செவ்வாய், 10 ஏப்ரல், 2018

பாளையங்கோட்டை சைவ சபை

பண்பாட்டியல் அறிஞர் 

பேரா. முனைவர் தொ. பரமசிவன்





பாளையங்கோட்டை சைவசபையின் வெள்ளிவிழா மலர் 1911இல் வெளியிடப் பட்டது. இந்தச் சபையின் ஆவணங்களின் படி இச்சபை கி.பி. 1886இல் தொடங்கப் பட்டது என தெரிகின்றது. இதற்கு சற்று முன் னதாக 1883இல் தூத்துக்குடியில் சைவசபை தொடங்கப்பட்டது. தூத்துக்குடி சைவசபை யின் வெள்ளிவிழா மலரில் 15 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கட்டுரைகளைப் படிக்கின்றபோது திராவிட இயக்கத்தின் மூலவித்துக்கள் நெல்லை மண்ணில் ஊன்றப் பட்டிருப்பதைக் காண்கின்றோம்.

ஏனென்றால், 1912இல் நீதிக்கட்சியின் மூலவர்களில் ஒருவரான பி.நடேச முதலி யார் 1912இல் வெளி மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வந்து தங்கிப் படிக்கும் மாண வர்களுக்கு “திராவிட மாணவர் விடுதி” என்ற பெயரில் விடுதி ஒன்றினைத் தொடங் கினார். திராவிட இயக்க வரலாற்றை எழுத முனைந்த அறிஞர்கள் அனைவரும் இத னையே திராவிட இயக்க வரலாற்றின் தொடக்கப் புள்ளியாகக் கருதுகின்றனர். அதற்கும் ஓராண்டிற்கு முன்னரே வெளி வந்த இந்த வெள்ளிவிழா மலரின் கட்டுரை கள், திராவிட இயக்கத்தின் குறுவித்துக்கள் ஆகும். 19ஆம் நூற்றாண்டின் கடைசி முப்பது ஆண்டுகளிலேயே நெல்லை மண் ணில் திராவிட இயக்கச் சிந்தனை முளை விடத் தொடங்கிவிட்டன என்பதைக் காட்டு கின்றன. இந்த முப்பதாண்டுகாலத் தமிழக அறிவுலக வரலாற்றை அவதானித்தால் மட்டுமே இந்த மலரில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் பிறந்த சூழலை நம்மால் விளங்கிக் கொள்ள முடியும்.

கிபி. 1869இல் பிரம்மஞான சபையை நிறுவிய அமெரிக்கரான கர்னல் ஆல் காட்டும் இரஷ்ய பெண் மணியான மேடம் பிளவாட்ஸ்கியும் இலங்கை செல்வதற்காக திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு வந்தனர். இந்திய நாகரிகமே வேதங்கள் என்னும் கற்பாறையின் மீது அமைக்கப்பட்ட கற்கோட்டை என்று எழுதியும் பேசியும் வந்தனர். பிற்காலத்தில் வேதாந்தம் என்று அறியப்பட்ட கோட்பாட்டையே அவர்கள் ஆங்கிலத்தில் தியாசபி (ஜிலீமீஷீsஷீஜீலீஹ்) என் றும் தமிழில் பிரம்மஞானம் என்றும் முன் வைத்தனர். அக்காலத்தில்தான் இந்தியத் தேசியம் உருக்கொள்ள ஆரம்பித்தது. 1900க்கு முன்னர் 19 ஆம் நூற்றாண்டில் ‘இந்து’ என்ற பெயரோடு 11 தமிழ் இதழ்களும் திராவிடம் என்ற பெயரோடு 13 தமிழ் இதழ்களும் வெளி வந்தன. அதாவது இந் தியத் தேசியத்திற்கு பார்ப்பனர்கள் வேதாந் தப் பதாகை பிடித்து வந்தனர்.

பார்ப்பனர்கள் தொடங்கிய ஆங்கிலப் பத்திரிகைக்கு இந்து (The Hindu) என்றே பெயரிடப்பட்டது. வத்தலக்குண்டு இராஜ மய்யர் (தமிழ் நாவலாசிரியர்) எழுதிய ‘The Rambles of Vendanda’ என்ற புத்தகம் பார்ப் பனர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. இந்தச் சூழலில்தான் இந்து என்ற சொல் லிற்கு எதிராக, ‘திராவிடர்’, ‘தமிழர்’ சொற் கள் முன்வைக்கப்பட்டன. மனோன்மணி யம் சுந்தரனார் இன்னும் வெளிப்படை யாகவே ஆரியம் ஙீ திராவிடம் என்பதை முன்வைத்தார்.

இந்தச் சூழல் தமிழ்நாடு முழுவதும் நிலவியபோது திருநெல்வேலியில் மட்டும் இதற்கான எதிர்வினை எவ்வாறு தோன் றியது என்று பார்க்கவேண்டும்.

1831இல் தொடங்கி நெல்லை மாவட் டத்தில் அன்று ஒடுக்கப்பட்ட நாடார் வகுப்பினர் பெருமளவு வாழ்ந்த தேரிக் காட்டுப் பகுதியில் சீர்த்திருத்தக் கிறித் துவம் வெகு வேகமாகப் பரவியது. மத உணர்வு மிகுந்த பார்ப்பனர்களும் சைவ வேளாளர்களும் வேகமாகப் பரவிய கிறித்துவத்தைக் கண்டு அஞ்சினர். இதற்கு மாற்றாக ஒரு கூட்டணியினை அவர்கள் அமைத்தனர். 1840களில் வேகமாக வளர்ந்த இந்தக் கூட்டணி, “சதுர்வேத சித் தாந்த சபை” எனப் பெயர் பெற்றது.

சதுர்வேதம் என்பது பிராமணியத் தையும், சித்தாந்தம் என்பது சைவ சித் தாந்தத்தையும் குறிக்கும் சொல்லாகும். ஆனாலும் இவர்கள் மதம்மாறிய கிறித்த வர்களை மீண்டும் ‘இந்து’ வாக்க விபூதி சங்கம் என்ற ஒன்றினையும் தொடங்கினர். அந்த முயற்சியும் தோற்றுப்போயிற்று. பாரம்பரிய அடிமைத்தளையிலிருந்து விடு பட்டு கிறித்துவத்திற்கு சென்ற நாடார்கள் திரும்பிவர விரும்பவில்லை மாறாக, ஆங் கில அரசின் தயவை விரும்பிய வணிகம் சார்ந்த வேளாளர்கள் சிலர் கிறித்தவத் திற்கு மாறினர்.

இந்தச் சூழ்நிலையில்தான் பேராயர் கால்டுவெல் ஒரு இலட்சத்திற்கும் மேற் பட்ட மக்களை கிறித்தவர்களாக்கினார். திருநெல்வேலிக்கு வந்த கர்னல் ஆல் காட்டு, மேடம் பிளவாட்ஸ்கி இருவருக்கும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் பார்ப்பனர்கள் பூரணகும்ப வரவேற்பு கொடுத்தனர். கோமாமிசம் உண்ணும் அவர் களுக்குக் கோயிலுக்குள் பார்ப்பனர்கள் வரவேற்பு கொடுத்தது சைவர்களை மேலும்  அதிர்ச்சியடைய வைத்தது.

வேதாந்தம் என்னும் கடலுக்குள் சைவத்தைக் கரைக்க  முற்படும் நுண் அரசியலை அவர்கள் புரிந்துகொண்டனர். ஒரே நேரத்தில் கிறித்துவத்தையும் வேதாந் தத்தையும் எதிர்த்து சைவத்தைக் காப்பாற்ற வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தனர். எனவே “சைவசபைகளை” நிறுவி வேதாந் தத்தையும் வருணாசிரம தர்மத்தையும் நிராகரிக்க முற்பட்டனர். இந்த முயற்சியில் சாதி வேறுபாடு கருதாமல் பார்ப்பனரல்லாத மற்ற சாதியரையும் இணைத்துக்கொள்ள முன் வந்தனர். பாளையங்கோட்டையில் பெண் கொடுத்தவர் என்ற முறையில் மறைமலை அடிகளின் ஆதரவும் அவர் களுக்குக் கிடைத்தது. பாளை சைவசபை யின் துணைச்சட்ட விதிகளில் ஒன்று. “தமி ழராய்ப் பிறந்த எல்லாரும் சபை உறுப்பின ராகத் தகுதியுடையார்’’ என்று குறிப்பிடு கின்றது. இந்த மலரின் கட்டுரைகளை இந்தப் பின்னணியில்தான் விளங்கிக்கொள்ள வேண்டும்.

பாளைக்கு அருகிலுள்ள முன்னீர் பள்ளம் பூரணலிங்கம்பிள்ளை இவர்க ளுக்கு பேராதரவாக இருந்தார். வேதாந்தம் கொண்டாடிய இராமாயணம் என்ற பெருங் கதையாடலை பூரணலிங்கம் பிள்ளை நிராகரித்தார். இந்த மலரில் அவர் எழுதி யுள்ள விபீடணப் புத்தி என்ற ஆங்கிலக் கட்டுரையே அதற்குச் சான்றாகும். அது போலவே தமிழர் சூத்திரரா? என்ற கட்டு ரையும் குறிப்பிடத் தகுந்தது.

இந்தப் பின்னணிதான் சூத்திரர்க ளுக்குப் ‘பார்ப்பனர் அல்லாதார்’ என்ற அடையாளத்தைப் பெரியார் ஈ.வெ.ரா. உருவாக்க துணை செய்தது. அல்லாதார் என்ற அடை யாளமே 1916இல் பார்ப்பனர் அல்லாதார் அறிக்கை
- விடுதலை ஞாயிறு மலர், 7.4.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக