திங்கள், 16 மே, 2016

திராவிடர்கள் பரம போக்கிரிகளா?


யார் கண்களில் யாருக்கு?
பண்டைப் பாரசிகர் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்தே ஒரு தனிப்பெருங்கடவுளை வழிபடுபவர்கள். அவர்கள் மொழியில் அஹூர அல்லது அசுர என்றால் கடவுள், அஹூரமஜ்த அல்லது மகா அசுர என்றால் தனி முதல் கடவுள்.
அஹூர அஹூர மஜ்த, அஹூர மஜ்த அஹூர என்று முழந்தாளிட்டுப் பயபக்தியுடன் பிரார்த்தித்துக் கொண் டிருந்தார் ஒரு பெரியார்.
அவருக்குப் பக்கத்திலிருந்த ஒரு வாண்டுப் பயல் அவர் உருவத்தையும் சொற்களையும் பார்த்துச்சிரித்துக் கொண்டிருந்தான். சிறுவருடன் சிறுவர் கூடிக்குறும்பு செய்யத் தொடங்கினர். படித்த பெரியமனிதர் ஒருவர் அவர் களைப் பார்த்தார். அவர் அவர்களைக் கண்டித்தார்.
செய்வது தவறு என்ற உயரிய நோக்கத்துடனல்ல. அந்தப் பெரியாரைத் தொடுவதே பாவம் என்ற கருத்துடன், அவரை அவமதிக்கும் பாவத்துடன்!,
போங்களடா, அந்தச் சண்டாளன் பக்கம் நிற்காதீர்கள்! அவன் அசுரவித்து, சூனியக்கரன், தெய்வத்துரோகி! என்றார் அந்தப் படித்தவர்.
பாரசிகப் பெரியார் நிஷ்டை கலைந்தது. ஏனப்பா, பிள்ளைகள் தான் தெரியாமற் சிரிக்கிறதென்றால், படித்தவ ராகிய நீர் அதைவிட மோசமா யிருக்கிறீரே! என்று அவர் கேட்டார்.
படித்தவருக்கு அவருடன் சரி சமமாகப் பேசக்கூடப் பிடிக்கவில்லை முதுகைத் திருப்பிக் கொண்டு போய் விட்டார். ஆனால் அருகிலிருந்த அரைகுறைப்படிப்புச் சீடர் ஒருவர் சற்று ஆத்திரத்துடன் பேசினார்.
என்னய்யா! போம், போம்! இருந்திருந்து அசுரரையும், பேய் களையும் துதிக்கிறீரே! பிள்ளைகள் சிரிக்காமல் என்ன செய்யும்? பெரிய வர்கள் இத்தகைய சண்டாளக் கர்மங்களைப் பார்த்து வெறுத்து ஒதுக்காமல் என்ன செய்வார்கள்! என்றார்.
நான் எல்லாரையும் படைத்து அளித்துக் காக்கிற மகா அசுரனைத் தானே வணங்குகிறேன், இதில் என்ன சண்டாளத்தனம்?
எல்லாரையும் படைத்தளித்துக் காக்கும் அசுரனா? அடபாவி! அசுரர் என்றால் கடவுளின் பகைவர்! பேய்! எல் லாரையும் படைத்தளித்துக் காப்பவனைத் தேவன் மகாதேவன் என்று சொல்லு!
பாரசிகப் பெரியார் இரு காதுகளையும் பொத்திக்கொண்டு அஹூர அஹூர மஜ்தா! அஹூர மஜ்தா அஹூர! அபசாரம், அபசாரம் என்று கூவிக் கொண்டு பேசாது அப்பால் சென்றார்.
அசுர என்ற சொல்லுக்கு ஆரிய மொழியாகிய சமஸ்கிருதத்தில் பேய் என்று பொருள். ஆரிய வைதிகர் பண் டைப் பாரசிகர் அல்லது பார்சிகளைச் சண்டாளர் என்றது இதனால் தான். ஆனால் தேவ என்ற சொல்லுக்குப் பாரசிக மொழியில் பேய் என்று பொருள். இதனால் தான் பாரசிக வைதிகர்கள் அந்தப் பெயரை வணங்குபவரைச் சண்டாளர் என்று கருதிக் காதைப் பொத்திக் கொள்கின்றனர்.
இங்கே சண்டை கடவுளை வணங்குவதைப் பற்றியல்ல கொள்கை பற்றியல்ல, கடவுளின் பெயரைப்பற்றிய போராட்டம், மொழியைப் பற்றிய, இனத்தைப் பற்றிய போராட்டம் இது. ஒரு இனம் இன்னொரு இனத்தின் மீது கொண்ட பகை, ஒரு நாகரிகம் இன்னொரு நாகரிகத்தின் மீதுகொண்ட முரண்பாடு ஒருவர் தெய்வத்தை, பழக்கவழக்கங்களை இன்னொருவர் பழிப்பதாக வந்து விடிந்தது.
அசுர, தேவ என்ற பெயர் வேற்றுமை மொழி வேறுபாட்டையும், இன வேறுபாட்டையும் மட்டும் குறிப்பதல்ல. மொழி பகைமையையும், இனப்பகைமையையும் குறிப்பதாகும். அதுமட்டுமல்ல. இரண்டு நாகரிகங் களுக்கிடையிலும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடும், பாம்புக்கும் கீரிக்கும் உள்ள முரண்பாடும் இருந்தன.
அசுர வழிபாட்டாளர்கள் இரத்த வெறி கொண்ட யாகங்களை வெறுத் தார்கள். தேவ வழிபாட்டாளர்கள் அதையே தெய்வநெறியாகக் கொண் டார்கள். அசுர வழிபாட்டாளர்கள் மதுவை வெறுத்தார்கள். தேவ வழிபாட் டாளர்கள் மதுவை அருந்தாதவன் மனிதத்தன்மை உடையவனல்ல, ஆரியனல்ல என்று கருதினார்கள். அசுர வழிபாட்டாளர்கள் ஒரே ஒரு கடவுள் தான் உண்டு என்றார்கள். மின்னலுக்கு ஒரு பெண் தெய்வம் உண்டு என்றார்கள்.
தேவ வழிப்பாட்டாளர்கள் இடிக்கொரு ஆண் தெய்வம் உண்டு என்றார்கள். ஆளுக்கு இரண்டு தெய்வங்களாகக் கணக்கிட்டார்கள். விலங்குகளுக்குக் கூடத் தனித்தெய்வங்களே உண்டு பண்ணி, அந்த தெய்வீக விலங்குகளைப் பலியிட்டு உண்டார்கள்.
மனிதருக்கு மனிதர் ஒற்றுமை காண முடியும்! ஆனால் நன்மையும் தீமையும் போல, தீயும் தண்ணீரும் போல, உடல் நலமும் நோய்க் கிருமியும் போல ஒன்றுக் கொன்று மாறுபட்ட இந்த இரண்டு நெறிகளும் எப்படி ஒன்றாக முடியும்?
அசுர என்ற சொல்லை ஆரியன் ஏற்க மாட்டான். அதற்காக அசுர வழி பாட்டாளர் தங்களைத் தேவ வழிபாட் டினர் ஆக்கிக் கொள்ள மாட்டார்கள். அது போலவே தேவ என்ற சொல்லை பார்சிகள் ஏற்க மாட்டார்கள். அதற்காக ஆரியனும் தன்னை அசுர வழிபாட் டாளன் ஆக்கிக் கொள்ளப் போவ தில்லை. அன்புச் சமரசம் போதிக்கும் திரு.வி.க. போன்ற மகான்கள்கூட இவற்றிடையே சமரசம் செய்து வைக்க முடியாது. ஏனென்றால் அவை சொல் வேற்றுமை, மொழி வேற்றுமை மட்டுமல்ல.
இனவேற்றுமை மட்டுங்கூட வல்ல பண்பாட்டு வேற்றுமை, நன்மை தீமைப்பகுத்தறிவிலேயே வேற்றுமை உடைய இரண்டு நாகரிக இனங்களின் பண்பாட்டுச் சின்னங்கள்.
பார்சி இனம் ஆரிய இனம் ஆகிய வற்றைப் போன்ற வேறுபாட்டையே திராவிட இனமும் ஆரிய இனமும் கொண்டுள்ளன. இங்கே ஒரு இனத்தை ஒருவர் பழிப்பதுடன் நிற்கவில்லை. தெய்வப் பெயரைப் பழிப்பதுடனும் நிற்கவில்லை. ஓர் இனம் தன்னைத் தெய்வ இனமாக்கி மற்ற இனத்தின் பெயரையும் உரிமையையும், அதை என் றென்றைக்கும் அடிமைப்படுத்திச் சுரண் டக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது.
ஆரிய இனத்தவர் மொழியில் ஆரியர் என்ற சொல்லுக்கு மேலானவன் என்று பொருள். திராவிட இனத்தவர் பெய ராகிய திராவிடம் என்ற சொல்லுக்கு அவர்களிடையே சிலர் ஓடுபவர் போக்கிரிகள் என்ற அர்த்தங்கள் கூற முயன்றதுண்டு. ஆனால் அது போலவே திராவிட மொழியில் திராவிடர் என்ற சொல்லுக்குத் திருஅவா விடுபவர் என்று பொருள்.
ஆனால் ஆரியர் என்ற சொல்லுக்கு நாகரிகமற்றவர், மிலேச்சர் என்ற பொருளைத் திராவிடர் கூறு கின்றனர். இனத்துக்கு இனம் பெயரால் பழிக்கிறது. இதற்காக இரண்டு இனமும் தம் பெயரை மாற்றிக்கொள்ள முடியுமா? மாற்றிக் கொள்ளப் போவதில்லை.
வேண்டுமென்றால் ஆரிய இனத்தில் ஆரிய இயக்கத்தை எதிர்க்கும் அரைகுறை ஆரியர்கள் சிலர் ஆரியர் என்றால் மிலேச்சர் என்று தமிழ் நிகண்டு கூறுகிறது. ஆகவே ஆரியர் என்ற பெயர் நமக்கு வேண்டாம் என்று கூறக்கூடும். அதுபோல திராவிட இனத்திலும் திராவிட இயக்கத்திலிருந்து எக்காரணத்தினாலோ ஒதுங்கி நிற்கும் ஓரிருவர் திராவிடர் என்ற பெயர் நமக்கு வேண்டாம்.
ஏதோ புறம்போக்கு ஆரியர்கள் அதற்குப் பரம போக்கிரிகள் என்ற பொருள் கூறுகிறார்கள் என்று கூறக்கூடும். பெரும்பாலான ஆரியரோ, திராவிடரோ இந்தச் சிறுகுரல்களைப் பொருட்படுத்தப் போவதில்லை.
திராவிடர்கள் என்றால் பரம போக் கிரிகள் என்பது எந்த மொழியாராய்ச் சிக்காரர்கள் முடிவும் அல்ல. எந்த உயர் நூலின் மேற்கோளும் அல்ல. யார் யாரோ கூறிய வெறுப்புரை அது. ஆனால் அதை நமக்கு எடுத்துக் கூறுபவர் திராவிடர் - திராவிடருள் மதிப்புக்குரி யவர் வீர மறத் தமிழர் -_- அறிஞர்! நாவலர், திரு.சோமசுந்தர பாரதியார் அவர்கள்.
நாவன்மை மிக்க அப்பெரியார் இச்சிறு கூற்றை எடுத்துக் கூறவில்லை யானால், இதனை யாரும் பொருட் படுத்தமாட்டார். அவர் கூறினார் என்ற தற்காகத் தான் இந்த அளவு விளக்கம்.

திராவிடர் என்ற பெயரை நாவலர் அவர்கள் வெறுப்பது நமக்குத்தெரியும். ஆனால் அவர் திராவிட இனத்தை, மொழியை, நாகரீகத்தை வெறுப்பவ ரல்லர், போற்றுபவர், சொல்லை வெறுப்பதற்கு அவர் உள்ளத்தில் அவர் காணும் காரணம் ஒன்றே ஒன்று  அது ஆரிய மொழிச்சொல் என அவர் நம்பு வதே. ஆனால் அது ஆரிய மொழிச் சொல் அன்று! தமிழ் தன் ஆரிய மொழி வடிவு மட்டுமே.
தமிழ் மொழியின் பெயர் திருப்பதிக்கும் குமரிமுனைக்கும் குடமலைக்கும் இடையே குறுகிவிட இன்றைய தமிழ் மொழிப் பெயராக வழங்குகிறது. முன்னைய விரிவான முத்தமிழ் மொழியின் பெயராக அது சொல் பயன்படாது முத்துக்கூட அந்தப் பொருளில் இன்று வழங்கவில்லை.
அப்பொருள் ஆரிய அறிஞராலும், உலக கலைஞராலும் வழங்கப்பட்டு மறைமலை யடிகளார் போன்ற தனிதமிழறிஞரால் ஏற்கப்பட்ட சொல்லே திராவிடம். வட சொல், வட சொற் பொயர்களை வழங் காத தனித் தமிழ் வீரமறைமலையார் அதை ஏற்றுக் கொண்டபோது, இன்னும் வடசொற் பெயர் கொண்ட நாவலர் அதை ஏற்கத் தயங்குவது ஏன் என்பது தான் நமக்குப் புரியவில்லை.
-விடுதலை ஞா.ம. 10.1.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக