ஆரியர்களுக்கு முன்பே திராவிடர்கள் இந்தியாவில் வாழ்ந்தனர்
திராவிட மொழிக் குடும்பம் சுமார் 4,500 ஆண்டுகள் பழைமையானது சர்வதேச குழு ஆய்வில் கண்டுபிடிப்பு
பெர்லின், மார்ச் 22 தமிழ் உள்ளிட்ட 80 மொழி வகைகள் அடங்கிய திராவிட மொழிக் குடும்பம், 4 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழைமையானது என்று சர்வதேச குழு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சர்வதேச குழு ஒன்று மொழியியல் ஆராய்ச்சி யில் ஈடுபட்டது. ஜெர்மனியைச் சேர்ந்த மானிட வரலாற்று அறிவியல் ஆய்வகமான மேக்ஸ் பிளாங்க் நிலையம் மற்றும் இந்தியாவின் டேராடூன் நகரில் உள்ள ஆய்வு நிலையம் ஆகிய வற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் அதில் இடம்பெற்றிருந்தனர்.
இந்தக் குழு, தங்கள் ஆய்வு முடிவுகளை ராயல் சொசைட்டி ஓப்பன் சயின்ஸ்' என்ற இதழில் வெளியிட்டுள்ளது.
அந்த ஆய்வில், திராவிட மொழி குடும்பம் 4 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழைமையானது என்று கூறப்பட்டுள்ளது. அதில், மேலும் கூறப்பட்டு இருப்பதாவது:
தென்னிந்தியாவிலும், மத்திய இந்தியா விலும், அண்டை நாடுகளிலும் 80 திராவிட மொழி வகைகள் (மொழிகள் மற்றும் வட்டார வழக்குகள்) பேசப்பட்டு வருகின்றன. சுமார் 22 கோடி பேர் இந்த மொழிகளைப் பேசி வரு கிறார்கள்.
இந்த திராவிட மொழிக் குடும்பம், சுமார் 4 ஆயிரம் ஆண்டுகள் முதல் 4 ஆயிரத்து 500 ஆண்டுகள்வரை பழைமையானது. திராவிட மொழி பேசுபவர்களிடம் பெறப்பட்ட புள்ளி விவரங்கள் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்துள்ளோம். நவீன புள்ளி விவர முறைகளைப் பயன்படுத்தியும், காலத்தை யூகித்துள்ளோம்.
திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த 4 பெரும் மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகியவை பல நூறாண்டுகள் இலக்கிய பாரம்பரியம் கொண்டவை. அதிலும், தமிழ் மொழி, தொலைதூரத்துக்குப் பரவியுள்ளது.
தமிழ் மொழி உலகின் செம்மொழிகளில் ஒன்றாகும். சமஸ்கிருதத்தைப் போல் அல்லாமல், தமிழ் மொழி தனது தொன்மை காலத்துக்கும், நவீன காலத்துக்கும் இடையிலான இடைவெளி அற்றுப் போகாமல், நவீன இலக்கியங்கள், பாடல்கள், மத நூல்கள் போன்றவற்றில் இடம் பிடித்துள்ளது.
திராவிட மொழிகளின் புவியியல் ரீதியான தோற்றத்தை சரியாக கணிக்க முடியவில்லை. ஆனால், இக்காலத்தைவிட கடந்த காலங்களில் மேலை நாடுகளில் திராவிட மொழிகள் வேகமாக பரவியதாகத் தெரிகிறது.
திராவிடர்கள், இந்திய துணைக் கண்டத்தை பூர்வீமாகக் கொண்டவர்கள் என்பதில் ஆராய்ச்சி யாளர்களிடையே கருத்து ஒற்றுமை உள்ளது. ஆரியர்கள், 3,500 ஆண்டுகளுக்குமுன்பு இந்தியா வுக்கு வருவதற்கு முன்னரே திராவிடர்கள் இங்கு வாழ்ந்து வந்துள்ளனர்.
எங்கள் ஆய்வு முடிவுகள், ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட மொழியியல் மற்றும் தொல்லியல் ஆய்வு முடிவுகளுடன் ஒத்துப் போகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விடுதலை நாளேடு, 22.3.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக