (1899), திராவிடாபிமானி (1906), திராவிட மித்திரன் (1910 - இலங்கை) போன்ற இதழ்கள் 1912ஆம் ஆண்டிற்கு முன்பு வெளிவந்து திராவிடக் கருத்தியலை மக்கள் மத்தியில் பரப்பி வந்தன.
பிராமணர் அல்லாத அரசு ஊழியர்களை ஒன்று திரட்டி 1912ஆம் ஆண்டில் மெட்ராஸ் யுனைட்-டெட்-லீக் என்ற அமைப்பை உருவாக்கினர். 1913ஆம் ஆண்டு மெட்ராஸ் யுனைட்டெட் லீக்கின் முதலாவது ஆண்டு விழா டாக்டர் நடேசனாரின் தோட்டத்தில் நிகழ்ந்தது. அக்கூட்டத்தில் மெட்ராஸ் யுனைட் டெட் லீக் என்னும் பெயரை திராவிடர் சங்கம் என மாற்றிட தீர்மானம் நிறைவேறியது. அதுவே திராவிட இயக்கம் எனப் பெயர்பெற்றது.
இப்பெயர் மாற்றத்திற்குக் காரணமாக இருந்த டாக்டர் சி.நடேசனார் திரா விட இயக்க நிறுவனராக கருதப் பெற்றார். 1916ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 20ஆம் நாள் டாக்டர் சி.நடேசனார், டாக்டர் டி.எம்.நாயர், சர்.பிட்டி. தியாக ராயர் ஆகியோரால் பிராமணர் அல்லாதோர் நலன் காத்திட தென் னிந்திய நல உரிமைச் சங்கம் என்னும் கட்சி தொடங்கப் பெற்றது. அதுவே திராவிட இயக்கத்தின் தலைமகன் எனப் பெருமை பெற்ற நீதி கட்சியாகும். கண்மூடித் தமிழருக்கு கண் திறப்பு ஏற்பட்டது.
மனிதரில் வேற்றுமை விளைவித்த மனுநீதியை மாற்றிச் சமுதாய நீதி கேட்டுச் சண்ட மாருதம் எழுந்தது. 1916ஆம் ஆண்டில் தான் என முரசொலி மாறன், தமது திராவிட இயக்க வரலாற்று நூலில் குறிப்பிடு கின்றார்.
1920 முதல் 1936 முடிய 16 ஆண்டுகள் சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி ஆட்சி தான் நடைபெற்றது. பெண் களுக்குத் தகுதி அடிப்படையில் வாக்குரிமை, தேவதாசி முறை ஒழிப்பு, பால்ய மணத்தடுப்பு ஆகியன நிகழ்ந்து, வகுப்பு வாரி பிரதிநிதித்துவ முறை (சிஷீனீனீஸீணீறீ நி.ளி.) அமுலுக்கு வந்தது.
இந்து சமய அறநிலையப் பாதுகாப்புச் சட்டம், பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பகல் உணவுத்திட்டம் ஆகியனவற்றால் சாதனைச் சரித்திரம் படைத்தது. சர்.றி.ஜி. இராஜன் முயற்சியால் நீதிக்கட்சியின் பொன்விழா 1968இல் நிகழ்ந்தது. அன்றைய முதல்வர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் பொன்விழா மலரை வெளி யிட்டு உரை நிகழ்த்தினார்.
2003ஆம் ஆண்டு திராவிட இயக்கத்தின் 90 ஆம் ஆண்டுவிழா, இயக்க நிறுவனர் டாக்டர் சி.நடேசனாரின் 66வது நினைவு நாள் விழா, சென்னை சிந்தாதிரிப்பேட்டை சிங்கண்ணச் செட்டித் தெருவில் நிகழ்ந்தது.
டாக்டர் சி. நடேசனாரின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து தளபதி மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆற்றிய நிறைவுரை திராவிட இயக்கத்தின் புதிய விழிப்புணர்வை உண்டாக்கியது. திராவிட இயக்க நூற்றாண்டு விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் சிறப்பான தலைமையில் நிகழ்வுற்றது.
திராவிடம் என்ற கருத்தியலை ஆந்திரர் ஏற்கவில்லை. கன்னடர் கண்டு கொள்ளவில்லை. கேரளர் செவியில் கேட்கவில்லை எனும் கருத்து அன்றும் இன்றும் முன்வைக்கப் பெறுகிறது. தாகூர் அவர்களால் வங்க மொழியில் எழுதப்பெற்று இன்று தேசிய கீதமாக நடுவண் அரசு ஏற்று, அனைத்து மாநிலங்களும், ஏற்றுக்கொண்டு பாடப்பெறுகின்ற ஜனகணமன என்ற பாடலில் திராவிட உத்சல வங்க என்று திராவிடம் எனும் சொல் இடம் பெற் றுள்ளது.
இந்தியாவிலுள்ள அனைத்து இன மக்களையும் இணைத்துப் பாடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலை யாளம் ஆகிய நான்கு மொழிகளைப் பேசும் மக்களைக் குறிப்பிடும் சொல் லாக திராவிட என்ற ஒரே சொல் தேசிய கீதத்தில் பயன்படுத்தப் பெற் றுள்ளது. தெலுங்கு, கன்னடம், மலை யாளம் ஆகிய மூன்று மொழிகளைப் பேசும் மக்கள், தங்கள் இனம் தேசிய கீதத்தில் இல்லையே என்று இன்று வரை எவ்வித எதிர்ப்புக்குரலும் எழுப்பவில்லை.
ஏன்? மனோன்மணியம் ஆசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள் தமிழ்மொழி வாழ்த்துப்பாடலில் கன்னடமும் களி தெலுங்கும், கவின் மலையாளமும் உன் உதரத்துதித் தெழுந்து ஒன்று பல ஆயிடினும் என்று கூறும் அகச்சான்றிலிருந்து தமிழி லிருந்து கிளைத்த மொழிகளே கன் னடம், தெலுங்கு, மலையாளம் என்ற போதிலும். ஆதிநாளில் அனைவரும் தமிழைப் பேசும் திராவிடரே.
பின்னாளில் மொழி கிளைத்துத் தனித்தனி பிரிவு ஆயினர். கன்னடர், தெலுங்கர், மலையாளி ஆகியோர் ஒன்றாய் இருந்து தமிழ்ப்பேசினர். அந்நாளில் அவர்கள் திராவிடரே. அரண்மனையிலே இருந்த நீதிக் கட்சியை ஆலமரத்தடிக்குக் கொண்டு வந்தவர் தந்தை பெரியார். அதை மேலும் மேலும் விரிவாக்கி வெட்ட வெளிக்கு விரிவான திடலுக்குக் கொண்டு வந்து மக்கள் மன்றத்தில் கலந்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.
11.8.1957 அன்று பேரறிஞர் அண்ணா மதுரையில் ஆற்றிய உரையில்தான் இந்த அரண்மனை - ஆலமரம் - வெட்டவெளி என்ற விளக்கத்தைத் தந்தார் என்பதை முரசொலிமாறன், தமது திராவிட இயக்க வரலாற்று நூலில் தெளிவுபடுத்துகிறார். ஆகவே திராவிடம் என்பது காலாவதி ஆகிவிட்ட ஒன்று அன்று என்பதை உணர வேண்டும். அது பற்றிய கருத்தியலைப் பார்ப்போம்.
சிந்தனைக்கு:
திராவிட இயக்கம் பற்றி கவியரசு வைரமுத்துவின் வைர வரிகள்:
திராவிட இயக்கம் என்ன தான் செய்தது தமிழனுக்கு?
இந்தியர் அல்லாத அரசுகள் எழுந்ததும் விழுந்ததும் தான் இந்தியா வின் வரலாறு என்றார் காரல் மார்க்ஸ். தமிழர் அல்லாதவர்கள் தமிழர்களை ஆண்டதுதான் தமிழர்களின் வரலாறு என்பது அதன் உண்மை.
மண்ணின் மக்களை ஆலயத்துக்குள் அனுமதிக்காமல் பூக்களுக்கும் வரிவிதித் துப் புண்ணியம் தேடிக்கொண்டது பல்லவர் அரசு. வருணாசிரமத்தை நெறியென்று கொண்டு சாதிவாரியாய் வீதி அமைத் தது மத இயக்கத்தின் மடியில் கிடந்த மாமன்னன் இராசராசன் அரசு. மேல் சாதி மன்னனுக்கு கருவூலத் தங்கம் காணிக்கை கொடுத்து விட்டு தறிகளுக்கும் மாட்டு வண்டிகளுக்கும் வரி விதித்தது நாயக்கர் அரசு.
கீழ் ஜாதி என்று கருதப்பட்ட சாதி இந்து ஒருவர் கோயிலுக்குள் நுழைவது குற்றம் என்று நீதிமன்றத்தில் தீர்ப் பளித்தது பிரிட்டிஷ் அரசு (1874).
இப்படி நூற்றாண்டுகளின் செருப் படியில் லாடமாய்த் தேய்ந்து கிடந்த தமிழனைத் தொட்டுத் தூக்கி நிறுத் தியது திராவிட இயக்கம். மண்ணுக்கும் மனிதனுக்குமான உறவை உணர்த்தியது திராவிட இயக்கம். தொலைந்து போன விழுமங்களை மீட்டெடுத்தது திராவிட இயக்கம். உயர்வு - இழிவு என்பன பிறப் பால் உருவானதில்லை என்று வர லாற்று ரீதியாக வாதிட்டு வென்றது திராவிட இயக்கம்
- (மானுட வெளிச்சம் செங்குட்டுவன்)
-விடுதலை ஞா.ம.10.1.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக