செவ்வாய், 17 ஏப்ரல், 2018

தேவாசுரப் போர்கள் தெரிவிக்கும் உண்மைகள்!

மஞ்சை வசந்தன்



புராணங்கள், இதிகாசங்கள், கற்பனை கதைப்புகளின் களம்தான் என்பது உண்மையானாலும், அந்தக் கற்பனைகளின் அடித்தளம் வரலாற்று நிகழ்வுகள்தான் என்பதை நுணுகிநோக்கின் அறியலாம்.

ஆரியர்கள் அயல்நாட்டிலிருந்து வந்தவர்கள். தமிழர்கள் (திராவிடர்கள் இந்த மண்ணின் மக்கள். அயல்நாட்டிலிருந்து வந்தவர் என்பதால் அவர்களுக்கென்று சொந்த நிலம் இல்லை. எனவே, தமிழர்களிடம் நிலத்தைத் கொடையாகப் பெற்றே தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டனர்.

அக்காலத்தில் நிலப்பரப்பு மிகுதி; மக்கள் மிகவும் குறைவு. எனவே, ஆரியர் தமிழர் நிலங்களை மெல்ல மெல்ல கைப்பற்றுவது எளிமையாய் நடந்தது. அவ்வாறு அவர்கள் கைப்பற்றிய இடங்களில் குழுக்களாய் வாழ்ந்தனர்.

ஆரியர் நுழைவு அதிகரிக்க, நில அபகரிப்பும் அதிகரித்தது. ஆரியர்கள் இந்தியாவெங்கும் பரவினர். இதனைத் தமிழர்கள் எதிர்க்க, ஆரிய-திராவிட மோதல் ஏற்பட்டது.

இந்த மோதல்தான் தேவாசுரப் போர் என்று புராணங்களில் எழுதப்பட்டன.

ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்து பரவிய தொடக்க காலங்களில் பசு மாட்டுக் கறியைத்தான் அதிகம் உண்டனர். சோமபானம், சுரபானம் என்ற இரண்டு போதை பானங்களைக் குடித்தனர். சுரபானம் குடித்தமையால், ஆரிய பார்ப்பனர்கள் “சுரர்கள்” என்று அழைக்கப் பட்டனர். ஆரியர் அல்லாத தமிழர்கள் அசுரர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

சுத்தம் எதிர்ச்சொல் அசுத்தம் என்பதுபோல்

சுரர் என்பதன் எதிர் இனத்தார் அசுரர் எனப்பட்டனர்.

பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் என்று இன்று நாம் அழைப்பதுபோல், அன்று சுரர், சுரர் அல்லாதவர் (அசுரர்) என்று அழைக்கப்பட்டனர்.

பூதேவர் - பூசுரர்

“விண்ணுலகில் தேவர்கள் இருக்கிறார்கள். நாங்கள் மண்ணுலக தேவர்கள்” என்று ஆரியர்கள் தங்களைப் பெருமையாகக் கூறிக்கொண்டனர். மண்ணுலக தேவர்கள் என்பதை பூதேவர் என்றனர். சுரபானத்தை இந்திரன் கூறியதற்கிணங்க ஆரியர்கள் குடித்ததால், பூசுரர்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டனர். குடிகாரர்கள் என்ற இழுக்கு வரக்கூடாது என்பதற்காக இந்திரன் கூறித்தான் குடித்தோம் என்று பின்னாளில் கூறிக் கொண்டனர். இதுதான் ஆரியப் பித்தலாட்டம் என்பது.

இந்தச் சொற்களின் பயன்பாட்டிற்கான உட்பொருள் என்னவென்றால், விண்ணில் உள்ள கடவுள்கள் விண்ணுலக தேவர்கள். ஆரியப் பார்ப்பனர்கள் மண்ணுலகில் தேவர்கள் என்பதேயாகும்.

திராவிடர்-ஆரியர் மோதல்:

தமிழரின் இனப் பெயர் திராவிடர் என்பது. தமிழர்களை ஆரியர்களிடமிருந்து பிரித்துக்காட்ட திராவிடர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.

திராவிடர்-ஆரியர் போர்கள் இரு முதன்மைக் காரணங்களுக்காக நிகழ்ந்தன.

1. மண்ணுரிமை - பாதுகாப்பு

2. பண்பாட்டுரிமை - பாதுகாப்பு 

1. மண்ணுரிமை

தமிழர்கள் (திராவிடர்கள்) முழுக்க முழுக்க இந்த மண்ணின் உரிமையாளர்கள். ஆரியர்கள் அயல்நாட்டார் என்பதால் நிலங்களைத் கொடையாகப் பெற்றே தங்களுக்கு உரிமையாக்கிக் கொண்டனர்.

காலப்போக்கில் கொடையாகப் பெறுவதற்குப் பதிலாய் கைப்பற்றி உரிமை கொள்ள முற்பட்டனர். அதனைத் தமிழர்கள் எதிர்க்க இரு இனத்திற்கும் இடையே போர் நிகழ்வது தொடர்ந்து நடந்தது.

2. பண்பாட்டுரிமை

தமிழர்கள் சாதியற்ற, மூடநம்பிக்கை யற்ற அறிவுசார் வாழ்க்கைக்கு உரியவர்கள். தமிழர்களுக்கு இயற்கையாய் இனப்பலம், நிலப்பலம், உடற்பலம் இருந்தது. எனவே, தமிழர் வீரத்தில், போர்த்திறத்தில் நம்பிக்கை உடையவர்கள். ஆரியர்களுக்கு இம்மூன்றும் இல்லை. எனவே, அவர்கள் யாகம், பலி, சடங்குகள் என்று மூடச் செயல்களின் மூலம் பலம் பெற முயன்றனர்.

நேருக்கு நேர் உடல் வலிமைகாட்டிப் போராடி, ஆரியர்களால் வெல்ல முடியாது என்பதால், இயற்கை வழிபாடு, யாகம் போன்றவற்றின் வழி வெற்றி பெற முயன்றனர்.

அந்த யாகங்களை தமிழர்கள் அழித் தனர். இராமாயணத்தில்கூட, ஆரியர்கள் தங்கள் யாகத்தை அழிக்கும் தாடகையை அழிக்க வேண்டும் என்று இராமனைத் துணைக்கழைத்ததை அறியலாம்.

தாய்வழிச் சமுதாயம்:

தமிழர்கள் பெண்களை பெரிதும் மதித்தனர். சொத்து, ஆளுகை எல்லாம் பெண்களிடம்தான் இருந்தது. அந்த அடிப்படையில்தான் தமிழ்ப் பெண்ணான தாடகை படைக்குத் தலைமையேற்று ஆரியர் யாகத்தை அழித்தாள்.

தாடகை வதம்:

ஆக, தாடகை வதம் என்பது தமிழ்த் தலைவியை வதைத்தல் என்பதே ஆகும். புராணங்களையும், இதிகாசங்களையும் ஆய்வு செய்தால் நிறைய ‘யாக’ அழிப்புகள் நடந்ததாய் கூறப்பட்டிருக்கும் அதன் உட்பொருள் இதுதான். வீரத்தின் மீது நம்பிக்கை கொண்டது தமிழர் பண்பாடு. மூடச் சடங்குகளின் வழி சக்தி பெறலாம் என்பது ஆரியக் கலாச்சாரம். இந்த இரண்டிற்கும் இடையேயான போர்தான் யாக அழிப்பு, யாக காப்பு முயற்சிகள்.

அசுரர்-தேவர் போர்கள்

மாவலி, நரகாசுரன், சூரபதுமன், இரணியாட்சதன் போன்றவர்கள் அசுரர்களாய் புராணங்களில் சுட்டப்படுவதைக் காணலாம். இவர்களோடு எதிர்த்துப் போரிட்டவர்கள் யார் என்றால், மகாவிஷ்ணு, முருகன், இந்திரன் போன்ற கடவுள்கள். இதன் உட்பொருள் என்ன?

தமிழர்கள் பலசாலிகள், வீரம் நிறைந் தவர்கள், மண்ணின் உரிமையாளர்கள், மக்கள் பலம் உடையவர்கள். எனவே, அவர்களைச் சிறு கூட்டமான ஆரியர்கள் போரிட்டு வென்றதாய்க் கூறமுடியாது என்பதால், ஆரியர்களுக்குத் துணையாய் ஆண்டவர்களே வந்தார்கள் என்று கூறப்பட்டது.

மண்ணுரிமைப் போர்:

வாமன தத்துவம் என்ன?

மாவலி கதையைக் கூர்ந்து  ஆய்ந்தால், அது ஒரு மண்ணுரிமைப் போர் என்பது விளங்கும்.

வாமனன் நிலத்தைக் கொடையாகக் கேட்டான் என்று சொல்லப்படுவதன் பொருள் என்ன?

ஆரியர்கள் நிலத்தை தமிழர்களிடம் கொடையாகப் பெற்றே பயன்படுத்தினர் என்பதுதான். அந்த அடிப்படையில்தான் ஆரியர்கள் மாவலியிடமும் நிலத்தைக் கொடையாகக் கேட்டனர்.

வாமன அவதாரம் என்பதன் உட்பொருள் என்ன?

“வாமன” என்றால் “சிறு” என்று பொருள். ஆரியர்கள் சிறுபான்மையினர் என்பதன் அடையாளமாகத்தான் வாமன அவதாரம் புனையப்பட்டது. சிறுபான்மையினரான ஆரியர்கள் அயல்நாட்டவர் என்பதால், மண்ணின் சொந்தக்காரர்களான தமிழர்களிடம் நிலத்தைக் கொடையாகக் கேட்டனர் என்பதே அதன் உள்பொருள், உள்ளடக்கம் எனலாம்.

மாவலியின் அமைச்சர், “கொடையாக நிலத்தை ஆரியர்களுக்குக் கொடுக்காதே, கொடுத்தால் உனக்குக் கேடு” என்று எச்சரித்தார். ஆனால் மாவலி, பிச்சை கேட்பவனுக்குக் கொடுக்க வேண்டும் என்ற பேருள்ளத்தில் கொடுத்தான். மெல்ல மெல்ல கேரளாவில் ஆரியர் ஊடுருவி ஆதிக்கம் செலுத்த, தமிழ் இனமும், தமிழ் மொழியும் அழிந்தன என்பதே மாவலி கதை உணர்த்தும் உண்மை வரலாறு.

இரணியாட்சதன் பூமியைப் பாயாய்ச் சுருட்டி கடலுள் பதுக்கினான் என்ற புராணக் கதையின் உட்பொருள், தமிழ் மன்னன் ஆரியர்களிடமிருந்து மண்ணைக் காத்தான் என்பதே!

புராணக் கதையின் உட்பொருளும், தமிழ் மன்னன் ஆரியர்களிடமிருந்து மண்ணைக் காத்தான் என்பதே!

நரகாசுரன் பூமி மைந்தன்:

நரகாசுரன் பூமிக்குப் பிறந்தான் என்று புராணம் கூறுவதன் உட்பொருள். பூமி பிள்ளை பெற்றது என்பதல்ல. ஆரியர்கள் வந்தேறிகள் பூமிக்கு உரியவர்கள் அல்ல, நரகாசுரன் மண்ணின் மைந்தன் என்பதைக் குறிக்கவேயாகும்.

சூரபதுமன் போர்:

சூரபதுமன் கதையின் உட்கரு, சூரபதுமன் தன் ஆட்சியின் எல்லையை விரிவுபடுத்தினான். அது ஆரிய நில அபகரிப்புக்கு இடையூறாக இருந்தது. எனவே, சூரபதுமனை எதிரியாய்ச் சித்தரித்து, அவனைக் கடவுள் அழித்ததாய்க் கதை எழுதினர். சிறுபான்மை ஆரியர் போரிட்டு வென்றதாய்க் கூற முடியாது என்பதால், கடவுள் அவர்களுக்கு துணைநின்றதாய் கதை புனைந்தனர்.

இராமாயணம் என்பதும் ஆழமாய் ஆய்வு செய்தால் மண்ணுரிமைப் போரின் கற்பனை விரிவாக்கம் என்பது விளங்கும்.

சீதை இராமன் என்பதெல்லாம் கற்பனைப் பாத்திரங்கள்.

“சீதை” என்றால் “நிலம்” என்று பொருள். இராவணன் சீதையை கொண்டு சென்றான் என்றால், ஆரியர் அபகரித்த நிலத்தை இராவணன் மீட்டான் என்பதேயாகும்.

நிலம் சீதையாகவும், கரியமேகம் (மழை) இராமனாகவும் உருவகம் செய்யப்பட்டன. அதனால்தான் இராமனை நீலமேகவண்ணன் (கரியமால்) என்பர். கரியமேகம் மழையாய் பூமியை அடைவது “அவதாரம்” எனப்பட்டது. அவதாரம் என்பதற்கு மேலிருந்து கீழ் வருதல் என்பதே பொருள். அதுவே இராம அவதாரம் எனப்பட்டது. கரிய மேகம் மழையாய் பூமியில் வந்து சேர்வதை இராமன்-சீதை கல்யாணம் என்று கதைக்கப்பட்டது. காம உணர்வு மன்மதனாய் கதைக்கப்பட்டதுபோல.

இராவணன் இந்த இலங்கையில் வாழவில்லை. அவன் மத்தியப் பிரதேசத்தில் உள்ள இலங்கையில் வாழ்ந்தான். இன்னும் அவனுக்கு நினைவுச் சின்னங்கள் உள்ளன. மத்தியப் பிரதேசத்தில் உள்ளதே இலங்கை. தற்போது சிறீலங்கா எனப்படும் இலங்கை தென்னிலங்கை என்று அழைக்கப்படுவதிலிருந்து இவ்வுண்மையை அறியலாம்.

ஆக, இராவணன் மண்ணை மீட்ட மாவீரன் என்பதே உண்மையான நிகழ்வு.

ஆக, புராணங்களில் வரும் அசுரர்களானாலும், இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் ஆனாலும் அவையெல்லாம் மண்ணுரிமைப் போர் சார்ந்த நிகழ்வுகளின் கற்பனை விரிவாக்கங்களே!

இராவணன், நரகாசுரன், மாவலி, சூரபதுமன் போன்றவர்கள் தமிழர் தலைவர்கள். தமிழர் மண்ணுரிமை காத்த மாவீரர்கள்.

எனவே, அவர்கள் நம்மால் போற்றப்பட வேண்டியவர்கள். இந்த உண்மை உணராது அவர்களைக் கொடியவர்களாய் ஆரியர் சித்தரித்ததை நம்பி, அவர்கள் அழிவைக் கொண்டாடுவது அறியாமை. எனவே, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கேட்டுக்கொண்டதுபோல், அசுரர்களான நாம் போற்றிக் கொண்டாட வேண்டும். அது தமிழரின் கடமை!

- விடுதலை ஞாயிறு மலர், 14.10.18

அசுரா வா! வசீகரா வா!





அசுரா வா! நீ இல்லாத தமிழகம் 44 ஆண்டுகளாகச் சுரர்களுக்குத் துளிர் விட்டுப் போயிருக்கிறது. அதிலும் இப்போது மிக, மிக அதிகமாகக் குளிர்விட்டிருக்கிறது.

நீ இருந்த காலக்கட்டங்களை நினைத்து, நினைத்துப் பார்த்து இறும்பூதி எய்துகிறேன். உன் காலத்தில் நடைபெற்ற தேவாசுரப் போராட்டங்களை எண்ணி எண்ணிப் பார்க்கிறேன். ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல. ஆயினும் என் நினைவில் பொறியில் தட்டும் அந்த நிகழ்வுகள் சாதாரணமானவையா?

அப்பப்பா! அசுரன் உள்னை வீழ்த்த அணி வகுத்து நின்றவர்கள் போர்ப்படை களுடன் வந்தவர்கள் தாம், ஆம்! அந்தந்தத் தேவாதி தேவர்கள் தாம் எத்தனை, எத்தனை பேர். அதிலும் அவாளின் தலை மைக்குரு, குல்லுகபட்டர் ராஜாஜி எனும் ராஜகோபாலாச்சாரியார் என்ன சாதாரண மானவரா? ராஜதந்திரி, ராஜரிஷி என் றெல்லாம் வர்ணிக்கப்பட்டவர், கீழ்ப்பாக் கம் மகான் என்று ஒரு சிறு கூட்டத்தால் புகழப் பெற்றவர் அசுரன் உன்னிடம் தோற்று ஓடிய காலங்களை எண்ணிப்பார்க்கிறேன்.

எப்படி, எப்படியெல்லாம் அவரைப் புகழ்ந்தனர், புகழ்மாலை சூட்டினர். அவருக்கு உடம்பெல்லாம் மூளை என்று உடல் சிலிர்த்துப் புளகாங்கிதம் அடைந் தனரே அந்தச்சிறு கூட்டத்தவர். அப்போது பளிச்சென்று அசுரன் நீ உரைத்தாயே “உடம்பெல்லாம் மூளையா?, எது, எது எங்கெங்கே இருக்க வேண்டுமோ அங்கேதான் இருக்க வேண்டும். மூளை எங்கே இருக்க வேண்டுமோ அங்கே இருந்தால்தான் மரியாதை, பெருமை” என்று அசுரன் நீ உரைத்தபோது, ஆர்ப்பரித்து மகிழ்ந்தது பெரும்பான்மையாய் விளங்கிய அசுரர் கூட்டம்.

புராணத்தில் வேண்டுமானால், நரகாசுரன், நாகாசுரன், பாணாசுரன் என்று அசுரர் பலர் பெயர் கூறப்பட்டு இருக்கலாம். ஆனால் தொடர்ந்து 95 ஆண்டுகள் வரை போராடிய எங்கள் ஒரே அசுரன் நீதான்.

அசுரன் நீ இருந்தவரை பூசுரர்கள், புல்லர்கள், அடங்கிக்கிடந்தார்கள். உன் நிழலில் அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட பெரும்பான்மைக் கூட்டம் பெருமித வாழ்வு வாழ்ந்தது. மானமும், அறிவும் மனிதருக்கு வேண்டுமென்ற உன் உரை மனதில் கல்மேல் எழுத்துப்போல் பதிந்துவிட்டது. சுயமரியாதை என்றால் என்னவென்று அறிவுத்திறம் பெற்றது. சுயமரியாதை வாழ்வே சுகமான வாழ்வு என்று சூளுரைத்து வாழ்ந்தது.

உன் போர்க்களங்கள் ஒவ்வொன்றும் கண்முன்னே கனவுபோல் விரிகிறது.

அன்று சேரன்மாதேவியில் குருகுலப் போராட்டம் நீ தொடுத்த அசுரப்போரின் முதல் மாபெரும் போர். பள்ளிச்சிறுவர் களிடையே - பார்ப்பனச்சிறுவருக்குத் தனியே சமையற்கட்டில் உணவு, தனித் தண்ணீர்ப்பானை, தனித்தண்ணீர்க்குவளை என்பதெல்லாம் தகர்ந்தது அசுரன் உன் போராட்டத்தால்.

அந்நாளில் தான் நம்மவர்க்கு எத்தனை, எத்தனை அவமதிப்புகள். ‘நம்மில் சிலர் கல்வி கற்கக்கூடாது! சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கொடு - கல்வியை மட்டும் கொடுக்காதே’ என்ற விலங்கொடித்த அசுரன் அல்லவா நீ.

தனிக்கிணறு என்று தனியே கிணறு வெட்டித் தாழ்த்தப்பட்டவர் மட்டும் அதில் நீர் எடுத்துக்கொள்ளட்டும் என்று ஏற்பாடு செய்து உன்னையே - காரைக்குடி அருகே சிராவயல் எனும் ஊரில் திறந்து வைக்க அழைத்தபோது, தாழ்த்தப்பட்டவருக்கு மட்டும் எனத்தனிக் கிணறு எதற்கு? எல்லோரும் நீர் எடுக்கும் கிணறு பொதுக்கிணறு அல்லவா? என்று புத்தி புகட்டிய அசுரன் அல்லவா நீ? மனித உரிமைக்கு, அடிப்படை உரிமைக்குக் குரல் கொடுத்த அசுரன் உன் தலைமை தமிழ்மண் தாண்டிக் கேரள நாட்டிற்கும் தேவைப்பட்டபோது, உடல் நிலையையும்பொருட்படுத்தாமல் ஓடிச்சென்று கேரள மண்ணில் வைக்கத்தில் குரல் கொடுத்துப் போரிட்டுத் தன் மனையாளையும் ஆம் அன்னை நாகம்மையாரையும், தன் சகோதிரி கண்ணமாவையும் அப்போரில் ஈடுபடவைத்த அசுரன் அல்லவா நீ.

அருவிக்குத்தி சிறையில் அடைபட்ட உன்னைக் காலில் கையில் சங்கிலி கட்டை போட்டு கயவர் கூட்டம் துன்புறுத்திய போதும் கலங்காது “நாயும், கழுதையும், பன்றியும் நடக்கும் தெருவில், ஆறறிவுள்ள மனிதன் நடப்பதற்குத் தடையா? என உரிமைக்குரல் கொடுத்த அசுரன் அல்லவா நீ!. நீ அன்று சூத்திரர்கள் நடப்பதற்கு உரிமை கோரினாய். 93 ஆண்டுகளுக்குப் பின் இன்று யது கிருஷ்ணன் கருவரையி னுள் அர்ச்சனை செய்கிறான் எனில் அடியெ டுத்துக் கொடுத்தவன் அசுரன் அல்லவா?

அசுரன் உன் போராட்டங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். இன்று இளைய தலைமுறை பெற்றிருக்கும் கல்வி உரிமை, வேலை வாய்ப்பு உரிமைக்கெல் லாம் அசுரன் நீதான் காரணம் என்பதை எவரும் மறுக்கவோ, மறக்கவோ முடியுமா?

குல்லுகபட்டர் ராஜகோபாலரின் ஆட்சியில் நடப்பட்ட நச்சுப் பயிர் குலக்கல்வித் திட்டம் மட்டும்தொடர்ந்து இருந்தால் இன்று எண்ணிப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

மலம் அள்ளுவோன் என்று இழிவாக ஒதுக்கி வைத்த, சாக்கடை அள்ளுவோன் என்று சதி செய்து பிரித்து வைத்த வீட்டுப்பிள்ளைகள். குலக்கல்வி எனும் கோடரியால் சாய்க்கப்பட்டு இன்று அப்பன் தொழிலை அவனது பிள்ளை சொப்பனத்திலும் நினைப்பதில்லை என்ற நிலை உயர நீ பட்டப்பாடு கொஞ்சமா?

சாதி ஆதிக்கச் சதிக்கூட்டம், வகுப்புவாரி உரிமைக்கு உலை வைத்தபோது, சதியை உடைத்து அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரச்செய்த, முடி, அரசுரிமை, மந்திரி பதவி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவி என்று எந்தப் பதவியும் இல்லாத அசுரன் நீ சாதித்துக் கொடுத்ததை நன்றி யுள்ள சமூகம் அசுரன் உன்னை அனு தினமும் நினைத்துக் கொண்டிருக்கிறது.

நல்ல வேளையாக “நீ தந்த அறிவு ஒன்றே போதும்” என்று சொல்லும் அசுரன் - உன் வாரிசு இன்று எம்மைக் காக்கக் கடுமையாக உழைக்கிறது. நீ தந்த அறிவு மட்டும் கொண்டு - பார்ப்பனத் தலைமையின் கீழ் பார்ப்பன ஆட்சி டில்லியிலும் இங்கும் இருந்த வேளையில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு பெற உழைத்து வெற்றி கண்டது எனில் அசுரன் உன் கோட்பாடு, கொள்கை, தத்துவம் எதுவும் நீர்த்துப்போகாததாலேதான். நீ நட்டு வைத்து வளர்த்திட்ட சுயமரியாதை மரம் பட்டுப் போகாததினாலேதான் சமூகத் தீமைகளுக்கு எதிராகத் துணிந்து தன்னலமற்று வாள் ஏந்தி வீரப்போர் புரிந்த உன்போல் அசுரன் வேறு யாருமில்லை. உன் கட்டளை வேத வாக்கு என்பதெல்லாம் பொய் - அதை விட உயர்வானது. நீ அழைத்தால், சமூகத்தீமைக்கு எதிராகக் காராக்கிரகம் போக வேண்டும் என்றால் எத்தனை, எத்தனை பேர் நூற்றுக்கணக்கில் அல்ல. ஆயிரக்கணக்கில் வந்தனரே அது எப்படி?

ஏழைகள், அன்றாடங் காய்ச்சிகள் அவர்கள் நீ அழைக்கும் போர்க்களத்திற்கு வந்தால் குடும்பம் சீர்குலையும், நல வாழ்வு பறிபோகும் என்ற போதிலும் 10,000 பேர் 1957இல் சாதி ஒழிப்பில் தயங்காது வந்தது மட்டுமல்லாது, மீண்டும் மீண்டும் வருவோம் என்று துணிந்து சிறை வாழ்வை ஏற்றவர்களில் பலபேர் வசதி படைத்த சீமான்கள், சுகவாழ்வைத் துறந்து வந்தனரே எப்படி... எனவே தான் பெரியார் மேலும் மேலும் தேவைப்படுகிறார். அசுரர்கள் மறுபடியும் மண்ணில் உதித்து வரவேண்டும்.

இன்று காவிக்கயவர்களின் வஞ்சனை, தமிழ் மண்ணுக்கு துரோகம் இழைப்பது ஆகியவற்றைப் பார்த்து வேதனைத்தீயில் வெந்து சாகும்போது எங்கள் கண்கள் அசுரன் உள்னைத் தேடுகிறது. எங்கள் மனம் அசுரன் உன் எண்ணத்தில் ஆழ்கிறது. ஏனென்றால், இந்த மண்ணில் சாதனை புரிந்து, நலிந்தவர் கண்ணீர் துடைத்த அசுரன் நீ! நீயேதான். நீ ஒருவன்தான்.

- விடுதலை ஞாயிறு மலர், 14.10.17

செவ்வாய், 10 ஏப்ரல், 2018

பாளையங்கோட்டை சைவ சபை

பண்பாட்டியல் அறிஞர் 

பேரா. முனைவர் தொ. பரமசிவன்





பாளையங்கோட்டை சைவசபையின் வெள்ளிவிழா மலர் 1911இல் வெளியிடப் பட்டது. இந்தச் சபையின் ஆவணங்களின் படி இச்சபை கி.பி. 1886இல் தொடங்கப் பட்டது என தெரிகின்றது. இதற்கு சற்று முன் னதாக 1883இல் தூத்துக்குடியில் சைவசபை தொடங்கப்பட்டது. தூத்துக்குடி சைவசபை யின் வெள்ளிவிழா மலரில் 15 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கட்டுரைகளைப் படிக்கின்றபோது திராவிட இயக்கத்தின் மூலவித்துக்கள் நெல்லை மண்ணில் ஊன்றப் பட்டிருப்பதைக் காண்கின்றோம்.

ஏனென்றால், 1912இல் நீதிக்கட்சியின் மூலவர்களில் ஒருவரான பி.நடேச முதலி யார் 1912இல் வெளி மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வந்து தங்கிப் படிக்கும் மாண வர்களுக்கு “திராவிட மாணவர் விடுதி” என்ற பெயரில் விடுதி ஒன்றினைத் தொடங் கினார். திராவிட இயக்க வரலாற்றை எழுத முனைந்த அறிஞர்கள் அனைவரும் இத னையே திராவிட இயக்க வரலாற்றின் தொடக்கப் புள்ளியாகக் கருதுகின்றனர். அதற்கும் ஓராண்டிற்கு முன்னரே வெளி வந்த இந்த வெள்ளிவிழா மலரின் கட்டுரை கள், திராவிட இயக்கத்தின் குறுவித்துக்கள் ஆகும். 19ஆம் நூற்றாண்டின் கடைசி முப்பது ஆண்டுகளிலேயே நெல்லை மண் ணில் திராவிட இயக்கச் சிந்தனை முளை விடத் தொடங்கிவிட்டன என்பதைக் காட்டு கின்றன. இந்த முப்பதாண்டுகாலத் தமிழக அறிவுலக வரலாற்றை அவதானித்தால் மட்டுமே இந்த மலரில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் பிறந்த சூழலை நம்மால் விளங்கிக் கொள்ள முடியும்.

கிபி. 1869இல் பிரம்மஞான சபையை நிறுவிய அமெரிக்கரான கர்னல் ஆல் காட்டும் இரஷ்ய பெண் மணியான மேடம் பிளவாட்ஸ்கியும் இலங்கை செல்வதற்காக திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு வந்தனர். இந்திய நாகரிகமே வேதங்கள் என்னும் கற்பாறையின் மீது அமைக்கப்பட்ட கற்கோட்டை என்று எழுதியும் பேசியும் வந்தனர். பிற்காலத்தில் வேதாந்தம் என்று அறியப்பட்ட கோட்பாட்டையே அவர்கள் ஆங்கிலத்தில் தியாசபி (ஜிலீமீஷீsஷீஜீலீஹ்) என் றும் தமிழில் பிரம்மஞானம் என்றும் முன் வைத்தனர். அக்காலத்தில்தான் இந்தியத் தேசியம் உருக்கொள்ள ஆரம்பித்தது. 1900க்கு முன்னர் 19 ஆம் நூற்றாண்டில் ‘இந்து’ என்ற பெயரோடு 11 தமிழ் இதழ்களும் திராவிடம் என்ற பெயரோடு 13 தமிழ் இதழ்களும் வெளி வந்தன. அதாவது இந் தியத் தேசியத்திற்கு பார்ப்பனர்கள் வேதாந் தப் பதாகை பிடித்து வந்தனர்.

பார்ப்பனர்கள் தொடங்கிய ஆங்கிலப் பத்திரிகைக்கு இந்து (The Hindu) என்றே பெயரிடப்பட்டது. வத்தலக்குண்டு இராஜ மய்யர் (தமிழ் நாவலாசிரியர்) எழுதிய ‘The Rambles of Vendanda’ என்ற புத்தகம் பார்ப் பனர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. இந்தச் சூழலில்தான் இந்து என்ற சொல் லிற்கு எதிராக, ‘திராவிடர்’, ‘தமிழர்’ சொற் கள் முன்வைக்கப்பட்டன. மனோன்மணி யம் சுந்தரனார் இன்னும் வெளிப்படை யாகவே ஆரியம் ஙீ திராவிடம் என்பதை முன்வைத்தார்.

இந்தச் சூழல் தமிழ்நாடு முழுவதும் நிலவியபோது திருநெல்வேலியில் மட்டும் இதற்கான எதிர்வினை எவ்வாறு தோன் றியது என்று பார்க்கவேண்டும்.

1831இல் தொடங்கி நெல்லை மாவட் டத்தில் அன்று ஒடுக்கப்பட்ட நாடார் வகுப்பினர் பெருமளவு வாழ்ந்த தேரிக் காட்டுப் பகுதியில் சீர்த்திருத்தக் கிறித் துவம் வெகு வேகமாகப் பரவியது. மத உணர்வு மிகுந்த பார்ப்பனர்களும் சைவ வேளாளர்களும் வேகமாகப் பரவிய கிறித்துவத்தைக் கண்டு அஞ்சினர். இதற்கு மாற்றாக ஒரு கூட்டணியினை அவர்கள் அமைத்தனர். 1840களில் வேகமாக வளர்ந்த இந்தக் கூட்டணி, “சதுர்வேத சித் தாந்த சபை” எனப் பெயர் பெற்றது.

சதுர்வேதம் என்பது பிராமணியத் தையும், சித்தாந்தம் என்பது சைவ சித் தாந்தத்தையும் குறிக்கும் சொல்லாகும். ஆனாலும் இவர்கள் மதம்மாறிய கிறித்த வர்களை மீண்டும் ‘இந்து’ வாக்க விபூதி சங்கம் என்ற ஒன்றினையும் தொடங்கினர். அந்த முயற்சியும் தோற்றுப்போயிற்று. பாரம்பரிய அடிமைத்தளையிலிருந்து விடு பட்டு கிறித்துவத்திற்கு சென்ற நாடார்கள் திரும்பிவர விரும்பவில்லை மாறாக, ஆங் கில அரசின் தயவை விரும்பிய வணிகம் சார்ந்த வேளாளர்கள் சிலர் கிறித்தவத் திற்கு மாறினர்.

இந்தச் சூழ்நிலையில்தான் பேராயர் கால்டுவெல் ஒரு இலட்சத்திற்கும் மேற் பட்ட மக்களை கிறித்தவர்களாக்கினார். திருநெல்வேலிக்கு வந்த கர்னல் ஆல் காட்டு, மேடம் பிளவாட்ஸ்கி இருவருக்கும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் பார்ப்பனர்கள் பூரணகும்ப வரவேற்பு கொடுத்தனர். கோமாமிசம் உண்ணும் அவர் களுக்குக் கோயிலுக்குள் பார்ப்பனர்கள் வரவேற்பு கொடுத்தது சைவர்களை மேலும்  அதிர்ச்சியடைய வைத்தது.

வேதாந்தம் என்னும் கடலுக்குள் சைவத்தைக் கரைக்க  முற்படும் நுண் அரசியலை அவர்கள் புரிந்துகொண்டனர். ஒரே நேரத்தில் கிறித்துவத்தையும் வேதாந் தத்தையும் எதிர்த்து சைவத்தைக் காப்பாற்ற வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தனர். எனவே “சைவசபைகளை” நிறுவி வேதாந் தத்தையும் வருணாசிரம தர்மத்தையும் நிராகரிக்க முற்பட்டனர். இந்த முயற்சியில் சாதி வேறுபாடு கருதாமல் பார்ப்பனரல்லாத மற்ற சாதியரையும் இணைத்துக்கொள்ள முன் வந்தனர். பாளையங்கோட்டையில் பெண் கொடுத்தவர் என்ற முறையில் மறைமலை அடிகளின் ஆதரவும் அவர் களுக்குக் கிடைத்தது. பாளை சைவசபை யின் துணைச்சட்ட விதிகளில் ஒன்று. “தமி ழராய்ப் பிறந்த எல்லாரும் சபை உறுப்பின ராகத் தகுதியுடையார்’’ என்று குறிப்பிடு கின்றது. இந்த மலரின் கட்டுரைகளை இந்தப் பின்னணியில்தான் விளங்கிக்கொள்ள வேண்டும்.

பாளைக்கு அருகிலுள்ள முன்னீர் பள்ளம் பூரணலிங்கம்பிள்ளை இவர்க ளுக்கு பேராதரவாக இருந்தார். வேதாந்தம் கொண்டாடிய இராமாயணம் என்ற பெருங் கதையாடலை பூரணலிங்கம் பிள்ளை நிராகரித்தார். இந்த மலரில் அவர் எழுதி யுள்ள விபீடணப் புத்தி என்ற ஆங்கிலக் கட்டுரையே அதற்குச் சான்றாகும். அது போலவே தமிழர் சூத்திரரா? என்ற கட்டு ரையும் குறிப்பிடத் தகுந்தது.

இந்தப் பின்னணிதான் சூத்திரர்க ளுக்குப் ‘பார்ப்பனர் அல்லாதார்’ என்ற அடையாளத்தைப் பெரியார் ஈ.வெ.ரா. உருவாக்க துணை செய்தது. அல்லாதார் என்ற அடை யாளமே 1916இல் பார்ப்பனர் அல்லாதார் அறிக்கை
- விடுதலை ஞாயிறு மலர், 7.4.18

வெள்ளி, 6 ஏப்ரல், 2018

திராவிடர்- ஆரியர் மரபணு ஆய்வு முடிவு

நாடே இல்லாத நாடோடி கூட்டமாகிய ஆரியர்கள் வந்தேறிகளே !!
பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை ஆர்யர் என்ற சொல்லுக்கு பழைய ஈரான் மற்றும் வட இந்திய துணைக்கண்டத்தில் இருந்தவர்கள் என்றுதான் பொருள் கொள்ளப்பட்டது. இருபதாம் நூற்றாண்டில் தான் ஆர்யர் என்னும் சொல்லுக்கு மொழியியல் ரீதியான அர்த்தம் கொடுக்கப்பட்டது – encyclopediyaa britanica வில் தெளிவாக பதியப்பட்டுள்ளது .

ஸ்ரீ கிறிஸ்ன சைதன்யர் , மற்றும் மொழியியல் வல்லுனர்கள் கருத்துப்படியும் ஈரானிய மொழியும், சமஸ்கிருத மொழியும் ஒரே மொழிக்குடும்பத்தை சார்ந்தவை . ‘ஈரன்‘ என்ற சமஸ்கிருத சொல்லுக்கு ‘பாலை நிலம்‘ என அர்த்தம். துருக்கியின் ஒரு பகுதியான ‘அனடோலியா‘ என்ற இடத்தின் வழிவந்த ‘ஈரண்‘ மக்கள் இந்திய மண்ணில் ‘ஆரண்‘ என்றாகி ‘ஆர்யன்‘ என மருவியிருக்கக்கூடும், ( துருக்கியில் வேதகால நாகரீகம்)

சமஸ்கிருதம் என்பது இந்தோ இரானிய மொழிகுடும்பத்தை சார்ந்த ஒரு மொழி
வில்லியம் ஜோன்ஸ் கல்கத்தா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரிந்தார். இவர் அய்ரோப்பிய மொழிகள், ஈராணிய மொழிகள், இந்திய மொழிகள் ஆகியவற்றை ஒப்பிட்டு அவைகளை வகைப்படுத்தினார். அதன்படி பாரசீக மொழியும் சமஸ்கிருதமும் இந்தோஇராணிய மொழிக்குடும்பத்தை சார்ந்தவை என்று தெளிவாய் பறைசாற்றினார் .

ஆடு மாடு மேய்த்து வந்த நாடோடி கூட்டமாகிய ஆரியர்கள் இங்கே வாழ்ந்த திராவிடர்களுடன் போரிட வேண்டிய நிர்பந்தத்தால் போரிட்டு திராவிடர்களை அடிமையாக்கினர்.
தங்களுடன் போர் தொடுத்த திராவிடர்களை திட்டி , கேவலபடுத்தி , பழித்து தங்கள் வேதங்களில் எழுதி வைத்தனர் .-ரோமேஷ் மஜும்தார் (பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரிகமும் 22 ஆம் பக்கம் )

ஆரியர் அல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர்கள் எனவும் தஸ்யுக்கள் , அசுரர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன .-Dr. ராதாகுமுத முகர்ஜி Phd (இந்து நாகரீகம் பக்கம் 69)
இன்னும்  இதே  கருத்துகள்  ரிக் வேத கால இந்தியா பக்கம் 151 , இந்திய சரித்திரம் பக்கம் 16 , இந்திய மக்கள் சரித்திரம் பக்கம் 41 , புராதன இந்தியாவும் இந்தியாவின் நாகரிகமும் பக்கம் 19 , ஆகிய பக்கங்களில் வரலாற்று நிபுணர்களால் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது .

ஒ இந்திரனே அந்த அசுரகூட்டத்தை துரோகிகளை தீமையே உருவானவர்களை அக்னி குண்டத்தில்  வைத்து நீர்பானையில் வேகவைத்து கொல். பிராமண துரோகிகளான அந்த பச்சை மாமிசம் தின்னும் அரக்கர்களை மீளா நரகத்தில் தள்ளி இம்சிப்பாயாக –ரிக் வேதம் 7 வது மண்டலம் 104 வது மந்திரம் , சுலோகம் 2

வழிப்போக்கர்களிடமிருந்து கொள்ளையடிக்கும் திருடனைப்போல், தெய்வமற்ற தாசர்களுடைய தமிழர்களுடைய செல்வங்களைத் திருடி இந்திரனைப்போற்றும் ஆரியர்களுக்கு அளிக்க வேண்டும். ஆரியர்களின் புகழையும் பலத்தையும் சிறப்பிக்க வேண்டும்”
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 103, பாடல் (சுலோகம்) 3,6

4. இந்திரா! ஆந்தையைப்போலும், ஆந்தைக் குஞ்சைப் போலும் உள்ள தஸ்யூக்களைக் தமிழர்களை கொல்லவும். நாயைப் போலும் கழுகைப்போலும் உள்ள தஸ்யூக்களைக் (சமணத்தமிழர்களை) நசுக்கி ஒழிக்கவும்.
மண்டலம் 7, அதிகாரம் (சூக்தம்) 104, பாடல் (சுலோகம்) 22

இந்திரன் ஆரியனுக்காக, மோசமானவர்களையும், கொடூரமானவர்களையும், ஒளி இழந்த நிறம் உடையவர்களையும் விரட்டி அடித்தான். கருப்பு நிறத்தை வெற்றி கொண்டதைப் பற்றி ரிக் -I-130-8 கூறுகிறது.

இன்னும் இதுபோல் எண்ணற்ற வசங்கள் உள்ளன

-அகில் டானேஷ், முகநூல் பதிவு, 4.4.18