ஜாகோர் என்ற ஜெர்மானிய பழைய பொருட்கள் சேகரிப்பாளர் உலகம் முழுவதும் சென்று பண்டைய நாகரீகத்திற்கான பொருட் களை சேகரித்துக்கொண்டு இருந்த போது நெல்லை மாவட்டத்தின் வடக்கில் உள்ள வீர பாண்டியபுரம் என்ற ஊரில் நூற்றாண்டு பழைமை யான வரலாற்று அடையாளங்கள் உள்ளதாக கேள்விப்பட்டு 1876-ஆம் ஆண்டு அச்சிறு கிராமத்திற்கு சென்றார். அங்கு கிடைத்த சில பழைய மண்பாண்டங்கள் ஆதிச்ச நல்லூரிலி ருந்து கொண்டுவரப்பட்டது என்பதை தெரிந்து கொண்டு தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள ஆதிச்சநல்லூருக்கு சென்றார்.
புற்காடுகளுக்கு இடையில் அங்கு உள்ள ஆடு மேய்ப்பவர்கள் அழைத்து சென்று காட்டிய இடமெல்லாம், அங்கு ஒரு மனித நாகரிகம் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருப்பதைக் கண்டு இங்கிலாந்தின் அகழ்வாராய்ச்சி ஆய்வா ளர்களிடம் இது குறித்து எடுத்துக்கூறிவிட்டு தனது கையில் கிடைத்த சில பொருட்களை எடுத்துக்கொண்டு ஜெர்மனுக்கு சென்றுவிட்டார்.
தற்போது அவர் எடுத்துச் சென்ற ஆதிச்ச நல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட் கள் ஜெர்மன் தொல்பொருள் மியூசியத்தில் பாதுக் காக்கப்பட்டு வருகிறது,
அதன் பிறகு கிழக்கிந்திய கம்பெனியிட மிருந்து பிரிட்டிஷ் அரசரின் ஆளுமைக்குக் கீழ் இந்தியா வந்தது, அதன் பிறகு ஆதிச்ச நல்லூர் அகழாய்வு வேகம் பிடித்தது, 1904ஆம் ஆண்டு அலக்சாண்டர் ரியா என்ற அகழ்வாராய்ச்சி நிபுணர் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டவற்றுள் மிகவும் பழைமையான தொல்லியல் களம் என்று ஆதிச்சநல்லூரைக் குறிப்பிட்டார்.
தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூரில் பழைமை நாகரீகம் புதைந்துள் ளது என்றும், அதை அகழாய்வு செய்யுங்கள் என்றும் உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்கள் ஒருமித்த குரலாக கோரிக்கை விடுத்துக்கொண்டு இருக்கும் போது வைகை நதிக்கரையில் 2013-ஆம் ஆண்டு புதிய அகழாய்வு அடையாளங்கள் கண்டறியப்பட்டது, வைகையாறு தோன்றும் தேனி மாவட்டம் தொடங்கி கடலில் கலக்கும் இராமநாதபுரம் மாவட்டம் வரை வைகை ஆற்றங்கரையின் அருகமை பகுதிகளில் 2013-14இல் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின் போது தொல்லியல் எச்சங்கள் உள்ள 293 பகுதிகள் கண்டறியப்பட்டன.
அதில் கீழடியை 4 கட்டங்களாக மத்திய அரசு ஆய்வு நடத்தி முடித்தது, ஆனால் அதுகுறித்த இறுதி அறிக்கையை இன்றுவரை வெளியிட வில்லை. அகழாய்வை தலைமையேற்று நடத் திய அமர்நாத்தை விதிமுறைகளுக்கு முரணாக அசாம் மாநிலத்திற்கு இடமாற்றம் செய்தது, இந்த நிலையில் தமிழார்வலர்கள் பலர் நீதிமன்றத்தில் கீழடிஅகழாய்வு குறித்து வழக்கு தொடர்ந்தனர். இதனை அடுத்து தமிழக அரசின் அகழாய்வுத் துறை கீழடி ஆய்வை கையிலெடுத்தது,
கீழடி அகழாய்வின் அய்ந்தாம் கட்ட ஆய் வுகள் துவங்குவதற்கு முன்பு தமிழகத்தில் பெருத்த மாற்றம் ஏற்பட்டது, மே மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் அபாரவெற்றி பெற்றது, மதுரையில் எழுத்தாளரும் கீழடிகுறித்தும் வைகை நதிக்கரை நாகரீகம் குறித்தும் அதிகம் எழுதியவருமான கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சு.வெங்கடேசன் நாடாளுமன்ற உறுப் பினராக பதவியேற்றார். அதன் பிறகு ஜூன் மாதம் மீண்டும் கீழடியில் அகழாய்வுப் பணிகள் துவங்கியது. இம்முறை தமிழக அரசின் கீழ் அப்பகுதிகுறித்து நன்கு அறிந்த நாடாளுமன்ற உறுப்பினரின் ஆர்வம் மற்றும் ஒட்டுமொத்த தமிழர்களின் கோரிக்கையாக கீழடி அகழாய்வுப் பணிகள் வேகமாக நடைபெற்றன,
இந்த நிலையில் செப்டம்பர் மாதம் முதல் வாரம் கீழடி குறித்த ஆய்வு முடிவுகளை தமிழக அரசு வெளியிட்டது,
அந்த ஆய்வு முடிவுகளின் படி உலக நதிக்கரை நாகரிகம் குறித்த வரலாற்றை திருப்பிப் போடும் வகையில் அங்கு கிடைத்த பொருட்கள் அமைந்திருந்தது, அதாவது சிந்து வெளி நாகரி கத்திற்கு முன்பான ஒரு நாகரிகம் என்று உறுதி யிட்டுக் கூறப்படும் வகையில் ஆய்வு முடிவுகள் அமைந்திருந்தது.
ஒரு ஏக்கர் நிலத்தில் தந்தத்திலான 89 தாயக்கட்டைகள் கிடைத்துள்ளன. பண்பாட்டு, தொழில் , நாகரிக அடையாளங்களை உணர்த்தும் வகையில் இந்த முடிவுகள் அமைகின்றன. கி.மு 600-களிலேயே பேச்சும் எழுத்தும் இருந்தி ருப்பது, இந்திய மொழிகளிலேயே அதிக அக வையுடைய மொழி, தமிழ்தான் என்பதை உறுதி செய்கிறது.
கீழடி ஆய்வில் 1,001 குறியீடுகள் கிடைத் திருப்பது, சாதாரண செய்தியல்ல. சிந்துவெளி ஆய்விலும் கீழடி ஆய்விலும் நிறைய ஒற்றுமை கள் தெரிய வருகின்றன. விரைவில் சிந்து வெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பது சான்றுகளோடு நிறுவப் படும்; ஆம்! இந்தியாவின் தொல் குடிகள் தமிழர் என்பது சான்றுகளோடே நிறுவப் படும்.
சங்ககாலத் தமிழ்ச் சமூகம் எழுத்தறிவு பெற்ற சமூகம் என்பதற்குச் சான்றாகப் பெயர்கள் பொறிக்கப்பட்ட பானைகள். இருவேறு நிறங் களில் பானைகள், நூல் நூற்கும் தக்கழிகள், கூர்முனை கொண்ட எலும்பால் செய்யப்பட்ட கருவிகள், தங்க அணிகலன்கள், மணிகள், தந்தத் தில் செய்யப்பட்ட சீப்பு, சதுரங்கம் மற்றும் பக டைக் காய்கள் போன்றவையும் கீழடியில் கண் டெடுக்கப்பட்டுள்ளன.
தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், துறையின் செயலாளர் உதயச் சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட நிகழ்ச்சி யில், ஆய்வு முடிவுகள் கையேடாக வெளியிடப் பட்டது. இதில், சங்க காலம் என்பது முந்தைய கணிப்புகளைவிட மேலும் 400 ஆண்டுகள் பழைமையானதாக இருக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டது.
கீழடி அகழாய்வு முடிவுகள்
கருதுகோளாக இதுவரை எழுதப்பட்டு வந்த இந்திய வரலாற்றை, கீழடி திருத்தி எழுதும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இந்த ஆய்வுகளுக்குத் தூண்டுகோலாக இருந்த, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன். மதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார், அப்போது கீழடியின் நான்காம் கட்ட ஆய்வு முடிவுகள் வெளியாகியிருப்பது குறித்து பேசுகை யில், "பத்து நாட்களாக நாங்கள் விடுத்த தொடர் கோரிக்கையை அடுத்து, கீழடியின் நான்காம் கட்ட அகழ்வாய்வு முடிவுகளைத் தமிழகத் தொல்லியல்துறை இப்போது வெளியிட்டுள்ளதில் மகிழ்ச்சி.
கீழடியில், அமர்நாத் மேற்கொண்ட ஆய் வின்போது 6 மீட்டர் ஆழக்குழி அமைத்து அதில் 3ஆவது மீட்டர் ஆழத்தில் கிடைத்த மாதிரிகள் கி.மு. 290 காலத்தினதாக அமைந்தன. தற்போது, எதிர்பார்த்ததைவிட மேலாக கி.மு 6ஆம் நூற் றாண்டுப் பதிவுகளின் சான்றுகளாக இந்த முடி வுகள் கிடைத்திருக்கின்றன. இந்த முடிவுகள், இந்திய வரலாற்றுக்கே வெளிச்சம் பாய்ச்சுவதாக அமைந்துள்ளன. அகழ்வில் இன்னும் ஆழம் சென்றால், இதற்கும் முந்தைய காலத்தின் சான்றுகள் கிடைக்கும்.
கீழடி ஆய்வு தொடங்கிய அதே ஆண்டில் தொடங்கப்பட்டது, பாட் நகர் அகழாய்வு. அங்கே உணரும் அருங்காட்சியகம் அமைக்க இந்திய அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியிருக்கிறது. உத்தரப் பிரதேசத்தின் சனோலி பகுதியில் பழங்காலத் தேர் கண்டறியப்பட்டுள்ளது. அந்தப் பகுதி, பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக் கப்பட்டிருக்கிறது. இந்தப் பணிகளுக்காக 6,000 கோடி ரூபாயை இந்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால், அதில் கீழடி இடம்பெறவில்லை.
பாட் நகர், சனோலி ஆய்வுகள், எற்பாடுகள் எல்லாமே பாராட்டுக்குரியவைதான். அதே சமயம், கீழடியையும் பாதுகாக்கப்பட்ட பகுதி யாக அறிவிக்க வேண்டும். ஆய்வுக்கும் அருங் காட்சியகம் அமைப்பதற்கும் நிதி ஒதுக்கி அடுத்தகட்ட அகழாய்வை இந்திய அரசு நடத்த வேண்டும்.
முதல் இரண்டாண்டுகள் அமர்நாத் மேற் கொண்ட ஆய்வறிக்கை, இடைக்கால அறிக்கை யாகக் கொள்ளப்பட்டது. மூன்றாம் ஆண்டில் நியமிக்கப்பட்ட சிறீதர், அகழாய்வு செய்த இடத்திலிருந்து கட்டுமானத் தொடர்ச்சி எதுவும் கிடைக்கவில்லை என்று தனது ஆய்வறிக் கையைச் சமர்ப்பித்தார். இதை முன்வைத்து, ஆய்வை முடித்து கீழடியைக் கைவிட்டது இந்திய அரசு; இது, அரசின் காழ்ப்புணர்வையே காட்டுகிறது. தொடர்ந்து தமிழகத் தொல்லியல் துறையும் இந்தியத் தொல்லியல்துறையும் இந்த ஆய்வுப் பணியைத் தொடர வேண்டும்” என்றார்.
திராவிட நாகரிகம்
கீழடி குறித்த தகவல்கள் வெளிவந்த பிறகு அது தமிழர் நாகரிகம் என்று கூறிக்கொண்டே அதை பாரத நாகரிகம் என்ற அடையாளம் சூட்ட துவங்கிவிட்டனர். தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூட ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு சுதி ஏற்றும் வகையில் இது பாரத நாகரிகம் என்று புதிய பெயர் சூட்டி அழைத்தார்.
பிரின்ஸ் வேல்ஸ் அருங்காட்சியத்தில் ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்ட மொகஞ்சாதாரோ மற்றும் ஹரப்பா தொடர்பான அகழ்வாராய்ச்சி பொருட்கள் வைக்கப்பட்டிருந் தன. இப்பொருட்களைக் கொண்டு அங்கு வாழ்ந்த மனித நாகரிகம் குறித்து மாதிரி ஒன்று அமைக்கப்பட்டது, அந்த இடத்திற்கு 1960 முதல் 1962-ஆம் ஆண்டுவரை முதல்வராக இருந்த யஸ்வந்தராவ் சவான் காலகட்டத்தில் திராவிட நாகரிகம் (dravidian civilization) என்று பெயர் சூட்டப்பட்டது, அன்றிலிருந்து 1995-ஆம் ஆண்டு சிவசேனா கட்சி மகாராட்டிரா மாநில அரசைக் கைப்பற்றும் வரை நீடித்தது, 1995-ஆம் ஆண்டு சிவசேனா மகாராட்டிரா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மனோகர் ஜோஷி தலைமையில் ஆட்சிப்பொறுப்பில் ஏறிய உடன் 1996-ஆம் ஆண்டு பம்பாய் நகரம் மும்பாயாக மாறியது. இதுமட்டும் தான் உலகிற்குத் தெரியும் வேல்ஸ் மியூசியம் சத்திரபதி சிவாஜி மியூசியமாக மாற்றப்பட்டது, அதுமட்டுமல்ல நுழைவாயிலில் இருந்த சிந்துவெளி மாதிரியில் இருந்த திராவிட நாகரிகம் (dravidian civilization) என்பதை அகற்றி விட்டு பெயர் தெரியாத நாகரீகம் (unknown civilization) என்று மாற்றிவிட் டார்கள். இன்றுவரை அது அப்படியே தொடர்கிறது,
யூப்ரடீஸ் டைகரீஸ் நாகரிகத்தை சுமேரிய நாகரிகம், நைல் நதிக்கரை நாகரிகத்தை எகிப்த் திய நாகரிகம், என்று பெயர் இட்டு அழைத்த வரலாற்று அறிஞர்கள் சிந்துவெளி நாகரிகத்தை திராவிட நாகரிகம் என்று அழைத்தனர். ஆனால் அது முற்றிலும் மாற்றப்பட்டு தற்போது அடையாளம் இழந்து அடையாளம் தெரியாத நாகரிகம் என்று ஆகிவிட்டது,
ஆனால் அது அடையாளம் தெரியாத நாகரிகம் அல்ல, அது திராவிடர் நாகரிகம் என்று கீழடி மீண்டும் உறுதிசெய்துவிட்டது, அது மட்டுல்ல நதிக்கரை நாகரிகத்தின் வேர்கள் தாமிரபரணி, வைகை போன்ற நதிக்கரையில் இருந்து துவங்கி இருக்கவேண்டும் என்பதை இன்று ஆய்வுகள் தொடர்ந்து உறுதி செய் து வருகின்றன.
- விடுதலை ஞாயிறுமலர், 5 .10 .19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக