ஞாயிறு, 3 ஜூலை, 2016

இந்தியப் பெருங்கடல் நாடுகளில் திராவிடர் திருநாள்


இந்தியத் தீபகற்பம் இயற் கையிலேயே மூன்றுபுறம் கடலாலும் ஒருபுறம் மலை யாலும் சூழப்பட்டுள்ளது. இதன் காரணமாக வங் காள விரிகுடாக் கடலும், அரபிக்கடலும் வேவ்வேறு  பருவகால மாற்றம் மற்றும் கடல் நீரோட்டங்களைக் கொண்டுள்ளன. இயற்கை அளித்த இந்தக் கொடை தான் 5000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மண்ணில் வாழ்ந்த திராவிட இனத்தை இந்தியப் பெருங்கடல் நாடு களைச் சென்றடைய வைத் தது, இந்தியப் பெருங்கடல் நாடுகள் என்பது ஆஸ்தி ரேலியாவிற்கு கிழக்கே உள்ள டாங்கோ தீவுகளில் இருந்து ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் மற்றும் கென்யா நாடு, தான்சானியா போன்ற நாடுகள்  மற்றும் கொமர் தீவுகள், சிசலித்தீவுகள் வரை பரவியுள்ளது.  வங்க விரி குடாப் பகுதியில் வாழ்ந்த திராவிட இனம் கிழக்குப் பகுதிக்கு இடம் பெயர்ந் தனர், அரபிக்கடல் பகுதி யில் வாழ்ந்த திராவிடன் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடம்பெயர்ந்தான்.
இவர்கள் இடம் பெயர்ந்து ஆயிரம் ஆண்டு கள் ஓடிவிட்டாலும், இன் றளவும் தங்களின் திரா விடப்பாரம்பரியத்தை மறக்காமல் கடைப்பிடித்து வருகின்றனர்.
சூரியன் முதலில் உதிக் கும் நாடு எனப்படும் டாங்கோ தீவுகளில் அரிசி தான் முக்கிய உணவாகும். ஜனவரி மாதங்களில் சூரி யத் திருவிழா கொண்டா டப்படுகிறது, இது அந்த தீவுகளின் சுற்றுலாப் பய ணிகளுடன் ஒன்றாக சேர்ந்து கொண்டாடும் திருவிழா வாகும், இந்த சூரியத் திரு விழாவின்போது சர்க் கரைப் பொங்கல் மற்றும் வெண்பொங்கல் அங்கு படை யலாக வைக்கப்படுகிறது.
இதே போல் பாப்புவா, நியூ கினியா தீவுகளிலும் இதே மாதத்தை ஒட்டி போகிப் பண்டிகை, பொங்கல்விழா அங்கும் கொண்டாடப் படுகிறது. அங்கே போகி அன்று வீடு களில் நெருப்பை மூட்டி சூரியனைப் போன்று முகமூடி அனிந்து இரவு முழுவதும் கொண்டாடு வர், மறுநாள் பொங்க லிட்டு விழாவைக் கொண் டாடுவர். டாங்கோ மற்றும் பாப்புவா, நியூ கினியாவில் விவசாயம் மிகவும் குறைவு. அதே நேரத்தில் அவர்கள் கடல் வெள்ளாமைத் தொழிலை செய்பவர்கள் (மீனவர்களின் வார்த்தைப் படி மீன்பிடி தொழிலை வெள்ளாமை என்றுதான் கூறுவார்கள்).
ஃபிஜி தீவுகளில் கரும் புடன் கூடிய பொங்கல் விழா இன்றும் சிறப்பாக நடைபெறுகிறது. அங்கு ஆங்கிலேயர் காலத்தில் இந்தியாவில் இருந்து அதி கமாக வடநாட்டவர்கள் சென்று குடியேறியதால், அங்கு பொங்கலை மகர சங்கராந்தி என்று அழைத்து கொண்டாடு கின்றனர். ஆனால் அனைத் தும் தமிழகப் பொங்கலைப் போன்றே கொண்டாடுகி றார்கள்.
ஆஸ்திரேலியப் பழங் குடியினர் மற்றும் கோகோ தீவுகளில் உள்ளவர்கள், கரும்புடன் பனங்கிழங்கு வகைகளைப் பொங்கலு டன் படையல் செய்து பொங்கல்விழாவினைக் கொண்டாடுகிறார்கள்.
இந்தியாவில் ஆங்கி லேய ஆட்சியின் போது மேற்கு  ஆப்பிரிக்க நாடு களின் கரும்புத் தோட்டங் களில் வேலைபார்க்க வட இந்தியர்களை அதிகம் அழைத்துச் சென்றனர். இவர்கள் அங்கு  வாழ்ந்த திராவிட மக்களின் கலாச் சாரத்தை ஏற்றுக்கொண் டனர். அங்கு பொங்கல் விழாவிற்கு பதிலாக மகர சங்கராந்தி என்ற பெயரில் இன்றும் கொண்டாடுகின் றனர்.
இலங்கையில் வாழும் தமிழர்கள் 30 ஆண்டுகாலப் போரின் போது மேற்கு இந்தியப் பெருங்கடல் தீவு களில் அதிகம் குடியேறினர். இதனால் சிசிலித்தீவுகள், ரீ யூனியன், பிரிட்டீஷ் தீவு கள் போன்ற இடங்களில் பொங்கல் திருநாள் மிகவும் விமரிசையாகக் கொண் டாடப்படுகிறது. தமிழர் கள் அதிகம் வாழும் மலே சியா, சிங்கபூர், இலங்கை போன்ற நாடுகளில் பொங் கல் விழா அரசு விழாவாக மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரு கிறது.
முக்கியமாக நிலநடுக் கோட்டு நாடுகள் உலகின் உணவுக் கிண்ணம் என்று அழைக்கப்படுகின்றன. இந்த நாடுகளில் விவசாயம் மிகவும் முக்கிய தொழிலாக உள்ளது.
சுமார் 5000 ஆண்டு களுக்கு முன்பு தென் இந் தியாவில் இருந்து கடல் மூலம் இந்தியப் பெருங் கடல் நாடுகளுக்குச் சென்ற திராவிட இனத்தினர் இன் றும் தங்களின் பாரம்பரியம் மாறாமல் வெவ்வேறு பெயர்களில் திராவிடர் திருநாளைக் கொண்டாடி வருகின்றனர்.  யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாடலைப் பாடிய கணியன் பூங்குன்றனார் பல்வேறு நாடுகளில் வாழும் திராவிட இன மக்களை நினைவில் வைத் துப் பாடியதாகவும் கருத லாம்.
-விடுதலை,14.1.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக