சனி, 2 மே, 2020

கலைஞரின் சாதனைகள் - திராவிடத்தால் எழுந்தோம்!


Babu Tvl பதிவு :

இந்திய துணைக்கண்டத்தில் சொற்ப அதிகாரம் கொண்ட ஒரு மாநிலத்தின் முதல்வராக 19 வருடம் மட்டுமே  இருந்து டாக்டர்.#கலைஞர் நிகழ்த்திய சாதனைகள். அதிலும் பல #பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை......

தலைப்பு வாரியாக நிகழ்த்திய சாதனைகள் :

காற்று, 
தண்ணீர், 
உணவு, 
உடை, 
உறைவிடம், 
மொழி, 
மருத்துவம், 
கல்வி, 
பாதுகாப்பு, 
சாலை வசதி, 
மின்சாரம்,
போக்குவரத்து,
உள் கட்டமைப்பு, 
தொழிற்சாலை, 
தொலைத் தொடர்பு.

தண்ணீர்/ Water

1. குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது கலைஞர். 
2. காவிரி நடுவர் மன்றம் அமைத்தவர் கலைஞர் 
3. 30க்கும் மேற்பட்ட அணைகள் கட்டியது கலைஞர்
4. இந்திய ஒன்றியத்தில் முதன் முறையாக நதிகள் இணைப்பு திட்டம் தந்தது கலைஞர்.  
5. கரூர் மாவட்டம் மாயனூரில் அணை கட்டி, காவிரி - குண்டாறு நதி இணைப்பு திட்டம் தந்தது கலைஞர்
6. தாமிரபரணி - கருமேனியாரு - நம்பியாரு நதி இணைப்பு திட்டம்
7. கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் தந்தது கலைஞர்
8. ஒக்கேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் தந்தது கலைஞர்
9. ராமநாதபுரம் - பரமக்குடி கூட்டுகுடிநீர் திட்டம் தந்தது கலைஞர் 
10. அறந்தாங்கி கூட்டுக் குடிநீர் திட்டம். 
11. திண்டுக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம். 
12. எல்லா வருடங்களும் ஏரி மற்றும் குளங்களை தூர் வாரி பராமரித்து வந்தார். 

உணவு மற்றும் விவசாயம்/ Food and Agriculture 

1. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் (TNCSC) அமைத்தது கலைஞர் 
2. பொது வினியோக முறையை கிராமங்கள் தோறும் கட்டமைத்து, மக்களுக்கு உணவுப் பொருட்கள் குறைந்த விலையில் எளிய வகையில் கிடைக்க செய்தார். 
3. ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் திட்டத்தின் மூலம், குடும்ப அட்டைக்கு 20 கிலோ அரிசி வழங்கியவர். 
4. பொது விநியோக திட்டத்தின் மூலம் சமையல் எண்ணெய் மற்றும் வீட்டு பொருட்கள் நியாயவிலையில் தந்தவர் கலைஞர் 
5. 10 சமையல் பொருட்களை 50 ரூபாய்க்கு தந்தது கலைஞர் 
6. நில உச்சவரம்பு சட்டத்தை முறையாக செயல்படுத்தி 2 முதல் 5 ஏக்கர் நில உடமையாளர்களாக, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை உருவாக்கியவர் கலைஞர். 
7. இந்தியாவிலே முதன் முறையாக விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தந்தது கலைஞர்
8. நேரடி நெல் கொள்முதல் மையம் தந்தது கலைஞர்
9. நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்தது கலைஞர்
10. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நேரடியாக பயானாளிகளிடம் விற்பனை செய்ய ஏதுவாக, உழவர் சந்தை திட்டம் தந்தது கலைஞர்
11. விவசாய கடன் ரூ.7,000 கோடி தள்ளுபடி செய்தது கலைஞர்
12. சரியான நேரத்தில் வங்கி கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி இல்லை என்றது கலைஞர் 
13. மேம்படுத்தப்பட்ட நெல் கொள்முதல் விலை ரூ 1,050 ஆக உயர்த்தியது கலைஞர்
14. வகைப்படுத்தப்பட்ட நெல் கொள்முதல் விலை ரூ. 1,100 ஆக உயர்த்தியது கலைஞர்
15. 172 உழவர் சந்தையாக உயர்த்தியதும் கலைஞர் 
16. ஒரு டன் கரும்பின் கொள்முதல் விலை ரூ 2,000 ஆக உயர்த்தியது கலைஞர் 

 உறைவிடம்/ Home

1. கிராமங்களில், நத்தம் பொறம்போக்கு இடங்களில் வசித்து வந்த குடியானவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின், அந்த இடங்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கியவர் கலைஞர். 
2. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்து அண்ணா நகர், ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, அடையார், கலைஞர் கருணாநிதி நகர் போன்ற இடங்களில் அடுக்குமாடி வீடுகள் கட்டிக் கொடுத்தவர் கலைஞர்
3. கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவச கான்கிரீட் வீடுகளை கொடுக்கும் திட்டம் வகுத்தது கலைஞர் 
4. குடியிருப்பு சட்டம் (வாடகை நிர்ணயம் போன்றவை) கொண்டுவந்தது கலைஞர் 
5. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தது கலைஞர் 
6. கலைஞர் வீடு திட்டம் தந்தது கலைஞர் 

மருத்துவம்/ Healthcare 

1. 3,000த்திற்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், 13,000த்திற்கும் மேற்பட்ட Sub Health Centres உருவாக காரணமாக இருந்தவர் கலைஞர். மேலும் மாவட்டங்களையும், தாலுக்காக்களையும் பிரித்ததால் பல மாவட்ட தலைமை மருத்துவமனைகள், தாலுக்கா அரசு மருத்துவமனைகள் உருவாக காரணமாக இருந்தவர். 
2. ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேர மருத்துவ சேவை தந்தது கலைஞர் 
3. முதலில் இலவச கண் சிகிச்சை முகாம் அமைத்தது கலைஞர் 
4. வருமுன் காப்போம் திட்டம் தந்தது கலைஞர் 
5. 104 கோடி ரூபாயில் சென்னை பொது மருத்துவமணை புதிய கட்டிடம் தந்தது கலைஞர் 
6. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக்கல்லூரி என்று சட்டம் இயற்றி,
கன்னியாகுமரி, தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, வேலூர் மருத்துவ கல்லூரிகளை அமைத்தது கலைஞர். மருத்துவ கல்லூரிகளில் பல துறைகள் உருவாக காரணமாக இருந்தவர் கலைஞர். 
7. கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மூலமாக 2 லட்சம் மதிப்புள்ள இலவச மருத்துவ காப்பீடு திட்டம் தந்தது கலைஞர்
8. இதய நோய், சர்க்கரை நோய், புற்று நோய்க்கான "நலமான தமிழகம் திட்டம்" தந்தது கலைஞர் 
9. மத்திய அரசோடு இணைந்து 108 ஆம்புலன்ஸ் தந்தது கலைஞர் 
 
கல்வி/ Education:

1. 1996 - 2001 காலகட்டத்தில் 7,000 பள்ளிகளை நிறுவியது. 
2. 10ம் வகுப்பு வரை #தமிழ் கட்டாயமாக்கியது கலைஞர்
3. மிக பிற்படுத்தபபட்டோருக்கு #இலவச கல்வி தந்தது கலைஞர்
4. தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தது
5. பனிரெண்டாம் வகுப்பு வரை இலவச கல்வி உருவாக்கியது கலைஞர் 
6. பெண்களை படிக்க ஊக்குவிக்க, 8ம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு திருமண உதவியாக 5,000 வழங்கியது. பிறகு அதனை 10ம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு திருமண உதவியாக 10,000 என்று உயர்த்தி வழங்கியது கலைஞர். 
7. பெண்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 30% இடஒதுக்கீடு வழங்கியது.  
8. வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச கல்வி இளங்கலை பட்டப்படிப்பு வரை தந்தது கலைஞர்
9. விவசாய கல்லூரி (கோவை) உருவாக்கியது கலைஞர் 
10. ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம் அமைத்தது கலைஞர்
11. MGR மருத்துவ பல்கலைக்கழகம் நிறுவியது கலைஞர் 
12. இந்தியாவிலே முதன் முறையாக டாக்டர். அம்பேத்கார் சட்ட கல்லூரி மற்றும் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம்  நிறுவியது கலைஞர் 
13. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர் 
14. பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர் 
15. பெரியார் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர் 
16. உலக தமிழர்களுக்கு உதவ, தமிழ் மெய்நிகர் பல்கலைகழகம் தந்தது கலைஞர் 
17. முதன்முறையாக விதவை பெண்களுக்கும் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரியில் இட ஒதுக்கீடு அளித்தது கலைஞர் 
18. மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியில் கிராமபுற மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு வழங்கியது. 
19. உருது அக்காடமி தந்தது கலைஞர் 
20. பொது நுழைவுத் தேர்வு ரத்து செய்தது கலைஞர் 
21. அண்ணா தொழில்நுட்ப பல்கலைகழகம் திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி, திருவாரூரில் உருவாக்கியது கலைஞர் 
22. முதல் பட்டதாரிக்கு ஆண்டுக்கு 20,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு 80,000 பொறியியல் கல்வி கட்டணம் வழங்கியவர் கலைஞர். 
23. தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணய ஆணையம் அமைத்தது கலைஞர்
24. சமச்சீர் கல்வி தந்தது கலைஞர் 
25. மாவட்ட, மாநில அளவில் முதல் மூன்று இடங்களில் வருவோருக்கு மேற்படிப்பு உதவி தொகை தந்தது கலைஞர் 
26. பள்ளிகளில் உணவோடு முட்டை தந்தவர் கலைஞர்
27. இலவச பஸ் பாஸ் தந்தவர் கலைஞர் 
28. காமராஜர் பிறந்த நாளை கல்வி மேம்பாட்டு தினமாக அறிவித்தது கலைஞர் 
29. பள்ளிகள், கல்லூரிகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்கி படிக்க விடுதிகளை நிறுவியவர் கலைஞர். 
30. உலக தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகம் நிறுவியது கலைஞர்

மொழி/ Language:

1. முதல் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடத்தியது கலைஞர் 
2. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தது கலைஞர் 
3. திருக்குறளை உலகிற்கு பறைசாற்றும் வகையில் வள்ளுவர் கோட்டம், குமரி முனையில் 133 அடியில் திருவள்ளுவர் சிலை நிறுவியது கலைஞர். 
4. பாரதிதாசன், அண்ணாவுடன் சேர்ந்து நாம் இன்று ஷ,ஸ,க்ஷ கலக்காமல் எளிய தமிழை வழங்கியவர் 
5. திரு எம் ஜி ராமச்சந்திரன் அவர்களால் நிறுவப்பட்ட தமிழ் பல்கலைக்கழகத்தை மேம்படுத்தியவர் கலைஞர். 

பாதுகாப்பு/ Police

1. இந்தியாவிலே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது கலைஞர்
2. மகளிர் காவலர்களை நியமித்தவர். 
3. சிறைச்சாலை சீர்திருத்தம் செய்தவர். 
4. புழல் சிறைச்சாலை கட்டியவர். 

சாலை வசதி/ Road and Rail

1. 1,000 நபர்கள் கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது கலைஞர் 
2. கிராமங்கள் மற்றும் நகரங்களின் வீதிகள் தோறும் கான்கிரீட் சாலை அமைத்தவர் கலைஞர் 
3. மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தி 3,000 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் நான்கு வழிச்சாலை அமைய காரணமாக  இருந்தவர் கலைஞர்
4. சென்னை - மதுரை மின்மய இரட்டை வழி ரயில்பாதை அமைய காரணமாக இருந்தவர் கலைஞர். 

போக்குவரத்து/ Transport:

1. போக்குவரத்து துறையை உருவாக்கியவர் கலைஞர்
2. பேருந்துகளை நாட்டு உடமயமாக்கியவர் கலைஞர்
3. கிராமங்களில் சிறிய பேருந்து சேவையை கொண்டுவந்தது கலைஞர்
4. போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் வழங்கிய கலைஞர்
5. பேருந்து கட்டணத்தை ஏற்றாமல் 13,000 புதிய பேருந்துகள் வழங்கியவர் கலைஞர் 

மின்சாரம்/ Electricity:

1. மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது கலைஞர் 
2. நெய்வேலி இரண்டாம் அலகு அனல் மின்நிலையம் கொண்டுவந்தது கலைஞர்
3. தூத்துக்குடி அனல்மின் நிலையம். 
4. எண்ணூர் அனல்மின் நிலையம் 3, 4வது அலகு 
5. காடம்பாறை நீர் மின் நிலையம். 
6. காற்றாலை மின்சாரம் ஆரம்பித்து வைத்தவர் கலைஞர். 
7. 1500 கோடி ரூபாயில் 350 துணை மின்நிலையம் உருவாக்கியது கலைஞர் 
8. தொழிற்சாலைகளுக்கு தேவையான மின் வழித்தடம். 

தொழிற்சாலை மற்றும் வேலைவாய்ப்பு/ Industries and Job Opportunities:

1. SIPCOT உருவாக்கியது கலைஞர் 
2. SIDCO உருவாக்கியது கலைஞர்
3. சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்தது கலைஞர் 
4. பெட்ரோல் மற்றும் ரசாயன தொழிற்சாலை தூத்துகுடி கொண்டுவந்தது கலைஞர் 
5. பூம்புகார் கப்பல் நிறுவனம் தந்தது கலைஞர் 
6. தொழிற்சாலைகளுக்கு வெளிப்படை கொள்கை அமைத்தது கலைஞர்
7. முதல் தடவை விதவை பெண்கள் தொழில் தொடங்க உதவியவர் கலைஞர்
8. Automobile companies, Automobile testing centres உருவாக்கியது. 
9. Electronic manufacturing companies, Saint Gobain கண்ணாடி தொழிற்சாலைகள் கொண்டு வந்தவர் 
10. டைடல் பார்க் சென்னையில் அமைத்தது கலைஞர்
11. புதிய டைடல் பார்க் திருச்சி கோவை மதுரை திருநெல்வேலியில்யில் உருவாக்கியது கலைஞர் 
12. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி 37 புது நிறுவனங்களை ஈர்த்து 41,090 கோடி முதலீடை கொண்டு வந்தவர் கலைஞர்.
13. 37 நிறுவன அனுமதியால் 3 லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்கியது கலைஞர்
14. 5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு தந்தது கலைஞர் 
15. 13,000 மக்கள் நல பணியாளர்கள் நியமனம் செய்தது கலைஞர்
16. முதல் முறையாக 10,000 சாலை பணியாளர்களை நியமனம் செய்தது கலைஞர் 
17. TNPSC உருவாக்கி, அண்ணன், தம்பி, மாமன், மச்சான்களை வேலையில் அமர்த்தியதை தடுத்து, முறையாக எல்லோருக்கும் பணி கிடைக்க வழி செய்தவர் கலைஞர். 

அரசு கட்டிடங்கள்/ Government Buildings:

1. மதுரை நீதிமன்றம் உட்பட 119 புதிய நீதிமன்றம் உருவாக்கியது கலைஞர் 
2. மாலை நேரம், மற்றும் விடுமுறை தின நீதிமன்றம் உருவாக்கியவர் கலைஞர் 
3. அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டம் தந்தது கலைஞர் 
4. அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளோடு 10,096 கிராம பஞ்சாயத்து உருவாக்கியது கலைஞர் 
5. 420 பேரூராட்சிகள் உருவாக்கி "அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம்" தந்தது கலைஞர் 
6. ஆசியவையே திரும்பி பார்க்க வைத்த புதிய சட்டமன்றம் நிறுவியது கலைஞர் 
7. ஜப்பான் நாட்டு வங்கி உதவியோடு மெட்ரோ ரயில் திட்டம் தந்தது கலைஞர் 
8.சென்னையில் 20 மேம்பாலங்கள் மற்றும் 200 அடி வெளிவட்ட சாலை உருவாக்கியது கலைஞர் 
9. 21 மாவட்டங்களில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், தாலுக்கா மற்றும் யூனியன் கட்டிடங்களை கொடுத்தவர் கலைஞர்
22. ஆசியாவிலே மிக பெரிய சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அமைத்தது கலைஞர்.
23. மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையங்கள் உட்பட பல புதிய பேருந்து நிலையங்களை நிறுவியவர் கலைஞர்.  

கோவில் திருப்பணிகள்/ Temple:

1. Hydraulic வசதி செய்து கொடுத்து திருவாரூர் தேரை மீண்டும் ஓட வைத்தவர் கலைஞர். 
2. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமை பெற்று தந்தது கலைஞர் 
3. கோவில்களில் குழந்தைகளுக்கான "கருணை இல்லம்" தந்தது கலைஞர்
4. பல கோடி செலவில் 5,824 கோவில்கள் புணரமைத்து குடமுழுக்கு பணி செய்தது கலைஞர்
5. அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கியது கலைஞர் 

சமூக பணிகள்/ Social Welfare Schemes:
 
1. #பிச்சைகாரர்கள் மறுவாழ்வு மையம் அமைத்தது கலைஞர் 
2. கையில் இழுக்கும் #ரிக்‌ஷா ஒழித்து இலவச சைக்கில் ரிக்‌ஷா கொடுத்தது கலைஞர்
3. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென வாரியம் அமைத்தது கலைஞர்
4. அரசியலமைப்பில் பிற்படுத்தபபட்டோருக்கான அமைப்பை அமைத்தது கலைஞர் 
5. அரசியலமைப்பில் BC - 31%, SC - 18 % ஆக உயர்த்தியது கலைஞர்
6. மே 1, #சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையாய் அறிவித்தது கலைஞர் 
7. வாழ்ந்த மனிதரான நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறையாய் அறிவித்தது கலைஞர் 
8. அரசு ஊழியர்கள் குடும்ப நலத் திட்டம் தந்தது கலைஞர் 
9. அரசு ஊழியர்கள் மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தது கலைஞர் 
10. நில விற்பனை வரையரை சட்டம் அமைத்தது கலைஞர் 
11. உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தபபட்டோரில் தமிழ் இஸ்லாமியர்களுடன் சேர்த்தது கலைஞர் 
12. பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டுவந்தது கலைஞர் 
13. மனு நீதி திட்டம் தந்தது கலைஞர் 
14.வேளாளர் இனத்தை பிற்படுத்தபபட்டோர் பட்டியலில் இணைத்தது கலைஞர் 
15. மிக பிறப்படுத்தபபட்டோரில் வன்னியர், பனமலைக் கள்ளர் மற்றும் சீர் மரபினரை சேர்த்தது கலைஞர் 
16. மிகவும் பிற்படுத்தபபட்டோருக்கு 20% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர் 
17. தாழ்த்தப்பட்டோருக்கு 18% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்
18. பழங்குடியினருக்கு 1% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்
19. தகப்பன் சொத்தில் பெண்களுக்கு சம உரிமையை சட்டமாக்கியது கலைஞர்
20. அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு தந்தது கலைஞர்
21. ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்
22. விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர் 
23. கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்
24. பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தது கலைஞர் 
25. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல் கொண்டுவந்தது கலைஞர்
26. உள்ளாட்சி பதவிகளில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிவர் கலைஞர். 
27. இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர செய்தது கலைஞர்
28. மெட்ராஸ் என்ற பெயரை சென்னையாக்கியது கலைஞர் 
29. #சமத்துவபுரம் தந்தது கலைஞர் 
30. சிறுபான்மையினர் பொருளாதார வளர்ச்சி அமைப்பு ஏற்படுத்தியது கலைஞர்
31. கால்நடை பாதுகாப்பு திட்டம் தந்தது கலைஞர் 
32. விவசாய கூலி வேலை செய்வோர் நல வாரியம் அமைத்தது கலைஞர்
33. பொது கூலி வேலை செய்வோர் நல வாரியம் அமைத்தது கலைஞர்
34. அறிஞர்களுக்கும், தியாகிகளுக்கும் மணிமண்டபம் கட்டியது கலைஞர் 
35. அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தந்தவர் கலைஞர் 
36. நமக்கு நாமே திட்டம் தந்தவர் கலைஞர் 
37. நலிவுற்ற குடும்பநல திட்டம் தந்தது கலைஞர்
38. ஒப்பந்த பணியாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம் தந்தது கலைஞர்
39. #அருந்ததியினர் இனத்திற்க்கு 3% தனி இடஒதுக்கீடு தந்தது கலைஞர்
40. இஸ்லாமியர்களுக்கு 3.5% தனி இட ஒதுக்கீடு வழங்கியவர் கலைஞர்.
41. இலவச #வண்ண தொலைக்காட்சி வழங்கும் திட்டம் தந்தது கலைஞர் 
42. இலவச #எரிவாயு உருளை வழங்கியவர் கலைஞர்.
43. பேருந்து கட்டணம், பால் விலை, மின்சார கட்டண உயர்தாதவர் கலைஞர்.

#தமிழர்களின்_தானைத்தலைவன்
#கம்பீர_கருணாநிதி
-   டெக்கான் ரோகர் முகநூல் பக்கம்

புதன், 22 ஏப்ரல், 2020

திராவிடம் - தமிழ் சொல்லாய்வு

"திராவிடம்" 
என்பது தமிழின் திரிபே என்றால், திரிபை ஏன் ஏற்க வேண்டும் "தமிழ்" என்பதைத்தானே ஏற்க வேண்டும், நல்ல பால் இருக்க  திரிந்த பாலை புத்தியுள்ளவர் அருந்துவரா, அருந்தச் சொல்வரா?
எனவே திராவிடம் என்று கொம்பு சுத்த வேண்டாம், தமிழ் என்றே கூறுங்கள்...

என்று 'சே.ந.சீ' எனும் நண்பர் என்னைக் கேட்டுக் கொண்டார்.

ஒரு திராவிடனாகிய நான் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

பல்வேறு மொழியியல் அறிஞர்களின் ஆய்வின்படி  "வளமான தமிழ் மொழியே கூட ஒரு திராவிட மொழிக் குடும்பத்தின் கிளை மொழியே" எனும் போது 

திராவிடம்' தமிழ்ச்சொல்லா ?
என்று தொடர்ந்து கேட்பது "அறிவீனம்"
அல்லவா ?

பெரியார் முன்னெடுத்த திராவிட இயக்கம், போராடி வென்றெடுத்த

இன உணர்வு ,
மொழியுணர்வு
சுயமரியாதை, 
சமூக நீதி
பகுத்தறிவு, 
மத எதிர்ப்பு கொள்கை,
சாதிய எதிர்ப்பு, 
பெண் கல்வி,
பெண்கள் முன்னேற்றம்,
தேவதாசி முறையையும், குழந்தைகள் திருமணத்தையும் தடைசெய்தது,

போன்றவைகளைப் பற்றியெல்லாம் பேசமாட்டோம், வெறும் 
'திராவிடம்' 
என்ற சொல்லை மட்டுமே தூக்கிக் கொண்டு அலைவோம், அலைவதோடு மட்டுமின்றி, பிறரையும் அதையே நம்ப வைப்போம் என்ற உறுதியோடு போலி தமிழ் தேசியவியாதிகள் நீங்களே  இருக்கும் போது....

பெரியாரைப் படித்து, அவர் படிக்கச் சொன்ன நூல்களையெல்லாம் அறிவுக் கண் கொண்டு ஆராய்ந்தறிந்த, திராவிட இரவிச்சந்திரன் அதை ஆதாரங்களுடன் மறுப்பது தானே சிறப்பு.

முதலில் தமிழ் என்ற சொல்லே திரி சொல் என நிரூபிக்கிறேன்..

'தமிழ்' என்ற சொல்லின் வேர்ச் சொல்  எது?
 தாய், தம்பி, தமக்கை, தங்கை , தந்தை போன்ற சொற்கள் எந்த வழிமுறையில் வந்ததோ, அதே வழியில் தான் 'தமிழும்' வந்தது.

'தம்' என்பது படர்க்கையை குறிக்கும் என்பது தொல்காப்பியன் கூறும் இலக்கணம்.

தம் + ஆய் = தாய்
தம் + ஐயன் = தமையன்
தம் + அக்கை = தமக்கை
தம் + கை = தங்கை
தம் + எந்தை = தந்தை

அதுபோல 

தம் + மொழி = தமிழ்

ஹஹ்ஹஹ்ஹா...

தம்+மொழி எப்படி அய்யா தமிழாகும்....
என அவசரப்பட வேண்டாம் 
'முன் +தெரி+ கொட்டைகளே'...அதாவது முந்திரிக் கொட்டைகளே!

தம்+மொழி = தம்மொழி > தமிழி > தமிழ் என நிலைத்தது.

அதுபோல் 'திராவிடம்' என்ற சொல்லும் நீங்கள் உளறுவது போல சமஸ்கிருத சொல்லல்ல ! அதுவும்
தமிழ்ச்சொல்லே!

தமிழம்- திரமிளம்-திராவிடம் என்று திரிபாயிற்று.
இதை மறுப்போர் ஆதாரங்களுடன் மறுத்தால் நான் பதிலளிக்கிறேன்.

'கூகுளை' மட்டும் தூக்கிக் கொண்டு வந்து ஆதாரம் எனக் காட்டவேண்டாம்.

இப்போது கூறுங்கள்...

நல்ல பால் இருக்க  திரிந்த பாலை புத்தியற்று அருந்துபவர், நீங்களா, நானா ?

ஆரோக்கியமான விவாதத்திற்கு காத்திருக்கும்....

பெரியாரின் பேரன் நான்.
 முகநூல் பக்கம், 22.4.20

திங்கள், 20 ஏப்ரல், 2020

திராவிடம்' தமிழ்ச்சொல்லா ?

'திராவிடம்' தமிழ்ச்சொல்லா ?
என்று தொடர்ந்து கேட்பதன் மூலம் தன்னை ஒரு மாபெரும் அறிவாளியாக முகநூலில் காட்டிக் கொள்ளும், போலி தமிழ் "தேசியவியாதிகளே!"...

திராவிடம் என்ற சொல் 'தமிழ்ச்சொல்' இல்லையென்றே வைத்துக் கொள்வோம்..

அதனால் நீங்கள் அடையப் போகும் Orgasm என்ன?

உங்களுக்கான பதிலை இறுதியில் தருகிறேன்.

நான் விலங்கியலில் முதுகலை பட்டம் பெற்றவன்..M.Sc., Zoology. 

நான் அறிந்த வரையிலும், Jean-Baptiste Lamarck, Charles Darwin கூற்றுப் படியும்,

மனித இனம் Homo sapiens தோன்றியது ஆப்பிரிக்க கண்டத்தில். 

அவ்வாறு தோன்றிய மனித இனம் பல்வேறு பரிணாம வளர்ச்சியும் பெயரும் பெற்று Homo erectus (Upright man -  Primate) என்ற பெயருள்ள மனித இனம் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறி பல்வேறு பகுதிகளிலும் இனக்கலப்பு அடைந்ததன் மூலம் தனித்தனியாகத் தோற்றம் பெற்றனர்.

அப்போது அவனுக்கு மொழி கிடையாது...
காரணம், அவனுடைய ஜீனில் FOXP2 என்ற ஒரு மரபணு கிடையாது. எனவே அவன் மொழி கூச்சல் ஒலி மட்டுமே.

பின்னாளில் அவன் எந்த மொழியில் பேசியிருப்பான் என்று உலக மொழியியல் ஆய்வாளர்கள் தமது ஆய்வுகளை மேற்கொண்டனர்.

பேராசிரியர் டாலர்மேன் அவர்களின் கூற்றுப்படி...
தொன்மையான மொழிகள் என நாம் குறிப்பிடும் பெரும்பாலான மொழிகள் எதுவுமே 6,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை அல்ல. 

ஆனால்,  மொழியின் உண்மையான தொடக்கம் குறைந்தபட்சம் 50,000 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என்பதற்கான சுவடுகள் உள்ளன. அது திராவிட மொழிக் குடும்பமாக இருக்கலாம்.

இவரது ஆய்விற்கு வலு சேர்க்கும் விதமாக பேராசிரியர் போலே அவர்கள்...

பொதுவான தொன்மை மொழி,
இன்றைக்கு உலகில் பேசப்படும் பல்வேறு மொழிகள் பற்றிய ஆதாரங்கள் நிறைய இருந்தாலும், இப்போதைய மொழிகள் அனைத்துமே பொதுவான ஒரு தொன்மொழியில் இருந்து உருவானவையாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்கிறார்.

BBC ன் Royal Society Open Science என்ற மொழி ஆராய்ச்சி அமைப்பு, 
பின்னாளில் பேசப்பட்ட மொழி குறித்தும்
திராவிட மொழிகள் மற்றும் அதனை பேசுவோரின் தொல் வரலாற்றையும் ஆய்வு செய்து இவ்வாறு வெளியிட்டது...

தெற்கு ஆசியாவில் ஏறத்தாழ 22 கோடி மக்களால் பேசப்படுவது திராவிட மொழிகளே !

திராவிட மொழி குடும்பத்தைச் சேர்ந்த 80 மொழிகளை, தெற்கு மற்றும் மத்திய இந்தியா மற்றும் இந்தியாவின் அருகே உள்ள நாடுகளில் வசிக்கும் ஏறத்தாழ 22 கோடி பேர் பேசுகிறார்கள். 

மேற்கில் ஆஃப்கானிஸ்தான் முதல் கிழக்கு வங்கதேசம் வரை பரந்து விரிந்திருக்கும் தெற்கு ஆசியாவில் பேசப்பட்டு வரும் "ஆறு மொழி குடும்பத்தைச் சேர்ந்த அறுநூறு மொழிகளுக்கு"
தாயாக  திராவிட மொழி குடும்பமே விளங்குகிறது.
இந்த திராவிட மொழிகள் சுமார் 4500 ஆண்டுகள் பழமையானது என்று அந்த ஆய்வின் முடிவு காட்டுகிறது.

எனவே திராவிட மொழி குடும்பத்தில் பழமையான மற்றும் அதிக மக்களால் பேசப்படும் மொழிகள் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம்  என்பது நிரூபணமாகிறது.

சரிப்பா, பதிவின் முதலில் நீ கேட்ட கேள்விக்கும், நீ இப்ப "ஆத்துற" உரைக்கும் என்ன தொடர்பு என்று கேட்பவரா நீங்கள்?

அப்ப கவனமாக படியுங்கள்...

பல்வேறு மொழியியல் அறிஞர்களின் ஆய்வின்படி  "வளமான தமிழ் மொழியே கூட ஒரு திராவிட மொழிக் குடும்பத்தின் கிளை மொழியே" எனும் போது 

திராவிடம்' தமிழ்ச்சொல்லா ?
என்று தொடர்ந்து கேட்பது "அறிவீனம்"
அல்லவா ?

சரி, நான் உங்களிடம் ஒரு கேள்வியை முன் வைக்கிறேன்....

பெரியார் முன்னெடுத்த திராவிட இயக்கம், போராடி வென்றெடுத்த

இன உணர்வு ,
மொழியுணர்வு
சுயமரியாதை, 
சமூக நீதி
பகுத்தறிவு, 
மத எதிர்ப்பு கொள்கை,
சாதிய எதிர்ப்பு, 
பெண் கல்வி,
பெண்கள் முன்னேற்றம்,
தேவதாசி முறையையும், குழந்தைகள் திருமணத்தையும் தடைசெய்தது,

போன்றவைகளைப் பற்றியெல்லாம் பேசமாட்டோம், வெறும் 
'திராவிடம்' 
என்ற சொல்லை மட்டுமே தூக்கிக் கொண்டு அலைவோம், என்றால் நீங்கள் உண்மையிலேயே
"Homo sapiens" தானா ?

விமர்சனங்கள் செய்வோர் சற்று கவனமாக வரவும்...
தகுந்த ஆதாரங்களை கை நிறைய வைத்திருக்கும் துணிவில்.....

பெரியாரின் பேரன் நான்.

- கருப்பன் தமிழ், பெரியாரின் பேரன் நான், முகநூல் பக்கம் , 19.4.20

ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

திராவிடம் என்ற பதம்

*திராவிடம்*
*Dravidian_Concept*
________________________

திராவிடம் என்ற பதம் தமிழர் வரலாற்றில் தொன்று தொட்டு இந்த வார்த்தை புழக்கத்தில் உள்ளது.

மனோன்மணியம் சுந்தரனார் திராவிடம் என்ற சொல்லாடலைப் பயன்படுத்தியுள்ளார். ரபிந்திரநாத் தாகூர், தேசிய கீதத்தில்  “திராவிட உத்கல வங்கா” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப்பாடலை ஆந்திரத்தில் உள்ள மதனபள்ளியில் இறுதிசெய்து முடித்தார் என்றும் சிலர் சொல்வார்கள். 

இவர்களுக்கும் முன்பே திராவிடம் என்ற கருத்தியல் பல்வேறு நிலைகளில் பயன்படுத்தப்பட்டன. கார்டுவெல் பிஷப்பும், திராவிட மொழிகளின் இலக்கணத்தைப் பற்றியும் ஆய்வுகள் செய்துள்ளார்.  

பத்தொன்பதாம் நூற்றாண்டில் திராவிடம் என்ற வார்த்தை  அச்சில்  வெளிவந்தாலும், அதற்கு முன்பே  சுவடிகளிலும் திராவிடம் என்ற சொல்லாடல் இடம்பெற்றிருக்கின்றது. 
’மனு ஸ்மிருதி’யிலிருந்து நாம் மாறுபட்ட கொள்கைகளைக் கொண்டிருந்தாலும் அதில் திராவிடம் என்ற சொல் ஒரு பகுதியைக் குறிக்கக் கையாடப்பட்டுள்ளது. 

      “ தயாவத்யா தத்தம் திராவிட சிசுஹூ
          ஆஸ்வாத்ய தவயத்” 
                                      -ஆதிசங்கரர்,(சௌந்தர்ய லஹரி -10.)

திராவிடம் என்ற சொல்லை தாயுமானவரும் ஒன்பதாம் நூற்றாண்டில் ‘சேந்தன் துவாரகம்’ சொல்கிறது என்றும்  பேராசிரியர் ச.வே.சுப்பிரமணியன் தன்னுடைய ஆய்வில் குறிப்பிடுகின்றார். 

பனிரெண்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ‘ராஜ தரங்கணி’ என்ற சமஸ்கிருத காஷ்மீர் சுவட்டில் தென்னாட்டு பிராமணர்களை திராவிட பிராமணர்கள் என்று குறிபிட்டுள்ளது. கருத்தியலில் மாறுபட்டிருந்தாலும் திராவிடம் பற்றிய இந்தப் பதிவுகள்  ஏடுகளில் இருப்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

வைணவ ஆச்சாரியார் வேதாந்த தேசிகரின்  தென்னிந்திய மொழிக் குடும்பங்களின் தொகுப்பை திராவிட மொழிகள் தொகுப்பு என்று உறுதி செய்கின்றார் எல்லீஸ்.

சமண, பௌத்த சமயங்களும், பாலி, சமஸ்கிருதம் மொழிகளும் திராவிடம் என்பதை மொழிவாரி அமைந்த பகுதிகள் என்று குறிப்பிட்டுள்ளன. அதேபோல பாகவதம் என்ற நூலிலும்  திராவிடம் எனப் பொருள் கொள்ளும்படி “த்ரமிடம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்போது  அழைக்கப்பட்ட 56நாடுகளில் திராவிட நாடும் ஒன்று. விந்திய மலைக்குத் தென்புறத்தில் உள்ள வட்டாரங்களை ”பஞ்ச திராவிட நாடுகள்” என்று அழைத்ததாக தகவல்கள் உள்ளன. விந்திய மலைக்கு வடக்கே உள்ள பிரதேசங்கள் ”பஞ்ச கௌட நாடுகள்” என்றும் அழைக்கப்பட்டுள்ளன. இப்படியாக பக்தி இலக்கியங்களில் குறிப்பிட்டாலும், திராவிடம் என்று முதன்முதலில் பயன்படுத்திய காலத்தை அறுதியிட்டு சொல்லமுடியாத நிலையில் உள்ளோம்.  

இராமானுஜர் காலத்தில் வைணவப் பாசுரங்களை ‘திராவிட வேதம்’ என்று குறிப்பிட்டதும், திருக்கோளூர் ’பெண்பிள்ளை இரகசியத்தில்’ இராமானுஜரிடம் பாடல் வழியாகப் பேசும் பொழுதுகூட வைணவ வேதங்களைப்  பற்றி குறிப்பிடும் போது திராவிடம் என்றே  அனுமானித்து பேசப்பட்டுள்ளதாக வழக்கில் உள்ளது.

 “திரமிளம்”, “திராவிடம்” என்ற இரு சொற்களும் ஒன்றே எனத் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன. ”திரமிள சங்கம்” மதுரை சமண முனிவர் வஜ்ர நதியால் கி.பி 470ல் நிறுவப்பட்டது. 
திரமிள் என்பது திராவிட என்றப் பொருளைத்தான் குறிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். 

“திரமிள” என்ற பிராகிருதச் சொல் சமஸ்கிருதத்தில்  “திரவிட” என்று குறிப்பிடப்பட்டு, தமிழில்  “திராவிடம்” என்று கையாளப்பட்டது. இப்படியாக வர்ணாசிரத்தை ஆதரிக்கும் பண்டைய சுவடிகளில் சொல்லப்பட்ட கருத்துகளை நாம் ஏற்றுக் கொள்ள  மாட்டோம் என்றாலும், திராவிடம் என்ற சொல்புழக்கத்தை நாம் பழமையிலிருந்து அறிகிறோம். 

புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியில், பயன்படுத்தப்பட்ட தெலுங்கு இலக்கண நூலில்,”காம்பல்”  என்பவர் திராவிடத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.   பிஷப். கார்டுவெல் 1956ல் திராவிட- தென்னிந்திய மொழிக் குடும்பங்களின் ஒப்பிலக்கணம் என்ற நூலில் திராவிடம் என்ற பதம் நிலைநாட்டப்பட்டது. அதே காலக் கட்டத்தில் அயோத்தி தாசர், ‘திராவிட ஜன சபை’ என்ற அமைப்பையும் தொடங்கினார்.  

பிஷப் கார்டுவெல்லுக்கு முன்பு, மனோன்மணியம் சுந்தரனார்   “திராவிட நல் திருநாடு” என்று குறிப்பிட்டதும் , ரபிந்திர நாத் தாகூரின் தேசியகீதத்தின் மூலமாகவும்  திராவிடம் என்ற சொல் ஆதியிலிருந்து புழக்கத்தில் இருந்தது என்பது ஆய்வுகள் மூலம் தெரியவருகின்றது. 

பெரியார், திராவிடக் கழகத்தை தொடங்கும் போதும்;அண்ணா,திராவிட முன்னேற்றக் கழகத்தை துவக்கிய போதும், முன்னிறுத்திய திராவிடம் என்ற சொல்லின் பழமையை  இந்த தரவுகள் நமக்கு சுட்டிக் காட்டுகின்றன.

மேற்குறிப்பிட்டவாறு, ஆதிசங்கரர், இராமானுஜர்,  சமஸ்கிருத, பாலி மொழிச் சுவடுகள், சமண, பௌத்த மதங்கள் நிலைத்த காலங்கள் ஆகியவற்றுக்கும் பின்னும் தாயுமானவர் (18ம் நூற்றாண்டு),    கார்டுவெல்(1856),  மனோன்மணியம் சுந்தரனார் (1891), ரபிந்திரநாத் தாகூர் (1911) , மறைமலை அடிகள், போன்றோர் “திராவிடம்” என்ற சொல்லை பயன்படுத்திய செய்திகளும் தகவல்களும் உள்ளன. 

திராவிடம் என்பது 19ம் நூற்றாண்டில் புழக்கத்திக்கு வந்த சொல் அல்ல. வரலாற்று ரீதியாக பண்டைய காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்ட சொல் என்பது இதன்மூலம் நமக்குத் தெரியவருகின்றது. இவை குறித்து மேலும் நாம் ஆய்வுகள் செய்யவேண்டும்.  பிறகு எப்படி தெலுங்கும், மலையாளமும், கன்னடமும், தாய்த்தமிழிலிருந்து  தோன்றியிருக்க முடியும்.

”கன்னடமும் கலிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன் உதிரத்தில் உயிர்த்தெழுந்து ஒன்று பலவாயிடினும்” என்று பழமையான இலக்கியத்தில் பாடப்பட்டிருக்கின்றதே...... 

  
-கே.எஸ். இராதாகிருஷ்ணன். 
19-04-2020

#Dravidian , 
#திராவிடம் ,
#KSR_Posts

வெள்ளி, 3 ஏப்ரல், 2020

மனித இனக்குழு வரலாறும் ஆரியமும் - 3

- அறிவழகன் கைவல்யம்

உயிரியல் அடிப்படையில் அனைவரும் ஓர் இனமே!

ஆசியப் பகுதியின் உயிரியல்  இனக்குழுக்-களைப் பற்றிய குறைந்தபட்சப் புரிதல் நிகழ்கால அரசியலை அறிந்து  கொள்வது வரையில் பயனளிக்கும்  தேவையாக இருக்கிறது, காக்கேசியன் (Caucasian or Europid) அல்லது அய்ரோப்பிய வகையினம் அல்லது நிறத்தை அடிப்படையாக வைத்து வெள்ளையினம் என்று அழைக்கப்படும் மனித இனக்குழு ஏறத்தாழ 55 விழுக்காட்டிற்கு மேலான ஒரு மிகப்பெரிய பொதுவினமாக பல்கிப் பெருகி அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா தவிர்த்த நிலவியல் பகுதிகளில் பரவலாகக் காணப்படுகிறது. இந்த இனக்குழுக்களின் பொதுவான வேர் இன்றைய அய்ரோப்பிய நாடுகளிலும், ஆசியா முழுமையிலும், வட ஆப்பிரிக்காவிலும் பெருமளவில் காணப்-படுவதை உயிரியலாளர்கள் உறுதி செய்கிறார்கள்.  இந்தியத் துணைக்கண்டத்தில் மட்டும் ஏறத்தாழ 70 கோடி இந்தியர்கள் இவ்வினத்தின் கூறுகளுக்குள் பொருந்தி வருகிறார்கள். இந்தப் பெரும்பான்மை தவிர்த்து மங்கோலிய மஞ்சள் இனத்தின் (Mangolids) குழுக்கள் ஆசியாவின் மய்யப்பகுதி, கிழக்குப் பகுதி  மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் பரவலாகக் காணப்படுகிறார்கள். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும் மக்களின் மண்டையோட்டு அமைப்பு,  நெற்றிச் சாய்வு, தலைமுடியின் நிறம் மற்றும் உதட்டுப் புறத்தோற்றம் ஆகியவை மங்கோலியப் பேரினத்தின் தொடர்ச்சியாகவும், கிளைப் பிரிவுகளாகவும், கலப்பினங்களாகவும் அடையாளம் காணப்படுகிறது.

பெரும்பான்மை உயிரியல் ஆய்வாளர்களும், மானுடவியலாளர்களும் இந்தியத் துணைக்-கண்டத்தின் இனக்குழுக்களை அய்ரோப்பிய வெள்ளையின வகையாகவே உறுதி செய்கிறார்கள். அதாவது தோலின் நிறம் முழுமையான வெளுப்பு, மங்கிய வெளுப்பு அல்லது பழுப்பு, தலைமயிர் மென்மையானது, முகத்தின் மீது சிவப்பு நிறச் சாயல் (தெற்கு மற்றும் மய்யப் பகுதியின் தட்பவெப்பம் காரணமாக வேறுபாடும் முகத்தின் சிவப்புச் சாயலைத் தவிர்த்து) பொதுவாகக் கறுப்பு முடி, உடல் முழுக்கப் பரவலாக அடர்த்தியான அல்லது ஓரளவுக்கு அடர்த்தியான மயிர், நெற்றி பல கிளைக்குழுக்களுக்கு  நேரானதாகவும், சில கிளைக்குழுக்களுக்குக் கொஞ்சம் சரிவானதாகவும் இருக்கிறது. மண்டையோட்டு வடிவம் ஏனைய பெரிய இனங்கள் அனைத்திலும் காணப்படும் பொதுவான குறுகிய மண்டையோடு, நடுத்தர மண்டை-யோடு மற்றும் நீள் மண்டையோட்டு அமைப்புகளையும் கொண்டிருக்கிறது. அய்ரோப்பிய வகையினக் குழுக்களின் இரண்டு பெரிய கிளைகளாக தெற்கு அல்லது இந்திய மத்தியத் தரைக்கடல்  வகையினமும்,  அட்லாண்டிக் பால்டிக் வகையினமும் அடையாளம் காணப்படுகிறது. குறிப்பாக இந்திய மனிதக் குழுக்கள் முதல் தெற்கு வகையில் வகைப்படுத்தப்படுகிறது. அய்ரோப்பிய வகைப் பேரினத்தின் முதல் பெருங்கிளையான தெற்கு அல்லது இந்திய மத்தியத் தரைக்கடல் இனக்குழு வகையில் பெரும்பான்மையான இந்தியர்கள், தாஜிக்குகள், அரேபியர்கள், ஆர்மீனியர்கள், கிரேக்கர்கள், ஸ்பானியர்கள், இத்தாலியர்கள் ஆகியோர் அடங்குவார்கள். இரண்டாம் பெருங்கிளையான வடக்கு அல்லது அட்லாண்டிக் - பால்டிக் இனக்குழு வகையில் போலேருஷ்யர்கள், போலந்தியர்கள், நோர்வேக்காரர்கள், ரஷ்யர்கள், ஜெர்மானியர்கள், ஆங்கிலேயர்கள் ஆகியோர் அடங்குவர். இங்கே மிக நுட்பமாக நீங்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும். ஒரு ஆங்கிலேயரோ, ஒரு ஜெர்மானியரோ ஒரு இந்தியப் பழங்குடி மனிதனைப் பார்த்து உயிரியல் மற்றும் உளவியல் வழியாக நான் உயர்வானவன் என்றோ, பிறவியில் நான் ஒரு வெள்ளையன் உயர் உளவியல் தன்மைகள் கொண்டவன் என்றோ சொல்வதற்கான எந்த அடிப்படை அறிவியல் முகாந்திரங்களும் இல்லை.

அடிப்படையில் ஒரு ஆங்கிலேயனும், ஜெர்மானியனும், இந்தியனும் ஒரே வகையான உயிரியல் தன்மைகள் கொண்டவன்.  தட்பவெப்ப தகவமைப்புகள் தவிர வேறு எந்தப்  பெரிய அளவிலான உயிரியல் மற்றும் உளவியல் வேறுபாடுகள் இந்த வகையான நிலவியல் கிளைப்பிரிவுகளுக்கு இல்லை என்பதே மிகப்பெரிய அறிவியல் உண்மை.  ஆக, அடிப்படையான ஒரு அறிவியல் உண்மையை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டியதும், நமது இளைய தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதும் மிகப்பெரிய வரலாற்றுக் கடமை. ஓர் ஆங்கிலேயன், ஒரு ஜெர்மானியன் அல்லது ஒரு பழங்குடி இந்தியனுக்கும் உயிரியல் வழியாக எந்த வேறுபாடுகளும் இல்லை. அடிப்படையில் ஓர் ஆதி  மனித உயிர்க் குழுவிலிருந்தே இவர்கள் மூவரும் பிறக்கிறார்கள்.

பண்பாட்டு வழியிலான இயக்கங்களில் இருந்து இவர்கள் பேசுகிற மொழிக்குழுக்கள் தோற்றம் கொள்கின்றன. தங்கி நிலை கொண்ட நிலவியல் அவர்களின் நாட்டினங்களை வேறுபடுத்துகிறது. பிறப்பின் அடிப்படையில் பண்பாடு மற்றும் கலாச்சார விழுமியங்களின் வேர்களை அடையாளம் செய்யும் ஆரியக் கோட்பாடு எவ்வளவு போலியானது, நகைப்புக்குரியது என்கிற உண்மையை நாம் அறிவியலின் மூலமாகவே நிறுவ வேண்டியிருக்கிறது. அது அத்தனை கடினமானதும் அல்ல. பல்வேறு சூழல்களில் இங்கிருக்கிற இணைய மற்றும் இந்துத்துவ அடிப்படைவாதிகள் மனித சமூகக் குழுக்கள் பிறவியிலேயே ஒழுக்கம் மற்றும் தூய்மை குறித்த கூறுகளை கொள்கிறார்கள் என்று தொடர்ந்து பாடமெடுப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இத்தகைய பிறப்பின் அடிப்படையிலான இனக்குழு வகைகளை ஒரு குறிப்பிட்ட சமூகக் குழு தங்களின் பிழைப்புக்காக தொடர்ந்து முன்னிறுத்தியதும்,  அந்த முன்னிறுத்தலின் தொடர்ச்சியாக வேதங்களும், மனுதர்மங்களும் உயிரியல் வழியிலான மனித இனக்குழு வரலாற்றைச் சிதைக்கும் திட்டமிட்ட மறைமுக ஒழுங்குகளை நமது சமூக அறிவியலில் பரப்பி அரசியல் சட்ட வழிமுறைகள் வரைக்கும் ஒரு போலியான வரையறையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அந்தப் போலி வரையறைகளை உடைக்கவும், உண்மையான மனித இனக்குழுக்களின் வரலாற்றை அறிந்து கொள்வதற்கும் நமது கல்வி முறைகளில் இன்று வரை வெற்றிடமே காணப்படுகிறது. உயிரியல் இனக்குழுக்களின் சமூகக் கட்டமைப்பில் ஜாதி என்கிற வலுவான கருவி இயங்குவதற்கும், அதன் மூலமாகப் பிறக்கும் போதே ஒரு சமூகக் குழு உயர்வான பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டிருக்கிறது என்றும், இன்னொரு சமூகக் குழு தாழ்வான பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டிருக்கிறது என்றும் பொய்யான பரப்புரையை மேற்கொள்வதற்கு உருவாக்கப்பட்ட ஆரிய நியோ நாசிசக் கோட்பாட்டை உடைப்பதும், நமது குழந்தைகளுக்கான அடிப்படை வாழ்வுரிமைகளையும், அறிவார்ந்த கல்வி செயல்திட்டங்களையும் உருவாக்க மனித இனக்குழுக்களின் வரலாறு மிக முக்கியமான கருவியாக இருக்கிறது.

இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், டாக்டர் அம்பேத்கர் குறிப்பிட்டதைப் போல ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட மனிதனும் தன்னுடைய விடுதலைக்காக மட்டும் போராடவில்லை, மாறாக இந்தச் சமூகத்தின் அறிவுப் பெருவெளியில் தங்கி இருக்கிற போலியான வேறுபாடுகளைக் களைந்து மிகுந்த நாகரிகமான ஒரு சூழலுக்கு மனித இனக்குழுக்களை நகர்த்திச் செல்வதற்கு அவனே அடிப்படைக் காரணியாக நெடுங்காலமாக இருந்து வருகிறான்.

உயிரியல் இனக்குழுக்களின் ஆசிய வரலாறு இவ்வாறு இருக்க, மொழி சார்ந்த இனக்குழுக்களின் வரலாற்றுப் புரிதல் சமகால அரசியலின் அடிப்படையைப் புரிந்து கொள்ள வாய்ப்பாக அமைகிறது. தெற்காசியாவின் நிலவியல் தேசிய இனங்களாக அடையாளம் காணப்படுபவை இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், மாலத்தீவுகள் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் பரவலாக அடையாளம் செய்யப்படுகிறது. இந்த நாடுகளில் இரண்டு மொழிசார் குழுக்கள் இயங்குகின்றன. ஒன்று இந்தோ - ஆரிய மொழியினம், மற்றொன்று திராவிட மொழிக்குடும்ப வகையினம்.

தொடரும்...

செவ்வாய், 10 மார்ச், 2020

திராவிடன் சிந்திக்க வேண்டாமா?

மானமற்ற சில திராவிடர்கள் - தங்கள் பிறவியில் உறுதியோ நம்பிக்கையோ அற்ற திராவிடர்கள், ஆரியனை மதகுருவாகவும் அரசியல் குருவாகவும் கருதி அவன் பின்னால் திரிகிறார்கள் என்றால், இதை விட ஒரு சமூகத்துக்கு வேறு மானக்கேடென்ன என்று கேட்கிறேன்.

இந்தியாவில் திராவிடம், ஆரியவர்த்தம் என்ற பிரிவினை வெகு தெளிவாக இன்றும் இருக்கிறது. ஆதாரமும் இருக்கிறது. அப்படியிருக்க திராவிட நாட்டை பரதநாடு என்ற சொல்லவோ, பரதகண்டம் என்று சொல்லவோ, பாரத தேசம் என்று சொல்லவோ என்ன உரிமை இந்த ஆரியர்களுக்கு இருக்கிறது என்று கேட்கிறேன்.

அதுமாத்திரமல்லாமல், மானம் கெட்ட தமிழர்கள் பலர் அவர்கள் கூடச் சேர்ந்து கூப்பாடு போடுகிறார் களே, இவர்களுக்குத் தேசாபிமானமோ சுயமரியா தையோ தங்கள் பிறவியில் நம்பிக்கையோ இல்லையா என்று கேட்கிறேன்.

பரதன் திராவிட நாட்டை எப்போது ஆண்டான்? பரதன் என்பவனுடைய ஆட்சி திராவிடத்தில் எப் போதும் இருந்ததில்லை. திராவிட நாட்டைத் திராவிடர் களே ஆண்டிருக்கிறார்கள். முஸ்லிம் ஆட்சி கூட மிகச் சிறிது காலம் சில இடத்தில் இருந்தது என்பதல் லாமல், அதுவும் ஆரியர் குடியேறிய நாடுகளைப் பூரணமாக 1000க் கணக்கான வருஷங்களாக ஆண்டது போல் ஆண்டதாகச் சொல்ல முடியாது. திராவிட மன்னர்கள் ஆட்சி வேண்டுமானால் ஆரிய நாடுகளிலும் இருந் திருக்கிறது. ஆனால் ஆரியர் சூழ்ச்சியின் பயனாய் இந்த நாட்டை ஆண்ட பழம் பெரும் மன்னர்களின் சமுதாயங்களான திராவிடர்கள் ஆரியர்களுக்கு அடிமை ஜாதியாகவும், கீழ்த்தர ஜாதியாகவும், தீண்டாத ஜாதியாகவும் ஆக்கப்பட்டுத் திராவிட நாட்டிற்கும் ஆரியர்கள் பெயர்கள் கொடுக்கப்பட்டு விட்டன.

இன்று திராவிடம் பாம்பு வாயில் சிக்கிய தவளை விழுங்கப்படுவது போல், திராவிட சமுதாயம் அவர்க ளது கலை, மானம் ஆகியவைகள் உட்பட ஆரியப் பாம்பால் விழுங்கப்படுகிறது. இப்போது தவளையாகிய திராவிடத்திற்கு கடைசி மூச்சு நடக்கிறது. அதன் அபயக் குரல் கேட்பது போல் பிராணாவதைக் கூப் பாடு போடுகிறது. இந்தச் சமயத்தில் பாம்பைத் துண்டித் துவிட்டால்தான் திராவிடம் என்கின்ற தவளை பிழைக்கும். இல்லாவிட்டால் இன்னும் கொஞ்ச நேர (கால)த்திற்குள் தவளை (திராவிடம்) மறைந்தே போகும். இப்படிப்பட்ட நிலையில் அய்யோ பாம்பை வெட்டுவதா அடிப்பதா பாவம் என்று மடையனும் மானமற்றவனும்தான் சொல்லுவான்.

இன்று திராவிடனுக்கு இந்த திராவிட நாட்டில் என்ன யோக்கியதை இருக்கிறது. ஆரியர்களையும் திராவிடர்களையும் ஒத்திட்டுப் பாருங்கள். ஆரியன் தெரு கூட்டுகிறானா? மூட்டை தூக்குகிறானா? வண்டி ஓட்டுகிறானா? பியூனாய் இருக்கிறானா? உழுகிறானா? அறுப்பு அறுக்கிறானா? சரீரத்தில் இருந்து ஒரு துளி வேர்வையோ, நகத்தில் கடுகத்தனை அழுக்கோ, படியும்படி ஏதாவது உடலுழைப்புச் செய்கிறானா? ஆனால் அவன் வாழ்வையும் திராவிடன் வாழ் வையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

திராவிடன் - சூத்திரன். திராவிடப் பெண் சூத்திரச்சி. ஆரியர் வீட்டு வேலைக்காரர்கள், அத் தனை பேரும் திராவிட (சூத்திர)ர்கள். மற்றும் திராவிடப் பழம் பெருங்குடி மக்கள் ஈயத்தில் கண்ணாடிக் கல்லில் நகைபோடுவது. ஆரியர்கள் இன்றைக்கும் பிச்சை எடுத்தாலும் வைரம், செம்பு, பொன் நகைகள் போடுவது. திராவிடர்கள் 100க்கு 90 பேர்கள் தற்குறி. ஆரியர்கள் 100க்கு 90 பேர்கள் படித்தவர்கள், மகாபண் டிதர்கள். திராவிடர்கள் உத்தியோகத்தில் 100க்கு 90 பேர்கள் பியூன்கள், போலிசு காவலர்கள், தோட்டி தலையாரிகள்.  ஆரியர்கள் 100க்கு 90 உத்தியோகங் களில் கலெக்டர்கள், சூப்பிரண்டுகள், ஹைகோர்ட் ஜட்ஜீகள் முதலிய பெரும் பெரும் பதவிகள், ஆரியன் பிச்சை எடுத்தாலும் அவன் பிள்ளை அய்.சி.எஸ். ஆகிறான். திராவிடன் ஜமீன்தார னாய் இருந்தாலும் அவன் மகன் தெருவில் காவாலியாய், காலியாய், ஆரிய அடிமையாய், தற்குறியாய் மடையனாய்த் திரிகிறான். திராவிட மிராசுதாரர்கள் மக்கள் எல்லாம் தற்குறியாய் மூட்டை தூக்குகிற நிலைமைக்குப் போகிறார்கள். இந்த நிலைமைக்குக் காரணம் என்ன? திராவிடன் சிந்திக்க வேண்டாமா என்று கேட்கிறேன். கடவுள் பக்தியென்று கொட்டையும் சாம்பலும் மண் ணும் அணிந்துகொண்டு, பார்ப்பான் பின்பாகத்தைப் பார்த்து கொண்டு நின்று கும்பிட்டு, அவன் கால்தூசி யைச் சடகோபமாகக் கொண்டு கடவுள் பக்தனாவது போல், பார்ப்பானுக்குப் பின்னால் நின்று கொடியைப் பிடித்து அவனுக்கு ஜே போட்டு தேசபக்தனாகக் காட்டிக் கொள்ளும் மானமற்ற திராவிட னைக் கேட்கின்றேன். இதோ மேடைக்கு அழைக்கிறேன். வந்து பதில் சொல்லட்டும்.

- "குடிஅரசு", 10.1.1948

 விடுதலை நாளேடு 6.3.20