செவ்வாய், 5 ஜூலை, 2016

குதிரை குத்திப்பட்டான் நடுகல் கண்டுபிடிப்பு

கரூர் அருகே
800 ஆண்டுகள் பழைமையான
குதிரை குத்திப்பட்டான் நடுகல் கண்டுபிடிப்பு
கரூர், ஜூன் 20 கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, கரடிப்பட்டியில் நங்காஞ்சி ஆற்றங்கரையில் தமிழகத்தில் மிக அரிதாகக் காணப்படும் குதிரை குத்திப் பட்டான் நடுகல் ஒன்று கண் டறியப்பட்டுள்ளது.
திருப்பூரில் இயங்கிவரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மய் யத்தைச் சேர்ந்த ஆசிரியர் கி. திருநாவுக்கரசு, க.பொன்னுச் சாமி, ரா.செந்தில்குமார் மற் றும் பொறியாளர் சு.ரவிக் குமார் ஆகியோர் மேற் கொண்ட ஆய்வில் இந்த நடு கல் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைப்பற்றி ஆய்வு மய் யத்தின் இயக்குநர் பொறியா ளர் சு.ரவிக்குமார் கூறியதா வது:
தமிழ்நாட்டில் தொன்று தொட்டு இருந்த நாற்படை களில் ஒன்று குதிரைப்படை. சுமார் அய்ந்தாயிரம் ஆண்டு களுக்கு முன்பிருந்த அரப்பா நாகரிகத்தின் அழிபாடுகளில் இந்தியாவில் குதிரை இருந் தது என்பதற்குரிய அரிதான அகச்சான்றுகள் அகப்பட்டுள் ளன. தமிழ்நாட்டைப் பொறுத்த மட்டில் 2 ஆயிரத்து 500 ஆண் டுகளுக்கு முன்பே தமிழர்கள் குதிரைகளைப் பயன்படுத்தி இருந்தனர் என்று கூற முடி யும்.
தொல்காப்பியர் காலத்தில் தமிழகத்தில் மக்கள் குதிரை வண்டிகளில் ஊர்ந்து வந்தனர்; தமிழர்கள் கண்ட நான்கு விதப் படைகளில் குதிரைப் படை யும் ஒன்று என்று இன்றும் சான்று காட்ட முடியும். தேரும், யானையும், குதிரையும், பிற வும் ஊர்ந்தனர் இயங்கலும் உரியர் என்ப (தொல்.பொ.புற.12) தானை யானை குதிரை என்ற கோனார் உட்கும் மூவகை நிலையும் (தொல்.பொ.புற.14) என்ற தொல்காப்பியச் சூத் திரங்கள்மூலம் குதிரை ஊர்தி யும், குதிரைப் படையும் தொல் காப்பியர் காலத்திற்கு முன் பிருந்தே தமிழகத்தில் இருந்து வருகின்றன என்பது உறுதிப் படுகிறது.
மேலும் புறநானூறு, அக நானூறு, கலித்தொகை, சிலப் பதிகாரம், மணிமேகலை போன்ற சங்க இலக்கியங்களி லும் குதிரை பற்றிய குறிப்பு கள் உள்ளன. தமிழ்நாட்டுக் குதிரைப் படைக்கு எல்லா இலட்சணங்களும் பொருந் திய சேங்குதிரைகள் தேர்ந்தெ டுக்கப்பட்டு வந்தன. சிறந்த குதிரைகளுக்குச் சிறப்புப் பெயர் வைக்கப்பட்டிருந்தது. மலையமான் நாட்டை ஆட்சி புரிந்தவனாகிய திருமுடிக் காரி, காரி என்னும் பெயரு டைய தன் குதிரையோடு கொல்லிமலையை ஆண்ட வள்ளல் வல்வில் ஓரியின், ஓரிக்குதிரையுடன் குதிரைப் போர் புரிந்தான் என நத்தத் தனார் குறிப்பிடுகின்றார்.
இந்த வகையில் அரவக் குறிச்சி நங்காஞ்சி ஆற்றங் கரையில் நமக்குக் கிடைத் துள்ள குதிரை வீரன் நடுகல் எதிரிப்படையின் குதிரை யைத் தாக்கி வீரமரணம் அடைந்த வீரனின் நினை வாக, வீரத்தின் அடையாள மாக எழுப்பிக்கப்பட்ட நடு கல் ஆகும்.
இந்நடுகல் 80 செ.மீ அகலமும், 135 செ.மீ உயரமும் உடையதாகும். இதில் வீரனின் தலை வலதுபுறம் சாய்ந்துள்ளது. வீரன் தலை யில் மகுடமும், காதில் காதணி களும், கழுத்தில் கண்டிகை, சரப்பளி அணிகலன்களும் கையில் வீரக்காப்பும், இடை யில் நல்ல வேலைப்பாடுக ளுடன் ஆடையும், குறுவா ளும் வைத்துள்ளான்.
வீரன் தன் வலது கையில் உள்ள குறுவாள் மூலம் தன்னைத் தாக்கும் குதிரையைக் குத்தும் வண்ணமும், இடது கையால் தன்னைத் தாக்கும் குதிரை யைத் தடுக்கும் வண்ணமும் நடுகல் வடிவமைக்கப்பட்டுள் ளது. குதிரையின் முன்னங்கால் இரண்டும் வீரனின் இடுப்புப் பகுதியை தாக்கும் வண்ண மும், பின்னங்கால் இரண்டும் நிலத்தில் ஊன்றிய வண்ண மும் உள்ளது.
குதிரையின் மேற்பகுதி யில் வீரன் அமர்ந்து செல்லும் இருக்கை அற்புதமாக வடிவ மைக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி உலகின் தலை சிறந்த தொல்லியல் அறிஞர்களுள் ஒருவரும் தமிழகத் தொல் லியல் துறையின் முன்னாள் துணை இயக்குநருமான முனை வர். ர.பூங்குன்றனாரிடம் கருத் துக் கேட்டபோது,
தமிழகத்தில் எண்ணற்ற புலிக்குத்திக் கற்கள் உள்ளன. ஆனால், குதிரை குத்திப்பட் டான் நடுகல் மிகச்சிலவே உள்ளன. இந்த வகையில் இது மிகவும் சிறப்புடையதா கும். சிலை அமைப்பை வைத்துப் பார்க்கும்போது இச்சிலை 800 ஆண்டுகள் பழைமையானது என்றார்.
விடுதலை,20.6.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக