வெள்ளி, 11 அக்டோபர், 2019

திராவிடநாடும்-திரு.வி.க.வும்!

பெரியார் என்றால் திரு.வி.க.


திரு.வி.க. என்றால் பெரியார்




ப.திருமாவேலன்


இவர்கள் இருவரும் ஒருவரையொரு வர் வேறொருவருடன் இவ்வளவு நட்புடன் இருந்தது இல்லை.

1917 முதல் 1953 வரை (அதாவது திரு.வி.க. மறையும் வரை!) முரண்பட்ட நேரத்தில் கூட நட்பாய் இருந்தார்கள். ஒரு சில ஆண்டுகள் நீங்கலாக அதாவது 1925 முதல் 1937 வரையில் பெரியாரும் திரு.வி.க. வும் முரண்பட்ட காலக் கட்டம். அப்போதும் இருவரும் நட்பாய் இருந்தார்கள். திரு.வி. க.வை மிகக் கடுமையாகக் கூட தாக்கி எழுதி இருக்கிறார் பெரியார். ஆனால் மென்மை யாகத் தான் பதில் தருவார் திரு,வி.க.

உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் இருந்த பெரியாரை சந்திக்கச் செல்கிறார் திரு.வி.க. அவரை பார்த்ததும் பெரியாரின் கண்களில் லேசாக நீர் வழிகிறது. 'நான் செத்தால் அழுவதற்கென்று நீங்கள் தான் இருக்கிறீர்கள்' என்கிறார் பெரியார். 'இங்கு அய்யாவை பார்க்க எத்தனையோ பேர் வருகிறார்கள். ஆனால் உங்களைப் பார்த்ததும் தான் அழுகிறார்' என்றார் அருகில் இருந்தவர்.

1953ஆம் ஆண்டே திரு.வி.க. அவர்கள் இறந்து விட்டார்கள். அந்தக் காலக்கட்டத் தில் பெரும்பாலும் ஈரோட்டில் தான் தங்கி இருந்தார் பெரியார். எப்போது சென்னை வந்தாலும் திரு.வி.க.வின் ராயப்பேட்டை வீட்டுக்குச் சென்று அவரை பார்த்துவிட்டுச் செல்லும் பழக்கத்தை வழக்கமாக வைத் திருந்தார் பெரியார்.

அப்படித்தான் திரு.வி.க.வை பார்க்கச் செல்கிறார் பெரியார். ' மறைமலையடிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அவரை சென்று பாருங்கள்' என்கிறார் திரு.வி.க. அந்த உத்தரவை தலைமேல் போட்டுக் கொண்டு அடிகளைச் சென்று சந்திக்கிறார் பெரியார். 15.9.1950 அன்று அடிகள் மறைகிறார். அதற்கு முந்தைய நாள் அடிகளைச் சென்று பார்க்கிறார் பெரியார். மரணப்படுக்கையில் அடிகள் இருக்கும் படம் 'விடுதலை' நாளிதழில் வெளியாகி உள்ளது. அந்தளவுக்கு திரு.வி. க.வின் உத்தரவுக்கு கட்டுப்பட்டவர் பெரியார்.

அதனால் தான் 'சுயமரியாதை இயக்கத் துக்கு தாய் நான். தந்தை தான் பெரியார் ஈ.வெ.ரா. அந்தப் பிள்ளை தந்தையிடமே அதிகமாக வளர்ந்து விட்டது' என்று திரு.வி.க. சொன்னார். இது 1940 வரை மட் டும்தான். 1942இல் சென்னை பொதுமருத்துவ மனையில் பெரியார் - திரு.வி.க. சந்திப்பு நடந்தது. இறுதி வரை தாயும் தந்தையும் ஒன்றாகத்தான் சுயமரியாதைக் குழந் தையை வளர்த்தார்கள். 1942க்குப் பிறகு நடந்த திராவிடர் கழக மாநாடுகள், திருக் குறள் மாநாடுகள், பெரியார் அழைத்த பொதுக்கூட்டங்கள் ஆகிய அனைத்திலும் திரு.வி.க. இருந்தார். இந்த தகவல்களை திரு.வி.க. ஆய்வாளர்கள் சொல்வது இல்லை. ஏனென்றால் இவை எதுவும் 'திரு.வி.க. எழுதிய வாழ்க்கைக் குறிப்புகள்' நூலில் இல்லை.

ஏன் இல்லை? திரு.வி.க. மறைத்து விட்டாரா? இல்லை. 'வாழ்க்கைக் குறிப்பு கள்' நூலை 1944ஆம் ஆண்டே எழுதி திரு. வி.க. வெளியிட்டு விட்டார். இதன்பிறகும் ஒன்பது ஆண்டுகள் திரு.வி.க. அவர்கள் வாழந்தார்கள். எனவே தான் அவரது தேசிய இயக்கப் பணிகளை, தொழிற்சங்கத் தொடர்புகளைச் சொல்லும் ஆய்வாளர்கள் திராவிட இயக்கத் தொடர்புகளைச் சொல்ல வில்லை.

கடலூரில் நடந்த திராவிட நாடு பிரி வினை மாநாட்டில் (14.09.1947) தந்தை பெரி யார் படத்தை திறந்து வைத்தவர் திரு.வி.க.

''திராவிடப் பெருமக்களின் தலைவன், எனது பழைய நண்பரும் உழுவலன்பனு மாகிய இராமசாமிப் பெரியார் படத்தை திறந்து வைப்பதில் பெருமகிழ்ச்சியடைகி றேன். இவர் ஓர் இயற்கை ஞானி என்று தான் கூற வேண்டும். பெரும் பெரும் காரியங்களை எல்லாம் எளிய முறையில் சாதிக்கும் திறமை இவரிடம் ஆரம்பத்தில் இருந்தே காணப்பட்டு வந்தது.

மனோதத்துவ ஆராய்ச்சியின் படி இப்பெரியாரின் புற உறுப்புகளை நோக் கினால் அஞ்சாமையின் சாயல் இவருடைய கண்ணொளியில் பொலிவதைக் காண லாம். இந்தியா எங்கும் ஏன் உலகமெங்கும் கூட இந்த ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்திய சுதந் திர விழா கொண்டாடப்பட்ட காலத்தில் 'நாம் எதிர்பார்த்த சுதந்திரம் அல்ல இது. சுரண்டல் சக்கரத்துடனும் சர்வாதிகார சக்க ராயுதத்துடனும் வடநாட்டு ஏகாதிபத்திய ஆட்சியைத் துவங்கும் நாள் தான் இது' என்று கட்டளையிட்டார். தன் மனச்சாட் சிக்கு தோன்றியதை யார் என்ன கூறினா லும் தனக்கு லட்சியமில்லை என்று வெளி யிட எவ்வளவோ அஞ்சாமை வேண்டும். அஞ்சாமை உள்ள இடத்தில் உண்மை இருக்கும். உண்மை உள்ள இடத்தில் தான் அஞ்சாமை பிறக்க முடியும்" என்று பேசியவர் திரு.வி.க. அவர்கள்.

திராவிடர் கழகத்தின் 19ஆவது மாநாடு ஈரோட்டில் 1948 அக்டோபர் மாதம் நடந்தது. இதில் 'திராவிட நாடு' படத்தைத் திறந்து வைத்து திரு,வி.க, பேசினார்.

''இந்நாட்டு மக்கள் எல்லோருமே திரா விடர்கள் தான். என்றும் திராவிடன் தான். அதனால் திராவிட நாடு படத்தை திறந்து வைப்பதில் தவறு இல்லையே என்கிற முடிவுக்கு நான் வந்தேன்" என்று சொல்லி விட்டு திராவிடம் பற்றி தான் ஆயிரம் பக்கம் அளவில் ஒரு புத்தகம் எழுத இருக்கிறேன் என்றார். திராவிடம் என்ற சொல்லுக்கான விளக்கத்தை திரு.வி.க. விவரிக்கிறார். 'திராவிட நாடு என்று ஒரு நாடு தொன்று தொட்டு இருந்து வந்திருக்கிற தென்பதற்கு இவ்வாதங்களே போதும்' என்று அடுக்குகிறார்.

இந்தியாவில் இருப்பது ஆரியம், திரா விடம் என்ற இரு கலாச்சாரங்கள் மட்டுமே, திராவிட நாடு வளமானது, திராவிட நாடு பிரிந்தால் தான் தொழிலாளர் வாழ்வு வளம் பெறும், திராவிடர் கழகம் அறப்புரட்சியின் மூலம் வெற்றி பெறும் போதுதான் தொழி லாளர் வாழ்வு மலரும். ஆரிய மாயை அகற்றி திராவிடத்தில் மறுபடியும் புத்து ணர்ச்சியை உண்டாக்கப்பாடுபட்டு வரும் திராவிடர் கழகத்துக்கு நீங்கள் யாவரும் தன்மான தமிழ்மகன் ஒவ்வொருவனும் உரிமை கொண்ட தொழிலாளர் தோழனும் உதவி புரிதல் வேண்டாமா?" என்று கேட்ட வர் திரு.வி.க.

இதைத் தொடர்ந்து  31.10.1948 அன்று சென்னை ஜிம்கானா மைதானத்தில் நடந்த திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார் திரு.வி.க. இக்கூட்டத் தில் பேசும்போது, 'நமது குறிக்கோள், நமது முடிவான லட்சியம் திராவிடநாடு, திருவிட நாடு, திரவிடநாடு தான்' என்றும் முழங் கினார். உலக சமதர்ம இயக்கத்துக்கு துணை புரிவது தான் திராவிடர் கழகம் என்றும் கூறினார். 'பரத கண்டம் பேசிய நான் திரா விட நாடு கேட்பதால் எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா என்று சிலர் கேட்பதாக சொல்லிக் கொண்டார் திரு.வி.க.

''இனி யாவரும் ஈரோடு காட்டும் வழி, ஈரோட்டுப் பெரியார் காட்டும் வழி நடந்து வர வேண்டியதுதான். திராவிட நாடு திரா விடருக்கே' என்று தனது பேச்சை முடித் தார்கள்.

1949 மே 1 அன்று சென்னையில் திரா விடர் கழகம்  நடத்திய  மே தினக்கூட்டங் களில் திரு.வி.க. பங்கெடுத்தார். 1953 செப் டம்பர் மாதத்தில் திரு.வி.க.வின் பிறந்த நாளைக் கொண்டாடினார் பெரியார். திரு. வி.க. படத்தை பெரியார் திறந்து வைத்து பேசினார். 13.9.1953 அன்று இந்த விழாவை பெரியார் நடத்தினார். 17.09.1953 அன்று திரு.வி.க.அவர்கள் மறைந்தார்கள். தனது நண்பருக்காக அவர் உடல் தாங்கிய ஊர்வ லத்தில் சென்ற பெரியார் அவர்கள், இறுதி நிகழ்ச்சிகளில் முழுமையாக அமர்ந்து இருந்தார். அதன்பிறகு நாடு முழுவதும் திரு.வி.க.வுக்கு இரங்கல் கூட்டங்களை நடத்தியது திராவிடர் கழகம்.

"பெரியார் என்றால் திரு.வி.க.

திரு.வி.க. என்றால் பெரியார்"

என்று சொல்வது இதனால் தான்!

- விடுதலை ஞாயிறு மலர், 7.9.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக